Skip to content
Post Views: 5,928
கண்களைத் திறந்தவளுக்கு அது ஒரு தங்கப் பேனா என்பது தெரிய வர, “என்ன ரஞ்சு… இது?! எதுக்கு இவ்ளோ காஸ்ட்லியான” என்று ஏதோ சொல்ல வந்தவளை முடிக்க விடாமல் தன் விரல் கொண்டு தடுத்தவன்,
“தகுதிங்கிறது வாழுற இடத்தைப் பொறுத்து இல்லை, அவங்கவங்களோட மனசைப் பொறுத்து தாங்குறதை ரொம்பவே தாமதமாதான் நான் புரிஞ்சிகிட்டேன் நிலா…! உன் மனசுக்கு இந்தத் தங்கப் பேனா கூட தரம் குறைந்ததுதான்! நான் அன்னிக்கு செய்த செயலுக்கு நீ என்னை மன்னிச்சிட்டியான, பிரின்சிபலா நீ பதவி ஏற்கும் போது நீ போடுற கையெழுத்து இந்த பேனாவிலிருந்த உருவானதா இருக்குமா?!” என்றான் நெகிழ்ச்சியுடன்.
“ரஞ்சு…!” என்று அவன் மார்பில் சாய்ந்தவளுக்கு கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.
“நான் அதெல்லாம் எப்பாவோ மறந்துட்டேன்ப்பா.. இன்னமுமா? நீ அதையே நினைச்சுக்கிட்டு இருக்க..?!” என்றாள் வருத்ததுடன்.
Advertisement
“செய்த தப்பை உணராத வரைக்கும் எனக்கு அந்த உறுத்தல் இல்லடா… ஆனா அது புரிந்த பின்னாடி.. என்னை நினைக்க எனக்கே அவமானமா இருக்கு!” என்று அவன் வேதனையுடன் சொல்ல,
“ப்ச் இனி ஒருமுறை அப்படிச் சொல்லாத ரஞ்சு… சின்னச் சின்னத் தவறுகள் செய்வது மனித இயல்புதான் ரஞ்சு… ஆனா அதை உணர்ந்து திருந்தின நொடியே அந்தத் தப்பு மன்னிக்கப் பட்டுவிடும்! ஸோ இனி எக்காரணத்தைக் கொண்டும், இந்த பேச்சும் எண்ணமும் உன் மனசுல எழவே கூடாது!” என்று அவள் மிரட்டிச் சொல்ல,
“ம்! முயற்சி பண்றேன்!” என்றான்.
Advertisement
“முயற்சில்லாம் இல்ல.. மறந்துடனும்! இல்ல பனிஷ்மென்ட்தான்” என்றாள் கட்டளையாய்.
Advertisement
“அப்படியா என்ன பனிஷ்மென்ட் என்று அவன் கேட்க,
அவன் கன்னத்தில் நறுக்கென்று ஒரு கடி வைத்தவள், “தாங்க்ஸ்டா VRM! {VERY ROMANTIC MAN!} பென் ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு உன் ஸ்மைல் மாதிரியே…!” என்று சொல்லிவிட்டு, அவன் சுதாரித்து தன்னைப் பிடிக்கும் முன் குளியலறைக்குள் ஓடி ஒளிந்தாள்.
“ராட்சஸி… கிப்ட் கொடுத்தா கடிச்சு வைக்கிறா?! வெளிய வரட்டும்!” என்று தன் கன்னத்தை தேய்த்து விட்டபடியே உறங்கிக் கொண்டிருந்த தங்கள் பிள்ளைகளின் அருகே சென்றான் கணவன்.
Advertisement
இன்று, “என்ன ஹேன்ட் பாக் எடுக்கப் போன உங்க அம்மாவை இன்னும் காணோம்?!” என்றான் ரஞ்சன்.
“இருங்க அப்பா… நான் போய் பார்த்துட்டு வரேன்!” என்று பெரியவன் சொல்ல, “இல்ல நான் போறேன்..!” என்று சின்னவள் ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் போராட்டம் ஆரம்பமானது.
பொறுமையிழந்த ரஞ்சன், “ரெண்டு பேரும் போக வேணாம், நானே போய் அழைச்சிட்டு வரேன்! பேசாம அமைதியாக இருங்கணும்!” என்று அவர்களை மிரட்டிவிட்டு செல்ல,
“ஒழுங்கா நானே போயிருப்பேன்!” என்றான் பெரியவன்.
“ஏன் நான் போயிருக்க மாட்டேனா?!” என்று மறுபடியும் ஆரம்பித்தாள் சின்னவள்.
ராதா, கிருஷ்ணன், இராமநாதன், காமட்சி, நிலாவின் தாய் தந்தை அனைவரும் ஒரு காரில் சென்றுவிட, யாஷினியின் குடும்பமும் தங்கள் காரில் வீட்டிற்க்குச் சென்று விட்டனர். எஞ்சியிருந்தது நிரு, யாஷினி, நிலா, ரஞ்சன் தம்பதியரும் அவர்கள் பிள்ளைகளும் மட்டுமே.
