Skip to content
Post Views: 4,717
ராகவனின் பாரா முகத்தால் முகம் வாடினாலும் அன்று கல்லூரியின் இசைக் குயில் என்ற பட்டத்தையும் பியூட்டி குயின் என்ற பட்டத்தையும் தட்டிச் சென்றாள் ஸ்ருதி.
ஒரே நாளில் தன்னை தூக்கி ஒய்யார மேடையில் நிறுத்திய ராகவனை இன்னும் இன்னும் அவளுக்கு பிடித்தது.
Advertisement
தன்னுடைய கிளாசில் மட்டும் அல்லாமல் மொத்த கல்லூரியுமே ஸ்ருதியை திரும்பிப் பார்க்க வைத்த ராகவனின் பெருமையை அன்று தேன்மொழியிடம் கொட்டித் தீர்த்து விட்டாள்.
Advertisement
தன்னுடைய அண்ணனைப் ஸ்ருதி புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க தேன்மொழியோ அவனைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள். ராகவனின் இந்த செயலுக்கு பின்னால் இருக்கும் நோக்கம் ஸ்ருதிக்கு பெயர் வாங்கிக் கொடுப்பது தான் என்று புரிந்தது.
Advertisement
ஆனால் அவன் மனதில் ஸ்ருதிக்கான இடம் எது என்று தான் புரியவில்லை. அவன் ஏன் ஸ்ருதிக்கு பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கேள்வி அவளுக்குள் எழும்பியது.
Advertisement
தன்னுடைய பதிலுக்காக ஸ்ருதி காத்திருப்பது புரிய “உன் சந்தோஷம் எப்பவுமே நிலைக்கணும் ஸ்ருதி. ஆனா அவனை நம்பாத. அவன் இப்ப இப்படி ஹெல்ப் பண்ணுற மாதிரி இருக்கும். அப்புறம் பாத்தா உன்னை யாருன்னே தெரியாதுன்னுட்டு போயிருவான். அப்புறம் உக்காந்து அழுவ”, என்று தோழியை எச்சரித்தாள்.
அது உண்மை என்பதால் ஸ்ருதி மறுத்து எதுவும் பேச வில்லை. அதன் பிறகு மற்ற கதைகளைப் பேசி விட்டு இருவரும் போனை வைத்தார்கள்.
அடுத்த நாள் மாலை காலேஜ் மரத்தடியில் அமர்ந்திருந்தாள் தேன்மொழி. அவளைப் பார்த்த நவீன் அவளை நோக்கிச் சென்றான். அவளோ ஏதோ யோசனையிலே இருந்தாள்.
“தேன்மொழி தேன்மொழி”, என்று அவன் அழைத்தும் அவள் அவனைக் கவனிக்க வில்லை. “ஏய் தேன்மொழி”, என்ற படி அவன் அவளுடைய தோளை அசைக்க அப்போது தான் விழித்துப் பார்த்தாள்.
நவீன் நிற்கவும் “சீனியர் நீங்களா?”, என்றாள்.
“என்ன கனவு கண்டுட்டு இருக்க? நான் கூப்பிட்டது கூட உனக்கு கேக்கலை”, என்று கேட்ட படி அவளுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.
“ஒரு சின்ன யோசனை அதான்”
“கண்டிப்பா படிப்பு சம்பந்த பட்டதா இருக்காது”
“ஆமா”
“அப்படி என்ன யோசனை?”
“காதலைப் பத்தி தான்”
“வாட்? காதலா?”
“ஆமா சீனியர்”
“லூசா நீ? படிக்கிற வயசுல லவ் பண்ணப் போறியா? அறிவிருக்கா உனக்கு?”, என்று அவன் கண்ட படி திட்ட “ஐயோ கொஞ்சம் திட்டுறதை நிறுத்துங்க. நான் இப்ப லவ் பண்ணுறேன்னா சொன்னேன்? எனக்கு லவ்னா என்னன்னு கூட தெரியாது சீனியர்”, என்றாள். ஆனால் மனதிலோ எக்காலத்திலும் இவனிடம் ஸ்ருதியின் காதலைப் பற்றிச் சொல்லக் கூடாது என்று முடிவு எடுத்தாள்.
