Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 24

அத்தியாயம் 24

 

ராஜாங்கம் ஏற்கனவே அபயின் அதிரடியை பெங்களூரில் கண்டிருந்ததால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என உள்ளுக்குள் நடுநடுங்கி போனார்.. ராஜாங்கம் அபிராமி நீரஜா மூவரும் என்ன நடக்குமோ என்ற பயத்தினில் இருந்தனர்…

 



Advertisement

அப்பொழுது அவர்களை மேலும் பயமுறுத்தும் பொருட்டு லிங்கேஷ்வனின் குரல் கேட்டது..

 

அபிராமி இங்க யார் வந்துருக்காங்கன்னு பாரு.. என உற்சாகமாய் கூற..

Advertisement

 

Advertisement

இவரு வேற மனுஷன் இருக்க நிலைமை தெரியாம என்று எரிச்சலில் முகம் சுழித்தவாரு வந்தவர்கள் அங்கு அமர்ந்திருந்த ரூபாலியையும் அஜயையும் கண்டு திகைத்தனர்…

 

நீரஜாவிற்கு தான் அஜய்யை தெரியும் மற்ற இருவருக்கும் அவனை தெரியவில்லை… அவர்கள் ரூபாலியைப் பயப்பர்வை பார்த்துக்கொண்டுருக்க..

Advertisement

 

லிங்கேஷ்வரன் ” தம்பி யாரும்மா அவர பத்தி சொல்லல..”

 

” ஓஹ் சாரி அங்கிள்.. இவர் அஜய் என்னோட மாமா பையன்.. அண்ட் இன்னும் கொஞ்ச மாசத்துல எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாக போகுது… ” என நீரஜாவைப் பார்த்தவாறு கூறினாள்..

 

அப்பொழுது தான் அங்கிருந்த மற்ற மூவருக்கும் என்ன நடந்திருக்கும் என விஷயம் புரிப்பட.. இனி தங்கள் நிலை என்னவோ என பயந்து கொண்டு இருந்தனர்..

 

அப்பொழுது லிங்கேஷ்வரனுக்கு போன் வர.. பேசுவதற்கு வெளியே சென்றார்..

 

ரூபாலி ” உங்ககிட்ட நான் முன்னாடியே சிற்பிகாகிட்ட நெருங்க முயற்சிக்காதீங்கன்னு எச்சரிக்கை பண்ணேன்.. ஆனா நீங்க அடங்கல.. அதான் உங்களை அடக்க அபய் அண்ணாவே வந்துருக்கார்.. முடிஞ்சா தப்பிச்சுக்கோங்க.. என நக்கலாக ரூபாலி கூறிச்செல்ல.. அஜய் அவர்களை மதித்து பேசுவது கூட பாவம் என நினைத்து அமைதியாக இருந்தான்.. ஆனால் விழிகளோ நீரஜாவை முறைக்க தவறவில்லை… ரூபாலி சிற்பியின் அறைக்கு செல்ல.. அஜயும் அவளை பின்தொடர்ந்தான்..

 

லிங்கேஷ்வரன் பேசி முடித்து வந்ததும்.. ” மாப்பிளை எனக்கு அவசரமா ஒரு வேலை வந்துருக்கு.. நான் அத முடிச்சுட்டு வந்துடுறேன்.. ” என்றார்.. ராஜாங்கம்.

 

என்ன மச்சான்.. இப்போ வந்து இப்படி சொல்றிங்க.. மருமகன் வந்துருக்கார்.. அவரோட மதிய சாப்பாடு சாப்பிட்டு போகலாம்.. என வற்புறுத்த.. அவர் அதற்கு மேல் அடம்பிடுத்து விட்டால் போதுமென்று தலைமறைவாகி விட்டார்….

 

அபிராமியும் நீரஜாவும் செல்லும் ராஜாங்கத்தையே அதிர்ச்சியாக பார்க்க.. அவரோ தான் மட்டும் தப்பித்தால் போதுமென்று வெளியேறி விட்டார்…

 

அச்சோ இந்தண்ண என்னைய மட்டும் மாட்டிவிட்டுட்டு போயிட்டாரே… படுபாவி இவன் சொல்லித்தானே எல்லாம் பண்ணுனேன்.. இப்போ அம்போனு விட்டுட்டாரே.. என உள்ளுக்குள் அலறிய அபிராமி.. சண்டைக்காரனின் காலில் விழுவது என முடிவெடுத்து.. அதற்கான நேரத்திற்கு காத்திருந்தார்…

 

அடுத்த அரைமணிநேரத்தில் லிங்கேஷ்வரன் அனைவரையும் உணவுன்ன அழைத்தார்… நால்வரும் அமைதியாக டைனிங் டேபிளில் அமரும் போது.. அலறியடுத்துக் கொண்டு வந்தார் அனுராதா..

