Skip to content
Post Views: 10,862

யாழியிடம், ‘டோன்ட் க்ளோஸ் யுவர் ஐஸ்’ என்றவன் உடனே இடக்கரம் கொண்டு அவள் கழுத்தை வளைத்து தன்னை நோக்கி இழுக்க யாழிக்கோ பதறி போனது….
தன்னையறியாமல் ‘வி… விடுங்க’ என்று அவனை தன் மீதிருந்து நகர்த்தியவள் மறுகணமே எழுந்து நின்றுவிட்டாள்.
Advertisement
‘என்னாச்சுடி..?? ஏன் எழுந்துட்ட, செல்பி வேண்டாமா..??’
அவனுக்கு பதிலளிக்க முடியாமல் நின்றவளுக்கு காரணமே இன்றி வியர்வை பெருக்கெடுக்க அவள் பார்வையோ ஒரு முறை சுற்று புறத்தை அவசரமாக அலசியது.
‘என்ன பார்க்கிற..??’ என்றவனின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை
Advertisement
‘ப்ச் யாழி உன்னை தான் கேட்கிறேன் என்ன பார்க்கிற..??’ என்று அவன் அழுத்தி கேட்க..,
Advertisement
‘இல்ல யாராவது வந்தா.. வந்துட்டா…’
‘ஏன் வந்தா என்ன..?? வரட்டுமே’
‘என்னது..?? இப்.. படி நீங் .. க..’ என்றவளுக்கு கொண்ட அதிர்ச்சியில் வார்த்தை உடைபட கோர்க்க முடியாமல் கலங்கி போனாள்.
Advertisement
‘ஏன் இப்படின்னா என்ன அர்த்தம்..?? புரியலை தெளிவா சொல்லு’
அப்போதும் யாழி மௌனம் காக்க,
அவளை தன்னருகே அமர்த்தியவன், “யாழிமா நீ தானே செல்பி கேட்ட இப்போ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..?? என்னாச்சு உனக்கு ..?? ஏன் இப்படி திடீர்ன்னு செல்பி வேணும் சொல்லி என்னை இங்க கூட்டிட்டு வந்த..?? அப்புறம் வேண்டாம் சொன்ன.., இப்போ அமைதியா இருக்க.. என்ன பிரச்சனை உனக்கு என்கிட்டே சொல்லு” என்று நிதானமாக கேட்க அவளும் தோழிகள் வந்ததையும் அவர்கள் பேசியதையும் கூறிட,
‘சோ உன் பிரெண்ட்ஸ்க்கு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எவ்ளோ லவ் இருக்குன்னு புரியவைக்க, சோஷியல் மீடியால போட உனக்கு அவசரமா ஒரு செல்பி தேவை அப்படி தானே..??’ என்று கேட்க,
‘ஆம்’ என்ற மௌன தலையசைப்பு
சில நொடிகள் அவளை ஆழமாக பார்த்தவாறு அமர்ந்திருந்தவன் பின், ‘ஓகே பைன் எடுத்துடலாம்’ என்று அவளை தூக்கி தன் மீது அமர்த்த,
யாழியோ பதறிக்கொண்டு, “இல்… இல்ல நா.. நாம சாதாரண…மா பக்கத்துல நின்னு” என்றவளை இடையிட்டவன்,
“நோ யாழி சாதாரணமா எடுத்தா அப்புறம் மத்தவங்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம் இருக்கும் சொல்லு…?? நம்மோட லவ் அடுத்தவங்களுக்கு புரிய வைக்க நாம புதுசா, வித்யாசமா, தனித்துவமா பண்ணினா தானே சோஷியல் மீடியா முழுக்க வைரல் ஆவோம் உனக்கும் லைக்ஸ் அள்ளும் கமெண்ட்ஸ் குவியும் உன் பிரெண்ட்ஸ் மட்டும் இல்ல ஊரே நம்மோட பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஜியாக்ரபி, பத்தி சிலாகிச்சு பேசி புகழுவாங்க” என்று கேட்க யாழிக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாத நிலை..
ஆம் அவள் கேட்டது தான் ஆனால் அதை எடுப்பதற்குள் அவள் படும்பாடு அவளையன்றி வேறு யார் அறிவர்..!! இதை எப்படி அவனுக்கு சொல்லி புரிய வைப்பது என்று கூட தெரியாமல் அவள் நிற்க,
அதிர்துடியனோ ‘நான் வேணும்ன்னா உங்க அம்மாவை கூப்பிடட்டா…??’ என்றான்.
