Skip to content
Post Views: 6,429
இரும்பில் ஓர் இதயம்…..19
மிருதுளாவின் வீட்டில் அவளின் கையை இறுக பற்றியபடி அமர்ந்திருந்தாள் திவ்யா.மனதில் அத்தனை நடுக்கம் அவள் செய்தது தவறு என்று தெரியும் ஆனாலும் அவனை மனது தேடுகிறது என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறி நின்றாள்.காலை பரிதியை பார்த்தவுடன் அவள் செய்து கொண்டிருக்கும் தவறின் வீரியம் புரிய மனது கலங்கி நின்றாள்.
“ப்ச்…..திவி….இப்ப எதுக்கு அழுதுகிட்டு இருக்க….ம்மா பார்த்தாங்கன்னா….அவ்வளவு தான்…..”என்று மிருதுளா அதட்டவும் திவ்யாவின் அழுகை நிற்பதற்கு பதிலாக மேலும் கூடி தான் போனது.நாயகிக்கு இன்னும் விஷயம் தெரியாது தெரிந்தால் நினைக்கவே பயமாக இருந்தது அவளிற்கு.
“திவி….ஏய்…..ஏன்டீ அழுவுற….அவரு எதுவும் சொல்லமாட்டாரு….நான்….தெரியாம சொல்லிட்டேன்….சாரிடீ….நீ இப்படி அழாத…..”என்று மிருதுளா கூறினாள்.அவளுக்கு தன்னால் தான் அனைத்தும் சொதப்பி விட்டதோ என்கிற பயம்.
Advertisement
“ச்சு….இப்ப நான் உன்னால பிரச்சனைனு சொன்னேனா….ஆங்….”என்று திவ்யா திடீர் என்று கேட்க மிருதுளா திருதிருவென முழித்தாள்.
“அப்ப யாரால பிரச்சனைனு நீயே சொல்லிடு….குட்டி பிசாசு….பாவம் என் பொண்டாட்டி உன் அளவுக்கு இல்லைல பாரு….எப்படி கண்ணை விரிச்சு பார்த்துக்கிட்டு நிக்குறானு….”என்று கேட்டபடி வீட்டின் உள்ளே வந்தான் இளம்பரிதி.அவனைக் கண்டவுடன் இரு பெண்களும் எழ,
“ஏய் உட்காரு….”என்று தன் மனைவியை அடக்கி உட்கார வைத்தவன் திவ்யாவிடம் திரும்ப அவளோ தலையை குனிந்து நின்று கொண்டாள்.
Advertisement
“அடியேய் வெளில மழை பெய்யுதானு பாரு…..ஒரு குட்டி பிசாசு…..அமைதியா இருக்கு…அதுவும் நான் வந்ததுக்கு அப்புறமும்….”என்று மிருதுளாவை பார்த்து கூற,
Advertisement
“நா…நான் பண்ணது தப்பு தான்….”என்று மிக மெல்லியதாக வந்தது திவ்யாவின் குரல்.
“ஆ….ஆ…ஆங்…..என்ன சொன்ன….ஏன்டீ….உனக்கு எதாச்சும் கேட்டுச்சு….எனக்கு எதுவும் கேட்கலையே….”என்று பரிதி நக்கலாக கேட்க,மிருதுளாவோ அவனை முறைத்துவிட்டு,
“திவி நீ கிளம்பு….ம்மா தேடப்போறாங்க….போ….”என்று கூற,திவ்யாவோ அசைவேனா என்றபடி நின்றாள்.
Advertisement
“நான் போகமாட்டேன்….நான் தான் தப்புன்னு சொல்லிட்டேன்ல…அப்புறம் எதுக்கு ராசா ஓவரா போற….”என்று திவ்யாவும் எகிறிக் கொண்டு நிற்க,திவி பேக் டூத பார்ம் என்று மிருதுளா கூறிக் கொண்டாள்.
“ம்ம்ம்….அதான பார்த்தேன்…என்னடா எலி பம்முதுனு….பார்த்தியாடீ பேச்சை….”என்று பரிதி பல்லை கடித்துக் கொண்டு மிருதுளாவை பார்த்துக் கேட்க,
“உங்க இரண்டு பேருக்குள்ள என்னை ஏன் இழுக்குறீங்க…….”என்ற மிருதுளா அமைதியாக அமர்ந்துவிட்டாள்.இவள் வெளியில் சென்றால் நாயகி பிடித்துக் கொண்டு திவ்யாவை தான் கேட்பார்.அவருக்கு இன்னும் பயம் தான் பரிதியின் மீது ஆனால் தன் மகளை ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றியிருக்கிறான் என்கிற மரியாதை உண்டு.
