Skip to content
Post Views: 7,353
மாலை ஆறு மணிபோல் வீட்டிற்கு வந்தவன் விசயத்தை பெற்றோரிடம் சொல்ல, ரமாமணியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, மகனை ஆரத்தழுவிக்கொண்டார்.
“ஷேவிங்லோசன், ஷாம்பு இரண்டுக்கும் அடுத்தவாரம் சூட் இருக்குனு சொல்லியிருக்காங்கம்மா, மத்ததுக்கு அப்புறம் டேட் சொல்றேனு சொல்லியிருக்காங்க.. ராயப்பன் அங்கிளோட ப்ராஜக்ட் வேற பத்துநாள்ல ஆரம்பிக்கனும், இன்னும் இரண்டு இன்ஜினியர், நாலு டிப்ளமோ கேண்டிடேட் அப்பாயிண்ட் பண்ணனும்.” என தனது வேலைகளை படபடப்பாக அடுக்கினான் சர்வேஷ்.
ரமாமணி.. “பார்த்துக்கலாம் பார்த்துக்கலாம்ப்பா, எல்லாம் நல்லபடியா நடக்கும், நீ முகத்துல அடிகிடி படாம பார்த்துக்கோ, சூட்டிங் நேரம் பார்த்து டேமேஜ் பண்ணிக்காத.” என்றார் அக்கறையாக.
“சரிம்மா.” என சிரித்தவன், “ஒரு டீம்மா.” என சோபாவில் அமர்ந்து, இனியனிற்கு அழைத்து, “உனக்கு தெரிஞ்ச பசங்க யாராவது இருக்காங்களா?” என்றான்.
Advertisement
“விசாரிச்சாதான் தெரியும் சர்வா.”
“நாளைக்கே முடியும்னா பாரு, இல்ல இன்ஜினியர் வான்ட்டட்னு ஆட் கொடுத்துடலாம்.”
“நாளைக்கேவா சர்வா?”
Advertisement
“ஆமாம்.” என்றவன் அவசரத்திற்கான காரணத்தையும் சொல்ல, “ஹேய்.. சர்வா.. சூப்பர் சூப்பர்.. கங்ராட்ஸ்.” என்றான் சந்தோசத்தோடு.
Advertisement
“ஆட் வெளில வரும்வரை யார்கிட்டயும் ஷேர் பண்ணாதிங்க இனியன், இன்க்ளூடிங் அனி.. அப்படித்தான் அக்ரிமண்ட் போட்டுருக்காங்க.” என்றான்.
“சரி சர்வா. நான் இன்ஜினியர் பத்தி விசாரிக்கிறேன்.” என இணைப்பை துண்டித்தான்.
அன்னை கொடுத்த டீயை பருகியபடி நீச்சல்குளம் கட்டுமானத்திற்கான கம்பிகள் வாங்க வழக்கமாய் கம்பி வாங்குபவருக்கு அழைத்து நாளை நேரில் வருவதாக சொல்லி இணைப்பை துண்டித்தான்.
Advertisement
** ** ** ** **
அடுத்து வந்த நாட்களில் கட்டுமானப்பணிக்கான பொருள்கள் வாங்கவும், இரண்டு புது பொறியாளர்கள், மூன்று டெக்னீசியன்கள் என நியமிக்கவும் ஒரு வாரம் முடிந்திருக்க, புதிதாய் வந்தவர்களின் திறனை அறியும் முன்பே சர்வேஷ் படப்பிடிப்பிற்கு செல்லும் நாளும் வந்தது.
தான் வந்த பின்னே புது நீச்சல்குளத்திற்கான பணியை ஆரம்பிக்க திட்டமிட்டு, அதுவரை மற்ற கட்டிட வேலையின் பொறுப்பை இனியனிடம் ஒப்படைத்து சென்றிருந்தான் சர்வேஷ்.
இரண்டு நாளில் படப்பிடிப்பு முடியும் என நினைத்திருந்தவனிற்கு உடன் நடிக்கும் பிரபல நடிகை குறித்த தேதியில் படிபிடிப்பிற்கு வராமல் போகவே, நான்கு நாள் கழித்து ஆரம்பமான படபிடிப்பு, முடிய ஒரு வாரம் ஆனது.
ஷாம்பு, மற்றும் ஷேவிங் லோசனிற்கு மட்டும்தான் என நினைத்திருக்க, மற்ற அனைத்தும் ஒரு சேர முடித்திடலாம் என்றுவிட்டார் தயாரிப்பாளர். எனவே கேரளாவிலேயே ஒருவாரம் முடிந்திருக்க, வேலையாகிக்கொண்டிருக்கும் கட்டிடங்களை பார்த்தே பத்து நாள் ஆகியிருந்தது.
