Skip to content
Post Views: 12,038
உன் சுவாசம் என் மூச்சில் ……7
கலங்கி நின்றுகொண்டிருந்த எழில்விழியிடம்,
“ எழிலு இங்க கொண்டா சட்டையை. உன் புருசனுக்கு வேற வேலை இல்ல. எப்போ பார்த்தாலும் எல்லார்கிட்டயும் எரிஞ்சு விழுவான். சரி சரி கல்யாண பொண்ணு அழுகாத. அங்க பாரு உன் அப்பா அம்மாவும் கலங்குறாங்க பாரு ” என கதிரின் மூத்த அக்கா வாணி கூற
Advertisement
வேகமா தன் புறங்கையால் கண்ணீரை துடைத்த எழில்விழி வாணி காட்டிய திசையில் நின்று கலங்கிய கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்த அன்னலெட்சுமியையும் வெங்கடேசனையும் கண்டு புன்னகைக்க அவர்களும் சிறிது புன்னகைத்துவிட்டு அங்கு கூடத்தில் அமர்ந்துவிட,
எழில்விழியையும் ஒரு அறையில் தங்கி ஓய்வெடுக்க சொல்லி வாணி நகர்ந்துவிட எழில்விழியோ புதிய வாழ்க்கையின் பயத்தில் அமைதியாக கலங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு அந்த அறையில் அமர்ந்திருந்தாள்.
வெங்கடேஷன் அன்னலெட்சுமியை முறைத்துக் கொண்டிருக்க,
Advertisement
“ இப்போ என்னத்துக்கு முறைச்சுக்கிட்டு இருக்கீங்க என்னைய ” என கேட்ட அன்னலெட்சுமியிடம்
Advertisement
“ நான் என்ன சொன்னே உன்கிட்ட. மெதுவா பார்த்து எழிலுக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு சொன்னேனா ” என மெதுவாக பல்லைக்கடித்துக் கொண்டு கேட்ட வெங்கடேசனிடம்
“ ஏன் இப்போ என்ன ஆகிப்போச்சு…” அதற்கு ஒன்னும் கூறாது வெங்கடேஷன் முறைத்துக் கொண்டிருக்க
“ இங்க பாருங்க என்ன இப்போ புருஷன் பொண்டாட்டிகிட்ட அவரு சட்டையை துவைக்க சொன்னாரு. உங்களுக்கு என்ன??…. பொண்ணை கட்டிக்குடுத்தாச்சுன்னா அது அவளோட குடும்பம். அங்க என்ன நடந்தாலும்.. நாம பெத்தவங்களே ஆனாலும் சரி நம்ம போய் கருத்து சொல்ல கூடாது.
Advertisement
அவுங்க அவுங்க வாழ்க்கையை அவுங்க அவுங்க பார்த்துக்குவாங்க. நீங்க வாங்க நாம விருந்த முடிச்சுட்டு நம்ம ஜனத்தோட ஊரு போய் சேருவோம்” என கூறி அன்னலெட்சுமி எழ அதனை கண்டு,
“ அன்னம் இருந்தாலும் அப்பா அம்மா உறவுன்னு இத்தனை பேரு இருந்தும் மாப்பிள்ளை நம்ம பிள்ளைய இப்படி பேசுறாரு கொஞ்சம் கஷ்டமா இருக்குத்தா. நம்ம பிள்ளை ஒரு புள்ள பூச்சி. அதான் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு ” என வெங்கடேசன் கூறி கண் கலங்க,
இதை நினைத்து ஏற்கனவே பயந்து கொண்டிருந்த அன்னலெட்சுமியும் அதனை வெளியே காட்டினால் வெங்கடேசன் மேலும் கலங்கி அவரின் உடல் நிலை சரியில்லாமல் போய்விடுமோ என பயந்து,
“ ஏன் நீங்க என் அப்பா அம்மா முன்னாடி கல்யாணம் ஆனா புதுசுல பேசலயா??….. எல்லாம் ஆரம்பத்துல மாப்பிளை முறுக்கு இருக்கத்தான் செய்யும். சும்மா துரும்ப கிள்ளி கீழ போட்டு மாப்பிள்ளைன்னு சொன்னாலே அந்த முறுக்கு முறுக்குமா!!!…..
