Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 16

நகைக்கடையுடன் சேர்ந்த துணி கடை அது. அருணும் அவன் நண்பர்களும்  அவர்களுக்கு பிடித்தது போல உடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த தளத்திற்கு நிகரான நகை கடை  தளத்தில் கேட்டு பழகிய அதிகார குரல் ஒன்று கேட்டது.  அருண் உடை தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு நகைக்கடைக்குள் எட்டிப் பார்த்தான். அருந்ததீ எது நன்றாக இருக்கிறது என்று நான்கு வகையான மோதிரங்களை பார்த்துக் கொண்டிருந்தார். 

அவன் எட்டிப் பார்த்ததும் அவனை பார்த்தவர்  “டேய்! அருண் கண்ணா! ”  என்று சிரித்துக்கொண்டே எழுந்து சென்று அவனை இழுத்து கொண்டு மோதிரங்களை அடுக்கி வைத்திருந்ததை காட்டி ” எது நல்லா இருக்கு சொல்லு அது அம்மா வாங்கிக்கிறேன்” என்றாள்.

எப்போதும் அருந்ததியின் அலங்காரங்களும் ஆடைகளும் கருப்பு,கருநீலம், கரும்பச்சை என்று மூன்று வண்ணங்களில் தான் இருக்கும். அவள் தேர்ந்தெடுத்து இருந்த மோதிரத்தில் கற்களும் அந்த வண்ணங்களிலேயே இருந்தது. அருண் பச்சை கல்லும் சிவப்பு கல்லும் பதித்திருந்த மோதிரத்தை காட்டி இது நல்லா இருக்கு என்றான். 

அருந்ததீ  “ஓகே இந்த மோதிரத்தை பேக் பண்ணுங்க” என்று காட்டிவிட்டு  கூடவே பக்கத்தில் நீலக்கல் வைத்திருந்த மோதிரத்தை காட்டி “இதையும் பேக் பண்ணுங்க” என்றார்.



Advertisement

அருந்ததீ  “என்ன தம்பி  துணி கடைக்கு எல்லாம் வந்து இருக்க”

அருண் “புவன் தான் கூட்டிட்டு வந்தான் நாங்க மூணு பேரும் இன்னைக்கு சாயந்திரம் ஒரு பங்க்ஷன்க்கு போறோம் அதுக்கு எத்தினிக் டிரஸ் போட்டுட்டு போக போறோம்”

அருந்ததீ “அடடே வா வா வா அம்மா செலக்ட் பண்றேன் வா” என்றவள் புவனும்  சிரஞ்சீவியும் இருக்கும் இடத்திற்கு அருணை இழுத்துக்கொண்டு சென்றாள். 

Advertisement

அதிரடியாக அருந்ததீ “எப்படி இருக்கீங்க பாய்ஸ். காலேஜ் எப்படி போகுது” கேட்டார் சிரஞ்சீவி  உற்சாகமாக “நல்லா போகுது ஆன்ட்டி”

Advertisement

அருந்ததீ “உடம்ப குறை டா கண்ணா”

புவன் பேசாமலே சிரிக்க “கொஞ்சமாச்சும் பேச கத்துக்கடா  கண்ணா”

அப்பவும் புவன் எதுவும் பேசாமல் இருக்க சிரஞ்சீவி ‘இத தான் ஆன்ட்டி நாங்க சூஸ் பண்ணிருக்கோம்’ என்று அவர்கள் தேர்ந்தெடுத்த உடைகளை காட்ட  அங்கே அருண் ஏற்கனவே அவனுக்கென்று பச்சை நிறத்தில் காட்டன் குர்தா ஒன்றை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதை பார்த்தார் அருந்ததீ .

