ராகம் – 19.2
‘செல்பி எடுக்கலாமா..??’ என்று கேட்டவன் எப்போது வேண்டுமானாலும் வந்து விடுவானோ என்ற பயத்துடனே தூக்கம் வராமல் அவ்வப்போது போர்வையை விலக்கி அறையை பார்த்தவாறு இருந்தவள் விடிகாலையில் தான் உறங்க தொடங்கிட யாழியை எழுப்ப சென்ற சுகமதி அவள் முகத்தில் இருந்த அசதியை கண்டு அமைதியாக வெளியேறிவிட்டார்.
காலை எட்டு மணியளவில் விஷ்ணு பேக்டரிக்கு கிளம்பவும் அதன் பின் மகேஷ் வீட்டிற்கு வந்த அதிர்துடியனை கண்டு மகளை எழுப்ப சென்ற சுகமதியிடம், ‘இல்ல அத்தை யாழியை எழுப்ப வேண்டாம் கிளம்பும் போது பார்த்துக்கலாம்’ என்று கூற,
‘மாப்பிள்ளை’
‘ஆமா மாமா இன்னைக்கே நாங்க கிளம்புறோம்’ என்று கூற மகேஷ் சுகமதி இருவருமே திகைத்து போயினர்.
Advertisement
பின்னே மகேஷ்வரன் வீட்டில் மூன்று நாட்கள் தங்குவது போன்ற ஏற்பாட்டில் தான் இங்கே வந்திருந்தனர் புதுமண தம்பதியினர் ஆனால் உடனே கிளம்புகிறேன் என்று அதி கூறவும் அவர்கள் முகத்தில் அதிருப்தி.
அதை உணர்ந்தவனும் ‘மாமா இப்போ யாழி இங்க இருக்கிறது அவ்ளோ சரியா படலை’ என்றான்.
‘ஏன் மாப்பிள்ளை என்னாச்சு..??’
Advertisement
‘இப்பதான் யாரோட இன்ப்ளுயன்ஸ் இல்லாம அவளுக்காக அவளே கொஞ்சம் யோசிக்க ஆரம்பிக்கிறா ஆனா அதுக்குள்ள நேத்து பிரெண்ட்ஸ வந்து அவளை குழப்பி விட்டு இருக்காங்க…, பாவம் அவளும் peer pressureல என்ன செய்யறதுன்னு புரியாம தவிக்கிறா..’ என்று கூற,
Advertisement
‘ மாப்பிள்ளை நீங்க சொல்றது புரியலை’
‘மாமா எப்பவும் பசங்க ஸ்கூல்ல காலேஜ்ல அவங்களுக்குன்னு ஒரு செட் ஆப் பிரெண்ட்ஸ் கேங் இருப்பாங்க… சிலர் ஒரே குண இயல்பால ஒன்னு சேர்ந்திருப்பாங்க சிலர் பொதுவான விருப்பு வெறுப்பு, சிலர் படிப்பு, விளையாட்டுன்னு அவங்களோட சேர்க்கைக்கு பல காரணம் இருக்கும்’.
‘இதுல என்ன பிரச்சனைன்னா அப்படி ஒரு வட்டத்துக்குள்ள அவங்க இருக்கப்போ அவங்களுக்குன்னு இருக்க கூடிய சட்ட திட்டங்களுக்கு ஒத்து போக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவாங்க…’,
Advertisement
‘எப்.. எப்படி..??’
‘இதை செய்யணும், இதை போடணும், இன்னைக்கு இங்க போகணும், இதை வாங்கணும் அப்படின்னு அவங்களுக்குள்ள முடிவு செய்யறப்போ நம்ம பசங்களும் வேற வழியே இல்லாம அதன் படி நடக்க ஆரம்பிப்பாங்க… பல பசங்க அம்மா அப்பா கிட்ட பைக் வேணும்ன்னு கேட்கறது கூட அவங்களா சிந்திச்சி தன்னோட தேவைக்காக கேட்பதாக இருக்காது பெரும்பாலும் அவங்களை சார்ந்த கூட்டத்திடம் நானும் உங்களுக்கு சளைத்தவன் இல்லைன்னு காட்டுவதற்காக தான் இருக்கும்.. ‘
‘நாம இப்போ உனக்கு அது தேவை இல்லன்னு சொன்னா கூட புரிஞ்சிக்காம பிடிவாதமா இருந்து நினைச்சதை சாதிப்பாங்க அதுக்கு காரணம் அவங்க பிரெண்ட்ஸ் நடுவுல கெத்து காட்டனும் தன்னாலும் முடியும்ன்னு நிருபிக்கணும் அதுக்கு தான்’ என்று கூற
மகேஷ்வரனுக்கு விஷ்ணுவின் பிடிவாதத்திற்காக பைக் வாங்கி கொடுத்த நினைவு மனதில் நிழலாடியது.
