Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 26 

சாரல் – 26

பூஜையறையில் கோமதி, சாமி படத்திற்குமுன் விளக்கேற்றி, சாமி கும்பிட்டுக்கோங்க… என்று மணமக்கள் இருவரிடமும் கூறிவிட்டு,

“டேய்… நீ முன்னாடி கிளம்பு… அவந்தியை, காவியா கூட்டிட்டு வருவா…” என்று சொல்லிவிட்டு காவியாவிடம் சைகை செய்து விட்டு வெளியேறினார்.

“அப்பறம் கொழுந்தனாரே நடையை கட்டுறது…”



Advertisement

“உங்களுக்கே கல்யாணத்துல ரொம்ப வேலை இல்லைண்ணி… அதி வா, நாம போலாம். அண்ணி ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று அவளின் கையை பற்ற,

அவளோ காவியாவை தயக்கத்துடன் பார்க்க,

“இடத்தை காலிபண்ணுனு சொல்லிட்டீங்க…இதுக்கப்பறமும் நிப்பேனா என்ன…” என்று சொல்லி சிரித்துவிட்டு கிளம்பினாள்.

Advertisement

அவன் செய்யும் சேட்டையில், அவனை நிமிர்ந்து பாக்க முடியாமல், பதுமையாய் அவனுடன் சென்றாள்.

Advertisement

அறைக்குள் நுழைத்தவுடன், நந்தா “அச்சோ அதி…” என்று கத்த,

இவளோ பயந்து பதறி, அவனிடம் ஒண்டினாள். சற்று நேரம் கழித்து, எந்த சத்தமும் வராமல் போக, அப்போது தான் அவனின் முகத்தை பார்த்தாள்.

அவனோ அவளை பார்த்து கண்ணடிக்க, பின்பு தான் அவளுக்கு புரிந்தது, அவன் வேண்டுமென்றே கத்திருக்கிறான் என்று.

Advertisement

“உங்களை… போங்க நீங்க…” என்று அவனிடமிருந்து பிரிய,

அவளை நகரவிடாமல், “என்னங்க டீச்சரம்மா… வெளியிலதான் வீரமங்கை போல… சும்மா ஒரு சத்ததுக்கே, மேடம் பம்பிட்டீங்க…”

“நந்து… ஏன் இப்படி பண்றீங்க…”

“எப்படி பண்ணுறாங்க… நீயும் இதையே தான் கேக்குற… என்ன பண்ணுறேன்னு சொல்லுறியா எங்காச்சும்…” என்று அவளிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே கட்டிலுக்கு அருகில் நகர்த்த,

“இப்படி பண்ணுனா, இன்னைக்கு டே முழுசும், நீங்க எண்ணலாம் பண்ணுணிங்க… எங்கயாச்சும் என்னைய  பேசவிட்டிங்களா… எல்லாரும் எப்படி ஓட்டுனாங்க தெரியுமா… போங்க நீங்க…”

“நாந்தான் அதியை பேச விடல… இல்லனா நீ பேசிருப்ப… சரி இப்போச்சொல்லு என்னலாம் பண்ணினேன்னு…” என்று அவளின் முகத்தை நிமிர்த்த,

“அவளோ… பாக்கமாட்டேன்” என்பது போல் தலையை ஆட்டினாள்.

“பாரு… நீதான் இப்படி பண்ணுற… அப்பறம் நான் பேசவிடலைன்னு சொல்லுற…”

“நான் ஒன்னும் பேசலை போங்க…” அவள் அவனை விளக்க,

“பாருடா… முயல்குட்டிக்கு கோவம் வருது போல… கோவம் வந்தாலும் இப்படியே தான் சண்டை போடணும்… இப்படி உன் நந்துவை விலகலாம் கூடாது.

