Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ரீங்காரமாய் என்னுள்ளே

ரீங்காரமாய் என்னுள்ளே – 2

ரீங்காரமாய் என்னுள்ளே – 2

இரவு மணி எட்டரையை நெருங்க, அந்த சிறிய மருத்துவமனை சிகிச்சையகத்தில், ஒரு அறையின் முன் நின்று தன் நண்பன் சூர்யாவை தீயாய் முறைத்து கொண்டிருந்தான் விஷ்ணு.

அவனின் முறைப்பு பார்த்து உள்ளுக்குள் கொஞ்சம் ஜெர்க் ஆனாலும் வெளியில் பாவமாய் அவனை பார்த்து வைத்தான் சூரியா.

“டேய்…” என பல்லைக்கடித்து, “இப்படி பாவமா பாத்தா, நான் உன்னைய ஒன்னும் பண்ணமாட்டேன்னு நினைப்பா…” என்று இருக்கும் இடம் கருதி வார்த்தையை கடித்து துப்பினான் போலீஸ்காரன்.



Advertisement

அவனின் பேச்சிற்கு சிறிதும் எதிர்வினை ஆற்றாமல், அதே பாவமாகவே பார்த்து வைத்தான் சூரியா.

நண்பனின் இந்த செயலில், சுர்ரென்று மீண்டும் மண்டை சூடாக, “உன்னை…” என சொல்லி அவனை கோபத்துடன் நெருங்க,

அதற்குள் “சார்…” என அழைத்து அவனிடம் வந்தார் மருத்துவர்.

Advertisement

சூரியாவை ஒரு முறை அழுத்தமாக பார்த்துவிட்டு, “எஸ் டாக்டர்… எப்படி இருக்காங்க?…” என்றான் விஷ்ணு.

Advertisement

“அதிர்ச்சியினால் வந்த மயக்கம் தான்… வேற ஏதும் பயப்படுற மாறி இல்ல… காயத்துக்கு ட்ரீட்மெண்ட் பாத்தாச்சு… இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க… அவங்க எழுந்துட்டாங்கன்னா வெளில நர்ஸ் இருப்பாங்க, இன்போர்ம் பண்ணுங்க… ஒரு தடவை செக் பண்ணிட்டு, நீங்க உங்க வொய்ப்வை கூட்டிட்டு போகலாம்… கொஞ்சம் வீக் ஆஹ் இருக்காங்க பாத்துக்கோங்க…” என்று மருத்துவர் அவனிடம் அறிவுரை சொல்ல,

“ஒகே… தேங்க்ஸ் டாக்டர்…” என்று புன்னகைத்தான் விஷ்ணு.

“நோ வொரீஸ்…இட்ஸ் அவர் டியூட்டி…” என மருத்துவரும் அவனிடம் பதில் தந்துவிட்டு அவ்விடம் விட்டு சென்றார்.

Advertisement

அவர் சென்றவுடன், விஷ்ணு நண்பனை முறைக்க,

சூரியா ஒன்றும் தெரியாததை போல், “வாடா போயி பாக்கலாம்…” என்று அவனை அழைக்க,

அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே, அவ்விடத்தை விட்டு நகராமல் விஷ்ணு இருக்க,

சூரியா, ” இன்னும் எவ்வளோ நேரம் தான் இப்படி முறைச்சிட்டே இருக்க போற…” என்று தன் நண்பனிடம் கேட்டு, “வா அந்த பொண்ணு எப்படி இருக்குனு பாக்கலாம்… நான் தான் ஏன் உன் வொய்ப்ன்னு சொன்னேன் ரீசன் சொன்னேனேடா…” என்றான் மீண்டும்.

விஷ்ணு, “அறிவே இல்லையாடா உனக்கு… வொய்ப்ன்னு சொல்லி அட்மிட் பண்ணிருக்க… நாளைக்கு இதனால அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்தா என்னடா செய்வ…” என்றான் சீற்றமாக,

“நீ தான் போலீஸ் ஆச்சே… சமாளிச்சிடுவான்னு தான்…” என்றான் சமாளிப்பாக சூர்யா.

