Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -20

அத்தியாயம் – 20

 

ஹாஸ்டலில் ரஞ்சனிக்கு போன் கார்டு கொடுக்கப்பட்டது அதில் உறவினர்கள் இருவர் எண்ணை மட்டுமே பதிந்துக் கொள்ளமுடியும். அந்த இரு எங்களுக்கு மட்டுமே அவளால் தொடர்புக் கொண்டு பேச முடியும். அனு அவளுடைய அப்பா மட்டும் கதிர் எண்ணை பதிவு செய்துக் கொண்டாள்.

 



Advertisement

தினமும் இரவு ஏழு மணிக்கு மேல் அனு கதிருக்கு போன் செய்து பேசுவாள். விடுமுறைக்கு அவள் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் கதிரை சென்று பார்த்துவிட்டு மாலை தான் அவள் வீட்டுக்கு செல்வாள்.

 

கடையின் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் இருந்தனர்.கதிர் நினைத்ததை விட செலவு அதிகவே வந்தது அதனால் கதிர் அதிகமா வேலை பார்க்க ஆரம்பித்தான்.

Advertisement

 

Advertisement

திண்டுக்கலிலும் ரியல் எஸ்டேட் ஆபீஸ் ஒன்றை திறந்தான் KR என்ற பேரிலேயே. அதுவும் நல்ல படியாக சென்றுக் கொண்டிருந்தது. ஸ்டார் வாட்ச் கடையை விரிவு படுத்தி மகேஷின் உதவியுடன் வெளி நாடுகளில் இருந்து செல்போன்கள் அதன் உதிரி பாகங்கள், சென்டுகள், சாக்லேட் என்று அனைத்தையும் இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தான்.கதிர் ஆரம்பித்த தொழில்கள் அனைத்தும் நல்ல லாபத்தை அளித்தன. 

 

ஒரு நாள் லட்சுமி வேலுசாமியிடம் “என்னங்க கதிரவனுக்கு வயசாகிட்டே போகுதுங்க சீக்கிரமா அவனுக்கு கல்யாணத்தை முடிச்சிரனுங்க ” என்றார்.

Advertisement

 

“நீ சொல்லுறதும் சரிதான் லட்சுமி, தரகரை வர சொல்லுறேன் அவருகிட்ட பேசி பாப்போம் நமக்கு ஒத்து வர மாதிரி ஏதாவது பொண்ணு இருந்தா பேசி முடிச்சிருவோம் ” என்று வேலுசாமி சத்தமாக கூறினார் கதிரின் காதில் விழ வேண்டும் என்று.

அவருக்கு கதிர் அனுவின் காதலை பற்றி தெரிந்திருந்தும், அதை கதிரின் வாயால் கூற வேண்டும் என்று எதிர்பார்தார் . அவர் நினைத்தது போலவே கதிரவனும் 

ரஞ்சனியின் போட்டோவை வேலுசாமி லட்சுமி இருவரிடமும் காண்பித்து,”இந்த பொண்ணு பேரு ரஞ்சனி, நானும் இவளும் இரண்டு வருசமா லவ் பண்ணுறோம், நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன் ” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

“என்னங்க இவன் திடிர்னு இப்படி சொல்லிட்டு போறான். அந்த பொண்ணு யாரு என்னனு கூட தெரியலைங்க “என்றார் லட்சுமி வருத்தத்துடன்.

 

“லட்சுமி எனக்கு இந்த விசயம் ஒரு வருசத்துக்கு முன்னாடியே தெரியும். அந்த பொண்ண கூட நான் பாத்துருக்குறேன். ஏன் நீ கூட தான் பாத்துருக்குற “என்றார்.

 

என்னது ஒரு வருசத்துக்கு முன்னாடியே தெரியுமா, அப்போ எங்க என்கிட்ட சொல்லவே இல்ல”.

 

“கதிரவன் காதலிக்கிறதை பத்தி எனக்கே முழுசா தெரியாதப்போ நான் எப்படி உன்கிட்ட சொல்ல முடியும். நாம கனடால இருந்தப்போ தான் கருப்பு என்கிட்ட சொன்னான் “

 

“அந்த பொண்ணு யாரு என்னனு உங்களுக்கு தெரியுமாங்க “

 

“அந்த பொண்ணு பேரு ரஞ்சனி, ஊரு பள்ளப்பட்டி, இப்போ திண்டுக்கல்ல, MCA படிச்சிட்டு இருக்குறா “.

