Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரும்பில் ஓர் இதயம்

இரும்பில் ஓர் இதயம்…..12

 இரும்பில் ஓர் இதயம்…..12

மிருதுளா அமைதியாக பரிதியை பார்த்தபடி அமர்ந்தாள்.பரிதியோ தரையில் திமிறிக் கொண்டிருந்தான் அவனின் கை,கால்கள் கட்டப்பட்டிருந்தது.அவனின் வாயையும் துணி கொண்டு அடைத்துவிட்டாள் மிருதுளா.அதனால் கண்களால் அவளை மிரட்டிய படி இருந்தான்.அவனை கட்டி முடித்து அவனிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்தவள்,

“ப்பபா….முடியலை….நீங்க பண்ற அலபறைக்கு இன்னும் நான் என்னெல்லாம் செய்யனுமோ தெரியலை…..நாளையிலேந்து வேலைக்கு போறேன்னு சொன்னதுக்கு காலையில என்ன ஆட்டம் ஆடுனீங்க…அதான் இப்ப இப்படி இருக்கீங்க…..”என்று மூச்சு வாங்கியபடி அவள் கூற பரிதியோ அவளின் அருகில் வரப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆ…அங்…..அங்கேயே இருந்தா ஒழுங்கா கட்டை அவிழ்த்துவிடுவேன் ஏதாவது சேட்டை பண்ணீங்க….அப்புறம்…..அப்புறம்….ச்சை சட்டுனு பேச வருதா…..இதுக்கு தான் பயிற்சி வேணும் சொல்லுறாங்களோ…..”என்று வாய் விட்டே அவள் புலம்ப,பரிதி தன் திமறலை நிறுத்தி அவளையே விநோதமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆனால் அதை அவள் உணரவில்லை.



Advertisement

“அப்புறம்….ஆங்….நான் என்ன செய்யவேன்னு எனக்கே தெரியலை…அதனால ஒழுங்கா உட்காருங்க….”என்று கூறியவள் அவனின் முகத்தை பார்க்க அவனோ அவளை முறைத்தபடி இருந்தான்.

“என்ன முறைக்கிறீங்க….ஆங்….நான் தான் உங்களை முறைக்கனும்….இதை நான் உங்களை திரும்ப பார்த்த அன்னைக்கே செய்யலாம்னு இருந்தேன் ஆனா உங்க உடம்பு நல்லாயில்லை அதனால உங்க உடம்பு நல்லாகட்டும்னு பொறுத்துக்கிட்டு இருந்தேன்…..”என்று கூறிவிட்டு அவனை மீண்டும் பார்க்க அவனது முகத்தில் எந்த மாற்றமுமில்லை.

“என்னதிது இப்படி அமைதியா பார்க்குறார்….வேற ஏதாவது யோசிச்சிட்டாரோ….”என்று அவள் மனதிற்குள் புலம்புகிறேன் என்று அனைத்தையும் வாய்விட்டே புலம்ப பரிதியின் முகம் லேசாக விரிந்தது ஆனால் அதை கவனிக்க வேண்டியவளோ தன்பாட்டிற்கு புலம்ப பரிதி தன் கால் பக்கத்தில் இருந்த ஒரு டம்பளரை ஒரு எத்து எத்த அது தூரப்போய் விழுந்தது.

Advertisement

“அச்சோ….இதை எடுக்க மறந்துட்டனே….”என்றவள் அந்த டம்பளரை எடுத்து தூரத்தில் வைத்துவிட்டு வந்தாள்.

Advertisement

“நீங்க இப்படி செஞ்சதால தான் உங்களை கட்டி போட்டிருக்கேன்….இன்னும் நீங்க அடங்கலை இல்ல….ச்சை….”என்றவள் அவனின் அருகே அமர்ந்து,

“இங்க பாருங்க….இப்ப நான் வாயில உள்ள துணியை எடுப்பேன்….எந்த சத்தமும் போடக் கூடாது….அப்புறம் நான் கேட்டுகுற கேள்விக்கு மட்டும் தான் நீங்க பதில் சொல்லனும் வேற எதுவும் பேசக் கூடாது….”என்று அவனை மிரட்டி விட்டு அவன் வாயில் உள்ள துணி எடுத்த அடுத்த நொடி தன் உடலை அசைத்து திமறிக் கொண்டே ஏக வசனத்தில் அவன் கத்த தொடங்க மீண்டும் அவனின் மீது விழுந்தே அடைத்துவிட்டாள்.