 

அபி உங்கண்ணனுக்கு ஆக்சிடண்ட் ஆகிடுச்சாம்.. இப்போதான் **** ஹாஸ்பிடல இருந்து போன் வந்துச்சு.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. என அழுகையுடன் கூறினார்..

 

அவர் சொன்னதைக் கேட்டு அபயைத்தவிர அனைவரும் அதிர்ச்சியுற்றனர்.. என்னம்மா சொல்ற… இப்போதானே மச்சான் இங்க இருந்து போனாரு..

 

ஆமாண்ணே.. எனக்கும் அதான் புரியல.. என்கிட்ட நான் கொஞ்ச நாளைக்கு வெளியூர் போறேன்னு மட்டுந்தான் சொன்னாரு.. எங்க போறாருன்னு சொல்லல என்ன விஷயம்ன்னு சொல்லல.. ஆனா அவர் போன பத்து நிமிஷத்துல இப்படி ஒரு போன்னு.. என அழுது அரற்றினார்…

 

அவர் இவ்வாறு சொன்ன மறுநொடி லிங்கேஷ்வரனைத்தவிர அனைவரும் அபயசிம்ஹாவைப் பார்த்தனர்… ஆனால் அவனோ அங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவன் போல் மொபைலை பார்த்துக்கொண்டிருந்தான்…

 

நீரஜா அபிராமியின் உடல்கள் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது… லிங்கேஷ்வரன் அபயிடம் சொல்லிக்கொண்டு.. அபிராமியை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.. ஆனால் நீரஜா இங்கிருப்பதற்கு பயந்து.. தந்தையின் முறைப்பையும் மீறி.. அவர்களுடனே ஹாஸ்பிடலுக்கு சென்றாள்..

 

ராஜாங்கத்தின் நிலைமை கவலைக்கிடம் தான்.. உயிர் இருக்கும் ஆனால் அவரால் பேச முடியாது.. உடலின் மற்ற பகுதிகளை அசைக்க முடியாது.. கண்கள் மட்டும்தான் அவரின் உணர்ச்சிகளை கூறும்.. சுருக்க சொல்வதனால் இனி ராஜாங்கம் உயிருள்ள பிணம் என மருத்துவர்கள் முத்திரை குத்த.. அனுராதா ஒப்பாரி வைத்தார்..

 

அபிராமி நீரஜாவும் இனி தாங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தங்களுக்கு ஆபத்து என புரிந்து… விரைவாக வீட்டிற்கு செல்ல முயன்றனர்.. ஆனால் அனுராதா தனியாக இருப்பாள் என லிங்கேஷ்வரன் அவர்களை விட மறுக்க.. அம்மாவும் மகளும் முள்ளின் மேல் நிற்பது போல் தவித்தனர்…

 

**********************

 

ரூபாலி அஜய் சிற்பிகா மூவரும் அஜயை பார்க்க.. அவனோ அவர்களை கண்டுகொள்ளாமல் தன் வியாபார அழைப்பில் மூழ்கியிருந்தான்..

 

ரூபி எனக்கு கண்டிப்பா தெரியும் இந்த ஆக்சிடென்ட்ட அபய் சார் தான் ஏற்பாடு பண்ணியிருப்பார்..

 

அவளுக்குமே அந்த சந்தேகம் இருந்தாலும்.. எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற.. என அஜயிடம் கேட்டாள்..

 

அஜய் அந்த திருடனின் நிலையையும் பாதுகாவலர்களின் நிலையையும் கூறினான்.. அவங்களுக்கு அப்படின்னா இவங்கள அபய் சார் சும்மாவா விடுவார்…

 

சிற்பிகா அவர்கள் கஷ்டப்படட்டும் என்று நினைக்கவில்லை.. அவளைப் பொறுத்தவரை அவர்களை விட்டு விலகினால் போதும்.. துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்ற கொள்கை உடையவள் அவள்.. அதனால் அபயிடம் இதெல்லாம் வேண்டாம் என கூறவேண்டும் என நினைத்து அபயிடம் பேசுவதற்காக காத்திருந்தாள்..