Advertisement

அருந்ததீ “நைட் பங்க்ஷன்னுக்கு ஏத்தது போலவே இல்லையே”

சிரஞ்சீவி “நல்லா சொல்லுங்க ஆன்ட்டி”

அருண் “எனக்கு உறுத்தாத ட்ரெஸ் வேணும்”

அருந்ததீ “ம்ம் சரி அப்போ இதுவே இருக்கட்டும், நல்லா இருக்கு” என்றவர் பக்கத்தில் இருக்கும் ஆளிடம் “இந்த குர்தா எடுப்பா காட்டுற மாதிரி வேஷ்டி நல்லதா எடுத்துட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு “வாங்கப்பா நகை கடைக்கு போகலாம்” மூவரிடம் சொல்லியவர் இவர்களுக்கு முன்னே நடந்தார்.

அருண் சலித்துக்கொண்டே தாயாரை தொடர 

அருந்ததீ “ப்ரூச் காட்டுனீங்களே அப்போ அத காட்டுங்க” என்று சொல்ல 

ட்ரேகளை அடுக்கி வைத்தார் நகைகளை எடுத்து காட்டுபவர். விதவிதமான ப்ரூச் பார்க்கவே அழகாய் கியூட்டாக இருக்க.. அருண் “இதென்ன எனக்கு பிடிக்கல, நான் வெறும் குர்தா மட்டும் போட்டுட்டு போறேன்”

அருந்ததீ “சும்மா இரு அருண். இது பாரு பிறை நிலா. இல்ல இந்த ஸ்டார் பாரு. இல்ல இந்த கிரௌன் பாரு அழகா இருக்குல்ல. ஜஸ்ட் பாக்கெட் கிட்ட பின் பண்ணிட்டு போன அழகா இருக்கும் ”

அருண் பிடிக்கவில்லை என்பது போல பேசியதை கேட்ட நகை காட்டுபவர் இன்னமும் நிறைய ட்ரே எடுத்து காட்ட புவன் சட்டென அவனுக்கு பிடித்தது போல செஸ் ‘ராஜா’ ப்ரூச் பார்த்ததும் எடுத்தான். 

அருந்ததீ “கிராண்ட் மாஸ்டர் பெர்சனாலிட்டிக்கு ஏத்த போல சூஸ் பண்ணிட்டியே குட் குட்”

சிரஞ்சீவி அவனுக்கு பிடித்தது போல ‘கிரௌன்’ ப்ரூச் எடுத்துக்கொள்ள 

அருந்ததீ அவன் முகத்தை சுற்றி திருஷ்டி கழித்து “என்னிக்கும் நீ ராஜா தான்டா கண்ணா”

சிரஞ்சீவி “அப்ப அருண் ஆண்ட்டி”

அருந்ததீ “அவன் மகாராஜா”

சிரஞ்சீவி “அதானே” என்று சொல்ல அருணும் புவனும் நக்கலாக சிரித்தனர். 

அருணை எல்லோரும் வற்புறுத்த, அதே சமயம் நகை காட்டுபவர் இன்னொரு ட்ரே எடுத்து காட்டினார். 

பறவை ப்ரூச் ஒன்று அருணை கவர்ந்தது. அவன் கைகளில் அதை எடுத்ததும் நகை காட்டுபவர் “இது நம்ம ஊர்ல அன்ன  பறவை டிசைன் சார்.அதே வெளிநாட்ல பீனிக்ஸ் பறவை டிசைன். அதோட கண்ணுக்கு ஒட்டிருக்க கல்லு ப்ளாக் கார்னெட் ஸ்டோன்.அந்த கல்லுக்கு செர்டிபிகேட் தரோம். எடுத்துக்கோங்க சார் உங்க ஸ்டைலுக்கு இருக்கு. வெளிநாட்டுக்கு, பார்ட்டிக்கு, சூட்டுக்கு கூட போட்டுட்டு போகலாம்”

அருண் அதை அவன் அம்மாவிடம் காட்டி “ம்ம் எடுத்துகிறேன்” என்றான்.

