Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலென்பது கனவு அல்லவா

Kadhal enbadhu kanavu allava -23

23.

 

அன்று மீனாட்சியின் திருமணநாள் என்பதால் அனைவரும் ஹோட்டலில் ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடலாம் என்று முடிவு செய்தனர்.

 



Advertisement

ஒரு நோட்டு பேனா எடுத்துக்கொண்டு யாருக்கு என்ன வேண்டும் என்பது லிஸ்ட் போட்டாள்.

 

“எனக்கும் மாமாவுக்கும் சப்பாத்தி குருமா” என்று மீனாட்சி கூற அதற்கு லதா..

Advertisement

 

Advertisement

“அத்தை இன்னைக்கும் அதே சப்பாத்தி தானா? பரோட்டா வாங்கிக்கோங்க”என்றாள்.

 

“ம்ம் எனக்கும் கோபிக்கும் பிரியாணி”என்று லதா மீண்டும் கூறினாள்.

Advertisement

 

“ஓகே நானும் கார்த்தியும் மஸ்ரூம் புலவ் ஆர்டர் பண்ணிக்கிறோம்” என்று கனகா எல்லோருக்கும் தேவையானதை அறிந்து கொண்டு ஆர்டர் செய்தாள். குடும்பத்தில் அனைவரும் இப்படி ஒன்று கூடி அதுவும் ஒற்றுமையாக அவரவருக்கு பிடித்ததை வாங்கி சாப்பிடுவது இதுவே முதல் தடவை. குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் அப்படி தான் இருக்க வேண்டும் என்பதல்ல… அவரவர் போக்கில் இருந்தாலும் மற்றவர் தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொண்டாலே போதும்.

 

சில குடும்பங்களில் இதை புரிந்து கொள்வதில்லை. குடும்பம் என்றால் எப்போதும் ஒட்டி உரசி கொண்டே இருக்க வேண்டும், எப்போதும் முகத்தை சுளிக்காமல் சிரித்துக் கொண்டே பேச வேண்டும் என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள். ஆனால் உண்மையில் யாரும் அப்படி இருக்க முடியாது சந்தர்ப்பம் சூழ்நிலை எப்படியோ அப்படித்தான் நடந்து கொள்ள முடியும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது சிறந்த குடும்பத்தின் அடையாளமாகும்

‌ சரி வாருங்கள் கதைக்குள் பயணிப்போம்.

 

பூங்கொடி நாளுக்கு நாள் குடும்பத்துடன் ஒன்றிவிட்டாள். லதா மற்றும் கனகா குழந்தைகளை கவனிக்கும் பணியையும் மேற்கொண்டாள்.அவள் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் எல்லோருக்கும் வந்தது. குழந்தைக்கு ஒரு மூன்று மாதம் ஆனதால், வீட்டில் பூங்கொடி மற்றும் லதா, மீனாட்சி பொறுப்பில் விட்டுவிட்டு கனகா தன்னுடைய நர்ஸ் பணியை தொடர்ந்தாள்.

 

செவிலியர்கள் இன்னொரு தாய்க்கு சமம் என்றாலும் மிகையாகாது. பெற்ற தாய் கூட சில பணிவிடைகள் செய்ய தயங்கும் சூழ்நிலையில் தாய்க்கு தாயாக இருந்து செவிலியர்கள் தங்கள் பணியை மேற்கொள்கின்றனர் . மீண்டும் அதே வெள்ளை சீறுடை. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இருக்கும் சோர்வு,அதை மீறி அவளுக்கே உரிய ஒரு புன்னகை, என்று தன் வேலையை செய்ய தயாராக இருந்தாள்.

 

“சிஸ்டர் அந்த பேஷண்ட் க்கு பீபி செக் பண்ணுங்க ”

 

“இதோ வரேன் ” என்று விரைந்தாள். இப்படி ஓடி ஓடி அயராமல் வேலை செய்ய துவங்கினாள். இடையிடையே குழந்தை எப்படி இருக்கு என்பதையும் போன் செய்து கேட்டுக்கொள்வாள்.

 

“கனகா,உன் குழந்தை என்னதான் பவுடர் பால் குடித்தாலும் தாய்ப்பாலுக்கு ரொம்ப ஏங்குது சில நேரங்களில் வேற வழி இல்லாமை நான் தாய்ப்பால் தந்துடுறேன்” என்றாள் லதா.

