Skip to content
Post Views: 8,340
அன்பில் இணைந்த இதயங்கள்….20
கயல்விழிக்கு சத்யாவின் காதல் எத்தனை வலிமையானது என்று புரிந்து போனது.அதேசமயம் அன்று நிச்சயாத்தின் போது கலைவாணன் கூறியது நியாபகத்திற்கு வந்தது,
“என் மகனோட காதலுக்கு நீ ஏத்த பொண்ணே கிடையாது தான்…ஆனா அவன் உன்னை தவிர வேற எந்த பொண்ணையும் பார்க்க கூட மாட்டான்…அவன் வாழ்க்கை தரிசா போயிடக்கூடாதுனு தான் நான் இவ்வளவு தூரம் கொண்டு வந்தேன்…இப்ப கூட எனக்கு உன்னை முழுசா நம்ப முடியலை ஆனா….ப்ச் விடு நல்லதே நடக்கும்னு நானும் நம்புறேன்….என் மகனை நல்லா பாரத்துக்க…பார்த்துப்ப தான….”என்று கோபமாக பேசி கடைசியில் இரைஞ்சுதலாக அவர் முடிக்க கயலுக்கு தொண்டை அடைத்த உணர்வு தான் இருந்தும் தன் மாற்றத்தை அவரிடம் வார்த்தைகளாக கூற விருப்பம் இல்லை அதனால்,
“அப்பா…அப்படி கூப்பிடலாம்ல…”என்று கயல் தயக்கத்துடன் கேட்க,
Advertisement
“ம்ம்ம்…”என்று தலையா ஆட்ட,
“நான் திருந்திட்டேன்னு…எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டே இருக்கபோறது இல்லை…வாழ்ந்து காட்டுறேன்….என்னை நம்புனதுக்கு நன்றி…நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு ரொம்ப பெரிய உதவி தான் பண்ணியிருக்கீங்க….அதை நான் மறக்கமாட்டேன்….”என்று கயலும் அவரிடம் கூறினாள்.அவளின் அந்த தெளிவான பதிலை கேட்ட பின்பு தான் கலைவாணனின் முகம் சற்று தெளிந்தது.கயல் தனது நினைவுகளில் உழன்றவள் சோபிவிலேயே உறங்கிவிட்டாள்.காலையில் கயல் கண்களை திறக்கும் போது படுக்கை அறையில் இருந்தாள்.அவளின் மேல் தன் ஒற்றை இரும்பு கரங்கத்தையும்,ஒற்றை காலையும் போட்டு நல்ல உறக்கத்தில் இருந்தான் சத்யா.அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்,அவனின் முன் உச்சி முடிகளை கலைத்துவிட்டு அவனது நெற்றியில் அதரம் பதிக்க,
“ம்ம்….கயலம்மா….தூக்கம் வருதுடீ….தூங்கு…”என்று அவளை தன்னுள் இறுக்கி கழுத்தில் முகத்தை வைத்து தேய்க்க,கூச்சம் வரபெற்றவள் அவனின் சேட்டையில் அவனின் முடியை வலிக்க பிடித்து இழுத்து,
Advertisement
“டேய் போலீஸ்….சும்மா இருக்கமாட்ட…விடு நான் போகனும்….”என்று அவனிடம் இருந்து விலக பார்க்க,கண்களை திறந்தவன் அவளது முகத்தை தன் முகத்துடன் முட்டி,
Advertisement
“என்னை தூங்க வச்சுட்டு போ….”
“என்ன தூங்க வைக்கனுமா…”
“ம்ம்ம்….நீ தான என்னை எழுப்பி விட்ட…அப்ப நீ தான் என்னை தூங்க வைக்கனும்….”என்றுவிட்டு அவளை இறுக்கி கொண்டு தன் தூக்கத்தை தொடர,
Advertisement
“ஓய் சத்து மாத்திரை….எனக்கு வேலையிருக்குயா….விடு….விளையாடாத…”
“நான் எங்கடீ விளையாடுறேன்….தூங்கிட்டு தான இருக்கேன்….”என்று விஷமமாக கூற,அவனின் தோள்களை அடித்தவள்,
“பேச்சை பாரு….விடு…ஆபிஸ் டையம் ஆச்சு….”என்றுவிட்டு அவனிடம் இருந்து பிடிவாதமாக தன்னை பிரித்தெடுக்க முயல,
“இன்னைக்கு கயலம்மா ஆபிஸ் லீவ்….”