 

“பொண்ணு நேர்ல பாக்க எப்படி இருப்பா, நம்ம இனம் தானா அந்த பொண்ணு “

 

“அந்த பொண்ண தான் நீ பாத்துருக்கல்ல,கதிரவன் ஆபீஸ் திறந்த அன்னைக்கு கூட கடைக்கு வந்தால அந்த பொண்ணு,உன் பையன் இந்த அளவுக்கு மாறிருக்கான்னா அதுக்கு காரணமே அந்த பொண்ணு தான், அந்த பொண்ணு குணம் தான் நமக்கு முக்கியம் இனம் கிடையாது புரிஞ்சி நடந்துக்கோ “

 

“பொறுக்கி மாதிரி சுத்திட்டு இருந்தவனை இப்படி பொறுப்பான புள்ளைய மாத்துன அந்த பொண்ணுக்கு நாம கோவில் கட்டியே கும்பிடனும் லட்சுமி ” என்றார் வேலுசாமி.

 

அனுவை நேரில் பார்க்காமலே லட்சுமிக்கு அவளை பிடித்து போனது.அனுவை பற்றி கனி மட்டும் மகேஷ்யிடம் கூறினார் லட்சுமி. அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

லட்சுமி கதிரிடம் ரஞ்சனியை பார்க்க வேண்டும் என்று கூற, கடையின் திறப்பு விழாவிற்கு அழைத்து வருவதாக கூறினான் கதிர்.

 

கடையின் கட்டுமான வேலைகள் முடிவடைந்து. திறப்பு விழாவிற்கான நாளும் குறிக்கப் பட்டது. கதிர் சூரத் சென்று ஒரு வாரம் தங்கி கடைக்கு தேவையான அனைத்து ஆடை களையும் வாங்கி வந்தான்.

 

கடையில் வேலை செய்ய எந்த தீய பழக்கமும் இல்லாத ஆண்களையும் கஷ்டபடும் குடும்பத்தை சேர்ந்த பெண்களையும் வேலைக்கு சேர்த்தான். அனு வீட்டிற்கு செல்லும் போது எல்லாம் கதிரை வந்து பார்த்து விட்டு தான் சென்றாள்.

 

ஒரு நாள் அனு கதிருடன் வண்டில் திண்டுகல்லில் இருந்து ஒட்டன் சத்திரம் வந்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று மழை வந்தத்தில் இருவரும் நன்றாக நனைந்து விட்டனர்.மழையில் நனைந்ததால் அனுவிற்கு காய்ச்சல் வந்து விட அடுத்த மாதமே செகண்ட் ஹண்டில் கார் ஒன்றை வாங்கி விட்டான்.அதன் பின் அனுவை எங்கு அழைத்து சென்றாலும் காரில் தான் அழைத்துச் சென்றான்.

 

திறப்புவிழா அன்று காலையில் விழாவிற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு அனுவை அழைத்து வர அவளுடைய காலேஜ்க்கு சென்று விட்டான்.

 

கதிர் சூரத்தில் இருந்து அனுவிற்காக வாங்கி வந்திருந்த நிறைய வேலைப்பாடுகள் செய்யப் பட்ட அனார்கலி சுடிதாரை அணிந்து வந்திருந்தால் அத்துடன் தங்க நகைகள் சிலவற்றை குடுத்து அணிய சொன்னான்.நகைகள் அணிய அனு மறுக்கவே கதிர் வற்புறுத்தி அணிய வைத்தான்.

 

திறப்புவிழாவின் போது கதிரின் அம்மா அப்பா மகேஷ் கனிமொழி மற்றும் நண்பர்கள் இருந்தனர். உறவினர்கள் யாரையும் அழைக்க வேண்டாம் என்று கதிர் கூறி விட்டான். கதிரின் கார் வந்து நின்றதும் கருப்பு பட்டாசு வெடித்தான். காரில் இருந்து கதிர் அனு, ரேணுகா மூவரும் இறங்கினார். கருப்பு வெடி வைப்பான் என்று கதிரும் எதிர் பார்க்கவில்லை.

 

“அண்ணே கதிரவன் சார் கூட வர்ற பொண்ணு யாருனே, எதுக்கு அவங்க வரும்போது பட்டாசு விடுறீங்க ” என்றான் அந்த கடையில் வேலை செய்பவன்.

 

“அவங்க தான் ரஞ்சனி அண்ணி, கதிரவன் அண்ணாவை கட்டிக்க போற வங்க,நம்மளோட வருங்கால முதலாளியம்மா “என்றான் கருப்பு.

 

கருப்பு அனுவை பற்றிக் கூறிய தகவல்கள் அங்கிருந்து அனைவருக்கும் பரவியது.

 

கதிர் அனுவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வந்தான். லட்சுமி வேலுசாமி இருவரிடமும் ரஞ்சனியை காட்டி” இவ தான் ரஞ்சனி,ஏன் வருங்கால மனைவி” என்று கூறி அறிமுகப் படுத்தி வைத்தான்.

 

கதிர் அனுவிடம் அவர்கள் காலில் விழுந்து வணங்குமாறு சைகை செய்தான். அனுவும் அவர்கள் காலில் விழுந்தால் அனுவுடன் சேர்ந்து கதிரும் ஜோடியா அவர்கள் காலில் விழுந்து வணங்கினர்.

