Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 03

வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார் கபிலன். மூவரும் காரை நிறுத்திவிட்டு அவர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி வர

புவன் “என்ன அங்கிள் ஆன்ட்டி கூட பேசிட்டு இருக்காம இங்க இருக்கீங்க”

கபிலன் “உங்க ஆன்ட்டி கிட்ட பேசணும்ன்ன  ஒரு நூறு மில்லி உள்ள போகணும் அது போனா மத்ததெல்லாம் மறந்துரும். ஒரு முக்கியமான விஷயம் பேசணும்டா பசங்களா ”

புவன் “நான் கூட முக்கியமா ஒரு விஷயம் சொல்லனும் அங்கிள் உங்க கிட்ட”



Advertisement

கபிலன் “அப்படி என்னடா முக்கியமான விஷயம்”

புவன் சிரஞ்சீவி பக்கம் வந்தவன் அவன் முகத்தில் இருக்கும் மூக்கை தடவி காட்டி “என் மச்சானுக்கு மூக்கு  ஒடஞ்சி ஒடஞ்சி விழுந்துகிட்டே இருக்கு அங்கிள்” என்றான் 

அவன் பேச்சில் சிரித்துக் கொண்டே கபிலன் “என்னடா காதல் மன்னா காலேஜ் எப்படி போகுது” என்று கேட்டார்  

Advertisement

புவன் “அது ஏன்  அங்கிள் கேக்குறீங்க ஒரு காது பக்கம் முழுக்க முழுக்க அமைதி இன்னொரு பக்கம் காது ஜவ்வு கிழிஞ்சு தொங்குது ”

Advertisement

கபிலன் “அப்படி யார்ரா சண்டை போடுறாங்க நம்ம எடத்துல”

புவன் “உங்க பையன் தான் அங்க பக்கத்துல உக்காந்து இருக்க பொண்ணு கூட ஒரே சண்டைதான் மூக்குடைப்புதான் கய்யாமியாதான் ” என்றான் 

கபிலனும் “என்றா  மகனே எனக்கு மருமகள் ரெடியா” கேட்டார் ஆர்வமாக 

Advertisement

புவன் “ஐயோ அங்கிள் அவ உங்களுக்கு மருமகளா வர  சான்ஸ் இருக்குதான் ஆனா….” என்று இழுக்க 

அவன் பேச்சை முழுதாக  முடிக்க விடாமலே அருண் “தள்ளிப் போங்கடா அந்த பக்கம் எப்ப பாரு நாய்ஸ் பொல்யூஷன் பண்ணிக்கிட்டு”

கபிலன் சிரஞ்சீவி நோக்கி “டேய் கண்ணா மூக்கா என் குல ராசா ஒரு மருமகளை கூட்டிட்டு வந்துருடா”

புவன் “பொறுங்க அங்கிள் இப்பதான் அவன் டீச்சரை பார்த்து எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கான்”

கபிலன் “ஏது டீச்சரா மகனே நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஒத்து வராதுடா மகனே”

சிரஞ்சீவி “யப்பா நீயுமா இப்படி கேக்குற எனக்கு அவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு அவ்வளவு தான்”

கபிலனும் மகனை கிண்டல் செய்யும் பொருட்டு “இதெல்லாம் தப்புடா” என்க 

புவன் “இல்ல இல்ல அங்கிள் அவங்க பார்க்க  ஸ்கூல் பிள்ளை மாதிரி இருப்பாங்க. அதுவும் இவன் பக்கத்துல நின்னா நேத்து பொறந்த குழந்தை மாதிரி இருப்பாங்க. சோ கடாமாடுக்கு ஏத்த கடாமாட நாம ஜூல தேடிக்கலாம் ”

கபிலன் சிரிக்க 

சிரஞ்சீவி மொத்தமாக உக்கிர மூர்த்தியாக மாறியவன் சட்டென புவன் கழுத்தை பிடித்து குனிய வைத்து குமுற

