செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -24
அத்தியாயம் -24
மறுநாள் காலையில் அனுவின் வீட்டில் ராமசந்திரன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.
“சாந்தி அனு எங்க ஆளையே காணோம், நான் எந்திரிச்சதுல இருந்து அவள பாக்கவே இல்லயே” என்றார் வள்ளிப்பாட்டி.
Advertisement
“அத்தை அவ இன்னும் எந்திரிக்கவே இல்ல அத்தை, தூங்கிட்டுத்தான் இருக்கா “என்றார் சாந்தி.
“மணி ஒன்பது ஆக போகுது இன்னுமா தூங்கிட்டு இருக்குற, நாளைக்கு கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போக போற பொண்ணு, அங்க போயி இப்படி தூங்கிட்டு இருந்த அவ மாமியார் வீட்டுல நம்ம வளர்த்த விதம் சரி இல்லனு சொல்ல மாட்டாங்களா சுஜி நீ போய் அவளை எழுப்பி விடு ” என்றார் வள்ளி.
Advertisement
Advertisement
“அம்மா அவ இப்போ தான ஹாஸ்டல்ல இருந்து வந்துருக்க விடுங்க அம்மா அவ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் ” என்றார் ராமசந்திரன்.
“ராமா நீ இப்படி செல்லம் குடுத்து குடுத்து தான் அவளை கெடுத்து வச்சிருக்குற “
Advertisement
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது. கார்த்திக் சென்று கதவை திறந்தான். வாசலில் கதிரவன் நின்றுக் கொண்டிருந்தான்
“நீங்க யாரு, உங்களுக்கு என்ன வேணும் “என்றான் கார்த்திக்.
“என் பேரு கதிரவன் சக்கரவர்த்தி நான் உங்க அப்பாவை பாக்க வந்துருக்கேன் “
“கதிரவன் சக்கரவர்த்தி உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே ஒட்டன்சத்திரம் KR கடைகள் உங்களோடது தான “
“ஆமாங்க என்னோடது தான் “
“அய்யோ சாரி சார் வெளிய நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன், உள்ள வாங்க “
கதிர் வீட்டின் உள்ளே சென்றான் “அப்பா இவரு உங்களை பாக்குறதுக்கு வந்துருக்காரு “
“வாங்க தம்பி உக்காருங்க, நீ யாரு என்ன விஷயமா பார்க்க வந்துருக்கீங்க “
“அப்பா இவரு பேரு கதிரவன் ஒட்டன் சத்திரம்ல KR நகைக்கடை, ஜவுளிக்கடைலாம் இருக்குதுல அது இவரோடது தான் “
“ஓ அது நீங்க தானா தம்பி உங்கள பத்தி கேள்வி பட்டுருக்குறேன், இந்த சின்ன வயசுலயே இவ்வளவு தொழில் செய்யுறீங்கனா அது எவ்வளவு பெரிய விஷயம்”
“சாந்தி தம்பிக்கு காபி கொண்டு வா “
“இல்ல சார் அதுலாம் ஏதுவும் வேண்டாம் “
“ஒரு காபி தானா சும்மா குடிங்க தம்பி ” சாந்தி காபி கொடுக்க கதிர் அதை வாங்க தயங்கினான்.
“எடுத்துக்கோங்க தம்பி, காபி தான குடிங்க தம்பி “
கதிர் காபியை குடித்துக் கொண்டே அனு எங்கே இருக்கிறாள் என்று தேடிக் கொண்டு இருந்தாள்.
“சொல்லுங்க தம்பி என்ன விஷயமா என்ன பாக்க வந்திங்க “
“அது வந்து சார் நானும் உங்க பொண்ணு ரஞ்சனியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம், உங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்க “என்று சொல்லி கொண்டிருக்கும் போதே.
“போதும் நிறுத்துங்க இதுக்கு மேல நீங்க சொல்லுற எதையும் கேக்க நான் விரும்பல நீங்க இங்க இருந்து போலாம் “என்றார் முகத்தில் அடித்ததை போல்.
