Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தேவை... பாவை பார்வை...

தேவை… பாவை பார்வை – 11

தேவை… பாவை பார்வை – 11

ஆஃபிஸில் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு, பக்கத்தில் உள்ள மதுவிடம்

“மது, எப்போடி புது ப்ரொஜெக்ட்ல ஸ்டார்ட் ஆகுது… நீ இன்னும் எதுவும் அது பத்தி சொல்லவே இல்லையே… உன்னோட பார்ட் அசைன் ஆகிட்டா?” என்று ரேகா கேட்க,

கீபோர்டுடில் எதோ யோசனையோடு தட்டி கொண்டிருந்தாள், மது.



Advertisement

ஒரு நொடி சென்று, பதில் வராமல் போக,

“ஹே மது… என்னடி காது கேக்கலையா?…” என்று அவளை தட்ட,

மது தன் யோசனையை விட்டு, ரேகாவை பார்க்க,

Advertisement

“என்ன மது… கண்ணு முழிச்சிட்டே தூங்கறியா?…” என்று அவளை பார்த்து கேள்வியெழுப்ப,

Advertisement

“பச்… என்னனு சொல்லு ரேகா…” என்றாள் சலிப்போடு,

“என்னாச்சி… பிஸி இன் ஒர்க் ஆர் திங்கங் சம்திங் …” என்று அவளிடம் திரும்ப கேட்க,

தன் யோசனையை விட்டுவிட்டு, அதுலாம் ஒன்னும் இல்ல… நீ சொல்லு, நான் சும்மா புது ப்ராஜெக்ட் பத்தி பாத்துட்டு இருந்தேன் என்று சொல்லி அவளை பார்க்க,

Advertisement

“அதுதான் நானும் கேட்டேன்… ப்ரொஜெக்ட்ல உனக்கு ஒர்க் லோட் அசைன் பண்ணிட்டாங்களா?…” என்று மறுபடியும் கேக்க,

ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்ன, அந்த ப்ராஜெக்ட்- ஓட ஒரு கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணனும்… அதுதான் இப்போ பாத்துட்டு இருக்கேன் என்று மது அவளின் கேள்விக்கு பதில் சொல்ல,

“அச்சோ… இது வேற இருக்கா…”

“ஆமா ரேகா… இது மட்டும் இல்ல, இன்னும் ரெண்டு கோர்ஸ் பண்ணனும்… அது ப்ராஜெக்ட் மிட்லன்னு சொல்லிருக்காங்க…” என்று இன்னும் சொல்ல,

“அப்போ நான் அந்த ப்ராஜெக்ட் பக்கம் வரவே இல்ல…”

“ஏன் ரேகா… இப்படி சொல்லுற… உனக்கு வரணும்னா கூட இன்னும் சான்ஸ் இருக்கு… ட்ரை பண்ணுறியா திரும்ப?…”

“அதுதான் ஆறு பேரு செலக்ட் பண்ணிட்டாங்கள்ல?… அப்பறம் எப்படி சொல்லுற?…”

“இந்த ப்ராஜெக்ட் ஹெட் டீம் லண்டன் தானே… சோ இன்னும் ரிசோர்ஸ் எக்ஸ்டெண்ட் பண்ணுனாலும் பண்ணலாம்ன்னு, ப்ராஜெக்ட் டிஸ்கஷன்ல பேசுனாங்க… அதுக்கு தான் சொன்னேன் அப்படி…” என்று மது விரிவாக சொல்ல,

“வாவ்… இது நல்லா இருக்கே… நான் ட்ரை பண்ணவா அப்போ திரும்ப?…”

“பண்ணலாமே… ஆனா அதுக்கு முன்ன, நீ பண்ணிட்டு இருக்குற ப்ராஜெக்ட் முடிக்கணுமே?…” என்று மது கிண்டலாக அவளை பேச,

“அதுக்கென்ன முடிச்சிடலாம்… அது தான் நீ இருக்கியே… பத்தாததுக்கு அந்த விம் இருக்கானே…” என்று சிரிப்புடன் பதில் சொல்ல,

“உனக்கு யாரு இப்போ ஹெல்ப் பன்றேன்னு சொன்னது?…” என்று அவளும் சிரிப்புடன் கேட்டு,

“நீ தான் விமல் கூட பேசலைன்னு சொன்னியே…” என்று அடுத்து கேக்க,

மது கேட்ட முன் பாதியை விட்டுவிட்டு,

“விம் கூட அப்போதான் சும்மா பேசாம சீன் காமிச்சேன்… இப்போ அவனே பேசுனா பேசுவேனே…” என்று அசடு  வழிய சொல்ல,