 

“ஐயோ அக்கா இதுல போய் என்ன இருக்கு . இதை நீங்க பண்ணலனா தான் நான் கோச்சிப்பேன்”என்று சிரித்தாள் கனகா.

 

“இல்லை சில பேரு தான் குழந்தை மேல் ரொம்ப பொஸஸிவ் இருப்பாங்க அதான் தயங்கி தயங்கி சொன்னேன் உன்கிட்ட”என்று லதா கூறியதற்கு…

 

“எல்லா உறவுலையும் பொஸஸிவ் வரதான் செய்யும் ஆனால் அதை மீறி சில தேவைகள் வரும் போது அந்த பொசசிவ தூக்கி எறிஞ்சிட்டு அந்த தேவையை பூர்த்தி பண்ணனும். இப்போ நான் வேலைக்கு வந்துருக்கேன் குழந்தையை கவனிக்காம அப்படி என்ன உனக்கு உன் வேலை முக்கியம்னு சொல்லாம என் குழந்தைக்கு நீங்க தாயா இருந்து பாத்துக்கிறேன்னு சொல்றது எனக்கு எவ்ளோ ரிலாக்ஸாக இருக்கு தெரியுமா. என்று கனகா கூறினாள்.

 

அவளிடம் பேசிவிட்டு போனை வைத்த லதா, அவளின் எதார்த்தமான பேச்சைக் கண்டு கண் கலங்கி நின்றாள்.

 

மீனாட்சி தன் பேரன் பேத்தியை மடியில் வைத்து கொஞ்ச துவங்கிய நாள் முதல் பாதி நேரம் அவர்களிடமே இருந்தது. மீனாட்சிக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு. கால் வலி முட்டி வலி என்று பஞ்சபாட்டை நிறுத்திவிட்டு இப்போது கொஞ்சம் சுருசுருப்பாக மாறிவிட்டார்.

 

“அடியேய் லதா அந்த வசம்பு எடு ” “அதோ அந்த தேங்கா எண்ணெய் எடு ” இப்படி குழந்தைக்கு செய்யும் சில ஆரோக்கிய குறிப்புகள் எல்லாம் சொல்லி தந்தவாறு இருந்தார் மீனாட்சி.

 

பூங்கொடிக்கு இந்த அழகான வாழ்க்கை பிடித்திருந்தது. ஐயோ நமக்கும் கல்யாணம் காட்சி நடந்தா இப்படி எவ்ளோ சந்தோஷமா இருக்கலாம் என்று தோன்றியது.ஆனால் விதி அவளுக்கு எப்படி எழுதியுள்ளது என்று யாருக்கும் தெரியாது.

 

‘ரொம்ப நாள் ஆச்சு நம்ம ஊர் காட்டூருக்கு போய்ட்டு வருவோம் ‘ என்று பூங்கொடி கிளம்பினாள். பஸ் பயணம் முடிந்து வீடு வந்து சேர்ந்தாள். குளித்து முடித்துவிட்டு தன் வயதான தாய் தந்தையருக்கு சில பணிவிடைகள் செய்து விட்டு வழக்கமாக செல்லும் சிவன் கோவிலுக்கு செல்ல ஆயுத்தமானாள்.

 

“அம்மா நான் கோவிலுக்கு போய்ட்டு வரேன் ” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் . கோவிலுக்குள் நுழையும் போதே ஏதோ ஒரு புது வித மகிழ்ச்சி பிறந்தது .

 

“ஈஸ்வரா ரொம்ப நாள் ஆச்சு இங்க வந்து ” என்று நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கிற ஒரே மன ஆறுதல் கோவிலுக்கு செல்வது தான். வீட்டில் இருக்கும் கஷ்டங்களை எல்லாம் மறக்க செய்வது கோவில் தான். பூங்கொடிக்கும் அப்படி தான். ஒருபக்கம் ஏழ்மை குடும்பத்தை தூக்கி நிறுத்த இன்னொரு வீட்டில் நிரந்தர வேலைக்காரியாய் இருக்க வேண்டிய அவல நிலை, இதற்கிடையில் அவளுடைய வாழ்க்கையை பார்ப்பதற்கோ, அல்லது திருமணத்தை பற்றி யோசிப்பதற்கோ எங்கு நேரம் இருக்கிறது. ரொம்ப நாள் கழித்து கோவிலுக்கு வந்த மகிழ்ச்சியில் வந்து அமர்ந்தாள். அங்கு ஒரு வயதான முதியவர் ,அவர் சிவன் பக்தரும் கூட ,அவர் ஓரமாக அமர்ந்தபடி “சீக்கிரமே உன்னை தேடி ஒரு ராஜக்குமாரன் வரப்போறான் சந்தோஷமா இரு ” என்று சொல்லி விட்டு கையில் விபூதி தந்தார்.

