Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 4

பிடித்தம் 4

 

“யாரை கேட்டு என் மகனை உள்ள வச்சிருக்கிற? நான் யாரு னு தெரியுமா? ஒரு போன் போட்டா இந்த ஸ்டேஷனே இல்லாம போய்டும்.. பார்க்கி……………..” என்று எகிறிக் கொண்டிருந்தவன் “அம்மா” என்று அலறியபடி கீழே கிடந்தான்.

ஒரு நொடி அவனுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. தலை வேறு ‘வின் வின்’ என்று தெறிக்க, தலையை தேய்த்தபடி ஒருவாறு எழுந்து நின்றான். கண்கள்கள் மங்கலாக தெரிய தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தான். அவன் அருகே அவன் அமர்ந்திருந்த இருக்கை சரிந்து கிடப்பதை பார்த்ததும் தான் தான் இருக்கையுடன் பறந்து விழுந்திருக்கிறோம் என்பது புரிந்தது. கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தவன் தனக்கு முன்னால் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தவனை கண்டு பீதியுடன், ‘இவரா!’ என்று மனதினுள் அலறினான்.



Advertisement

ருத்ரமூர்த்தியாக நிற்பவன் ACP வெற்றிவேல். (நம் கதையின் இரண்டாவது நாயகன்.)

வெற்றிவேல் விட்ட உதையில் தான் அவன் இருக்கையுடன் சேர்ந்து பறந்து சுவற்றில் முட்டி கீழே விழுந்தான்.

கீழே விழுந்தவனின் அல்லக்கைகளில் ஒருவன், “ஏய்!” என்றபடி வர, வெற்றிவேல் விட்ட ஒரு அரையில் அவன் மயங்கி கீழே விழுந்தான்.

Advertisement

மற்றொரு அல்லக்கை மனதினுள், ‘ஆத்தி ஓங்கி அடிக்காமயே ஒன்னரை டன் வெய்ட் இருக்கும் போலவே! ஓங்கி அடிச்சா ஆள் ஸ்பாட் அவுட் தான்’ என்று நினைக்க, அவனது கண்கள் பயத்துடன் வெற்றிவேலை பார்க்க, கால்களோ அவனையும் அறியாமல் இரண்டடி பின்னால் நகன்றது.

Advertisement

வெற்றிவேல் அங்கிருந்த இன்ஸ்பெக்டரை பார்த்த பார்வையில் அவர் அவசரமாக, “செயின் ஸனட்ச் கேஸ் சார்.. பதினாலு வயசு தான் சார் ஆகுது அந்த பையனுக்கு.. இந்த வயசுலேயே……………….” 

[the_ad id=”6605″]

வெற்றிவேல், “FIR போட்டாச்சா?” 

Advertisement

“இல்லை சார்.. இப்போ தான் கூட்டிட்டு வந்தாங்க.. கான்ஸ்டபில் ஸ்பாட்டில் இருந்து பிடிச்சிருக்கார் ஆனா கம்ப்ளைண்ட் வரலை” 

முதலில் எகிறியவன், “என் பையன் நல்ல படிப்பான் சார்.. அவன் வாழ்க்கை சார்” என்றபடி வெற்றிவேல் காலில் விழ,

காலை உதறியபடி, “இந்த அறிவு முதல்லேயே இருந்து இருக்கணும்.. உன்னை பார்த்து தானே உன் மகன் வளருவான்” 

“நான் இப்போ முன்ன மாதிரி இல்லை சார்.. சூப்பர் மார்கெட் வச்சு நல்லா போயிட்டு இருக்குது.. இப்போ எந்த பிரச்சனைக்கும் போறது இல்லை சார்” என்றவன் வெற்றிவேல் பார்த்த பார்வையில்,

“அது வந்து.. சார் இங்கே மாறி வந்தது எனக்கு தெரியாது சார்” என்று பம்மினான்.

வெற்றிவேல், “அப்போ வேற ACP னா இப்படி தான் சவுண்ட் விடுவ னு சொல்ற!” 

“ஐயோ அப்படி இல்லை சார்.. பையன் விஷயம்னதும்.. சாரி சார்.. மன்னிச்சிடுங்க சார்.. FIRலாம் வேணாம் சார்.. பையனை விட சொல்லுங்க சார்.. ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.

வெற்றிவேலின் தலையசைப்பில் கான்ஸ்டபில் அந்த சிறுவனை அழைத்து வந்தார்.