“அட என்னடீ நீ….நீ தான எப்போதும் என்னை நீங்க கண்டுக்கலனு சொல்லுவ….”என்று கூறிக் கொண்டே அவளை பார்த்து கண் அடிக்க,
“எதே இது தான் நீங்க கவனிக்குற லட்சணமா….உங்களைஐஐஐஐ…..”என்று பல்லை கடித்த மிருதுளா,
“போதும் விளையாட்டு அவ கிட்ட ஒழுங்கா பேசுங்க….அவ பயப்படுறா…..ம்மாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்….”என்றவள் திவ்யாவிடம் திரும்பி,
“ஏன்டீ…..நீ அந்த பையனை விரும்புற சரி….ஆனா அவனை பார்த்தா பெரிய இடத்து பையன் போல இருக்கானேடீ….அது தான் பயமா இருக்கு….”என்று நடுக்கத்துடன் கூற,
“அது…அவருக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும்….அவரும் உன் ராசாவோட தான் வேலை பார்க்குறாரு….”என்றுவிட்டு அவனை பார்க்க,
“என்ன உங்ககூட வேலை பார்க்குற பையனா….நான் கூட ஏதோ பெரிய இடம்னு நினைச்சேன்…”என்று மிருதுளா ஆசுவாசம் அடைய,
“அந்த கேரேஜே அவனோடது தான்….மாணிக்கம் சாரோட பையன்…..பேரு மகேஸ்வரன்….”என்று பரிதி குண்டை தூக்கி போட திவ்யா அதிர்ந்து நின்றுவிட்டாள்.மனதில் சொல்லமுடியாத வலி பரவ தொடங்கியது அவன் யாரென்றே தெரியாமல் அவனை நினைத்தது தனது தவறு என்று நினைத்தவள்,
“நான் கிளம்புறேன்….”என்றவளின் குரலே கரகரப்பாக மாறியிருக்க,மிருதுளாவோ கலங்கி பரிதியின் முகத்தை பார்த்தாள்,அவனோ தோள்களை குலுக்கி கொள்ள,
“என்னங்க நீங்க….அவ அழறா….”என்று எழுந்து அவனின் கரத்தை பிடிக்க,
“அவன் காதலிக்கெல்லாம் மாட்டானாம்….கல்யாணம் தான் பண்ணிப்பானாம்…..அதுக்கு கொஞ்சம் பொறுத்திருக்க சொன்னான்….”என்று கூறிவிட்டு பரிதி சென்றுவிட,அழுது கொண்டே வாசல் வரை சென்றவள் பரிதியின் வார்த்தைகளில் அழத முகம் விசிககிக்க வெட்கத்துடன்,
“அடியே உன் ராசா கிட்ட நான் எவ்வளவு நாள் ஆனாலும் அவருக்காக வெயிட் பண்ணுவேன்னு சொல்லிட சொல்லு….”
“நான் ஏன் சொல்லனும்…..எனக்கு வேற வேலையில்லை….”என்றவன் முகம் கை,கால் அலம்பியவாரே கூற,
“சரி நானே சொல்லிக்குறேன்….”என்றுவிட்டு திவ்யா நகர,
“அவன் வரமாட்டான்….நான் வரக்கூடாதுனு சொல்லியிருக்கேன்….நீயும் அவனை தேடாத….உன் வேலையை மட்டும் பாரு….”என்றவன் குரல் அழுத்தமாக இருந்தது.இதுவரை இருந்த இலகு தன்மை அதில் இல்லை என்பதை உணர்ந்த மிருதுளா நடுக்கத்துடன் அவனின் கையை பற்ற,
“சரி நான் பார்க்க போகலை….”என்ற திவ்யாவும் அவனின் குரல் மாற்றத்தை புரிந்து கொண்டாள்.அவனை பார்க்க வேண்டும் மனது அடித்துக் கொண்டாலும் அண்ணன் கூறினால் ஏதோ இருக்கும் என்று அவள் நினைத்திருக்க அதன் படியே தான் பரிதியும் கூறினான்.