“அந்த பசங்களுக்கு அவங்க பிரெண்ட்ஸ் தவிர்த்து வெளி உலகமே பெருசா தெரியாது அவங்க பார்வையில இருந்து ஒரு விஷயத்தை சொல்லும் போது அது தான் உண்மை அப்படி மட்டும் தான் இருக்கும் என்ற முடிவுக்கு இவங்க வந்துடுவாங்க.., அந்த பிரெண்ட்ஸ் சொல்றதே வேதவாக்கா இருக்கும், அவங்க ஒரு விஷயத்தை செய்தா தன்னாலும் செய்து காட்ட முடியும்ன்னு உடனே செய்வாங்க… தனக்கு அது பிடிக்குமா..?? பிடிக்காதா..?? வேண்டுமா..?? வேண்டாமா..?? என்ற சிந்தனை கூட அவங்க கிட்ட இருக்காது..”
‘இது மொத்தமா தப்புன்னு சொல்லிட முடியாது இதுல பாசிடிவ் நெகடிவ் ரெண்டுமே இருக்கு எக்ஸாம்பில்க்கு இப்போ ஒரு பொண்ணு சென்டம் எடுத்துட்டு தன்னால முடியும்ன்னு காட்டும் போது மத்தவங்க என்னாலையும் முடியும்ன்னு அதுக்காக உழைப்பாங்க, இல்ல ஒரு புது டாபிக் பேசறப்போ நமக்கும் அந்த லீடர்ஷிப் குவாலிட்டி இருக்குன்னு காட்டிக்க பேச முயற்சி செய்வாங்க இப்படி இருக்கப்போ அதே பிரெண்ட்ஸ் கேங் அவங்களை மோடிவேட் செய்யவும் வாய்ப்பு இருக்கு டீமோட்டிவேட் செய்யவும் வாய்ப்பு இருக்கு’
‘எது நடந்தாலும் அவங்களால அதுல இருந்து வெளில வர முடியாது இதுக்கு காரணம் அவங்களோட மெச்சுரிட்டி லெவல்..!! பெரிதா உலகம் தெரியாம அவங்க பார்க்கிறது கேட்கிறது தான் உலகம்ன்னும் அதுல எதாவது சந்தேகம் வந்தா அந்த கேங்ல இருக்க ஆளு கிட்டே கேட்பாங்களே தவிர பெரியவங்களை தேடி வரமாட்டாங்க…’
‘அதாவது லவ் பண்ணும் போதோ இல்ல அது பெயிலியர் ஆகும் போதோ அவங்க தேடி போறது அந்த க்ரூப்பை தான்… ஆனா இதுல அவங்க கவனிக்காம விட்ட விஷயம் என்னன்னா..?? அந்த க்ரூப்ல இருக்க எல்லாருமே இவங்க வயசு தான் இவங்களுக்கு இருக்க மெச்சுரிட்டி தான் இருக்கும்ன்னு மறந்துடுவாங்க அதனாலேயே பலநேரம் பல பசங்களோட லைப் மிஸ்லீட் ஆகி அப்சைட் டவுனா மாறி இருக்கு’
‘இப்போ இதுக்கு என்ன பண்ண மாப்பிள்ளை..??’
‘இங்க யாழி விஷயத்துலயும் அப்படி தான் மாமா அவ பிரெண்ட்ஸ்சால இன்ப்ளுயன்ஸ் ஆகி இருக்கா.., அவங்க சொல்ற எல்லாமே கேட்டாக வேண்டிய கட்டாயம் மீறினா அவளை அவங்கள்ள ஒருத்தியா அங்கீகரிக்க மாட்டாங்க என்ற பயம்’,
‘என்ன தீர்வு மாப்பிள்ளை, வேணும்ன்னா அந்த பொண்ணுங்களை இங்க வர வேண்டாம்ன்னு சொல்லிடட்டுமா..??’