அவன்  அடியை வாங்கி சிரித்துக் கொண்டே  “அங்கிள் அங்கிள் உங்க பையன் காலேஜ்ல ப்ரொபசர் எல்லாம் உட்கார்ந்து சாப்பிடுற டேபிளுக்கு பொண்ணுங்கள கூட்டிட்டு போய் உட்கார வச்சு  சாப்பிட வைக்குறான் என்னன்னு கேளுங்க அங்கிள்”

கபிலன் இவர்கள் அடிக்கும் லூட்டியில்  சிரித்துக்கொண்டே புவனுக்காக மகனிடம் பரிந்து பேசினார் “டேய் பொது சொத்துடா அவன், க்ராண்ட் மாஸ்டர்டா,  பிஞ்சு எலும்புடா பையனுக்கு”

“அங்கிள்! இப்பதான் அங்கிள் உங்க பையன் என்ன இன்னமும் மொத்துறான்” 

நடப்பதை சிரித்துக் கொண்டே பார்த்திருந்த அருண் “அப்படி என்ன முக்கியமான விஷயம்” கேட்டான்

“கண்ணா அருண்ணு  அருந்ததி மேடம் போன் பண்ணாங்கடா தம்பி”  எழுந்து வந்து அவன் கை பிடித்துக் கொண்டு அங்கே போட்டிருந்த சோபாவில் கூட்டி போய் அமர வைத்தார்.

இறுகிப்போனவன் அருண் “இம்” என்று மட்டும் பதில் அளித்தான் 

“உன்ன அருந்ததீ  ஃபிலிம் கார்ப்பரேஷன் பார்த்துக்க சொல்றாங்க” என்றார்

அருண் இளகியவன் “அதுவா” கேட்டான் ராகமாக முன்நெற்றி முடியை கோதிக்கொண்டே

கபிலன் “கண்ணா நான் சொல்றதை கேப்பியா”

அருண் “அங்கிள் அவங்க  புருஷன் திரும்ப வடக்குல இருந்து இங்க வந்து புரொடக்ஷன் ஆரம்பிக்க போறாராம். இவங்க அவரை சமாளிக்கிறதுக்கு நான் தான் துருப்புச்சீட்டு, சோ அருந்ததீ ஃபிலிம் கார்ப்பரேஷனை என் கைக்கு தள்ள  பாக்குறாங்க”   அவர் சொல்லப் போகும் விஷயத்தை அவருக்கு முன்னே அவன் சொன்னான்.

எப்போதும் போல “புத்திசாலிடா என் கண்ணா” என்று அவனை இழுத்து பிடித்து  நெற்றியில் முத்தமிட்டார்.

அருண் கிண்டலாக “என்ன ஒரு மணி நேரமா சுருட்டு எதுவும் குடிக்காம இருக்கீங்க போல” கேட்டான்

கபிலன் சிரித்துக் கொண்டே “ஆமாடா கண்ணா” என்று சொல்லிக் கொண்டே சுருட்டை எடுத்து பற்ற வைத்தார்.

மேலும் இழுவையாக “அது கண்ணா…” என்று இவர் இழுக்க

சொல்லுங்க என்று அவரை ஊக்கியும் தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னார். அருந்ததீ  ஃபிலிம் கார்ப்பரேஷன் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர்கள் புரொடக்ஷன் எல்லாம் ஆவரேஜ் இல்லை பிளாப் படங்களாகவே  போக உண்மையில் அருந்ததீ  ஃபிலிம் கார்ப்பரேஷன் ஓட்டை விழுந்த கப்பல். இத்தனைக்கும் அதை நடத்துவது அருணின் அம்மா அருந்ததி இல்லை அவள் அண்ணன்கள். நஷ்டத்தை அழகாக அவள் பக்கம் திருப்பி விட தங்கையை மூளை சிலவை செய்து இருக்கிறார்கள். 