“அவன் இன்னும் வாழ்க்கையில செட்டில் ஆகல….அதோட அவங்க அப்பா,அம்மா என்ன சொல்லுவாங்கனு தெரியலை…..”என்றவன் நீண்ட மூச்சை இழுத்துவிட்டு,திவ்யாவின் அருகில் சென்று,
“நான் உன்கிட்ட இதை செய்,செய்யாதனு சொல்லமாட்டேன்…..நீயே யோசிச்சு முடிவு பண்ணு….இது தான் வாழ்க்கைனு உட்கார்ந்திடாத….ஒருவேளை அது இல்லனாலும் நாம ஓடனும் அதுக்கு தயாராகிக்க….அது தான் உனக்கும் உங்க அம்மாக்கும் நல்லது….”என்றவன் பின் என்ன நினைத்தானோ அவனே,
“ஆனா மகேஸ்வரன் நல்லவன்….கண்டிப்பா உன்னை தேடி வருவான்னு நம்புறேன்….ஒரு…ஒருவேளை இல்லைனாலும்….”என்றுவிட்டு திவ்யாவின் முகத்தை பார்க்க அவளோ கலங்கிய விழிகளுடன்,
“எனக்கு புரியுது ண்ணா…..ஏன் அவன் இல்லைனா என்ன நீங்க எல்லாரும் இருக்கீங்களே எனக்கு….நான் என்னை மாத்திக்க முயற்சி எடுத்துப்பேன்….”என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.மிருதுளா அவளின் பின்னே செல்ல,
“வேண்டாம் விடு….அவளே தெளிஞ்சு வந்தா தான் நல்லது….”என்றுவிட்டான் பரிதி.ஆனாலும் மிருதுளாவிற்கு தோழியின் நிலை மனதை பிசைய,
“எங்க அதான் அந்த பையன் வீட்ல பேசுறான்னு சொல்லுறேனே இப்பவே பேச சொல்லுங்களேன்….”என்று கூற,
“நிச்சியம் மாணிக்கம் சார் இதுக்கு ஒத்துக்க மாட்டாரு….”என்று பரிதி உறுதியாக கூற,
“அப்புறம் எப்படிங்க….”என்றாள் தவிப்பாக,
“அதுக்கு தான் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லுறேன்…அவனோட சொந்த சம்பாத்தியம் இல்லாம அவன் அவங்க வீட்ல பேச முடியாது…அது பிரச்சனைல தான் முடியும்….”என்று கூறிவிட்டு படுக்க ஆயத்தமாக,மிருதுளா தான் தூக்கமில்லாது தவித்தாள்.அனைத்தும் நல்லவிதமாக முடிந்தால் சரி அப்படியில்லையேல் நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது.அவள் ஏதோ நினைவில் இருக்க அவளின் இடையில் ஒரு கை அழுத்தமாக பதிய திடுக்கிட்டவள்,
“ப்ச்….நீங்க வேற…எனக்கு பயமா இருக்கு….”என்று கூற,அவளை பின்னிருந்து அணைத்த பரிதி அவளின் கழுத்தில் முகத்தை புதைக்க,
“ஏங்க நான் இங்க என்ன பேசிக்கிட்டு இருக்கேன்….உங்களுக்கு இப்ப தான் என்னை கொஞ்சனும்னு தோணுதா….”என்று மிருதுளா கடுப்பாக கேட்க,
“ம்ம்…..இப்ப தான் தோணுது….நான் என்ன பண்ண…”என்றவனின் பதிலில் அவனை தள்ள பார்க்க அவனோ இன்னும் அவனுடன் இழைந்தான்.ஒருகட்டத்தில் அவனது செய்கையில் கூசி சிலிர்த்தவள்,
“விடுங்க….பாப்பா இருக்கு….”என்றவுடன் கழுத்திலிருந்து முகத்தை எடுத்தவன்,
“எனக்கு தெரியும்….நான் சும்மா உன்னை கட்டிபிடிச்சிக்கிட்டு தூங்க தான செய்யுறேன்….நீ தான் பேசி கிட்டே இருக்க….”என்றவன் அவளின் கன்னத்துடன் கன்னம் இழைந்தவாரே கூற,
“ப்ச்…நீ….நீங்க முதல்ல ஒழுங்கா ப்…ப்…படுங்க….”என்று அவனை தன்னிடம் இருந்து தள்ளி படுக்க வைத்தவள் திரும்பி அவனின் நெஞ்சில் தலை வைத்து படுத்து,
“உங்களுக்கு எப்ப ரொமான்ஸ் பண்ணும்னே தெரியாதா….”என்று கேட்க பரிதி அவளின் நெற்றியில் அழுத்தமாக தனது அதரத்தை பதிக்க,
“ம்ம் தெரியுமே அதான் செய்யுறேன்…நீ தான் வேண்டாம்னு சொல்லுற….”என்றவனின் நெஞ்சில் மொத்த,அவளின் கைகளை பிடித்து இழுத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டவன்,
“ஏய்…ஏன் பயப்படுற…எல்லாம் நல்லதே நடக்கும்னு நம்பு….எனக்கு இப்ப தான் அந்த நம்பிக்கை கொஞ்சம் வந்திருக்கு….”என்றவன் அவனை ஒரு கையால் அணைத்துக் கொண்டே கண்களை மூடினான்.