பார்த்ததுமே அந்த பையன் பயந்திருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்ட வெற்றிவேல் அந்த சிறுவனின் தோளில் கைபோட்டு, “எதுக்கு இப்படி பண்ண?” 

அவன் பயத்தில் நடுங்க, வெற்றிவேல், “பயப்படாத.. நான் ஒன்னும் செய்ய மாட்டேன்.. நீ நல்ல படிப்ப னு உன் அப்பா சொல்றார்.. ஏன் இபப்டி பண்ண?” 

“அ..து.. வ..ந்..து” 

“ஹ்ம்ம்” 

“பா..க்..கெட் மணி..க்காக” 

“இது தப்புன்னு தெரியுமா தெரியாதா?” 

“தெரி..யும்” 

“அப்பறம் ஏன் இப்படி பண்ண? உன் லைஃப் ஸ்பாயில் ஆகிடாதா?” 

“தெரியாம.. பண்ணிட்டேன்.. சார்.. இனி.. பண்ண மாட்டேன் சார்.. இதான்.. பஸ்ட் டைம்..” 

“சரி போ” 

“சார்!!!!!!” என்று அவன் இன்ப அதிர்ச்சியுடன் பார்க்க,

வெற்றிவேல் மென்னகையுடன் அவன் தோளில் தட்டி, “நல்லா படி” என்றான்.

பிறகு சிறுவனின் தந்தையை பார்க்க, அவன் கையெடுத்து கும்பிட்டு, “தேங்க்ஸ் சார்.. ரொம்ப தேங்க்ஸ்” என்றான்.

வெற்றிவேல், “எங்கேயாவது உன் சவுண்ட்……………..” 

“இல்லை சார்.. என் சத்தமே வராது” என்று அவசரமாக வாக்களித்தான்.

வெற்றிவேல் தலை அசைக்கவும், அல்லக்கைகளை பார்த்து, “இவனைத் தூக்குங்க டா.. கிளம்பலாம்” என்றவன் வெற்றிவேலிடம் தலை அசைத்துவிட்டு கிளம்பினான்.

வெற்றிவேல், “செந்தில்” என்றதும் அந்த சிறுவனின் தந்தை திரும்பி, “எஸ் சார்” என்றான்.

“பையனை பார்த்துக்கோ” என்றதும், அவன் மெல்லிய குரலில், “சரி சார்” என்று தலை ஆட்டிவிட்டு கிளம்பினான்.

 

வெளியே சென்றதும் ஒருவன், “நீ பயப்படுற அளவுக்கு பெரிய ஆளா ணா?” 

இன்னொருவன், “அடியை பார்த்துமா உனக்கு தெரியலை?” என்று வினவ,

அவனை முறைத்த சிறுவனின் தந்தை முதலில் வினவியவனிடம், “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் ஏரியா மாற்றி இங்கே வந்ததுக்கு இவர் தான் காரணம்.. இவர் கிட்ட வச்சிகிட்டா அவ்ளோ தான்.. ஆனா நாம உண்மையா திருந்தி வாழ நினைச்சா உதவுவார்” என்றான்.

இவர்கள் வெளியே சென்றதும் இன்ஸ்பெக்டரை முறைத்த வெற்றிவேல், “அவன் சத்தம் வெளியே வரை கேட்குது.. ஒரு அரை விடாம அவனை கத்த விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறீங்க!” என்று சத்தம் போட்டான்.

அவர், “இல்ல சார்.. அது..” 

“என்ன?” என்று அவன் உறும,

அவர் சிறு பயத்துடன், “அவனுக்கு அரசியல் செல்வாக்கு……………” 

“இருக்கட்டுமே! அவனே அசரியல்வாதியாவே இருந்தாலும் தப்பு செய்தால் நமக்கு அவன் அக்கியூஸ்ட் தான்”

 “..” 

“என்ன?” 

“எஸ் சார்” என்றவர் தயங்கியபடி, “என்ன விஷயமா….” என்று இழுத்து நிறுத்த,

அவன், “ஜஸ்ட் சார்ஜ் எடுத்துட்டு ரௌண்ட்ஸ் வந்தேன்.. பெண்டிங் பைல்ஸ் எல்லாம் எடுத்துட்டு வர சொல்லுங்க” என்றபடி அமர்ந்தான்.


[the_ad id=”6605″]

அலுவலகத்திற்கு கிருபாகரன் கிளம்பிக் கொண்டிருந்த போது அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த பிரசாத், “அப்பா கொஞ்சம் பேசணும்” என்றான்.