புவன் பாக்கெட்டுக்குள் கைவிட்டுக்கொண்டு ப்ரூச் அடுக்கி வைத்திருந்த ட்ரேகளையே வெறித்து பார்த்துக்கொண்டிருக்க அருந்ததீ சட்டென ரொம்பவும் அழகாய் தெரிந்த வண்ண வண்ண கற்கள் பதித்த  ‘மைக்’ ப்ரூச் எடுத்துக்கொடுத்து “இத நல்ல பாக்ஸ்ல பேக் பண்ணுங்க” சொல்லிவிட்டு பில் எடுத்துட்டு வாங்க என்று ஆணையிட்டார்.

புவன் “நாங்க பே பண்ணிக்குறோம் ஆண்ட்டி”

அருந்ததீ “ஏன்டா நான் என் பசங்களுக்கு பே பண்ண கூடாதா என்ன” என்று சொல்லிவிட்டு அழகாய் வண்ணமயமாக பேக் செய்யப்பட்டிருந்த கிப்ட் பாக்ஸை காட்டி “பூமிகா கிட்ட அருந்ததீ ஆன்ட்டி கொடுத்தேன் சொல்லி குடுங்க” என்றார்.

ஷாப்பிங் முடிந்து பார்க்கிங் தளம் வந்தவர்கள் “சரிடா கண்ணா சாப்பிட்டு போங்க. எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு” என்று விடைபெற்றார் அருந்ததீ.

சிரஞ்சீவி “இப்ப யார் அந்த கிப்ட் குடுக்கறது”

அருண் “நான் இல்ல”

புவன் “நீ குடுக்கறீயா” 

சிரஞ்சீவி “ஆங் குடுக்கறேன். சொல்லப்போனா அவ பாடுறத கேட்க வரேன் பாரு அதுக்கு அவதான் எனக்கு குடுக்கணும்”

அருண் நக்கலாக சிரிக்க, புவன் கோபமாக முறைத்தவன் “நெஜமாவே சூப்பரா பாடுறா”

சிரஞ்சீவி “அவ அழுதா கூட ராகமாத்தான் டா அழுவா… காதே வலிக்கும்” 

சிரஞ்சீவி பேச்சை முடிக்கவில்லை புவன் சட்டென அவனை இழுத்து கழுத்தை கை இடுக்கில் வைத்துக்கொண்டு  மண்டையில் கொட்டினான் “பேசுவ பேசுவ இனி இப்படி பேசுவ”

சிரஞ்சீவி “நீ என்ன விட்டு மட்டும் பாரேன்”

காரை எடுத்த அருண் “இப்போ ரெண்டு பேரு காருக்குள்ள ஏறல நடந்துதான் வரணும்”

மூவரும் ரெடியாகி கச்சேரி நடக்கும் இடம் சென்றனர்.

வண்டியை நிறுத்தி பார்க் செய்துவிட்டு மூவரும் எப்போதும் போல மிதந்து நடந்து வர அரங்கத்தின் வாசலில் ரிஷப்ஷன் மேஜையில் தமயந்தி பச்சை பட்டு தாவணியில் பதுமை போல நின்றிருந்தாள். அவள் பக்கத்திலேயே அவளை போலவே பூர்ணிமாவும் நின்றிருக்க அந்த இடமே வண்ணமயமாக மிளிர்ந்தது.

வேஷ்ட்டியும் குர்தாவும் சகிதம் நடந்துவரும் தம்பிகளை பார்த்தவள் பூர்ணிமா “ஐயோ சவுத் இந்தியன் படமே  நடந்து வருதுபா” என்று கிண்டலாக சொல்லிக்கொண்டே போய் மூவரையும் அணைத்துக்கொண்டாள்.