அவர்கள் மட்டும் காரில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்கள் அருகே வந்த நிரு, யாஷினி, “ஸ்ரீ, அம்மா, அப்பா எங்க டா..?!” என்றனர்.
“அம்மா… அவங்க ஹேன்ட் பேக் எடுக்கப் போனாங்க! நேரமாச்சே இன்னும் வரலையேன்னு அப்பா அவங்களைக் கூப்பிடப் போனாங்க” என்று ஸ்ரீ பதிலளிக்க, நிரு, ரஞ்சனின் செல்லுக்கு அழைத்தான்.
“நீங்க கிளம்புங்க நிரு… நான் அவளைக் கூட்டிட்டு வந்திடறேன்!” என்று ரஞ்சன் சொல்ல, நிருவும், யாஷினியும், “ஸ்ரீ, நிரு குட்டி.. நீங்க ரெண்டு பேரும் எங்களோடவே வரீங்களா?!” என்று அழைத்தனர்.
“இல்ல சித்தப்பா.. இன்னிக்கு அப்பாவோடவே வரோம்!” என்றனர் இருவரும்.
“நாங்களும் பெரியப்பா, பெரியம்மா கூடவே வரோம்!” என்று நிரு, யாஷினியின் பிள்ளைகளும் சொல்ல,
“அய்யோ நாலு பேருமா?! ஒண்ணாவா?! பாவம் நிலாக்காவும், ரஞ்சு மாமாவும்!” என்று யாஷினி பயம் கொள்ள,
“நாங்க ஒண்ணும் உங்களை மாதிரி இல்ல.. சமத்தா இருப்போம்!” என்றனர் நால்வரும் ஒரே குரலாக.
“இருப்பீங்க இருப்பீங்க!” என்று யாஷினி சிரிக்க,
“இருப்போம்! இருப்போம்!” என்றனர் வாண்டுகளும் கோரசாக.
“சரி ரொம்ப சேட்டை பண்ணாம, அடம் பிடிக்காம ஒழுங்கா வரணும்!” என்று நிரஞ்சன் சொல்ல,
“ம்! ம்!” என்று ஒரே போல் தலையாட்டினர் பிள்ளைகள்.
காரில் செல்லும் போது, “அங்கிள் உங்க ரெண்டு பேரையும் பத்தி பேசினதை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையாயிருக்கு நிரு… ஐ ஃபில் ஸோ ஹாப்பி!” என்று யாஷினி ரசித்துச் சொல்ல,
“ஆனா எனக்கு ஆச்சர்யமா இருக்கு யாஷு.. உன் இடத்துல வேற ஒரு பொண்ணு இருந்திருந்தா, நிச்சயமா அதென்ன உங்க ரெண்டு பேரைப் பத்தி மட்டும் பாராட்டிப் பேசுறாருன்னு கோபம்தான் பட்டிருப்பா! ஆனா நீ?!” என்று நிரு அவளை ஆர்ச்சயமும், ஆசையும் கலந்து நோக்க,
“என்ன நிரு நீங்க.. உங்க ரெண்டு பேரோட பிரெண்ட்ஷிப்பை நினைச்சு நானே எவ்ளோ பெருமைப் பட்டிருக்கேன் தெரியுமா?! நான் நினைச்சதுக்கு, அங்கிள் பேசினதெல்லாம் ஒண்ணுமே இல்லை!” என்றாள் சிரிப்புடன்.
“பாட்டி அடிக்கடி சொல்ற மாதிரியே, நான் ரொம்ப கொடுத்து வைச்சவன்தான் யாஷு… இல்லைன்னா இப்படி ஒரு மனைவி கிடைச்சிருப்பாளா?!” என்று அவன் சொல்ல,
“ஆமாம் ஆமாம்! ஆனா இந்த போஸ்டிங் கிடக்க நான் பட்ட பாடு எனக்கில்ல தெரியும்!” என்று அவள் அலுத்துக் கொள்வதுபோல் நடிக்க, நிரு சட்டேன்று எம்பி, “ஐ லவ் யூ டார்லிங்!” என்று அவள் கன்னத்தில் முத்தத்தைப் பதித்துவிட்டு, ரோட்டில் கவனத்தைச் செலுத்தலானான்.
“வர வர நீங்க நல்லா சமாளிக்க கத்துகிட்டீங்க!” என்று செல்லமாய் முறைத்தவளும், சற்றே குனிந்து, அவன் காதருகில் சென்று, முத்தமிட்டு, “மீ டூ பாப்பா…!” என்றாள் காதலோடு.
அவன் உயிரின் பாதியாய் அவள் நிறைந்திருக்க, நிரஞ்சனின் வாழ்வில் என்றென்றும் நிறைகள் மட்டுமே!
அங்கு, தன் கணவனைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருந்த அவனின் கண்மணியைத் தேடிச் சென்றவன்,
புன்முறுவலுடன் அவள் தான் கொடுத்த பேனாவை வருடிக் கொடுத்தபடி நின்றிருப்பதைக் கண்டு, என்ன நடந்திருக்கும் என்று யூகித்து,
“ஆள் வந்து நிக்கிறது கூட தெரியாம, மேடமுக்கு அப்படி என்ன யோசனை?!” என்றான்.
