PRIYA MILIRVANNAN’S யாழினியன் – 01
…விழிகளுள் விழுந்தவள்…
“ஒவ்வொரு அடியாய் படிகளில் சுற்றும் விழிகளை அலசாமல் இறங்கியவளுக்கு” தன்னை நோக்கும் மற்றொரு விழியை நோக்கத் தெரியவில்லை. அவள் கூந்தல் அசைகையில் அவன் உணர்வதோ மழை மண்வாசனை… விழிகளை வானோக்கியவளின் இமை மூடலில் துளி… அதே வேளை அவன் விழியை அடைந்திருந்தது மற்றொரு துளி. அவள் இறங்கையில் அவனுள் பூத்த இந்த காதல் அவளின் வெற்றி ஏற்றங்களுக்கு காரணம் என்று ஏனோ அவள் உணரவில்லை.
Advertisement
தன்னை நோக்கும் கண்களையே உணராதவளுக்கு எப்படி தெரியும் தன் வெற்றியே அவன் என்று. அவள் இறங்கியபோது கிறங்கியது அவனின் மனம். பகலவனும் தன் வேலையை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் தன் மேற்கு வீட்டை நோக்கி மெதுவாக சென்று கொண்டிருக்கையில்! ஐப்பசி மாத மேகம் தன்னுடைய வேலைக்காக பகலவனை முந்திக்கொண்டு பொழிகின்றது தன் அடைமழையை…
அவளை கண்ட நொடி அவனின் மனது அவனிடம் இல்லாமல் இருப்பதை உணர்ந்தவன் தன்னை மீட்டுக்கொண்டு, ஏனோ மௌனங்களுடன் நகர்கிறான் நகராத அவள் நினைவுகளுடன்… அவன் விழிகளுள் அவளது கூந்தல் அசைவும், விழியால் அவனை எய்த நொடியும் மீண்டும் மீண்டும் அவனை மௌனமாக்கியது…
Advertisement
Advertisement
தன் மௌனங்களுக்கு காரணம் அவளா? இல்லை அவளை கண்ட விதமா? என்று பகுக்க இயலாதவன் ஆனால் அந்த நொடி அவள் மீது அவன் கொண்ட காதலை உணராமல் இல்லை.
அவளை காணவேண்டாம் என்ற எண்ணம் அவனுள் தோன்றிய அந்த நொடியில்…
Advertisement
மழை அவன் கண்களிலிருந்து அவளை மறைத்திருந்தது. தன் வீட்டுள் விரைந்தவள் சிறிது நேரத்திற்கு முன்பு தன் விழியால் ஒருவனை ஈர்த்த உணர்வின்றி தன் விழியை மழைத்துளிகளுள் செலுத்திக் கொண்டிருந்தாள். மீண்டும் ஏதோ அவன் உள்ளுணர்வில் சாலையிலிருந்து நிமிர்ந்தவனுக்கு அதே பார்வை அவன் மட்டுமே இம்முறையும்… “பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் வருகின்ற காதல் அதிசயம்…” என்ற வரியை முனுமுனுத்தவனுக்கு, தான் பதினாறு இல்லை என்பது மட்டும் நன்றாக தெரிந்திருந்தது…
அவள் உணவு உண்ண அவள் அம்மா படும் பாடும்… அங்கு உணவு உண்ணாமல் அவன் படும் பாடும் இவளால்! தான் ஏன் இப்படி உறைந்தேன் என்பதை உணர்ந்தும் தன் அம்மாவிடம் உணர்த்தாமல் இருக்கும் கவனம் ஒருபுறமும், அவளால் தன்னுள் ஏனோ தோன்றும் மாற்றங்கள் ஒருபுறமும், தன் மெனளனமான நகர்தலுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை என்று அவன் அறிந்திருந்தாலும் ஏனோ வலிகளை உடைய அவன் மனதால் அவள் மீது கொண்ட காதலை மறைக்க முயன்றவனால் மறுக்க முடியவில்லை.