“உன் வேலைக்காக சொல்லுற… நீ நடத்து… நீ பேசுனா போதும் அவன் பண்ணி தந்திருவான்…” என்று மதுவும் சிரிப்புடன் பேச,

“ஹலோ லேடீஸ்… என்ன இங்க போயிட்டு இருக்கு…” என்று சரியான நேரத்திற்கு ஆஜர் ஆகினான் விமல்…”

“உன்னைய பத்தி தான் பேசிட்டு இருந்தோம்… சரியா மூக்கு வேர்த்துடுச்சி போல… நீயே வந்துட்ட…” என்று மது கேலியாக விமலை வார,

“நினைச்சதும் வந்தேன் பாத்தியா?… அங்க நிக்குறான் இந்த விமல்…” என்று வசனம் பேச,

“நிக்க வேணாம்… இப்படி உக்காரு…” என்று மது மீண்டும் கலாய்க்க,

“அப்பறம் ரேக்ளா… பேச மாட்டியா என்கூட…” என்று பேசாமல் இருந்த ரேகாவை பார்த்து கேக்க,

“அவளுக்கு நீ ஒன்னு பண்ணி தந்தா பேசுவாளாம்… அது தான் சொல்லிட்டு இருந்தா… நீ அவளுக்காக பண்ணித்தர மாட்ட?…” என்று வாய்க்குள் சிரிப்பை அடக்கி கொண்டு சொல்ல,

“என்ன மது… உனக்கு தெரியாதா?… ரேகா சொல்லாமலே பண்ணுவேன்… இப்போ ரேகா சொல்லி அதை பண்ணி தராம இருப்பேனா…” என்று அவனும் மதுக்கு இணையாக சொல்லி,

“என்ன ரேகா அப்படிதானே…” என்று ரேகாவிடம் அபிப்பிராயம் கேக்க,

“ஆமா… என்னோட பேலன்ஸ் ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாத்தையும் பண்ணிகொடுத்துடு… அது போதும்…” என்று ரேகா, விமலிற்கு பதிலாக பேச,

“என்னாது…” என்று அதிர்ச்சியாக இருவரையும் மாறி மாறி பார்க்க,

பெண்கள் இருவரும் அவனின் ரியாக்ஷன் பார்த்து சிரித்துவிட்டனர்.

மது, “என்ன விமல்… இப்படி ரியாக்ட் பண்ணுனா என்னனு எடுத்துக்குறது…” என்று சிரித்துக்கொண்டே கேட்டு,

“சொல்லாமலே பண்ணுவேன்னு சொல்லிட்டு, இப்போ ரேகா சொல்லியும், இப்படி பதில் சொல்லாம முழிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்…” என்று விமலை கேலி பேச,

“அதுதானே… விம் பதில் சொல்லுடா… மது எனக்காக கேக்குறா…” என்று ரேகா பேச,

மதுவை பார்த்து முறைத்து, “நீ தானே இவளுக்கு ஐடியா சொல்லிகுடுத்த…” என்று விமல் கேக்க,

“இல்லனா அவளுக்கு எப்படி ஓபி அடிச்சி வேலையை முடிக்கணும்னு தெரியாது… அப்படிதானே விமல்…” என்று மது பதிலுக்கு கேட்க,

“டேய் விம்… நீ சொல்லு, பண்ணி குடுப்பதானே…” என்று ரேகா திரும்பி அவனிடம் கேக்க,

பின்பு, ” அதுதான் மாட்டிட்டேனே… முடிச்சி குடுத்து தானே ஆகணும்… வேற வழி..” என்று பதில் சொல்ல,

அவனின் பதிலை கேட்டு, “வெரி குட் விமல்… இது தான் நல்லா பிள்ளைக்கு அழகு…” என்று மது விமலை புகழ,

ரேகாவோ, மதுவிற்கு ஹை- ஃபை அடிக்க,

“போதும்… உங்களை கஃபேக்கு போலாமான்னு கேக்க வந்தேன்…”

“உங்களை கூப்பிட வந்த எனக்கு, நல்ல வேலை பண்ணிருக்கீங்க… ரொம்ப சந்தோசம்…” என்று பேச,

“கஃபேக்கு போலாமே… இந்த ப்ராஜெக்ட் முடிச்சி குடுக்க போறதுக்கு, உனக்கு முன்னாடியே ட்ரீட் வைக்கிறேன்…” என்று மகிழ்ச்சியாக ரேகா சொல்ல,

