Skip to content
Post Views: 14,005
அத்தியாயம் 3
“அந்த பொண்ணுகிட்ட பேசினதை ஒன்னுவிடாம என்கிட்ட சொல்லு” என மிரட்டினான் அன்பரசு.
“ண்ணா ண்ணா… விட்டுடுங்கண்ணா, இனிமே அப்படி பண்ணமாட்டேன்” என வாயில் ரத்தம் ஒழுக கெஞ்சினான் கஜேந்திரன்.
“ இதான் ப்ரப்போஸ் பண்றதாடா ? பெரிய மனுசன்கிட்டயும் , பொட்டபிள்ளைங்ககிட்டயும் வீரத்தை காட்டவாடா ஜிம்முக்கு வர ? ” என மீண்டும் உதைத்து , “ சைக் … மனுசனாடா நீ ? இனிமே ஜிம் பக்கம் வந்த … உரிச்சு உப்புகண்டம் போட்டுடுவேன் . கிளம்புடா ” என்றான் ஆத்திரத்தோடு .
Advertisement
“ ண்ணா இன்னும் இரண்டு மாசத்துல காம்ப்படேஷன் வருதுண்ணா ” என இருகை கூப்பி கெஞ்சினான் .
“ அந்த பொண்ணுகிட்ட என்ன சொன்ன ? உன் ஹைட்டுக்கும் வெய்ட்டுக்கும் என்னாலதான் உன்னை சமாளிக்க முடியும்னு ” என பல்லை நெறித்தவன் , “ நீ பேசினதுக்கு அர்த்தம் கூட தெரியாம அந்த புள்ள நின்னுருக்கு , அதுக்கப்புறமும் வம்பிளுத்திருக்க ” என மீண்டும் உதைத்தவன் , “ நீதான் அதுல சேம்ப்பியன்னு சொல்லியிருக்கியே , எதாவது அந்த மாதிரி படத்துல நடிச்சி உன் திறமையை காட்டு ” என்றான் .
“ ண்ணா இனி எந்த பொண்ணுகிட்டயும் இப்படி பேசமாட்டேன்னா ” என அன்பரசின் காலை பிடிக்க , சிறு உதறலில் அவனிடமிருந்து தன்னை விடுவித்தவன் , “ உன்னைலாம் சும்மா விடற நிலையை நினைச்சாதான்டா வேதனையா இருக்கு . கம்ப்ளைன்ட் கொடுக்கத்தான் சொன்னேன் . வயசான காலத்துல கோர்ட்டு கேசுனு என்னால அலைய முடியாது … இனிமே இதுமாதிரி நடக்காம பார்த்துக்கிட்டா போதும்னு என்கிட்ட கெஞ்சும்போது , இதுக்குத்தான் ஜிம் நடத்துறேனானு எவ்வளோ அவமானமா இருந்தது தெரியுமா ?
Advertisement
பெரியவர் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா மிரட்டியாவது கம்ப்ளைன்ட் கொடுக்க வச்சிருப்பேன் . என்ன பண்றது அவர் நிலையில இருந்தும் யோசிக்கனும் . தவிர எக்ஸாம் டைம்ல அந்த பொண்ணுக்கும் மன உளைச்சலாகிடும்னு உன்னை சும்மா விடுறேன் .
Advertisement
இத்தனைக்கு பிறகு உன்னை ஜிம்முக்கு வர அனுமதிச்சேன்னா என்னை விட கேவலமானவன் வேற யாரும் இருக்க முடியாது . வேற ஜிம்ல சேர்ந்து ஆணழகனாவியோ , இல்ல உன் விருப்பப்படி பொண்ணுங்ககிட்ட ஆம்பிளைனு நிரூபிப்பியோ … என்னவோ செய் . ஆனா இனி நீ இங்க வரக்கூடாது ” என்றான் கட்டளையாக .
வெட்கிய முகத்தோடு கஜேந்திரன் வெளியேற , “ கஜேந்திரா ” என உரக்க குரல் கொடுத்து , “ பழிவாங்குறதா நினைச்சோ , அந்த பொண்ணோட அப்பன் வயசனவர்னோ எதாவது ஏடாகுடம் செய்த … அதுக்கப்புறம் உன் வருங்கால பொண்டாட்டிகிட்ட கூட உன்னை ஆம்பிளைனு நிரூபிக்க முடியாத மாதிரி செய்திடுவேன் ” என்று கடுமையாய் எச்சரித்து உடற்பயிற்சி செய்ய ஆயத்தமானான் அன்பரசு .