“ம்க்கும்… இப்படி இருந்த எப்படி சண்டை போட முடியும்…” என்று அவன் அணைப்பில் இருந்தவாறு முனக,

“அதி என்ன சொல்லுற காதுல விழல…” என்று அவளின் காதில் சொல்ல

“அச்சோ… நந்து… கூசுதுப்பா…” என்று அவனிடமிருந்து காதை பிரிக்க,

அவன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு, அவனின் மடியில் அவளை அமர வைத்து, பின்னிருந்து அவளை வசதியா கட்டிக்கொண்டு , “இப்போ சொல்லு எப்படி கூசுதுன்னு…” என்று திரும்பி காதில் பேச,

“ஏங்க நந்து… ப்ளீஸ்…” என்று நெளிய,

“அதே ப்ளீஸ் தான் நானும்… ப்ளீஸ் வித் யுவர் பெர்மிஸ்ஸின்…” என்று அவளின் கண்பார்த்து கேட்டு, அதில் முத்தத்தை அச்சரமாயிட்டு, அடுத்து குட்டி, குட்டி முத்தங்களை பதிக்க,

அவனின் மீசையின் உராய்வில், அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க, அதில் கரைய ஆரம்பித்தாள்.

இறுதியில் அவளின் இதழுடன் முத்தம் நீண்டுக் கொண்டே போக, ஒரு கட்டத்தில் முடியாமல், “நந்து ப்ளீஸ்… போங்க நீங்க” என்று பிரிந்தாள்.

அவளை பார்த்து நமட்டு சிரிப்புடன், “யாரோ நான் சொல்லித்தர எல்லாத்தையும் கத்துப்பேன்னு சொன்னாங்க… இதுக்கே முடியலனு டீச்சர் பின்வாங்குறாங்க… ஒரு டீச்சரே இப்படி சொல்லலாமா…”

“உங்களை… எப்படி பேசிருங்கிங்க நீங்க… போங்க நீங்க…”

“மொதராத்திரில போயிட்டு, என்னைய போக சொல்லுறியே… இதுலாம் அநியாயமா இல்ல…”

“அச்சோ வாய்…வாய்…” என்று அவனின் வாயை தனது கைகளை கொண்டு பொத்த,

“இப்படி பொத்தனுமென்று சொல்லி,  அவனின் இதழுடன் அவள் இதழ் சேர்த்து, மென்மையாய் பெண்ணவளை அணுகியவன், அவளின் ஒவ்வொரு அசைவுக்கும், அவனின் விளக்கத்தில், பெண்ணவளோ… அவனிடம் கூசி, சிணுங்கி, சிவந்து… தாம்பத்தியம் என்னும் ரசவாதத்தை நிகழ்த்தி, அவளின் திணறல்களை எல்லாம் ரசித்து, அவனின் ஒட்டுமொத்த நேசத்தையும் அவளுள் விதைத்து, அவளின் மனதினுள் மரமாய் வளர்ந்து நின்றான்.

நிமிடங்கள் கரைந்து அவளை அனைத்து படுத்திருந்தவன், “அதி…” என்று அவளின் காதில் அழைக்க,

“நந்து… ப்ளீஸ்…”

“அடிப்பாவி… நான் இப்போ ப்ளீஸ் கேக்கவே இல்லையே…”

“உங்களை… போங்க..” என்று அவனின் நெஞ்சில் தலையை வைத்து முட்டினாள்.

பின்பு சீரியஸ் ஆகி, “இந்த மொதராத்திரிக்குலாம் கையில பால் எடுத்து வருவாங்களே, நீ எடுத்து வரல அதி…”

அவளோ அதிர்ச்சியாகி, அவனை பார்க்க,

“என்ன மறந்துட்டியா?…”

“அச்சோ… உங்களால தான் எல்லாம்… ஏன் இப்படி பண்ணீங்க… நாளைக்கு அத்தை கேட்டா நான் என்ன சொல்லுவேன்…”

“சொல்லேன்… என் புருஷன் பக்கத்துல இருந்தா அவரை தவிர, வேறேதும் எனக்கு தெரியமாட்டுதுனு…” என்று அவனுடல் சிரிப்பில் குலுங்க,

“வாய் வாய்… பொய் சொன்னிங்களா?…” என்று அவனை மார்பில் முட்ட,

“இது என்ன முயல்குட்டி, இப்படி முட்டுற…”

“பேச்சை மாத்தாதீங்க… பால் எங்க?”

