Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 7

அம்மையப்பன் 7

 

ஷாலு அண்ணே உனக்கு எதுவும் வாங்காம வருவேனா.. அப்படி வந்தாதான் என்னைய நீ சும்மா விடுவியா.. அதெல்லாம் உனக்கு நிறைய வாங்கிட்டு வந்துருக்கேன்.. ஆனா நீ இப்படி நொழுவிக்கிட்டு இருந்தா ஒண்ணுத்தையும் உங்கண்ணுல காமிக்க மாட்டேன் என அமுதன் கொஞ்சளில் ஆரம்பித்து கராறாக முடிக்க.. ஷாலினி விருட்டென திருவின் தோளிலிருந்து முகத்தை நிமிர்த்தினாள்..

 



Advertisement

அண்ணே என்ன வாங்கிட்டு வந்த என ஆவலாய் கேட்க.. அமுதன் அவளை பொய்யாய் முறைத்தான்..

 

திருட்டு கழுதை இம்புட்டு நேரம் அழுதியா.. இல்ல சத்தம் மட்டும் கொடுத்தியா.. ஒரு சொட்டு தண்ணி கூட கண்ணுல இல்ல.. என அமுதன் கடிய.. ஷாலினி விழித்தாள்..

Advertisement

 

Advertisement

பவளம் கொட்டியது வலித்தது தான்.. ஆனால் அழும் அளவிற்கு இல்லை.. சும்மா நின்றால் முதுகிலும் அடி விழுகும் என நினைத்த ஷாலினி அழுவது போல் தந்தையிடம் சரணடைந்தாள்..

 

ஈஈஈ.. அண்ணே அதெல்லாம் நின்னுடுச்சு.. நீ காமிண்ணே என இளிக்க.. அனைவரும் சிரித்தனர்..

Advertisement

 

அமுதன் தன் அறையில் வைத்திருந்த பைகளை எல்லாம் கூடத்திற்கு கொண்டு வந்தான்..

 

சில பைகளை ஷாலினியிடம் கொடுத்தவன்.. ஏய் குள்ளச்சி இந்தாடி…. இதெல்லாம் உனக்குத்தான்.. எனவும் முதலில் ஆவலாக வாங்கியவள்.. அவனின் குள்ளச்சி விளிப்பில் முகத்தை சுருக்கினாள்..

 

ஐயா.. என அவள் கோபமாக அகத்தியணை அழைக்க..

 

அடேய்.. ஏண்டா எப்போ பாத்தாலும் என்ற மவக்கிட்டயே வம்பு பண்ற என அவன் கையை முறுக்கி முதுகில் பொய்யாய் அடிக்க.. அமுதன் அலறினான்..

 

ஓஹ்.. தொறைக்கு இது வலிக்குதாக்கும்.. என மேற்கொண்டு இரண்டு அடியை போட்டவர்.. கண்ணு.. இது போதுமா இல்லை இன்னும் ரெண்டு வைக்கட்டா.. என சிரிப்புடன் கேட்டான்..

 

அச்சோ விடுங் ஐயா.. போதும் மாமாவுக்கு வலிக்க போகுது.. என பதறினாள்.. குழலி.. 

 

ம்ம்ம்ம்.. ரொம்ப நல்லதுடி.. அடிக்கவும் வச்சுட்டு.. வலிக்கும்ன்னு வேற சொல்றியா.. இதுக்கு பேருதான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுறது.. என ஷாலினி கிண்டல் செய்தாள்..

 

நல்லா சொல்லு ஷாலுமா.. என்றான் அமுதன்.. அதில் குழலியின் முகம் வாட..

 

உடனே மூஞ்ச தொங்க போடாதடி குள்ளச்சி.. அதெல்லாம் எனக்கு வலிக்கல என குழலியின் முகம் பார்த்து அமுதன் சமாதானம் செய்ய.. பாவையின் விழிகள் அவனை காண முடியாது கீழே கவிழ்ந்தது..

