Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 14

சாரல் – 14

காலையில் சாப்பிட்டுவிட்டு கடைக்கு வெளியே கிளம்பும் வேளையில், இந்தா கோமதி என்று குரல் கொடுத்தார், வீரபாண்டியன்.

கோமதி சமையலறையிலிருந்து எட்டி பார்க்க,

“நான் கூப்புடுறேன் அங்கேயிருந்து பாம்பு தலையை நீட்டி பாக்குற மாறி பாக்குற, ஏன் இங்க வந்து என்னனு கேக்க முடியாத அளவுக்கு அங்க என்னத்த வெட்டி கிழிக்குற..”



Advertisement

“இருங்க வரேன்…” என்று பதிலளித்து,

“காவியா.. அந்த குட்டி சாப்பாடு டப்பாவை எடு சீக்கரம்…”

“எதுக்கத்தை.. இந்தாங்க இந்தா பாக்ஸ் போதுமா..”

Advertisement

“போதும் போதும்.. அதுவா தங்கச்சி வீட்டிலிருந்து வந்த அன்னையிலிருந்து உங்க மாமா உள்ள உருவான புயல், இப்போ தான் என்கிட்ட வீச போது.. அதுக்காக தான் இந்த தற்காப்பு நடவடிக்கை.. வந்து மிச்சத்தை சொல்லுறேன்.. இப்போ உன் வேலை என்னனா இங்க என்ன நடக்குது, உங்க மாமா என்னலாம் பேசுறாருனு கேட்டு வச்சிக்கோ.. அதுலாம் நான் வந்ததும் சொல்லுற.. சரி சரி.. அடுத்த சத்தம் வர்றதுக்குள்ள நான் இதை எடுத்துட்டு போறேன்..”

Advertisement

“அத்தை.. சான்ஸ்யே இல்ல நீங்க.. உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான்..”

“இதுலாம் நான் வந்த பிறகு சொல்லு..”

வீரபாண்டியன் அருகே வந்து நிற்க, “நான் எவ்வளவு ..” என்று ஆரம்பிக்க, அவரை பேச விடாமல், கோமதி, ‘இந்தாங்க’ என்று அவர் கையில் இருந்த டப்பாவை நீட்ட,

Advertisement

“என்ன இது..”

“உங்களுக்கு இன்னைக்கு நிக்க கூட நேரமில்லை.. நீயும் உன் வேலையை முடிச்சிட்டு நெல்லு பிடிக்குற இடத்துக்கு வா பெரியவனேன்னு பேசிட்டு இருந்திங்களா.. அதான் இதை எடுத்து வந்தேன்..” என்று இழுக்க,

“நான் பேசுனத்துக்கு, இந்த டப்பாவை நீட்டுற.. என்னதுக்கு இது?”

“அதாங்க.. நீங்க இன்னைக்கு வெறும் பொங்கல் மட்டும் சாப்பிட்டுட்டு எழுந்திட்டீங்க.. நான் வடை எடுத்து வரதுக்குள்ள.. அதான் உங்களுக்கு பிடிக்குமேனு ‘சாம்பார்ல வடையை ஊரப் போட்டு இதுல வச்சிருக்கேன். நீங்க வேலைக்கு இடையில ஒரு பதினோரு மணிக்கா சாப்புடுவீங்கனு..”

“ஹ்ம்ம்..” என்று பெருமூச்சினை வெளியேற்றி அதை வாங்கி கொண்டார். உன்மவனுக்கு இந்தப் பொண்ணையாது பிடிச்சிருக்கா… இல்ல ஏதும் நொட்டணம் சொன்னானா.. அந்தப் பொண்ணு வீட்ல சரின்னு சொல்லிட்டாங்களாம்.. மாப்பிள்ளை பேசிட்டாரு என்கிட்டே.. உன்மவன்கிட்ட என்னனு கேட்டு வை.. ஊருக்கு போகும் போது அவன்கிட்ட கேட்டா.. எதோ யோசிச்சி சொல்றேன்னு சொல்லிட்டு போறான்.. அவனுக்கு இன்னும் யாரு தான் பொண்னு பாக்குறது.. நான் பாத்ததுக்கும் ஒத்துக்களை.. சரி மாப்பிள்ளை பார்த்ததுக்கு இப்படி சொன்னான்னு வை.. அவனை இனிமேலும் இப்படியே இருந்துக்க சொல்லு.. அவரு நம்ம வீடு முதல் மாப்பிள்ளை, அந்த மரியாதையை அவருக்கு குடுக்கணும், அதை மனசுல வச்சிக்கிட்டு முடிவெடுக்க சொல்லு.. என்று நீளமாக பேச,