 

அதை வாங்கி இட்டுக்கொண்டு பூங்கொடி அவரை வித்தியாசமாக பார்த்தாள்.

 

“என்னது ? என்னை தேடி ராஜக்குமாரன் வரப்போறானா ?” என்று புரியாமல் யோசித்தாள்.‌

 

ஆனால் எது எப்படியோ அவர் சொல்லும் வாக்கு பளிக்கட்டும் என்று நினைத்து ஆனந்தமாய் இருந்தாள். ஆனால் மனதுக்குள் யார் அந்த ராஜக்குமாரன் ? என்னை தேடி யார் அப்படி வருவாங்க ? எங்க இருக்காரு ? இப்படி எல்லாம் கேள்விகளை எழுப்பியபடி யோசித்தாள். அந்த ராஜக்குமாரன் யார் என்ற யோசனை நமக்கும் இருக்கிறது அல்லவா வாசகர்களே? வரும் அத்தியாயங்களில் தெரிந்துவிடும்.

 

கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. இருக்காதா என்ன ? வீட்டுக்கு வந்ததும் தலையில் வைத்திருந்த பூவை வருடியபடி கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

 

“என்னத்தா ரொம்ப கனவு காணுறியோ “என்று அவள் அம்மா கேட்க அதற்கு ஆம் என்று தலை அசைத்தாள்.

 

“ம்ம் நம்மள மாதிரி சாதாரண ஆளுங்க பெரிய கனவு எல்லாம் காண கூடாது. எப்பவும் ஒரே மாதிரி இருக்கனும்” என்று அம்மா அறிவுரை கூறியது அவளுக்கு எரிச்சல் தந்தது.

 

ஏழ்மையா பிறக்கிறது தப்பில்லை ஏழ்மையாவே கடைசி வரைக்கும் இருக்கணும்னு நினைக்கிறது தான் தப்பு. நம்ம எண்ணம் உயர்ந்து இருக்கணும் அப்படின்னு இருந்தா தான் வாழ்க்கைல கொஞ்சம் ஆச்சு உயரம் கிடைக்கும். என்ன பெரிய வித்தியாசம் பணக்காரன் தினமும் பிரியாணி வாங்கி சாப்பிடுற அளவு காசு இருக்கும் ஏழை பட்டவனுக்கு என்னைக்கோ ஒரு நாள் அந்த பிரியாணி அப்படிங்கறது கனவாக இருக்கும்.

 

அதுக்காக ஏகப்பட்ட நான் கனவே காணக் கூடாது அப்படி என்றால் அவன் வாழ்க்கையில் எதையுமே பார்க்க முடியாது. இருக்கலாம் மூணு வேலை சாப்பாட்டுக்கே நமக்கு கஷ்டமா கூட இருக்கலாம் அந்த கஷ்டம் கடைசி வரைக்கும் இருக்கணும் அப்படிங்கிற அந்த எண்ணமே முதல்ல தப்பு இந்த கஷ்டம் என்னைக்காவது ஒரு நாள் மாறனும் அப்படின்னு நினைச்சா தான் மாறும். மாற்றமே மாறாதது. என்று அவள் கூறியதும் தாயிற்கு நன்கு புரிந்தது.

 

” மன்னிச்சுடுடா கண்ணு தெரியாம சொல்லிட்டேன் நீ ஆசைப்படுற மாதிரி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கண்டிப்பா கிடைக்கும்” இன்று ஆறுதலாக தாய் கூறியதும் அவளுக்கு என்றும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

இவள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டு இருக்கும் போதே மீனாட்சி இடம் இருந்து போன் வந்தது.

 

“எப்போ கிளம்பி இங்க வர போற இங்க ஏகப்பட்ட வேலை இருக்கு நீ நாளைக்கே சீக்கிரம் வா” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

 

“அச்சச்சோ போச்சே நாளைக்கு கிளம்பி சென்னை போகனும் போலருக்கு வந்து ஒரு நாள் கூட முழுசா ஆகலை ஏதோ மருமகளை கூப்பிடுற மாதி

ரி உரிமையா கூப்பிடுவதை பாரு ” என்று சொல்லி புலம்பினாள்.

 

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!