Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 7

#பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்… 

அத்தியாயம் 7 

இந்நேரம் அவன் மட்டும் காரிகையின் எதிரில் அமர்ந்திருந்தால் அவளின் கன்னத்து மச்சத்தில் விழுந்து கண்களில் மோட்சம் பெற்றிருப்பான். ஆனால் அவன் விதி ஆரியை கலைக்கு அருகில் அமர்த்தி சோதித்துப் பார்த்தது…



Advertisement

ஆம் கடந்த முக்கால் மணி நேரமாக ஆரியோடு தான் அமர்ந்திருக்கிறான் ஏகலைவன். இப்போது வரை அவனிடம் ஒரு வார்த்தை  பேசவில்லை அவள். இதுவே மற்றவர்களாக இருந்திருந்தால் இந்நேரம் ‘டீ ஏதாவது வேண்டுமா…’ என்று ஒரு பேச்சுக்காவதுக் கேட்டிருப்பார்கள்.

அப்படியும் இல்லையென்றால் இவன் கொண்டு வந்த ரிபோர்ட்டில் சந்தேகமாவது கேட்டிருப்பார்கள். ஆனால் இவள் ஒரு வார்த்தை கேட்கவில்லை. தான் கொடுத்தது சரியா? தவறா? என்று கூட இப்போது வரையிலும் தெரியவில்லை… ஆரியின் முக மாற்றங்களை வைத்துக் கண்டுப்பிடிக்கலாம் என்று நினைத்தால் அதில் எவ்வித உணர்வுகளையும் கண்டுப் பிடிக்க முடியவில்லை…  உண்மையை சொல்லபோனால் கலை என்பவன் அருகில் அமர்ந்திருப்பதுக் கூடப் பொருட்படுத்தாமல் தன் வேலையில் மூழ்கி இருந்தாள் ஆரியா.

Advertisement

Advertisement

‘ஒரு டேபிள், ச்சேருக்கு இருக்கற மரியாதைக் கூட நமக்கு இல்லை டா கலை…’ என நினைத்தவன் பக்கவாட்டில் அமர்ந்திருப்பவளைப் பார்த்தான்.

பாவையின் கன்னத்து மச்சம் அவனைப் பார்த்து சிரித்தது

Advertisement

அவ்வளவு தான் இத்தனை நேரம் மெல்லிய ஒலியோடு துடித்துக் கொண்டிருந்த கலையின் பொல்லாத    இதயம் தற்போது பட்பட்டென்ற சத்தததோடு வேகமாக அடித்துக் கொண்டது. “இத்துணுண்டு மச்சம் என்னைப் பாடப் படுத்துது…” என நெஞ்சைத் தடவிக் கொண்டே முனகியவன் டேபிளில் வைத்திருந்த  நீரைப் பருகினான்.

இப்போது மட்டுமல்ல கடந்த முக்கால் மணி நேரமாக இதை தான் செய்து கொண்டிருக்கிறான். காரிகையை பக்கவாட்டில் திரும்பி பார்ப்பதும் அவளை பார்த்ததும்  மனம் படப்படவென அடித்துக் கொள்வதும் அதனைத் தடுக்க தண்ணிரைக் குடிப்பதுமாக தான் அமர்ந்திருக்கிறான்.

தற்போது வாட்டர் பாட்டலில் இருந்த நீர் முழுவதும் காலியாகியிருந்தது. அதன் விளைவு உச்சா வேறு வந்து தொலைத்தது.மற்ற அவஸ்தையை விட இது பெரும் அவஸ்தையை மாற எப்படி அவளிடம் கேட்பது என நினைத்தப்படியே தன் அருகில் அமர்ந்திருந்தவளைப்  பார்த்தான்.

மனமோ அவன் அவசரத்தைப் புரிந்துக் கொள்ளாமல் பாவையின் கன்னத்து மச்சத்தைக் கண்டதும் மீண்டும் அடித்துக் கொண்டது “என்னை என்னமோ பண்றா…” என வாய்குள்ளையே முனகிக் கொண்டவன் பெருமூச்சுடன் மீண்டும் பார்த்தான்.