“அதான் அப்பாக்கு பிடிச்சிருந்தா எனக்கும் சரின்னு சொன்னானே அன்னைக்கு..”

“அப்பறம் என்கிட்டே எதுக்கு அப்படி சொன்னான் ஊருக்கு போகும் போது.. உம்மவனை எல்லாம் நம்ப முடியாது.. புரட்டாசி முடிஞ்சி தான் பொண்ணு பாக்க போறப்போல இருக்கும். இன்னும் நாளிருக்கு, நீ என்னனு கேட்டு வை…” என்று சென்று விட்டார்.

“அப்பாடி.. இன்னைக்கு தான் இத்தனை வருசத்துல உறுப்பிடியா பேசிருக்காரு மனுஷன்.. எல்லாம் சாம்பார் வடையின் மகிமை” என்று அவருக்கு அவரே பேசிக் கொண்டு உள்ளறைக்கு சென்றார்.

இவர் வருவதை பார்த்துக் காவியா, “என்னத்தை புயல் சீற்றம் இல்லப்போல.. வலுவிழந்திடுச்சா?..”

 “அம்மாடி காவியா, நான் இதை மறந்துட்டேன் பாரேன்.. அவரு தங்கச்சி என்னத்த பேசுனானு.. ஒன்னும் கண்டுபிடிக்க முடியலையே..”

“என்னத்தை நீங்க இப்படி சொல்றிங்க.. யாரு வாயை வேணும்னாலும் அடைக்கலாம், உங்க மாமாவோட தங்கச்சி வாயை அடைக்க உலக உருண்டையை எடுத்து வந்தாலும் பத்தாது..”

“ஹா ஹா.. அத்தை.. கோல் அடிக்குறிங்க நீங்க..”

“அடப்போடி இவ ஒருத்தி.. இவரு என்னனு ராணி மங்கப்பாகிட்ட சொல்லி வச்சிருக்காருனு தெரியலே..”

“அத்தை.. ஹா ஹா.. அத்தை.. என்னால முடியல போங்க.. ஹா ஹா..”

“ம்க்கும்.. அவ ஒரு வெடிகுண்டு.. எப்ப வெடிப்பானே தெரியாது..உங்க மாமா என்னத்த சொல்லி வெடிக்காம வச்சிருக்காருனு தெரியலை..”

“அத்தை.. ஹா ஹா.. போதும் கொஞ்ச நேரம் விடுங்க.. நான் சிரிச்சி முடிச்சிக்குறேன்..”

ராஜா, ” என்ன சிரிச்சி முடிச்சிக்குற…” என்று கேட்டுக்கொண்டே உணவுண்ண வர,

“எப்போடா ராஜா வந்த.. நாங்க பாக்கவே இல்லையே..”

“நான் வர்றதுக்கு கூட தெரியாம வீட்டுல நீங்க ரெண்டு பெரும் அவ்வளோ மும்மரமா கதை பேசிட்டு இருக்கீங்க.. வீட்டுக்குள்ள யாரு வந்து உள்ள நுழைஞ்சாலும் உங்களுக்கு தெரியாது போல..”

“ஆமாம் பெரியவனே.. பாரேன், நீ சொல்றது சரி தான்..”

காவியா பரிமாற, ” அவன் உண்டுக்கொண்டே அது தான் நானும் சொல்லுறேன்.”

“காவியா.. இனிமே உங்க மாமா கடைக்கு போனதும், நாம இனிமே அங்க கூட்டத்திலே உக்காந்துக்கலாம்.. வேற யாரு உள்ள வந்தாலும் கூட பரவால்லை.. இவனோட சின்ன அத்தை வராலானு நாம பாத்துட்டே பேசணும்.. இந்த பொண்ணு பாத்துருக்க விஷத்தை எப்படியும் மோப்பம் பிடிச்சிட்டு வந்தாலும் வருவா..”

