செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -4
அத்தியாயம் – 4
“அம்மா அப்பா நாளைக்கு நான் திருவண்ணாமலைக்கு போக போறேன், வர நாள் ஆகும் கடைகளை பாத்துக்கோங்க ” என்றான் கதிரவன்.
“எதுக்குடா அந்த சித்தர பாக்கவா ” என்றார் வேலுசாமி.
“தம்பி இன்னும் எத்தனை வருசத்துக்குபா அவரு சொல்லுற பேச கேட்டுட்டு இருக்க போற போதும்பா விட்டுரு இதோட, இனிமேல் அவரு பேச்ச கேக்காத ” என்றார் லட்சுமி.
Advertisement
“ஏன் எதுக்கு நான் அவரு பேச்சை கேக்க கூடாதுனு சொல்லுறீங்க “
“பின்ன என்னடா ரஞ்சனி விட்டை விட்டு போய் மூணு மாசம் வரைக்கும் நீ வீட்டுக்கு கூட வரமா ராத்திரி பகலுன்னு பாக்காம அவ போட்டோ கைல வச்சிட்டு, ஒவ்வொருதரு கிட்டைய காட்டி இந்த பொண்ண பாத்துருக்கீங்களா பாத்துருக்கீங்களா கேட்டு,தேடிடு இருந்த “
“திடிர்னு ஒரு நாள் வீட்டுக்கு வந்தா இனிமேல் அவளை தேட போறது இல்லனு சொன்ன, நான் ஏன்னு கேட்டதுக்கு சித்தர் சொன்னாங்கனு சொன்ன “
Advertisement
“அப்படி என்னதான்டா சொன்னாங்க அந்த சித்தர், அஞ்சு வருசமா நாங்களும் பாத்துட்டு தான் இருக்கோம் “.
Advertisement
“நீ பாட்டுக்கு திருவண்ணாமலை போறேன்னு சொல்லிடு போற ஒரு மாசம் கழிச்சு வர, அங்க என்ன பண்ணுற ஏது பண்ணுறானு எங்களுக்கு எதும் சொல்ல மாட்டேன்கிற நாங்களா கேட்டாலும் சொல்ல மாட்டேன்கிற “
“அந்த சித்தர் உன்கிட்ட என்ன சொன்னாரு, நீ மாச கணக்கா அங்க போய் என்ன பண்ணுற எனக்கு தெரிஞ்சே ஆகணும் சொல்லு” என்றார் வேலுசாமி.
கதிரவன் திருவண்ணாமலையில் சித்தரை சந்தித்ததைப் பற்றி கூற ஆரம்பித்தான்.
Advertisement
“ரஞ்சனி நான் தேடிடு ஊரு ஊரா போய்டு இருந்தேன். ஒரு நாள் திருவண்ணாமலைல தேடிடு இருந்தேன் கொஞ்சம் களைப்பா இருந்துச்சின்னு ஒரு மரத்துக்கு அடில போய் உக்காந்து இருந்தேன் “.
“திடிர்னு யாரோ என் பக்கத்துல உக்காந்தா மாதிரி இருந்திச்சி, திரும்பி பார்த்த ஒரு சாமியார் உக்காந்து இருந்தார் “
அவரு என்கிட்ட “என்ன தம்பி பார்க்க ரொம்ப கலைச்சி போய் இருக்குற மாதிரி இருக்கு. இந்தா இந்த தண்ணிய குடின்னு ஒரு மண் குவளைய குடுத்தாரு நான் வாங்காம இருந்தேன்”
என்ன பார்த்து சிரிச்சிட்டு “பயப்படாம குடி தம்பி இது வெறும் தண்ணிர் தாணு சொன்னாரு “
நான் வாங்கி குடிச்சேன்,அப்பறம் என்ன பார்த்து “என்ன கதிரவன் சக்கரவர்த்தி உன் தேடல் இன்னும் முடியலையா” என்று கேட்டார் சித்தர்.