“யோவ் கத்தாதனு சொன்னேன் தான….திரும்பியும் கத்தி ஊரை கூட்டுற….ஆங் என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ…..பொறுமையா போனா என்ன வேணா செய்யலாம்னு நினைப்பா….உன்னை இன்னைக்கு என்ன செய்யுறேன் பாரு….”என்று அவள் பாட்டிற்கு கத்த எதிர் புறத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை என்று நினைத்தவள் அவனை பார்க்க பரிதியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்திருந்தது.

Advertisement

“என்ன இந்த மனுஷன் இப்படி முழிக்கிறாரு….”என்று தன்னை பார்க்க அப்போது தான் அவள் அவன் மீது படுத்திருப்பது புரிய,

“அச்சோ….ச்சை…..எப்படி படுத்திருக்கேன்….”என்று தன் தலையில் அடித்துக் கொண்டு எழும்பி தன்னை சரி செய்யவிட்டு அவனையும் நிமிர்த்தி அருகில் உள்ள சுவற்றில் சாய்வாக அமர வைத்தவள்,

“அது….நான்….”என்றவள் ஒருநிமிடம் திணறி பின்,

“தெரியாம நடந்துடுச்சி…..நான் உங்க….இல்ல உன் கிட்ட பேசனும் ப்ளீஸ் முதல்ல கேளு….அப்புறம் பேசு….”என்றுவிட்டு அவனின் அருகில் அமர்ந்தவள்,அவனை பார்த்து தன் மனதில் உள்ளதை கூற தொடங்கினாள்.

“யார் நீ ஏன் என் வாழ்க்கையில வந்த….நான் ஏன் உன்கூட இப்படி ஒட்டிக்கிட்டு திரியுறேன்….எனக்கே புரியல….ஆனா ஏதோ உன்னையும் என்னையும் இணைக்குது….அது என்னனு எனக்கு சொல்ல தெரியலை….அதனால தான் நீ எவ்வளவு என்னை துரத்தியும் நான் போகம இருந்தேன்….எனக்கு போக்கிடம் இல்லாம இல்ல….ஒருவேளை…ஒருவேளை நீ சொல்லி நான் போயிருந்தா ஒரேடியா தான் போயிருந்துருப்பேன்…..”என்று அவள் கூறி முடிக்கும் முன் அவளது கன்னத்தை தோள்களால் வேகமாக இடித்திருந்தான் பரிதி,அவன் இடித்ததில் தடுமாறி அவள் கீழே விழுந்தவள் எழும் முன் பரிதி தனது கை கட்டுகளை அவிழ்க்க முயன்று கொண்டிருக்க வேகமாக அவனிடம் நெருங்கி,

“யோவ் எதுக்கு இடிச்சு தள்ளிவிட்ட….ஆங்…..என்ன எப்ப பார்த்தாலும் அடிக்கிற இல்ல தள்ளிட்டு போற….என்னை பார்த்தா எப்படி தெரியுது….”என்று கேட்டவாரே அவனின் சட்டை பிடித்திருந்தாள்.

“நீ பண்ணதுக்கு உன்னை தலைகீழா தான் தொங்க விடனும்…..உன்னை உட்கார வச்சிக்கிட்டு பேசுறேன் பாரு என்னை சொல்லனும்…..உனக்கு என்ன அவ்வளவு திமிரா….உன்னை ஒருத்தவங்க அன்பா,பாசமா நடத்துனா அவங்கள உதாசினபடுத்திட்டு நீ பாட்டுக்கு போயிட்ட…..எங்கய்யா போன….எங்க போன…..ஆங்…..”என்று அகங்கார காளியாக அவனின் சட்டை உலுக்கியவள்,அவனின் கன்னத்தை அழுத்தமாக பற்றி,

“எங்க போய் இப்படி விழுந்து வாரிட்டு வந்திருக்க…..சொல்லு….உன் அடி எல்லாம் பார்த்தா ஏதோ விபத்துல அடிபட்டது மாதிரி இருக்குனு டாக்டர் எல்லாம் சொல்லுறாங்க….எங்க போன எங்க இருந்த….சொல்லு….சொல்லு….”என்று அவனின் வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு கேட்க இம்முறை அவன் வாயை திறக்க வில்லை அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

“பதில் சொல்லுய்யா…..எங்க போன…..”