இப்போதும் கலையை ஆரி கண்டுகொள்ளவில்லை அவள் முகம் துடைத்து வைத்தது போன்றிருந்தது  ‘கொஞ்சம் கஷ்டம் தான்…’  என எண்ணிக் கொண்டவனின்  மனம் முழுவதும் இங்கு வந்த முதல் நாளை நோக்கிப் பயணித்தது…

கலையின் அறிமுகப் படலம் முடிந்ததும் ‘ நீங்க போகலாம்…’ என்பதைப் போல் ஆரி தலையாட்ட நேராக தன் கேபினிற்கு தான் வந்தான்.

அதே சமயம் நெடுநெடுவென ஒருவன் கலையின் கேபினுக்குள் நுழைந்தப்படி “ஹாய் டூட் நான் ஜீவா இங்க தான்…” என ஆரம்பித்தவனின் வாக்கியத்தை

“பொறுக்கிட்டு இருக்கான்…” என்று  முடித்து வைத்தான் ஜீவாவின் பின்னால் வந்த சூர்யா என்பவன்.   அவனைப்  பின்னால் திரும்பிப் பார்த்த ஜீவாவோ அவன் தோளில் கைபோட்டு “ஆமா நாங்க இரண்டு பேரும்  இங்கதான் இரண்டு வருசமா பொறுக்கிட்டு இருக்கோம். பை தீ வே இவன் சூர்யா…” என வந்தவனை அறிமுகப்படுத்தினான் ஜீவா.

இருவரின் பேச்சிலும் மெல்ல சிரித்தவன்  “நான் ஏகலைவன் நானும் உங்களோட…” என அடுத்துக் கூறும் முன்னே

“பகவான் கிருஷ்ணனோட பங்காளி ஏகலைவனா?…” என சிரிப்போடு சூர்யா கேட்டான்.

“இல்லையில்லை காசியோட மச்சான்  ஏகலைவன்…” எனக்கூறி கலையும்  சிரித்தான். கலையின் இளகுவான பேச்சில் இருவரின் முகமும் புன்னகையில் மலர கலையிடம் அடுத்தடுத்துப் பேசுவதற்கு தயக்கம் என்பது அவர்களுக்கு இல்லை…

“அது சரி டூட், என்ன வந்த  மொத(முதல்) நாளே மிஸஸ் ஆடல் நாயகி வெறிகொண்டுத் தாக்கிடுச்சுப்  போல…” எனக் கிண்டலாக கேட்டான் ஜீவா…

“மிஸஸ் ஆடல் நாயகியா யாரு…” புரியாமல் கலை கேட்கவும்

“இவருக்கு எம்.டி பேர் எப்படி தெரியும். இன்னைக்கு தானே வந்து இருக்காரு… நம்ம எம்.டி. ஆரியா ரெங்கநாயகியைத் தான்  ஆடல் நாயகின்னு சொல்றான் டூட்…” என சிரிப்போடு கூறியவன் மீண்டும்

“நீங்க சொல்லுங்க ஜி உள்ள என்ன நடந்துச்சு? ஹெவி பூஜை போலவே  எம்.டி.மேடம் யாரையோ வெறித்தனமாத் திட்டிட்டு இருந்தாங்க யாரை என்ன சொன்னாங்க? . …” எனக்  கலையிடம் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான் சூர்யா.

இவனோ அவர்களின் கேள்விகளைக் கண்டுகொள்ளாமல்

‘ஆரியா ரெங்கநாயகி…கொஞ்சம் பழைய பேர் தான்…” என நினைத்தாலும் அவளின் பெயரை தனக்குள்ளேயே நிறுத்தி நிதானமாக உச்சரித்துக் கொண்டிருந்தான். அவன் அமைதியைக் கேள்வியாக பார்த்து நின்றனர்  இருவரும்.

ஒருமுறைக்கு இருமுறை அவளின் பெயரைக் கூறிப் பார்த்தவன் நிதானமாக தலையை நிமிர்த்தி பார்க்க தன்னையே கேள்வியாகப் பார்த்தபடி நின்ற இருவரிடமும் “ஏதாவது கேட்டீங்களா…” எனக் கேட்கவும் இருவரும் முறைத்தனர்.

