Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் – 21

அத்தியாயம் – 21

அனு காலேஜ்க்கு சென்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. காலையில் அனு ஹாஸ்டலில் இருந்து அவளது வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள்.

“என்ன அனு காலையிலேயே சாப்பாட்டை நல்லா கட்டு கட்டுன்னு கட்டிட போலயே நடக்க முடியாம மெதுவா நடந்துகிட்டு இருக்குற “

” பீட்டர் அண்ணா நானே செம்ம கடுப்புல போயிட்டு இருக்கேன் நீங்களும் வெறுப்பேத்தாதீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன் “



Advertisement

“காலையிலேயே எதுக்கு பாப்பா கடுப்புல இருக்குற என்னாச்சி மா உனக்கு “

” நேத்து நைட் வீட்டுக்கு கால் பண்ணி பேசிட்டு கேன்டினுக்கு கொஞ்சம் லேட்டா போய்ட்டேன் சாப்பாடு புள்ள காலியாகிருச்சு இரண்டே இரண்டு இட்லி மட்டும் தான் கிடைச்சது. சரி இப்போவது வேகமா போய் சாப்பிடலாம்னு பார்த்த உப்புமாவ செஞ்சி வச்சுருக்காங்க “

“உப்புமாவ பார்த்ததுமே கடுப்பா கிருச்சு அண்ணா, பயங்கரமா பசிக்குது சாப்பிட வேற ஏதும் இல்லாம இந்த பிஸ்கட் எடுத்துட்டு போறேன் கிளாஸ்க்கு “என்றாள் சோகமாக.

Advertisement

“பாப்பா இன்னைக்குனு பாத்து நானும் லஞ்ச்பாக்ஸ் கொண்டு வரல, அனு பேசாம வெளிய போய் சாப்பிட்டு வரலாமா “

Advertisement

“நாம இரண்டு பேரு மட்டுமா ” என்றாள் அதிர்ச்சியாக

“ஆமா நாம ரெண்டு பேரும் லவர்ஸ் பாரு ஜோடியா போய் சாப்பிட, லூசு போய் உன் கேங்கை கூட்டிடு வா, நான் போய் என் கேங்கை கூட்டிடு வாரேன் எல்லாரும் ஒண்ணா போலாம் “

“போய்ட்டு வரதுக்குள்ள கிளாஸ் லேட் ஆகிரும்ல அண்ணா “

Advertisement

“இன்னைக்கு உனக்கு முதல் பீரியட் நடக்காது,அந்த மேடம் இன்னைக்கு லீவு போய் எல்லாரையும் கூட்டிடு வா”

“சரி அண்ணா நான் போய் கூட்டிடு வாரேன் “என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அனு ரேணுகா இருவரும் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அருகில் இருந்த பென்ச் ஒன்றில் பிட்டர் அவனுடைய பிரண்ட்ஸ்களுடன் அமர்த்திருந்தான்.

பிட்டர் குரூப்பில் மொத்தம் ஐந்து பேர் பிட்டர், ஜெகன், விக்கி, வனிதா, உஷா ஆகியோர். ஜெகன் அனுவையும் ரேணுவையும் அழைத்து ராகிங் செய்ய ஆரம்பித்தான்,அனுவை பார்த்து அவன் அமைதியான பெண் என்று நினைத்து கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த அனு பின் அவர்கள் ஐவரையும் வைத்து கலாய்த்து தள்ளி விட்டாள். “அம்மா தாயே உன்ன தெரியாம கிண்டல் பண்ணிட்டேன் இதோட விட்டுரு போதும் அழுதுருவேன் ” என்றான் பிட்டரின் நண்பன் ஜெகன் .

அனு ஜெகனை பார்த்து சிரிக்க ஆரம்பித்தால், அதை பார்த்த வனிதா
“டேய் பிட்டர் இந்த பொண்ணு சிரிக்குறாத பார்த்தா நீ சிரிக்குற மாதிரியே இருக்குடா “என்றாள்.
அதன் பின் அனைவரும் அனுவை உற்று கவனித்தனர். அனு ஒரு சாயலில் பிட்டரை போலவே இருந்தாள்.