“ஆமா ரேகா… அப்போதானே வேலைய சுறுசுறுப்பா முடிச்சி தருவான்…” என்று மதுவும் ரேகாவிற்க்காக பேச,

“ஹ்ம் நடத்துங்க… இன்னைக்கு என் ராசிக்கு ஏமாளின்னு போற்றுக்கு போல…” என்று கடுப்பாக சொல்ல,

“நான் இப்போ தான் சின்சியர் ஆஹ் ஒர்க் பண்ணலாம்ன்னு இருந்தேன்… அதான் இப்போ விம் பண்ணுறேன்னு சொல்லிட்டானே…  நீ வா மது… நாம கஃபேக்கே போயிட்டு வரலாம்…” என்று ரேகா மதுவை அழைக்க,

மதுவோ நமுட்டு சிரிப்புடன், “உன் வாழ்க்கை ரொம்ப பிரகாசமா தெரியுது விமல்… இருந்தும் உனக்கு இந்த பெட்டெர் மாக்ஸ்ஸே தான் வேணுமா… என்று விமலிடம் கேக்க,

“அதில் எந்த மாற்றமும் இல்ல நண்பியே…” என்று விமல் சிரிப்புடன் சொல்ல,

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… அவகிட்ட எப்போதான் சொல்லுறான்னு பாக்குறேன்…” என்று முறைத்தவாறே விமலிடம் கூற,

“ஹ்ம் சொல்லிடலாம்…” என்று சிரித்து.

“நீ என்ன பண்ணலாம்னு இருக்க…” என்று மதுவிடம் வினவ,

அவளோ அதை காதில் வாங்காதது போல, “ரேகா போயிட்டா பாரு… வா நாமளும் போலாம்…” என்று முன்னே செல்ல,

தலையை இடவலமாக ஆட்டிவிட்டு, “மது இப்படி எவ்வளோ நாள் கண்டுக்காத மாறியே உன்னால நடிக்க முடியும்னு சொல்லு…” என்று கேட்டுக்கொண்டே அவளுடன் செல்ல,

“பச்… விடேன் விமல்… இவ்வளோ நேரம் இதைதான் யோசிச்சேன்… ரேகா தான் கொஞ்சம் மைண்ட் செட் மாத்துனா, திரும்பி நீயும் எங்க அம்மா மாறி ஆரம்பிக்காத…” என்று சொல்ல,

“மது… நான் உனக்கு ஒரு நல்ல பிரெண்ட் ஆஹ் இருக்கணும்னு நினைக்கிறேன்… இவ்வளோ நாள், உன்னோட பர்சனல் லைப் பத்தி எதுவும் தெரியாது… உன் ஹஸ்பண்ட், வெளிநாட்டுல இருக்கார், அவரோட நேம் ஈஸ்வரன்னு மட்டும் தான் சொல்லிருக்க…”

“அதுக்கு அப்பறம் நாங்களும் ஏதும் நாங்களும் கேட்டுக்கிட்டது இல்ல… இப்போ பிரெண்டோட லைப்ல ப்ரோப்லேம் இருக்குனு தெரியும் போது, அதை சார்ட் அவுட் பண்ணி கொடுக்கணும்ன்னு ஒரு பிரெண்ட் ஆஹ் நான் நினைக்கிறேன்…” என்று ஒரு நண்பனாக அவனின் வாதத்தை மதுவிடம் சொல்ல,

மது ஒன்றும் சொல்லாமல் அவனுடன் நடந்து, கஃபேக்குள் நுழைந்து ஒரு சேரில் அமர,

“உன்கிட்ட என்ன ப்ரோப்லேம் சொல்லுன்னு கேக்கல மது… நீ உன் லைப் பத்தி யோசிச்சி, சரி பண்ணுனு தான் சொல்லுறேன்…” என்று மேலும் பேச,

“விமல் உண்மையா, நான் என்ன பண்ணனும்னே தெரியல… ரொம்ப குழப்பமா இருக்கு…” என்று எதையோ யோசித்தவாறே பேச,

“நீயே எதையாது யோசிச்சி, குழம்பி இருக்கன்னு நினைக்கிறேன்… நான் பாத்த வரைக்கும் பிரகதீஷ் ரொம்ப மோசமவன்லாம் கிடையாது… ரொம்ப எதார்த்தமானவன்…” என்று பேச,

