Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் – 25

அத்தியாயம் -25

அனு இருந்த அறைக்குள் சாமான் ஒன்றை எடுக்க சென்ற கீதா, அனு இருந்த நிலையைப் பார்த்து “அய்யோ அத்தை மாமா இங்க வேகமா வாங்க அனுக்கு ஏதோ ஆகிருச்சி “என்று கீதா சத்தமாக கத்தினால்.அனைவரும் அங்கு ஓடி சென்றனர் 

 

அனு வாயில் நுரைத்தள்ள மயக்கம் அடைந்து கிட்டந்தால்.”மாமா அனு எறும்புப் பொடிய கலக்கி குடிச்சிருக்க போல மாமா இந்த சொம்புல மருந்து வாடை வருது மாமா “



Advertisement

 

ராமசந்திரன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார். ஏண்டி இப்படி பண்ண என்று சாந்தி அனுவை கட்டிக் கொண்டு அழுதார்.கார்த்திக் அம்பிலன்ஸ்கு போன் செய்தான். அனுவை அதில் ஏற்றி ஓட்டன் சத்திரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

Advertisement

கதிரின் போன் அடிக்கும் சத்தம் கேட்டு அதை எடுத்தான்.கதிர் ஹலோ என்றதும். “கதிரவா நான் சங்கர் பேசுறேன் நான் நான் ரஞ்சனிய பார்த்தேன் பா “என்றார் சற்று பதட்டத்துடன்.

Advertisement

“எப்போ அண்ணே பாத்திங்க, எங்க பாத்திங்க சொல்லுங்க “

 

“வாணி ஹாஸ்பிடல்ல பாத்தேன்பா அம்பிலன்ஸ்ல இருந்து இறக்கி ஸ்டேச்சர்ல படுக்க வச்சி தூக்கிட்டு போனாங்க, அந்த பொண்ணு பேச்சு மூச்சு இல்லாம இருந்தாபா ” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போனை கட் செய்து விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு வேகமா சென்றான் கதிர் .

Advertisement

 

அங்கு அனுவிற்கு இனிமா கொடுத்து விஷத்தை வெளியே எடுத்துக் கொண்டு இருந்தனர்.கதிர் 

ஓடிவந்து கண்ணாடியின் வழியே அனுவை பார்த்தான். அனுவின் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் போடப் பட்டு இருந்தது.

 

“என்னடா பண்ணிங்க அவளை, நான் இருக்கும் போதே அப்படி அடிச்சிங்கலேடா, சொல்லுடா “என்று கார்த்திகின் சட்டையை பிடித்துக் கேட்டான்.

 

“நாங்க எதும் பண்ணல அவள தான் எறும்பு பொடிய கலக்கி குடிச்சிட்டா, எல்லாம் உன்னால தான்டா “என்று கூறி கதிரின் சட்டையை பிடித்தான் கார்த்திக்.

 

“ஹல்லோ இரண்டு பேரும் என்ன பண்ணுறீங்க, இது ஹாஸ்பிடல் இங்க போய் இப்படி கத்திட்டு இருக்கீங்க அமைதியா இருக்குறதுனா இருங்க இல்ல வெளிய போங்க”என்றார் டாக்டர்.

 

“சாரி டாக்டர், என் ரஞ்சனிக்கு என்ன ஆச்சு இப்போ எப்படி இருக்குறா”

 

“கதிரவன் இந்த பொண்ணு உங்க ரிலேட்டிவ் வா “

 

“ஆமாம் சார் , என் லவ்வர் சார் , அவளுக்கு இப்போ எப்படி இருக்கு ப்ளீஸ் சொல்லுங்க “

 

டாக்டர் ராமசந்திரனை பார்த்து “உண்மைய சொல்லுங்க அந்த பொண்ண நீங்க என்ன பன்னிங்க, அந்த பொண்ணு உடம்புல அங்க அங்க விரல் தடம் பதிஞ்சி இருக்கு, கால்ல வேற சூடு வச்சக் காயம் இருக்கு இப்போ பூச்சி மருந்த வேற குடிச்சிருக்க, அந்த பொண்ணா குடிச்சாளா இல்ல நீங்க எதும் பண்ணிட்டிங்களா “

 

“என்னது சூடுக்காயமா “என்று அதிர்ச்சியுடன் அவர்களை பார்த்தான் கதிர்.