“என் மாமனுங்க சங்கதி எனக்கு தெரியாதா அங்கிள்” என்றான் அருண்

“அதான்டா கண்ணா நான் உனக்கு ஒரு யோசனை சொல்றேன் அதை செய்றியா”

அருண் “சொல்லுங்க ட்ரை பண்றேன்”

கபிலன் “நான் நமக்கு தெரிஞ்ச ஒரு சின்ன ப்ரோடுக்ஷன் கம்பெனி ஒன்ன புடிச்சு  தரேன். நீ அதை பாரு. அருந்ததி அம்மா கிட்ட இன்னும் நாலு அஞ்சு வருஷம் ஆகட்டும் இவன் இதுல பிராக்டிஸ் பண்ணட்டும்  அதுக்கப்பறம் வந்து அதை பார்க்கட்டும்ன்னு  சொல்கிறேன். இந்த நாலஞ்சு வருஷத்துல ஒன்னா  அருந்ததீ  ஃபிலிம் கார்ப்பரேஷன் முழுசா முழுகி போய் இருக்கும். இல்ல மேல வந்தா உன் மாமனுங்க உன்ன மறந்திருப்பானுங்க”

புருவம் சுருக்கி எதையோ யோசித்தான் அருண் 

கபிலன் “டேய் கண்ணா நீ சிங்கம்டா! நீ சிங்கக்குட்டி. உன் மேல நம்பிக்கை இல்லாம இல்ல ஆனா உன் மூணாவது மாமன போட்டு  தள்ளின மாதிரி தள்ளிடுவானுங்க இவனுங்க. அது இந்த கபிலன்  இருக்கிற வரைக்கும் நடக்காது ஆமா சொல்லிட்டேன்” என்றார் அகங்காரமாய்

அவன் முகம் மாற்றமே காட்டாமல் இருக்க

“இதை பார் இத செய் அங்கிள் உனக்கு ஹெல்ப் பண்றேன்” இம்முறை கபிலன் குரல் நடுங்கத் தொடங்கியதும்

“இன்னா டாடி டைம் மீறி போகுதா குரல் எல்லாம் நடுங்குது” என்றவன் சிரஞ்சீவி உள்ளே சென்று அவர் குடி செட்டை வெளியே அவர்கள் அமர்ந்திருக்கும் சோபாவுக்கு எடுத்து வந்தான்.

கபிலன் “ஐயோ என் தங்கம் இந்த கருமத்தெல்லாம் தொடாதடா என் வைரம் இது இந்த அப்பனோட போகட்டும்டா”மகனை கொஞ்சிக் கொண்டிருக்க 

அவர் வாங்கி வைத்திருந்த பிராந்தி பாட்டிலை திறந்து அதை டம்ளரில் ஊற்றிக் கொண்டே “உங்க பிளான் ஓகே எனக்கு” என்றான் அருண்.

மகிழ்ச்சி அடைந்தவர் அருண் கையில் பாட்டில் பார்த்ததும் “உனக்கு எதுக்குடா இந்த கருமம் மிக்ஸிங் எல்லாம் இந்த கேடெல்லாம் என்னோட போகட்டும் நீங்க எல்லாம் சந்தோஷமா புள்ள குட்டி பொண்டாட்டியோட வாழனும்” என்றவர் அருண் கொடுத்த டம்ளரை குடித்துவிட்டு ‘என்னடா சுர்ருன்னே இல்ல’ என்றார்

“கொஞ்ச நாள் இப்படி குடிங்க அங்கிள்”  என்றான் அருண்  மிரட்டலாக

சிரஞ்சீவி வேண்டுமென்றே விளையாட்டாக நான் கொஞ்சம் குடிச்சு பார்க்கிறேன் என்க 

கபிலன் “அடிங்க ஓடுங்கடா வீட்டுக்குள்ள இதெல்லாம் குடிச்ச லிவர் கெட்டுடூம்” விரட்டினார் மகன்களை