கதிரவன் மிகுந்த ஆச்சார்யாதுடன் சாமி உங்களுக்கு எப்படி என் பேரு தெரியும் என்றான்.
“உன்ன பத்தி எனக்கு எல்லாமே தெரியும்பா, உன்னோட வாழ்க்கை தொலைச்சிட்டு நீ தேடுறது கூட தெரியும்பா எனக்கு “என்றார் சித்தர்.
கதிரவன் கண்கள் கலங்க “சாமி உங்களுக்கு என்ன பத்தி எல்லாம் தெரியும்னு சொன்னிக்கல, என்னோட மனைவி எங்க இருக்கானு சொல்ல முடியுமா ” என்றான் கைக்கூப்பி வணங்கிக் கொண்டு.
“உன் மனைவி எங்க இருக்கானு சொல்லுற அதிகாரத்தை சிவபெருமான் எனக்கு தரலபா, வேற ஏதாவது கேக்கணுனா கேளுப்பா ” என்றார் சித்தர்.
“என் சாமி எங்க வாழ்க்கை இப்படி ஆகிருச்சு, ஏன் அவ என்ன விட்டு போன, என்கிட்ட திரும்பி வருவாளா ” என்று கேட்டான் கதிரவன் அழுதுக் கொண்டே.
“உங்க வாழ்க்கை இப்படி ஆனது உங்க தலையெழுத்து படி தான்பா, ஒரு குழந்தை பிறக்கும் போதே அதோட தலைல அந்த குழந்தையோட வாழ்க்கைல வர போற இன்பம், துன்பம் எல்லாத்தை பத்தியும் எழுதிஇருக்கும். அதன்படி தான் அவங்களுக்கு எல்லா நிகழ்வுகளும் நடக்கும் “.
“உன் மனைவி உன்ன விட்டு போனதுக்கு நீங்க பண்ணத் தப்பு தான் காரணம், நீங்க கல்யாணம் பண்ண நேரம் உன் மனைவிக்கு ஏழரை சனி ஆரம்பிச்சி நடந்துட்டு இருந்துச்சி,இந்த நேரத்துல யாரும் திருமணம் செய்ய மாட்டாங்க, அப்படி பண்ண சனி பாகவனோட கோபத்துக்கு ஆளாக நேரிடும் “
“பொதுவா ஏழரை சனி ஆரம்பிக்கும் போது யாரும் கல்யாணம், தொழில், சொத்துக்கள் வாங்குறது இந்த மாதிரி நல்ல விஷயங்கள் பண்ண மாட்டாங்க, அப்படி பண்ணா அது மூலமா தான் சனி பகவான் நமக்கு பிரச்சனை கொடுப்பாரு”.
“உன் மனைவிக்கு ஏழரை சனி நடக்கும் போதும் நீங்க கல்யாணம் பன்னிருக்கீங்க, அதுனால உங்க கல்யாண வாழ்க்கைல தான் பிரச்சனை கொடுப்பாரு ” என்றார் சித்தர்.
” நீயும் அவளும் கல்யாணம் பண்ண பிறகும் கூட ஒரே வீட்டுல ஒண்ணா இருந்திருக்க மாட்டீங்க, தனி தனியா தான் இருந்திருப்பிங்க, நாள் ஆக ஆக நீயும் அவளும் பார்த்துக்க கூட முடியாத அளவுக்கு பிரிஞ்சி இருந்திருப்பிங்க நான் சொல்லுறது சரியா “என்றார் சித்தர்.
“ஆமாம் சாமி “என்றான் கதிரவன் கவலையுடன்.