திவ்யாவோ தனது வீட்டில் படுத்து விட்டத்தை வெறித்தபடி இருந்தாள் மனது மெல்ல பரிதியின் வார்த்தைகளை அசைப்போட்டப்படி இருந்தது.அண்ணன் கூறுவது சரி தான் சில நேரங்களில் சில விஷயங்களில் நாம் பொறுமையை கடைபிடிக்க தான் வேண்டும் அப்போது தான் வாழ்வு நல்ல முறையில் அமையும்.நம்புவோம் நமக்கும் நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைப்போம் ஒருவேளை அதில் தோற்றாலும் நாம் விழாமல் இருக்க வேண்டும் என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.இப்போது மனதில் பார்க்கலாம் வாழ்க்கை எனக்கு வைத்திருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்கிற தெளிவு இருந்தது.
மகேஸ்வரனும் அவனின் வீட்டில் தூக்கத்தை துளைத்து தான் இருந்தான் ஆனால் அவன் திவ்யா அளவிற்கு குழப்பிக் கொள்ளவில்லை அவன் அவன் முடிவில் தெளிவாக இருந்தான்.அதன் முதன் கட்டமாக பரிதி கூறியபடி தனக்கான முதல் தொழிலில் இறங்க முடிவு செய்தவன் தான் நாளை தந்தையுடன் என்னனென்ன பேச வேண்டும் எப்படி இதை அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று அனைத்தையும் முடிவு செய்துவிட்டு தான் தூங்கினான்.
காலை பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறையில் விடிந்தது.மிருதுளாவிற்கு கணவன் பார்த்துக் கொள்வான் அவன் திவ்யாவின் வாழ்வை நல்ல முறையில் தான் அமைத்துக் கொடுப்பான் என்ற நம்பிக்கை இருந்தது.திவ்யா இரவு எடுத்த முடிவின் படி எப்போதும் போல் தன்னை தனது வேலைகளில் புகுத்திக் கொண்டாள்.மனதில் தெளிவு இருந்தால் எதற்கும் அச்சம் கொள்ள தேவையில்லை அதனால் மனதை ஒருநிலை படுத்தி தன் அன்றாட வேலைகளை செய்ய தொடங்கினாள்.மகேஸ்வரன் அன்று தந்தையுடன் பேசவுள்ளதால் சீக்கிரமே கேரேஜிற்கு வந்துவிட்டவன் பரிதிக்கும் அழைத்து கேரேஜிற்கு வரும்படி கூறினான்.
மாணிக்கம் எப்போதும் போல் தனது நேரத்திற்கு கேரேஜிற்கு வந்து அனைத்தையும் பார்வையிட்டுவிட்டு தனது அறைக்குள் நுழைந்து பத்து நிமிடம் கழித்து மகேஸ்வரனும்,பரிதியும் வந்தனர்.இருவரும் நல்ல நண்பர்கள் என்று மாணிக்கத்திற்கு தெரியும் அவரின் கொள்கைகள் அவருடன் தான் மகனிடம் அதனை திணிக்கமாட்டார்.