‘நோ நோ மாமா அப்படி நேரடியா செய்ய கூடாது அது யாழி கிட்ட தான் இன்னும் மோசமா முடியும் அவங்க தள்ளி இருக்கணும் ஆனா அவங்களே அறியாத அளவு அதை செய்யணும்’
சுகமதி ‘எப்படி..??’ என்று அதியை பார்க்க,
“அத்தை அப்படி பட்ட பிரெண்ட்ஸ் கிட்ட இருந்து தள்ளி வைக்கிறது மட்டும் இல்லாம அவங்க இடத்தை அதை நாம யாராவது சப்ஸ்ட்டிடியுட் பண்ணனும்…இல்ல ஒரு நல்ல கம்பானியனை யாழிக்கு கொடுக்கணும் அப்போதான் அவங்களை மிஸ் பண்றதோ தேடணும்ன்னு நினைக்கிறதோ இருக்காது இங்க யாழியோட பொறுப்பை நான் ஏத்துக்குறேன்”.
‘சரி மாப்பிள்ளை அப்போ நாங்க ….’
“அது தான் மாமா நானும் கேட்க வந்தேன்.., யாழி இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்க வராம என் கூட அங்கேயே இருக்கட்டும் நீங்க அங்க வந்து பார்த்துட்டு போக முடியுமா…??” என்று கேட்க,
‘கண்டிப்பா மாப்பிள்ளை என் பொண்ணுக்காக நீங்க இவ்ளோ மெனக்கெடும் போது நாங்க எப்படி முடியாதுன்னு சொல்லுவோம்’
‘சரி மாமா’ என்றவன் அதன் பின் மனைவியை தயார்படுத்தி தன் வீட்டிற்கு அழைத்து சென்று படிக்க வேண்டிய பாடங்களில் கையில் கொடுத்துவிட்ட பின்பே அலுவலகத்திற்கு திரும்பினான்.
**********************************************
‘நானே விஷ்ணுவை இந்த அளவு பொறுப்போட எதிர்பார்க்கலை மாப்பிள்ளை’ என்று மகேஷ் மகன் குறித்து சிலாகித்து பேச..,
‘நானும் தான் மாமா.., எங்க கட்டயபடுத்தினதால மொறைச்சிட்டு இருப்பானோன்னு எதிர்பார்த்தேன் ஆனா பரவல்ல பெருசா எதிர்ப்பு காட்டாம ஏத்துகிட்டான்..’
‘எப்படி மாப்பிள்ளை..?? பொதுவா நான் சொன்னாலே உடனே ஏத்துக்க மாட்டான்..’ என்று ஆச்சர்யமாக கேட்க,
“எல்லாத்துக்கும் யாழி மேல இருக்க பாசம் தான் மாமா காரணம்…” என்றான் புன்னகையுடன்,
‘ஆமா மாப்பிள்ளை நீங்க சொல்றது என்னமோ வாஸ்தவம் தான்.., ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னாதான் சுத்திட்டு இருப்பாங்க ஆனா இப்ப கொஞ்ச நாளா தான்…’ என்றவருக்கு பிள்ளைகள் முன்பு போல் இல்லையே என்ற எண்ணம்.
‘என்ன மாமா இது உங்களுக்கு தெரியாதா..?? எல்லாம கொஞ்ச நாள் அப்புறம் சரி ஆகிடும்’
‘அவன் கடமைக்கு செய்யாம கொடுத்த வேலையை ரொம்ப ஈடுபாட்டோட செய்யறான் மாப்பிள்ளை இது அவன்கிட்ட நான் எதிர்பார்க்கவே இல்ல’
‘இந்த வேலைன்னு இல்ல மாமா யாழி வீடியோஸ்லயே அவனோட வேலை ரொம்ப பெர்பெக்ட்டா இருந்தது.. எனக்கு தெரிஞ்சு ஈடுபாடு இல்லாம, கவனசிதறல், அப்புறம் சரியான வழிகாட்டுதல் இல்லாம தான் பல பசங்க திண்டாடுறாங்க ஆனா விஷ்ணு அப்படி இல்ல கொடுத்த வாய்ப்பை கரெக்டா யூஸ் பண்றான்’ என்றவன்,
‘சரி மாமா அப்போ இந்த வாரம் விஷ்ணுவை குவாரில விடுங்க’ என்றான்..
‘குவாரியா..?’
‘ஆமா மாமா… ஏன் உங்களுக்கு இவ்ளோ அதிர்ச்சி..??’