 

இப்போ என்னத்துக்குடா இவளுங்களுக்கு துணி எடுத்துட்டு வந்த.. ரெண்டு மாசம் முன்னாடித்தான் உன்ற சின்ன தாத்தா பேத்தி கல்யாணத்துக்குன்னு அம்புட்டு துணி எடுத்தாளுங்க.. என்றார் பேச்சியம்மை.. 

 

இருக்கட்டும்ங்க அப்பத்தா.. இன்னும் ரெண்டு மாசத்துல காலேசுக்கு போற புள்ளைங்க.. அதான் அதுக்கு தகுந்த மாதிரி எடுத்துட்டு வந்தேன்ங்.. நீங் இவைங்களுக்கு புடவை தானே எடுத்துருப்பீங்.. என அப்பத்தாவிடம் கூறியவன்.. ரெண்டு பேரும் துணிய பிரிச்சு பாருங்க பிடிச்சிருக்கான்னு.. என பெண்களிடம் சொன்னான்.. 

 

சுடிதார், லாங் குர்தி, லெகின்ஸ், பட்டியலா செட் என அழகளாக எடுத்து வந்திருந்தான்.. மதுமித்ராவிற்கு எடுக்கும் பொழுது ஷாலினிக்கும் எடுத்துவிட்டான்.. 

 

ரொம்ப நல்லாயிருக்கு ண்ணே.. என துணியை தன் மேல் வைத்து பார்த்தாள் ஷாலினி.. குழலிக்கும் அவளின் ஆடைகள் பிடித்திருக்கிறது என்பதை அவளைப் பார்த்தே புரிந்து கொண்டான்..

 

ஷாலு.. அண்ண உனக்கு இன்னொன்னும் வாங்கிட்டு வந்துருக்கேன்.. என இன்னொரு பையை எடுத்துக் கொடுத்தான்..

 

அதில் சில உல்லன் நூல் கண்டுகளும்.. தொப்பி, சுவெட்டர் செய்வதற்கான பொருள்கள் இருந்தன..

 

அண்ணே.. இந்த கலர் கிடைச்சுடுச்சா.. என மகிழ்ச்சி பொங்க அதனை எடுத்து பார்த்தாள்..

 

சும்மாவே உன் தொங்கச்சி விருசம்பழமாட்டம் படிப்பா.. இனி அதையும் தூக்கி கிடப்புல போட்டுட்டு எந்நேரமும் இதையே தான் பின்னிக்கிட்டு கிடப்பா.. என பவளம் கோபமாக சொல்ல.. ஷாலினி தன் அன்னையை முறைத்தாள்.. 

 

என்னடி மொறைக்குற.. நான் என்ன இல்லாததையா சொன்னேன்..

 

ப்ச் அக்கா.. அதெல்லாம் என்ற மருமவ இப்போ படிப்ப மட்டுந்தான் பாப்பா.. பரீட்சை முடிஞ்சதும்தான் இதெல்லாம்.. கண்ணு அத ஆத்தாக்கிட்ட குடு.. பரீட்சை முடிஞ்சதும் வாங்கிக்க.. என அவள் தலையை வருடியவாரு அகத்தியன் கூற.. ஷாலினி பாவமாய் அவரை பார்த்தாள்.. பின் மனதேயில்லாது அதனை தன் அன்னையிடம் கொடுத்தாள்..

 

சரி போங்க போயி படிங்க.. என அகத்தியன் இருவரையும் அவர்கள் அறைக்கு அனுப்பினான்..

 

குழலி முதல் மாடியில் உள்ள விசாலாமான பால்கனியில் உள்ள ஊஞ்சளில் புத்தகத்தோடு அமர்ந்தாள்.. அவள் படிக்கும் ஆஸ்தான இடம் அது.. ஷாலினி சில நேரம் இங்கு இருப்பாள்.. மற்ற நேரம் அறையிலோ இல்லை மெத்தையில் படுத்தவாறு தான் படிப்பாள்.. அதற்கே பவளத்திடம் நிறைய வாங்கிக்கட்டிக் கொள்வாள்.. 

