Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -23

அத்தியாயம் – 23

 

“லட்சுமி கதிரவன் எங்க போனான் நல்ல நேரம் முடியிறதுக்குள்ள கடைய திறந்தாகணும், ஐயர் வேற பூஜைக்கு நேரம் ஆச்சின்னு சொல்லிட்டே இருக்காரு “என்றார் வேலுசாமி.

 



Advertisement

“தம்பி ரஞ்சனிய கூப்பிட போயிருக் காங்க இப்போ வந்துருவான்க” என்று லட்சுமி கூறிக்கொண்டு இருக்கும் போதே கதிரின் கார் அங்கு வந்து நின்றது.

 

காரை பார்த்ததும் கருப்பு சரவெடி களை விட செண்டமேளம் அடிக்க கதிர் அனுவின் கையை பிடித்து அழைத்து வந்தான். அனு கடையின் வாசலில் இருந்த கூடத்தை பார்த்து கொஞ்சம் தயங்க ஆரம்பித்தால்.

Advertisement

 

Advertisement

“கதிர் என்னடா இவளோ கூட்டமா இருக்கு, எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க எனக்கு ஒரு மாதிரி பதட்டமா இருக்குடா “என்றாள் அனு.

 

“ரஞ்சு நான் தான் உன் கூடவே இருக்கேன்ல அப்பறம் ஏன்டா பயப்புடுற, தைரியமா வா “

Advertisement

 

“அம்மா ரஞ்சனிக்கு இந்த டிரஸ் சூப்பரா இருக்குல்லமா “என்றாள் கனி

 

“என் தங்கத்துக்கு எந்த டிரஸ் போட்டாலும் நல்லா தாண்டி இருக்கும்” என்றார் லட்சுமி.

 

“லட்சுமி கதிர் கூட வர பொண்ணு யாரு, பொண்ணு கலரையும் டிரஸையும் பார்த்த வடநாட்டு பொண்ணு மாதிரி இருக்கு “என்றார் கதிரின் பெரியம்மா.

 

“அக்கா வடநாட்டு பொண்ணுலாம் இல்ல நம்ம ஊரு பொண்ணு தான், இந்த பொண்ண தான் கதிர் கட்டிக்க போறான் “என்றார் லட்சுமி.

 

லட்சுமி கூறியதை கேட்டு வடிவும், ஜோதியும் வயித்தெரிச்சலுடன் அனுவை வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“அத்தையம்மா எப்படி இருக்கீங்க, இந்த சாரி உங்களுக்கு சூப்பரா இருக்கு அப்படியே புது பொண்ணு மாதிரி இருக்கீங்க, ஹாய் கனி அண்ணி நீங்க எப்படி இருக்கீங்க குட்டிமா எங்க ” என்று அனு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“ஹாய் ரஞ்சு நீ எப்படி இருக்குற படிப்புலாம் எப்படி போகுது,இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்கு “என்றாள் கனி.

 

“நீங்க வேற சும்மா இருங்க அண்ணி இந்த மாதிரி டிரஸ்லாம் நான் போடவே மாட்டேன். கதிர் தான் கட்டாயப் படுத்தி போட வச்சிட்டாரு, இந்த டிரஸ் இவளோ நகையும் போட்டுட்டு முடியல எப்போடா கழட்டு வோம்னு இருக்கு”என்றாள் அனு.

 

“ரஞ்சனி வா மா நல்ல இருக்கியா படிப்புலாம் எப்படி போகுது, சரி வா மா நேரம் ஆச்சு பூஜை ஆரம்பிக்கலாம்”என்று  கூறி அனைவரையும் அழைத்து சென்றார்.

 

ஹோமம் வளர்க்க பட்டு கும்ப பூஜை செய்யப்பட்ட அதில் லட்சுமி வேலுசாமி இருவரும் அமர்ந்து பூஜை செய்தனர். லட்சுமி அனுவை அவள் அருகில் அமர வைத்துக் கொண்டார்.

கதிரின் கண்கள் அனுவை தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை. கதிரின் பார்வை அனு மேல் இருப்பதை பார்த்து சுதா ” இவன் என்ன அந்த பொண்ண இப்படி பாக்குறான். ஒரு நாளது என் முகத்தை நிமிர்ந்து பாத்துருப்பான இவன்”என்று மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.