“ஆமா மச்சான் உனக்கு ஒரு தங்கச்சி இருந்தா இந்த பொண்ண மாதிரி தான்டா இருப்பா “என்றான் விக்கி.

“டேய் ஓவரா ஓட்டத்திங்கடா, விட்டுருங்க என்னைய “என்றான் பிட்டர்.

“பிட்டர் நிஜமா தான் சொல்லுறோம் நம்புடா “என்றாள் வனிதா.

“அந்த பொண்ணு என்னை மாதிரி இருந்தா இருந்துட்டு போகட்டும் டா இப்போ என்ன அதுக்கு ” என்றான் பிட்டர்.

“உனக்கு தான் சிஸ்டர் இல்லல அண்ணா மட்டும் தானா பேசாம இந்த பொண்ண உன் தங்கச்சிய எதுக்கோடா, இப்படி ஒரு வாயாடி தங்கச்சி உனக்கு இருந்தா நல்லா தானா இருக்கும் “என்றான் ஜெகன்.

“சீனியர் பேசாம என்னை உங்க தங்கச்சியா தத்து எடுத்துக்கோங்க சரியா “என்றாள் அனு கிண்டலாக.

“இது கூட நல்ல ஐடியாவ இருக்கே ” என்றான் விக்கி.

“ஹலோ என்ன கிண்டலா சீனியர்னு பாக்குறேன் இல்ல, கல்லால அடிச்சி மண்டைய ஒடச்சிருவேன் “

“ஆத்தாடி நீ செஞ்சாலும் செய்வ, என்ன ஆள விடுமா, நான் உன்ன ஏதுவும் சொல்லல போதுமா “

“இப்போ என்ன உங்களுக்கு வேணும்,பிட்டர் அண்ணா இங்க வாங்க இன்னைல இருந்து நான் உங்க கூட பிறக்காத சகோதரி சரியா, இந்தாங்க இந்த சாக்லேட்ட பிடிங்க, நம்ம உறவா இனிப்போடா ஆரம்பிப்போம் “என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

“பிட்டாரும் அதை மகிழ்ச்சியோடு வாங்கி கொண்டான் “.

விளையாட்டாக ஆரம்பித்த பேசு வார்த்தையால் தங்கை இல்லாத பிட்டாரு ஒரு தங்கை கிடைத்து விட்டாள். இவர்களின் உறவு ஆறு மாதங்கள் கடந்தும் அப்படியே சென்று கொண்டிருக்கிறது.ஒரு நாள் பிட்டர் அவனது அம்மாவை கல்லூரிக்கு அழைத்து வந்து. “இவதா அம்மா என்னோட வாயாடி தங்கச்சி அனு ” என்று கூறி அறிமுக படுத்தி வைத்தான்.

பிட்டரின் அம்மாவும் அனுவை தான் மகளாக தான் பார்த்தார். வீட்டில் ஏதாவது ஸ்பெஷலாக செய்தால் அதை அனுவிற்கு குடுத்துவிடும் அளவுக்கு அவள் மீது பாசத்துடன் இருந்தனர் பிட்டரின் குடும்பத்தார். இந்து கிறிஸ்டின் என்ற வேறுபாடு இல்லாமல் அனுவும், பிட்டாரும் நல்ல நண்பர்களாகவும், அண்ணன் தங்கையாகவும் இருந்தனர்.

அனு சென்று அவள் நண்பர்களை அழைத்து வந்தாள். அனுவின் குரூப்பில் அனு,ரேணுகா, நர்மதா, ஆர்த்தி, வெங்கட் மற்றும் மணிகண்டன் ஆகிய ஆறுபேரும் இருந்தனர்.

இரண்டு குரூப்பும் சேர்த்து மொத்தம் பதினோரு பேர் 5வண்டியில் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர். இவர்கள் ஹோட்டலுக்குள் நுழைந்ததில் இருந்து ஒரே சிரிப்பு சத்தமும், பேச்சு சத்தமும் தான் கேட்டுக் கொண்டே இருந்தது. அங்கு சாப்பிட வந்தவர்கள் கூட இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் நம் கதிரவனும் ஒருவன்.