 

“எனக்கு சந்தேகமா இருக்கு நான் போலீஸா வர சொல்லுறேன் ” என்றார் டாக்டர்.

 

“சார் வீட்டுல கொஞ்சம் பிரச்சனை அதுனால அவளை அடிச்சதுலாம் உண்மை தான் ஆனா மருந்து அவளா தான் குடிச்சா டாக்டர் “

 

“அப்போ சூடு வச்ச காயம் “என்றார் டாக்டர்.

 

கார்த்திக் சாந்தியை பார்த்தான். அவர் தலையை கவிழ்ந்து கொண்டு அழுதார்.கதிருக்கு புரிந்து விட்டது சுடு வைத்தது சாந்தி தான் என்று.

 

“சார் அவளுக்கு இப்போ எப்படி சார் இருக்கு ப்ளீஸ் சொல்லுங்க” என்றான் கதிர் டாக்டரின் கையை பிடித்துக் கொண்டு.

 

“கதிரவா அந்த பொண்ணு உடம்பு முழுக்க விஷம் பரவி இருக்கு, குடிச்ச விஷத்தை எல்லாம் வெளிய எடுத்துடோம், விஷம் மூளை, சுவாசக் குழாய் முழுக்க பரவிருச்சி”

 

” சாரி இதுக்கு மேல காப்பாத்துறது ரொம்ப கஷ்டம், 50 50 சான்ஸ் கூட இல்ல கதிரவன்”.

 

 

அனைவரும் அழ ஆரம்பித்தனார்.

” சார் ப்ளீஸ் அவளை எப்படியாவது காப்பாத்திருங்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ப்ளீஸ் “என்று கைக்கூப்பி வணங்கிக் கேட்டான்.

 

“என்னால முடிஞ்சா அளவுக்கு நான் முயற்சி பண்ணுறேன் கதிரவா அதுக்கு மேல கடவுள் தான் காப்பாத்தணும் “என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

 

கதிர் ராமசந்திரன், சாந்தி இருவரையும் பார்த்து “நிஜமாவா நீங்க தான் ரஞ்சனி பெத்திங்களா “

 

“அவளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்களே உங்களுக்கு அவ மேல கொஞ்சம் கூட பாசமே இல்லையா “என்றான் கதிர்.

 

“டேய் எல்லாம் உன்னால தான்டா நீ மட்டும் வராமா இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்தே இருக்காதுடா ” என்றான் கார்த்திக் கதிரை பார்த்து.

 

“நான் உங்க வீட்டுக்கு பொண்ணுக் கேட்டு வந்ததுனால,23வருசமா உங்க பொண்ணுமேல நீங்க வச்ச பாசம் மொத்தமும் போயிருச்சா”

 

“அவளை போட்டு அந்த அடி அடிச்சீங்களே அவளுக்கு எப்படி வலிச்சிருக்கும் “

 

“ஒரு குழந்தைக்கு அடிப்பட்டா, அது வலி தாங்காம அம்மா கிட்ட தான் சொல்லி அழும், இங்க அவ அம்மாவே அவளுக்கு சூடு வச்சிருக்காங்க அவ வலிக்குதுனு யாருகிட்ட போய் சொல்லிருப்பா”

 

“சின்னதா அடிப்பட்டாளே அவ வலி தாங்க மாட்ட, சூடா டீ கூட குடிக்க மாட்ட, அவளுக்கு போய் சூடு வச்சிருக்கீங்களே, என் ரஞ்சு வலில எப்படிலாம் துடிச்சளோ தெரியலையே “என்று கூறி அழுதான்.

 

“உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தது நான் தான சார் உங்களுக்கு பிடிக்கலைன்னா என்ன அடிங்க என்ன வேணாலும் பண்ணுங்க எதுக்கு சார் அனுவை இப்படி பண்ணிக்க “

 

“அவளுக்கு அல்சர் வந்தப்போ நீங்க எல்லாம் சேர்ந்து அவளை எப்படி பாத்துகிட்டிங்க, அனு மேல நீங்க எவ்வளோ பாசம் வச்சிருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் சார். என்ன லவ் பண்ணாங்கிற ஒரே காரணத்துக்காக அவளை அடிக்குறதும், சூடுவைக்குறதும் கொஞ்சம் கூட நல்லாயில்லை சார் “

 

“என் ரஞ்சனிக்கு மட்டும் ஏதாவது ஆச்சி உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன் “என்று கோவமா கூறி விட்டு அங்கிருந்து சேரில் போய் அமர்ந்துக் கொண்டான்.

