Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaaUncategorized

அன்பேநீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் 3.1

அத்தியாயம் 3.1: 

 

 

 



Advertisement

அடுத்தநாள் காலையில் உமா, மல்லி, அம்மு, கண்ணன் மற்றும் குட்டி என அனைவரும் புறப்பட்டுக் காங்கேயம் சென்றனர். 

 

 

Advertisement

 

Advertisement

 

 

முதலில் அனைவரையும் துணிக்கடைக்கு அழைத்துச் சென்றாள் உமா. 

Advertisement

 

 

 

 

 

அனைவரும் கடையில் உள்ளவற்றை வேடிக்கை பார்த்ததைப் பார்த்த உமா, வேடிக்கை பார்த்தது போதும் வாங்க… கண்ணன், குட்டிக்கு முதலில் எடுத்துவிட்டு அப்புறமா அம்முக்கு எடுக்கலாம். ஆமாம்கா boys section மேல இருக்கு. நமக்குக் கீழ்தான் அதனால அவங்களுக்குப் பார்த்துவிட்டு நமக்குப் பார்க்கலாம் என்றதும் அனைவரும் மேலே சென்று தம்பிகளுக்குப் பார்த்தனர். “குட்டிக்கு இரண்டு Set ம், கண்ணனுக்கு இரண்டு Set என நேர்த்தியாக மற்றும் விலை குறைவாக எடுத்துக்கொண்டு கீழே வந்தனர்”.  

 

 

 

அங்கு “அம்முவுக்கு இரண்டு Set  சுடிதார், ஒரு சேலை எடுத்துக்கொண்டு வந்தவர்கள்”.  

 

 

 

“அடுத்ததெருவில் உள்ள மிகச்சிறிய கடையில்(platform கடையில்)  உமாவும், மல்லியும் ஆளுக்கு ஒரு புடவை எடுத்துகொண்டனர்”.  

 

 

 

 

 

இதை எல்லாம் பார்த்த கண்ணன், “அக்கா எங்களுக்கு மட்டும் ஏன் அந்தகடையில துணி எடுக்கற? உனக்கு மட்டும் இந்தக் கடையில ஏன்கா எடுக்கற? அது ஒன்றும் இல்லடா நீங்க எல்லாம் படிக்கபோறபசங்க…. நான் அப்படியா காட்டுலையும், சேத்துலையும் வேலை பார்க்க எனக்கு இது போதும்டா” என்றள்…… 

 

 

 

 

 

நீ வேணா பாருக்கா “நான் வேலைக்குப் போய் முதல் சம்பளத்தில் உனக்குப் பிடிச்ச வாடாமல்லிகலர்ல பட்டு சீலை வாங்கித் தருவேன்”…. நீ எனக்கு அதைக் கட்டிக்காட்டனும்கா.  

 

 

 

 

 

நீ மட்டும் தான் வாங்கிதருவியா….  நானும் வாங்கித்தருவேண்டா எனப் போட்டி போட்டு தம்பி, தங்கையை அமைதிபடுத்தி . நீங்க ரெண்டு பேரும் வாங்கிதரத நான் ரொம்பரொம்பப் பத்திரமா வச்சிக்குவேன். உங்க அன்பு தான் இந்த அக்காக்கு  முக்கியம்…. நீங்க பாசமா எது கொடுத்தாலும்  இந்த அக்கா பொக்கிசமா பாதுகாத்து வச்சிக்குவேன். சண்டை போடாம வாங்க ரெண்டு பேரும் என்று உமாவின் பின் இருவரும் சென்றனர்..  

 

 

 

 

 

இவர்களின் சண்டையில் குட்டியை கவனிக்கத் தவறிவிட்டார்கள். போதும் உங்க சண்டையும், சமாதானமும் வாங்க எதாவது சாப்பிட்டுப் போகலாம் என்றால் மல்லி. அதற்கு அம்மு, எதுல சரியா இருக்கீங்களோ இல்லையோ சாப்பாடு விஷயத்தில் மட்டும் சரியா இருக்கீங்க அக்கா என அவளைக் கலாய்த்தால். 

 

 

 

 

 

 

 

அதற்கு மல்லி வெகு நிதானமாக , “அம்மு நாம எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறோம்? மூனு வேலையும் நிம்மதியா சாப்பிடத்தான், நாம இந்த உணவை மட்டுந்தான் போதும் அப்படினு சொல்லறோம்,  இந்த மாதிரி பணமோ, நகையோ, நிலமோ எதையும் வேண்டாம்னு சொல்லமாட்டோம்….  இந்த சாப்பாட்டுக்கு நாம செய்யும் மரியாதை அதை நிராகரிக்காம இருப்பதுதான்” எனக்கூறிய அவளின் கூற்றில் சிறிது நேரம் அமைதியாக இருந்தது அந்த இடம்… அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு  உமா, அதோ பாருங்க அந்தக் கடையில பால்கோவா நல்லா இருக்கும்… குட்டி வாடா எனத் திருப்பிபார்த்தால் திகைத்து நின்றுவிட்டால். அவளை  பார்த்த அனைவரும் அப்போதுதான் உறைத்தது குட்டி இல்லாதது.  

 

 

 

 

 

“உமாவுக்குக் குட்டி இல்லாததைப் பாத்து என்ன செய்வது என்று புரியவில்லை. கண்ணன் பதட்டத்தில் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்று விட்டான்”…. “அம்முக்குப் பயத்தில் கை கால் எல்லாம் நடுக்கம் கண்டுவிட்டது. மல்லி அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டால்”.  