 

மெதுவாக காலை எத்தி ஊஞ்சலை அசைத்தவள்.. அங்கு நிறைந்திருந்த பல வண்ண ரோஜா செடிகளை ஆசையாக பார்த்தாள்.. அதெல்லாம் இவளும் அகத்தியனும் சேர்ந்து வைத்தது.. அதனைப் பார்த்தாலே இவளுக்குள் புது உற்சாகம் ஊற்றெடுக்கும்..

 

சரி படிப்போம் என புத்தகத்தை திறந்தவளின் விழியை இரு கைகள் மறைத்தது.. அதுவும் அந்த கைகள் அவள் விழியை அழுத்தாமல் மென்மையாய் பொத்தியிருந்தது.. பூவை கையாள்வது போல்.. அதில்லையே யாரென அறிந்தாள்..

 

இளரோஜா நிற இதழ்களின் ஓரத்தில் வெட்க புன்னகை பூக்க.. ஆதூரமாய் ஆசையாய் காதலாய் என மொத்த  உணர்ச்சிகளையும் ஒன்றிணைக்கும் விதமாய் அவள் செம்பவள வாயிலிருந்து மாமா.. என்ற ஒற்றை சொல் உதிர்க்க.. அதனில் சர்வமும் மறந்து மயங்கி கிறங்கி போனான்.. ஆடவன் 

 

விழிமூடி அவள் தலையில் தன் முகத்தை புதைத்தவன்.. பூவை வருடுவது போல் அவள் விழி இமைகளை வருடியவாரு விரல்களை எடுத்தவன்.. அவள் வதனத்தை தன்னை நோக்கி திருப்பினான்.. இருவரின் விழிகளும் ஆயிரம் சங்கதிகள் பேசின.. அவர்களுக்கான மொழிகள் இல்லா விழிகளுக்கான பரிபாஷைகள்.. 

 

நான்தான்னு எப்புடிடி சொன்ன.. என பார்வையாலேயே கேட்க..

 

நீங்க என் மாமன்… எனக்கு மட்டுமேயான என்னோட மாமன்.. அது ஒன்னே போதும்.. உங்களை நான் உணரதுக்கு என விழியால் அவன் கேட்ட கேள்விக்கு மொழியின் வாயிலாக பதில் கூறினாள்.. அதில் அளவில்லா காதல் கொட்டிக்கிடந்தது.. கூடவே சற்று கர்வமும் இருந்ததோ..

 

குள்ளச்சி.. என்னைய ரொம்ப மயக்குறடி.. இப்படியே பண்ணிட்டு இருந்தா நாளைக்கே கார்குழலி அகத்தியன்ல இருந்து காங்குழலி அமுதனா மாறிடுவ.. என கிறக்கமாய் கூறியவன்.. அருகே தெரிந்த அவளின் பன்னீர் ரோஜா நிறத்திலான கன்னக் கதுப்பை மென்முத்தம் இட்டு கவ்வியெடுக்கம் ஆவல் வர.. அதனை கட்டுப்படுத்த முடியாதவன்.. அவள் கன்னத்தை நெருங்கும் நேரம் தொலைபேசி தொல்லையாய் அழைத்தது..

 

ரிங்க்டோனிலேயே மாமன் அழைப்பதை புரிந்து சடுதியில் அவன் விலக.. பெண்ணவளும் சட்டென எழுந்து நின்றாள்.. சிகையை கோதி தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டுவந்தவன் அவளைப் பார்த்தான்..

 

முகம் அனைத்தும் குங்குமபூவாய் சிவந்திருக்க.. தேகமோ சற்று நடுக்கத்துடன் இருந்தது.. மெல்ல அவள் அருகே விரைந்தவன்.. அவள் உள்ளங்கை தன் கையோடு அழுத்தி பிடித்து.. அவளை நிலைப்படுத்தினான்..

