Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் – 17

அத்தியாயம் -17

அனுவிற்கு கல்லூரியின் இறுதி ஆண்டு என்பதால் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கொடைக் கானல் டூர் செல்ல ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது.அனு கொடைக்கானல் செல்வதாக கூறி விட்டு கதிருடன் சென்னைக்கு சென்றாள்.

 

போகும் போது திண்டுக்கலில் இருந்து ஸ்லிபர் பஸ்ஸில் இருவரும் சென்னை சென்றனர். பஸ் கிளம்பியதும் கதிர் அனுவின் கையை பிடித்துக் கொண்டு “ரஞ்சு ஏன்டா அமைதியாவே இருக்குற ஏதாவது பேசுடி “



Advertisement

 

“எனக்கு பயமா இருக்குடா, நாம ஏதோ தப்பு பண்ணுற மாதிரியே தோணுதுடா “.

 

Advertisement

“ரஞ்சுமா ப்ளீஸ் என்ன பத்தி மட்டும் யோசி நம்ம கல்யாணத்தை பத்தி மட்டும் யோசி, வேற யாரை பத்தியும், எதை பத்தியும் நினைக்காத ப்ளீஸ் “

Advertisement

 

கதிர் அனுவை மடியில் படுக்க வைத்து தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்தான் அனு சற்று நேரத்தில் தூங்கி போனால் அவளை நேராக படுக்க வைத்து விட்டு அவளின் அருகில் படுத்து அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான் பின் அவனும் தூங்கி விட்டான்.

 

Advertisement

சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கி குளித்துவிட்டு கிளம்பி வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றனர்.அனுவிற்கு தேவையான புடவை நகை என்று அனைத்தும் கதிரே வாங்கி வந்து விட்டான்.

 

கோவிலில் சாமி பாதத்தில் தாலியை வைத்து வழிபாடு செய்து விட்டு இருவரும் மாலை மாத்திக் கொண்டனர். பின் முகூர்த்த நேரத்தில் கதிர்வன் தங்கச் சங்கிலியில் கோர்க்கப் பட்ட மாங்கல்யத்தை அனுவின் கழுத்தில் அணிவித்தான் அதன் பின் ரிஜெஸ்டர் ஆபீஸ்க்கு சென்றனர். 

 

அனு ஒரு பொம்மைப் போல் கதிர் கூறியவற்றை செய்து கொண்டி ருந்தாள். பின் அனைத்து திருமண சடங்குகளும், கதிர்வன் தோழர்கள் தோழிகள் முன்னால் நடத்தப் பட்டது.

 

மாலை பிலைட்யில் மதுரைக்கு வந்து அங்கிருந்து காரில் கதிரின் வீட்டிற்கு கூட்டி வந்தான்.அனுவை வாசலில் நிற்க வைத்து விட்டு உள்ளே சென்று ஆழம் கரைத்து வந்து அனுவிற்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றான்.

 

கதிரவனின் அம்மா அப்பா இருவரும் திருப்பதி சென்றிருந்தனார்.உள்ளே சென்றதும் அனுவை குத்துவிளக்கு ஏற்ற செய்து இருவரும் சாமி கும்பிட்டனார். அனுவை உட்கார சொல்லிவிட்டு பால் பழங்களை கொண்டு வந்து பாதியை அவன் சாப்பிட்டு விட்டு மிதியை அனுவிடம் கொடுத்தான்.

 

“ரஞ்சுமா ஹிட்டர் போட்டு வச்சிருக்கேன் நீ போய் குளிச்சிட்டு வா “சரி என்று தலையை மட்டும் அசைத்து விட்டு சென்றாள்.அனு ஒரு பொம்மை போல் இருப்பது அவனுக்கு கவலையாக இருந்தாலும் இப்பொழுது அனு என் மனைவி எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்.

 

ரஞ்சனி குளித்து விட்டு வரும் போது படுக்கை மொத்தமும் மலர்களால் அலங்காரிக்க பட்டு இருந்ததை பார்த்து அனுவிற்கு பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது.அவளுக்கு வியர்வை வழிய ஆரம்பித்தது. அதை பார்த்த கதிர்.

 

“செல்லம் ஏன்டா அங்கையே நிக்குற இங்க வாடா”என்று கூறி கையை பிடித்து இழுத்து கட்டிலில் அருகில் அமர வைத்தான்.

 

“என் ரஞ்சுமா சோகமாவே இருக்குற, என்ன கல்யாணம் பண்ணதுல உனக்கு விருப்பம் இல்லையா “

 

“ஏன்டா இப்படிலாம் பேசுற “

 

“நீ தான்டி என்ன அப்படி பேச வைக்குற,நமக்கு கல்யாணம் ஆன சந்தோஷம் கொஞ்சமாது உன் முகத்துல தெரியுதா, முகத்தை சோகமா வச்சிக்காத ரஞ்சு ப்ளீஸ் “

 

“சரி ஓகே நான் சோகமா இருக்காளா போதுமா, வா தூங்கலாம் நாளைக்கு காலைல எல்லாரும் கொடைக்கானல்ல இருந்து வந்துருவாங்க, நான் ஏழு மணிக்கு காலேஜ்க்கு போயாகனும்.”

 

“ரஞ்சு செல்லம் இன்னைக்கு நமக்கு முதல்ராத்திரி டா “

 

“அதுக்கு என்ன இப்போ, பேசாம போய் தூங்குடா “.

 

“உன்கிட்ட கெஞ்சிடு இருந்த ஒன்னும் வேலைக்கு ஆகாது “என்று கூறி அனுவின் உதடுகளில் தேன் குடிக்க ஆரம்பித்தான். வெகுநேரம் ஆகியும் கதிர் விலகவில்லை, அனு மூச்சுக் காற்றுக்கு ஏங்க ஆரம்பித்தால்.