“என்ன லீவா….உதை தான் உனக்கு….”
“உதை தான வாங்கிக்குறேன்….ஆனா நீ இன்னைக்கு லீவ் அவ்வளவு தான்….நான் வீட்ல இருந்தா நீயும் இருக்கனும் புரியுதா…”என்று கூற,
“எல்லாம் உன் இஷ்டம் இல்ல….உன்னை….”என்று அவனின் தோள்களில் அவள் அடிக்க,
“ம்ம்ம்….அப்படி தான்டீ நல்லா அடி…இதோ இந்த கையிலேயும் அடி….நல்லா மசாஜ் பண்ணுற….”என்றுவிட்டு மற்றொரு கையையும் காட்ட,
“அச்சோ….படுத்துற சத்து மாத்திரை…இப்ப லீவ் எல்லாம் போட முடியாது புரிஞ்சிக்க….”என்று அவள் கூறிய நோடி அவளை உதறியவன்,
“போ…”என்றுவிட்டு தலையணையில் குப்புற படுத்துவிட,கயல்விழிக்கு கண்கள் கலங்கிவிட்டது.
“சத்….சத்யா…எனக்கு நிஜமாவே வேலையிருக்கு…”என்று அவனுக்கு புரிய வைக்கும் நோக்குடன் கூற,
“ப்ச்…என்னை டிஸ்ட்ரப் பண்ணாத அதான் போ சொல்லிட்டேனே போ….”என்று முகத்தை திருப்பாமலே பதில் வர,கயல் அவனின் தோள்களை தொட,
“ப்ச் கயல் எனக்கு தூக்கம் வருது….நான் விடியற்காலை தான் வந்தேன்…நான் தூங்கனும் சோ டிஸ்ட்ரப் பண்ணாத….”என்று அவளின் முகத்தை பார்த்து கூறிவிட்டு,கண்களை மூடிக் கொண்டான்.கயல் இரண்டு நிமிடம் அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் பின் எழுந்து தன்னை சுத்தபடுத்த சென்றுவிட்டாள்.போகும் அவளை பார்த்து பல்லை கடித்த சத்யா,
“இவ்வளவு தூரம் சொல்லுறேன் இருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்லுறாளா பாரு….”என்று திட்டிவிட்டு முகத்தை திருப்பி படுத்துவிட்டான்.குளித்து முடித்து வந்தவள் சத்யாவின் தூக்கத்தை கெடுக்காமல் வரவேற்பறைக்கு வந்து தனது அலுவலகத்திற்கு அழைத்து இன்று ஒரு நாள் விடுமுறை கூறினாள்.பின் காலை காபி கலந்து குடித்துவிட்டு சமையலை முடித்துவிட்டு வந்தவள் சத்யாவின் அறையை எட்டி பார்க்க அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
“ப்பா….எவ்வளவு கோபம் வருது….சரி எந்திரிக்கட்டும்…”என்று தனக்குள் கூறிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டாள்.மதியம் போல தான் சத்யா எழுந்து வந்தான்.வந்தவன் கண்டது ஹாலில் டீவி ஓடிக் கொண்டிருக்க சோபாவில் அசந்து தூங்கும் மனைவியை தான்.