சிரஞ்சீவி கருப்பு கண்ணாடியும் அணிந்துகொண்டிருந்தவன் கண்ணாடி கழட்டி போட்டுக்காட்டி “எப்படிக்கா” என்று கேட்க பூர்ணிமா “ச்ச்சோ கியூட்” அவன் கன்னம் கிள்ள 

சிரஞ்சீவி “ஏதே கியூட்டா…யக்காவ் ரக்க்ட்டா வந்திருக்கேன். எதோ பூனை குட்டிய கொஞ்சுற மாதிரி கொஞ்சுற” பேசிக்கொண்டே இருக்க 

பூர்ணிமா புவனை பார்த்து “ ச்ச இன்னிக்கு ரொம்ப சமத்து பிள்ளை வைப் தரேடா  புவன்” என்றவள் அவன் ப்ரூச் பார்த்து “ஹே கியூட்டா இருக்கு” என்றாள் 

அருணை பார்த்தவள் “ஹீரோ வேற லெவல்ல இருக்கீங்க ஹீரோ, ஆனா கொஞ்சமா சிரிங்க ஹீரோ” என்றாள்.

அருணும் சிரிப்பை அடக்கமுடியாமல் பற்கள் காட்டி சிரிக்க பூர்ணிமாவுக்கு பின் ரிஷப்ஷன் மேஜையில் நின்றிருந்தவள் கண்களை விரித்து பார்த்தாள்.

நால்வரும் தமயந்தி பக்கம் செல்ல, 

சிரஞ்சீவி “எங்க கால காட்டு நீ அப்போ தான் நம்புவேன் நீ குச்சி போட்டு நிக்கலன்னு”

தமயந்தியும் சட்டென “நல்லா பாரு” என கால்களை காட்ட அழகாய் வெள்ளை நிற பிளாட் செருப்பு தெரிந்தது

சிரஞ்சீவி சட்டென பூர்ணிமாவிடம் “நீ என்னக்கா ரெண்டாவது மாடில நிக்கிற… நம்ம குடும்பத்துக்கு இவ்ளோ பெரிய ஹீல்ஸ்லாம் தேவையா கோபி” என்று கிண்டல் செய்தான் 

புவன் தமயந்தியை பார்த்து “நல்லா இருக்கு ட்ரெஸ்” என்க 

தமயந்தி “ஆமா அம்பிகா ஆன்ட்டி செலெக்ஷன்”

புவன் “மூணு பேரும் ஒரே மாதிரி ட்ரெஸ்ஸிங்கோ”

தமயந்தி “அதெப்டி…..” என்று தொடங்கும் போதே பூர்ணிமா அவள் வாயை பொத்தி  மூவரையும் பார்த்து “அங்க ஸ்னாக்ஸ் தராங்க சாப்பிட்டு வந்து உள்ள உட்காருங்க என்ன”

சிரஞ்சீவி “இப்ப தெரியுதுக்கா நீ எதுக்கு ஹீல்ஸ் போட்டேன்னு” கிண்டல் செய்ய…

அருண் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு “லெஹங்கா காட்டிலும் பாவடை தாவணில அழகா இருக்க” என்றான் 

பளீச்சென சிரித்தவள் “ல்ல என் உயரத்துக்கு நல்லா இருக்காதோ நெனச்சேன்”

அருண் “உன் உயரத்துக்கு எல்லாமே நல்லா இருக்கும்”

இம்முறை முகம் சிவக்க சிரித்தாள். உள்நெஞ்சை அடைக்கும் வெட்கத்தை மறைக்க “சேம் பின்ச் ரெண்டு பேரும் ஒரே ஷேட்ல ட்ரெஸ் பண்ணிருக்கோம்” என்றாள் 

சட்டென அருண் “சரி வா அப்போ வந்து ஸ்னாக்ஸ் வாங்கி கொடு. கியூலலாம் நிற்க முடியாது”

தமயந்தி “ஐயோ எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றவள் அரங்கத்துக்குள் ஓடினாள்.

அவள் அரங்கத்துள் நடக்க நடக்க அங்கிருந்தவர் பார்வை முழுக்க அவள் மீதே படிந்தது. அருண் ‘ஊப்” என மூச்சை இழுத்து விட்டவன் சிரித்துக்கொண்டே புவன் சிரஞ்சீவியுடன் கலந்துகொண்டான்.

