Priya Milirvannan’s யாழினியன் – இசையின் தொடக்கம் (Prologue)
Post Views:903
வாசகர்களுக்கு பிரியமான வணக்கம்……
காதல்… மிகச் சிறிய வார்த்தை. ஆனால் வாழ்வின் மிகப்பெரிய வெற்றி. அனைவரும் காதல் எனும் பிரபஞ்ச ஈர்ப்புவிசையிலே வாழ்கின்றனர். காதலை ஆசை எனும் மாயவாழ்க்கைக்காகவும், சிலர் தன்னலத்திற்காகவும் காணும் காலத்தில், தான் கொண்ட காதலால் அவளை உயர்ந்த பதவியிலும் அவள் பாதுகாப்பு பணியில் வேலையாளாகவும் எண்ணம் கொண்ட நாயகன்…. அவன் மீது கொண்ட காதலால் அவளை விட அவனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் நாயகி.
நட்பால் வாழ்வை இழக்க துணிந்தவளை காதலால் வாழ்வை புதுமையாக்கியவன். எதிலும் கனவிலே முதலில் சிந்திப்பவளை நிஜங்களை புரியவைத்தவன். எதிலும் நிஜங்களை மட்டும் எண்ணுபவனை கனவினை காண கண்ணிமைத்தவள். இதனூடே சமூக அக்கறையையும் நிலைநிறுத்த முயற்சித்திருக்கிறேன். ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் எனும் பழமொழியை மாற்றி, பெண்ணின் வெற்றிக்கு ஆண் எனும் புதுமொழியையும் மாற்றி, இருவரின் வெற்றிக்கும் காதலில் பரிசுத்தம் என்பதை நிரூபித்திருக்கின்றனர். கதைக்கருவை களமாக்கி கற்பனைகள் புனைந்து நாவலாக வடிவமைக்க முயற்சித்திருக்கிறேன்.