 

சற்று நேரத்தில் லட்சுமி, வேலுசாமி இருவரும் மருத்துவ மனைக்கு வந்தனர்.வேலுசாமிக்கு அனு குடும்பத்தார் மீது கோவம் இருந்தாலும் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் ஏதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். லட்சுமி கதிருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

 

அனு இருந்த அறையில் இருந்து நர்ஸ் ஒருவர் வேகமா வெளியே ஓடி சென்று டாக்டரை அழைத்துக் கொண்டு சென்றார்.நர்ஸ் மருந்து எடுக்க வெளியே வர கதிர் அவரிடம் என்ன ஆச்சு என்று கேக்க “சார் அந்த பொண்ணு இதயத்துடிப்பு நின்றுச்சி சார் “என்றார்.

 

“அனு எங்கள விட்டுப் போயிட்டியா டி” என்று கூறி மயக்கம் அடைந்தார் சாந்தி.

 

அனைவரும் அழுக ஆரம்பித்தனர், கதிர் கண்ணாடி வழியே அனுவை பார்த்துக் கொண்டே இருந்தான் கண்ணீர் வழிய, அனுவிற்கு ஷாக் ட்ரீட்மென்ட் தரப்பட்டது. அவள் உடல் தூக்கி தூக்கி போட்டது.

 

“இதுக்கு தான சார் ஆசைப் படிங்க பாருங்க நல்ல பாருங்க, இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமே “என்றான் கதிர் வேதனையுடன்.

 

வெகு நேர போராட்டத்திற்கு பின் அனு உயிர் பிழைத்தால்.”கதிரவா அந்த பொண்ணு உயிர்க்கு இனி எந்த ஆபத்தும் இல்ல, இன்னும் இரண்டு மூணு நாளைக்கு பெசன்ட் இங்கையே இருக்கட்டும் அப்பறமா வீட்டுக்கு கூட்டிடு போகலாம் ” என்றார் டாக்டர்.

 

“ஒவ்வொருவராக அனுவை சென்று பார்த்து விட்டு வந்தனர் “.

 

அனு கண் முழித்ததும் கதிர் உள்ளே சென்று அவளை பார்த்தான், அனு கதிரிடம் பேச முயற்சி செய்தால், கதிர் “செல்லம் எதும் பேசாதடா உனக்கு உடம்பு சரி ஆகட்டும் அப்பறமா பேசிக்கலாம் “

 

“தங்கம் ஏன்டா இப்படி பண்ண உனக்கு ஏதாவது பிரச்சனைனா எங்க கிட்ட சொல்லிருக்கலாம்ல மா என் இப்படி பண்ண” என்று கூறி அழுதார் லட்சுமி.

 

“ரஞ்சனி எதை பத்தியும் யோசிக்காம நல்லா ரெஸ்ட் எடுமா “என்றார் வேலுசாமி.

 

கதிர் மட்டும் அவன் பெற்றோர் அங்கு இருந்தது. அனுவின் குடும்பத் தாருக்கு பிடிக்க வில்லை.இருந்தும் அனுவின் உடல்நிலையை கருதி அமைதியாக இருந்தனர்.

 

“பாப்பா ஏன்டா இப்படி பண்ண அப்பா ஏதோ கோவத்துல உன்ன அடிச்சிட்டேன் அதுக்காக நீ இப்படி பண்ணலாம் அனு மா, நீ இல்லாம அப்பா எப்படிடா இருப்பேன் “என்று அனுவின் கையை பிடித்துக் கொண்டு அழுதார்.

 

“அனு அம்மா ஏதோ கோவத்துல உனக்கு சூடு வச்சிட்டேன் டி, என்ன மன்னிச்சிரு அனு, ரொம்ப வலிக்குதா மா, அம்மாவை மன்னிச்சிருடி என்ன வெறுத்துறாத அனு ” என்றார் சாந்தி.