 

பூஜை முடிந்தது ரிப்பனை வெட்டி கடையை திறக்குமாறு ஐயர் கூறினார். லட்சுமி ரஞ்சனி கதிர் இருவரையும் கடையை திறக்குமாறு கூற கதிர் மறுத்துவிட்டான்.

“அப்பா அம்மா நீங்க இரண்டு பேரும் வெட்டுங்க ” என்றான்.

 

“தம்பி வா நம்ம நாலுபேரும் சேர்ந்து திறக்கலாம் “என்று கூறினார் வேலுசாமி. சரி என்று கூறி நால்வரும் ரிப்பன் முன் நிற்க. அனு அருகில் நின்றுக் கொண்டிருந்த கனி மகேஷ் இருவரையும் பார்த்து “நீங்களும் எங்க கூட சேர்ந்து வெட்டுங்க ” என்று கூறி கனி, மகேஷ் கையையும் சேர்த்து பிடித்துக் கொண்டாள்.

 

ஆறு பேரும் சேர்ந்து குடும்பமாக ரிப்பனை வெட்டி உள்ளே சென்றனர்.பின் அங்கிருந்த அவர்கள் குடும்பப் பெண்களையும் அழைத்து குத்துவிளக்கு ஏற்ற செய்தார் லட்சுமி

னைவரும் உள்ளே சென்று கடையை சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தனர். வேலுசாமி ரஞ்சனியை அழைத்து அவருடைய அண்ணா மட்டும் தம்பி குடும்பத்தினரிடம் “அண்ணே இந்த பொண்ணு ரஞ்சனி, இந்த பொண்ண தான் கதிருக்கு கட்டி வைக்க போறோம், இப்போ படிச்சிட்டு இருக்குற முடிச்சதும், கல்யாணத்தை முடிச்சிரலாம்னு இருக்கோம் ” என்றார்.

 

அனு அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள். “நீ என்னமா படிக்குற, எங்க படிக்குற “

“நான் MCA படிக்கிறேன் சின்ன மாமா, GTN திண்டுக்கல்ல “அனு உரிமையுடன் சின்ன மாமா என்று பேசியது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

“அண்ணே பொண்ணு பாக்க லட்சணமா இருக்கா, நல்ல குணமான பொண்ணவும் இருக்குற,என்ன அந்த பொண்ணு விட்டுல யாரையும் காணோம் “

 

“தம்பி இந்த பொண்ணும் கதிரும் 4 வருசமா விரும்புறாங்க பா,ரஞ்சனி நல்ல பொண்ண இருந்தனால நாங்க சரினு சொல்லிடோம், இன்னும் அந்த பொண்ணு வீட்டுல தெரியாது “

 

“ரஞ்சனி படிப்பு முடிஞ்சதும் போய் அவ வீட்டுல பேச போறோம் “

 

“டேய் தம்பி காதல் கல்யாணமா, பொண்ணு நம்ம இனம் தான “

 

“அண்ணே பொண்ணு நம்ம இனம் இல்லணே, ஆன நமக்கு கொறஞ்சவங்க இல்ல “

வேலுசாமி கூறியதை கேட்டுக் கொண்டிருந்த பாண்டி, அதை அப்படியே வடிவிடம் கூறினார்.

“என்னங்க எப்படியாவது பேசி இந்த பொண்ணை கதிரை விட்டு துரத்தி விடுறன்னுங்க “

 

“இவ போனது அப்பறம் லட்சுமி கிட்ட பேசி கதிரவனுக்கு நம்ம ஜோதிய கட்டி வச்சிறான்னுக” என்றாள் வடிவு.

 

அனு எப்பொழுது தனியா வருவாள் என்று வடிவு காத்துக் கொண்டிருந்தார். கதிர், லட்சுமி, வேலுசாமி அனைவரும் வந்தவர்களை கவனித்துக் கொண்டிருக்க அனு ரெஸ்ட்ரூம் போவதற்காக மாடிக்கு சென்றாள். வடிவு பாண்டி இருவரும் அவள் பின்னால் சென்றனர்.அனு வருவதை பார்த்து அவள் காதில் விழ வேண்டும் என்று வடிவு சத்தமாக பேசினால்