“உன்னைய…” என பல்லைக்கடித்து, “இப்போ மட்டும் நான் போலிஸ்ன்னு தெரியுதாடா அரவேக்காடு… அதை அட்மிட் பண்ணும் போது சொல்லி தொலைச்சிருக்க வேண்டியதுதானே…” என்று சரமாரியாக விஷ்ணு அவனை பேச,

” எனக்கு இருந்த பதட்டத்துல என்ன சொல்றதுன்னே தெரியல… அப்போ நர்ஸ் யாருன்னு கேட்டாங்க… நீயும் அப்போ தான் உள்ள வந்துட்டு டென்ஷனோட வந்துட்டு இருந்தியா… நான் உன்னை பாத்ததை பார்த்துட்டு அந்த நர்ஸ், உன் வொய்ப் ஆஹ் கேட்டாங்க… நானும் மண்டையை ஆட்டிட்டு, ஆமா மிச்செஸ் விஷ்ணுன்னு சொல்லிட்டேன்…” என்றான் சூரியா கதை சொல்வது போல் விஷ்ணுவிடம்.

சூரியா இன்னொருமுறை சொன்னதையே சொல்ல, அவனை எரித்துவிடுவது போல பார்த்தான் போலீஸ்காரன்.

“இது வேற குட்டி கிளினிக் ஆஹ், எங்க ட்ரீட்மெண்ட் பண்ண முடியாதுன்னு சொல்லிடுவாங்களோன்னு யோசிச்சி சொல்லிட்டேன்டா… நீ எப்படியும் சமாளிச்சிடுவன்னு…” என்றான் அவனிடம் சொன்னான் மீண்டும் பாவமாக.

நண்பனின் சொன்ன பதிலில் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக, அவனை கோவமாக பார்த்தான் விஷ்ணு.

சூரியா, “நான் என்ன பண்ணுறது சொல்லு… அந்த நர்ஸ் தான் கேட்டாங்க, நான் ஆமாம்ன்னு சொல்லிட்டேன்…” என்றான் இப்போது கொஞ்சம் மாத்தி சொன்னான்.

விஷ்ணு, “எப்படிடா உனக்கு மூளை இப்படிலாம் வேலை செய்யுது… உன்னைய எனக்கு வெளுக்குற அளவுக்கு ஆத்திரமா இருக்கு…” என்று சொல்லி தன் கையை முறுக்கி கோவத்தை கண்ட்ரோல் செய்தான்.

“ரொம்ப பண்ணாதடா… எதோ அறியாத புள்ள தெரியாம சொல்லிட்டேன்… இப்படி முன்னபின்ன நடந்திருந்த தெரிஞ்சிருக்கும்…” என்றான் சூரியா அதற்கும்.

விஷ்ணு, “இதுக்கு மேல எனக்கு உன்கூட முடியலடா சத்தியமா… உன்னையையெல்லாம் பிரென்ட் ஆஹ் வச்சிருக்கேன் பாரு நான்… என்னையவே தான் சொல்லணும்…” என்றான் பல்லைக்கடித்துக்கொண்டு,

“என்னைய அப்பறம் பாத்துக்க… வா, அந்த பொண்ணை போயி பாப்போம்… பாவம்…” என்றான் சூரியா.

“நான் எதுக்கு வரணும்… நீயே போயி பாரு…” என்றான் விஷ்ணு கடுப்பாக.

சூரியா, “என்னடா விஷ்ணு இப்படி சொல்லுற… மீ பாவம்டா…” என்றான் சோகமாக,

“பொண்ணுங்க கூட கடலையை வறுக்க மட்டும் சொல்லு… நல்லாஹ் பண்ண தெரியும்… வேற ஒரு ஆணியும் இல்ல அங்க…” என்றான் விஷ்ணு நக்கலாக,

சூரியா, “அடபோடா… அதுவும் இதுவும் ஒண்ணா…” என்றான் கொஞ்சம் முறைப்பாக,

“அங்க உள்ள வந்து ஏதாவது கடலை போட்டான்னு வைய்யேன்… உனக்கு அப்பறம் இருக்கு…” என்று சூர்யாவிடம் சொல்லிக்கொண்டே அந்த அறையில் நுழைய,

சூரியாவும், “அந்த பொண்ணு எனக்கு தங்கச்சி போலடா…” என மெதுவாக முணுமுணுத்துக்கொண்டே பின்னால் சென்றான்.