‘எ… எது.. க்கு..??’ என்றாள் புறங்கையால் முகத்தில் இருந்த வியர்வையை ஒற்றிக்கொண்டே,
‘செல்பி எடுக்குறப்போ நம்ம ஸ்மைல், எக்ஸ்ப்ரெஷன், கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பொசிஷன், லைட்டிங், எக்செட்ரா எக்செட்ரா எல்லாமே கரெக்ட்டா இருக்கான்னு நமக்கு சரியா தெரியாது இல்ல.., ஒரு ஆள் கூட இருந்து சொன்னா டக்குன்னு எடுத்துடலாம் உனக்கு ஸ்டோரி போட எந்த பில்டரும் தேவைபடாது… எனக்கும் குவாரில ஏதோ பிரச்சனைன்னு கால் வந்துட்டே இருக்கு நானும் சீக்கிரம் கிளம்புவேன்’ என்று கூற,
யாழி முகத்தில் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி..!! அம்மாவை வைத்து கொண்டு இப்..ப…டியா..?? என்று எண்ணிய போதே அவள் முகம் வேப்பங்காயை உண்டது போல மாறி போனது.
‘இதோ நான் அத்தைக்கு கூப்பிடுறேன்’ என்று அதிர்துடியன் சுகமதிக்கு அழைக்க முற்ப்பட,
‘என்ன பண்றீங்க..???’ என்று அவசரமாக தடுத்தாள்.
“உங்க அம்மாக்கு கால் பண்றேன்”
‘வே… வேண்டாம்’
‘ஏன்…??’
அவனது ஏன் என்ற கேள்விக்கு அவளுக்கு சரியான பதில் அளிக்க தெரியவில்லையே தவிர அன்னையை அருகே வைத்து கொண்டு இப்படி நெருக்கமாக எடுப்பது தவறு என்று மட்டும் உள்ளுணர்வு அடித்து சொல்ல பதில் இன்றி நின்றாள்.
பின்னே அவள் பார்த்து வளர்ந்த சமூகம் இதையெல்லாம் சரி என்று அவளுக்கு கற்று கொடுத்திருக்க அவள் ஆழ்மனமோ இல்லை கூடாது என்று எதிராக நிற்க தன் நிலையை எப்படி கையாள்வது..?? எப்படி அவனுக்கு தன் நிலையை கடத்துவது..?? என்று புரியாமல் அமைதியாக நின்றாள்.
அவள் மௌனத்தை கண்டு, “ப்ச் என்னடி உன் பிரச்சனை ஒரு செல்பி எடுக்க என்னை இந்த பாடு படுத்துற இதுக்கே இப்படின்னா போட்டோஷூட்க்கு என்ன பண்ணுவ..?? ஹனிமூன்க்கு நம்ம கூட வர கேமராமேனை உன்கிட்ட என் முகத்தை பார்க்க சொல்லியும் கேமராவை பார்க்க சொல்லியும்…, ஸ்மைல் பண்ணுவும் சொல்ல வச்சே டையார்ட் ஆக்கிடுவ போல.. மனுஷனை இப்படி சோதிக்கிற” என்ற சீற்றம் அவனிடம்.
அதியின் கோபம் குறித்து நன்கு அறிந்திருப்பவளுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போக யாழி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அதே நேரம் அதிருக்கு மீண்டும் அழைப்பு வர அதை துண்டித்தவன், ‘ஸ்டாப் க்ரையிங் யாழி.., நீ கேட்டன்னு தான் செல்பி எடுக்க வந்தேன், போஸ் கொடுக்க தெரியாதவ எதுக்குடி என் உயிரை எடுக்குற..?? எனக்கு செல்பி எடுக்குறதை தவிர வேற வேலை இல்லைன்னு நினைச்சியா ..?” என்று கேட்க,
“இல்லையே அவளுக்கு தெரியுமே அவன் வேலையை பற்றி.., மகேஷ்வரன் மற்றும் தம்பி கூறி அவளும் கேட்டிருக்கிறாளே அப்படி இருக்கையில் அவன் தனக்காக பொறுமையாக செல்பி எடுப்பதே அதிகம் அதிலும் அவள் இப்படி சொதப்பி வைத்தால் என்னாவது..??” என்று தோன்ற கண்களை துடைத்து கொண்டு,
“சாரி இனி இப்படி பண்ணமாட்டேன் இப்போ எடுக்கலாம் ஆனா நீங்க.. இப்போ இந்த மாதிரி வேண்டா….” என்று அவள் ஏதோ கூற வர,
ஒரு நிமிஷம் யாழி என்று அவளை தடுத்தவன் திடீரென, ‘ஆணும் பெண்ணும் சமம் தானே..??’ என்று கேட்க,
இப்போது ஏன் இந்த கேள்வி என்று புரியாமல அவனை பார்த்தவளுக்கு அவள் கண்ட கேட்ட காணொளி, நிகழ்வுகள் நினைவில் எழ ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
‘குட்..!!’ என்று அவளை மெச்சி கொண்டவள் மீண்டும் அவளிடம் ” சுதந்திரம் என்பது பெண்களுக்கு மட்டும் தானா..?? ஆண்களுக்கு இல்லையா..??” என்றான்.