“நீயும் அவளும் ஒரே இடத்துல சேர்ந்து வாழனுன்னு நினைக்குறப் அப்போலாம் அவளுக்கு விபத்து ஏற்பட்டு உயிர் பிழைப்பளா மாட்டாளாங்கிற அளவுக்கு போய் மீண்டு வந்திருப்பா , அந்த பொண்ண பெத்தவங்க செஞ்ச புண்ணியம் அந்த பொண்ண காப்பாத்திருக்கு” .
” நீங்க தாம்பத்திய வாழ்க்கை வாழ்த்திருந்தாலோ, இல்ல வாழனுன்னு நெனச்சி இருந்தாலோ உடனே அந்த பொண்ணுக்கு விபத்து ஏற்பட்டு இருக்கும் அது தீ காயமாக இல்லனா கை கால் முறிவு இப்படி ஏதாவது ஆகிருக்கும் “என்றார் சித்தர்.
“நீங்க ரெண்டு பெரும் சேர்த்து ஒரே வீட்டுல ஒண்ணா கொஞ்ச நாள் வாழ்ந்ததுட்டு இருந்திங்கல அப்போ கூட அந்த பொண்ணு மனசுக்குள்ள ரொம்ப கஷ்டமும் வேதனையும் பட்டுட்டு தான் இருந்திருப்பா ” என்றார் சித்தர்.
“சாமி நீங்க சொல்லுறது எல்லாமே சரி தான் சாமி, என் மனைவி எனக்கு வேணும் சாமி, நானும் அவளும் நூறு வருஷம் சந்தோசமா வாழனும் அதுக்கு நான் என்ன சாமி பண்ணனும் ” என்றான் கதிரவன்.
“நான் என்ன சொன்னாலும் செய்வியா “என்றார் சித்தர்.
“கண்டிப்பா நீங்க சொல்லுறத செய்றேன் சாமி “
“உன் மனைவியா தேடுறத நிறுத்திடு போ உன் ஊருக்கு” என்றார் சித்தர்.
“சாமி என்ன சாமி இப்படி சொல்லுறீங்க அவளை தேடமா எப்படி சாமி இருக்க முடியும், அவ என்ன விட்டு போய் மூணு மாசம் ஆச்சி, இந்த மூணு மாசத்துல அவ எங்க எப்படி கஷ்ட படுறாளோ தெரியலையே “என்று கூறி கதறி அழுதான் கதிரவன்.
” இது அவளோட தலையெழுத்து கதிரவா,இதை மத்த உன்னாலையோ என்னாலையோ இல்ல அந்த கடவுளால கூட மத்த முடியாது. எல்லாம் விதி படி தான் நடக்கும் “
“நீ அவளை தேட தேட அவளுக்கு கஷ்டங்கள் தான் அதிகரிக்கும் கதிரவா, அவளை தேடுறத நிறுத்து அவ கஷ்டங்கள் குறையும் “.
” நீங்க சொல்லுற மாதிரி நான் அவளை தேடமா இருந்தா, அவ பாதுகாப்பா, சந்தோசமா, மனநிம்மதியோட எந்த கஷ்டமும் படமா இருப்பாளா சாமி “
“நீ தேடாமல் இருந்தால் அவளோட கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமா குறையும் பாதுகாப்பானா இடத்துல, நல்ல மனுஷங்க துணையோட சந்தோசமா இருப்பா, ஆனால் மனநிம்மதியோட இருக்கமாட்டா, அந்த சனிஸ்வரர் இருக்க விட மாட்டார்”.
“நீ அவளை தேடாத, அவளோட கஷ்ட காலம் முடியும் போது அவளா உன்ன தேடி வருவா,உன்ன விட்டு போகும் போது நீ பட்ட கஷ்டத்தை விட உன் மனைவி ரெட்டிப்பு சந்தோசத்தை கொண்டு வருவா “
“இது போதும் சாமி அவ எங்க இருந்தாலும் நல்ல இருக்கட்டும்.”