சிரஞ்சீவி “என்ன மச்சான் எப்போ போய் நான் கிப்ட் குடுக்கறது” கேட்டு புவனை வம்பிழுத்துக்கொண்டே இருந்தான். 

அருணுக்கு  இவர்கள் வம்பு பேச்சு போர் அடிக்க தமயந்தி நிற்கும் பக்கம் திரும்பினான். தமயந்தி பூர்ணிமாவிடம் எதையோ கேட்டுக்கொண்டு  நின்றிருந்தாள். அதே சமயம் அம்பிகா வந்து அவளை அழைக்க தமயந்தி அவரிடமும் எதோ கேட்க அவரும் அவளை சமாதானம் செய்து அனுப்பினார்.

நீண்ட கூந்தலில் பின்னலிட்டு பின்னல் அசைய, புரளும் பாவாடை அசைய அணிகலன் அவளுக்கென்றே செய்து மாட்டிவிட்டது போல அவள் சாயலிலேயே இருக்க, நடந்து செல்பவளை காண கண்கள் போதவில்லை. அவன் காணும்போது அவள் கண்டால் இதயம் ஓட்டமெடுத்தது. கூட்டத்தில் பார்ப்பவரெல்லாம் அவனை கண்டுக்கொண்டு அம்மாவை பற்றியும் அவன் புதிதாக தொடங்கியுள்ள ப்ரொடக்ஷன் பற்றியெல்லாம் விசாரிப்பது பிடிக்கவில்லை. ஆனாலும் அந்த இருட்டிலும் உலகில் உள்ள மொத்த அழகையும் தன்மேல் சுமந்து செல்பவள் அவனை கண்ணுக்கே தெரியாத நூலில் கட்டி இழுத்துகொண்டு செல்கிறாள். அதிலும் அவள் கவனம் தன்மீது விழாதா என்று பார்ப்பவர்களை கண்டால் அவனுக்கு எரிந்தது. 

அருணுக்கே உள்ளுக்குள் ஒரு கட்டாயம் சிரஞ்சீவி அவன் கவனத்தை இவன் பக்கம் திருப்பினாலே போதும்! தமயந்தியை கிண்டலடித்து வயிற்றெரிச்சலை கிளப்புவான்.

கவனித்துக்கொண்டே இருந்ததில் தமயந்தியின் மேலும் கீழுமாக ஏறிய புருவம் சரியாகவே இல்லை. இவன் பொறுமை போனது. தமயந்தி பூர்ணிமா பக்கம் சென்றான் “என்ன ஆச்சு தமயந்தி” கேட்டுவிட்டான் 

தமயந்தி தயங்கி வார்த்தைகளை முழுங்கி “ஒண்ணுமில்ல” என்று சொல்ல 

பூர்ணிமா “அய்யோ அவளுக்கு ஒரு பின் வேணுமாம்டா என் உயிர வாங்குறா”

ஓ  என்றவன் சட்டென அவன் ப்ரூச் கழட்டி கொடுத்து “இது ஓகேவா” என்று கேட்க அதிர்ந்தாள் தமயந்தி. 

பூர்ணிமா “ஹப்பா குடு அத” என்று கேட்டு வாங்கியவள் “போறப்போ வாங்கிட்டு போ அருண். தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு தமயந்தியை அழைத்துச்சென்று ப்ரூச் குத்தி அழைத்து வந்தாள்.

தமயந்தி முகத்தில் நிம்மதி பரவி இருந்தது.

தமயந்தி “தங்கம் போல தெரியுதே”

அருண் “ஆமா போறப்போ வாங்கிக்குறேன்”

தமயந்தி “தேங்க்ஸ்”

அருண் “சின்ன விஷயத்துக்கா அவ்ளோ டென்ஷனா இருந்த”

தமயந்தி புகார் வாசித்தாள் “இல்ல எங்கபோனாலும் எல்லாரும் என்னையே பார்க்குற மாதிரி இருக்கு. இதுல ட்ரெஸ் வாகா இல்லன்னா எப்படி சொல்லு…” கேட்டாள் 

அருண்  சமாதானமாக “இப்ப எல்லாம் ஓகே தானே” கேட்டான் 

சிரித்த முகமாக தலை அசைத்தாள்.  