“…….”

“பதில் சொல்லமாட்ட…..ஆங்….”என்றவள் அவனின் முடியை பிடித்து ஆட்ட அவனோ அனைத்தையும் ஏற்றபடி அமர்ந்திருக்க,ஒருகட்டத்தில் மிருதுளா ஓய்ந்து போய்,

“ச்சை நீ எல்லாம் மனுஷனா….உன்னை எங்கெல்லாம் தேடி அலைஞ்சேன் தெரியுமா…நம்ம பரி….பரிம்மாவும் போயிட்டாங்க….நீயும் இல்ல…..பித்து மட்டும் தான் பிடிக்கல எனக்கு….நீ இருந்திருந்தா இப்படி ஆகியிருக்குமா…..எல்லாம் உன்னால…..”என்று அவனின் நெஞ்சில் அடித்ததடித்து ஓய்ந்து போக,அவளின் விசும்பல் மட்டுமே அந்த அறையில் கேட்டது.மிருதுளாவிற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது தன்னை சமன் செய்ய,

“நீ எதை நினைச்சு போயிருப்பனு எனக்கு தெரியும் இப்படி போனா இவ உன்னை விட்டு போயிடுவானு தான நினைச்ச…..ஆங்…சொல்லு……”என்று கேட்க பரிதியிடம் அமைதி மட்டுமே அவனின் அமைதி அவளுக்கு கோபத்தை கொடுக்க,

“சொல்லு….சொல்லுய்யா….ஏன் இப்ப வாய திறக்கமாட்டேங்குற…..ஆங்….நீ பதில் சொல்லமாட்ட நீ அதை நினைச்சு தான் போயிருப்ப….ஆனா பாரு நல்லா கேட்டுக்க நான் எங்கேயும் போக மாட்டேன் இனி உன்னையும் எங்கேயும் போகவும் விடமாட்டேன்….உன்னை விட்டு போகவே மாட்டேன்…..ஒருவேளை அந்த கடவுளே வந்து என்னை அழைச்சிட்டு போனாலும் உன்னையும் என்கூட இழுத்துட்டு போயிடுவேனே தவிர உன்னை விட்டு மட்டும் போகவே மாட்டேன்…..”என்றவளின் அடுத்த வார்த்தைகளை பரிதியின் அதரங்கள் விழுங்கியிருந்தது.எப்படி அவனின் கை கட்டு அவிழ்ந்தது எப்போது அவனின் கை வளைவிற்குள் அவள் வந்தாள் என்று அவளிற்கே தெரியவில்லை கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்திருந்தது.

அவளை ஒற்றை கரத்தால் இடைவளைத்து கீழே தள்ளி அவள் உடலின் மீது தனது மொத்த பாரத்தையும் போட்டவன் அவளை பேசமட்டும் விடவில்லை அதரங்களின் முற்றுகை தொடர்ந்து கொண்டிருந்தது.மிருதுளா சிலையாக சமைந்துவிட்டாள் அவளின் மூளை தனது செயல்பாட்டை நிறுத்தியிருந்தது.எவ்வளவு நேரம் முத்தயுத்தம் நடந்தது என்று இருவருமே அறியவில்லை.

