Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 02

மற்றவர் எல்லாம் அவர்களுக்கான தேநீர்  சிற்றுண்டி  சாப்பிட வகுப்பறை விட்டு வெளியே போக இவர்கள் மூவருக்கு மட்டும் அவை அவர்கள் அமர்ந்திருக்கும் இடம் தேடியே வந்தது.

அருண் தேனீர் அருந்தியவன் ‘நைஸ் ப்ளேஸ்’ என்றான் ரசனையாக  அவன் அமர்ந்திருக்கும் இடம் காட்டி. மொத்த வகுப்பறைக்கும் அவனே கடைசி. அவனுக்கு அந்தப் பக்கம் ஜன்னல், இந்த பக்கம் நண்பர்கள், பின்னாடி இடம் விட்டு கொஞ்சம் தூரத்தில் சுவர். 

புவன் “மச்சான் சாதிச்சிட்டான்” என்று பொதுப்படையாக சொல்ல 

சிரஞ்சீவியோ சிரித்துக்கொண்டே ‘’யாரு கிட்ட’’ என்று காலர் இழுத்து விட்டு காட்டி கேட்டுக் கொண்டான். ‘நம்ம கிரேட் பிஸ்னஸ் ஸ்கூல் படிப்பாளிகளுக்காக கபிலா உன் பசங்கல்லாம் அங்க போய் படிக்க வரமுடியுமா என்ன’ என்று கேட்டு சிரித்தவர் இன்று அவனுக்கு வந்து சலாம் போட்டு சென்றிருக்கிறார். 



Advertisement

ஸ்னாக்ஸ் சாப்பிட்டு முடித்துவிட்டு இருக்கைக்கு நடந்து வருபவளை பார்த்து சிரஞ்சீவி “அழகுல்ல” என்று கேட்க

அருண் “ம்ம்” என்றான் தேநீர் அருந்திக்கொண்டு… நண்பர்கள் இருவரும் சட்டென்று திரும்பி அவனை பார்க்க ஒற்றைப் புருவம் தூக்கி சிரஞ்சீவியை ஆழமாக பார்த்தான். 

அவர்கள் மூவரில், யாரையும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன் யாரும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்ற போக்கு உள்ளவன் அருண். அவ்வளவு சீக்கிரம் அவன் எண்ணம், கருத்து யோசனை என்று எதையும் வெளியே சொல்லமாட்டான். நேரம் வரும்போது எல்லோருக்கும் ஒரு படி முன்னே இருப்பான்.அவர்கள் சேர்ந்து விளையாடும் போதும் சரி, வாழ்க்கை போக்கிலும் சரி மர்மாகவே இருக்கும் யுக்தி அறிந்தவன். 

Advertisement

புவன் ‘மச்சான்’ என்ற அதிர்ச்சியாக அழைக்க அவர்கள் பக்கம் திரும்பியவன் சிரஞ்சீவியை பார்த்து ‘அதிகம் பேசாதே’ என்றான். 

Advertisement

எப்பவும் சிரஞ்சீவி  கொஞ்சம் அதிகப்படியாக நடந்துகொள்ளும் போதெல்லாம் இப்படி செய்யாதே என்றோ வேண்டாம் என்றோ ஓர்,இரண்டு வார்த்தையில் அவனை அடக்கும் வித்தை அறிந்தவன்  இன்றென்ன அதிகம் பேசாதே என்கிறான் ?!

கோணவாய் சிரிப்பை பதிலாக கொடுத்தவன் நடந்து வரும் தமயந்தி பார்த்து “ஏன் எந்திரிச்சு வெளியே போனீங்க உங்களுக்கும் இங்கேயே டீ வர வெச்சிருப்பேனே” என்றான்.

தமயந்ததியோ “ஹான்… அதெல்லாம் வேணாம்” என்றவள் அவனை தவிர்க்க அவளுக்கு அந்த பக்கம் இருக்கும் மற்றவரிடம் பேச தொடங்கிவிட்டாள்.