“உன் மனைவி கஷ்டம் குறைய நான் சொல்லுற பரிகாரத்தை நீ செய்யுறையா கதிரவா “
“அவளுக்குக்காக என்ன வேணுனாலும் செய்யுறேன் சாமி “
“சனிஸ்வரனோட கோவத்தை குறைக்கணும் நீ, அதுக்கு சனி பகவான் பிறந்த வைகாசி மாசம் முழுசும் இங்க தாங்கி தினமும் கிரிவலம் வரணும், இந்த ஒரு மாசமும் நீ ஒரு வேளை மட்டும் தான் சாப்பிடணும், சனிஸ்வரர் மந்திரத்தை 108 முறை சொல்லணும் உன்னால முடியுமா” என்றார் சித்தர்
“செய்யுறேன் சாமி என் ரஞ்சனிகாக “
“உன் மனைவி உன்கிட்ட திரும்பி வர வரைக்கும் வைகாசி மாசம் முழுதும் நான் சொன்னதை நீ செய்யணும் “
“கண்டிப்பா செய்யுறேன் சாமி என்றான் “
“இப்போ நீ உன் ஊருக்கு போ, சனி கிழமைகள்ல உன்னால முடிஞ்சா அளவுக்கு ஆதரவற்றோருக்கும் , ஏழை மக்களுக்கும் அன்னதானம் பண்ணு, நீ சேர்த்து வைக்குற புண்ணியம் உன் வம்சத்தை காப்பாத்தும்”.
“சித்திரை மாசம் கடைசி நாள் நீ இங்க இருக்குற என்னோட ஆசிரமத்துக்கு வந்துரு சரியா”.
“தைரியமா போய்டு வா நன்மையே நடக்கும் ” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
“என் வாழ்க்கைல நடந்த எல்லாத்தையுமே அந்த சித்தர் அப்படியே சொல்லிட்டாரு இதுக்கு மேலையும் அவரை எப்படி நம்பாம இருக்க முடியும் சொல்லுங்க அப்பா” என்றான் கதிரவன்.
வேலுசாமியும், லக்ஷ்மியும் கதிரவன் கூறியதை அதிசயத்துடனும், ஆச்சார்யத்துடணும் கேட்டு கொண்டு இருந்தனர்.
“சாமி சொன்ன மாதிரியே நாலு வருஷம் பரிகாரம் பண்ணிட்டேன், நாளைக்கு வைகாசி பொறக்கப் போது அதன் நான் திருவண்ணாமலைக்கு கிளம்பிட்டேன்” என்றான் கதிரவன்.
“தம்பி நீ சொல்லுறதலாம் நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல ” என்றார் லட்சுமி.
“கதிரவா சித்தர்சாமி சொன்னாருன்னு ரஞ்சனிய தேடமா இருந்த, இப்போ ஒரு வருசமா தேடுரையே இப்பவும் சித்தர் சொல்லித்தான் தேடுறைய “என்றார் வேலுசாமி.
“ரஞ்சனி ஓட அம்மாவா கோவில்ல பார்த்து பேசுனா அன்னைக்கு, அவங்க என்கிட்ட கேட்ட கேள்வி எதுக்குமே என்னால பதில் சொல்ல முடியலபா, ரொம்ப மனசு கஷ்டமா ரொம்ப குற்றவுணர்ச்சியா இருந்துச்சிபா “
“உடனே கிளம்பி திருவண்ணாமலைக்கு போய் சித்தர் சாமிய பார்த்து ரஞ்சனி அம்மா பேசுனதையும் என் மனக்கஷ்டத்தையும் சொன்னேன் ” என்றான் கதிரவன்.
“உன் மனைவிய தேடுற நேரம் வந்துருச்சி கதிரவா, ஆன நீ நேரடியா போய் தேடாத, உனக்கு வழிகாட்டி உதவி செய்ய ஹரி ஹர சுதன் ஐயப்பனே வருவாரு அவருகிட்ட உன் மனைவிய கண்டு பிடிக்குற பொறுப்பக் கொடுத்துட்டு நீ பொறுமையா காத்திரு”என்றார் சித்தர்சாமி.