“கவனிக்கல ஜி. கோச்சுக்காம ஒன்ஸ் ரிப்பீட் பண்ணுங்க…” என்றதும் அவர்களும் சலிக்காது அதே கேள்வியே கேட்டனர்.

“ஜஸ்ட் இன்ட்ரோ ஜி, தென் டூடே வொர்க் என்னன்னு சொன்னாங்க…” என்றான் சின்ன சிரிப்போடு.

“ஓ… அப்ப கொஞ்சம் கொஞ்சமா தான் ஆட்டம் அதிகமாகும்  டூட். பாத்து சுதானமா இருந்துக்கோங்க… நாயகி புயல் கொஞ்சம் அதிகமாவே சுழட்டி அடிக்கும். அதுல ஒரு தடவை மாட்டினாலும் அதோட தாக்கம் இரண்டு நாளைக்கு போகாது…” என ஜீவா சொல்லவும் ‘ஏன் இப்படி சொல்றீங்க…’ என்பதைப் போல்   பார்த்தான் ஏகலைவன்

“டூட் உங்களுக்கு நான் சொல்றது இப்ப புரியாது டூட் அந்த ஆடல் நாயகி ரொம்ப ஸ்ட்ரிக்ட். எப்ப பாரு மூஞ்சில கொதிக்கற எண்ணெயை ஊத்திட்டே சுத்தும்… எனக்கு தெரிஞ்சு அது சிரிச்சு நாங்க பார்த்ததே இல்லை… பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்து என்ன பயன் சிரிக்கவே தெரியாத மனுஷ ரோபோ…” என்றவனின்  பேச்சு

“ஆர்கிடெக் டீம் ஹெட்டுக்கு இங்க என்ன வேலை…” என்ற காசியின் சிடுசிடுப்புக் குரலில் நின்றிருந்தது…

காசியின் குரலில் இருவரும் திரும்பி பார்க்க அவனோ கண்களில் கனலைத் தேக்கியப்படி நின்றிருந்தான்.  அவனின் கேள்விக்கு பதில் கூறாமல் வெறுமனே சிரித்து வைத்தப்படி அங்கிருந்து நகர்ந்தனர் இருவரும். சூர்யா முன்னால் செல்ல ஜீவாவோ  திரும்பி கலையைப் பார்த்தபடி “நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் டூட்…” என இதழசைத்து கொண்டே  சென்றது இன்றும் நினைவு வந்தது கலைக்கு

அப்போது அவர்கள் கூறியதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை   என்றாலும் தற்போது  அவளின் அருகில் அமர்ந்திருந்தவனுக்கு அன்று ( ஜீவா அண்ட் சூர்யா) இருவரும் கூறியது உண்மை தான் என்று தோன்றியது.

“உண்மையாவே சிரிக்க மாட்டாளா?” என நினைத்தவன் அவளைப் பார்க்க திரும்ப மதியோ அவளைப் பார்க்காதே என்று கட்டளையிட்டது

‘ஏன்…”எனக் கேட்டவனிடம் ‘எதற்கு? அவளைப் பார்த்ததும் உன் மனகெட்ட மனம் மீண்டும் அடித்து கொள்ளாவா? திரும்பாதே..’ என்று வேறு அசிங்கப்படுத்த காரிகையின் புறம் திரும்பாது மடிக்கணினியில் கண்களை பதித்தான்.

இங்கு ஆரியோ எதைப் பற்றியும் கவனிக்கும் நிலையில்  இல்லை…  அவளின்  எண்ணம் முழுவதும் கலைக் கொடுத்திருந்த ரிபோர்ட்லயே இருந்தது.

ஆம் ஆர்யா கூறிய டார்கெட் மொத்தமாக முடித்துவிட்டு அலுவலகத்திற்கு வந்தவன் நேராக ஆரியிடம் தற்போதைய இருபது புராஜெக்ட்டுகளின் ரிபோர்ட்டையும் நீட்டியிருந்தான்.