“இவளுக்கு வேற இடமே இல்லை போல….எப்படி தூங்குறா பாரு…”என்றுவிட்டு அவளின் அருகில் வந்து அவளின் கால்களில் ஒற்றை விரலால் தீண்ட,அவனின் தீண்டலில் விழித்தவள்,
“ம்ம்…சத்யா எப்ப எழுந்த….”என்று கேட்டுக் கொண்டே எழ,அவளின் அருகே அமர்ந்து கொண்டு,
“ஏன்டீ….ரூம்ல அவ்வளவு பெரிய கட்டில் இருக்கு பக்கத்தில நானும் இருக்கேன்….எங்க இரண்டு பேரையும் விட்டுட்டு இங்க வந்து படுத்துருக்க…உன்னை என்ன பண்ண….”என்று கேட்டுக் கொண்டே அவளின் இடைவளைத்து இறுக்க,
“ஆஆஆஆ…விடு சத்து மாத்திரை….நான் ஒண்ணும் தூங்கலை…டீவி தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்….அப்படியே கண் அசந்துட்டேன்….”என்றவளை தன் மீது சாய்த்துக் கொண்டு,
“போடீ…நல்லா தூங்கிட்டு பேச்சை பாரு…ஆமா ஆபிஸ் போறேன்னு சொன்னவ எதுக்கு வீட்ல இருக்க….போக வேண்டியது தான…”என்று கூற,அவனின் தோள்களில் இடித்தவள்,
“கொழுப்புடா உனக்கு…உனக்காக இருந்தேன் பாரு என்னை சொல்லனும்….சரி வா சாப்பிடலாம்…பசிக்குது….”என்று வயிற்றை பிடித்து கொண்டு கூற,
“கும்பகர்ணி,சாப்பாட்டு ராமி….”என்று கிண்டல் செய்து கொண்டே அவளின் பின்னே செல்ல,
“ரொம்ப பண்ணுற சத்து மாத்திரை…”என்று அவளும் அவனுடன் வலவலத்துக் கொண்டே இருவருக்குமான சாப்பாட்டை எடுத்து வைக்க சத்யாவும் அவளுக்கு உதவி செய்தான்.இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன்.
“ஓய்….கயலம்மா…உன்கிட்ட ஒண்ணு சொல்லனு….வா…”என்று சத்யா அழைக்க,
“என்ன சொல்லு சத்து மாத்திரை….”என்றவாரு வந்தவளை இழுத்து சோபாவில் அமர வைத்து அவளை இடித்து கொண்டு அமர்ந்தவன்,
“ம்ம்…சொல்லுறேன்…அதுக்கு முன்னாடி…நீ அது….இந்த வேலை உனக்கு ரொம்ப பிடிக்குமா….”என்று கேட்க,கயல் திரும்பி அவனின் முகத்தை பார்த்து,
“ஏன் கேட்குற…சத்து மாத்திரை…”
“ச்சு….நீ சொல்லுடீ….உனக்கு இந்த வேலை ரொம்ப பிடிக்குமா…”என்று கேட்க,
“பிடிக்கும் அவ்வளவு தான்…ஏன் என்னனு சொல்லு சத்து மாத்திரை…”என்று கேட்க,
“ம்ம்…எனக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கு….”
“ஓ…எங்க எந்த இடம்…”என்று கேட்க,
“ம்ம்….உனக்கு பிடிச்ச இடமா இல்லையானு நீ தான் சொல்லனும்….அங்க போனா உனக்கு நிறைய வேலை இருக்கும்….அப்புறம் ம்ம்ம்…”
“ஓய் இப்ப எங்கனு சொல்ல போறியா இல்லையா….ஓவர் சஸ்பென்ஸ் வச்சி என்னை ஏன் டென்ஷன் பண்ணுற….”என்று கேட்க,
“இருடி….நான் உன் நல்லதுக்கு சொன்னா கோவிச்சுக்குற…”என்று கூற அவனை முறைத்தவள்,
“நீ சொல்ல வேண்டாம் போ….”என்றுவிட்டு அவனிடம் இருந்து எழ,அவளை இழுத்துபிடித்து கொண்டவன்,
“கோயம்பத்தூர்….என் ஊர் என் மண்ணுல வேலை….”என்று மீசையை முறுக்க,கயலோ கண்களை அகல விரித்தவள்,
“வாவ் வாவ் நிஜமா…உனக்கு…அப்ப நாம நம்ம ஊருக்கு போக போறோமா….”என்று கேட்க,அவளின் கன்னங்களை பிடித்து கிள்ளி,
“ஆமாடீ என் செல்லகுட்டி….”