 

அம்மு.. இத உனக்காக தான் வாங்குனேன்.. எப்படி இருக்கு… என ஒரு மினியேச்சர் பொம்மையை அவள் கரத்தினுள் வைத்தான்.. அவன் உள்ளங்கை அளவில் இருந்தது அப்பொம்மை..

 

அந்த மினியேச்சர் பொம்மையை விழி விரிய பார்த்தாள் கார்குழலி.. ஒரு ஆறுவயது சிறுவன்.. ஒருவயது பெண் குழந்தையை நேராக பிடித்து தன்னோடு அணைத்து பிடித்திருப்பது போல் இருந்தது.. சிறுவன் ஆவலும் ஆசையுமாய் பிடித்திருக்க.. குழந்தை அவனின் இறுகிய பிடியில் சிணுங்கிக் கொண்டிருந்தாள்.. அதிலும் முக்கியமானது.. அச்சிறுவன் சிறுவயது அமுதனையும்.. அக்குழந்தை சிறுவயது குழலியையும் பிரதிபலித்தனர்..

 

குழலியின் சிறு வயது புகைப்படத்தில் அவளுக்கு மிகவும் பிடித்தது இது.. அதனை இவ்வாறு தத்ரூபமாக பொம்மையின் வடிவில் கண்டதும்.. குழலி மொழி மறந்த பேதையாய் நின்றாள்..

 

அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்..

 

பிடிச்சிருக்காடி..

 

ஹ்ம்ம்.. ரொம்ப ரொம்ப என தொண்டை அடைக்க கூறினாள்.. விழி கலங்கி கண்ணீர் துளிகள் மின்னியது.. 

 

கண்ணீர்த் துளிகள் கன்னம் தொடாது.. விழியோரத்திலேயே அதனை தொடைத்தான்.. அவன் தொடைக்க தொடைக்க துளிகள் வந்து கொண்டேயயிருக்கவும்.. ஆடவன் தன்னவளின் மனநிலையை மாற்றினான்.. 

 

உனக்குன்னு அழுகை எங்கிருந்து தான் வருமோடி.. பாரு மேட்டூர் டேம் நிறையுற அளவுக்கு வந்துட்டு இருக்கு.. என கேலி செய்ய.. பெண்ணவள் செல்லமாய் முறைத்தாள்.. 

 

இன்னும் மூனு வருசம் காத்திருக்கனும்டி.. உன்ற ஐயன் வேற என்ற மவ காலேசு முடிச்சதுக்கு அப்பொறம் தான் கண்ணாலம்ன்னு சொல்லிட்டாரு என பெருமூச்சோடு கூற.. குழலி கிளுக்கி சிரித்தாள்..

 

என்ற பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்காக்கும்.. பாரு இன்னும் ஒரு நிமிசம் நான் இங்கன இருந்தாலே என்ற மாமனுக்கு மூக்கு வேர்த்துடும்.. என அவன் சொல்லி முடிக்கும் முன்பே அகத்தியனிடமிருந்து போன் வர.. அமுதன் தலையில் அடித்துக் கொண்டான்..

 

அதில் குழலியின் சிரிப்பு அதிகமாக.. அமுதன் அவளை செல்லமாக முறைத்தான்..

 

இப்போ நான் கீழ போகல இன்னும் ஆறு மாசத்துக்கு உன்பக்கட்டே என்னைய வரவிடமாட்டாரு.. என அவன் கையை பிடித்து அழுத்தியவன்.. வரேண்டி.. நல்லா படி இல்லை அதுக்கும் என்னைய வச்சு செய்வார் உன்ற ஐயன்.. என சிறு தலையசைப்புடன் புலம்பிக்கொண்டே.. கீழே செல்ல.. குழலி அவனையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அதில் கொள்ளை கொள்ளையான நேசமும் காதலும் கொட்டிக்கிடந்தது.. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!