முதலில் தெளிந்த பரிதி தனது கண்களை திறந்து பார்க்க மிருதுளாவோ என்ன நடந்தது என்று உணராமலே அதிர்வில் இருக்க,அவளின் கன்னத்தை தட்டியவன்,

“ஏய் சண்டக்காரி….எந்திரி….”என்றுபடி அவளின் கன்னத்தை வலிக்க கிள்ள,அதில் மீண்டவள்,

“நீ….நீ….நீங்க….”என்று ஏதோ கேட்கும் முன் மீண்டும் ஒரு இதழ் முற்றுகை இந்த முறை மென்மையாக அவளின் கண்களுடன் தனது கண்களை கலந்தவன் அவளை மெல்ல மெல்ல தனது ஆளுகைக்குள் கொண்டு வர மிருதுளாவோ அவனின் புதிய பரிமாணத்தில் எதிர்க்க கூட முடியாமல் அவனையே பார்க்க,மெல்ல அவளை விடுவித்தவன் அவளின் தலையில் முட்டி,

“என்ன சொன்ன….”என்று ஹஸ்கி குரலில் கேட்க,அவளிற்கோ அனைத்தும் மறந்து போயிருந்தது.தான் செய்ததற்கு அவன் அடிப்பான் இல்லை கத்துவான் என்று எண்ணியிருந்தவளுக்கு பரிதியின் இந்த புதிய பரிமாணத்தை கண்டு பதில் என்ன வார்த்தைகளே வரவில்லை என்று தான் கூற வேண்டும்.

“என்னைவிட்டு போகமாட்ட….”என்று சிரித்தபடி கேட்க,அவனின் சிரிப்பு ஏதோ நக்கல் சிரிப்பாக அவளிற்கு தெரிய மீண்டும் அவனை தன்னிடம் இழுத்து,

“போகமாட்டேன்…..போகமுடியாது….என்னடா செய்யவ…..”என்று அதுவரை ஏதோ மயக்கத்தில் இருந்தவள் அவனின் இந்த கேள்வியில் கோப வந்து மூக்குவிடைக்க கூற,இருவரின் முகமும் மிக நெருக்கத்தில் இருக்க ஒருநிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்தவன் அவளின் அதரங்களுக்கு தனது அதரங்களால் தண்டனையை கொடுக்க மிருதுளா முற்றிலுமாக நிலையிழந்து தான் போனாள்.

அதன் பின் செயல்கள் அனைத்தும் அவனதாக மாற பெண்ணவளோ அவனின் கைகளில் கரைந்து தான் போனாள்.அவள் நினைத்திருந்தாள் அவனை தடுத்திருக்கலாம் ஆனால் ஏனோ அவனின் கண்களில் மிலிர்ந்த ஒற்றை துளி கண்ணீர் எதையோ உணர்த்த முழுமையாக,முழுமனதுடன் அவனை தாங்கியவள் திருமதி மிருதுளா இளம்பரிதியாக அவனின் பாதியாக மனதாலும்,உடலாலும் மாறினாள்.

அனைத்தும் முடிந்த போது மிருதுளா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.இன்னும் அவர்களுக்கு இடையில் அனைத்தும் அப்படியே தான் இருந்தது ஆனால் அவர்களின் இல்லறத்தின் தொடக்கம் நல்லவிதமாகவே ஆரம்பித்திருந்தது.அவளை தனது நெஞ்சுடன் அணைத்து பிடித்து அவளின் தலை கோதியபடி இருந்தவனின் முகத்தில் எத்தனை எத்தனை பொலிவு ஆகா அதை வார்த்தைகால் வர்ணிக்கயிலாது.அவனின் கண்களில் அந்த ஒற்றை கோடாக கண்ணீர் இறங்கியபடி தான் இருந்தது.அவனின் அதரங்கள் அவள் உதிர்த்த கடைசி வார்த்தைகளை தான் மீண்டும் மீண்டும் உச்சரித்தது.

“என்னை விட்டு போகமாட்டா…..என்னை விட்டு போகமாட்டா….”என்றவன் அவளின் பிறை நெற்றியில் அழுந்த முத்தமிட அதில் அவள் தூக்கம் கலைய லேசாக சிணுங்க மெல்ல அவளின் தலையை தடவியபடி அவளின் புறம் திரும்பி சற்று நேரம் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தவன்,