இதுல மாப்பிள்ளை போலீஸ் வேற. சும்மா பயப்புடாமா வாங்க அப்பனும் ஆத்தாளுமா நாம இன்னும் நல்லாத்தானே இருக்கோம் ஏதாவது பிரச்சனைனா சும்மா விட்டுருவோமா. வாங்க பார்த்துக்கலாம் ” என தைரியம் சொல்லி சாப்பிட சென்றனர் இந்த தம்பதி.
விருந்து முடிந்து வந்த அன்னலெட்சுமி எழில்விழியை தேடி அவள் இருந்த அறைக்கு செல்ல அங்கு சோகமாக கலங்கிய விழிகளை இன்னும் துடைத்துக்கொண்டிருந்த மகளை கண்டு மனதில் சுருக்கென ஒரு வலி உண்டாக அதனை முகத்தில் காட்டாது,
“ எழிலு” என அழைக்க திக்கு தெரியாத இருளான இடத்தில் இருப்பது போல பயந்து இருந்த எழில்விழிக்கு அன்னையின் குரல் ஒரு நிம்மதியை தர வேகமா கட்டிலில் இருந்து இறங்க,
“ நீ இருத்தா நான் உன்கிட்ட பேசலாமான்னு தான் வந்தேன் ” என கூறி எழில்விழியை அழைத்து உட்கார வைத்து அவளின் கைகளை பிடித்துக்கொண்டு எதுவும் பேசாது அமைதியாக உட்கார்ந்திருந்தனர் அம்மாவும் மகளும் .
சிறுது நேரம் கழித்து,
“ எழிலு அம்மா ஒன்னு சொல்றேன் கேட்குறியா??” என கேட்ட அன்னலெட்சுமியிடம் ஹ்ம்ம் என எழில்விழி தலை அசைக்க,
“ கல்யாண வாழ்க்கைன்றது ஒரு கலைத்தா. அதுல ஒரு தனி ஸ்வாரசியம் இருக்கு. நம்ம வாழ்க்கை துணையோட மனசை புரிஞ்சுகிட்டு வாழ்றது எல்லாம் நடக்காத கதை ” என கூறிய அன்னலெட்சுமியிடம் புரியாத பாவனையை வெளிப்படுத்திய எழில்விழியை கண்டு சிறு புன்னகையுடன் அவளில் கைகளை வருடிக்கொண்டே,
“ எழிலு நம்ம மனசே ஒரு குரங்கு மாதிரி எப்ப என்ன நினைக்கும் என்ன பிடிக்கும்ன்னு தெரியாது. இதுல மத்தவங்க மனசை பத்தி நமக்கு என்ன தெரியும் சொல்லு. மத்தவங்க மனசு கோணாமா நாம நடக்க ஆரம்பிச்சா நாம காணாம போயிடுவோம்.
அதே நீ அவுங்க மனசை பிடிச்சு நடந்து பாரேன் வாழ்க்கை ரொம்ப சந்தோசமா நல்லா இருக்கும். ஏன்னா மனசுக்கு பிடிச்சவங்க எது பண்ணினாலும் நமக்கு பிடிக்கும். இப்போ பாரேன் அம்மா எங்கயோ தெரியாத இடத்துல உன்னைய கட்டிக்குடுத்துருக்கேன். ஆனா எங்க மேல உனக்கு கோவமா??…” என கேட்க
“ இல்லம்மா ” என வேகமாக தலையை அசைத்த எழிலின் தலையை வருடியவாறே
“ அதான் சொல்றேன் அம்மாவை பிடிச்சதால நான் என்ன பண்ணுனாலும் உனக்கு பிடிக்குது அதுல நம்பிக்கை வருதுல ”
“ ஹ்ம்ம் ”
“ அப்போ எதையும் பிடிச்சு சந்தோசமா பண்ணு நீயும் சந்தோசமா இருப்ப சரியா ”
“ ஹ்ம்ம். அம்மா அது அது…” என எழில்விழி எதோ கூற தயங்க கூற
“ எதுனாலும் சொல்லுத்தா. ஏன் தயங்குற???”