 “எங்க இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் ரொம்ப தெளிவா தாங்க இருக்காங்க, பணக்காரனா பார்த்து சிரிச்சி பேசி கைக்குள்ள போட்டுகிறங்க “

 

” நீ யார வடிவு சொல்லுற, எந்த பொண்ணு யார கைக்குள்ள போட்டு வச்சிருக்குற “

 

“நான் அந்த ரஞ்சனி பொண்ண தாங்க சொல்லுறேன்,நம்ம கதிரவன் கிட்ட சொத்து நிறைய இருக்குனு தெரிஞ்சி எப்படி உடும்பு மாதிரி வந்து ஓட்டிக்கிட்ட பாருங்க “

அனு இவர்கள் பேசுவதை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

“ஆமா வடிவு கதிரவனை நாம சின்ன வயசுல இருந்து பாத்துட்டு வாறோம், அவன் குடிச்சிட்டு வெட்டிய சுத்திட்டு இருப்பான் ஆனா எந்த பிள்ளையையும் ஏர்ரெடுத்து பாக்காதவன், அப்படி பட்ட பையனையே இப்படி அவ பின்னாடி சுத்துறமாதிரி மாத்திடாளே “

 

“அந்த பொண்ணு நம்ம பையனா நல்லா மயக்கி வச்சிருக்காங்க, அப்படி எதை காட்டி மயக்குனாலோ தெரியல “என்றாள் வடிவு.

 

“இரண்டு பேரும் நாலுவருசமா விரும்புறாங்களாம் இன்னும் அந்த பொண்ணு வீட்டுக்கு தெரியாதுன்னு மச்சான் சொல்லுறாங்க இது நம்புற மாதிரியா இருக்கு “என்றார் பாண்டி 

 

” தெரியாம எப்படிங்க இருக்கும், அந்த பொண்ண வீட்டுக்கு எல்லாம் தெரிஞ்சி தான் இருக்கும், பையன் வசதியானவனு ஏதும் தெரியாத மாதிரி நடிக்குறாங்க “

 

“நீங்க வேணுனா பாருங்களேன் வேலுசாமி அண்ணே பொண்ணு கேட்டதும் உடனே சரினு சொல்லிருவாங்க, இவனுங்க எல்லாம் பொண்ண படிக்கவா காலேஜ்க்கு அனுப்புறாங்க வசதியானவனா பார்த்து மயக்குறதுக்கு தான் அனுப்புறானுங்க “

 

“அந்த பொண்ண பாத்தாலே தெரியல அவ டிரஸ்ஸும், அலங்காரமும், பேசும், சிரிப்பும் நல்ல குடும்பத்து பொண்ணு மாதிரியா இருக்குறா ,காலைல பாத்திங்கல்ல அவ்வளவு பேரு முன்னாடியும் கதிரவன் கையை கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம பிடிச்சிட்டு வந்ததை “

 

“நீ சொல்லுறதும் சரி தான் வடிவு ஒரு விழாக்கு வர பொண்ணு இப்படி தான் டிரஸ் போட்டு வருவாளா, நம்ம பொண்ணு ஜோதி எப்படி அடக்க ஒடுக்காம சேலை கட்டிட்டு வந்துருக்கா “

 

“எதுக்குங்க நம்ம பொண்ண அந்த வெக்கம் கெட்டவா கூட ஒப்பிட்டு பேசுறீங்க, என் புள்ளைய நான் அவளை மாதிரி ஊர்மேயவா விட்டுருக்கேன்”

 

“இந்த பொண்ணு இப்படி சுத்திட்டு இருக்கே அவள பெத்தவங்க எதும் கண்டிக்க மாட்டாங்களா அவளை ” என்றார் பாண்டி.

 

“நீங்க வேற நல்ல குடும்பமா இருந்தா கண்டிப்பாங்க, அதுவே மானங்கெட்ட குடும்பமா இருக்கும், இந்த வயசுலயே இந்த பொண்ணு இப்படி ஆள் மயக்கிய இருக்காளே இவள பெத்த அம்மா அப்போ எப்படி இருப்பா “

 

“தாய போல பிள்ளை நூலை போல சேலைனு சும்மாவா சொன்னாங்க, இவ ஆத்தாகாரி எத்தனை பேரை வளைச்சி போட்டு வச்சிருக்காலோ “

 

“வடிவு இதுங்கலாம் இப்படி பட்டப் பொழப்பு போலைக்குறதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம் “என்றார் பாண்டி.