“என்னப்பா இரண்டு பேரும் வந்திருக்கீங்க….என்ன விஷயம்…..”என்று நேரிடையாக அவர் விஷயத்திற்கு வர,பரிதி மகேஸ்வரனை பார்த்தான்.பரிதி ஆரம்பத்திலேயே கூறிவிட்டான் எனக்கு இதை பற்றி முழுமையாக தெரியாது அதனால் நீ தான் இதன் குறை,நிறைகளை கூற வேண்டும் என்று.
“ப்பா….உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்…”
“சொல்லுப்பா….எது அந்த கம்பெனில பேசி ஏதோ பர்மிஷன் வாங்கனும்னு சொன்னியே அதுவா….”என்று சரியாக கணித்து கேட்க,ஆமாம் என்று தலையாட்டியவன்.தான் சேகரித்த அனைத்தையும் கூறி அதன் குறை,நிறைகளை கூறிவிட்டு,
“ப்பா….நமக்கு இதுல இரண்டு மடங்கு லாபம் இருக்கு….”என்று கூற அனைத்தையும் கேட்ட மாணிக்கம்,
“நீ சொல்லுறது எல்லாம் சரிதான்பா…ஆனா இது பணக்காரங்க வச்சிருக்க கார்…..அவங்க எல்லாம் சொந்தமாவே கேரேஜ் வச்சிருப்பாங்க….அதோட நாம முதலீடு போட்டவுடனே எல்லாம் நமக்கு இது லாபம் தராது….”என்று யோசனையுடன் கூற,அதுவரை அமைதியாக இருந்த பரிதி மாணிக்கத்திடம்,
“சார் இதை உங்க பையன் தனியா மட்டும் செய்ய போறதில்லை நானும் இதுல என் பங்கை போடப்போறேன்….”என்று கூற,
“எவ்வளவு….”
“என்கிட்ட இப்ப ரொக்கமா ஒரு இரண்டு லட்சம் இருக்கு….”என்று கூற மாணிக்கம் அவனை முறைத்தார் இதெல்லாம் ஒரு பணமா என்று.ஆம் அவர்கள் அந்த கார்களுக்கு சர்வீஸ் செய்ய கேரேஜில் ஒரு பகுதியே மாற்ற வேண்டும் அதற்கே செலவாகும் அதோடு அந்த கம்பெனிகளின் அனுமதி வாங்க என்று பணம் கட்ட வேண்டும்.இதை எல்லாம் கணக்கீடு செய்து மகேஸ்வரன் பத்து லட்சம் ஆகும் என்று கூறினான்.இவன் என்னவென்றால் வெறும் இரண்டு லட்சத்தை வைத்துக் கொண்டு நானும் இதில் பங்கு தார் என்கிறான் என்று நினைத்தவர் கூறவும் செய்தார்.
மகேஸ்வரனுக்கு தந்தை இப்படி பரிதியை கேட்ட விதம் பிடிக்கவில்லை அவன் ஏதோ பேச வரும் முன் மாணிக்கமே,
“இங்க பாருப்பா….நீங்க பிரண்ட்ஸ் உங்களுக்குள்ள நான் வரலை அதே மாதிரி இது தொழில் இதுல நீங்க உங்க பிரண்ட்ஷிப்பை கொண்டு வராதீங்க….நான் ஒத்துக்கமாட்டேன்…..அவ்வளவு தான்….”என்று முடிவாக கூறிவிட,
“நான் நாலு லட்சம் பணம் போடுறேன்….”என்றான் பரிதி உடனடியாக,அவனிற்கு இதில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்று முன்பே மகேஸ்வரனிடம் கூறிவிட்டான்.அதோடு மாணிக்கம் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்று முன்பே தெரியும் அதனால் பொறுமையாகவே பேசினான்.