சிரஞ்சீவி “ஆமாம்பா என் மச்சான் போய் கனவுல டூயட் பாடணும் குட் நைட்” என்க

புவன் “ஆமா ஆமா கடா மாடு பாக்ஸிங் ரிங்க்ல தோற்க்கிறத பாக்கணும் குட் நைட் அங்கில்” என்க 

அருண் “ரொம்ப முழிச்சி இருக்காதீங்க தூங்குங்க” 

மகன்கள் அவர்கள் அறைக்கு செல்வதை பார்த்துக் கொண்டே எதிரே பிரேமில் தொங்கிக்கொண்டிருக்கும் மனைவியிடம் பேச தொடங்கினார். 

கல்லூரியில் மெதுவாக ஒரு வதந்தி பரவத் தொடங்கியது அவர்களுடன் இளவரசி ஒருத்தி படிக்கிறாள் என. 

இந்தியாவில் இன்னுமே ஒரு சில இடத்தில் ராஜ பரம்பரை குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்படி மகாராஷ்டிராவில் நாக்பூர் ராஜியத்தின் போன்ஸ்லே குடும்ப  இளவரசி இங்கே படிக்க வந்திருக்கிறார் எனக்கு வதந்தி பரவியது.யாராக இருக்கும் என எல்லோரும் பேசிக் கொண்டிருக்க தமயந்தி கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

அன்றைய உணவு மேஜையில் “யார் பிரின்ஸஸ்ன்னு உனக்கு தெரிஞ்சிக்க ஆசை வரலையா” கேட்டாள்  பூர்ணிமா

தமயந்தி “இல்ல கியூரியாசிட்டி கில்ஸ் கேட் நம்ம கியூரியாசிட்டி அந்த பிரின்ஸஸ்ஸ கொன்னுட்டா பாவம்ல” என்றாள்  

மற்ற நால்வருக்கும் புறையேறியது.

தமயந்தி “அவங்களே தான் யாருன்னு தெரிய வேணாம்னு இருக்காங்கல்ல பாவம் நாம ஏன் நோண்டனும்”

சிரஞ்சீவி “உன் அளவுக்கு யோசிக்க யாராலும் முடியும் சொல்லு” கிண்டலாக கூற 

தமயந்தி “பாவம் பிரின்சஸ் அவங்களுக்கு என்ன கஷ்டமோ” என்று சலித்துக் கொண்டாள்.

பூர்ணிமா “நிஜமாவே உனக்கு தெரிஞ்சுக்க இன்ட்ரஸ்ட் இல்லையா”

“அட நீங்க வேற இந்த காலத்துல பிரின்ஸஸ்ஸா? அதுவே கட்டுக்கதையா தான் இருக்கும்” என்றவள் சட்டென அவளே “ஆனா இந்த காலேஜ்ல இங்கிலாந்து பிரின்ஸஸ்ஸே  வந்து படிச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லதான் ” என்றாள்.

சிரித்தவள் பூர்ணிமா “ஏன்” என்று கேட்க

தமயந்தி “பிரின்சஸ் சேஃப்டி,செக்யூரிட்டிக்கு தான் இங்க இவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறதா சொன்னாங்க அதை பார்த்து தான் சொல்றேன்” என்றாள் .

“உனக்கு இதெல்லாம் கஷ்டமா இருக்கா” கேட்டாள்  பூர்ணிமா

“சேச்சே இவனுங்க இப்படி அசைன்மென்ட் கொடுத்து தள்றதும் புரியாத பாஷையில் பேசுறதும்  தான் சில நேரம் கஷ்டமா இருக்கு. மத்தபடி எனக்கெல்லாம் ஜாலியா தான் இருக்கு”

தமயந்தி எந்த விஷயத்தையும் மேம்போக்காக அணுகுவது அங்கே இருப்பவர்களுக்கு ஆச்சரியாமாக இருந்தாலும் தேவையாகவும் இருந்தது. 