“சரிங்க அத்தை..”

“என்னடி.. அவங்க சொல்றதுக்கெல்லாம் சரி சரினு சொல்லுற.. என்னமா! ஏன் இப்படி?”

“நான் உண்மையை தான் சொல்லுறென்டா பெரியவனே.. இவனே இப்போதான் அந்தப் பொண்ணை பிடிச்சிருக்கு நேத்து என்கிட்ட பேசுனான். உங்க அப்பாவும் அதிசயமா அவன்கிட்ட கேட்டு வைனு சொல்லிட்டு போயிருக்காரு.. அதுக்கு தான் சொல்லுறேன்.”

“ம்மா.. அதான் அப்பா அன்னைக்கு மாமா வீட்லயே சரினு சொல்லிட்டாங்கல்ல, அப்பறம் என்னமா?..”

“இவன் ஒருத்தன்.. அப்பான்னு சொன்னதும் வந்துட்டான்.. அவருக்கு கொடி தூக்கிகிட்டு..”

“என்னமா.. நீங்களும் இப்படி சொல்றிங்க..”

“பின்ன என்னடா.. உங்க அப்பா, அவரு தங்கச்சி வீட்டுக்கு போய்ட்டு வந்தும் இப்படி என்கிட்ட கேட்டு வைக்க சொல்றாருனா.. அது அதிசயம் தான்..”

“நீங்க சொல்றதும் சரி தான் ம்மா..”

“நீ ஒரு நல்ல மகன் டா..”

“எப்படி அத்தை இவரை போயிட்டு இப்படி சொல்றிங்க ..”

“அடியே.. இன்னமுட்டும் பேசுறதை கேட்டுட்டு தானே இருந்த.. என்னை நல்லா சொன்னதும் உனக்கு பொறுக்காதே..”

“ஏன்டா.. அவள்ட போற..”

“நீங்களும் அவளுக்குத்தான் பேசுறீங்க இப்போ..”

“இப்போ உன்னையும் தானேடா சொன்னேன்..”

“ஹ்ம் சரி..”

“பாத்தியா இதுக்கு தான் சொன்னேன்.. அம்மா சொன்னாலும் சரினு ஒத்துக்குற.. அப்பா சொன்னாலும் சரினு ஒத்துக்குற.. உன்னைய இப்படி வளத்துக்குறத நினச்சா.. எனக்கே கண்ணு வேற்குது டா பெரியவனே..”

“ம்மா..ஆஆ.. “

“ஹா ஹா ஹா.. உங்கள அடிச்சிக்க ஆளே இல்லத்தை..”

“சரி சரி.. போதும் சிரிச்சது.. உன்னைய அப்பறம் பாத்துக்குறேன்..”

“வெவ்வெவ்வே…” என்று அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு, “அத்தை, அதான் என் கொழுந்தனார் சரினு சொல்லிட்டாங்கல்ல.. அப்பறம் ஏன் மாமா கிட்ட சொல்லல நீங்க, இப்போ கேக்கும் போது?…”

“புரட்டாசில எப்படியும் உங்க மாமா ஒன்னும் புரட்ட மாட்டாருனு தெரியும்.. அதுக்கு தான் சொல்லல.. இன்னொன்னு,  உங்க மாமா ஏதாது பேசும் உளறிட்டாருன்னா.. அவ்வளோ தான் காரியமே கெட்டுடும்.. இவளே பொண்ணு வீட்டுல பேசி, சதி பண்ணி விட்ருவா.. இருந்தாலும் இவகிட்ட பொண்ணு பாக்க போற முதல் நாள் ராத்திரி சொன்னாகூட போதும்.. சொல்லவேணாம்னு சொன்னாலும் உங்க மாமா வேறத் தங்கச்சின்னு உருகுவாறு..”

“ஆனாலும் ம்மா.. நீங்க அத்தையை பத்தி சொன்னது உண்மை தான்.. நாம தான் பற்றுக்கோமே..”