சிரஞ்சீவி எப்போது கிஃப்ட் கொடுப்பது என்று கேட்டுக்கொண்டே வர 

புவன் “போ உனக்கு எப்போ தோணுதோ அப்போ போ” என்றவன் சென்று முதல் வரிசை முதல் இருக்கையில் அமர்ந்தான்.

சிரஞ்சீவி “அய்யய நம்மளால முடியாது இப்படி உட்கார… நான் பின்னாடி போறேன்” என்றவன் கடைசி வரிசையில் அருணுக்கு பக்கம் சென்று அமர்ந்துக்கொண்டான். 

தமயந்தி அம்பிகாவுக்கும் பூமிக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அல்லாடி கொண்டிருந்தாள். அம்பிகா தமயந்திக்கு ஏதேனும் வேலை சொல்வதும் பூமி “அம்மா சொல்றத செய்யாத தம்மு என் கூட இரு” என்று அடம் பிடிப்பதும்…

இசை கச்சேரியை தொடங்குகிறது என்று  சவுண்ட் என்ஜினியர் அவர் பக்கம் ஓர் சைகை கொடுக்கவும் தமயந்தி அரங்கத்தில் அவளுக்கென பூமி கண்களுக்கு தெரியும்படி அமர ஒதுக்கப்பட்டிருந்த சீட்டில் வந்து அமர்ந்தாள்.

சவுண்ட் என்ஜினீயர் பூமிகா அவள் அலங்கார அறையிலிருந்து மேடைக்கு வர தனியாக ஓர் ம்யூசிக் பிட் வைத்திருந்தார். ‘இந்த சவுண்ட் கேட்க ஆரம்பிச்சதும் உள்ளேயிருந்து வா’ என்று சொல்லியிருந்தார். பூமிகா வரவேண்டும் ஆனால் வரவில்லை. தமயந்திக்கு பதற்றத்தில் மூச்சடைத்து. சவுண்ட் என்ஜினீயர் தமயந்தியை பார்க்க தமயந்தி நகர்ந்து திரும்பவும் மேடை ஏறும் போது பூமி அவள் அறையை  விட்டு நடு அரங்கித்திற்கு வந்து கைகூப்பி வணக்கம் சொன்னாள். 

தமயந்திக்கு பதற்றம் அடங்கும் நேரம் பூமி முதல் பாடல் பாட தொடங்கியிருந்தாள். தமயந்தியோ மேடையிலேயே ஓர் ஓரத்தில் நின்றுவிட பூமிக்கு அவள் பார்வை வட்டாரத்தில் தெரிந்த முகம் புவன் மட்டுமே. அவனும் சவுண்ட் என்ஜினீயரும் நன்றாக பாடுகிறாய் என்பது போல முகம் வைத்திருக்க எதையும் யோசிக்காமல் இசைக்குள் மூழ்கினாள். 

இரண்டு மணிநேரம் போனது தெரியவில்லை. பூமி அமிர்தவர்ஷினி பாடி முடித்ததும் தூறலும் விழ புகழ் மாலை தான் அவளுக்கு. அரங்கத்தில் அம்பிகா அழைத்தவர்கள் பாதி என்றால், பூமிகா அழைத்திருந்தவர்கள் ஏராளம்.  அவளுடன் சி.ஏ படிக்கும் நண்பர்கள், அவள் பாட்டு க்ளாஸ் சென்ற இடத்தில் பிடித்த நண்பர்கள் என்று நிறைய வந்திருக்க, தமயந்திதான் அவர்களை உபசரித்தாள். 