 

“அம்மா அப்பா ப்ளீஸ் அழாதீங்க, எனக்கு உங்க யாருமேலயும் எந்த கோவமும் இல்ல, நான் தான் ஏதோ டென்ஷன்ல இப்படி பண்ணிட்டேன் சாரி அப்பா அம்மா ” என்றாள் அனு.

 

அனு முழுவதும் சரி ஆக இரண்டு நாட்கள் ஆனது, அனுவை மாலை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறிவிட்டார்.அனு வீட்டிற்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தால்.

“ரஞ்சு நல்லா இருக்கியாடா இப்போ உடம்புல எந்த பிரச்சனையும் இல்லல” என்றான் கதிர்.

 

“எனக்கு இப்போ எந்த பிரச்சனையும் இல்ல கதிர் நான் நல்லா இருக்கேன்” என்று அனு கூறி முடித்ததும். கதிர் அனுவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

 

“ஏண்டி நாயே மருந்த குடிச்சவ நீ மட்டும் ஏண்டி தனியா குடிச்ச, எனக்கு கொஞ்சம் குடுத்திருந்த நானும் குடிச்சிட்டு உன் கூடவே சேர்ந்து செத்து போயிருப்பேன்ல “

“என்ன விட்டுட்டு நீ மட்டும் தனியா போயிருவியடி, நீ இல்லாம நான் மட்டும் எப்படி டி உயிரோட இருப்பேன்,என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லைல நீ “.

என்று கூறி மேலும் இரண்டு அறை அறைந்தான். அனு அமைதியாக அடியை வாங்கிக் கொண்டு “சாரி கதிர் “என்றாள்.

 

“நானும் பாத்துட்டே இருக்கேன் என் முன்னாடியே என் பொண்ணை அடிச்சிட்டே இருக்குற நீ, உனக்கு அவ்வளவு தைரியமாடா “என்றார் ராமசந்திரன் கதிரின் சட்டையை பிடித்து.

 

“என் பொண்டாட்டிய நான் அடிக்குறேன் அதை கேக்க நீங்க யாரு” என்றான் கதிர்.

 

“யாருடா உன் பொண்டாட்டி, அவ என் பொண்ணுடா “

 

“உங்க பொண்ண அது மூணு வருசத்துக்கு முன்னாடி, இப்போ அவ என் பொண்டாட்டி எனக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சி, இதோ பாருங்க எங்க மேரேஜ் சர்டிபிகேட்”என்றான் கதிர்.

 

“தம்பி நீ சொல்லுறது உண்மையா ” என்றார் வேலுசாமி.

 

“உண்மை தான் அப்பா நானும் ரஞ்சனியும் மூணு வருசத்துக்கு முன்னாடியே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம், ரஞ்சனி சட்டப்படி என் பொண்டாட்டி,இதுக்கு மேல எங்களை யாராலையும் பிரிக்க முடியாது ” என்றான் கதிர்.

 

“அனு இவன் சொல்லுறது எல்லாம் உண்மையா “என்றார் ராமசந்திரன்.

 

“ஆமா அப்பா உண்மை தான் ” என்றாள் அனு தலைக் குனிந்து மெதுவாக.

 

“என் அனு இப்படி பண்ண இந்த அப்பாவை முட்டாள் ஆக்கிட்டல்ல நீ, நான் உன் மேல எவளோ நம்பிக்கை வச்சிருந்தேன் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியே ” என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு அழுதார் ராமசந்திரன்.

 

அனு இதுவரை அவள் தந்தை அழுது பார்த்ததே இல்ல, இன்று அனு செய்த தூரோகத்தை நினைத்து மிகவும் மனசுடைந்து போய் தரையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார்.

 

அனு அவரின் கால்களை பிடித்துக் கொண்டு “அப்பா தெரியாம பண்ணிட்டேன் பா, ப்ளீஸ் பா என்ன மன்னிச்சிருங்க பா,ப்ளீஸ் அழாதீங்கப் பா நீங்க அழுகுறத பாக்குறதுக்கு கஷ்டமா இருக்குப்பா அழாதீங்க பா “

 

“ஏண்டி பண்ணுறதையும் பண்ணிட்டு இப்போ இங்க வந்து நிலிக் கண்ணீர் வடிக்கிறையா “என்றார் வள்ளியம்மாள் அனுவின் முடியை பிடித்து இழுத்துக் கொண்டு.