கதிர் திண்டுக்கலில் உள்ள KR ஆபீஸ் போகும் வழியில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்பொழுது அங்க கேட்ட பேச்சு சத்தத்தில் திரும்பி பார்க்க அங்கு அனு அவளுடைய நண்பர்களுடன் இருப்பதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தான். அவனுக்கு எதிரே இருந்த கண்ணாடியில் அனுவை பார்த்து கொண்டே இருந்தான்.

மற்ற அனைவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க அனு மட்டும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள் அதை பார்த்ததுமே கதிருக்கு அனு பசியாக இருக்கிறாள் என்று தெரிந்துவிட்டது. பேரரை அழைத்து அனுவிற்கு ஒரு பிலேட் வெண் பொங்கலை தருமாறு கூறினான்.

பொங்கலை பேரர் வைத்ததும் அனு அவரிடம் இதை யாரு ஆர்டர் பண்ணாங்க நான் பண்ணலையே என்றாள். அதற்கு பேரர் இரண்டு டேபிள் தள்ளி அமர்த்திருந்த கதிரை கைக் காட்டி விட்டு சென்று விட்டார்.

அனு கதிரை பார்த்ததும் அவனிடம் செல்ல எழுந்தால், கதிர் வராதே உக்காந்து சாப்பிடு என்று சைகை செய்தான். அனுவும் சரி என்று கூறி தலை அசைத்தால். அனுவின் இரு புறமும் பிட்டர் மட்டும் வெங்கட் அமர்த்திருந்தனர். அனுவின் இலையில் இருந்து பிட்டர் கொஞ்சம் தோசையையும், வெங்கட் வடை யையும் எடுத்து சாப்பிடனர். அனுவும் பிட்டரின் இலையில் இருந்து பூரியை எடுத்து சாப்பிட்டால்.ஆண் பெண் ஏற்ற பாகுபாடு இல்லாத நல்ல நட்பு அவர்கள் இடையில் இருந்தது.

அனு சாப்பிட்டு முடித்ததும் கதிரை பார்த்தாள்,”சாப்பிடைய போதுமா, வேற ஏதாவது ஆர்டர் பண்ணவா ” என்றான் கதிர் சைகையில்.அனு கை கழுவ சென்றாள். மற்றவர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.அனு சென்றதும் கதிரும் பின்னால் சென்றான்.

“ஹாய் டா செல்லம்,உன்ன இங்க பார்த்தது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குடா, உனக்கு இப்போ கிளாஸ் இல்லையா, அதான் பிரெண்ட்ஸ் கூட வெளிய வந்தயா ” என்றான் கதிர்.

“எனக்கும் உன்ன பாத்தத்துல செம ஹாப்பியா இருக்கு கதிர். நான் நேத்து நைட் சரியா சாப்பிடலையா, காலைல சீக்கரமா சாப்பிடலாம்னு கேன்டீன் போன அங்க உப்புமா தான் இருந்தது”

“உனக்கு தான் தெரியும்ல எனக்கு உப்புமா பிடிக்காதுனு, சாப்பிடாம பட்டினியா கிளாஸ்க்கு போய்ட்டு இருந்தேன், பிட்டர் அண்ணா கிட்ட பேசும்போது சாப்பிடல பசிக்குதுன்னு சொன்னே அண்ணா இங்க கூட்டிடு வந்துட்டாங்க ” என்றாள் அனு.

“அப்போ உப்புமா போடுற அப்போல்லாம் நீ பட்டினியா தான் இருக்கியா “என்றான் கதிர் கோவமாக.

“மாமு கோவப் படாதடா, எனக்கு உப்புமாவ பாத்தாலே சாப்பிட தோன மாட்டேங்கிது “என்றாள் அனு.

“இனிமேல் உப்புமா போடுற அன்னைக்குலாம் என்கிட்ட சொல்லு நான் உனக்கு வேற சாப்பாடு வாங்கி நர்மதா, வெங்கட் இவங்க கிட்ட குடுத்து விடுறேன் சரியா, இனிமேல் சாப்பிடாம இருந்தானு தெரிஞ்சது “

“நீ படிச்சது போதும் வானு நம்ம வீட்டுக்கு கூட்டிடு போயிருவேன், இப்போ போய் உன் பேக்கா பக்கத்துல இருக்குற டேபிள் மேல எடுத்து வை “.என்று கூறி விட்டு சென்று விட்டான்.