“சார் ப்ளீஸ் சார் ஒரு அஞ்சு நிமிஷம் நான் என்ன சொல்லுறேன்னு கேளுங்க சார் ப்ளீஸ் “
“என் பொண்ண பத்தி எனக்கு தெரியும், நீங்க சொல்லுற மாதிரி அவ உங்கள காதலிச்ச்சிருக்க மாட்டா, என் வீட்டுக்கே வந்து என் பொண்ண பத்தி தப்பா சொல்ல உங்களுக்கு எவளோ தைரியம் இருக்கனும் “.
“சார் நான் உண்மையா தான் சார் சொல்லுறேன் நானும் ரஞ்சுவும் நாலு வருசமா காதலிக்குறோம், நீங்க வேணுனா அவ கிட்டையே கேட்டு பாருங்க ” ராமசந்திரன் அமைதியாக இருந்தார்.வள்ளிப் பாட்டி கோவத்துடன் இவன் பேசுவதை கேட்டு கொண்டிருந்தார்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன பத்தி பெருமையா பேசுனீங்கள சார் அந்த பெருமைக்கு எல்லாம் காரணம் ரஞ்சனி தான் சார்”
“நான் குடிச்சிட்டு வேலை வெட்டி இல்லாம ஊர் சுத்திட்டு இருந்தேன், ரஞ்சு தான் என் குடிப்பழக்கத்தை விட வச்சு, கடை ஆரம்பிச்சி நான் இந்த அளவுக்கு முன்னேற எனக்கு உறுதுணையா இருந்தா “
“என் வாழ்க்கைல வந்த ஏற்ற தாழ்வு எல்லாத்துலையும் எனக்கு துணையாக இருந்தா “
“அவ தான் சார் எனக்கு எல்லாமே ப்ளீஸ் சார் எங்களை புரிஞ்சிக் கோங்க ” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது மாடியில் இருந்து ஒரு குரல் கேட்டது “அம்மா எனக்கு கொஞ்சம் காபி தாங்க அம்மா “என்று கத்திக் கொண்டே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.
மொத்தக் குடும்பமும் அனுவை தான் பார்த்துக் கொண்டு இருந்தது. “எதுக்கு எல்லாரும் என்ன இப்படி பாக்குறீங்க “என்று கூறிக் கொண்டே திரும்பினால் எதிரில் கதிர் நின்று கொண்டிருப்பதை பார்த்து அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள்.
ராமசந்திரன் அனுவின் முகத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தார். கதிரை பார்த்ததும் அனுவின் முகத்தில் வந்து போன மாற்றத்தை வைத்தே, கதிர் கூறுவது உண்மை என்று புரிந்துக் கொண்டார்.
“அனு இவரு யாருனு உனக்கு தெரியுமா “
“ம்ம் “என்று தலையை அசைத்தால்.
“அப்போ இவரு சொல்லுறது எல்லாம் உண்மையா “என்றார் கோவத்துடன்.
“ஆமாம் அப்பா உண்மை தான், நானும் அவரை காதலிக்கிறேன் ” என்று அவள் கூறி முடிப்பதற்கு அனுவின் கன்னத்தில் இடி விழுந்தது போல ஓங்கி ஒரு அறை அறைந்தார் ராமசந்திரன்.
அடி விழுந்த வேகத்தில் அனு நிலை தடுமாறி போத்தென்று கீழே விழுந்தால்.கதிர் அவள் அருகில் செல்ல முயல அனு வேண்டாம் என்று தலை அசைத்தால்.
“உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன் இப்படி என் மூஞ்சில கரிய புசிட்டியே டி “
“என் மகன் உன்மேல எவ்வளவு பாசம் வச்சிருத்தான், நீ ஆசைப் பட்டதுலாம் வாங்கி குடுத்து உன்ன ராணி மாதிரி பாத்துகிட்டனே டி அவனை இப்படி அசிங்க படுத்திட்டியா நீ நல்ல இருப்பியா நாசமா போயிருவ டி “என்று கூறி அனுவை அடிக்க ஆரம்பித்தார் வள்ளிப் பாட்டி.