 

“தெரியாம பண்ணுற வேலையா டி இது,இவன் கூட போய் கல்யாணத்தை முடிச்சிட்டு வந்து எதுமே நடக்காத மாதிரி எங்க கூடையே இருந்தாயே டி நீ, எங்களை எல்லாம் நல்ல முட்டாள் ஆக்கி வேடிக்கை பாத்துட்டு இருந்துருக்குற நீ “என்றார் சாந்தி.

 

சாந்தியும் வள்ளியம்மாளும் சேர்த்து அனுவை திட்டிக் கொண்டே இருந்தனர். அனு அழுதுக் கொண்டே இருந்தாள்.

 

வேலுசாமி ராமசந்திரனின் அருகில் சென்று அமர்ந்து “சார் ஏதோ வயசு வேகத்துல பசங்க தப்பு பண்ணிட்டாங்க, அதை நான் சரினு சொல்ல வரல நடந்தது நடந்து போச்சி அடுத்து என்ன பண்ணலாம் மட்டும் யோசிப்போம் சார் “.

 

“அடுத்து பண்ண என்ன சார் இருக்கு அதான் எல்லாத்தையும் அவங்களே பண்ணி முடிச்சிட்டாங்களே “என்றார் ராமசந்திரன்.

 

“சார் முறைப்படி ஊர் அறிய நாமளே மறுபடியும் கல்யாணம் பண்ணி வச்சிருவோம் சார் “

 

“நீங்க சொல்லுறதுக்கு நான் ஒத்துக்குறேன், இன்னும் இரண்டுல ஒரு முகூர்த்தம் இருக்கு அன்னைக்கே கோவில்ல வச்சி கல்யாணத்தை முடிச்சி இவள உங்க கூட கூட்டிடு போயிருங்க “

 

“அதுக்கு அப்பறம் என் குடும்பத்துக் கும் இவளுக்கு எந்த சம்மந்தமும் இல்ல, உறவும் இல்ல, நீங்க கல்யாண ஏற்பாட்டை செய்யுங்க, கல்யாணத்து க்கு நான் யாரையும் கூப்பிட போறது இல்ல நீங்களும் அப்படியே பண்ண நல்லா இருக்கும் ” என்றார் ராமசந்திரன்.

 

வள்ளியம்மாள் கீதாவிடமும் ராஜியிடமும் ” அனுவை பத்தியோ அவ காதல், கல்யாணம் இதை பத்தியோ யாரும் அகிலன் கிட்ட சொல்ல கூடாது” என்று கூறி விட்டார்.

 

அனுவை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் அனுவிடம் யாருமே பேசவில்லை. இரண்டு நாட்கள் கழித்துக் கோவிலில் வைத்து அனு கதிர் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்ததும் அனு கதிர் இருவரும் ராமசந்திரனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சென்றனர். அவர் ஆசிர்வாதம் செய்ய மறுத்து விட்டார்.

 

“உன் மேல நிறைய அன்பையும் நம்பிக்கையும் வச்சிருந்த என்ன ஏமாத்தி எனக்கு பெரிய துரோகத்தை பண்ணிட்டல நீ, இந்த நிமிஷத்துல இருந்து உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல “

 

“இன்னைக்கு நடந்தது உன்ன பொறுத்து வரைக்கும் கல்யாணமா இருக்கலாம்,ஆன எனக்கு நான் உனக்கு பண்ணுற காரியம், என்னோட பொண்ணு செத்ததுக்கு நான் காரியம் பண்ணிட்டேன் “

 

“இனிமேல் நீ என் மூஞ்சில கூட முழிக்க கூடாது “என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அனு அழுதுக் கொண்டே இருந்தாள். கதிர் அவளை சமாதானம் செய்து அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

 

இரண்டு நாட்கள் கழித்து ரஞ்சனி கதிர் இருவருக்கும் ரிசப்ஷன் விழா பெரிய அளவில் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது.கதிர் மிகவும் பிரமாண்டாமாக விழாவை நடத்தினான். அனு விழாவில் ஒரு பொம்மையை போல தான் இருந்தாள். கதிரின் மகிழ்ச்சிகாக இவளும் மகிழ்ச்சியாக இருப்பதுப் போல் காட்டிக்கொண்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!