அவர் யோசனையுடன் சோபாவில் அமர்ந்தபடி அவனையும் அமரும்படி கைகாட்டினார்.

இன்னொரு சோபாவில் அமர்ந்தவன், “RR solutions பத்தி என்ன நினைக்கிறீங்க?” 

அவனை கூர்மையுடன் பார்த்தவர், “நேரிடையா விஷயத்திற்கு வா” என்றார். 

“ரொம்ப நாள் கழிச்சு நேத்து நானும் என் பிரெண்ட் ராகுலும் மீட் பண்ணி பேசிட்டு இருந்தோம்.. RR solutions ராகுல் அப்பாவோடது.. இப்போ அவன் தான் பார்த்துக்கிறான்.. நேத்து பேசிட்டு இருக்கும் போது அவன் தங்கை ரோஷினிக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா சொன்னான்.. அதான் நம்ம மனோவுக்கு பார்க்கலாமா னு கேட்க வந்தேன்” என்றான்.

முதலில் இவன் ரோஷினியை விரும்புவதாக சொல்ல போகிறான் என்று நினைத்து கேட்டுக் கொண்டிருந்தவர் அவன் கூறியதை கேட்டு சிறு அதிர்ச்சி அடைந்தாலும் அதை மறைத்துக் கொண்டு பார்த்தார்.

கிருபாகரன் அமைதியாக இருக்கவும், அவன், “என்ன பா அமைதியா இருக்கிறீங்க? அவங்க பெரிய இடம் தான்”

 “அவங்களை பத்தி எனக்கும் தெரியும் டா” 

“அப்பறம் என்ன யோசிக்கிறீங்க?” 

“காலையில் தான் அத்தை போன் பண்ணியிருந்தா” என்றதும் பிரசாத்தின் மனம் அடித்துக் கொண்டது.

தனது படபடப்பை மறைத்து அறியாதவன் போல், “அத்தை என்ன சொன்னாங்க பா?” என்று வினவினான். 

“அத்தை மனோவுக்கு மித்ராவை பார்க்கலாமா னு கேட்கிறா” 

ஒரு நொடி பிரசாத்தின் இதயம் இயக்கத்தை நிறுத்தியது என்றே சொல்லலாம். சட்டென்று சுதாரித்து கஷ்டப்பட்டு வரவழைத்த இயல்பு குரலில், “நீங்க.. என்ன சொன்னீங்க பா?” என்று வினவினான். 

“வீட்டில் பேசிட்டு சொல்றேன் னு சொன்னேன்” என்று அவர் யோசனையுடன் கூற,

“ஓ.. சரிப்பா யோசிச்சிட்டு சொல்லுங்க” என்றபடி எழுந்து நடந்தவன் அறைக் கதவை திறக்கும் முன் நின்று திரும்பி, “அத்தைக்கு மித்துவை மனோவுக்கு தான் கொடுக்கணும் னு ஆசையா இல்ல நம்ம வீட்டுக்கு மருமகளாக்கணும் னு ஆசையா?” என்று வினவியவன் ஒரு நொடி இடைவெளி விட்டு, “ஏன் கேட்கிறேனா! ராகுலுக்கும் மனோவுக்கு அவன் தங்கையை கொடுக்க விருப்பம் போல தெரிந்துது.. சரிப்பா நீங்க யோசிச்சு சொல்லுங்க” என்றுவிட்டு வெளியே சென்றான்.

சாதாரணம் போல் காட்டிக் கொண்டு கிளம்பினாலும் ‘எல்லாம் தான் நினைத்தபடி நல்லபடியாக முடிய வேண்டுமே’ என்ற பதற்றம் மலையளவு அவனுள் இருந்தது.

 

சில கணக்குகளை போட்ட கிருபாகரன் ஒரு முடிவுடன் கிளம்பி அலுவலகம் சென்றார். 


[the_ad id=”6605″]

அலுவலகத்தில் மித்ராணி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அவளது அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த அவளது தோழி நிவேதா அவளை குறுகுறுவென்று பார்த்தாள்.

தோழியின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளாமல் இயல்பான முக பாவனையுடன், “என்ன?” என்றாள் புருவம் உயர்த்தி.

நிவேதா, “நேத்து சீக்கிரம் கிளம்பிட்டு இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வந்திருப்பதின் மர்மம் என்னவோ?” 