சைட் கிளீனிங் வேலையில் ஆரம்பித்து தற்போது வரையிலான அனைத்து வேலைகளுக்கும் எத்தனை முறை மெட்டீரியல்ஸ் சென்று இருக்கிறது என்பது வரை மொத்த கணக்கையும் காட்டியிருந்தான். அது மட்டுமல்ல வேஸ்ட் மெட்டீரியலுக்கும்  சேர்த்து ரிபோர்ட்டும் அதன் விலையும் கேட்டு அதனையும் கொடுத்திருந்தான்.

அதனை தான்  இத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

காரிகையின் முகத்தில் எவ்வித உணர்வுகளும் இல்லை என்றாலும் மனம் உலைக்கனலாய் கொதித்தது. அவள் ஏதோ தவறாக நடக்கிறது  என்று நினைத்தது முற்றிலும் சரியே என்பதைப் போல்  கலையின் ரிபோர்ட்டும் இருந்தது. கண்களை இறுக மூடித் திறந்தவள் மனதில் பற்றியெறிந்த கோபத்தை  வார்த்தைகளில் வடித்து விட எண்ணினாலோ  என்னவோ தன் அருகில் அமர்ந்திருந்தவனிடம்

” மிஸ்டர் கலை. இந்த புராஜெக்ட் எல்லாமே  ரீசெக் பண்ணுங்க. பியூ மினிட்ஸ்ல நான் வந்து  ரிவியூ பண்றேன்…” என ஒரு சில புராஜெக்ட் பெயர்களை குறிப்பிட்டு அதட்டலாக அதிகாரத் தொனியில் கூறினாள்.

இதுதான் இந்த ஆட்டிட்யுட் தான்  பிரச்சனையே.  அவளின் இந்த அதிகார தொனியும் அதட்டல் குரலும் கலையின் மொத்த மனநிலையும், பின்னுக்கு தள்ளி விட்டது.  கடகடவென ஏறிய எரிச்சலை அங்கயே அடக்கியவன்  ‘தட்டிக் கொடுத்து வேலை வாங்கவே தெரியாதா இவளுக்கு… எப்ப பாரு மூஞ்சியை காட்டெருமை கணக்கா வைச்சுக்கிட்டு அதட்டிட்டே இருக்கா… சிரிப்புக்கு என்ன ஸ்பெல்லிங்ன்னு கேட்பா போல…’  என நினைத்துக் கொண்டே சரியென தலையாட்டியப்படி அவ்விடத்தை விட்டு எழுந்தவன் பின் என்ன நினைத்தானோ அவளின் முன் நின்று “தங்களின் இரண்டு சிறுநீரகங்களும் நன்றாக உள்ளனவா…” எனக் கேட்டான்.   முதலில் புரியாமல் விழித்தவள் அது புரிந்ததும் மூக்கு விடைக்க எதிரில் நின்றவனைப் பார்த்தாள்.

அவளின் முறைப்பைக் கண்டுகொள்ளாமல் “இல்லைக் கடந்த ஒரு மணி நேரமா உட்கார்ந்தக் கிடய விட்டு நகரலயே அதான் கேட்டேன். எதுக்கும் நீங்க டாக்டர் கிட்ட செக் பண்ணிக்கறது நல்லது மேடம். ஏன் சொல்றேன்னா எனக்கு அதெல்லாம் வருது  இப்ப நான் அதுக்கு போகணும். இல்லைன்னா மேனேஜ்மென்ட் சிஸ்டம் சரியா வேலை செய்யாது…” என்றதும் அவளின் முகம் கோபத்தில் கடுகடுத்தது. இருந்தும் அடங்கினான் இல்லை “போகட்டுமா மேடம்…” என்று சுண்டு விரலை நீட்டி பெர்மிஷன்  வேறு கேட்டான்.

“ஏகலைவன்…” என அடிக் குரலில் கத்தினாள். பட்டென அங்கிருந்து ஓடியிருந்தான் கலை.