“ இல்லம்மா அது காலைல அவுங்க அப்படி சட்டுன்னு சொன்னது கஷ்டமா இருக்குமா பயமா வேற இருக்கு ” என கூறி கண்ணீர்விட,
எழில்விழி கண்ணீரும் அவளின் கைகளின் நடுக்கமும் அன்னலெட்சுமியே ஒரு நிமிடம் எழில்விழியை அழைத்து சென்றுவிடுவோமா என எண்ண வைத்தது. ஆனால் மனதில் நிதர்ஸனம் உரைக்க,
“ எழிலு நம்ம மீனாட்சி அம்மன் கோவில்ல முதல் அபிஷேகம் யாருக்கு??….. ” என கேட்ட அன்னலெட்சுமியை புரியாது நோக்க
“ ஹ்ம்ம் சொல்லு எழிலு நம்ம மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல முத அபிஷேகம் அலங்காரம் எல்லாம் யாருக்கு மீனாட்சிக்கா இல்ல சொக்கநாதருக்கா???….. ” என மீண்டும் கேட்ட அன்னலெட்சுமியிடம்
“ மீனாட்சிக்குத்தான் ஏன்மா??? ”
“ ஹ்ம்ம் அதுக்கு காரணம் என்ன??… மூலவரான சொக்கநாதருக்கு செய்யாம மீனாட்சிக்கு செய்றாங்க ”
“ ஏன்னா மீனாட்சிதான் மதுரைல பிரசித்திபெற்ற தெய்வம். அதானே ம்மா கோவில்கூட மீனாட்சி அம்மன் கோவில்ன்னு சொல்றோம் ”
“ ஹ்ம்ம் சரி தான். மீனாட்சியம்மன் கோவில்ல அதனால தான் அம்மனுக்கு முதல் அபிஷேகம் அலங்காரம் எல்லாம் அப்பிடின்னு சில பேர் நினைக்குறிங்க. ஆனா இதுல இன்னொரு காரணமும் சொல்லுவாங்க தெரியுமா??… ”
“ என்னதுமா?? ”
“ மீனாட்சி அம்மனோட கணவர் சொக்கநாதர் எழுறதுக்கு முன்னாடியே மீனாட்சி அம்மன் கணவனுக்கு முன் எழுந்து குளித்து தயாராகி கணவருக்காக தயாராகுறாங்க. அதான் முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கு செய்றாங்கன்னு சொல்லுவாங்க. இதுல உனக்கு என்ன புரியுது ” என கேட்க,
ஒன்றும் கூறாது அமைதியாக எழில்விழி தாயை பார்க்க,
“ ஒன்னும் புரியலையா???…. எதையும் நாம பார்க்குற கோணம்தான் நமக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரும். அதோட ஒவ்வொரு விஷயத்துக்கும் ரெண்டுவிதமா எடுக்கலாம். இப்போ மாப்பிள்ளை உன்னைய எதாவது சொன்னா உன்கிட்ட உரிமையா சொல்றாங்கன்னு சந்தோசப்படணும். சும்மா ஒன்னொன்னுக்கும் அழுக கூடாது சரியா??…
உன்னைய ரொம்ப பிடிச்சதாலதானே வீட்டுக்கு உன்னைய தனியா பார்க்க வந்தாங்க ஹ்ம்ம் ” என கூறிய அன்னலெட்சுமியிடம் எதுவும் கூறாது வெட்கத்தில் சிவந்த கன்னத்தை காட்ட முடியாது குனிந்து கொள்ள அவளின் முகத்தை பற்றி,
“ எழிலு எப்பவும் தைரியமா இருக்கனும். உனக்கு எப்பவும் அம்மாவும் அப்பாவும் இருப்போம் சரியா. அதே நேரம் வாழ்க்கைல எல்லாம்தான் இருக்கு அதுக்காண்டி நாம சோர்ந்து உட்கார்ந்துறதோ ஒடுங்கிபோறதோ செய்யக்கூடாது. எதையும் சரியான கோணத்துல யோசிக்கணும். முக்கியமா என் தங்க மகளை என் மருமகனுக்கு பிடிச்சதாலதான் சிரிக்காதவரு மூஞ்சில இன்னைக்கு முச்சுடும் சிரிப்பு இருந்துச்சாம் எல்லாரும் சொல்லிக்கிட்டாங்க ” என கூறி இன்னும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு மனதளவில் எழில்விழியை தயார்படுத்திவிட்டு அனைவரும் விடைபெற்று கிளம்ப,