“அப்படி தான் இருக்கணும். அப்புறம் எதுக்கு அதைப் பத்தி யோசிக்கிற?”, என்று கேட்டான் நவீன்.
“கிளாஸ்ல ஒரு பையன் லவ் லட்டர் கொடுத்தான் அதான்”, என்றாள். அது உண்மையும் கூட. நரேன் என்பவன் அவளுக்கு லட்டர் கொடுத்தான். அதை படித்து விட்டு கிழித்து குப்பைக் கூடையில் அவன் கண் முன்னே போட “சாரி தேன்மொழி”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
“ராஸ்கல்ஸ், அவனுங்களை எல்லாம் சஸ்பெண்ட் தான் பண்ணனும்”, என்றான் நவீன்.
“விடுங்க சீனியர். நான் எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லைன்னு தெரிஞ்சு அவன் சாரி சொல்லிட்டான். ஆமா நான் உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா?”
“நீ என்னோட குட் ஃபிரண்ட் தேன்மொழி. தாராளமா கேட்கலாம்”
“உங்களுக்கு லவ்னா பிடிக்காதா?”
“லவ்ன்னு ஒண்ணைப் பிடிக்காம இருக்குமா? அந்த பீல் இல்லைன்னா நான் எப்படி மனுசனா இருப்பேன்?”
“அப்புறம் ஏன் இவ்வளவு கோபம்?”
“படிக்கிற வயசுல லவ் பண்ணுறது தப்பு தேன்மொழி? இப்ப எல்லாம் சில பொண்ணுங்க ஸ்கூல்லே ஆரம்பிச்சிறாங்க. நாமளே ஒரு பொண்ணைத் தேடி கட்டிக்கிட்டா நம்மளை பெத்து வளத்த அம்மா அப்பாவுக்கு என்ன மரியாதை சொல்லு? அவங்களே ஒரு துணையை தேர்ந்தெடுத்து வச்ச உடனே லவ் பண்ண வேண்டியது தான்”, என்று அவன் சொல்ல “ஏன் டி ஸ்ருதி உன் காதலுக்கு முதல் எதிரியே உன் அண்ணனா தான் இருப்பான் போல டி. ஆக மொத்தத்துல உன் அண்ணனுக்கும் சரி, என் அண்ணனுக்கும் சரி காதல் சுட்டு போட்டாக் கூட வராது”, என்று எண்ணிக் கொண்டாள்.
“சரி எனக்கு நேரம் ஆச்சு, நீ கண்டதையும் யோசிக்காம ஹாஸ்டல் கிளம்பு”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான் நவீன்.
அதே நேரம் ஸ்ருதி ராகவனிடம் நன்கு திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள். இருவரும் சேர்ந்து மேடையில் பாடிய பிறகு ஸ்ருதியால் ராகவனைப் பார்க்க முடியவில்லை. அவன் அவளுடைய கண்ணில் அகப் படவே இல்லை.
ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் அவனும் அவளைப் பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தான். சிதம்பரம் சொன்ன விசயத்தில் இருக்கும் மறைபொருளைக் கண்டு பிடிக்க முயன்றான்.
அதனால் அவள் கண்ணில் படாமல் தப்பித்துக் கொண்டிருந்தான். ஆனால் ஸ்ருதியோ அவனுக்கு நன்றி சொல்ல அவனைத் தேடிக் கொண்டிருந்தாள்.
அன்று காலேஜ் முடிந்ததும் அவள் வீட்டுக்கு கிளம்ப “ஸ்ருதி, ரொம்ப பசிக்குது டி. கேண்டீன் போகலாமா?”, என்று கேட்டாள் வைஷ்ணவி.
“இப்ப கேண்டீன் போனா பஸ் போயிரும் டி”
“ஆறு மணி பஸ்ல போய்க்கலாம், பிளீஸ் டி”
“சரி வா போகலாம்”, என்று சொல்லி அவளுடன் சென்றாள். கேண்டீன் சென்றதும் “ஏய் ஸ்ருதி அங்க பாரு டி உன் ஆளு”, என்று சொன்னாள் வைஷ்ணவி.