விஷ்ணு அந்த அறைக்குள் நுழைய, இன்னும் அந்த பெண் மயக்கம் தெளியாமல் உறக்கத்தில் இருந்தாள்.

“என்னடா இன்னும் எழவே இல்ல?…” என பின்னால் வந்த சூரியா விஷ்ணுவிடம் கொஞ்சம் பயமாக கேட்க,

விஷ்ணுவோ அவனுக்கு பதில் ஒன்றும் கூறாமல், “அந்த பொண்ணோட பேக், கார்ல இருக்குல்ல… அதை போயி கொண்டு வா…” என சூர்யாவிடம் சொன்னான்.

அவன் சென்ற பிறகு, அவளை தன் லேசர் கண்ணால் அளவிட, அவளிடம் சிறிது அசைவு தெரிந்தது.

உடனே அவளின் அருகில் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக இமைகள் அசைந்து, இறுதியாக மெதுவாக கண்களை திறந்து, தான் எங்கு இருக்கிறோமென்று உணர முயன்றாள் அப்பாவை.

இதை பாத்த விஷ்ணுவோ, அவளிடம் சொடக்கிட்டு, “ஹே கேர்ள்… இங்க பாரு…” என அவளை அழுத்தமாக அழைத்தான்.

ஆடவனின் அழைப்பில் சற்று பயந்தவாரே, அவனை நோக்க,

“உன் பேரு என்ன?…” என்றான் அதட்டலாகவே,

அவனின் அதட்டலில் முதலில் சற்று மிரண்டாலும், பின்பு தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, “சிந்து… சிந்துஜா…” என்றாள் மெல்ல வாயை அசைத்து, பாவை.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?… மண்டையில மூளைன்னு ஒன்னு வச்சிருக்கியா இல்லையா…” என்று அவன் அழுத்தமாக காட்டத்துடன் கேக்க,

அவனின் இந்த அதட்டலில், சிந்துவோ மிரண்டு விழிக்க,

அதை பார்த்து இவனுக்கு கோவம் சுர்ரென்று இன்னும் ஏறியது.

“ஏய்… யூஸ்லெஸ் இடியட்… உன்னை தான் கேக்குறேன்… காதுல விழுதா…” என அவன் இன்னும் மிரட்டி கேக்க,

ஏற்கனவே அவளின் உடம்பில் உள்ள சீராய்ப்புகள் எல்லாம் வலியை கொடுக்க, அவனின் இந்த மிரட்டல் வேறு, நங்கைக்கு பயத்துடன் கூடிய தலைவலியை குடுத்தது.

நொடி நேரத்தில், கண்முன்னே நடக்க விருந்த பெரும் விபத்தை தவிர்த்திருந்தான். ஒரு போலீஸ்காரனாய் எத்தனையோ விபத்தை பார்த்திருக்க, இன்று தனக்கே நேர விருந்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எல்லாம் இவளின் அஜாக்கிரதையால் என்று அவளை முறைத்துக்கொண்டு இருந்தான்.

அவளின் உடமொழியிலே, அவளின் பயத்தை அறிந்தவன், கொஞ்சமும் இலகாமல், “நான் வந்த வேகத்துக்கு, உன்னைய இடிச்சிருந்தா, என்ன ஆகியிருக்கும் தெரியுமா?… அதுவும் ஹைவேல…” என்றான் சீற்றத்துடன்.

அவளால் நிச்சயம் அவனை எதிர்கொள்ளவே முடியவில்லை. தப்பு முழுவது அவளின் மீதே. வேலை முடித்து பஸ்ஸை விட்டு இறங்கி தங்கும் விடுதிக்கு வரும் போது தாயிடமிருந்து போன், அவரின் பேச்சில் அத்தனை ஆத்திரம், ஆதங்கம் பெண்ணவளுக்கு.

கோவம் கண்ணையும், செயலையும் மறைக்க,  அவர் பேசியதை யோசித்தவாறே ரோட்டை கடக்க, அதில் அவளின் சிந்தை சிதறி,  ரோட்டில் அதிவிரைவாக வந்த வாகனத்தை கவனியாமல் போக, காரின் ஹார்ன் சத்தத்தில், நடப்புக்கு வந்து பார்க்க, கார் அவளுக்கு மிக அருகில்.  தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு ரோட்டை வேகமாக கடக்க முற்பட, பதட்டத்தில் தடுமாறி கீழே விழுந்தாள், அடுத்தடுத்த அதிர்ச்சியில் மயக்க  நிலைக்கு சென்றால் மாது.