யாழிக்கு அவன் ஏன் இப்படி கேட்கிறான் என்று சுத்தமாக புரியவில்லை, ‘பின்னே பெண்களின் சுதந்திரம் பறிக்க பட்டுவிட்டதாக தானே எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் இது என்ன புதிதாக அவர்களுக்கு சுதந்திரம் இல்லயா..? என்று கேட்கிறானே’ என்று விழிகள் விரிய அவனை பார்க்கவும்,
“இங்க பார் யாழி நீ சொன்னது தான் ஆணும் பெண்ணும் சமம் ரெண்டு பேருக்கும் சம அளவு உரிமையும் சுதந்திரமும் இருக்கு…, அதிலும் கணவன் மனைவி சரி பாதியா இருக்கனும்ன்னு சொல்லுவாங்க.., இப்போ செல்பி எடுக்கனும்ங்கிறது உன்னோட விருப்பம்ன்னா எப்படி எடுக்கனும்ங்கிறது என்னோட விருப்பமா இருக்கணும்.. அதுல நீ தலை இடக்கூடாது… அதே போல தான் ஹனிமூன் எப்போ, எங்க போகனும்ங்கிறது உன்னோட விருப்பம்ன்னா அங்க என்ன பண்ணனும்ங்கிறது என்னோட விருப்பமா இருக்கணும் … அப்போ தானே நம்ம லைப் பாலன்ஸ் ஆகும்..??” என்று அவளை கேட்க,
யாழிக்கோ அவன் கேட்பது நியாயமாகவும் அதே நேரம் புதிதாகவும் இருந்தது ஆனால் பெண்ணியம் குறித்து பேசிய யாரும் இது பற்றி பெரிதாக பேசவில்லையே ஏன் என்ற கேள்வி எழ அவனை பார்த்தவள்,
“ஏன் இப்படி பேசுறீங்க…, சாரி நான்.. அப்படி எல்லா.. இல்…” என்றவளை இடையிட்டவன்,
‘உன்னைன்னு குறிப்பிட்டு சொல்லல யாழி ஆனா பொதுவா நாட்டுல நடக்குறதை சொல்றேன்’
‘என்ன நடக்குது’
“இப்போ எல்லாம் எப்போ செல்பி எடுக்கணும் எப்படி எடுக்கணும் எங்க ஹனிமூன் போகணும் எதுல போகணும் யாரெல்லாம் கூட்டி போகணும் என்ன பண்ணனும் எல்லாமே பொண்ணுங்களே முடிவு பண்றாங்க பசங்களை கேட்கிறதே இல்லை…, அப்போ லைப் பார்ட்னரா இருக்க நாங்க என்ன நீங்க சொல்றதை கேட்டு தலையாட்டுற தலையாட்டி பொம்மையா..?? எங்களுக்கு கல்யாணம் பத்தின மனைவி பத்தின எந்த ஆசையும் விருப்பமும் இருக்க கூடாதா..??” என்று கேட்க அதே நேரம் யாழிக்கு அன்று இதை குறித்து சுகமதி கேட்ட கேள்விகள் நினைவில் எழ அவள் தலை தானாக ‘இருக்கலாம்’ என்பதாக அசைந்தது.
“இப்படி உங்களுக்கு தலையை ஆட்டி ஆட்டி எங்களோட சுயமே போயிடுது… இப்போ நீ கூட பிரெண்ட்ஸ் கேட்டாங்கன்னு என்னை செல்பி எடுக்க கூப்பிட்டியே தவிர நான் அப்போ தான் ஆபிஸ்ல இருந்து வந்தேங்கிறதையோ காபி குடிக்கணும் என்பதையோ பத்தி யோசிக்கலை, நானும் உன்னோட விருப்பம் முக்கியம்ன்னு வந்துட்டேன்” என்று வெறுமையான குரலில் அவளை பார்க்க யாழிக்கும் தன் தவறு புரிபட கலக்கத்துடன் அவளை பார்த்தாள்.