 

அபய் தன் அலைபேசியை வைத்த நொடி பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில்லிருந்து நால்வருக்கும் உணவு வந்தது..

 

சிற்பிகா ஏதோ கூற வர அதனைத் தடுத்த அபய் ” வாங்க பர்ஸ்ட் சாப்பிடலாம் என அழுத்தமாக அழைக்க.. அதனை மீறும் துணிவின்றி மூவரும் டைனிங் ஹாலிர்க்கு சென்றனர்…

 

சிற்பிகாவும் ரூபாலியும் அபிராமி சமைத்த உணவுகளை ஓரங்கட்டிவிட்டு.. ஹோட்டல் உணவுகளை ஆண்களுக்கு பரிமாறி அவர்களும் உண்டனர்…

 

*******************

 

ஒருவழியாக அனுராதாவின் மகள் குடும்பம் வர.. அனுவை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மூவரும் வீட்டிற்கு செல்ல கிளம்பினர்.. அப்பொழுது லிங்கேஷ்வரனுக்கு கடையிலிருந்து போன் வர.. அவர் இவர்களை முதலில் வீட்டிற்கு செல்ல சொன்னார்.. இதுவும் நல்லதுக்குத்தான் என நினைத்த அபிராமி நீரஜாவோடு விரைவாக வீட்டிற்கு வந்தார்..

 

அப்பொழுது தான் நால்வரும் சாப்பிட்டு ஹாலில் அமர்ந்தனர்.. சிற்பிகா அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என அபயிடம் அவள் சொல்ல நினைத்த வினாடி.. அபிராமியும் நீரஜாவும் அவள் காலில் விழுந்தனர்…

 

அம்மாடி சிற்பிகா என்னைய மன்னிச்சுருமா.. கேட்பார் பேச்சுகேட்டு உனக்கு செய்யக்கூடாத கொடுமையெல்லாம் செய்துட்டேன்.. நான் உன்கிட்ட முதல்ல நல்லாத்தான்டா இருந்தேன்… ஆனா எங்கண்ணன் தான் என்னென்னமோ சொல்லி என் மனச குழப்பிடுச்சு.. என இதுவரை நடந்த அனைத்தையும் அழுகைக் குரலில் கூறினார்..

 

தாய் அப்படியிருக்க மகளோ ” சின்ன வயசுல இருந்தே நீ என்னை விட அழகு நல்லா திறமையானவ.. அதுனால உன் மேல எனக்கு கொஞ்சம் பொறாமை இருந்தது.. அதோடு மாமாவும் உன்னைய எனக்கு கீழதான் வச்சுக்கனும் நீ எப்போவும் எங்களுக்கு பணம் கொடுக்க மட்டும்தான்னு சொல்லி வளர்த்தார்.. ஆனா நீ திடிர்னு பெரிய மல்டிமில்லனர கல்யாணம் பண்ணிட்டு போனதால உன் மேல உள்ள பொறாமை அதிகமாகி… உன்னையும் மாமாவையும் பிரிக்க நினச்சேன்.. அப்போ தான் ரூபாலியும் அஜயும் பேசுனதக்கேட்டு.. அவர் மூலம்மா உங்கள பிரிக்க நினச்சு என்னென்னமோ பண்ணிட்டேன் ப்ளீஸ்க்கா.. என்னைய மன்னிச்சுடு.. என்னை ஏதும் பண்ணிடாதா என பயத்தில் அணைத்து உண்மையையும் கூறி அபயம் கேட்டாள்..

 

அவர்கள் காலில் விழுந்த அதிர்ச்சியில் இருந்த சிற்பிகா.. இவர்களின் பேச்சில் நினைவு வந்து.. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல எழுந்துறிங்க.. என அவஸ்தையாக கூறினாள்..