பெண்ணவளின் கவனம் இங்கில்லாமல் இருக்க, விஷ்ணுவின் கோவோமோ எல்லையை கடக்க, அவளை “ஹே…” என்று கூப்பிட்டு கவனத்தை திருப்ப,

அவனின் சத்தத்தில் அதிர்ந்து, கண்ணில் நீருடன் அவனை பார்க்க, அவனும் அவளை அழுத்தமாக பார்த்தான்.

அவனின் பார்வையில் கொஞ்சம் மிரண்டவாறே, “சாரி… சார்… எதோ… யோசனைல …” என்று  அவள் நிறுத்தி நிறுத்தி சொல்ல,

“உனக்கு யோசனை எல்லாம் நடு ரோட்டுல தான் வருமா…” என்றான்  இப்போது நக்கலாக.

அவனின் இந்த நக்கலில், காப்பாத்திய ஒரே காரணத்திற்காக இவன் இப்படியெல்லாம் பேசுவனாமா என கோவம் வர முயன்று அதை அடக்கி, நிதானமான குரலில் “ரொம்ப தேங்க்ஸ் சார் காப்பாத்தினத்துக்கு… பட் நீங்க யாருன்னே தெரியாதா பொண்ணுக்கிட்ட இவ்வளோ அட்வான்டேஜ் எடுத்து பேசவேணாம்…” என இப்போது கொஞ்சம் திடமாக சொல்லிவிட்டாள்.

“நீங்க என்னை காப்பாத்தினத்துக்கு, உங்களுக்கான நன்றி எப்பவும் என் மனசுல இருக்கும். அதுக்காக நீங்க இப்படி பேசுறதையெல்லாம் கேட்டுக்க முடியாது…” என்றாள் முடித்தாள் சிந்து.

அவளின் பேச்சில் விஷ்ணு, புருவமுயத்தி அவளை பார்க்க,

அதற்குள், “விஷ்ணு… இந்தாடா பேக்… மம்மி பேசுனாங்களா… அதான் லேட்…” என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் சூரியா.

உள்ளே வந்தவனை யாரென்று பெண்ணவள் பார்க்க, அவள் விழித்திருப்பதை பார்த்துவிட்டு இயல்பாக, ” தங்கச்சி எப்படி இருக்கு இப்போ… பரவல்லையா?…” என்று சூரியா விசாரிக்க,

அவனின் இயல்பாக தங்கச்சின்னு என்ற அழைப்பில், பாவை கொஞ்சம் தெளிந்து, “ம்… அண்ணா…” என்று பதில் சொன்னாள்.

“அண்ணா நீங்க?…” என்றாள் சூரியாவிடம்,

“நான் சூரியா ம்மா… இவன் என்னோட பிரெண்ட் விஷ்ணு…” என்றான் அறிமுகமாக,

“ஓஹ்… சரி அண்ணா… நான் சிந்து…” என்றாள் பதிலுக்கு,

“இது எந்த ஊர் அண்ணா…” என்றாள் சூரியாவிடமே, விஷ்ணுவை அவள் பார்க்கவே இல்லை.

“இது அவிநாசி தான்… நீ மயங்கினல்ல, அதுக்கும் அடுத்த ஊர் தான்…” என்றான் தகவலாக சூரியா.

சூரியா, “இனிமே ரோடு கிராஸ் பண்ணும் போது, பார்த்து பண்ணுமா…” என்றான் அறிவுரையாக,

சாரி அண்ணா… இனிமே கவனமா இருப்பேன் அண்ணா… என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்… ரொம்ப சாரி அண்ணா…” என்று முழுதாக தெளிந்து மனதார அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.

“நடந்துச்சு விடு… இனிமே அதை பத்தி பேசி என்ன பண்ணுறது…” என்றான் சூரியா இலகுவாக.

இவர்களின் பேச்சை சகிக்க முடியாமல், பல்லைக்கடித்துக்கொண்டு “சூரியா…” என்று அவனை அழுத்தமாக அழைத்தான் விஷ்ணு.

“ம்… சொல்லு விஷ்ணு…” என்றான் அவனிடம் சூரியா.