 

“வெக்கம், மனம், சூடு, சொரணை இருக்குறவங்க தாங்க சாவங்க, இதுங்க தான் எல்லாத்தையும் வித்துட்டு தெரியுதுங்களே, சீச்சீ அந்த பொண்ண பாத்தாலே அருவருப்பா இருக்குங்க “

 

“அவ முகத்துல முழிச்சக் கூட பாவம் தான் வந்து சேரும் “என்றாள் வடிவு.

 

பாண்டி அனு தூரத்தில் அழுதுக் கொண்டிருப்பதை வடிவிடம் காட்டி சிரித்துக் கொண்டிருந்தார். அனு தூக்கம் தாங்காமல் மீண்டும் பாத்ரூம்குள் சென்று அழுக ஆரம்பித்தால்.

 

வடிவு அவள் பின்னாலே சென்று அவள் அழும் சத்தத்தை கேட்டு மகிழ்ச்சி அடைந்தாள்.

 

“வடிவு நீ என்ன அந்த பொண்ணு அம்மா அப்பா பதிலாம் பேசிட்ட ” என்றார் பாண்டி.

“இப்படி பேசுனா தாங்க அவ ரோசப் பட்டு கதிரவனை விட்டுட்டு போவா, நீங்க அந்த பொண்ண பாக்குறப் போலாம் ஏதோ அசிங்கத்தை பாக்குற மாதிரி பாருங்க சரியா “

 

“நீ சொல்லுற மாதிரியே பண்ணுறேன் சரி வா கீழ போலாம்”

இருவரும் கீழே சென்று மற்றவர் களிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.

 

வடிவு பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அனுவின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தின. அனு கீழ செல்ல மனமின்றி அந்த பாத்ரூமில் மூளையில் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தால் யாரோ வரும் சத்தம் கேட்டு கண்ணை துடைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

 

வெகு நேரமாக அனுவை காணாததால் கதிர் அவளை தேட ஆரம்பித்தான். அனு மாடியில் இருப்பதாக அங்கு வேலை செய்யும் பெண் கூற கதிர் மாடிக்கு சென்றான்

அனு மொட்டை மாடிக்கு செல்லும் படியில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள்.கதிர் அழைக்கும் குரல் கேட்டு அனு கண்களை வேகமாக துடைத்துக் கொண்டாள்.

 

“ரஞ்சு இங்க என்னடி பண்ணுற கண்ணுலாம் ஏன் சிவந்து போய் இருக்கு. அழுதயா நீ, உன்ன யாராவது ஏதாவது சொன்னாங்களா சொல்லு,யாரு என்ன சொன்னாங்க உன்ன “என்றான் கதிர் கோவமாக.

 

கதிரின் அத்தை மாமா பேசியதை அவனிடம் சொன்னால் கண்டிப்பாக அவர்களுடன் சண்டை போடுவான். இதனால் எல்லாருடைய சந்தோசமும் கெட்டுவிட்டு என்று நினைத்து அனு கதிரிடம் எதையும் கூறாமல் மறைத்து விட்டாள்.வரும் அழுகையை அடக்கிக் கொண்டு

 

“கதிர் கண்ணுல துசி விழுந்துருச்சி அதுனால தான் கண்ணு சிவந்து போய் இருக்கு. இந்த டிரஸ் நகைலாம் போட்டுட்டு இருக்குறது ஒரு மாதிரி இருக்கு அதான் இங்க வந்து உக்காந்து இருக்கேன் மத்த படி எதுவும் இல்லடா “

” நிஜமாதான சொல்ற நீ “

” லூசு நெஜமாதான்டா சொல்றேன், கதிர் சாப்பாடு வந்துருச்சா ரொம்ப பசிக்குது டா “

” சாப்பாடு எல்லாம் வந்துருச்சு. வா சாப்பிட போலாம் “

 

இருவரும் ஒன்றாக படியில் இறங்கி வந்தனர். ” ரஞ்சுமா ரேணுகா வெங்கட் நர்மதா எல்லாம் வந்திருக்காங்க பார்த்தியா நீ அவங்களை “

 

” எப்போ கதிர் வந்தாங்க நான் பாக்கவே இல்லையே அவங்கள “

 

கதிர் அனுவை அவர்களிடம் அழைத்து சென்றான். அனு அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள். ரேணுகா அனுவை பார்த்து “அனு ஏண்டி ஒரு மாதிரி இருக்குற எதும் பிரச்சனையா” என்று மற்ற இருவர் அறியா வண்ணம் கேட்டாள்.