“பாருடா… தங்க பொண்ணு பேசுறதை… இப்படிலாம் பண்ணக்கூடாதே…” என்று அவளிடம் சில்மிஷங்கள் செய்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, அவளுள் கரைந்தே போனான்.

சிறிது நேரம் சென்று, கையில் பாலுடன் வந்து, அவளை எழுப்ப, “நந்து எனக்கு தூக்கம் வருது…”

“சேர்ந்து தூங்கலாம்… இப்போ எழும்பு..”

“முன்னாடியும் தூங்கலாம்னு தான் சொன்னிங்க… அப்பறம் என்ன பண்ணுணிங்க… போங்க…”

“ஹா ஹா… அதி, பால் எங்கன்னு தெரியவேணாமா?”

அவள் திரும்பி அவனை பார்க்க, கையில் பாலுடன் நின்றிருந்தான்.

“வாயெல்லாம் பொய்…” என்று அவனை பார்த்து முறைக்க,

இதை குடுச்சிட்டு அப்பறம் சொல்லு… அவளும் குடித்துவிட்டு குடுக்க, அவனும் சிறிது குடித்துவிட்டு வந்து அவளை அணைத்துப்படுக்க, தூங்க விடணும் சொல்லிட்டேன்.

“நீ இப்படி சொன்ன தான், எனக்கு என்னென்னமோ தோணுது…” என்றுவிட்டு அவளை இறுக்கமாக அணைக்க,

“நானே வாய விட்டுட்டேனே…” என்று நொந்துக் கொண்டு… “இல்ல… இல்ல தூங்கலாம்… இல்ல… நான் தூங்கிட்டேன்…” என்று உளற,

“அதி போதும்… அப்பறம் என்னை சொல்லக்கூடாது சொல்லிட்டேன்…”

– – – –

அவந்தி, காலையில் எழுந்து குளித்து, வெளியே செல்ல தயக்கமாக இருக்க, அப்படியே அறையில் வளம் வர,

நந்தவோ தூக்கம் களைந்து, கண்ணைத் திறக்காமல் அதி என்று அவளை தன் பக்கத்தில் தேட, இதனை பார்த்துக் கொண்டே, நின்றாள்.

அவள் தேடி கிடைக்காமல் போக, “அதி….யீ “என்று கத்த,

“அச்சோ… ஏன் இப்படி கத்துறிங்க, இங்க தான் இருக்கேன்… கண்ணை திறங்க…”

“நீ இங்க என்கிட்டே  வா…”

“எதுக்கு?… சீக்கரம் எழும்புங்க லேட்டாச்சு…”

“என்னாலன்னு சொல்லாத… நீ வந்தா, நான் எழுந்திரிக்குறேன்…”

“உங்களையே நான் என்ன பண்றது…”

“என்ன வேணும்னாலும் பண்ணு… முதல்ல நீ இங்க வா…”

“உங்களோட… எதுக்கு கூப்பிடுறிங்க…” என்று அவனின் அருகில் வந்து, தோலை தட்ட,

அவளை அப்படியே இழுத்து தன் மேல் சாய்த்தான்…

“நந்து… ஏங்க… என்ன…” என்று பேசவர, அவளின் வாயை அடைத்தான் தன் இதழால்,

சற்று நேரம் சென்று விடுவித்து, “இப்படிதான் தினமும் உன் முகத்தை பாத்துட்டே தான் எழுவேன்…அதியம் இப்படித்தான் உன் நந்துவை எழுப்பனும்.