 

கதிரவனின் கைகள் அவளின் மென்மையை பரிசோதித்தன அனு தடுத்தும் கூட அவன் விட வில்லை. பின் கைகள் சென்ற இடம் எல்லாம் அவனின் இதழ்கள் பதிய அனுவின் உணர்வுகளும் தூண்டப்பட்டன.

 

கதிர் தன் தடைகள் அனைத்தையும் விளக்கி அவனே அவளுக்கு ஆடையாகி போனான். கதிர் அனுவிற்கு நெருக்கமாக மாற முயற்சிக்கும் போது தான். ஏதோ நியாபகம் வந்தது போல் அனுவை விட்டு விலகி சென்று விட்டான்.

 

ஏன் இந்த விலகல் என்று அனு புரியாமல் பார்க்க “செல்லம் இப்போ நான் இதை செய்து ,நீ மாசமாகிட்டா உன்னால படிக்க முடியாம போயிரும் அதுனால இப்போ இது வேண்டாம் சாரி உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் “

 

உணர்வுகளின் உச்சத்தில் இருந்த போதும் கதிர் அனுவை பற்றி யோசித்து விலகியது. அனுவிற்கு கதிரின் மேல் உள்ள காதலை அதிகரித்தது. இரவு முழுவதும் கதிரின் மடியில் அனு தலை வைத்து படுத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தனர் இருவரும்.

 

விடிந்ததும் காலேஜ்க்கு புறப்பட்டு அனு சென்றாள். அவள் கிளம்பும் முன்பு அவளின் கழுத்தில் இருந்த தாலியை கதிர் கழட்டி வாங்கிக் கொண்டான். தாலியை கழட்ட மனமில்லாமல் கழட்டி கொடுத்தாள்.

 

காலில் இருந்த மெட்டியையும் கதிர் கழட்ட சொல்ல அனு அதை கழட்டி ஒன்றை கதிரின் கையில் போட்டு விட்டாள். மற்றொன்றை அவள் கையில் போட்டு விடுமாறு அவனிடம் கூறினாள்.

 

“டேய் புருஷா நமக்கு கல்யாணம் ஆனதுக்கு இது ஒன்னாது என்கிட்ட இருக்கட்டும், இதை பார்த்த வெள்ளி மோதிரம் மாதிரி தான் இருக்கு வீட்டுல கேட்ட பிரண்ட் எல்லாம் சேர்ந்து மொத்தமா வாங்குனதுனு சொல்லிக்கிறேன் சரியா “என்றாள்

 

கதிர் அனுவை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டு அவளை காலேஜில் விட்டு விட்டு வந்தான். இவர்கள் திருமணத்தை பற்றி அனு தோழிகள் யாரிடமும் கூறவில்லை.

 

கொடைக்கானலில் இருந்து வருவது போல் அனு அவள் வீட்டிற்கு சென்று விட்டாள். யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் இருவரும் நடந்துக் கொண்டனர்.

 

வழக்கம் போல் அனு காலேஜ்க்கு சென்று கொண்டிருந்தாள். காலை மாலை பார்த்துக் கொள்வதும் மதியம் போனில் பேசி கொள்வது மாக நாட்கள் நகர்ந்தன.

 

கதிரிடம் 350சென்ட் அளவுள்ள தரிசு நிலத்தை பிளாட் போட்டு விற்று தருமாறு நிலத்தின் சொந்தகாரர் கூறினார். அந்த இடம் நகரத்தின் மையப்பகுதில் இருந்தது. இன்னும் மூன்று மாதத்திற்குள்ள இடத்தை விற்று தருமாறு கதிரிடம் கூறினார்.

 

கதிருக்கு கமிஷனாக மூன்று சென்ட் இடம் கிடைத்தது. கதிர் மறுநாளே பிளாட் போடும் வேலையை ஆரம்பித்து விட்டான். லேண்ட் விற்பனைக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்தான். பிட் நோட்ஸ், பேனர் என்று அந்த ஊர் முழுவதும் விளம்பரம் செய்தான்.

 

அதன் மூலம் நல்ல பலன் கிடைத்தது. நிறைய வாடிக்கை யாளர் வந்து நிலத்திருக்கு முன்பதிவு செய்தனர். இதில் மகேஷ் கூட ஒரு பிளாட் வாங்கினர்.இந்த நிலத்தை 3சென்ட் ஆக பிரித்து 100 பேருக்கு விற்றான். அந்த 100பேரிடமும் பெற்ற கமிஷன் பெரிய தொகையாக வந்தது.

கதிரவா நமக்கு கூட அங்க ஒரு இடம் வாங்க வேண்டியது தானா தம்பி ” என்றார் வேலுசாமி.

“அந்த இடம் வேண்டாம்பா நான் வேற ஒரு இடம் பேசி வச்சிருக்கேன், மேல தெருல நம்ம இடம் பக்கத்துல இருக்குற இடத்தை தான் வாங்க போறேன் அப்பா “

“அங்க இடம் வாங்கி என்ன தம்பி பண்ண போற “

“பக்கத்துல உள்ள இடம் நம்ம இடம் ரெண்டும் சேத்து ஒரு கடை காட்ட போறேன் அப்பா”

“என்ன கடை தம்பி வைக்க போற “

“ஜவுளிக்கடை வைக்க போறேன் பா ” என்றான் கதிர்

கதிர் தொழிலில் முன்னேறிக் கொண்டே செல்ல தொழில் எதிரிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!