“மத்த பொண்ணுங்க தான் இப்படி இருக்காங்கன்னு நெனச்சேன் ஆனா நான் ஆசைப்பட்ட பொண்ணு இப்படி ஒரு பெண்ணாதிக்கவாதியா..?? உனக்கு என் மேல கொஞ்சமும் லவ் இல்லையா..?? என்னோட ஆசைக்கு உன்கிட்ட மதிப்பே இல்லையா..??” என்றிட யாழியோ அவன் வார்த்தைகளில் பெரிதும் பதறி போனாள்.
‘ ஏன் இப்படி பேசுறீங்க..?? எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ‘ என்று தன்னை விளக்க முற்ப்பட,
அதே நேரம் காற்றில் அசைந்தாடிய அவள் முந்தானை பறந்து வந்து அவன் முகத்தை மூட அதை விலக்கிக்கொண்டே, “உன்னை புடவை கட்ட கூடாதுன்னு சொன்னேன் தானே” என்றவனின் பார்வை கூர்மையாக படிந்து அவளை கொன்று கூறு போட,
‘ஆமா, ஆனா அம்மா தான் கட்ட சொன்னாங்க…’ என்று அவள் பரிதவிப்புடன் அவனை பார்த்தாள்.
‘ஆனா நான் வேண்டாம்ன்னு சொன்னேனே… அப்போ என் விருப்பத்திற்கும் வார்த்தைக்கும் உன்கிட்ட எந்த மதிப்பும் இல்லையா…??’ என்று கேட்கவும்,
‘ஆ.. இல்.. இல்லல்லா ஆனா உங்களுக்கு பிடிக்கும்ன்னு தான் நானே…,’
‘எனக்கு உன்னை புடவையில பார்க்க ரொம்பவே பிடிக்கும் இல்லைன்னு சொல்லலை ஆனா பூஜையப்போ கட்டினா போதும் மத்த நேரம் இப்படி வந்து நிற்காத எனக்கு பிடிக்காது’
‘சாரி’
“இன்னொருமுறை சாரி சொல்லிட்டு இருக்காத இதுவே கடைசியா இருக்கணும் புரியுதா..??” என்று கோபமாக கேட்கவும் ‘சரி’ என்று தலை அசைத்த யாழி முந்தானையை திருகிகொண்டே மெளனமாக நிற்க தொடர்ந்த அதிர்துடியன்,
“இப்ப கூட நீ சொல்ற மாதிரி தான் செல்பி எடுக்கணும்ன்னு சொல்றியே தவிர என்னோட விருப்பத்தை மதிக்கவே இல்ல ஆம்பளைங்கன்னா உங்களுக்கு என்ன கிள்ளுக்கீரையா…??” என்று அவளை குற்றம் சாட்ட,
‘என்னது..??’ என்று திகைத்து அவனை பார்த்த யாழி மொத்தமாக குழம்பி நின்றாள்.
அதிருக்கு மீண்டும் அழைப்பு வர அதை துண்டித்தவன் “யாழி இப்படியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்..?? ஐ ஆம் ரன்னிங் அவுட் ஆப் டைம் எனக்கு லேபர்ஸ் ப்ராப்ளம் கால் மேல கால் வந்துட்டு இருக்கு சீக்கிரம் வா செல்பி எடுத்துட்டு கிளம்பனும்” என்று அவளை துரிதபப்டுத்த அவளும் ‘சரி’ என்று தலை அசைத்திருந்தாள்.