Advertisement

இம்முறை புவன் சிரஞ்சீவி காதருகினில் வந்தவன் “யார்ரா இந்த தேவத” என்று கேட்க  சிரஞ்சீவி “தெரியல ஏதோ  ராட்சசிக்கு பிரென்ட் போல” என்றான்.

புவன் “ரொம்ப பேசாம வேலைய பார்றா தக்காளி” என்று அவன் பின்தலையில் தட்ட 

“சரிடா என் கொத்தமல்லி” என்று புவன் கழுத்தை இழுத்து கை மடிப்புக்குள் சிரஞ்சீவி கொண்டுவர “டேய் மலமாடு வலிக்குதுடா” இவன் அலறினான்.

கொஞ்சமும் அலட்டாமல் அருண் சிரஞ்சீவி முழங்கை முட்டியில் கேரம் ஸ்ட்ரைக்கர் சுண்டி விடுவது போல சுண்டிவிட சிரஞ்சீவி பிடி இளகியது. 

“பாக்சிங் ரிங்ல பார்த்துக்கறேன் வாடி” என்றவன் வேண்டுமென்றே இந்தப்பக்கம் திரும்பி  “தம் தம் தமயந்தி” என்று அழைத்தான் அவள் அமர்ந்திருக்கும் சேர்ரை இழுத்து 

 “ப்ப்பா உனக்கு டான்ஸ் எல்லாம் வருமா உன்  ஜதி தாளத்துக்கு எல்லாம் எனக்கு ஆட்டம் வராது”

“நீ ஆடலாம் வேணா இந்தப்பக்கம் திரும்பு ” 

“என் பேரு வெறும் தமயந்தி” என்றாள். 

அவள் பதில் கொடுக்கும் விதம் பார்த்து மற்ற நண்பர்கள் இருவரும் மானசீகமாக ஹாய் ஃபை கொடுத்துக்கொண்டனர். 

இம்முறை வகுப்பறைக்குள் நுழைந்த டீச்சர்  ரொம்பவும் குட்டியாக ஸ்கூல் போகும் பெண் போல இருந்தார். கணீர் குறலில் “ஹாய் ஐ ஆம் சுஷ்மா சுப்பிரமண்யம். உங்களோட அட்டெண்டன்ஸ் மார்க்ஸ் எல்லாம் பார்க்க போறது நான்தான். பிசினஸ் ஸ்ட்ராட்டஜி எடுக்க போகும் ஃபேகல்டி” என்று அறிமுகம் செய்து கொண்டவர் அந்த கல்லூரியின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் மார்க் சிஸ்டம் பற்றி பேசினார். 

சிரஞ்சீவி “ மச்சான் இவங்கள எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்குல்ல ”

புவன் “இன்டெர்வியூ டைம்ல பார்த்திருப்பியா இருக்கும்டா ” 

எப்போதும் போல் அல்லாமல் அந்த கல்லூரியில் இம்முறை  பிசினஸ் பின்னணியிலிருந்து நிறைய பேர் படிக்க வந்திருக்கிறார்களாம்.  சுயமாய் சம்பாதிப்பவர்களும் அதிகம் வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் “இந்த கிளாஸ்ல இந்த வாட்டி மாடல்,பைக் ரேசர், யுடியூப்  பிரபலம் எல்லாம் இருக்கீங்க. சோ என்டர்டைன்மென்ட்க்கு குறைச்சல் இருக்காதுன்னு நினைக்கிறேன்”  என்றார் உற்சாகமாக.

தானாக அவன் புறம் திரும்பிய அவள் பார்வையை நேராக சந்தித்தான் அவன். சட்டென திரும்பிக்  கொண்டாள்.

சுஷ்மா நிறைய பேசினார். தமயந்திக்கு அவர்  இலகுவான பேச்சு பிடித்திருந்தது .காலையிலிருந்து உள்ளுக்குள் ஊறி கிடந்த  படபடப்பு கொஞ்சம் கொஞ்சமா குறைந்தது. நம்மால் முடியும்! இந்த கூட்டத்தில் தனியாக சமளித்துவிட முடியுமென தோன்றியது. 