“ஒரு மர்மமும் இல்லை.. வந்த வேலையை மட்டும் பார்” 

“என்ன தான் நீ கெத்து காட்டினாலும் முகத்தில் தனியா ஒரு ஒளி வட்டம் தெரியுதே!” என்றாள் கிண்டல் குரலில்.

மித்ராணி முறைக்க,

அதற்கும், “காரமே இல்லையே” என்றாள்.

மித்ராணி அமைதியாக இருக்க, 

நிவேதா, “மேடம் மனோக்கு ஓகே சொல்லிட்டீங்க போல?” 

“ஆமா” என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவள், “இப்போ YYY டிசைன்ஸ் பத்தி பேசலாமா?” 

“உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடி?” 

“இது ஆபீஸ்” 

“அது எங்களுக்கும் தெரியும்.. அதுக்குன்னு ஆபீஸ் வேலை மட்டும் தான் பார்க்கணுமா?” 

“அது மட்டும் பார்த்தால் போதும்.. நமக்குள் வேற எதுவும் தேவை இல்லை” 

நிவேதா சிறிது கலங்கிய கண்களுடன், “ஏன்டி இப்படி சொல்ற?” 

“வேற எப்படி சொல்றது?” 

“இன்னுமா இவ்ளோ கோபம்?” 

“..” 

“நாம எவ்ளோ க்ளோஸ்ஸா இருந்தோம்?” 

“எஸ்.. இருந்தோம் தான்.. இருக்கிறோம் இல்லை” 

“மித்து” என்று அவள் அதிர்வுடன் கூற, அவள் கன்னங்களில் கண்ணீர் மெல்லிய கோடாக இறங்கியது. 

தோழியின் கண்ணீரில் சிறிதும் பாதிக்கப்படாத மித்ராணி, “அவ்ளோ க்ளோஸ்ஸா இருந்த நீ உன் ரகசிய கல்யாணத்தை பத்தி ஒரு வார்த்தை என்னிடம் சொன்னியா?” என்று கோபத்துடன் சீறினாள்.

நிவேதா, “அதை மறக்கவே மாட்டியாடி?” 

“மறக்கிற விஷயமா அது?” 

“அது நடந்து நாலு வருஷம் ஆக போகுது.. இன்னும் ஏன்டி அதையே பிடிச்சிட்டு தொங்குற?” 

“ஏன்னா நீ செய்தது அவ்ளோ பெரிய தப்பு” 

“என் அம்மா கூட என்னை மன்னித்து ஏத்துக்குவாங்க போல.. நீ தான்………….” 

“ஆமா.. இந்த விஷயத்தில் கடைசி வரை உன்னை என்னால் மன்னிக்கவே முடியாது.. உன் அவசியம் அறிந்து உன்னை இங்கே வேலைக்கு சேர்த்தேன், மத்தபடி பழையபடி என்னால் ஒட்ட முடியாது.. அன்னைக்கு ஏதோ யோசனையில் மனோ ப்ரொபோஸ் பண்ணதை சொல்லிட்டேன்.. அதை வைத்து நமக்குள் சரியாகிருச்சு னு தப்பு கணக்கு போடாதே” 

“ப்ளீஸ் மித்து.. நான் செய்தது தப்பு தான்.. ஆனா அப்போ எனக்கு…………..” 

“நீ என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்க என்னால் முடியாது.. பெத்தவங்க சம்மதமும் ஆசிர்வாதமும் இல்லாம.. அவங்களுக்கு தெரியாம அப்படி என்ன கல்யாணம்? உன் அண்ணா மட்டும் ஊரறிய உனக்கு திரும்ப கல்யாணம் செய்து வைக்கலைனா இந்நேரம் இந்த உலகம் உன்னைப் பார்த்து ஓடி போனவ னு தானே சொல்லும்.. அது உன் ஆயுசுக்கும் மாறாம தானே இருந்திருக்கும்! அது உனக்கு மட்டும் அவமானம் இல்லை, உன் குடும்பத்துக்கே அவமானம் தானே! உன் பெற்றோரை பத்தி கொஞ்சமாச்சு யோசிச்சியா? உன் தங்கை கல்யாணத்தை பத்தியோ அண்ணா கல்யாணத்தை பத்தியோ யோசிச்சியா? உன் ஒருத்தி செயலால் உன் வீட்டு ஆளுங்க எவ்ளோ பாதிப்படைவாங்க னு நினைத்து பார்த்தியா? அப்படி என்னடி சுயநலம் உனக்கு?” 