நேற்று மாலை சென்னை வந்த சர்வேஷ்வரன், இன்றுதான் அலுவலகத்திற்கு வந்திருந்தான். இனியனும் வர, “ரொம்ப தேங்க்ஸ் இனியன்.” என்றான் உள்ளார்ந்து.
“ஹே என்ன சர்வா? நான் செய்யாம யார் செய்வா?” என்றான் உரிமையாக.
“எப்படி மேனேஜ் செய்திங்க இனியன்? புதுசா வந்தவங்க பரவாயில்லையா?” என்றான்.
“பரவாயில்ல சொல்லமாட்டேன், ரொம்ப சூப்பர்னுதான் சொல்லனும். நல்லா பிரிஸ்கா வேலை பார்க்குறானுங்க.” என இன்முகத்தோடு சொன்னவன், “ஆனா உங்களை கேட்காம ஒன்னு செய்ய வேண்டிய சூழல் ஆகிடுச்சு.” என்றான்.
“என்னது?”
“முன்ன மதிமலர் பார்த்துட்டு இருந்த கட்டிடத்தை நான் பார்த்துட்டு, நான் பார்த்துட்டு இருந்த வேளைச்சேரி சைட்டை மதிமலரை பார்க்க சொன்னேன், அவங்களும் ஒகே சொல்லிட்டாங்க.”
“அது ரொம்ப லாங் ஆச்சே இனியன்.. டிராவலிங்ல யுவராஜ் எதாவது பிரச்சனை செய்தா என்னாகுறது? என்கிட்ட சொல்லாம எதுக்கு அனுப்புனிங்க?” என சர்வேஷ் முகம் இறுக..
“வேற வழியில்ல சர்வா, அங்க வெர்க் பண்றவங்க கொஞ்சம் ரூட், புது ஆட்கள் அதுக்கு சரிவரமாட்டாங்க..
இன்னும் மூனு மாசத்துல முடிச்சாகவேண்டிய கட்டிடம், ஃபினிசிங் சரியா வரனும், எக்ஸ்பீரியன்ஸ் இன்ஜினியரை போடுறதுதான் சரிவரும்..
என்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு பர்சனல் வேலையா சர்வேஷ் சார் வெளில போயிருக்கார்னு மதிமலர்கிட்ட ரிக்வஸ்டாதான் கேட்டேன், உடனே ஓகே சொன்னாங்க, சைட் மெயின்லதான் இருக்கு, ஆனா இங்கிருந்து ரொம்ப லாங், அதனால டெக்னீசியனை ஹெல்ப்புக்கு அனுப்பறேனு சொன்னேன்..
இப்போதைக்கு வேணாம், தேவைப்பட்டா சொல்றேனு சொல்லிட்டாங்க. லொகேசன் சொல்லி, மார்னிங் அன்ட் ஈவ்னிங் டேக்ஸி புக் பண்ணிக்கோங்கனு பணம் கொடுத்துட்டேன், சேஃபாதான் போய்ட்டு வராங்க. டெய்லி ஒர்க் முடியும் நேரம் கால் பண்ணி பேசிட்டுதான் இருக்கேன்.” என்றான் பொறுமையாக.
“அனி என்ன பண்றாங்க?”
“புது டெக்னீசியன் ஹெல்ப்போட கொரட்டூர் அப்பார்மண்ட்டை பார்த்துக்கிறாங்க.”
“ம்.. ஓ.கே.” என்றவன், ராயப்பனின் நீச்சல்குளம் கட்டுமானப்பணி துவக்குவதை பற்றி ஆலோசித்து இனியன், மதிமலர், அக்னிஷாவிற்கான சம்பள உயர்வையும் தெரிவித்து, “ம்.. உங்களுக்கும் மதிமலருக்கும் பிரச்சனை வராம எப்படியிருந்தது?” என்றான் கிண்டலாக.
சிரித்த இனியன்.. “உண்மையை சொல்லனும்னா, அவங்க பங்ச்சுவாலிட்டில நான் சரண்டர் ஆகிட்டேன் சர்வா. சரியா ஒன்பது மணிக்கு சைட்டுக்கு வந்துட்டேனு மெஸேஜ் போட்டுடுவாங்க.. ஆறு மணிக்குத்தான் கிளம்புவாங்க.