மதிய உணவு நேரமும் வர 

தமயந்தி “சாப்பிட போவீங்களா இல்ல அதுவும் இங்கதானா” என்று கேட்க சிரஞ்சீவி “ஏன் கேக்குறீங்க ”கேட்டான்.

 தமயந்தி “இல்ல, பெவிகால் கீது போட்டு ஒட்டிட்டாங்களோ நெனச்சேன்” என்றாள்.

 புவன் சட்டென சிரித்துக்கொண்டே ‘வரோம் வரோம்’ என்றான்.

அவள் நக்கலில் அதிர்ந்தாலும் சிரஞ்சீவி “வா சேர்ந்து போய் சாப்பிடலாம்” என்று அழைக்க அதேவேளை  தமயந்திக்கு அந்த பக்கம் அமர்ந்திருக்கும் பெண் ‘சாப்பிட போலாமா’ என்று கேட்க தமயந்தி அவளுக்கு போலாம் என தலையாட்டிவிட்டு இவனிடம் நாளைக்கு உங்களோட சாப்பிடுறேன் என்று சமாதானம் சொல்லிவிட்டு அகன்றாள்.

ஒருவரிடம் உறவை வளர்க்க முனைவதை  விட அறுத்து எறிவது எவ்வளவு சுலபாக இருக்கிறது. நமக்கு வரும் அளவுக்கு மோசமாக  நடந்துகொண்டால் போதும்! எண்ணிக்கொண்டாள் அவள். 

ஷாக் ஆனான் சிரஞ்சீவி. 

அந்த வகுப்பறையில் தமயந்தி தவிர்த்து மேலும் ஐந்து பெண்கள் இருந்தார்கள் அதில் தமயந்தி உடன் சென்ற பெண் தவிர்த்து மற்றும் மூவரும் இவர்களை தான் பார்த்துக் கொண்டே நின்றிருந்தனர்.

புவன்  சிரித்துக் கொண்டே “இன்னைக்கு உனக்கு கிடைச்சது பெரிய பன்னு மட்டும்தான் மச்சி”என்று அவன் கையில் இருந்த மிட்டாய் பிரித்து சிரஞ்சீவி வாயில் திணித்தான்.

சிரஞ்சீவி “யார்ரா இவ நம்மளோட சாப்பிட வரமாட்டேங்குறா”

புவன் “அதான் சொன்னியே ராட்சசி ப்ரெண்டு”

இவர்கள் மூவரும் சாப்பாடு வழங்கும் ஹாலுக்கு செல்ல, அங்கே பயங்கர கூட்டம். கடைசியாக நின்றிருந்த தமயந்தி பின்வந்து நின்று சிரஞ்சீவி ‘என்னமோ பறந்து போன இங்கதான் நிக்கிறியா’ என்று கேட்டுக் கொண்டே அவள்பின் நின்றான்.

“ஹீஹீ கூட்டம் அதிகம்” பதில் சொல்லிவிட்டு ‘இவனுங்கள அவாய்ட் பண்ணவே முடியாதா ஆண்டவா’ என்றெண்ணிக்கொண்டு நின்றாள்.

அவள் எண்ணம் அறியாதவன் போல சிரஞ்சீவி அவன் வம்பு பேச்சை தொடர்ந்தான் “உனக்கென்ன கால் மட்டுமே ஒரு அஞ்சடி இருக்குமா”  நக்கலாக கேட்டான். இவனுக்கு போய் பாவம் பார்த்தாளே!

“நீ என்ன ஒரு நூறு கிலோ இருப்பியோ அத்தனையும் கொழுப்பாவே இருக்கும் போல” இவளும் பதிலுக்கு கேட்டாள். 

இவர்கள் பேச்சைக் கேட்ட புவன் சிரித்துக்கொண்டே விஷயத்தை பின்னால் அலைபேசியில் மூழ்கி இருக்கும் அருணிடம் கூற அவன் கையிலிருக்கும்  தட்டால் சிரஞ்சீவி முதுகில் அடித்துவிட்டு “ ரொம்ப பேசாத” என்றான் மீண்டும் ஒருமுறை.