“உன்னை பார்க்கமா போயிடுவேனோ பயந்துட்டேன்டீ….எப்படி என்னை சரியா புரிஞ்சி வச்சிருக்க…..உன்னை விட்டு போகனும் நினைக்கல ஆனா சும்மா உன்னை பயங்காட்டிட்டா நீ போவியா மாட்டியா பார்க்க தான் போனேன்….ஆனா கடைசில நான் தான்டீ பயந்து போயிட்டேன்…நான் எதிர்பார்க்காத விதமா எல்லாம் நடந்துடுச்சு நான் போன லாரி மலை பாதையில விபத்தாகி நான் அந்த மலையில உருளும் போது இனி உன்னை பார்க்கவே முடியாதானு தான் மனசு முழுசும் அடிச்சிகிச்சி…..கடைசியா நான் மயங்கும் போது கூட உன் முகம் தான் நினைவுல வந்தது….அதோட நான் மயங்கிட்டேன்….அப்புறம் ஹாஸ்பிட்டல்னு அதுஇதுனு இருந்து தான் பிழைச்சு வந்தேன்….”என்றவனின் கண்களில் அந்த நாளின் அனுபவித்த வேதனை இப்போதும் தெரிந்தது.

மிருதுளாவை பயமுறுத்த வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை ஆனால் அவனால் ஒரு அன்பின் பிணைப்பை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை அத்தனை பயமாக இருந்தது.ஆம் பயம் தான் சிறு வயதில் இருந்தே அன்பின் சாயலை அவன் முழுதாக அனுபவித்தது இல்லை.அவனின் அன்னை எப்போதும் அவரின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று தான் புலம்புவாரே தவிர மகனை பாசமாக அரவணைத்தது இல்லை.

பரிதிக்கு மற்ற பிள்ளைகள் தங்களின் தாய்மார்கள் இதை செய்தனர் அதை செய்தனர் என்று கூறுகையில் தனது தாய் தனக்கு இதுபோல் எதுவும் செய்யவில்லையே என்று தோன்றும்.ஒரு வயதிற்கு வந்த பிறகு அதை தனது தாயிடம் அவன் நேரிடையாக கேட்கும் போது,

“நாம என்ன சந்தோஷமாவா இருக்கோம்….நானே உன்னை வச்சிக்கிட்டு கஷ்டபடுறேன்…இதுல உன்னை கொஞ்சிகிட்டு இருக்க எனக்கு எங்க நேரம் இருக்கு….”என்று விடுவார்.என்றாவது தனது தாய் தன்னை தாங்குவார் என்று ஏங்கிய பரிதியின் கனவு வெறும் கனவாகவே போனது.அதிலும் தாய் படுத்த படுக்கையான பின்பு அவனது வாழ்க்கை தடமே முற்றிலும் மாறி தான் போனது.அந்த வயதில் கிடைக்கவேண்டிய எந்த சந்தோஷம் எதுவும் அவனிற்கு கிடைக்கவில்லை நிம்மதியும் கிடைக்கவில்லை.

ஒருகட்டத்தில் தாயும் இறந்து போக கொஞ்சம் மிஞ்சியிருந்த மனிதமும் தாயுடனே இறந்து போனது.தாயும் பணத்தின் பின் தான் ஓடினார் அவன் பார்த்த மனிதர்களும் பணத்தின் பின்னே ஓட இவனும் அதன் பின்னே ஓட தொடங்கினான். பணம் பணம் மட்டுமே அனைத்தையும் தரும் என்று மனதில் ஆழமாக பதிந்து போனது.பணத்தை நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற நினைவெல்லாம் அவனிடம் இல்லை அதனால் தனக்கு தேவையான பணத்தை திருட தொடங்கினான் பின்னாளில் அதுவே அவனின் வாடிக்கையாகி போனது.

ஒரு மனிதனுக்கு தான் செய்வது தவறு என்ற உணர்வு இருந்தால் தான் அவன் அதை செய்யமாட்டான் ஆனால் சிலருக்கு அந்த உணர்வே இருக்காது அது போல் தான் பரிதியும் அவனிற்கு தான் செய்வது தவறு என்ற உணர்வே இல்லை உணர்வுகளே இல்லாதவன் மனிதனாக இருக்கமாட்டான் அதனால் தான் அவன் மிருகம் போல் இருந்தான்.அதுவும் மிருதுளாவை அவளின் ஊரில் பார்க்கும் வரை அவளிடம் தன் இதயத்தை பறிகொடுக்கும் வரை அவனிற்கு இதயம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது.