 

இல்லை நீ முதல்ல எங்கள மன்னிச்சுட்டதா சொல்லு அப்போதான் எழுந்திரிப்போம்.. என அபிராமி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் முதுகில் சுழிரென்று ஓர் அடி விழவும் பதறியடித்து எழ.. அங்கு கையில் சூலம் இல்லாத குறைக்கு பெல்ட்டுடன் ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தார்.. லிங்கேஷ்வரன்…

 

இவர்கள் செய்த கொடுமைகளை கூறத்தொடங்கும் போதே அபய் லிங்கேஷ்வரனுக்கு போன் செய்திருக்க.. அதில் தன் மூத்த மகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளையெல்லாம் கேட்டு பொங்கியெழுந்து வந்திருக்கிறார்…

 

என்னடி செஞ்சுருக்க.. உன்னைய நம்பிதானே நான் என் பொண்ண விட்டுட்டு வேலை வேலைன்னு அலைஞ்சேன் அதுக்கு நீயும் அந்த நாயும் நல்லா பாடம் சொல்லி கொடுத்துட்டிங்கடி.. அவ என்ன வேத்தாளா உன் அக்கா மகதானடி.. இதுவே உன் வயித்துல பொறந்தவள இந்த கதிக்கு ஆளாக்கியிருப்பியா.. கேவலம் பணத்துக்காக அவளை விற்கப்பார்த்திருக்கீங்களே.. அப்படி என்ன உனக்கு பணம்.. ஏன் நான் சம்பாரிக்குற பணம் உனக்கு போதலையா.. என அபிராமி மயங்கும் அளவிற்கு பெல்ட்டால் விலாசித்தள்ளியவர்.. நீரஜாவையும் விடவில்லை…

 

இடையில் அவரைத் தடுக்க முயன்ற சிற்பிகாவை ரூபாலி தடுத்தாள்..

 

உனக்கு இந்த வயசுலயே ஏன் இப்படியொரு எண்ணம்.. உன் அக்கா வாழ்க்கையவே கெடுக்க பார்த்துருக்கியே.. உன் ஆத்தா புத்திதான் உனக்கும் இருக்கா.. என அவளையும் பெல்ட்டில் வெளுத்து வாங்க.. ரூபாலியிடமிருந்து வலுக்கட்டாயமாக தன் கரத்தை விடுவித்துக் கொண்ட சிற்பிகா அவரிடமிருந்த பெல்டை வாங்கி வீசினாள்..

 

இப்போ எதுக்கு தேவையில்லாம அவங்கள அடிக்கிறீங்க.. எனக்கு நடந்த எல்லாக்கொடுமைக்கும் அவங்கள விட நீங்கதான் அதிக காரணம்.. நான் உங்கள கடைசியா எப்போ அப்பான்னு கூப்பிட்டேன்னு நியாபகம் இருக்கா.. என அவரின் முகத்தை கூர்ந்து பார்த்தவாறு சிற்பிகா கேட்கவும்.. லிங்கேஷ்வரன் திகைத்து விழித்தார்.. ஏனெனில் அவரில் சமீபநியாபகத்தில் கூட சிற்பிகா அவரை அப்பாவென்று அழைத்த நினைவில்லை..

 

அவரின் திகைத்த முகத்திலிருந்தே தனக்கான பதிலை அறிந்த சிற்பிகாவின் முகத்தில் கசந்த சிரிப்பு..

 

நான் என்ன படிச்சுருக்கேன்.. எப்போ பரதம் ஆட ஆரம்பிச்சேன்.. எத்தனை விருது வாங்கியிருக்கேன்.. எவ்வளவு மேடையேறியிருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா..

 

நான் இந்த வீட்டுல நிம்மதியா ஒரு வாய் சாப்பாடு சாப்பிட்டு ஒன்பது வருஷமாகுது.. வயிறுஎரிய பசி எடுத்தாலும் எதுல என்ன கலந்துருப்பாங்கனு பயத்திலேயே… வெறும் தண்ணி மட்டுமே குடிச்சுக்கிட்டு இருப்பேன்… நைட்டு பத்து பதினஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி என் ரூம் கதவு பூட்டியிருக்கா யாராவது என் ரூம்குள்ள இருக்காங்களான்னு பார்த்துக்கிட்டே இருப்பேன்..

 

நீங்க ஒருதடவை என் பக்கத்துல இருந்து அன்பா ஆறுதலா பேசியிருந்திங்கன்னா இவ்வளவு பிரச்சனைக்கும் வேலையே இல்லை.. உங்களுக்கு நாங்க யாருமே முக்கியம் இல்லை.. உங்களுக்கு உங்க தொழில் மட்டும்தான் முக்கியம்.. அது பின்னாடி ஓடி என்னைய எப்போவே தலைமுழுகிட்டிங்க.. நானும் எந்த உறவும் எனக்கு வேணாம்கிற முடிவுல தான் இங்க வந்துருக்கேன்..