“ஐஐஐ….ஜாலி….நான் இப்பவே அம்மா,அத்தை எல்லாருக்கும் போன் பண்ணுறேன்….”என்றுவிட்டு அவனைவிட்டு நகர போக,அவளை தன்னை விட்டு நகரமால் இழுத்துக் கொண்டவன்,
“அப்ப நீ ஹேப்பியா….நான் கூட உன் மாமியார் வீட்டுக்கு போறன்னு சொன்ன உடனே அழுவனு பார்த்தேன்…”என்று கூற,அவனை முறைத்தவள்,
“நான் ஏன்டா அழுவனும்…எனக்கு என் அத்தை இருக்காங்க….ஜாலியா இருக்க போறேன்….”என்றவள் அவனின் மேல் நன்றாக சாய்ந்து கொண்டவள்,
“இதுக்கு தான் நீ வேலையை பத்தி கேட்டியா நீ….”
“ம்ம்ம்…நீ என்ன நினைக்குற….”என்று சத்யா கேட்க,
“ம்ம்…எனக்கு எதுவும் தோணலையே சத்து மாத்திரை….”என்று குழப்பமான முகத்துடன் கூற,
“ம்ம்…நீ இங்க நான் அங்க இது ஒத்துவராது கயல்….”
“சரி நான் பேப்பர் போட்டுறேன்….உனக்கு எப்ப மாத்தல் கிடைக்கும்….”என்று கேட்க,
“ஏய்…நான் யோசிக்கிறேன் டீ…நீ ஏன் அவசர படுற…”என்று கூற,கயல் கேட்கவில்லை வீட்டில் இருந்தும் அதிக நாட்கள் வேலை செய்ய முடியாது அதனால் வேலை வேண்டாம் என்று முடிவாக கூற சத்யாவும் அவளின் விருப்பப்படி விட்டுவிட்டான்.
அடுத்த இரண்டு மாதத்தில் சத்யாவும்,கயலும் கோவைக்கு வந்துவிட்டனர்.கயல்விழி ஒரு மாதம் முன்பு தான் வேலையை விட்டிருந்தாள்.இருவரும் வீட்டில் வந்து இறங்க அமிர்தாவிற்கு தான் அத்தனை சந்தோஷம் மகனையும்,மருமகளையும் பார்த்து.வாசல் வரை ஓடி வந்து வரவேற்க,
“அம்மு ம்மீ….ஏன் இப்படி ஓடி வர….அதான் நாங்க வந்துட்டு தான இருக்கோம்…..”என்று கூற,
“போடா….உனக்கு என்ன தெரியும்….உங்க இரண்டு பேரையும் பார்க்குறதே பெரிசா இருக்கு….நாங்க வந்து பார்க்குறதுக்கும் தடா போட்டு வச்சிருக்க….நான் என்ன தான் செய்யட்டும்….எனக்கும் என் பையன்,மருமக கூட இருக்கனும் ஆசை இருக்காது…..”என்று கலங்கிவிட்ட கண்களுடன் கூற,
“ஓய் போலீஸ்….தள்ளி போ….”என்ற கயல்,அமிர்தாவை கட்டிக் கொண்டு,
“அத்தை…நாங்க இனி இங்க தான் இருக்க போறோம்….இனி நீங்க கவலையே பட வேண்டாம் தினமும் உங்க மகனை பார்க்கலாம்…”என்று கயல்விழி கூற,
“நிஜமாடா கயலம்மா….”என்று அவளின் கன்னத்தை வழித்து கூற,
“ம்ம்ம்மா….அவளை நான் மட்டும் தான் கயலம்மானு கூப்பிடுவேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்….”என்று சத்யா அமிர்தாவிடம் வாசலிலேயே சண்டைக்கு நிற்க,
“போடா போக்கிரி…அவ எனக்கும் கயலம்மா தான்….”என்று அமிர்தாவும் மகனுடன் மல்லுக்கு நின்றார்.