சில நேரங்களில் அவனிற்கு அளவுக்கு அதிகமான பணம் கிடைத்தால் எங்காவது வெளியூர்களுக்கு சென்றுவிட்டு வருவான் அது போல் தான் மிருதுளாவின் ஊருக்கும் அவன் சென்றது.அவன் சென்ற போது அந்த ஊரில் ஏதோ திருவிழா நடந்து கொண்டிருந்தது.இவன் ஒவ்வொரு கடைகளாக பார்த்துக் கொண்டு வரும் போது  தான் ஒரு வளையல் கடையில் அவன் வந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கும் போது பக்கவாட்டிலிருந்து ஒருகரம் அவனின் தோள்களை உரசியபடி வர,பரிதியின் உடலில் மின்சாரம் தாக்கியது போல் இருந்தது.

ஓரக்கண்களால் அவளை பார்த்தான் அழகான வட்ட முகம் வெளிப்பூச்சு எதுவும் இல்லாமலே மின்னியது.முதல் முறையாக ஒரு பெண்னை அவனை அறியாமல் ரசித்தான்.அவள் அந்த கடைகாரனிடம் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்.அவள் என்ன பேசுகிறாள் என்பது எல்லாம் அவனிற்கு கேட்கவில்லை அந்த கண்கள் காட்டும் அபிநயங்களை தான் அவன் விழிகள் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தது.அவள் அந்த இடத்தை விட்டு நகரும் வரை அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் நகரும் போது அந்த கண்கள் ஏக்கத்துடன் எதையோ பார்க்க அவனும் திரும்பி பார்த்தான் நீலக் கலர் கண்ணாடி வளையல்களை அவளது விரல்கள் தடவியபடி விலகியது.அவள் சென்ற அடுத்த நொடி அந்த வளையல்களை களவானி களவாடிவிட்டது.

அதை அவளிடம் கொடுக்க அவளின் பின்னே சென்று கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் உறைத்து அவன் செய்து கொண்டிருக்கும் காரியம்.வேகமாக அந்த இடத்தை விட்டு வந்துவிட்டான்.சென்னை வந்த பிறகு அனைத்தும் மாறிவிடும் என்று அவன் நினைத்திருக்க ஆனால் அவளின் நியாபகம் அவனை ஆட்டி படைக்க ஒருகட்டத்தில் முடியாமல் அவளை பார்க்க மீண்டும் அவளின் ஊருக்கு சென்றான் அவளை பார்க்க ஆனால் அவனே எதிர்பாராதவிதமாக அவனிடம் வந்து சேர்ந்தாள் அவனின் சரிபாதியாக.

“ம்ம்ம்ம்…….உன்னை பார்க்கலாம் தான் வந்தேன் ஆனா உன்னை அழைச்சிட்டு வருவேன்னு நினைக்கவேயில்லை….ஆரம்பத்துல எங்க உன்னையும் இழுந்துடுவேனோனு தான் உன்கிட்டேந்து ஓடினேன்….ஆனா….ம்ம்ம்….”என்றவன் அவளின் நெற்றியில் அழுத்தமான முத்தத்தை பதித்துவிட்டு,

“உன்கிட்டேந்து ஓட முடியலை….இனி முடியவும் முடியாது போல….”என்று வருத்தப்படுவது போல் அவன் கூறினாலும் அவன் முகத்தில் அத்தனை பொலிவு. இதை அனைத்தையும் மிருதுளா தூங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டு அவன் கூறிக் கொண்டிருக்க அவளோ அனைத்தையும் கேட்டபடி தான் அவனின் நெஞ்சில் படுத்திருந்தாள்.

“அடப்பாவி திட்டம்போட்டு  என்னை கல்யாணம் கட்டிக்கிட்டு தான் என்னை அந்த விரட்டு விரட்டினியா….இருய்யா இனி தான் உனக்கு இருக்கு….”என்றவள் முகத்திலும் அதே பொலிவு அதனுடன் அவளும் உறங்கி போனாள் அவளை  ரசித்தபடியே அவனும் உறங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!