எது எப்படியோ  காரிகையை வெறுப்பேற்றி விட்ட சந்தோஷத்துடன் வெளியில் வந்தவன் முதலில் தன் கடமையை முடித்துவிட்டு பின் ஆரிக் கூறிய வேலைகளையும் செய்திருந்தான்.

அதற்குள் ஆரியும் அவன் கேபினிற்கே வந்திருந்தாள்.

முதலிலிருந்த  எரிச்சலும்,கோபமும் இப்போது துளியும் இல்லை அவளிடத்தில் அனைத்தையும் தனக்குள்ளேயே மறைத்திருந்தாள் அந்த வித்தைக்காரி. கலையும் அவளை தான்  பார்த்தான். வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஓர் அமைதி நுண்ணிடையாளின் வதனத்தில்.   ஏனோ அவளின் இதழ்களில் புன்னகையைக்   கொண்டுவர வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது அதுவும் அவன் வாழும் காலம் வரை…  அந்த எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடம் தேவையே இல்லாமல் காசியின் பேச்சு காதில் ஒலிக்க கண்களை இறுக மூடித் திறந்தான்.

மனமோ அவளின் வாசத்தை தன் அருகில் நுகர்ந்ததும் தாறுமாறாக அடித்துக் கொண்டது. ‘இவ என்னை என்னவோ செய்யறா… இன்னைக்கு ஒரு நாளே சமாளிக்க முடியல  இனி டெய்லி ஆபிஸ் வர மாதிரி இருக்குமே…’ என நினைத்தவனின் காதில்

“ஹாய் கலை, வொர்க் ஃபினிஷா…” என்ற கேள்வியோடு வந்து நின்றாள். மங்கையை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் ஆமெனத் தலையாட்டி ரீசெக் செய்த ரிபோர்டைக் காட்டினான். நிமிடம் அதனைப் பார்த்தவள் “எனக்கு இதை மெயில் பண்ணிடுங்க… மார்னிங் சம்பத் சைட்டுக்கும், பாலாஜி சைட்டுக்கு போயிட்டு  வரலாம்…” என்றாள்  அமைதியான குரலில்.

“ஒகே… மேடம்…” என்றவனிடம் சரியென தலையாட்டியவள் அங்கிருந்து வெளியேறினாள்.  அவள் வெளியேறியதும் அணைத்து வைக்கப்பட்டிருந்த அலைபேசியை கையில் எடுத்தான். பொதுவாக மீட்டிங் சென்றாலே அலைபேசியை அணைத்து விடுவது வழக்கம் இன்றும் அப்படி தான் செய்திருந்தான்.  கடந்த இரண்டு மணி நேரமாக உயிர்ப்பில்லாத அலைபேசியை உயிர்ப்பித்ததும் வரிசையாக பல குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தது…  அனைத்தும் தியாகராஜனிடத்தில் தான் வந்திருந்தது… என்னவோ ஏதோவென்று அவருக்கு அழைக்க உடனே அழைப்பை ஏற்றார்.

“என்னாச்சு ப்பா… மணிக்கு லேபர் பெயின் வந்துருச்சா? அம்…ம்மா அம்மாக்கு ஒன்னுமில்லை?… அவங்க நல்லா இருக்காங்க தானே?…” எனப் படப்படபாகக் கேட்டான்.

“வாழ்த்துகள் தம்பி, நீ மாமா ஆயிட்ட…” என்றார் மெல்லிய சிரிப்போடு

“வாவ் ப்பா… உடனே நாங்க கிளம்பி வரோம்…” என்றான் துள்ளல் குரலில்

“மாப்பிள்ளை எப்பவோ வந்துட்டார் டா… நீதான் இன்னும் வராம இருக்க…” என தியாகு கூறியதும் ஒருபோல ஆகிவிட்டது கலைக்கு.

“சரிங்கப்பா… அம்மாவைப் பார்த்துகோங்க நான்

கிளம்பி வரேன்…” என்றவன் அடுத்த அரை மணி நேரத்தில் கோவையிலிருந்து கோபி புறப்பட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!