[the_ad id=”6605″]

“ஏதோ ஒரு குழப்பத்தில்” என்று அவள் இழுக்க,

மித்ராணி, “என் கிட்ட சொல்லி இருக்கலாமே!” என்று சிறு ஆதங்கத்துடன் கூற, 

“அது..” என்று இழுத்த நிவேதா சிறு பயத்துடன், “உன்னிடம் சொன்னா நீ ஒத்துக்க மாட்டன்னு………..” 

“ஸோ தப்புன்னு தெரிந்தே பண்ணியிருக்க” என்று மீண்டும் கோபமானாள். 

“அப்படி இல்லைடி” 

“ஓ! அப்போ நீ செய்ததை தப்பு இல்லை னு வேற சொல்ற?” 

“தப்பு தான்.. அது.. அந்த வயசில் தெரியாம பண்ணிட்டேன்” 

“இருவத்தியொரு வயசு அறியா வயசா?” 

“இல்ல.. அது…” 

“சரி.. உனக்கு தான் அறிவில்லை.. திருட்டு தனமா உன்னை இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணானே அவனுக்கு அப்போ இருவத்தைந்து வயசு தானே?” 

“அவர் ஒன்னும் இழுத்துட்டு போகலை” 

“ஓ! ஆத்துகாரரை சொன்னா கோபம் வருதோ! அவன் இழுத்துட்டு போகலைனா நீ இழுத்துட்டு போனியா?” 

“இல்லடி.. வீட்டுல ஒத்துக்க மாட்டாங்களோ னு பயந்து தான் ரெண்டு பேரும் பேசி…………..” 

“உங்களுக்குள் பேசியதை வீட்டில் பேசி இருக்க வேண்டியது தானே! பெத்தவங்க சம்மதிக்கலைனா உன் லவ்வை பத்தி எடுத்து சொல்லி புரிய வச்சு இருக்கணும்.. ஒத்துக்கலையா போராடி இருக்கணும்.. அதை விட்டுட்டு.. ச்ச்.. உன்னிடம் போய் இதையெல்லாம் சொல்றேனே! லவ் பண்ணதையே நீ வீட்டில் சொல்லலை.. லவ் பண்ணா அதை வீட்டில் சொல்ல தைரியம் இருக்கணும்.. இல்லைனா உனக்கெதுக்கு லவ்?” 

“ப்ச்.. அதான் முடிஞ்சு போச்சேடி.. விடேன்” 

மித்ராணி கடுமையாக முறைக்க, 

நிவேதா இயலாமையுடனும் வருத்தத்துடனும், “ப்ளீஸ் மித்து” என்று கெஞ்சினாள்.

மித்ராணியிடம் பதில் இல்லை என்றதும் நிவேதா, “எனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் முடிய போகுது.. இன்னும் ஏன்டி? என் அம்மாவே என்னோட பேச ஆரம்பிச்சிட்டாங்க” 

“முன்னாடி பேசிய மாதிரியே இப்பவும் பேசுறாங்களா?” 

“அது…” என்று அவள் இழுக்க,

மித்ராணி, “காலபோக்கில் உன் அம்மா முழுமையா உன்னை மன்னிச்சு ஏத்துக்கலாம் ஆனா என்னால் அது முடியுமா னு எனக்கு தெரியலை” 

“மித்து ப்ளீஸ்டி” 

“YYY டிஸைன்ஸ் பத்தி பேசலாமா மிஸ்ஸஸ் நிவேதா?” என்ற தோரணையே நிவேதாவை தள்ளி நிறுத்த, வேறு வழி இல்லாமல் அவள் அலுவலக வேலை பற்றி பேச ஆரம்பித்தாள்.

அலுவலக வேலையை பேசி முடித்ததும் நிவேதா மனம் கேளாமல், “வீட்டிற்கு வா மித்து.. என் மகளை பார்க்க வர மாட்டியா?” என்று வினவினாள்.

தோழியின் இரஞ்சலில் மனம் லேசாக இளகினாலும் அதை காட்டிக்கொள்ளாமல், “இந்த டிஸைன்ஸ் ரெண்டு நாளில் வேணும்.. சீக்கிரம் முடிக்க பாருங்க” என்றாள்.

நிவேதா சோர்வுடன் தன் இடத்திற்கு சென்றாள்.

 

இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!