“அப்பா சொன்ன நம்புவீங்களான்னு தெரியல சாமிய பார்த்துடு பஸ் ஏறி நாம ஊருக்கு வந்துடு இருந்தேன் அப்போ பக்கத்துல என் வயசு உள்ள ஆளு ஒருத்தரு உக்காந்தாரு எதார்த்தமா ரெண்டு பெரும் பேச ஆரம்பிச்சோம். அவரு என்கிட்ட என் ஊரு பேரு வேலையாபத்தி கேட்டாரு. நானும் கேட்டேன் அவரு என்ன சொன்னாருனு தெரியுமா அப்பா “என்றான் கதிரவன்.
“என் பேரு ஹரிஹரன் நான் டிடெக்டிவ் ஏஜென்சி வச்சிருக்கேன்னு சொன்னாருபா, எனக்கு உடம்பெல்லாம் புல்லாருச்சிருச்சிபா, அவருகிட்ட பேசி நம்பர் வாங்கி என் பிரச்சனைய சொல்லி ரஞ்சனிய தேட சொன்னேன்” என்றான் கதிரவன்.
வேலுசாமி கதிரவனிடம் நீ சொல்லுறதுலாம் உண்மையா என்றார்.
லட்சுமி தம்பி நாங்களும் உன்கூட வர்றோம்பா சித்தர் சாமிய பாக்குறதுக்கு என்றார்.
மூவரும் திருவண்ணாமலை பயண பட்டனர்.
சித்தர் மூவரையும் பார்த்து சிரித்து கொண்டே வேலுசாமியிடம் “இப்போவது என் மேல நம்பிக்கை வந்துருச்சா “என்றார்.
” பின் அவரிடம் பையன் வாழ்க்கைய பத்தி இனிமேல் கவலை பட வேண்டாம் “
“உங்க உடம்ப பார்த்துக்கோங்க, ஒரு மூணு மாசத்துக்கு நல்லா ஓய்வு எடுத்துக்கோங்க அப்பறம் உங்களுக்கு ஓய்வு எடுக்க நேரமே இருக்காது” என்றார் சிரித்துக் கொண்டே.
“சாமி மருமகள் எப்போ சாமி எங்க கிட்ட வருவா “என்றார் லட்சுமி.
“கஷ்டகாலம் முடிய போகுது சனி உங்க மருமகள விட்டு போக போறாரு போகும் போது சும்மா போக மாட்டாரு கஷ்டப்படுத்துனதுக்கு எல்லாம் சேர்த்து சந்தோசத்தை தந்துடுதான் போவாரு “.
“உங்க வீட்டுக்கு மகாலட்சுமி வர்ற நேரம் நெருங்கி வந்துருச்சி “என்றார் சித்தர்
மூவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
மனிதப் பிறவியாக பிறந்துவிடளே சில பல கஷ்டங்களையும், சோதனை களையும் கடந்து வந்துதான் ஆக வேண்டும். கடவுளே மனிதபிறவி எடுத்தாலும் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும்.
அந்த ஏழுமலையானே மனிதபிறவி எடுத்து ராமன் ஆக வந்தா போது அவர் அடையாதா துன்பங்களா, மஹாபாரதத்தில் பஞ்சாலி அடையாதா துன்பங்களா.
கஷ்டம், துன்பம் இல்லாத மனிதர்களே இல்லை, வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சனைகள். இதுவும் கடந்து போகும் என்பது போல கஷ்டங்களும் கடந்து போகும் காத்திருப்போம் அது போகும் வரை.
இங்கு கதிரவனும் காத்திருக்கிறான் அவன் கஷ்டங்கள் மறைந்து, இன்பம் வரும் நாளுக்காக. 🙏🙏🙏🙏🙏