“சார் பாவம் சார் ரஞ்சனி அவளை அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க சார் ப்ளீஸ் “
“சார் அப்படி நாங்க என்ன சார் தப்பு பண்ணிட்டோம், ஊரு உலகத்தில நடக்காததையா பண்ணிட்டோம் “
“அனுக்கு நீங்க மாப்பிளை பார்த்த நல்ல பையனா,படிச்சிருக்கானா, நல்ல வேலைல இருக்கானா, நல்ல குடும்பமானு பாப்பிங்கல சார்”
“நீங்க எதிர் பாக்குற எல்லாத் தகுதியும் என்கிட்ட இருக்கு சார் அது மட்டும் இல்ல என்கிட்ட இருக்குற சொத்துல பாதிக்கு மேல அனு பேருல தான் சார் இருக்கு, இதோ பாருங்க அனு பேருல இருக்குற சொத்து பாத்திரம், அனு பேருல பேங்க்ல லட்சக் கணக்கில் பணம் இருக்கு இது பேங்க் பாஸ் புக் “
“இதுக்கு மேல நான் வேற என்ன சார் செய்யணும் சொல்லுங்க, என் ரஞ்சு காக நான் என்ன வேணுனாலும் செய்வேன் “
“ஏன்டா டேய் யாருக்குடா வேணும் உன் சொத்து, பணத்தை பார்த்ததும் பல்லைக் காட்டிட்டு உன் பின்னாடியே வருவோம்னு நினைச்சியோ “
“என் மகனா பார்த்தா பணத்துக்கு ஆசைப் படுறவன் மாதிரியாட இருக்கு”
“பணத்தை காட்டி பொண்ண கேக்குற எங்களை பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது “
“டேய் கார்த்தி நம்ம வீட்டுக்கு வந்து நம்மளையே தப்பா பேசிட்டு இருக்கான் பாத்துட்டு சும்மா இருக்க அவனை அடிச்சி தூரத்துடா “
கார்த்திக் கதிர் அருகில் சென்றான், கார்த்தி கொஞ்ச நேரம் அமைதியா இரு.”தம்பி இங்க பாருங்க எனக்கு பணம் காசை விட என் மானம் மரியாதை தான் முக்கியம் “
“உங்களுக்கு என் பொண்ணை கட்டி தர எனக்கு விருப்பம் இல்ல. நான் சொல்லுற பையனை தான் என் பொண்ணு கல்யாணம் பண்ணிக்குவா “
“அவளுக்கு ஏற்கனவே நான் மாப்பிளை பாத்துட்டேன் கூடிய சீக்கரமே அவளுக்கு கல்யாணத்தை முடிச்சிருவேன் “
“இதுக்கு மேல எந்த பிரச்சனையும் பண்ணமா இங்க இருந்து கிளம்புறீங்களா “
“சார் ப்ளீஸ் சார் ரஞ்சனி இல்லாம என்னால வாழ முடியாது சார் தயவு செய்து எங்கள பிரிச்சிறாதீங்க சார் ” என்று கைகூப்பி வணக்கி கேட்டான்.
“அதுதான் அப்பா தெளிவா சொல்லிட்டாங்களா, இதுக்கு மேல எதுக்கு இங்க நிக்குற கிளம்பு ஏற்று கூறி கதிரை பிடித்து வெளியே தள்ளினான் “
“அண்ணா ப்ளீஸ் அண்ணா இப்படிலாம் பண்ணாத அவரு பாவம்ணா “என்றாள் அனு.
“எல்லாம் உன்னால வந்தது டி நீ ஒழுங்கா இருந்துருந்தா இந்த அசிங்கம்ல நடந்திருக்குமா “என்று கூறி அனுவை அடிக்க ஆரம்பித்தான்.
கார்த்தியை தடுக்க யாருமே முன் வரவில்லை. அனுவை அடிக்கும் சத்தம் வாசல் வரை கேட்டது. கதிர் கார்த்தியை தடுக்க முயல அனு கையெடுத்து கும்பிட்டு ” ப்ளீஸ் கதிர் இங்க இருந்து போயிரு “என்றாள்.