அனுவின் பேக்கை எடுத்து சென்று அதில் அந்த ஹோட்டலில் இருந்த சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் என்று நிறைய வாங்கி வைத்தான். ஒரு பாட்டிலில் ஆரஞ்சு ஜூஸ் வாங்கி வைத்தான்.

அனு தூரத்தில் இருந்து போதும் போதும் என்று கூறிக் கொண்டே இருந்தாள். கதிர் அதை கண்டுக் கொள்ளாமல் இருந்தான். அவர்கள் அனைவரும் சாப்பிட்டதற்கும் சேர்த்து கதிர் பணம் செலுத்தி விட்டான். பணம் செலுத்தியது யார் என்று கேட்டாள் நர்மதாவின் அண்ணன் என்று கூறுமாறு சொல்லி விட்டு சென்றான்.

நர்மதா உன் அண்ணா எப்போ இங்க வந்தாங்க, அவரு எதுக்குமா நாங்க சாப்பிட்டதுக்கும் சேர்த்து பணம் குடுத்தாறு. காலைலயே அவருக்கு செலவு வச்சிட்டோம் என்று பிட்டர் கூறியதை கேட்டு நர்மதா புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

அனு நர்மதாவின் அருகில் சென்று வந்தது உன் அண்ணே இல்லைடி கதிர். அவரு தான் பணம் கொடுத்தது என்றாள் அனு.

“ஓ கதை அப்படி போகுதா சரி சரி, நான் சமாளிச்சுக்கிறேன்”என்றாள் நர்மதா.

நர்மதா உன் அண்ணா கிட்ட நாங்க தேங்க்ஸ் சொன்னதா சொல்லிரு. டைம் ஆச்சு வாங்க போகலாம், அனைவரும் வண்டியில் ஏறி சென்றனர். கதிர் தூரத்தில் இருந்து கை அசைத்து டாடா என்று கூறிவிட்டு தான் சென்றான்.

தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஹாஸ்டலில் இருந்து விடுமுறைக்கு அனு வீட்டுக்கு சென்றாள்.போகும் வழியில் கதிரை பார்க்க சென்றாள். கதிர் ஜவுளிக்கடையில் இருப்பதால் அங்கு சென்றாள் தீபாவளி நேரம் என்பதால் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

கதிர் பில் போட்டு கொண்டு இருந்தான். அனுவை பார்த்ததும் உமாபதி சாரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அனுவை அழைத்துக் கொண்டு ரூமுக்குள் சென்றான்.

” செல்லம் எப்படிடா இருக்க ஒரு வாரமா போன்ல கூட பேச முடியல ரொம்ப வேலைடா இங்க , ரஞ்சுமா நான் உன்ன ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் டா “என்று கூறி அனுவை கட்டி பிடித்தான்.

கதிரின் சட்டை முழுவதும் வியர்வையில் நனைத்து இருந்ததை பார்த்து அனு கண்கள் கலங்க கதிரை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டாள்.
” நீ இப்படி கஷ்டப்படுவதை பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா மாமு ” என்று கூறி அழுதாள்.

“ரஞ்சு அழாதடி இதுல என்னடி இருக்கு, நம்ம கடையில நான் வேலை பார்க்கிறேன் இதுல கஷ்டப்பட என்ன இருக்கு, சரி என்ன சாப்பிடுற சொல்லு வாங்கிட்டு வர சொல்லுறேன் “

“உனக்கு பிடிச்சதை வாங்கிட்டு வர சொல்லு “

சாப்பாடு வந்ததும் அனுவே கதிருக்கு ஊட்டி விட்டாள். கதிரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டான்.”ரஞ்சுமா சூரத்தில இருந்து புது ஸ்டாக் வந்திருக்கு. அதுல உனக்கு புடிச்ச டிரஸ் எல்லாத்தையும் எடுத்துக்கோ “

” ஏன் கதிர் எப்ப பார்த்தாலும் டிரஸ் எடுத்துக்கோ டிரஸ் எடுத்துக்கோனு சொல்லிட்டே இருக்க “

” செல்லம் உனக்காக தாண்டி இவ்ளோ பெரிய கடையை திறந்து வச்சிருக்கேன் நீ டெய்லி ஒரு புது ட்ரெஸ்ஸா போடு 365 நாளுக்கு 365 புது டிரஸ் சரியா “.