“உங்களை…”

“சொல்ல வந்ததை சொல்லு…” என்று அவனின் தேடலை அவளிடம் தொடங்க, பின்பு எங்கேயிருந்து அவள் பேசுவது…

“அச்சோ… போச்சு, போச்சு… மணி எத்தனை பாருங்க, உங்களால தான் எல்லாம்… நானே வெளியே போயிருக்கலாம்…” என்று புலம்ப,

“அதி… இங்க வாயேன்…”

“போங்க… நீங்க… எழுந்து போங்க…ரெடி ஆகுங்க…”

அவன் எழுந்து வந்து பின்னிருந்து அவளை அணைத்துக்கொண்டு, “நீ சீக்கரம் எழுந்து போனின்னா தான் எல்லாருக்கும் டவுட் வரும்… இப்போ யாரும் உன்னைய ஒன்னும் கேக்க மாட்டாங்க…”

“அப்படியா சொல்லுறீங்க…”

“அதே தான்… உன் நந்து சொல்றதை கேளுங்க தங்க பொண்ணு…”

“இப்போ நீங்க என்ன பண்றீங்க தெரியுமா… சீக்கரம் போயிட்டு ரெடி ஆகுங்க…” என்று அவனை குளியறைக்குள் தள்ளிவிட்டாள்.

– – – – – –

காலை உணவின் நேரத்திற்கு, இருவரும் கீழே வர, அவளோ தயங்கி, தயங்கி சமயலறைக்குள் சென்றாள்.

அங்கே காவியா, கோமதி இருவரும் இருக்க, அத்தை என்றாள்.

கோமதி, “வா அவந்தி… சாப்ட்ருலாமா… இல்ல ஏதாது குடிப்பியா?…” என்று சாதாரணமாக கேட்க,

“இல்ல அத்தை… நாம சேர்ந்தே சாப்டுக்கலாம்…” என்று அவளும் அவர்களுடன் ஐக்கியமானாள்.

காவியா, “புது பொண்ணே… புருஷன் என்ன கொடுக்கணும்னு கேக்குறது இல்லையா…”

“அக்க்கா… உங்களுக்கு தானே முதல்ல கொழுந்தன், நீங்க தான் என்னனு கவனிக்கணும்…”

“அதுசரி… இந்தா போறேன்… எங்க என் கொழுந்தனார்?… ” என்று வெளியே வர,

“வா அவந்தி… போலாம்… சாப்டுட்டே பேசலாம்…”

அங்கே உணவு மேஜையில் அனைவரும் அமர, “எங்க அத்தை… மாமா மட்டும் மிஸ்ஸிங் …”

“உங்க மாமா இங்க இருந்தா, இந்த கூட்டமே இருக்காதே… அவரு அவங்க சின்ன தங்கச்சியை விருந்து அழைக்க போயிருக்கார்.

காவியா, “அப்பறம் கொழுந்தனாரே…”

சுரேஷ், “யாரை அண்ணி…”

“ஓஹ் நீங்களும் இங்க தான் இருக்கீங்களா…”

“அப்போ என்னை கவனிக்கவே இல்ல நீங்க…”

வைஷு, ” ஏன்டா நீயே போயிட்டு மாட்டுற…”

காவியா, “அவருக்கு தானே இப்போ கல்யாணம் ஆகியிருக்கு… அப்போ அவரை தான் முறையா கவனிக்கணும்…”

“ம்மா… அப்போ எனக்கும் பொண்ணு பாருங்க… அப்போ தான் அண்ணி என்னைய கவனிப்பாங்களாம்…”

ராஜா, “டேய்.. அவதான் பேசுறான்னா… நீயும் அவளோடு சேர்ந்து பேசுற… ஒழுங்கா சாப்பிடுடா…”

இதையெல்லாம் சிரிப்புடன் அவந்தி பார்க்க,  நந்தவோ நீங்க பேசுங்க அண்ணி என்றான்.

காவியா, ” அத்தை… உங்க பெரிய பையன்கிட்ட, ஏதாவது வேலை இருந்தா சொல்லி அனுப்புங்க…”

“ஹா ஹா ஹா…” என்று அனைவரும் சிரிக்க, இப்படி சில, பல கலாட்டாக்களுடன் காலை உணவை சாப்பிட்டனர்.

சாரல் வருடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!