‘இல்ல மாப்பிள்ளை ஜெகன் இடத்துல.. அதோட அங்க வெயில், சூடு..பிரச்சனை… ‘ என்று தயக்கத்தோடு பார்க்க,
‘ஆமா மாமா வெயில் தான் அதுக்கென்ன..??’
‘இல்ல அவன் எப்படி தாங்குவான்..??’
‘மாமா எப்பவும் நிழல்லயே வச்சி வளர்த்தா வெயிலோட அருமை உங்க பையனுக்கு புரியறது எப்படி..??’
‘ஆ… ஆனா.. மாப்பிள்ளை பிரச்சனை…??’
‘ஆமா மாமா பிரச்சனை இருக்கு தான் இல்லைன்னு சொல்லலை ‘
‘ஆனா அவன் சின்ன பையன்.. அவன் எப்படி..’
‘இது தான் மாமா தப்பு.., நல்லது, சந்தோஷம் மட்டும் இல்லாம அவனுக்கு நீங்க வாழ்க்கையோட எல்லா பக்கத்தையும் காட்டனும் கஷ்டம் தெரியாம, பிரச்சனைகளை காட்டிக்காம இருந்தா அவன் நாளைக்கு அதை சந்திக்கிறப்போ எப்படி தீர்வு காண முடியும்..??’ என்று கேட்க அவரிடம் பதில் இல்லை..
‘மாமா நீங்க ஒரு விஷயம் மறந்துட்டீங்க..’
‘என்ன மாப்பிள்ளை’
‘என்னோட பதினஞ்சு வயசுல இருந்து அப்ராட் போற வரை குவாரிலயும் பேக்டரிலயும் லேபரா நானும் வேலை செய்திருக்கேன் நேரா வந்து இந்த சேர்ல உட்காந்துடல அது உங்களுக்கே தெரியும்’ என்று அவரை பார்க்க,
அவரும் ‘ஆம்’ என்று தலை அசைத்தார்..
“நேரா முதலாளி ஆகும் போது நம்மில் பலருக்கு அதோட அருமை தெரியாம போயிடும் மாமா”
“இல்ல மாப்பிள்ளை நாங்க தான் கஷ்டப்பட்டோம் எங்க பசங்க…” என்று ஆரம்பித்தவரை இடை நிறுத்தியவன்,
‘போதும் மாமா இப்போ இருக்க பல பசங்க குட்டிசுவரா போக காரணமே பெத்தவங்களான நீங்க சொல்ற இந்த டயலாக் தான்..!! இல்ல கஷ்டபடாம வாழ்க்கையில எல்லாம் கிடைக்கனும்ன்னு ஏன் நினைக்கறீங்க..?? உங்களோட இந்த நினைப்பு தான் அவங்களோட அலட்சியத்தின் ஆரம்பம்…, சரி கஷ்டப்படவேண்டாம் அட்லீஸ்ட் நம்ம கையில இருக்க பொருள் பின்னாடி இருக்க உழைப்பாவது தெரிய வேண்டாமா..?? அது தெரியாததால தான் இன்னைக்கு பொருள் மட்டும் இல்லை மனுஷங்களோட மதிப்பும் தெரியாம போயிடுச்சி’
‘மாப்பிள்ளை’
“அவனை காலேஜ் அனுப்ப இங்க நீங்க குவாரிலயும் பேக்டரிலயும் படர கஷ்டம் அவனுக்கு தெரியவிடாம பண்ணதால தான் படிப்போட அருமை தெரியாம இருக்கான்.., சொல்லணும் மாமா..!! எங்க அப்பா என்கிட்ட சொல்லுவாரு .., உழைப்போட அருமை தெரிய தான் டென்த் முடிஞ்சதும் தன்னோட பேக்டரிலயே என்னை லேபரா சேர்த்தாரு ஆனா எங்க அம்மாவோட செல்லத்துல என் தம்பி.. ப்ச் அதை விடுங்க அவனே இப்போ காலம் கடந்து கண் கெட்டு சூரிய நமஸ்காரம் பண்ணிட்டு இருக்கான்.. விஷ்ணுவையும் அப்படி மாத்திடாதீங்க” என்ற போதே அவனுக்கு அழைப்பு வர,
‘சரி மாமா விஷ்ணுவை அனுப்புங்க நான் பேசிக்கிறேன்’ என்று விட்டு அழைப்பை ஏற்றான்.
***********************************************