“போதும்…அம்மாவும் பிள்ளையும் சண்டைக்கு நிற்க வேண்டாம்…முதல்ல வீட்டு உள்ள வாங்க….”என்று லிங்கம் கூப்பிட,அனைவரும் உள்ள வந்தனர்.அதற்குள் அமிர்தா அனைவரிடமும் சத்யாவின் பணிமாற்றம் பற்றி கூறிவிட,லிங்கத்திற்கு அத்தனை சந்தோஷம் மகன் தங்களுடன் இருக்க போகிறான் என்பதே அவருக்கு நிம்மதி.
கயல்விழி அமிர்தாவுடன் இணைந்துவிட வீடு கலை கட்டியது வெகு நாட்களுக்கு பிறகு.அதன் பின்னான நாட்கள் சத்யாவை விட கயலுக்கு தான் அத்தனை மகிழ்ச்சி என்று கூற வேண்டும் அமிர்தாவுடன் வலவலத்துக் கொண்டே வேலைகளில் அவருடன் இணைந்துவிடுவாள்.சில நேரங்களில் லிங்கமும் இவர்களுடன் சேர்ந்துவிடுவார்.சத்யாவிற்கு தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அவள் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று.அதை தனியாக இருக்கும் நேரங்களில் கூறவும் செய்வான்.
“வர வர என்னை நீ கண்டுக்குறதே இல்லைடீ….நீ….இது சரியில்ல….”என்று சத்யாவிற்கு அவ்வபோது மாமியார்,மருமகள் இணைந்தே சுத்துவது பிடிக்காது அதனால் கூறுவான்.அவனை பொறுத்தவரை கயலுக்கு தான் தான் முதன்மை மற்றவர்கள் இரண்டாம் பட்சமாக தான் இருக்க வேண்டும்.அதனால் சில நேரங்களில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவன் அலையும் போது எல்லாம் கயல்,
“ஓய் போலீஸ் நீ பண்ணுறது நல்லா இல்லை….”என்று கூற
“எனக்கு எப்போதும் நீ தான் பஸ்ட்….அது போல தான் நான் உனக்கு இருக்கனும்….இப்படி எதிர்பார்க்குறது தப்பா….போ….”என்று குழந்தை போல முகத்தை தூக்குபவனை பார்த்ததும் கயலிற்கு உருகிவிடும்.அதனால் சத்யா வரும் வரை அமிர்தாவுடன் இருப்பவள் சத்யா வந்தவுடன் அவனுடன் தான் இருப்பாள்.அமிர்தாவிற்கு மருமகளின் எண்ணம் புரிய மகிழ்ச்சியாகவே ஒதுங்கிவிடுவார்.ஆனால் அவர் கணவரிடம் கூற லிங்கம் தான்,
“உன் பையன் தான் ஏதோ சொல்லியிருக்கான்…அதான் அவன் வந்தவுடனே அவன் பின்னாடியே சுத்துறா…”என்று கூற,
“உங்க பிள்ளை வேற எப்படி இருப்பான்….என்னையும் இப்படி தான படுத்தி எடுத்தீங்க….”என்று அமிர்தா லிங்கத்தின் தோள்களில் இடித்துவிட்டு செல்வார்.
ரஞ்சினியும் சரி சத்யாவும் சரி இருவருமே அமைதி பேர்வழிகள் தான் அதனால் அவர்கள் இருந்தாலும் இல்லை என்றாலும் வீட்டில் பெரிதாக மாற்றம் இல்லை.ஆனால் கயல்விழி எப்போதும் துருதுரு என்று இருக்க லிங்கத்திற்கும்,அமிர்தாவிற்கும் அத்தனை பிடித்தது.வீட்டில் எப்போதும் கேட்கும் சிரிப்பு சத்தமும்,கலகலப்புமும் வெகு நாட்களுக்கு பிறகு வீடு உயிர்ப்புடன் இருப்பது போல் இருந்தது.