விஷ்ணு, “நீங்க உங்க பாசப்பயிரை அப்பறம் வளத்துக்கோங்க… டாக்டர்ட்ட சொல்லி செக் பண்ண சொல்லி, அடுத்த ப்ரோசிஜர் பாருடா இடியட்…” என்று வார்த்தையை கடித்து துப்பினான்.

“ம்ம்… ஒகே டா…” என்றான் சூரியா.

இவனின் பேச்சை கேட்ட மங்கையோ, “இவனுக்கு இப்படி தான் பேச்சே வரும் போல… சரியான சிடுமூஞ்சி சின்னராசா இருப்பான் போல…” என மனதில் நினைத்து அவனை பார்த்து வைத்தாள்.

பேச்சு சூரியாவிடம் இருந்தாலும், பெண்ணவளிடம் ஒரு பார்வையை வைத்திருந்தவன், இவள் பார்த்தப்பதை பார்த்து, “என்ன…” என கண்களால் வினவ,

அவனின் கேள்வியில் முழித்து விட்டு, பின்பு சமாளிப்பாக “பேக்… போன் பேசணும்…” என்றாள்.

நர்ஸிடம் தகவல் சொல்லிவிட்டு, “எங்க இருக்கு உங்க வீடு… உன் வீட்டுக்கு சொல்லணும்ல… என்ன பண்ணுற நீ…” என்று கேள்விகளை அடுக்கடுக்காக அவளிடம் கேட்டான் சூரியா.

அவன் கேட்ட பிறகு தான், தனது வீட்டை பத்தி யோசித்தாள் மங்கை. “தனக்கு இப்படி அடிபட்டுவிட்டது என்று தெரிந்தால், பதறுவார்கள் தான் ஏனென்றால் எங்கே இதில் வேலைக்கு செல்லாமல் இருந்து விடுவாளோ என்று…” என விரக்தியாக நினைத்துக்கொண்டாள் சிந்து.

“என்னம்மா தங்கச்சி யோசனை…” என்று சூரியா அவளை கேக்க,

“ஹான்… ஒண்ணுமில்லை அண்ணா…” என வலிந்து சொல்லி,

“வீட்… வீட்டுல நானே சொல்லிடுறேன் அண்ணா…” என தயங்கி முடித்தாள் சிந்து.

அவளின் தயக்கத்தில் சூரியா விஷ்ணுவை பார்க்க, விஷ்ணுவின் கண்களோ பாவையிடத்தில் தான் நிலைத்திருந்தது.

வேறு ஏதும் சூரியா கேட்காமல், “சரிம்மா… டாக்டர் இப்போ வந்துருவாங்க… உன்னை செக் பண்ணிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு முன்னவே சொல்லிட்டாங்க… நாங்களே உன்னை ட்ரோப் பண்ணுறோம்… எங்க இருக்க நீ…” என்றான்.

அவினாஷியில் இருந்து பக்கத்து ஊரில் உள்ள ஹாஸ்டெல்லின் பெயரை சொல்லி, அங்கு தங்கிருப்பதாக பதில் சொன்னாள் சிந்து.

“அங்க இன்போர்ம் பண்ணனுமா தங்கச்சி…” என்று அவன் அடுத்த கேள்வி கேக்க,

“இல்ல அண்ணா… நான் என் ரூம்மேட்க்கு மெசேஜ் பண்ணிட்டேன்…ரொம்ப தேங்க்ஸ் அண்ணா… நானே கூட போயிடுவேன் அண்ணா… ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல…” என அவனிடம் தயங்கியவாறே சொல்லி முடித்தாள்.

தன்னை காப்பாத்தியதே பெரிது, எதற்கு அவர்களுக்கு இன்னும் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்று தான் அவ்வாறு சொன்னாள்.

ஆனால் சூரியாவோ, ” எங்களுக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை… நாங்க உன்னைய ஹாஸ்டெல்ல விட்டுட்டே போறோம்…” என அவளிடம் சொன்னான்.

அவள் தயங்கியவாறே, “உங்களுக்கு இன்னும் சிரமம் குடுக்க நான் விரும்பல அண்ணா…” என சொன்னாள்.

