உயிரோடுஇருக்கிறாள்என்பதற்குசாட்சியாகஸ்வாசம்மட்டுமேவந்துகொண்டிருந்தது கார்த்தும்பி க்கு , நான்குநாட்களாககாய்ச்சலில்கிடக்கிறாள்.
போலீஸ் வந்து சென்றதுவிசாரணை என்று , தவறானதொடர்ப்புஇருந்ததுஅதுமற்றவர்களுக்குதெரிந்ததால்தற்கொலைசெய்துகொண்டதாகவிசாரணையில்அனைவரும்சொல்ல ,போலீஸ்அதையேஎழுதிக்கொண்டது.
வேறுவிசாரணைஒன்றும்நடைபெறவில்லை , வேறு எதுவும் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார்கள் கிருஷ்ணனும் சங்கரனும்.
வீட்டை உறவினர்கள் சிலர் வந்து காலி செய்தனர் , எங்கு சென்றான் என்ன ஆனான் ஒன்றும் தெரியவில்லை கார்தம்பிக்கு.
அவனை எதிர்ப்பார்த்து தோட்டத்திலும் வாசலிலும் தவமாய் தவம் கிடந்தாள் , ஊண் இன்றி உறக்கம் இன்றி.
அவன் வரவில்லை , ட்ரைனிங் முடிய இன்னும் மாதங்களே இருக்க அதைப்பற்றிய சிந்தனையே இல்லமால் இருந்தான் பத்து தினங்களாக, “மாப்ள” என்று அருகில் வந்த துரைசெல்வதை பார்த்தவன்.
“நீங்க வீட்டுக்கு போங்க மாமா , கால் இன்னும் சரி ஆகல நா பாத்துக்குறேன்” என்றான் விழிகள் திறக்காமல் யாரிடமும் ஒன்றும் கூறவில்லை, அனைத்தையும் உள்ளே போட்டு அழுத்திக்கொண்டான்.
“உனக்கு அம்மான்னா… எனக்கு தங்கச்சியா.. ஒரே ஒரு உடன்பிறப்பு , சீரும் சிறப்புமா வாழறத கண்குளிர பாத்துட்டு இருந்தேன் , இப்படி ஒரே நேரத்துல என் தங்கச்சியையும் புள்ளயையும் தூக்கி கொடுத்துட்டு நிக்குறேன்”.
“உள்ள படுத்திருக்கறது என் மச்சான், என் தங்கச்சிய கட்டலானாலும் அவன் எனக்கு நண்பன் , என் சொந்தம்”.
“இந்த வேலை உன் அப்பாவோட ஆசை , உன்னோட கனவு அத அழிச்சுறாத வேற எதுவும் உன்கிட்ட நான் கேக்க மாட்டேன் நீ கெளம்பு, இங்க நாங்க பாத்துக்குறோம்” என்றார்.
எத்தனை சொல்லியும் அவன் கேட்கவில்லை இறுதியாக வேறு வழி இன்றி அவன் காலில் விழப்போனார் துரைசெல்வம் “மாமா” என்று அவன் பதறி எழ.
“போயா… பிச்சையா கேக்குறேன்” என்று கெஞ்சினார் , எங்கே மருமகன் இப்படியே இருந்துவிடுவானோ என்று பயந்தார் , யாரிடமும் பேசாமல் உள்ளுக்குள் இறுகி இருப்பவனை எப்படி மாற்ற என்று தெரியவில்லை.
இறுதியாக அவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து கொச்சின் சென்றான், எட்டு மாதங்கள் மருத்துவமனையில் இருந்த பிரகாஷ் அதன் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நேராக அவரை உத்தமப்பாளையம் கொண்டு சென்றனர், அதன் பிறகு வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டார்கள் , பணியில் சேர்ந்துவிட்டான் அவர்களை பழிவாங்கும் எண்ணம் மட்டும் உள்ளுக்குள் எரிந்துகொண்டே இருந்தது.
“நந்தேட்டன் வந்திருக்கார்” என்று பாதி இரவில் கூட எழுந்து ஓடுபவளை பார்க்க வாழ்க்கையே வெறுத்து விட்டது அவள் பாட்டிக்கு , அவள் தாயின் வாழ்வு தான் அப்படி ஆகி விட்டது , இவள் வாழ்வாவது சிறக்கும் என்றும் எண்ணியிருக்க அனைத்தும் சிதறி போய் விட்டது.
ஆறு மாதங்கள் பொறுமையாக இருந்த சங்கரன் முதலில் அவர் பார்த்து வைத்த அந்த பொறுக்கிக்கு தும்பியை திருமணம் செய்யப் பார்க்க காயலில் குதித்தாள்.
அன்றுதான் அவன் பரிசளித்த ஒரு பாத கொலுசு தொலைந்து போனது, அதோடு அவனை மொத்தமாக தொலைத்து விட்டதாக அவள் மனம் பிழற தொடங்கிய தருணம்.
அடுத்த முறை வேறு வரன் வந்தபோது கையை வெட்டிக் கொண்டாள், அதன் பிறகு அவளை முடக்கும் வழியை தேடி அதை செயல் படுத்தினர் கிருஷ்ணனும் சங்கரனும்.
அவனை இழந்துவிட்டோம் என்ற நினைவே அவளை மொத்தமாக முடக்கியதை அவர்கள் யாரும் அறியவில்லை , எந்த வார்த்தை அவனிடம் இருந்து வர கூடாது என்று உயிரை கையில் பிடித்து காத்திருந்தாளோ அதையே அவன் சொல்லி சென்றான்.
“நீ எனக்கு வேண்டாம்” என்று அதிலே பாதி செத்துவிட்டாள் , மனம் மரித்துப்போன பிறகு உடல் வெறும் சதை பிண்டம் தானே.