“ஏண்டி இவளோ பேரு கத்திட்டு இருக்கோம் இப்பவும் நீ அவன் கூட பேசிட்டு இருக்குற ” என்று கூறி சாந்தி சமையல் அறைக்குள் சென்று கம்பியை காயவைத்து அனுவின் காலில் சூடு வைத்தார்.
அனு வலியில் துடிக்க ஆரம்பித்தால் ” சாந்தி என்ன காரியம் பண்ணி வச்சிருக்குற எவனோ ஒருத்தன் வந்து பேசுனதுக்கு என் புள்ளைய இப்படி காயப் படுத்திடையே கீதா போயி மருந்து எடுத்துட்டு வா மா “
என்று கூறி ராமசந்திரனே அனுவிற்கு மருந்து போட்டு விட்டார்.
எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க இதுக்கு அப்பறம் இனிமேல் யாரும் அந்த பையனை பத்தியோ, அவன் வந்துட்டு போனதை பத்தியோ பேச கூடாது புரிஞ்சாத. போங்க போய் எல்லாரும் அவங்க அவங்க வேலைய பாருங்க.
அனு காலையில் இருந்து மாலை வரை ஏதுவும் சாப்பிடாமல் தண்ணிர் கூட குடிக்காமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தால்.அனு கதிரை நினைத்து ஒரு பக்கம் அழ மறுபக்கம் வாங்கிய அடிகலினால் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் என்று அழுது அழுது துவண்டுப் போனால்.
வள்ளிப் பாட்டி போனில் யாரிடமோ “நாளைக்கு ரொம்ப நல்ல நாளா இருக்கு நாளைக்கே கல்யாணத்தை பேசிமுடிச்சி பரிசம் போட்டுருவோம் கிளம்பி வாங்க என்று கூறிக் கொண்டிருந்தார் ” அதை கேட்ட அனு கதிரை மறந்துட்டு இன்னொருத்தன் கூட வாழுறதுக்கு சாகுறதே மேலுனு யோசிக்க ஆரம்பித்தால்.
அறை முழுவதையும் தேடி பார்த்தாள் அறையின் ஒரு மூளையில் எறும்புக் கொல்லி மருந்து இருக்க அதை அங்கிருந்த நீரில் கலக்கி எதை பற்றியும் யோசிக்காமல் மட மட வென குடித்து முடித்து விட்டு அமைதியாக படுத்துக் கொண்டாள்.
வீட்டுக்கு சென்ற கதிர் லட்சுமி வேலுசாமி இருவரிடமும் அனு வீட்டில் நடந்தவற்றை கூறினான்
“ரஞ்சுவ என் கண்ணு முன்னாடியே அவ அப்பா பாட்டி அண்ணே எல்லாரும் சேர்ந்து மாத்தி மாத்தி அடிச்சாங்க பா “
“என்னால எதுவுமே பண்ண முடியலப் பா, நான் இருக்கும் போதே அப்படி அடிச்சாங்க, நான் வந்த அப்பறம் அவளை எப்படிலாம் அடிச்சாங்களோ, என் செல்லம் வலில எப்படி துடிக்குறாளோ தெரியலையே பா “
“எல்லாமே என்னதான் நான் மட்டும் அவளை விரும்பாம இருந்திருந்தா அவ இப்படிலாம் அடி வாங்கியிருக்க மாட்டாலே பா “என்று கூறி தலையில் அடித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தான்.
“தம்பி அழாத பா, கொஞ்ச நாள் போகட்டும் மறுபடியும் போய் பேசி பாப்போம், எங்கள கூப்புடாம உன்ன மட்டும் தனியா யாருடா போக சொன்னது, நடந்தது நடந்து போச்சி பொறுமையா இரு மறுபடியும் போய் பேசுவோம் “என்றார் வேலுசாமி.
அனுவின் வாயில் இருந்து நுரை வந்துக் கொண்டிருந்தது. அனு சுயநினைவை இழந்துவிட்டாள் இப்பொழுது வரை அவள் இருந்த அறைக்குள் யாரும் வர வில்லை,