இவர்களின் இந்த சம்பாஷணைகளில் எதிலும் கலந்துகொள்ளாமல், அவளின் முக பாவங்களை தான் ஊன்றி கவனித்துக்கொண்டிருந்தான் காவல் அதிகாரி.

அதற்குள் டாக்டர் வந்து அவளை பரிசோதித்து முடித்து, அவளிடம் தற்போது எப்படி இருக்கிறது என்று விசாரித்துவிட்டு, மருந்து, மாத்திரை பற்றி அவளிடம் சொல்லிவிட்டு, இறுதியில் ” ஒகே சார்… உங்க வொய்ப்வை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போலாம்…” என விஷ்ணுவிடம் சொல்லிவிட்டு வெளியேறினார்.

டாக்டரின் வொய்ப் என்ற வார்த்தையில் அதிர்ந்த சிந்து, விஷ்ணுவை பார்க்க, அவள் பார்ப்பது தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல், “நான் கார்ல வெயிட் பண்ணுறேன்… நீங்க ரெண்டு பேரும் சீக்கரம் வந்து சேருங்க…” என சூரியாவிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றான் விஷ்ணு.

அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்த சூரியா, பொறுமையாக அவளிடம் விளக்கமளித்தான்.

அதன் பிறகே கொஞ்சம் தெளிந்தால் மாது.

பிறகு, மெதுவாக சிந்து நடந்து வர, சூரியாவும் அவளுடன் சேர்ந்து நடந்தான்.

அப்போது அவள், “அண்ணா எவ்வளோ செலவாச்சுன்னு சொன்னா… நான் உங்களுக்கு தந்திருவேன்…” என்றாள்.

“அட என்னமா… அதுலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல… நான் எதுவுமே பண்ணல… விஷ்ணு தான் செட்டில் பண்ணினான்…” என சொல்லி முடித்தான் சூரியா.

“இல்லனா… கண்டிப்பா நான் குடுத்துருவேன் அண்ணா… நீங்க வாங்கிக்கணும்…” என்றாள் அவள்.

“அண்ணான்னு சொல்லுற… அப்பறம் பணம் குடுக்குறேன்னு சொல்லுற…” என்றான் அவனும் விடாமல்.

“இது வேற அண்ணா… ப்ளீஸ்… ஏற்கனவே குற்றவுணர்ச்சியா இருக்கு… இதுல பணமும் வேணாம்னு சொன்னா… எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கும் அண்ணா… ப்ளீஸ்…” என அவளும் பேச,

அதற்குள் காரின் அருகாமையில் வந்திருந்தனர் இருவரும்.

“அட சும்மா இரு ம்மா…” என அவளிடம் சொல்லிக்கொண்டே கதவை திறக்க,

“என்னவாம்…” என்றான் விஷ்ணு சூரியாவிடம்,

சூரியா அவனிடம் சிந்து சொன்னதை சொல்ல, விஷ்ணு திரும்பி அவளை பார்த்தான்.

“சும்மாவே இவன் நக்கலா அதட்டி பேசுவான்… இதுக்கு என்ன சொல்ல போறான்னு தெரியலையே… எப்படி இருந்தாலும் இவன்கிட்ட பணத்தை குடுக்கணும்…” என நினைத்துக்கொண்டே அவனை பார்த்தாள்.

அவளின் முக பாவனைகளையே கவனித்துக்கொண்டிருந்தவன், இதையும் கவனிக்க, “என்ன நினைத்தானோ தெரியவில்லை… பணம் குடுத்தா கொடுக்கட்டும் விடுடா…” என சூரியாவிடம் சொல்லி காரை கிளப்பினான்.

அவனின் பதிலில், “வேணாம்னு ஒரு கர்ட்டஸி கூட சொல்லலை இவன்…” என இப்போது அவளின் மனம் நினைக்க, ஆக மொத்தம் பெண்ணவளின் மனதில் அவளறியாமலே, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினான் விஷ்ணு.

அதன்பின் அவளின் ஹாஸ்டெலில் அவளை இறக்கிவிட்டு, அவனின் பயணத்தை தொடர்ந்தான் தன் நண்பனுடன்.

காரணமும் காரியமும் இன்றி இந்த நிகழ்வு எதற்கு?

எதிர்பாராத இந்த சந்திப்பு, அவர்களின் வாழ்க்கை பயணத்தில் மாற்றத்தை விதைக்குமா?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!