நிகழ்ச்சி முடிந்ததும் பெரியவர் ஒருவர் “நல்லா பாடினேம்மா… பாட்டு செலக்ஷன் எல்லாம் அசத்திட்ட. புதுமையா இருந்தது, நேரம் போனதே தெரியல. அடுத்த மாசம் என் பேத்தி கல்யாணத்துல வந்து பாடுறீயா” கேட்டார் 

பூமிகா “ம்ம் பாடுறேன். ஒரு லட்ச ரூபா குடுங்க பாடுறேன்”

அவரோ “அதுக்கென்ன தாராளமா தரேன். இந்த பாட்டெல்லாமே போதும். இதே பாடு தரேன். பாரு எவ்வளவு  சின்ன பசங்க வந்திருக்காங்க. யாரும் எந்திருச்சு கூட போகல தெரியுமா அதுதான் வேணும்” புகழ்ந்து தள்ளினார் 

பூமிகா “அம்மா கிட்ட கேட்டு ஏற்பாடு பண்ணுங்க. நான் வந்து பாடணும்ன்னா பாடுறேன்” என்று சொல்லிவிட்டு அவள் நண்பர்களை சந்திக்கப் போனாள். 

எல்லோரும் ட்ரெஸ் நல்லா இருக்கு, தலைல இருக்கிற பூ நல்லா இருக்கு, பாட்டு எல்லாமே சூப்பர்  என்று புகழ பூமிகா மகிழ்ச்சியில் திளைத்தாள்.

உணவருந்திவிட்டு வந்த பூர்ணிமாவும்  மூவர் கூட்டணியும்  கிளம்புவதாக சொல்ல பூமிகா அவர்களை அதிர்ச்சியாக பார்த்தாள். 

பூர்ணிமா “நைட் பத்துமணிக்குள்ள வீட்டுக்குள்ள இருக்கணும். சோ நல்ல இருந்தது ப்ரோக்ராம். நாம அடுத்து ஷாப்பிங் பிளான் பண்ணலாம் இப்போ நாங்க கிளம்புறோம்” என்றாள் 

அருண் ‘இப்ப இவனுங்க கிஃப்ட்ட தருவாங்களா மாட்டாங்களா’ என்று பார்த்தவன் புவனை கொடு என்று கண்ணசைக்க அவனோ ‘அது எங்கிட்ட இல்ல’ என்று செய்கை செய்ய சிரஞ்சீவி “அப்றம் பூமி ஸ்டேஜ்ல நின்னு எங்களல்லாம்  பாக்குறப்போ  சிரிப்பு வரலையா”

பூமி “அதனால தான் நான் உன்ன பார்க்கவே இல்ல” என்றாள் 

சிரஞ்சீவி “அப்ப யார பார்த்த” என்று கேட்டான் 

பூமி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழிக்க 

அருண் சிரஞ்சீவி தலையில் அடிக்க 

சிரஞ்சீவி “இந்தா  நீ சிரிக்காம சீன் கிரியேட் பண்ணாம கச்சேரி நடத்துனதுக்கு பரிசு”

புவன் கோபத்தில் திரும்ப அங்கிருந்த எல்லோருமே ‘டேய் உன்ன’அவனை மொத்து மொத்து முதுகில் மொத்தி தீர்த்தனர்.

பூர்ணிமா வீடு திரும்புகையில் புவன் “உன்ன கொல்ல போறேன்டா. பாவி படுபாவி.. நான் எப்படியெல்லாம் யோசிச்சேன் தெரியுமா ஆனா இப்படி பண்ணிட்டியே”

சிரஞ்சீவி “ஹ்ஹ போடா அதுக்குன்னு போய் நான் நல்ல தூங்குனேன், தேங்க்ஸ் சொல்லியா குடுக்க முடியும்”

புவன் “டேய்ய்ய்….” என்று எரிச்சல் ஆக

பூர்ணிமாவும் அருணும் “கொஞ்ச நேரம் வாய மூடுறா” ஒரு சேர கத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!