“லிசென் இது தான் உன்னோட லாஸ்ட் சான்ஸ், ஒழுங்கா போஸ் கொடுக்கணும் இதுக்கு மேல செல்பின்னு சொல்லி கூப்பிட்டா நான் வரமாட்டேன் ஓகேவா..??” என்று கேட்க
‘ஓ..கே’
“சரி இந்த முறை ஒழுங்கா போஸ் கொடு.., நான் வர லேட் ஆகும் அதனால எடுத்த செல்பியை உங்க அப்பா இல்ல அம்மா நம்பர்க்கு அனுப்புறேன் நீ அதுல இருந்து உன் பிரெண்ட்ஸ்க்கு அனுப்பிட்டு அப்படியே சோஷியல் மீடியால போஸ்ட் பண்ணிடு” என்றவன் கைபேசியை எடுக்க,
நேற்றும் இன்றும் அவன் எடுக்க முயன்ற புகைப்படங்களை எண்ணி பார்த்தவளுக்கு, ‘என்னது அப்பாக்கா..??’ என்ற உச்சபட்ச அதிர்வு,
‘ஆமா நீ fb, twitter, instaல போட்ட பிறகு ஊரே பார்க்க போகுது உங்க அப்பா பார்த்தா என்ன தப்பு’ என்று அவன் அசராமல் கேட்க,
யாழியோ நிறமிழந்து போன முகத்துடன் நிற்க அதற்குள் அவளிடை வளைத்து அவளோடு சேர்ந்து அதிரனும் பின்னே சாய்ந்திட அதை எதிர்பாராத யாழி மிரட்சியுடன் கருவிழிகள் அசைந்தாட அவனை பார்த்திருந்தாள்,
அதிர்துடியனோ மறுகரத்தில் இருந்த கைபேசியை உயர்த்தி பிடித்தவாறே அவள் மூக்குத்தியில் தன் அதரங்களை பதித்து அச்சிறு ஸ்பரிச தீண்டலிலேயே அவளை சிதைக்க தொடங்கி இருந்தான்.
அவன் அனல் மூச்சுக்களின் தகிப்பில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்ட யாழியோ துடிக்கும் இதழ்களோடு அவன் சட்டையை நடுங்கும் கரங்களால் பற்றிக்கொண்டு தன்னை நிலைபடுத்த முயன்றாள்.
மூக்குத்தியில் இருந்து அதிர்துடியனின் அதரங்கள் மெல்ல கீழிறங்கி அவள் என்னவென்று உணரும் முன்னமே கீழிதழை பற்களால் கடித்திழுக்க யாழிக்கோ அவன் இதழ்களின் உரசலில் உடலெங்கும் சிலிர்த்து அடங்கி கிட்டத்தட்ட மூர்ச்சையாகிய நிலை தான்..!!
அதிரனோ அவள் உணர்வை அவதானித்தவாறே, ‘என்னை பார்’ என்று கட்டளை இட்டான்.
அதற்கு யாழியிடம் எந்த பதிலும் இல்லாமல் போக ‘யாழி லுக் அட் மீ’ என்றவனின் குரல் இப்போது உயர்ந்திருந்தது.
யாழியோ வேக மூச்சுக்களுடன் கண்களை இன்னுமே இறுக்கமாக மூடிக்கொள்ள,
‘அட்லீஸ்ட் கேமரா பார் யாழி செல்பி எடுக்கணும்’ என்றான் அவளிதழ்களை விடுவித்து, ஆனால் யாழியோ ‘இல்லை’ என்று பலமாக தலையசைத்திருந்தாள்.
“என்ன இல்ல..?? செல்பி எடு…” என்றவனின் அதரங்கள் மீது தன் கரத்தை வைத்து தடுத்தவள்,
‘இல்… வேண்டாம்’ என்று துடிக்கும் இதழ்களோடு கூற அதிரனின் முகத்தில் குறுநகை படர்ந்தது.
‘செல்பி வேண்டாமா..??’ என்று அவன் உறுதி படுத்த,
‘ஆம்’ என்ற தலையசைப்பு.
‘ஆர் யு சூர்’
‘வேண்டாம்’ என்று உறுதியாக யாழி கூறிய மறுகணமே அதுநேரம் வரை அவனை இம்சித்த இதழ்களில் அதிர்துடியன் தஞ்சம் புகுந்து பெண்ணவள் இதயத்தின் அடி ஆழம் வரை சென்று அவள் வேர் வரை தீண்டி பூக்க செய்திருந்தான்.
அவளுடனான நொடிகள் நீண்டு கொண்டே செல்ல அவனுக்கோ குவாரியில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்த போதும் அவளில் இருந்து பிரிந்தான் இல்லை.
யாழியுமே முதல் முத்தத்தின் தித்திப்பு மனமெங்கும் பரவ உலகம் மறந்து கிடந்தாள்.
ஒரு கட்டத்தில் அதிர் அவளை பிரிய யாழிக்கோ கால்கள் வலுவிழந்து துவள தொடங்கியது நிற்க முடியாமல் அவள் தடுமாறவும் அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு சென்று அவளறையில் விட்டவன்,
‘நான் கிளம்பறேன் திரும்ப வர எப்படியும் மார்னிங் ஆகிடும் நீ நம்ம வீட்டுக்கு கிளம்ப ரெடியா இரு’ என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டு கிளம்பி சென்றான்.
error: Content is protected !!