தமயந்தியும் அவளுடன் சாப்பிட வந்த பூர்ணிமாவும் எங்கு சென்று அமரலாம் என்று பார்த்துக்கொண்டு இருக்க “வா என் கூட” என்றவன் ஓர் மூளையில் இருக்கும் மேஜைக்கு அழைத்துச் சென்றான் சிரஞ்சீவி.

தமயந்தி“ஏய் இது என்னமோ ப்ரொபசர்ஸ் எல்லாம் உட்கார்ந்து சாப்பிடுற இடம் போல இருக்கு”

சிரஞ்சீவி“ப்ச் பரவால்ல வா”

தமயந்தி “எந்திரிக்க சொல்லிட போறாங்க”

சிரஞ்சீவி“அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்றவன் அமரவும் இவளும் பூர்ணிமாவும் அமர்ந்தனர்.

ஐவரும் அவரவர் தட்டில் இருக்கும் ஒவ்வொன்றையும் டேஸ்ட் செய்து பார்த்துக் கொண்டிருக்க இவர்களுக்கு கொஞ்ச தூரத்தில் பெண்ணொருத்தி  வெறும் பொரியல் சாதம் அழுது கொண்டே சாப்பிட்டாள். அவள் விசும்பும் சத்தம் அங்கே இருக்க எல்லோருக்கும் கேட்க  

பூர்ணிமா “பாவம் சாப்பிட பிடிக்கல போல இவங்கதான் சுஷ்மா சொன்ன  மாடலோ பயங்கர செக்ஸியா இருக்காங்கல்ல. உடம்ப நல்ல மைண்டைன் பண்ணுவாங்க போல” 

புவன் கிண்டலாக  “சாப்பிட பிடிக்காம இல்ல பிடிச்சு சாப்பிடாம இருக்றதுல தான் இந்த அழுகை”

 அவர்கள் பேச்சு  டயட் பற்றி ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் அந்த மாடல் பெண் எழுந்து நின்று யாரும் தப்பா நினைக்க வேண்டாம் நான் சாப்பிடும் போது இப்படி கொஞ்சம் பீல் பண்ணுவேன் என்றும் தொந்தரவு செய்வதற்கு வருத்தம் எனவும் தெரிவித்தாள்.

இதென்ன இப்படி ஒரு ட்ராமா என்று ஆண்கள் பார்க்க 

 பூர்ணிமா “அச்சோ பாவம். நான் போய் பேசவா” என்று கேட்க  

 தமயந்தி அவளை விசித்திரமாக பார்த்தாள்.

புவன் “அவ்ளோலாம் சீன் இல்லங்க.அவங்களுக்கே எல்லாம் தெரியும்”

பூர்ணிமா “காலைல ப்ரோடீன், மதியம் கார்ப், பைபர் கொஞ்சமா லிக்விட் டயட் எடுத்தா போதும் உடம்பு  நல்லாவே மைண்டைன் பண்ணலாம். இப்படி தினம் அழுதுட்டே சாப்பிடுறது நல்லாவா இருக்கு” கேட்டாள் 

சாப்பிட்டு முடித்து எழ போன தமயந்தியை  பூர்ணிமா “வெயிட் பண்ணு நானும் வரேன்” என்று வேகமாக சாப்பிட போக 

தமயந்தி அழுத்தமாக பார்த்து “ஃப்ரீ அட்வைஸ்ல்லாம் யாருக்கும்  தராதீங்க” என்றாள் 

சிரஞ்சீவி “ஹே அவங்க ஜஸ்ட் ஒரு பிரெண்ட்லி டாக் குடுக்க போறாங்க.  ஏன் நீ  இப்படியெல்லாம் பேச போக மாட்டியா” 

தமயந்தி “மாட்டேன். என் கொள்கையே வேற. அதெல்லாம் உனக்கு சத்தியமா புரியாது”

சிரஞ்சீவி “நீங்க சொல்ல பாருங்க மேடம் நான் புரிஞ்சிக்க பாக்குறேன்”

 “நானும் யாரையும் தொந்திரவு செய்ய மாட்டேன்,யாரும் என்னையும் தொந்திரவு செய்யக்கூடாது” என்றாள் மிடுக்காக. 