 

காலம் கடந்த உங்க அன்பு எனக்கு வேண்டாம்.. இனி உங்களுக்குன்னு இருக்கிறது இவங்க ரெண்டு பேர் மட்டும்தான்… எனக்கு என் மாமு இருக்காரு.. அவர் என்னைப் பார்த்துப்பார்.. என கர்வமாக கூறியவள் தன்னவனைப் பார்த்தாள்..

 

அபயசிம்ஹா சிற்பிகா பேசும் பொழுது அவளின் முகத்தில் ஏற்படும் உணர்வுகளையே பார்த்துக்கொண்டிருந்தான்.. அவள் வேதனை வருத்தம் கசப்பு கோபம் என இத்தனை நாள் தன் மனதில் தந்தை குறித்து இருந்த அணைத்து உணர்வுகளையும் கொட்டியவள்.. இறுதியாக தன் மேல் அவள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் கர்வத்தைக் கண்டு.. அவனுக்குள் சொல்ல முடியா இன்ப ஊற்று பொங்கியது..

 

மாமு.. நான் எல்லாத்தையும் மறக்க நினைக்குறேன்… ப்ளீஸ் எதையும் தொடர விடாதீங்க.. இனி இவங்க குடும்பத்தை இவர் பார்த்துப்பார்.. நாம போலாம்.. இனி நீங்க எதுலயும் தலையிடாதீங்க… என அழுத்திக் கூற.. அபயின் சிரம் தானாக சரி என்பதாய் அசைந்தது..

 

சிறிது நேரத்தில் தன் உடமைகளையும் தாயின் போட்டோவையும் எடுத்துக்கொண்ட சிற்பிகா.. இனியாவது குடும்பத்துக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்க.. நீரஜா சின்ன பொண்ணு.. எனக்கு நடந்ததுக்கு இனி அவங்கள கஷ்டப்படுத்தி ஒன்னும் ஆகப்போறது இல்லை… எனக்கான வாழ்க்கைய நான் மகிழ்ச்சியா வாழ விரும்புறேன்.. என்று மட்டும் கூறி.. தன்னவனின் கைகோர்த்து வெளியேறினாள்..

 

லிங்கேஷ்வரன் மொத்தமாக ஓய்ந்துவிட்டார்.. தான் என்ன வாழ்க்கை வாழ்ந்தோம்.. எதை சாதித்தோம்.. மனைவியின் கயமத்தனமும் அறியவில்லை.. தன்னுடைய மூத்த மகளின் வேதனையும் புரியவில்லை.. அப்படி என்ன குடும்பத்தை விட்டு தொழில் எனக்கு அவ்வளவு முக்கியமா.. என தன்னைத் தானே சாடிக்கொண்டு.. காலம் கடந்து வருந்தினார்.. அதன் பயன் மூத்தமகள் இனி அவருக்கு இல்லை…

 

நீரஜா தந்தையின் ஓய்ந்த தோற்றத்தைக் கண்டு வருந்தினாள்.. தாங்கள் அவ்வளவு கொடுமை செய்தும் இறுதியில் தங்களின் நலனுக்காக அவள் பேசியதைக் கேட்டு முகம் கன்றினாள்..

 

அப்பா.. என்னைய மன்னிச்சுடுங்க ப்பா.. இனி சத்தியமா இப்படி இருக்க மாட்டேன்.. அக்காவ நினச்சு கவலைப்படாதிங்க.. மாமா அவள நல்லா பார்த்துப்பார்.. அக்கா ரொம்ப நல்லவ.. கூடியசீக்கிரம் அவளே நம்ம மேல உள்ள வருத்தம் குறைஞ்சு நம்மள கூப்பிடுவா.. அதுவரைக்கும் காத்திருக்கலாம் என்றாள்.. வாழ்க்கையில் முதல் முறையாக சிற்பிகாவை உள்ளார்ந்த அன்புடன் அக்காவென அழைக்கிறாள்..

 

உடலும் மனமும் ஓய்ந்து இருந்தவருக்கு நீரஜாவின் வார்த்தைகள் புது தெம்பைக் கொடுத்தது… இனி முன்பு செய்த தவறை செய்யக்கூடாது என உறுதியாக முடிவெடுத்தவர்.. நீரஜாவின் தலையை மென்மையாக வருடி.. அவளுக்கும் ஆறுதளித்தார்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!