” கதிர் எனக்கு புடிச்ச டிரஸ் நான் எடுத்தாலும் வீட்டுக்கு கொண்டு போக முடியாது இல்லடா ” என்றாள் அனு சோகமாக.

” செல்லம் ஒன்னு பண்ணுவோமா இப்போ என் கூட வந்து உனக்கு புடிச்ச டிரஸ்ஸ நீ எடுத்து வச்சுக்கோ சரியா உனக்கு இன்னும் தீபாவளிக்கு டிரஸ் எடுக்கல இல்ல உன் வீட்டுல அவங்கள இங்க கூட்டிட்டு வா,இங்க வந்து நீ எடுத்து வச்ச ட்ரெஸ்ஸ எடுத்துட்டு போ “

“சூப்பர் ஐடியா கதிர் அப்படியே பண்ணுவோம் “.மறுநாள் சென்று முதல் நாள் எடுத்து வைத்த டிரஸ்ஸை எடுத்து சென்றாள்.

கதிர் தீபாவளிக்கு கடையில் வேலை செய்யும் அனைவருக்கும் ஸ்வீட், பட்டாசு, 5000ரூபாய் என்று அனைத்தையும் அனுவின் கையால் கொடுக்க வைத்தான்.தீபாவளி நல்ல படியாக முடிவடைந்தது.

ஒரு மாதம் கழித்து KR ஹோட்டல் & கேட்டரிங் திறக்கப் பட்டு நன்றாக செயல்பட்டு கொண்டிருந்தது.திறப்பு விழா அன்று அனுவிற்கு செமஸ்டர் எக்ஸாம் இருந்ததால் அனுவால் வர முடியவில்லை, அனு வராதது கதிருக்கு வருத்ததை அளித்தது.

கதிர் தொழில் கவனமாக இருந்தான். அனுவும் படிப்பில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள். இதற்கு இடையில் அகில் அனுவுடன் email மூலம் பேசிக் கொண்டு இருந்தான்.

அனு லேப்க்கு செல்லும் போது எல்லாம் அகிலனுக்கு மெயில் அனுப்புவாள். அகிலனின் காதல் மெயிலின் மூலம் நடந்துக் கொண்டிருந்தது.

அனுவின் கல்லூரியில் அன்று சீனியருக்கு ஃபேர்வெல் விழா நடந்துக் கொண்டிருந்தது.பிட்டர் கல்லூரிக்கு வரும் கடைசி நாள் என்பதால் அவன் அனுவுடன் பேசி கொண்டிருந்தான்.

“அனு பாப்பா நான் கிளம்புறேன் நல்லா படி, நல்லா சாப்பிட்டு, பிரண்ட்ஸ் கூட சண்டை போடாத, நான் இங்க இருந்து போனதும் என்ன மறந்துராத, அடிக்கடி போன் பண்ணு, மெயில் பண்ணு, எப்பவும் டச்லையே இருடா “

“உன் கல்யாணத்துக்கு என்ன மறக்காம கூப்புடுமா எங்க இருந்தாலும் கண்டிப்பா வருவேன் “

“என் கல்யாணத்துக்கும் உன்ன கூப்புடுவேன் நீ வரணும் சரியா, நான் என் வாயாடி தங்கச்சிய ரொம்ப மிஸ் பண்ணுவேன் “என்றான் பிட்டர் சோகமாக.

பிட்டர் பேசுவதை கண்கள் கலங்க அனு கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“நானும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன் அண்ணா “என்று கூறி அழுதாள்.

இந்த பிட்டர் அண்ணன் தான் அவள் எதிர் காலத்தில் கஷ்ட பட்டுக் கொண்டிருக்கும் போது உதவி செய்து அவள் வாழ்க்கையை வளமானதாக மாற்ற போகிறான் என்று அறியாமல் போனது விதியின் விளையாட்டோ.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!