அருண் முகத்தில் சின்ன புன்னகை மலர்வதை மற்ற இருவரும் பார்க்க மூவர் கண்களும் பேசிக் கொண்டன. 

பூர்ணிமா ஆர்வம் குறைந்தாலும்  அவள் பார்வை அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க “அட பீல் பண்ணாதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே இருக்கிற ஆம்பளைங்க எல்லோரும் அவ  பின்னாடி தான் ஓடுவாங்க. இதோ பாருங்க இவங்க தட்டும் கூட காலி இவங்க கிட்ட சொல்லி விடுங்க இவங்க அவளுக்கு ஆறுதல் சொல்லிடுவாங்க”

அவள் கிண்டலுக்கு அவர்களிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

புவன் ‘இனி லஞ்ச் கடைசி அரை மணி நேரத்துல வந்து சாப்பிடலாம் எனக்கெல்லாம் இந்த சத்தம் கூட்டம் அலர்ஜி’ என்றான்.

பூர்ணிமா “தட்ஸ் ரைட்” என்றாள்.

‘நான் எப்போ டா உங்களோட சாப்பிட வரேன் சொன்னேன்’ எண்ணிக்கொண்டாள். வாய்விட்டு கேட்க மனம் வரவில்லை. 

அந்த நாள் முடிவில் பூமியின்  காலேஜ் எப்படி போச்சு என்ற கேள்விக்கு நல்லா போச்சு, பூர்ணிமா என ஓர் தோழி கிடைத்திருப்பதை மட்டும் தெரிவித்தாள்.

அவர்கள் நாட்கள் மெல்ல மெல்ல அறிமுக படலத்திலிருந்து அந்த கல்லூரியின் விதிமுறைகள் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றது போல் இவர்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு வந்தது. கல்லூரிக்கு நேரத்திற்கு வருவது காட்டிலும் தினமும் வருவது முக்கியம். கொடுக்கும் அசைன்மென்ட் நேரத்திற்கு சமர்ப்பித்தால் மட்டுமே மார்க். எல்லாமே ஆன்லைன் தான் என்பதில் பிரச்சனை இல்லை என்றாலும் வார தேர்வுகளில்  பத்தி பத்தியாக எழுதி மார்க் வாங்குவதற்கு இல்லை.எல்லாமே ஒரே வார்த்தையில் பதிலளிக்கும் கேள்விகள்.வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன் அவர்கள் ஐடி கார்டு அங்கே இருக்கும் மிஷினில் காட்டினால் தான் கதவுகள் திறக்கும். மாணவர்கள் மேஜைகளில் எல்லாம் லேப்டாப்  செட் செய்திருந்தனர். அவரவர்களுக்கு கொடுக்கும் அசைன்மென்ட் மற்றும் நோட்ஸ், குவிஸ்க்கு பதில்  எல்லாம் அந்த லேப்டாப்பில் தான் பதிவேற்ற வேண்டும். வகுப்பறைக்கு வந்து பாடமெடுக்கும் சில ப்ரோபஸ்ஸர் பேசுவது எல்லாம் தமயந்திக்கு தலைசுற்றியது. 

பூமியோ “நீ தானே தம்மு அப்படிபட்ட பெரிய காலேஜ்ல தான் படிப்பேன் சொன்ன.பயப்படாம பழகிக்கோ டீ” என்றாள். மேலும் “மேடம் மாசம் லட்ச ரூவா சம்பளம் வேணும்ன்னா இதெல்லாம் படிச்சு தான் ஆகணும்” என்றாள்.

அப்படியெல்லாம் நினைக்க கூடாது என்று ஆழ்மனதில் புதைத்தாலும் அந்த எண்ணம் மேலெழுந்து வந்தது. “இதுக்கு நான் ஏதாச்சும்  டிபார்ட்மெண்ட் ஸ்டோர்லே கணக்கு எழுதவே  போயிருப்பேனே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!