கயல்விழி நினைக்கும் நேரமெல்லாம் அவளின் வீட்டிற்கும் சென்றுவருவாள்.மகளின் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை கண்ட பார்வதிக்கும்,குருமூர்த்திக்கும் மனதில் நிம்மதி பரவியது.சத்யாவும் சில முறை அவளுடன் இணைந்து மாமனார் வீட்டிற்கு வந்துவிட்டு செல்வான்.இதோ கயல்விழி கோவை வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
அன்று காலைவேளை பரபரப்பாக இருந்தது சத்யாவின் வீடு ஒரு உறவினர் திருமணத்திற்கு அமிர்தாவும்,லிங்காவும் காலையில் கிளம்பிக் கொண்டிருந்தனர்.இரண்டு வாரங்கள் முன்பு தான் சத்யா வேலை விஷயமாக டெல்லி வரை சென்றிருந்தான்.போகும் போதே சொல்லிவிட்டு தான் சென்றான் நான் அழைத்தால் மட்டுமே பேச வேண்டும் முக்கிய விஷயம் இல்லாமல் அழைக்க வேண்டாம் என்றிருந்தான்.
லிங்காவும்,அமிர்தாவும் திருமணத்திற்கு கிளம்பி சென்றுவிட வீட்டில் கயல் தனியாக தான் இருந்தாள்.ஏனோ கயல்விழிக்கு காலையில் இருந்தே உடல்நிலை ஏதோ போலவே இருந்தது.காலை உணவை முடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு ஏதோ பிரட்டி கொண்டு வர வேகமாக தங்களின் குளியல் அறைக்குள் சென்றவள் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டாள் இப்போது உடல் இன்னும் பலவீனமாக மீண்டும் தலை சுத்த தொடங்கியது.அப்போது தான் அவளுக்கு மூளையில் மின்னல் வெட்டியது போல் நாள் கணக்கு நியாபகத்திற்கு வர நாள் காட்டியை பார்த்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சி இருபது நாட்கள் கடந்திருந்தது,
“நான்….எனக்கு குட்டி….குட்டி பாப்பா…ஏய் கயல் இரு இரு….முதல்ல கன்பார்பம் பண்ணனும் அப்புறம்…அப்புறம் முதல்ல சத்து மாத்திரைக் கிட்ட தான் சொல்லனும்…”என்று தனக்குள் கூறிக் கொண்டவள்,வேகமாக பக்கத்தில் இருக்கும் மருந்தகம் சென்று பிரகனன்ஸி கிட் வாங்கி வந்து வைத்துக் கொண்டாள்.வீட்டிலும் யாரும் இல்லை லிங்காவும்,அமிர்தாவும் நாளை மாலை தான் வருவார்கள் என்பதால் கயலுக்கு அது சாதகமாகவே போனது.ஒருவேளை குழந்தை என்றால் முதலில் சத்யாவிடம் பகிர வேண்டும் அதன் பிறகு தான் மற்றவர்களிடம் கூற வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.
இரவெல்லாம் கயலிற்கு தூக்கம் இல்லை மனதெங்கும் குறுகுறுப்பு குழந்தையாக தான் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டே தூங்கியும் போனாள்.
காலைவேளை எழுந்துவுடன் சோதனை செய்துவிட்டு நகத்தை கடித்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க,இருகோடுகள் விழும் வரை மனதில் அத்தனை வேண்டுதல்கள் வைத்துக் கொண்டு தான் இருந்தாள்.இருகோடுகள் விழுந்தவுடன் கயலிற்கு மனதெல்லாம் இன்ப சாரல் இந்த இன்பத்தை பகிர அவள் காத்துக் கொண்டிருக்க.அவளுக்கு கஷ்ட காலம் இன்னும் முடியவில்லை என்பது போல அமிர்தாவின் மூலம் பிரச்சனை உருவானது.
error: Content is protected !!