“உங்க அப்பா பத்தி சொன்னதை விட்டுட்ட பாத்தியா..”

“அம்மா.. விடுங்க மா..”

“என்னத்தை பண்ணுனாங்க அப்படி ..”

“போதும்.. கதை பேசுனது.. காவியா நீ வா.. எனக்கு டிரஸ் ஐயன் பண்ணிக்குடு.. நான் தாசில்தார் அலுவலகம் வரைக்கும் போனும்..”

“சரி நீங்க போங்க.. அத்தை நாம இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு பேசலாம்..”

“ஏய்.. போதும் வாடி.. எப்போ பாரு மாமியார்கிட்டயே பேசுறது…” என்று அவளிடம் மெதுவாக முணுமுக்க,

“ஏன்டா.. நெல்லு பிடிக்க போல.. உங்க அப்பா வரச் சொன்னாரு..”

“இந்த வேலையை முடிச்சிட்டு தான் ம்மா போகணும்..”

“சரி டா.. காவியா நீயும் போ.. அப்பறம் பேசிக்கலாம்..”

– – – – –

காலை இடைவேளை நேரத்தில், ஹாஸ்டெலில் தங்குவதற்கான படிவத்தை எடுத்துக் கொண்டு இன்று ப்ரின்சிபாலிடமும் சைன் வாங்கச் செல்வதற்காக மெயின் ப்ளாக்கை நோக்கி நடக்க, அங்கே தனது டிபார்ட்மென்ட் மாணவி, இ.சி.இ துறையில் நிற்பதை பார்த்து விட்டு.. யோசனையுடன் சென்றாள்.

அவந்தி மேம்.. ‘என்ன யோசனை’ என்று பிரின்சிபால் ரூமிற்க்கு வெளியே நின்ற ஆசிரியர் ப்ரீத்தி கேட்க,

“ஹான்.. ஒன்னும் இல்ல மேம்.. அடுத்த கிளாஸ் பத்தி தான்.. வேற எதுவும் இல்ல..” என்று கூற,

“ஓஹ்.. ஒகே மேம்..”

“எங்க உங்க டிபார்ட்மென்ட் தர்ஷினி மேம்மை  நீங்க கூட்டிட்டு வரலையா மேம்..”

“அவங்கள எதுக்கு மேம் கூட்டிட்டு வரணும்..”

“ஓஹ்.. உங்களுக்கு தெரியாத.. அவங்களும் என்கூட ஸ்டே பன்றாங்க ஹாஸ்டெல்ல..”

“இவள் பெரிதாய் அதிர்ந்து, பின்பு சமாளித்துக் கொண்டு, வைஸ் பிரின்சிபால் மேம் கிட்ட, நான் உங்கள மட்டும் தான் சொன்னேன்.. அவங்களும் ஓகேனு சொன்னாங்க.. இப்போ நீங்க தர்ஷினி மேம்மையும் சொன்னா.. எதுவாது சொல்வாங்களே மேம்” என்று இழுக்க,

“அதுலாம் அவங்க ஒன்னும் சொல்லல மேம்.. நேத்தியே நானும் அவளும் சேர்ந்து தான் வைஸ் பிரின்சிபால் கிட்ட சைன் வாங்குனோம்.. என்று ப்ரீத்தியின் பின்னாலிருந்து பேச,

“ஓஹ்.. ஒகே மேம்.. நீங்க எப்போ வந்திங்க..”

“நீங்க அவந்தி மேம் கிட்ட பேசும் போது தான்..”

அவந்தி, “சரி.. உள்ளப் போலாமா..”

ப்ரீத்தி, “போலாம் மேம்.. நீங்க ரெண்டு பெரும் முன்னாடி போங்க மேம்.. நான் ஜாயின் பணிக்குறேன்..”

“ஒகே.. வாங்க அவந்தி மேம்..” என்று முன்னே சென்றாள் தர்ஷி.

இந்த வைஸ் பிரின்சிபால் என்கிட்டே இதை சொல்லவே இல்லப் பாரு.. நான் ஒன்னு பிளான் போட்டா, இந்த மேடம் வேற எதோ பிளான் போற்றுக்கு போல.. எப்படியோ எதோ ஒன்னு நடந்தா சரி..” என்று சிந்தித்துக் கொண்டே அவர்களை பின் தொடர்ந்தாள்.