தமயந்தியின் டூவீலர் சர்வீஸ் முடிந்து வர பூமிகாவும் அவள் சிஏ படிப்பிற்கும் பாட்டு கிளாஸிற்கும் நடுவில் சிக்கிக்கொண்டாள்.

தமயந்தியின் நாள் அதிகாலை 5 மணிக்கு எழுவது, பக்கம் இருக்கும் கிரவுண்டுக்கு சென்று அவள் வாலிபால் கோச் நடத்தும் பள்ளியில் கோச்சிங் செய்வது ஏழரை மணிக்கு ஹாஸ்டலுக்கு வந்து தயாராகி கல்லூரி செல்வது என பிரிந்தது.மாலைகளில் கிடைக்கும் நேரம் இப்போதெல்லாம் கல்லூரியில் கொடுக்கும் அசைன்மென்ட்ற்க்கே சென்றது. பூமியும் அவளும் கைபேசியில் மட்டுமே தொடர்பில் இருப்பதால் தமயந்தியின் குற்றவுணர்ச்சி அவள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 

ஒரு நாள் பூமி அழுது கொண்டே அழைத்தவள் “பேபி அன்னிக்கு ஒரு ராகம் பாட கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தேன்ல்ல அதுக்கு ஒரு டீச்சர் எங்கம்மா திருவாரூர்ல பார்த்து இருக்காங்க எனக்கு அங்க போகவே  பிடிக்கல”

தமயந்தி அவளை சமாதானப்படுத்த “போ பேபி  திருவாரூர் சூப்பரான ஊர்தான்”

“ஐயோ நீயுமா” பூமி சலித்துக்கொண்டாள்.

“ஏண்டி உனக்கு இப்போ என்ன பிரச்சனை”

“சொல்ல தெரியல போக பிடிக்கல அதுவும் ஒரு மாசம் முழுக்க அங்க இருக்கணும் எனக்கு அது  சுத்தமா பிடிக்கல”

“ஆனா பாட்டு கத்துக்கவல்ல.அந்த மியூசிக் அகிடமில பாட இன்னும் ரெண்டு மாசம் தானே இருக்கு” பூமிக்கு எது பிடிக்காதோ அதையே  தமயந்தியும்  பேச இவளுக்கு இன்னமும் கோபம் சோகம் கூடியது.

பூமியின் அம்மா அம்பிகாவும் அவர்கள் குடும்பமும் ஊர் போற்றும் ஆடிட்டர் குடும்பம் என்றாலும்  கர்நாடக சங்கீதம் அவர்கள் நாடி நரம்புகளில் ஓடுகிறது. மகள் ஆடிட்டர் ஆகுவதை விட அவள் கச்சேரிகள் அவருக்கு தேவை இப்போது.

சிறுவயதில் அம்பிகாவால் பாட முடியாமல் போன மியூசிக் அகடமி ஹாலில் மகள் பாடுவதற்கு வாய்ப்பை பெற்றிருக்கிறார். மூன்று மணி நேரம்  16 பாடல்கள் வெவ்வேறு ராகத்தில் கச்சேரி இருக்கப் போகிறது.பூமிக்கு அங்கே  பாடுவதில் ஏதோ புதுவிதமான சங்கடம்.  எதையும் தெளிவாக சொல்லாமல் எனக்கு பிடிக்கல எனக்கு பிடிக்கல என்றே  சொல்லிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அம்பிகாவோ விடுவதாக இல்லை. மகளுக்கு  விதவிதமான பாட்டு டீச்சர் வைத்து விதவிதமான பயிற்சி கொடுக்கிறார். அம்மாவை கஷ்டப்படுத்தவும் முடியாமல் கச்சேரி டேட் நெருங்கி வர அது  கொடுக்கும் பயமும் அழுத்தமும் தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறாள் பூமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!