இருபது நாள் முடிந்திருக்க , முல்லையின் இறுதியாண்டு பரிட்சைகளும் முடிந்தது . கஜேந்திரனால் ஏதும் தொல்லையா என கடந்த இருபது நாளாக முல்லையை கவனித்துக்கொண்டுதான் இருந்தான் அன்பரசு .
Advertisement
அப்படியேதும் இல்லை . ஆனால் முல்லை முகத்தில் செழிப்பில்லை . சிறு வயதில் எப்பொழுதாவது ரங்கசாமியோடு காம்ப்ளக்சிற்கு வருவாள் . இவங்ககிட்ட எதுக்குப்பா காசு வாங்குறிங்க என்பாள் . இது நம்ம கடைடா , இவங்க இங்க இருக்கிறதுக்கு பணம் கொடுக்குறாங்க என்று ரங்கசாமி சொல்லும்போது பெருமையாய் பார்ப்பாள் தந்தையை .
முல்லை பெயரில் மட்டுமல்ல , முகமும் பூவைப்போல மலர்ந்துதான் இருக்கும் . ஆனாலும் முல்லைனு பேர் வச்சதுக்கு பதிலா குண்டுமல்லினு வச்சிருக்கலாம் . பொருத்தமா இருக்கும் என ஒருசில முறை நினைத்திருக்கிறான் .
உடற்பயிற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்த பின்னே முல்லையை பார்க்கும் வாய்ப்பும் அமையவில்லை , தந்தைக்கும் ரங்கசாமிக்கும் அடிக்கடி சின்ன சின்ன பிரச்சனைகள் வர அன்பரசும் அவளை யோசிக்கவில்லை .
நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு கடந்த இருபது நாட்களாகத்தான் முல்லையை தினமும் பார்த்தான் . இப்பொழுதும் கொஞ்சம் பருமனான உடல்வாகுதான் . ஆனால் முகத்தில் கபடமற்ற பழைய சிரிப்பில்லை .
ம் … சிறுமிதான் தற்போது குமரி ஆகிவிட்டாளே … அதோடு கஜேந்திரன் பேசிய பேச்சிற்கு சிரிப்பு மறந்து போனதில் ஆச்சர்யமில்லை . இனி கஜேந்திரன் இவளை தொடரமாட்டான் ஆதலால் நாளடைவில் சரியாகிவிடுவாள் என நினைத்தபடி பயிற்சி செய்துகொண்டிருந்தான் .
பின்னே ஆதிராஜ் சொன்ன முல்லை மீதுள்ள தவறையும் நினைத்தவன் , மாதக்கணக்கில் பின் தொடர்ந்திருக்கிறான் . விருப்பமின்மையை திடமாய் காட்டியிருந்தால் இத்தனை துணிச்சல் வந்திருக்குமா அவனிற்கு ? தந்தைதான் வயதானவர் , ரங்கசாமியின் தம்பி , மற்றும் அக்காள் மகன்கள் இருக்கிறார்களே ? அவர்களிடமாவது சொல்லியிருக்கலாம் அல்லவா ?
எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை என்றால் அவளிற்கு விருப்பம் என்றுதானே எவனாக இருந்தாலும் நினைப்பான் என முல்லை மேல் கோபமும் வந்தது .
தனது சிறு வயதிலிருந்தே வனிதா , நாராயணன் இருவரும் ரங்கசாமி மற்றும் ஜானகி மீது அதீத பாசம் வைத்திருப்பதை தந்தை மூலம் அறிந்தவன்தான் . ஆனால் முல்லையை தத்தெடுத்த பின்னே நடந்த சின்ன மனஸ்தாபத்தையும் , ரங்கசாமியின் அன்னை மறைவிற்கு பின்னில் ஆரம்பித்து தற்போது வரை நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளையும் அறியாத அன்பரசு … எப்போவாவது அவங்கம்மாவையோ , அல்லது தம்பி மகன் , அக்காள் மகன்களையோ பார்த்தால் அவ மேல உள்ள தப்பையும் சொல்லனும் என நினைத்துக்கொண்டான் .
உடற்பயிற்சி முடித்து வழக்கம்போல் எட்டு மணிக்கு வீட்டிற்கு வர , “ ப்பா தூக்கம் வருது ” என்றாள் தகப்பனிற்கு காத்திருந்து சோர்ந்த பாவனையில் .
“ சாப்பிட்டியா ஜனனிம்மா ? ”
“ சாப்பிட்டாச்சு , ஹோம்வெர்க்கு முடிச்சாச்சு , பால் குடிச்சிட்டு வாயும் கொப்பளிச்சாச்சு ”
“ அப்படியா ? வெரிகுட் ” என பாராட்டியவன் , “ சரி வா தூங்கலாம் ” என்று அத்தைக்கு அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் தானும் படுத்தான் மகளோடு .