 

அனு கதிர் அருகில் எங்கும் இருக்கிறானா என்று பார்த்து விட்டு “ரேணு ப்ளீஸ் டி என்ன இங்க இருந்து எப்படியாது கூட்டிடு போய்ட்டு, என்னால இங்க இருக்க முடியலடி ” என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு ரேணுவின் கையை பிடித்து கெஞ்சினால்.

 

“அனு என்னடி ஆச்சு இப்போ எதுக்கு அழுகுற “என்றாள் பதட்டத்துடன் 

 

“ரேணு நான் அப்பறமா சொல்லுறேன், இப்போ எதும் கேக்காத ப்ளீஸ், இங்க இருந்து வேகமா கிளம்பலாம் “

 

“அனு வா சாப்பிட போலாம், சாப்பிட்டதும் உடனே கிளம்பிறலாம், நாம சாப்பிடாம போன கதிரவன் அண்ணா விட மாட்டாங்க வா போலாம் சாப்பிட “

 

நால்வரும் சாப்பிட சென்றனர். அனுவின் முகம் வாடி இருப்பதை பார்த்து “செல்லம் என்னடா ஆச்சு உனக்கு ஏன் ரொம்ப டல்லா  இருக்குற”

 

“மாமு தலை ரொம்ப வலிக்குதுடா, வலிய தாங்க முடியல “

 

“ஹாஸ்பிடல் போலாமா ரஞ்சு “

 

“இல்ல கதிர் வேண்டாம் டேப்லெட் போட்டு கொஞ்ச நேரம் தூங்குனா சரியா போயிரும் “

 

கதிர் அவர்களுடன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தான். அனுவின் நேர் எதிரில் வடிவும் பாண்டியும் வந்து உண்ண அமர்ந்தனர்.அனுவை பார்த்து பார்த்து அந்த இருவரும் ஏதோ பேசிக்கொண்டே இருந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்து அனு சற்று பயப்பட ஆரம்பித்தால் இலையில் வைத்த உணவை உண்ணவும் முடியாமல் எழுந்து செல்லவும் முடியாமல் துடித்துக் கொண்டிருந்தாள்.

“ஏன்டா சாப்பிடாம இருக்குற தலைவலி அதிகமா இருக்குதா, சாப்பிட முடியலையா “என்றான் கதிர்.

 

“ஆமா தலைவலில சாப்பிட முடியல,கதிர் நான் டிரஸ் மாத்தணும் நான் வரும் போது போட்டு வந்த சுடிதார் எங்க இருக்குது “

 

“அது என்ன கார்ல தான்டா இருக்கு, இரு நான் போய் எடுத்துட்டு வாரேன்”

 

“கதிர் நீ சாப்பிடு வண்டி சாவி தா, நான் போய் எடுத்துக்குறேன் “

 

“வண்டி திறந்து தான்மா இருக்கு நீ போய் எடுத்துக்கோ “

 

அனு காரில் இருந்து டிரஸை எடுத்துக் கொண்டு வந்தாள். அப்பொழுது அவளுக்கு முன்னால் சற்று தள்ளி வடிவும் பாண்டியும் நின்று “என்னங்க ஒரு சில மூஞ்சிக்கல பாத்தாலே ரொம்ப அருவருப்பா இருக்கு, அதுங்க முன்னாடியே போய் உக்காந்து எப்படிங்க சாப்பிடுறது “என்றாள் வடிவு.

 

“என் வடிவு இது இந்த வயசுலயே இப்படி தெரியுது, இன்னும் கொஞ்சம் வயசாச்சுன்னா என்னாலம் பண்ணுமோ, பாக்கவே எரிச்சலா இருக்கு எங்க போனாலும் அந்த முகரைய தான் பாக்க வேண்டி இருக்கு “

 

அனு அங்கு நிற்க முடியாமல் அங்கிருந்து ஓடி சென்று கதிரின் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். அனு ஓடி சென்றதை பார்த்து வடிவும் பாண்டியும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

அனு உடை நகை அனைத்தையும் கழட்டி வைத்து விட்டு, சுடிதார் அணிந்துக் கொண்டு வெளியே வந்தாள். பின் நேராக ரேணுவிடம் சென்று கிளம்பலாமா என்றாள். அவளும் சரி என்று கூற வெங்கட், நர்மதா, ரேணுகா, அனு நால்வரும் கிளம்பினார்.