“ஏன்பா…நான் தான் சொல்லுறேனே இது சரிவராதுனு…..அப்புறம் எதுக்கு இதை பத்தி பேசி நேரத்தை வீணாக்குறீங்க….போங்க போய் வேலையை பாருங்க….”என்று மாணிக்கம் சட்டென்று கத்தரித்தது போல பேசிவிட பின் சில நிமிடத்தில் தன்னை நிதான படுத்திக் கொண்டவர் பரிதியிடம் திரும்பி,
“ஏன்பா முதல்ல பணத்தை எப்படி புரட்டுவ….அதை சொல்லு…..”என்றவர் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் நிதானமாக,
“இங்க பாருப்பா….நான் உன்னை கீழா எல்லாம் நினைக்கலை…ஆனா நீயே இப்ப தான் வேலைக்கு சேர்ந்த உனக்கு குடும்பம் இருக்கு நீ பாட்டுக்கு தொழில் தொடங்குறேன்னு அவசரபட்டு நாளைக்கு கஷ்படக் கூடாது பாரு….அதுக்கு தான் கேட்குறேன்….”என்றவர் பரிதியை பார்க்க,அவனோ நிதானமாக,
“என்கிட்ட எங்க அம்மாவோட நகை கொஞ்சம் இருந்தது அதை வித்துட்டேன் அதுல வந்த பணம் ஒரு லட்சம் அதோட என் சம்பள பணம் இரண்டு சேர்த்து தான் நான் சொன்னேன்….”என்றான்.மகேஸ்வரனுக்கு இதெல்லாம் முன்பே தெரியும் என்பதால் அவன் தந்தையை பார்க்க,
“சரி மேற்கொண்டு இரண்டு லட்சம் எங்க வாங்கலாம்னு இருக்க…..”
“தெரியலை….”என்று கூற மகேஸ்வரன் தலையில் அடித்துக் கொண்டான்.அவன் முன்பே கூறி தான் அழைத்து வந்தான் நண்பனிடம் வாங்குவேன் என்று கூறு என்று.மாணிக்கம் மகனை அதிருப்தியாக பார்த்தவர்,
“இது சரிவராதுப்பா…நீங்க உங்க வேலையை பாருங்க…அது தான் நல்லது…உனக்கும் குடும்பம் இருக்கு உன் சம்சாரம் வேற இப்ப மாசமா இருக்கு…பணத்தேவை இருக்கும்….உனக்கு தெரியாது இப்ப தான் பணத்தேவை அதிகமா இருக்கும் அதனால கவனமா இரு….”என்று பரிதியையும் எச்சரித்துவிட்டு சென்றுவிட்டார்.
பரிதி யோசனையுடன் அமர்ந்திருந்தான் அது மதியவேளை மகேஸ்வரன் அவனிடம் வந்து,
“ஏய் ஏன்டா இப்படி உட்கார்ந்திருக்க….டேய் அப்பா பேசினத தப்பா எடுத்துக்காத….”என்று சங்கடத்துடன் தான் கூறினான்.அவனிற்கு தந்தையின் பேச்சு பிடிக்கவில்லை அவர் பரிதியின் இயலாமையை சுட்டி காட்டுகிறார் என்று தான் நினைத்தான்.முன்பிருந்த பரிதியாக இருந்தால் அவனும் அதை தான் நினைத்திருப்பான் ஆனால் இப்போது இருக்கும் பரிதிக்கு காலம் அனைத்தையும் கற்று கொடுத்திருக்கிறதே அதனால் அவனிற்கு கோபம் வரவில்லை மாறாக யோசனை எப்படி அதிக வருமானம் ஈடுவது என்று தான்.அதை மகேஸ்வரனிடம் கூற அவனோ,
“டேய் நமக்கு இப்ப தான் லாரி வரத்து அதிகரிச்சிருக்கு….இதுவே நாம நைட்டும் கேரேஜை திறந்து வச்சிருந்தோம் நமக்கு இன்னும் அதிகமாகும்….”என்று யோசனை கூற,பரிதி கப் என்று பிடித்துக் கொண்டான்.
“சரியா சொன்ன…சார் கிட்ட இன்னையிலேந்தே கேரேஜை நைட் திறக்குறத பத்தி பேசலாம் வா….”என்று அவனையும் இழுத்து சென்றான்.
“அடேய் கொஞ்சம் கேப் விடுடா….இப்படி தொடர்ந்து அடிச்சா நான் தாங்கமாட்டேன்….காலையில நடந்ததுக்கே எனக்கு என்ன மண்டக பொடி வீட்டிக்கு போய் இருக்குனு தெரியலை….”என்று மகேஸ்வரன் புலம்ப அதைக் கேட்க பரிதி இருந்தால் தானே அவனோ மாணிக்கத்திடம் அனைத்தையும் கூறி சம்மதமும் வாங்கியிருந்தான்.மாணிக்கத்திற்கு புது தொழிலில் இறங்க தான் பயமே தவிர மற்ற எதிலும் எந்த தடையும் இல்லை.அதோடு அவருக்குமே சிலர் கூறி தான் இருந்தனர் கேரேஜ் நைட் திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று அதனால் பரிதி கூறயதற்கு சரியென்றுவிட்டார்.