“ ப்பா … நல்லா நடிச்சிங்களா ? ”
“ நடிச்சேனா ? யார்கிட்டடா ? ” என்றான் புருவம் சுருக்கி .
“ ஷுட்டிங்தான போனிங்க ? இல்ல பாடிபில்டிங் காம்படேஷன்க்கா ? ” என தற்போது சிறுமி புருவம் சுருக்க , ஓஹ் என “ காம்படேஷன் போகலடா , ஷீட்டிங்க்குத்தான் போனேன் . நல்லா நடிச்சேன் ” என்றான் புன்னகையோடு .
“ ம் … குட் அப்பா ” என்றவள் முகத்தில் எதோ கேள்வி இருக்க , மகள் எதையோ தன்னிடம் எதிர்பார்க்கிறாள் என யோசித்தான் . ஆனால் ஏதும் நினைவில் வராமல் போக , “ உன் சிங்கிங் காம்படேஷன் எப்போ ? ” என்றான் .
சிறுமியின் முகம் பிரகாசமாக , ஓஹ் இதைதான் நான் கேட்கவேண்டும் என நினைத்தாளா ? எதிர்பார்க்குற அளவுக்கு ஜனனி குட்டி வளர்ந்துட்டாளா ? என வியந்தவன் , “ என்னடா அப்படி பார்க்குற ? காம்படேஷன் டேட் மறந்துடுச்சா ? ” என்றான் கிண்டலாக .
“ எனக்கு நியாபகம் இருக்குப்பா , பெரியப்பாக்குத்தான் நியாபகம் இல்ல ” என்றாள் வருத்தமாக .
தந்தையைதான் அப்படி சொல்வாள் ஆதலால் , “ சத்தியன் அப்பா போன் செய்தானா ? ” என்றான் .
“ ம் ” என்றவளுக்கு லேசாய் கண்கள் கலங்க , உதட்டை பிதுக்கினாள் அழுகையை அடக்க.
சத்தியன் மீது கோபம் வர, “இனி பெரியப்பா போன் செய்தா நீ பேசாத. ப்ரைஸ் வாங்கினாலும் சொல்லாத ” என்றான் உண்மைக்கோபமாக.
“தாத்தாவும், ஆயாவும் பெரியப்பா வேலை டென்ஷன்ல மறந்திருப்பாங்கனு சொல்றாங்க ” என மேலும் வெம்பினாள்.
“அவங்களை நான் பேசிக்கறேன்டா ஜனனிம்மா. டைம் ஆகிடுச்சு, நாளைக்கு அஞ்சு மணிக்கு எழுந்துக்கனும்ல? தூங்கு ” என மகளை தன்மேல் படுக்க வைத்து தட்டிக்கொடுக்க, அன்பரசின் அரவணைப்பில் பிணக்கு தீர்ந்து உறங்க முற்பட்டாள் சிறுமி .
பத்து நிமிடம் கழித்து ஜனனி நன்றாக உறங்கியபின்னே மெத்தையில் படுக்க வைத்து வெளியே வந்தவன் , “ அப்பா சத்தியன் போன் செய்தான்னா ஒரு வாரத்துக்கு அட்டன் பண்ணாதிங்க , அத்தை நீங்களும்தான் ” என்றான் கோபமாக .
மாதவன் “ ஜனனிம்மா கம்ப்ளைன்ட் பண்ணுச்சா ? ” என்றார் இலகுவாக .
“ அப்படி என்னப்பா அவனுக்கு ? ” என்றவன் முகம் கோபத்தில் சிவக்கவே பிறகுதான் அன்பரசு கோபத்தின் வீரியம் புரிய “ போன் எடுக்கலனாலும் கவலைப்படமாட்டான் அன்பு . இன்னும்தான் விலகிப்போவான் ” என்றார் வருத்தமாக .
“ போனா போகட்டும் . இப்ப மட்டும் என்ன ஒட்டிட்டா இருக்கான் ? ” என்றான் கோபமாகவே .
கல்பனா “ இரண்டு வருசம் முன்ன நீதான கல்யாணம் செய்யும் எண்ணமிருந்தா வா , இல்ல எங்கேயோ இருந்துக்கோனு சொன்ன ? ” என்றார் பாவமாக .
“ அவனுக்கு சப்போர்ட் பண்ணாத்த ” என முறைக்க , சத்தியனிடமிருந்து அழைப்பு வந்தது அன்பரசுக்கு .