 

“கதிர் நாங்க கிளம்புறோம்டா ” என்றாள் அனு.

 

“என்னமா அதுக்குள்ள கிளம்பிட்டா, இன்னும் கொஞ்ச நேரம் இருடா அப்பறம் நானே காலேஜ்ல வந்து விட்டுட்டு வாரேன் “

 

“எனக்கு தலை ரொம்ப வலிக்கு கதிர் ஹாஸ்டல்ல போய் டேப்லெட் போட்டுட்டு தூங்கணும். நாளைக்கு லேப் வேற இருக்குது அதுக்கு ப்ரோக்ராம்ல நிறைய எழுத வேண்டி இருக்கு “

 

“அனு நீ போய் எல்லாருடையும் சொல்லிடு வா நானே உன்ன கொண்டு போய் விட்டுட்டு வாரேன் “

 

“இல்ல கதிர் வேண்டாம் இங்க நிறைய வேலை இருக்கும், வந்த விருந்தாளிங்க எல்லாரையும் நீ கவனி, நாங்க பஸ்ல போயிக் குறோம் “

 

அனு அனைவரிடமும் கிளம்புவதாக கூறிவிட்டு சென்றாள். பஸ்ஸ்டாப் வரை கூட வருவதாக கதிர் கூறியும் மறுத்து விட்டாள்.நர்மதா, வெங்கட் அவர்கள் வீட்டுக்கு சென்று விட அனு ரேணுகா மட்டும் தனியாக திண்டுக்கல் சென்றனர்.

 

பஸ்ஸில் ஏறியதும் அனு ரேணுவின் தோளில் சாய்ந்து அழுக ஆரம்பித்தால் ரேணுகா என்ன நடந்தது என்று கேட்க,அனு வடிவும், பாண்டியும் பேசியதை பற்றி கூறினாள். “அனு லூசாடி நீ, அவங்க உன்ன பத்தியும் உன் அப்பா அம்மா பத்தியும் இவளோ அசிங்கமா பேசிருக்காங்க நீ கேட்டுட்டு சும்மா வந்துருக்குற “

 

“கதிரவன் அண்ணா கிட்ட சொல்லிருக்க வேண்டியது தானடி, அவரு அவங்கள உண்டு இல்லனு பண்ணிருப் பாருல “

 

“நான் சொல்லிருந்த கதிர் கண்டிப்பா அந்த ஆள அடிச்சிருப்பான், அதுனால அங்க பெரிய சண்டையே வந்துருக்கும் ரேணுகா, ரொம்ப வருசத்துக்கு அப்பறம் இப்போ தான் அவங்க குடும்பம் ஒண்ணா சேர்ந்துருக்கு என்னால மறுபடியும் பிரிய வேண்டாம்”.

 

“அதுவும் இல்லாம மருமக வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே குடும்பத்தை பிரிச்சிட்டான்னு சொல்லி அப்பவும் என்ன பத்தி தப்பாதான் சொல்லுவாங்க, என்னால யாரு குடும்பமும் பிரிய வேண்டாம் ரேணுகா “

 

“அனு சரி விடு அழாத,அதையே நினைச்சிட்டு இருக்காம மறந்துட்டு நாம படிக்குற வேலைய மட்டும் பார்ப்போம் சரியா “என்றாள் ரேணுகா.

 

நாட்கள் கடந்தன திறப்புவிழாவில் முடிந்து வந்ததில் இருந்து அனு கதிரிடம் சரியாக பேசுவது இல்ல.அவனிடம் பேசும் நேரத்தை குறைத்துக் கொண்டாள் கதிர் காரணம் கேட்டதற்கு படிக்க நிறைய இருப்பதாக கூறி விடுவாள். விடுமுறைக்கு வீட்டுக்கு செல்லும் போது கூட கதிரை பார்த்து விட்டு உடனே சென்று விடுவாள் அரைமணி நேரம் கூட அவனுடன் இருக்க மாட்டாள்.