கதிரிடம் வெங்கடேசனும் அன்னலெட்சுமியும் மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி விடைபெற மற்ற நேரமா இருந்திருந்தால் ‘அப்படி சந்தேகம்ன்னா உங்க மகளை கூட்டிட்டு போங்க’ என்று கூறிருப்பான்.
ஆனால் வெங்கடேசன் அன்னலெட்சுமியின் கலங்கிய முகத்தை கண்டு தலையை அசைத்து விடைகொடுத்தான் எழில்விழியின் கதிரவன்.
திருமணத்திற்கு வந்த கதிரவன் உறவுகள் பாதிக்கு மேல் குறைந்துவிட இரவு சடங்கிற்கு எழில்விழியை தயார்படுத்தினர். எழில்விழியின் மனதில் அன்னலெட்சுமியின் வார்த்தைகள் சிறுது தைரியம் தந்திருக்க புன்னகையுடன் அலங்காரம் செய்த வாணி ஜெயாவின் கைவண்ணத்திற்கு ஏற்ப தன்னை விட்டிருந்தாள்.
வாணி மற்றும் ஜெயாவின் பேச்சு முழுக்க முழுக்க கதிர் பத்தியே இருந்ததால் சந்தோஷமாகவே கேட்டுக் கொண்டிருந்தாள் தன் சரிபாதி பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில்.
அதில் உணர்ந்த ஒரு விஷயம் கதிர் யாரையும் வைத்து பாக்காமல் பேசுவான். மற்றவர் மனம் நோவது பற்றியும் கவலை கொள்ளமாட்டான் என்பதையும். உணர்ந்த விஷயம் மனதிற்கு சிறு பயத்தையே கொடுத்தது.
மெல்லிய நடுங்கும் கரங்களால் பால் செம்பினை பிடித்துக்கொண்டு கதிரவன் அறைக்குள் செல்ல அங்கு கட்டிலில் கால்மேல் கால் போட்டு போனை பார்த்துக்கொண்டிருந்தவன் கதவின் ஒலியில் நிமிர்ந்து பார்க்க அதில் குனிந்துகொண்டாள் எழில்விழி.
வெந்தய வண்ண அறைக்கு பார்டர் வைத்த பட்டு புடவையில் எளிமையான அலங்காரத்தில் தேவதையென வந்த அவளின் அழகை விட அவளின் விழி பார்க ஆசைப்பட்ட கதிர்,
“ என்ன அங்கேயே நிக்குறதா வேண்டுதலா இல்ல அப்படியே வெளிய போற ஐடியாவா??” என கதிர் தனது கம்பீர குரலால் கேட்க
அதில் ஒரு முறை உடல் அதிர வேகமாக கதிரை பார்த்து தலையை இல்லையென அசைத்து வேகமாக கதிரின் அருகில் சென்று மறுபடியும் குனிந்துகொள்ள,
“ ரொம்ப கஷ்டம் ” என கதிர் முணுமுணுத்துவிட்டு
“ நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ” என கூற எழில்விழி அதற்கும் நிமிர்ந்து பாராது அமைதியாக தலையை அசைக்க
“ நான் உன்னைய என்னோட வேலை பார்க்குற இடத்துக்கு கூட்டிட்டுப்போற எண்ணம் எல்லாம் இல்ல. நீ இங்கயே இரு. நான் எனக்கு நேரம் கிடைக்குறப்போ இப்போ எப்படி வருவேனோ அப்படியே வரேன் எனக்கு தனி குடுத்தனம் போற எண்ணம் இல்ல ” என கூற
அதற்கு அதிர்ந்து தன்னை நோக்குவாள் என எண்ணி கதிர் கூற அவளோ அதே குனிந்த நிலையில் சரி எனும் விதமாக தலை அசைக்க அதில் அதிர்வது கதிர் முறையானது.