ராகவனும் ஸ்ருதியும் ஒன்றாக பாடிய நாளில் இருந்து வைஷ்ணவி அவளை அப்படி தான் கிண்டல் அடிக்கிறாள். வைஷ்ணவி கிண்டல் அடிக்கும் போது கோபப் படாமல் ஸ்ருதி முகம் சிவந்ததும் வைஷ்ணவி அந்த கேலியை இப்போது வரை தொடர்ந்தாள்.
“எங்க டி?”, என்று ஸ்ருதி பரபரக்க சிறு சிரிப்புடன் ராகவன் இருக்கும் பக்கம் கை காட்டினாள் வைஷ்ணவி. அவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.
“எனக்கு ரெண்டு கட்லட் மட்டும் வாங்கி வை. நான் அவங்க கிட்ட பேசிட்டு வரேன்”, என்று சொல்லிவிட்டு அவள் ராகவனை நோக்கி நடக்க ராகவன் அவளைப் பார்த்து விட்டான்.
“ஐயோ இவளா? இப்ப நம்ம கிட்ட பேசினா இவனுங்க ஓட்ட ஆரம்பிச்சிருவாங்களே?”, என்று எண்ணியவன் அமைதியாக இருந்தான்.
ஸ்ருதி அவர்களின் டேபிள் அருகே வந்ததும் “ஏய் ஸ்ருதி”, என்று சொல்லி புன்னகைத்தாள் வெண்ணிலா. நடப்பதை நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.
ஸ்ருதியும் அவளைக் கண்டு புன்னகைத்து விட்டு ராகவனைப் பார்த்தாள். அவனோ தலை நிமிரவே இல்லை. அவள் ராகவனைக் பார்ப்பதைக் கண்ட வெண்ணிலா “என்ன ஸ்ருதி, ஏதாவது பேசனுமா?”, என்று கேட்டாள்.
“ஆமா, நன்றி சொல்லணும்”
“யாருக்கு?”
“அவங்களுக்கு”, என்று ராகவனைக் கை காட்டினாள். அனைவரும் அவளையும் ராகவனையும் சுவாரசியமாக வேடிக்கை பார்க்க “மச்சான் உன் கிட்ட தான் டா பேசணுமாம். நாங்க வேணும்னா கிளம்பவா?”, என்று சிரிப்புடன் கேட்டான் அருண்.
ஸ்ருதி இங்கேயே இருந்தால் கட்டாயம் அனைவரும் தங்கள் இருவரையும் கிண்டல் அடிப்பார்கள் என்று புரிந்து “வெண்ணிலா, எனக்கு யாரோட நன்றியும் தேவை இல்லை. முதல்ல அவளை இங்க இருந்து போகச் சொல்லு”, என்று சிடுசிடுத்தான். அவன் கோபத்தில் அனைவரின் சிரிப்பும் மறைந்தது. ஸ்ருதியின் முகம் அழுவதற்கு தயாராக இருக்க அதை பார்த்து வெண்ணிலாவுக்கு கஷ்டமாக இருந்தது.
“ஏன் டா இப்படி பேசுற? பாவம் அந்த பொண்ணு. ஏதோ பேச தானே வந்தா”, என்றாள் வெண்ணிலா.
“யாரும் என் கிட்ட பேசத் தேவை இல்லை வெண்ணிலா”
“ஏன் டா இப்படி அந்த பொண்ணு ஹர்ட் ஆகுற மாதிரி பேசுற?’
“ப்ச் இதெல்லாம் இப்படி தான் ஆரம்பிக்கும். அப்புறம் லவ் அது இதுன்னு வந்து நிக்கும். எனக்கு அதெல்லாம் விருப்பம் இல்லை”
“ஏன் டா, அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணினா தான் என்ன?”
“என்னால கண்டவளையும் லவ் பண்ண முடியாது. உன்னை கூட லவ் பண்ணுவேன். ஆனா இவளை பண்ண மாட்டேன். இவளும் இவ மூஞ்சியும்”, என்று சொன்ன ராகவன் ஸ்ருதி புறம் திரும்பி “ஏய் இங்க பாரு இன்னொரு தடவை என் கிட்ட வந்து பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன்”, என்று நேரடியாகவே சொன்னான்.
இசை தொடரும்…..
error: Content is protected !!