துள்ளித்திரியும் பருவம்… எதிலும் இனிமையையும் நன்மையையும் காண்பவள்… புத்தகங்களுடன் தன் கனவுகளை கண்டவளுக்கு தன்னையே கனவாக எண்ணுகிறவன் இவன் என்று அவளால் உணரமுடியவில்லை…
மாடிப்படிகளைக் கொண்ட முற்றம் கடந்த சிறிய வரவேற்பறையில் தொலைக்காட்சியில் “என்ன சத்தம் இந்த நேரம்….” என்று இசைஞானி ஒலித்துக்கொண்டிருந்தார். பிறர் மனம் படிக்க தெரியாத அவளுக்கு தந்தையின் மனம் மட்டும் புரிந்தது. அவள் “அப்பா” என அழைத்ததும், சாப்பிட்டுக் கொண்டிருந்த சத்யவர்தன் நிமிர்ந்தார். அவரின் அலட்சிய பார்வையில் கோபமுற்றவள், “இப்போ எதுக்காக இப்படி செய்றீங்க… சிந்தியா என்னோட ப்ரண்ட்… அவ மட்டும்தான் எப்போதும் முக்கியம். அவள பத்தி எனக்கு தெரியும்..” என்று தன் கோபஒலியையும், இசைஞானியின் காதல் ராகஒலியையும் நிறுத்திவிட்டு, சமையலறை கடந்து உள்ளே உள்ள தனியறையில் இவள் நுழைந்தபோது மேகம் அதன் பொழிவை நிறுத்தியும் அவனை எய்த அவள் கூர்விழி அதன் பொழிவை ஏனோ தொடங்கிவிட்டது அங்கே அவனுள்….
தன் வயிற்றை உறங்கவைத்த சத்யவர்தனின் மனம் உறக்கமின்றி தவிப்பதை நிலவு பார்த்துக்கொண்டிருக்க, மாடிப்படிகள் கடந்த சிறிய முற்றத்தில் அவருக்கு அருகில் வந்து அமர்கிறார் அவரின் காதல் மனைவி சங்கமித்ரா.
“மித்ரா” என அழைத்த சத்யவர்தனின் குரலில் இருந்த களைப்பையும், கவலையையும் உணர்ந்தே ஆறுதலாய் வந்தவளாய் “என்ன செய்றதுன்னே தெரியலிங்க…. நம்ம பொண்ணா இது?”… என கண்ணீர் சிந்தியவாரு சொல்லிக்கொண்டிருந்தாள் மித்ரா…
“இப்போது இவள் படிப்பில் கவனம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் சிந்தியா தான்” என்று சத்தியவர்தன் சொல்லி முடிப்பதற்குள்
“அடுத்து வரவிருக்கும் அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் எடுத்து காண்பிக்கிறேன்” என்று மகள் சொல்லியதாகச் சொல்லிக்கொண்டிருந்தார் மித்ரா. நடப்பது நடக்கட்டும் என்பது போல் கண்களைச் சுழற்றிக்கொண்டு பெருமூச்சுடன் உறங்க தயாரானார் சத்யவர்தன். சத்யவர்தனைக் கரம்பிடித்த நாட்களில் இருந்து தொடர்ந்துக் கொண்டிருக்கும் மித்ரா இப்போது மட்டும் சத்யவர்தனை தொடராமலா இருப்பார்?
இவர்கள் ஒரு புறம் யாரை நினைத்து புலம்பிக்கொண்டிருக்கிறார்களோ அவள் எதுவும் தனக்கு இல்லை என்பதை போல் நித்ராதேவியுடன் இருந்தாள். அவள் புரண்டு படுக்கையில் அவளுடைய கை அந்த சிறிய பொத்தான் வைத்த பழைய மாடல் நோக்கியோவில் பட்டபோது, ஏதோ பயத்தில் திடுக்கென்று நித்ராதேவியை விலக்கிவிட்டு அலைபேசியில் குறுஞ்செய்தியை அழிக்க முயன்ற நேரம்….
– இசைக்கும்