அவள் நிலை கண்டு,
‘ என்ன இவ அது ஒரு விசயமான்னு நிக்குற. ஒரு வேலை தனி குடுத்தனம் எண்ணம் இல்லையோ??…. அப்படி அவுங்க வீட்டுல பேசிக்கிட்டது இவளுக்கு தெரியலையோ??… சரி எப்படியோ இதுல இவ பிரச்சனை பண்ணப்போறது இல்ல ” என காலையில் இருந்த இறுக்கம் சற்று குறைய மனதும் சற்றே இலகுவானது. அதில் ஏனோ இன்னமும் குனிந்து நிற்கும் அவளை வம்பிழுக்க எண்ணி,
“ என்ன இன்னைக்கு முழுசும் இப்படி தலையை கவிழ்ந்தே இருப்பியா இல்ல என் மூஞ்சிய பார்பியா??… ” என கதிர் கேட்க
அதில் மூளை நிமிர சொன்னாலும் ஏனோ மனதின் பயமும் வெட்கமும் நிமிரவிடாமல் செய்ய செம்பினை இன்னும் அழுத்தமாக பிடித்துக்கொள்ள,
‘ இது சரி வராது ’ என எண்ணி
“ சரி நீ அப்டியே நில்லு எனக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன் ” என கதிர் கடுப்புடன் கூறி எழ,அதில் பதட்டத்துடன்,
“ இல்ல…. இல்லங்க…. பால்… பால் குடிக்க சொன்னாங்க இந்தாங்க ” என கூறி பால் செம்பை நீட்ட அதனை சிறு சிரிப்புடன் வாங்கி மேஜையில் வைத்தவன்
“ சரி காலையில பயத்துல பூச்செண்டை பிடிச்சுருந்த. இப்போ பால் செம்பை பிடிச்சுருந்த. கை எல்லாம் நடுங்குது இனி எதை பிடிச்சுப்ப. என்ன செய்யலாம்??… ஹ்ம்ம்…… பேசாம என்னைய பிடுச்சுக்கோ ” என கூற
அதில் அதிர்ந்து பயந்து விழித்த விழியின் விழியில் ஆசையுடன் விழுந்து,
குணத்தில் வன்மையானவன் பெண்மையிடம் மென்மையை கையாள, அமைதியான குணவதியோ இல்லறத்தில் இன்னும் ஆழ்கடல் போன்று அமைதியாக,
ஆணென்ற கர்வமானவன் ஏனோ பெண்ணிடம் பெண்மையின் மேன்மையை போற்றி இல்லறத்தில் அடிவைக்க, பயந்தவளோ நடுங்கிய கைகளுக்கு அவளவனையே பற்றுகோளாக்க என விடிய விடிய அழகான தாம்பத்தியத்தில் அடிவைத்தவர்களின் இரு சுவாசம் ஒரு சுவாசம் ஆக,
காதலில் அடிவைக்கும் போது உன் சுவாசம் என் மூச்சில் எப்பொழுது உணருவர் என்பதை காலமும் காதலும் புரியவைக்கும் இந்த விழியவனுக்கு….
என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை
மறந்து போவதுதான் முறையா
நினைக்காத நேரமில்லை
காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்
என் வாழ்வே வா……….
error: Content is protected !!