மது இப்போது அவனை அர்த்தமாக பாக்க,

“நீ உடனே பாக்காத… அவன் தான் பேச சொல்லி அனுப்பிச்சான்னு… அவன் எதுவுமே, எனக்காக பேசுன்னுலாம் சொல்லல… அவன்கிட்டயே ரொம்ப பேசி பேசி தான் விஷயத்தையே வாங்குனேன்…” என்று தீவிரமாக சொல்ல,

“ம்ம்…” என்று மது சொல்ல,

“எனக்கு தெரிஞ்சு, எதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் தான் இருக்கும்… பொறுமையா பேசி தான் பாரேன் அவன்கூட… என்னனு பேசி அதுக்கப்பறம் ஒரு முடிவுக்கு வாங்க…” என்று சொல்லிவிட்டு, மதுவின் பதிலுக்காக அவளை பார்க்க,

மது அப்போதும் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்க்க,

“நான் பார்த்த வரைக்கும், நீ இந்த விஷயத்துல மட்டும் தான் இவ்வளோ பிடிவாதமா இருக்கன்னு நினைக்கிறேன்… எதுவாது சொல்லு மது…அப்படி என்ன பேசி தீர்க்க முடியாத பிரச்சனையா இருக்க போகுது?” என்று சொல்லி அவளை பார்க்க,

“சரி… பேசுறேன்…” என்று மது தன் பதிலை உதிக்க,

“ஹப்பா… ரெண்டு வார்த்தை சொல்ல வைக்குறதுக்கு, நான் பக்கம் பக்கமா பேசியிருக்கேன்… ஒரு காபி சொல்லு எனக்கு…” என்று மதுவிடம் சொல்லி, சூழலை மாற்ற,

“காபி சொல்லுறது இருக்கட்டும், எங்க உன் ஆளு…” என்று மது சிரிப்புடன் கேக்க,

“அய்யயோ… பிரெண்ட் கிட்ட பேசி ஆளை விட்ட முதல் ஆள் நானா தான் இருப்பேன்…” என்று சொல்லி ரேகா எங்கேயென தேட,

“அங்க கார்னர் டேபிள் பாரு, உன் புது பிரெண்ட் கூட அரட்டை அடிச்சிட்டு இருக்கா…” என்று மது, ரேகா இருந்த டேபிளை சுட்டி காட்ட,

அங்கே பிரகதீஷ், நிர்மல், ரேகா மூவரும் என்னவோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர்.

“பாத்தியா… நமக்கு ட்ரீட் வக்கிறேன்னு சொல்லிட்டு, நாம வரோம்மா என்னனு கூட பாக்காம, அங்க உக்காந்து அரட்டை அடிச்சிட்டு இருக்குறத…” என்று அவளை பார்த்து பொறிந்து மதுவிடம் சொல்ல,

“ஹா ஹா… அவளை தெரியாதா உனக்கு…” என்று சிரிக்க,

“இதை ஒன்னு சொல்லிடு… சரி வா, நாமளும் அங்கேயே போவோம்…” என்று சொல்ல,

மது, “இல்ல…” என்று என்னமோ சொல்லவர,

“ரொம்பலாம் யோசிக்காத… சும்மா வா…” என்று சொல்லி அந்த டேபிளிற்கு சென்றான்.

அங்கே இவர்களை பார்த்துவிட்டு,

ரேகா, “இவ்வளோ நேரமா வர்றதுக்கு…” என்று கேட்க,

“எங்களுக்கு முன்ன, நீ வந்துட்டு… எங்களை சொல்லுறியா…” என்று விமல் பேசிக்கொண்டே பிரகதீஷ் பக்கத்தில் உள்ள சேரில் அமர,

மதுவும் மென்னகையுடன் ரேகாவின் பக்கத்தில் அமர்ந்தாள்.

“அதுலாம் இருக்கட்டும்… நிர்மலுக்கு பேபி பிறந்துருக்காம்… அதும் ட்வின்ஸ்…” என்று ரேகா சந்தோசமாக சொல்ல,

“ஓஹ் அதுதான் நிர்மல் பாதி நாள் ஆஃபீஸிலிருந்து அப்ஸ்காண்டா… நான் கூட ஒர்க் பிஸின்னு தப்பா நினைச்சிட்டேனே, சூப்பர் இதுதான் விஷயமா…” என்று விமல் ஏற்ற இறக்கத்துடன் சொல்ல,

மது,” வாழ்த்துக்கள் நிர்மல்…” என்று சொல்ல,

நிர்மல் சிரிப்புடன் அதனை ஏற்றுக்கொண்டான்.