 

“நீங்க இரண்டு பெரும் இன்னைக்கு போல என்னைக்கும் ஒத்துமையா சந்தோசமா நூறுவருஷம் வாழனும் ” என்று வாழ்த்தினார் லட்சுமி.

 

“மச்சான் இன்னைக்கு கடையோட திறப்புவிழா தான் உங்க கல்யாணம் இல்ல, என்னமோ இன்னைக்கு தான் கல்யாணம் ஆன புது மாப்பிளை பொண்ணு மாதிரி ஜோடியா கால்ல விழுறீங்க “என்றான் மகேஷ் கிண்டலாக.

 

“சொன்னாலும் சொல்லனாலும் நாங்க கல்யாணம் ஆன புது மாப்பிளை பொண்ணு தான் “என்று ரஞ்சனி மட்டும் கேக்குமாறு மெதுவாக சொன்னான்.

 

“என்ன கதிர் மச்சான் பதிலையே காணோம் “

 

“கிண்டல் பண்ணாம போங்க மச்சான் “என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

லட்சுமி ரஞ்சனியிடம் அவளை பற்றியும் அவள் குடும்பத்தை பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார். ரஞ்சனி பேசு வக்கீல் லட்சுமியை அம்மா என்று அழைத்து விட்டாள். பரவாயில்லை தங்கம் நீ இனிமேல் என்னை அம்மானே கூப்பிடு என்றார்.

 

“அனு அம்மானு கூப்புடாத, வெளியாளுங்க யாராவது நீ அவங்கள அம்மானு கூப்புடுறத பார்த்தா உன்ன அவங்க பொண்ணுன்னு நினைச்சிருவாங்க” என்றாள் ரேணுகா.

 

ரேணுகா கூறியதை யோசித்து பார்த்த அனு லட்சுமியிடம் சென்று

“நான் உங்களை அத்தையம்மானு கூப்பிடவா “என்றாள். அவரும் சிரித்துக்கொண்டே “உனக்கு எப்படி விருப்பமோ அப்படி கூப்பிடு” என்றார்.

 

நீ தான் கடையை திறந்து வைக்க வேண்டும் என்று கதிர் அனுவிடம் கூறிய போது அவள் அதை ஏற்க மறுத்து விட்டாள். கதிரின் அம்மா அப்பா தான் திறக்க வேண்டும் என்று முடிவாக அனு கூறிவிட்டாள்.

 

கதிர் ரிப்பனை வெட்டுவதற்கு அவன் அம்மா அப்பா வை அழைத்தான். லட்சுமி அனு கதிர் இருவரும் சேர்த்து வெட்டுமாறு கூற, கடைசில் நால்வரும் சேர்ந்தே வெட்டினார். கடையின் உள்ளே சென்றதும் ரஞ்சனியை குத்துவிளக்கு ஏற்ற வைத்தார் லட்சுமி.

 

அனைவரும் கடையை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர், கதிர் அனுவிடம் “செல்லமா இந்த கடை மொத்தமும் உன்னோடது தான் டா இப்போ போய் உனக்கு பிடிச்ச டிரஸ் அத்தனையும் எடுத்துக்கோ ” என்றான்.

 

ரஞ்சனி அருகில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு கதிரின் கையை பிடித்து ” i love u so much கதிர், இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா, இங்க பாரு சந்தோஷத்துல கண்ணுலாம் கலங்குதுடா “

 

“இது உன் வெற்றியோட முதல் படி தான் கதிர், இந்த மாதிரி நீ நிறைய நிறைய கடை திறக்கணும், நீ மத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருக்கனும் மாமு அதான் என்னோட சின்ன ஆசை “என்றாள் அனு.

 

கதிர் ரஞ்சனி பேசுவதையும், அவள் கண்களில் இருந்து வரும் ஆனந்தக் கண்ணீரையும், முகத்தில் தெரியும் மகிழ்ச்சியையும் பார்த்துக் கொண்டே இருந்தான். அனுவின் சந்தோஷத்திற்காக இன்னும் நிறைய கடைகள் திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

 

“செல்லம் போய் உனக்கு வேண்டிய டிரஸ் எடுத்துக்கோ டா “

 

“இப்போவே என்கிட்ட நிறைய டிரஸ் இருக்கு கதிர் நீ வாங்கி குடுத்தது. நிறைய டிரஸ் புதுசா அப்படியே இருக்கு இன்னும் போட கூட இல்லை”.