 

ஒரு நாள் கதிரை பார்க்க அனு வந்திருந்தால் “செல்லம் ஏன்டி இப்போலாம் என் கூட சரியா பேச மாட்டேன்கிற என்னைய பாக்க வந்தா கூட பேசிட்டு உடனே கிளம்பி போயிற நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா நாலு அடிக்கூட அடிடி பாக்கமா பேசாம மட்டும் இருக்காதா டி என்னால தாங்க முடியல”.

 

“என்னால நீ இல்லாம இருக்க முடியாதுனு உனக்கே தெரியும்ல அப்பறம் ஏன்மா இப்படி பண்ணுற” என்று கூறி அனுவை கட்டி பிடித்து அழுதான்,அனுவும் அவள் கவலை திற அவனை கட்டி பிடித்து அழுதாள்.

 

“சாரி மாமு ஏதோ தெரியாம பண்ணிட்டேன், நான் உன்ன கஷ்டப் படுத்தனுன்னு நினைக்கலடா இனிமேல் ஒழுங்கா பேசுறேன் போதுமா “

 

“கதிர் இன்னும் ஒரு மாசத்துல எனக்கு காலேஜ் முடிய போகுது, செமஸ்டர்க்கு படிக்க வேண்டியது நிறைய இருக்கு நான் கால் பண்ணல பேசலானு நீ வருத்தப் படக்கூடாது சரியா “

 

“சரிடி செல்லம் நான் வருத்தப்படல நீ நல்லா படி எக்ஸாம் நல்ல பண்ணு சரியா “

 

அனுவிற்கு செமஸ்டர் எக்ஸாம் நடந்துக் கொண்டிருந்தது. நாளை தான் கடைசி எக்ஸாம் அது முடிந்ததும் நாளை மாலையே ஹாஸ்டலை காலிச் செய்து வீட்டிற்கு சென்று விட வேண்டும் அவர்கள்.

” கதிர் இன்னைக்கு தான் நான் இங்க இருந்து பேசுற கடைசி நாள், நாளைக்கு இந்நேரம் என்னோட வீட்டுல இருப்பேன் “என்றாள் சோகமாக.

 

“செல்லமா இதுக்கு ஏன்டா இவளோ கவலை படுற எதை பத்தியும் யோசிக்காம நாளைக்கு இருக்குற எக்ஸாம் நல்லா பண்ணு சரியா, நாளைக்கு உன்ன கூட்டிடு போக வரவா டா “

 

“நீ வர வேண்டாம் கதிர் அப்பா அம்மா வராங்க கூட்டிடு போக, ஹாஸ்டல்ல இருந்தனால டெய்லி உனக்கு கால் பண்ணிப் பேசுனே, மாசத்துல ஒரு நாளாது உன்ன பாக்க வருவேன் இனிமேல் உன்ன எப்படிடா பாக்குறது “என்று கூறி அழுதாள்.

 

“ரஞ்சு செல்லமா ப்ளீஸ் அழாதடா, நாளைக்கு எக்ஸாம் முடிச்சிட்டு ஊருக்கு போ, நான் உன் அப்பா கிட்ட வந்து நம்ம கல்யாணத்தை பத்தி பேசுறேன் “

 

“கதிர் ப்ளீஸ் ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் நானே அப்பா கிட்ட நம்மளப் பத்தி பேசுறேன் கொஞ்சம் பொறுமையா இருடா “

 

“உன் இஷ்டம் நீ சொல்லுறப்போ வந்து பேசுறேன் சரியா “

 

மறுநாள் எக்ஸாம் முடிந்து அனு அவள் அப்பா அம்மாயுடன் ஊருக்கு சென்றாள். அங்கு அனைவரிடமும் பேசிவிட்டு இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டுவிட்டு மகிழ்ச்சியுடன் உறங்க சென்றாள்.

 

பாவம் அனு அறியவில்லை அவளுடைய மகிழ்ச்சி காலையில் இல்லாமல் போக போகிறது என்றும் அவள் கடைசியாக உறங்க போகும் நிம்மதியான உறக்கம் இதுதான் என்றும் அறியாமல் போனால் அனு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!