அன்றிலிருந்து பரிதி முழுநேரமும் கேரேஜ் என்று தான் கிடந்தான்.இதில் மிருதுளாவிற்கு தான் கஷ்டமாகி போனது அவன் இல்லாமல் தூக்கம் வருவேனா என்று தவிக்க திவ்யா தான் சத்தம் போட்டு தூங்க வைப்பாள்.அதோடுவிடாது பரிதியிடமும் சண்டையிடுவாள்,
“ஏன் ராசா இப்படி படுத்தி எடுக்குற….உன் ராணி நீ இல்லாம தூங்க மாட்டேங்குறா…..நீ என்னடானா….இப்படி வேலை வேலைனு அலையுற….”என்று கத்திவிட்டு செல்ல,
ஒருநாள் காலைவேளையில் தூக்கம் கலைந்த பரிதி கண்டது தன் மீது சுகமாக தூங்கி கொண்டிருக்கும் மிருதுளாவை தான் இன்று ஞாயிறு என்பதால் வீட்டில் இருந்தாள்.அவளை மெல்ல நகட்டி படுக்க வைத்தவன் மெல்ல எழ பார்க்க அவனின் கைகளை பிடித்த மிருதுளா,
“எப்ப வந்தீங்க….ஏன் இப்படி இருக்கீங்க….என்னால முடியலை….”என்று சோர்வாக கூற,
“கொஞ்சம் வேலை அதிகம் அதான்…..நீ உன் உடம்பை கெடுத்துக்காதடீ….நான் கொஞ்ச நாள் வரைக்கும் இப்படி தான் வருவேன் என்னை எதிர்பார்க்காத….”என்றுவிட்டு எழ,
“ஏன்….”
“ப்ச்….ஏன்னா….எனக்கு பணம் வேணும் அதுக்கு உழைச்சா தான பணம் கிடைக்கும்…அதுக்கு தான் ஓடுறேன் போதுமா….சும்மா என்னை கேள்வி கேட்டு உயிரை எடுக்காத….”என்று கத்திவிட்டு சென்றுவிட மிருதுளாவிற்கு கண்களில் நீர் துளிர்த்தது.ஆசை வார்த்தைகள்,அரவணைப்பு எல்லாம் அவனிடமிருந்து கிடைக்கும் நேரம் இரவு தான் அதுவும் இப்போது இல்லாமல் போனது.மிருதுளா அதையே நினைத்து வருந்த திவ்யா தான் அவளை வழி படுத்தினாள்.
“அடியேய்….இப்ப அண்ணன் என்ன சொல்லிடுச்சுனு….இப்படி அழுதுகிட்டு இருக்க….வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கனும் தான சொல்லுது….உனக்கு மருத்துவ செலவுக்கு ஆகும்னு நினைக்குது….இதுல என்ன தப்பிருக்கு….நீயும் கொஞ்சம் யோசி மிருது….”என்றுவிட மிருதுளாவுக்கும் அவள் கூற வருவது புரிந்தது தான் ஆனாலும் மனது பரிதியை தான் நாடியது.பின் அவளே,
“மிருது….இது எல்லாம் அவரு நமக்காக தான் செய்யுறாரு….நீ தான நல்ல வேலைக்கு போகனும்னு ஆசைப்பட்ட….இப்ப நீயே அவரை தடுக்குற மாதிரி நடந்துகிட்டா அவரும் என்ன செய்வாரு….அதனால நீ கொஞ்சம் அனுசரிச்சு போ….”என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.அதன் படி நடக்கவும் செய்தாள் அதனால் பரிதியின் வீட்டில் பிரச்சனை தீர்ந்தது.ஆனால் தொழிலில் அவனுக்கு பிரச்சனை வளர்ந்து கொண்டிருந்தது.அதை தீர்க்க அவன் எடுத்த அதிரடி முடிவில் மகேஸ்வரன் தான் அரண்டுவிட்டான்.
error: Content is protected !!