அவன் குரல் கேட்டுத் தெளிந்தவள், அன்றைய நினைவுகளில் வெட்கப் புன்னகைப் பூசிக் கொள்ள, அவள் அருகே வந்தவன், “ஸ்கூல் ஸ்கூல் ம்மா..! இப்படி எல்லாம் சிவந்து நின்னேன்னா நான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்னைக் கண்ட்ரோல் பண்றதுக்கு!” என்று மெல்ல கிசுகிசுக்க,
அவனை முறைப்புடன் நோக்கி, “நினைப்பப் பாரு.. எப்பப் பாரு?! வாங்க வீட்டுக்குப் போகலாம்!” என்று பேனாவை கைப்பைக்குள் பத்திரப் படுத்திவிட்டு முன்னே செல்ல,
“போடி… ரொம்பதான் பிகு பண்ணிக்கிற, நீயா கொஞ்ச வருவ இல்லை.. அப்ப வைச்சிக்கறேன்!” என்று முனகியபடி அவளைப் பின்தொடர்ந்தான்.
இருவரும் காரில் பிள்ளைகளுடன் சென்று கொண்டிருக்க, மெதுவாக பேச்சை ஆரம்பித்தது, நிரு, யாஷினி பெற்றேடுத்த சின்ன வாண்டு நிஷாந்தினி.
“பெரியப்பா… எனக்கு ஐஸ்கிரீம் வேணும்!” என்று, அவள் கேட்ட விதத்திலயே அது அவளாகக் கேட்டது அல்ல, தங்கள் புதல்வியின் வேலைதான் என்று புரிந்தது இருவருக்கும்.
“ஏய் நிஜமா சொல்லு உன் அக்காதானே கேட்டா…?!” என்று நிலா நிஷாந்தினியிடம் கேட்க, அது பாவமாக தன் அக்காவைப் பார்த்தது. கண்ணாடி வழியே அதைப் பார்த்த நிலாவும், ரஞ்சனும் சிரிக்க,
“ஏய் வாலு உனக்கு வேணும்னா நீயே கேட்க வேண்டியதுதானே?! இப்பப் பாரு அவ மாட்டிகிட்டா..!” என்றான் நிரு, யாஷினியின் மூத்த மகன் காமராஜ்.
“ஏன்டா… நாங்க என்னமோ நீங்க கேட்கிற எதையுமே வாங்கித் தராத மாதிரி என்னமா பில்ட் அப் பண்றீங்க?!” என்று ரஞ்சன் கேட்க,
“ஈ.. ஈ…” என்று இளித்து வைத்தது நிலாவின் செல்லக் குட்டி நிரஞ்சனி.
அதை பார்த்த நிலா, “ரெண்டும் உங்களை மாதிரியே இருக்கு…!” என்று சந்தடி சாக்கில் அவனை வாரிவிட்டு,
“நிஷாகுட்டி… உனக்கு என்ன ஐஸ் க்ரீம்டா வேணும் சொல்லு, பெரியம்மா உனக்கு மட்டும் ஐஸ் கிரீம் வாங்கித் தறேன்” என்று சொல்ல,
“ம் எனக்கும்!!” என்றது அவர்கள் பெற்றெடுத்த வாண்டு.
“உனக்கெல்லாம் கிடையாது! அவதானே கேட்டா அவளுக்கு மட்டும்தான்!” என நிலா சொல்ல,
“ம்ம் அப்பா.. அம்மாவைப் பாருங்க…!” என்று சின்னவள் அழ ஆரம்பிக்க,
“அம்மா சும்மா சொல்றாங்க டா… நான் உனக்கு ஐஸ் கிரீம் கடையையே வாங்கித் தரேன்!” என்றான் தகப்பன்.
“ம்க்கும்! நல்ல அப்பா… நல்ல பொண்ணு…! என் பேச்சுக்கு எங்க மதிப்பிருக்கு!” என்று நிலா முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ள,
“சும்மா… சும்மாடா செல்லம்…! உனக்கு நைட் பசங்க தூங்கின பிறகு பத்து, இல்ல இல்ல.. நூறு ஐஸ் கிரீம் தரேன்! என்ன..?!” என்று கிசுகிசுப்பாக மனைவிக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்ன நாயகன், பறக்கும் முத்தம் ஒன்றை உதடுகள் குவித்து பரிசளித்தான்.
அதில் மயங்கிய நாயகியோ அவன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், நாணத்தில் கவிழ்ந்தாள்.
பாலமுதைப் பொழியும் வெண்ணிலவும், தேனமுதைப் பொழியும் அவனின் பெண்ணிலவும் அவனின் வாழ்விற்கு ஒளி சேர்க்க, இருவரின் வாழ்விலும் என்றென்றும் இன்பமே….!
-என்றென்றும் நிலவு ஒளிவீசும்!
error: Content is protected !!