 

“இன்னைக்கு ரெண்டு டிரஸ் மட்டும் எடுத்துக்கோ டா “

 

“வேண்டவே வேண்டாம் நான் தீபாவளிக்கு வேணுனா எடுத்துக் கிறேன் “

 

“அதுக்கு இன்னும் மூணு மாசத்துக்கு மேல இருக்குடி “

 

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே லட்சுமி வந்து அனுவின் கையில் ஒரு கட்டை பையை கொடுத்தார். “எனது அத்தையம்மா இது “

 

“என் தங்கத்துக்கு நான் வாங்குன டிரஸ் இதுலாம் “

 

“இவளோ டிரஸ்ஸா, வேண்டாம் அத்தையம்மா ஏற்கனவே என்கிட்ட நிறைய புது டிரஸ் இருக்கு “

 

“நான் உனக்காக முதல் முதல்ல வாங்கி தராது வேண்டாம்னு சொல்ல கூடாது சரியா “என்றார் லட்சுமி.

 

அனு அதை வாங்கி கொண்டாள், கதிர் அவளை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தான் ” ஏன்டா இப்போ கோவப் படுற “

 

“நான் எவ்ளோ கெஞ்சுனே ஒரு டிரஸ் எடுத்தியா டி என் அம்மா வந்து குடுத்ததும் மட்டும் வாங்கிட்டா “

 

“மாமு என்னடா இப்படி எல்லாம் கோவப்படுற, பெரியவங்க தரும் போது எப்படி வேண்டாம்னு சொல்லுறது, இந்த இதை கொண்டு போய் செல்வி அக்கா கிட்ட கொடுத்து தச்சி வை சரியா “

 

“சரிங்க மேடம் நீங்க சொல்லுற படியே செஞ்சிறேன் “

 

” டேய் கதிர் ரொம்ப பசிக்குதுடா இன்னைக்கு என்ன ஸ்பெஷல் டா “

 

“எல்லாம் உனக்கு பிடிச்சது தான் கறிதோசை, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மட்டன் சுக்கா இன்னும் நிறைய இருக்கு “

 

“நீ சொல்லுறத கேக்கவே அவளோ சந்தோசமா இருக்கு, ஹாஸ்டல்ல அடிக்கடி உப்புமா, கிச்சடி தான்டா செய்யுறங்க சாப்பிடவே வெறுப்பா இருக்கு, டெய்லி கறிதோசை, பிரியாணினு கிடைச்ச செமையா இருக்கும்ல “என்றாள் அனு.

 

திறப்பு விழா முடிந்ததும் கதிர் அனுவையும், ரேணுகாவையும் காலேஜ்யில் விட்டுட்டு வந்தான்.

தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்ததால் KR ஜவுளிக்கடைக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்தான். நிறைய ஸ்பெஷல் ஆஃபர்களை அளித்தான்.

 

ஒட்டன் சத்திரம் சந்தைக்கு அருகில் இருந்த கடை ஒன்றை விற்று தருமாறு கதிரிடம் அதன் உரிமை யாளர் கூறினார்.கடையை சென்று பார்த்த கதிருக்கு கடை மிகவும் பெரியதாகவும் நகரின் முக்கியப் பகுதியில் இருந்ததாலும் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று நினைத்தான்.

 

கையில் இருந்த பணம் மொத்தத் தையும் ஜவுளிக்கடைக்கு செலவழித்து விட்டான். இப்பொழுது பணத்திருக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். பேங்கில் லோன் வாங்கி வாங்கலாம் என்று முடிவு செய்து அதை செயல் படுத்தவும் செய்தான். கடையை அவன் பெயரிலே பதிவு செய்தான்.

 

புதிதாக வாங்கிய கடையில் பேக்கரி மட்டும் ஹோட்டல் ஆரம்பிக்க முடிவு செய்தான்.24மணி நேரமும் வேலை வேலை என்று அலைந்துக் கொண்டே இருந்தான் பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்ற வெறியுடன்.

திண்டுக்கலுக்கு அருகில் 750சென்ட் அளவுள்ள நிலத்தை விற்று தருமாறு கூறினார் அதன் உரிமையாளர்.கதிர் கமிஷனாக பணம் வேண்டாம் இடமா தாங்க என்றான். அவரும் 20சென்ட் தாரேன்.ஆன தீபாவளிக்கு முன்னாடி எனக்கு எல்லாத்தையும் வித்து கொடுத்திரனும் என்றார்.

கதிரும் ஒத்துக்கொண்டான்,இடத்தை அளந்து அதை 3சென்ட், 4சென்ட், 5 சென்ட் என்று பிரித்து பிளாட் போட்டான். கேபிள் டிவி, பிட் நோட்டீஸ், பேனர் என்று எங்கு திரும்பினாலும் இடத்தின் விளம்பரம் தான். இந்த வேலையை நல்ல படியாக முடித்தால் கதிரின் பணத்தேவை அனைத்தும் தீர்ந்து அவனுக்கும் நிறைய லாபமும் இருக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!