மூவரிடத்தும் சில கேள்விகளை கேட்ட முதல்வர், பின் அவர்களுக்கு கையொப்பமிட்டு அனுப்பி வைத்தார். வெளியே வந்தவுடன் இருவருக்கும் பொதுவாக  ப்ரீத்தி நன்றியுரைக்க, அவந்தி மற்றும் தர்ஷி அவளுக்கு ஒன்றாக ‘இட்ஸ் ஓகே’ என்று மொழிந்து விட்டு இருவரும் பேசியபடி முன்னே சென்றனர்.

அவந்திக்கு மதிய உணவிற்கு பிறகு தான் கிளாஸ் என்பதால், அவள் இருக்கைக்கு வந்து அமர்ந்து விட்டு, தன் தொலைப்பேசியை எடுக்க.. அதில் மெசேஜ் வந்ததிற்கான அடையாளம் இருக்க, எடுத்து பார்த்தாள்.

“ஐயோ இவ்வளோ மெசேஜ் ஆஹ்” என்று திறந்து பார்க்க, அது எல்லாம் கண்ணடிக்கும் ஸ்மைலியாக இருக்க.. இவரை நான் என்ன பண்றது என்று நொந்துக் கொண்டு, நந்தாவிற்கு டைப் செய்ய போக,

“ஹலோ டார்லிங், எங்க ஆளையே காணும்?.. பிரேக் டைம்ல கான்டீன் போய்ட்டியோ?..”

“இவள் அதிர்ச்சியான ஸ்மைலியை அனுப்ப..”

“நான் நேர்ல இருக்கும் போது மட்டும் இப்படி பாரு.. இப்போ உன்ன என்னால பாக்க முடியாது.. அதனால நல்லப் பொண்ணா உன்னவருக்கு பதில்  அனுப்பனும்..”

இவள் அவனின் ரிப்ளையை பார்த்து.. “எவ்வளோ பேசுறீங்க நீங்க..”

“இதுக்கேவா.. இன்னும் நாம பேசவே இல்லையே ஹனி ..”

“ஹ்ம்.. நீங்க நேத்து பேசவே விடலையே என்னை..”

“நான் நேத்து எதுவும் பண்ணலையே உன்ன ஸ்வீட் ஹார்ட் ..”

“என்ன!” என்று திரும்ப அதிர்ச்சியாக,

“பாரு.. நீ திரும்ப இதையே தான் பண்ற.. அப்பறம் நான் கிளம்பி உன் காலேஜ்க்கு வர போறேன்..”

“ஹான் ஹான்.. டாக்டர் சார்க்கு  இப்போ பேஷண்ட்ஸ் யாரும் வர்லயோ?”

“நைட்ல இருந்து இப்போ தான் கொஞ்சம் பிரீ டியர்..”

“ஓஹ் சரி..”

“அப்பறம் சொல்லுங்க பியார்.. இது என்ன சரினு போட்டு முடிக்குறிங்க..”

“அச்சோ ஏன் இப்படி.. ஹனி, ஹார்ட், டியர்னு?”

“அப்பறம் வேற எப்படி சொல்லணும் அவந்திகா நந்தகுமார்..”

இவள் டைப் பண்ணி அழிக்க,

“என்ன டைப் பண்ணி பண்ணி அழிக்குறியா?..”

“ஆமா..”

“என் மாமனார் வேற பேரு எதுவது வச்சிருக்கலாம் உனக்கு..”

“ஏன்?.. என் பேருக்கு என்ன? என்று கோவ ஸ்மைலியை போட,

“ஏன் இப்போ கோவம்.. பாரு உன் பேரை எல்லாரும் அவந்தினு கூப்பிடுறாங்க.. உன்னவர் உன்னை ஸ்பெஷல் ஆஹ் கூப்பிடனும்ல அதுக்கு தான் இப்படி மாத்தி மாத்தி கூப்பிட்டு, உனக்கு எது செட் ஆகுதுன்னு பாக்குறேன்..”

“அவ்வா..”