எனக்கு அவங்கமேல தனிப்பட்ட பிரச்சனையில்லை, ஆனா என்னையும் அனியையும் எப்போவும் கீழ்தரமா பார்க்குறதுலதான் கடுப்பாகிடுவேன்..
அதோட அனியும், மதிமலரும் சந்திச்சு ஒரு வாரம் ஆகிடுச்சு, நானும் மதிமலரோட போன்ல பேசுறதோட சரி, அதனால முட்டிக்க வாய்ப்பில்லாம போய்டுச்சு.” என்றான் இலகுவாக.
“ஓகே.” என்றான் நிம்மதியான பாவனையோடு.
** ** ** **
அடுத்தநாள் எட்டரை மணிக்கெல்லாம் கட்டிடத்தை வந்தடைந்த மதிமலருக்கு சர்வேஷை கண்டதும் ஆச்சர்யமாகிட.. “குட்மானிங் சார்.” என்றாள் சின்ன குரலில்.
ஒன்பது மணிக்குத்தானே வருவாள் என இனியன் சொல்லியிருந்தார் என்ற யோசனையோடு.. “எதுக்கு இந்த நேரமே வந்துருக்கிங்க.?” என்றான்.
மதிமலர் நினைத்தவாறே தண்ணீர் விட என இருவர் வர, சர்வேஷிடமிருந்து பார்வையை அகற்றி, “காலைல அஞ்சு மணிக்கெல்லாம் தண்ணி விட ஆரம்பிச்சிடனும்னு இரண்டு நாள் முன்னாடியே சொன்னேதானண்ணா? இப்போ மணி என்னாகுது?” என்றாள் முறைப்பாக.
“வீட்டுல குழந்தைக்கு முடியல மேடம், அதான் கொஞ்சம் லேட்டாகிடுச்சு.” என்றார் கெஞ்சலாக.
“எது கொஞ்சம் லேட்டா? இப்போ டைம் என்ன தெரியுங்களா?” என முறைத்து.. “அதெப்படி? இரண்டு பேரோட குழந்தைக்கும் ஒரே நேரத்துல முடியாம ஆகிடும்?” என்றாள் எள்ளலாக.
“அப்போ உள்ள தண்ணி விட்டுட்டிருக்கவன் யாரு?” என்றான் சர்வேஷ்.
“முன்னாடி இருக்க பெட்டிக்கடை அண்ணாவோட பையன் சார்.. காலேஜ் போய்டிருக்கான், செம் லீவ்ன்றதால எதாவது வேலையிருக்கானு கேட்டான், வேலை கொடுக்குற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, ஆனா சின்ன ஹெல்ப் பண்றேன்னு சொல்லி, இந்த கட்டிடத்துக்கு அஞ்சேகால் மணிக்கு மேலாகியும் தண்ணி விடுறவங்க வரலைனா நீ விடு, அன்னைக்கான கூலியை நான் கொடுத்துடறேனு சொல்லியிருந்தேன்.. அவன்தான் தண்ணி விட்டுட்டு இருப்பான்..” என்று.. தனது மொபைலிலிருந்து ரகுவிற்கு அழைத்து வெளியே வர சொன்னாள்.
ஐந்தாவது தளத்திலிருந்து ரகு எட்டிப்பார்க்க.. “ஆச்சா?” என்றாள்.
“ஆச்சுக்கா, ஓஸ் பைப் சுருட்டி வச்சிட்டிருக்கேன்.” என்றான்.
“ம்.” என மெச்சுதலாய் சொல்ல, ரகு உள்ளே சென்றிருந்தான்.
“நீங்க கிளம்பலாம்.” என்றாள்.
“அதெப்படி இப்படி பண்ணலாம்?” என ஒருவன் கேட்க, “வாங்குற சம்பளத்துக்கு நேர்மையா வேலை செய்யனும்.. சின்ன வேலை, அதுல கூட ஏமாத்த பார்க்குறிங்க.. கட்டிட ஓனர் வந்தா நீங்களா பதில் சொல்லுவிங்க? கிளம்புங்க..” என்றாள் கோபமாக.
சொன்னதுபோல் சம்பளத்தில் கை வைப்பாளோ என இருவரும் தயங்கி நிற்க, “உங்க சம்பளத்துல பாதியைதான் அவனுக்கு கொடுக்கப்போறேன்.” என்றாள் தாட்சண்யமின்றி.