“என்ன நிர்மல்… இப்படி சிரிச்சிட்டா முடிஞ்சிதா… ட்ரீட் எங்க…” என்று விமல் கேக்க,

“இங்க பாத்தியா… எனக்கு ட்ரீட் குடுத்தாச்சி…’ என்று ரேகா, தான் உண்டதை காமிக்க,

“உனக்கு எப்படி தெரியும் ரேகா…” என்று மது கேட்க,

“இவ என்ன பேசுறா… நாம இருந்தா பேஸ்ட் போட்டு வாயை ஓட்டுனப்போல இருப்பாளே…” என்று யோசித்துக் கொண்டே பிரகதீஷ், மதுவை பார்த்துவிட்டு பக்கத்தில் உள்ள, விமலை பார்க்க,

விமல், “என்னடா… என்னைய பாக்குற..” என்று பிரகதீஷின் காதை கடிக்க,

“நீ ரோகா கிட்ட சொல்லிட்டியான்னு கேக்க தான்…” என்று சொல்ல,

“நான் சொல்லலாம்னு வரும் போது அவ கேக்க மாட்டுற…” என்று பாவம் போல விமல் சொல்ல,

அதற்குள், நான் வரும் போது இவங்க ரெண்டு பேரும் சாப்டுட்டு இருந்தாங்க, லீட்க்கு ஒரு ஹாய் சொல்லலாம்னு போனேன், அப்போ நிர்மல் கிட்ட விசாரிச்சிட்டு இருந்தாரா பிரகதீஷ், அப்போ தான் தெரிஞ்சிது… என்று மது தன் விளக்கத்தை சொல்ல,

மது, பிரகதீஷை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அப்போ எங்களுக்கு நீ ட்ரீட் தரேன்னு சொன்னது…” என்று ரேகாவிடம் வினவ,

இங்கு பிரகதீஷ்ஷோ, “என்னடா நடக்குது, இவ நம்மள முறைக்காம பாக்குறா…” என்று வியப்புடன் யோசித்து அவளை பார்க்க,

“டேய் போதும்… சும்மா மதுவையே பாக்காத…” என்று விமல், மெதுவாக பிரகதீஷிடம் சொல்ல,

“என்னைய பாக்குறது இருக்கட்டும்… முதல்ல ஒழுங்கா ரேகா கிட்ட சொல்லுடா…” என்று இவன் விமலிடம் அதே போல் சொல்ல,

அதற்க்கு இடையில், “அதுக்கென்ன… என்ன வேணும் சொல்லு, வாங்கிட்டு வரேன்…” என்று ரேகா சொல்ல,

இவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்த நிர்மல் “இருங்க ரேகா…” என்று தடுத்து,

“விமல், மது… என்ன வேணும்னு சொல்லுங்க, என்னோட ட்ரீட் ஆஹ் இருக்கட்டும்…” என்று நிர்மல் கேக்க,

மது, “பரவால்லை நிர்மல்… இன்னொரு நாள் பாத்துக்கலாம்…” என்று நிர்மலிடம் சொல்ல,

“இந்த குட்டி ட்ரீட் வேணாம்ப்பா எங்களுக்கு, நீங்க வெளில குடுங்க உங்க ட்ரீட்டை…” என்று பெருந்தன்மையுடன் விமல் சொல்ல,

நிர்மல், “நீங்க அப்படி சொல்லுறீங்களா… எனக்கு நோ ப்ரோப்லேம்… நீங்க எனக்கு என்னைக்குனு தேதி சொல்லுங்க, பிளான் பண்ணுலாம்…”

விமல், “அப்போ டபுள் ஒகே… நாங்க பேசிட்டு சொல்லுறோம்…”

நிர்மல் மணியை பார்த்துவிட்டு, “சரி… எனக்கு இப்போ ஒரு கால் இருக்கு… நான் கிளம்புறேன்…” என்று பொதுவாக சொல்லிவிட்டு,

“பிரகதீஷ்… எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் பண்ணிகுடுத்துட்டு போ…” என்று அவனையும் இழுக்க,

“டேய் இருடா… என்னனு சொல்லு…” என்று எழுந்துகொண்டு கேக்க,

“என் கேபினுக்கு வா… நான் என்னனு சொல்லுறேன்… அர்கெண்ட்… சாரி கைஸ்…” என்று அவர்களிடம் சொல்லி , பிரகதீஷையும் இழுத்துக் கொண்டு சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!