“எப்படியும் நான் இன்னைக்கு கண்டுபிடிச்சி நைட் உங்கிட்ட சொல்லுறேன்.. இப்போ டிஸ்டர்பன்ஸ்லாம் வருது.. நீ என்னையே யோசிச்சி உன் கிளாஸ் போறதுக்கு மறந்துராத ஸ்வீட்டி..”

“உங்கள.. யாரு டிஸ்டர்பன்ஸ்..”

“அதுவா.. நேத்து என்கூட ஒருத்தன் வந்தான்ல அவன் தான்..”

“அச்சோ.. அந்த அண்ணாவையா சொல்லுறீங்க.. நான் அவங்ககிட்ட பேசக்கூட இல்ல..”

“நாம முதல்ல பேசிக்கலாம்.. அவன்லாம் அவ்வளோ ஒர்த் இல்ல, இப்பவே பேசணும்னு ..”

“அச்சோ..”

“சரி.. என்னையே யோசிக்காம கிளாஸ் எடு.. நைட் இன்னும் நிறைய பேசலாம் ஏன்ஜெல்..”

“ஹ்ம்ம் பாக்கலாம்..” என்று பதில் அனுப்பிவிட்டு தொலைபேசியை வைக்க, இப்படி நான் போன் யூஸ் பண்றதை மட்டும் தர்ஷி பார்த்தா அவ்வளோ தான்.. எப்படியும் அவகிட்ட மாட்ட போறேன் என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.

“அச்சோ” என்று சொல்லிவிட்டு, திரும்ப போனை எடுத்து “எப்படி எனக்கு பிரேக் டைம்னு தெரியும்..” என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு வைத்தாள். “இவரு பாரு என்னைய நல்லா டைவர்ட் பண்ணுறாரு..” என்று அவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அடுத்த கிளாஸ்ஸிற்கு செல்ல குறிப்பெடுத்தாள்.

இங்கு அரவியோ, “டேய்.. என்னடா பண்ற.. சாப்பிட போலாமா பசிக்குது ரொம்ப, மயங்கிடுவேன் இல்லனா.. வந்து ரௌண்ட்ஸ் போலாம்..”

“சரி சரி.. வா போலாம்..” என்று கூறிக்கொண்டே எழ, அப்போது அவளின் மெசேஜ் வர, சிரித்துக் கொண்டே அதை திறக்க, அவளின் மெசேஜ்- ஐ படித்து விட்டு அவளுக்கு “இப்போ கிளாஸ் போ.. நைட் சொல்லுறேன்..” என்று பதில் அனுப்பிட்டு நிமிர,

அவனை கொலைவெறிக் கொண்டு முறைத்து பார்த்துவிட்டு, இங்க ஒருத்தன் மயங்குற நிலையில இருக்கேன்.. நீ அங்க மெசேஜ் அனுப்பிட்டு இருக்க.. இனிமே உன்னோட பேசவே மாட்டேன் டா.. என்றுவிட்டு நடக்க,

“என்னைவிட்டா இன்னைக்கு உனக்கு கம்பெனி யாரும் இல்ல.. நவீனுக்கு நைட் ஷிபிட்.. ரொம்ப பண்ணாம வந்தா, உன் தங்கச்சி உன்ன பத்தி சொன்னதை சொல்லுவேன்.. இல்லனா போ..”

இவன் நந்தாவின்  தோலில் கையை போட்டுக் கொண்டு, “தங்கச்சி என்னடா சொன்னா?.. நான் பேசவே இல்லடா..”

அவளும் அதே தான் சொன்னா.. நான் தான், “நீ அவன்கிட்ட பேசுற அளவுக்கு அவன் ஒர்த் இல்லனு சொல்லிட்டேன்..”

“டேய்.. உன்னைய.. என்று அவன் கழுத்தை இருக்க,

“ஹா ஹா.. இப்ப மயக்கம் தெளிஞ்சிட்டு பாத்தியா.. வா போவோம்..”

– – – –

இங்கு கலையரசியோ தொலைபேசியில் வந்த தகவலையடுத்து தன் அண்ணனிற்கு தொடர்புக்கு கொண்டார்..

சாரல் வருடும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!