இருவர் முகமும் வாடிட, “இனியும் லேட்டா வந்தா முழு சம்பளத்தையும் கட் பண்ணிடுவேன்.” என எச்சரிக்க, அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.
“இப்படி எத்தனை நாளா பண்ணிட்டிருக்கிங்க.?” என்றான் மெச்சுதலாக.
“இன்னைக்குத்தான் சார், இரண்டு நாள் வார்ன் பண்ணினேன், கேட்கவேயில்ல, போதாததுக்கு இன்ஜினியர்னா பெரிய கொம்பா? இவ அப்பமூட்டு கட்டிடமா? கொஞ்சம் லேட்டானா என்னாகிடும்? ரொம்பத்தான் எகுறுறானு மரியாதையில்லாம திட்டியிருக்காங்க, அதான்.” என்றாள்.
தந்தையிடமிருந்து மதிமலருக்கு அழைப்பு வரவே, தயக்கத்தோடு சர்வேஷை பார்த்தாள். “பேசுங்க.” என்றான்.
அழைப்பை ஏற்றபடி சற்று தள்ளிச்சென்றவள்.. “அப்பா இந்த வாரமும் வர முடியாதுப்பா, நடக்காத கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கும் வைபவம் எதுக்கு? எனக்கு வெளியூர் மாப்பிள்ளை வேணாம்.” என்றாள்.
“புகழ்தம்பி பேசுறாராம். கொடுக்குறேன், பேசு.” என ரோஜா கணவனிடம் மொபைலை கொடுக்க.. “அத்தான், இதெல்லாம் நியாயமேயில்ல, என்னை கேட்காம அப்பாகிட்ட எதுக்கு பையன் போட்டோலாம் காட்டுனிங்க? என்னவோ அவனை விட்டா மாப்பிள்ளையே இல்லைன்ற மாதிரி அப்பா பேசுறார்.” என்றாள் சிறு கோபத்தோடு.
“நீ இப்படி ப்ளான்ல இருப்பேனு எனக்கு தெரியாது மலர்.. பையனுக்கு வேற உன்னை ரொம்ப பிடிச்சிடுச்சு போல, கட்டினா உன்னைத்தான் கட்டனும்னு சொல்லிட்டிருக்கானாம், நீ ஊத்தங்கரை வரலைனா அவன் ஃபேமலியோட சென்னை வந்து பொண்ணு பார்க்கலாமானு கேட்குறான்.” என்றான் புகழேந்தி.
“அச்சோ அத்தான், அப்படியேது செய்துடாதிங்க, ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நான் வேணும்னா ஒரு மாசம் கழிச்சு வரப்பார்க்குறேன். இங்கெல்லாம் வரவேணாம்.” என்றாள் கெஞ்சலாக.
கட்டிடப்பணிக்கு ஆட்கள் இன்னும் வராமலிருக்க, மதிமலர் பேசியது சர்வேஷ் காதில் நன்றாக விழ, யார்டா அந்த அத்தான் என கடுப்போடு பார்த்திருந்தான் மதிமலரை.
“என்னது ஒரு மாசமா? அதெல்லாம் முடியாது, இந்த வாரம் நீ வந்தே ஆகனும்.. இதோ மாமாகிட்ட கொடுக்குறேன்.” என மயில்சாமி கைக்கே மீண்டும் மொபைல் வர, “அப்பா இங்க நிறைய ஒர்க் போயிட்டிருக்கு, நிச்சயமா இந்த வாரம் வரவே முடியாது.. அத்தான் புரிஞ்சுக்காம பேசுறாங்க.” என முறையிட்டாள் சலுகையாக.
அப்பான்னும் பேசுறா? அத்தான்னு வேற கொஞ்சுறா.. சொந்தத்துல எவனாவது முன்னாடியே புக் பண்ணிட்டானோ என பதட்டத்திற்குள்ளானான் சர்வேஷ்வரன்.
தனக்கெல்லாம் இவள் ஒத்தே வரமாட்டாள் என தங்கையிடம் சொன்னபோது வராத பதட்டம் தற்போது அவனையறியாமல் வந்திருக்க, மதிமலர் பேசி முடிக்கும்வரை காத்திருந்தவனுக்கு, பேசி முடித்ததும்.. “யாரந்த அத்தான்?” என கேளாமல் இருக்க முடியவில்லை.
சர்வேஷ் கேட்ட விதம் கோபத்தை உண்டாக்க.. “அதை எதுக்கு நீங்க கேக்குறிங்க?” என்றாள் தானும் முறைப்பாக.
error: Content is protected !!