இந்த நேரம் மகள் அன்பரசோடுதான் இருப்பாள் என்றுணர்ந்து அழைத்தான் . ஆனால் அன்பரசு அழைப்பை ஏற்காமல் போக , ஒருவேளை திரும்பவும் ஷீட்டிங்க்கு போய்ட்டானா ? இல்லையே … ஜனனி பாப்பா இன்னைக்கு அப்பாகூட தூங்கப்போறேனு சந்தோசமா சொன்னுச்சே என நினைத்தபடி மீண்டும் அழைத்தான் தம்பிக்கு .
அன்பரசு அழைப்பை துண்டிக்க , தந்தைக்கு அழைத்தான் . “ அட்டன் பண்ணாதிங்கப்பா ” என்றான் கட்டளையாக .
“ பாவம்டா , வெளிநாட்டுல இருக்கான் , என்னவோ ஏதோனு நினைக்கப்போறான் ” என்றவர் மகனின் கட்டளையை மீறி பெரிய மகன் அழைப்பை ஏற்றார் .
“ பாப்பா காம்ப்படேஷன் பத்தி கேட்க மறந்துட்டேன்ப்பா . இப்போதான் நியாபகம் வந்தது . தூங்கிட்டாளா ? ” என்றான் வருத்தமாக .
“ ம் இப்போதான் தூங்கினா . நீ கேட்கலனு ரொம்ப வருத்தப்பட்டா ”
தந்தையின் பேச்சில் ஜனனி காம்ப்படேஷன் பற்றி கேட்கிறான் எனப்புரிய , சற்றே கோபம் தணிந்தவன் , தந்தையிடமிருந்து மொபைலை வாங்கி , தன் காதில் வைக்க , “ ரொம்ப வருந்தினாளாப்பா ? ” என்றான் வருத்தமாக .
“ பெத்த பிள்ளையை பத்தி நியாபகம் இல்லாதவன்லாம் எதுக்குடா உயிரோட இருக்கனும் ? சாவு . பெரியப்பா செத்துட்டாரு , இனி நம்மளை கேட்கமாட்டாருனு பாப்பா புரிஞ்சிப்பா ” என்றான் ஆற்றாமையாக .
“ ஹா … ஹா … ” என பலமாய் சிரித்தவன் , “ நான் செத்துட்டா என் பொண்ணை காரணமா வச்சி நீ கல்யாணம் செய்துக்காம இருந்துடலாம்னு பார்க்குறியா ? அதெல்லாம் வேலைக்கே ஆகாது . ஜனனிம்மா என் பொண்ணு . உனக்கு பாப்பா வேணும்னா கல்யாணம் செய்து பெத்துக்கோ ” என்றான் இலகுவாக .
அன்பரசு முகம் இலகுவானாலும் “ நான் முன்னவே சொன்னதுதான் . நீ கல்யாணம் செய்துக்காம நான் செய்துக்கமாட்டேன் ” என்றான் முடிவாக .
சத்தியனிடமிருந்து பதிலில்லாமல் போகவே , “ எனக்கெல்லாம் கல்யாண ஆசை வந்து இரண்டு மூனு வருசமாச்சு . உன்னால கல்யாணம் செய்துக்காம இருக்கேன் , என் பாவத்த வாங்கிக்காத ” என்றான் அண்ணனின் மனம் கரைய .
“ காலைல பாப்பா எழும்நேரம் கால் பண்றேன்டா ” என இணைப்பை துண்டித்தான் சத்தியன் .
“ கோபம் போச்சா ?” என சிரித்தார் மாதவன் .
“கோபம்தான். ஆனா ஃபீல் பண்ணிட்டானு மன்னிச்சு விட்டுட்டேன் ”
கல்பனா “கல்யாண பேச்செடுத்ததும் கட் பண்ணிட்டானா? ” என்றார் வருத்தமாக.
“ஆமாத்த. ஆனா இந்த முறை ஒரு முன்னேற்றம். கல்யாணப் பேச்செடுத்தாலே என்னால முடியாதுனு சொல்றவன், இப்போ அதை சொல்லாம கட் பண்ணியிருக்கான் ” என்றான்.
“என்னா நேரமோ தெரியல, குடும்பமே சின்னாபின்னமாகிடுச்சு. பெரியவன் ஒரு திசையில, சின்னவன் ஒரு திசையிலனு. பெத்த கடமையை கூட செய்யாம அண்ணியும் அம்போனு விட்டுட்டு போய்ட்டாங்க ” என வருந்தினார் கல்பனா.
“நான் இருக்கேன்லத்த. பார்த்துக்கலாம் விடு ” என தேற்றியவன், “சுகந்தி எப்படி இருக்கா? ” என அக்கறையோடு விசாரித்தான் அத்தை மகளை.
error: Content is protected !!