 

 

 

 

 

நிலையை உணர்ந்த கண்ணன் முதலில் சுதாரித்துக்கொண்டு உமாவிற்குப் பக்கத்துகடையில் தண்ணீர் வாங்கிக் கொடுத்து தெளியவைத்து குட்டி எந்த இடத்தில் மாயமானான் என ஆராய்ந்தான். அம்மு, மல்லியிடம் எந்த இடத்தில் இருந்து காணாமல் போனான் என யோசனை செய்யச் சொன்னான். 

 

 

 

உமாவிடம், அக்கா நிதானமாக யோசனை செய்யுங்கள். அவன் எங்கு இருந்து காணாமல் போனான் நானும் யோசிக்கிரேன் அக்கா என்றான். “கண்ணா அவனுக்கு எதுவும் ஆகி இருக்காது இல்ல? அவன் பசி தாங்க மாட்டான்…. குட்டிக்கு வீட்டுக்கு வழி தெரியாதுடா…  எப்படி வருவான்? யாராவது அவன தூக்கிகிட்டு போய்டாங்ளா? அவன அடிப்பாங்லா என அவள் பாட்டுக்கு தனக்குள் உழன்று கொண்டது மட்டுமல்லாமல் வெளிப்படையாகப் புலம்பவும் செய்தால்”. இதைப் பார்த்த அனைவருக்கும் பயம் இன்னும் அதிகமானது. 

 

 

 

 

 

அங்க வெற்றியின் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தனர். “விடியலிலேயே!” விஷ்ணு மற்றும் அருண் காங்கேயத்தில் இருந்து வந்துவிட்டனர்.  

 

 

 

 

 

மீனுவும் விடியலிலேயே எழுந்து குளித்துவிட்டு அன்பு அண்ணன்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவள் மணியையும், வாசலையும் மாரிமாரி பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த “நாச்சியார்!, ஏண்டி சின்னவளே அப்படி என்ன தாண்டி பாத்துகிட்டு இருக்க…. அதுவா பாட்டி வெற்றி அண்ணாவ தான் பாட்டி பார்த்துகிட்டு இருக்கேன்”. அண்ணா இப்ப எங்க வந்துகிட்டு இருப்பாங்க? இந்நேரம் வந்து இருக்கனும் இல்ல….  அதுதான் பாட்டி  பார்த்துகிட்டு இருக்கேன் என்றாள்….. 

 

 

 

 

 

 

 

இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுவாங்க….” நீ போய் உன் அண்ணனுங்க என்னா பண்ணுறாங்கனுபாரு”….. சரிபட்டி… நான் பார்த்துட்டுவறேன் என்றாள். அப்படியே அம்மாவ கூட்டிகிட்டு வந்துவிட மீனு….. சரிபாட்டி என்று சென்றுவிட்டால்.  

 

 

 

 

 

 

 

அண்ணனின் அறைக்குச் சென்று பார்த்தாள், அவர்கள் இருவரும் புறப்பட்டு அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த மீனு, “டேய் அண்ணா”… நீங்க திருந்தவே மாட்டீங்களா…. வாங்க கீழ பாட்டி கூப்படறாங்க. நான் போய் அம்மாவ பார்த்து விட்டுவறேன் எனக்குக் கூறி சென்றுவிட்டால். 

 

 

 

 

 

 

 

அவள் “மின்னல் வேகத்தில் வந்து சென்றதை பார்த்த விஷ்ணு, ஏன்டா அருண் இவ மாறவே மாட்டாலா? எப்போதும் சின்னக் குழந்தை மாதிரி நடந்துக்கிறா”, பாவம்டா இந்தக் கார்த்திக் இவள வச்சி எப்படிதான் குப்பைக்கொட்டபோறானோ என்றாள். 

 

 

 

 

 

 

 

அதற்கு “அருண் இந்த வீடு வீடா இருக்கக் காரணம் இவ தாண்டா, இவ சிரிப்ப பார்த்து தான் நம்ம குடும்பம் ஒருஅளவுக்கு இயல்பா மாறுச்சி”…. “மீனு கிடைக்கக் கார்த்திக் தாண்டா குடுத்துவச்சி இருக்கனும். அது என்னமோ உண்மை தாண்டா அருண்”. எது எப்படியோ அவள சந்தோசமா பார்த்துகிட்டா போதும்டா. சரிவா ஜெயா அம்மாவ பார்த்துவிட்டு வந்துவிடலாம்டா எனக்கூறி பார்க்க சென்றனர்.  

 

 

 

 

 

 

 

மீனா ஜெயாவை அழைத்துக்கொண்டு பூஜை அறைக்குச் சென்றுவிட்டால். அங்குச் சகுந்தலா மற்றும் காயத்திரி எதை எப்படிச் செய்யவேண்டும் எனக் குழம்பிகொண்டு இருந்தனர்… 

 

 

 

 

 

அதைபார்த்து ஜெயா, சகுமா ஏண்டா ஒரே யோசனையா இருக்க…  காயுமா உனக்கு என்ன ஆட்சிடா…. என்றாள் அவர்களிடம் சகுந்தலா, அக்கா தேங்காய், பழம், பத்தி எல்லாம் எடுத்து வச்சாச்சி….  அப்படியும் என்னமோ குறையுதுகா… ஆனா என்னானுதான் புரியல என்றாள். சகு பூ எடுத்துவைடா… ஆமாம் இல்ல மறந்தேவிட்டேன் ஜெயாக்கா சாரி…  அடி அசடு இதுக்குப் போய் சாரி சொல்லிகிட்டு…. மீனு போய் பூபறிச்சிகிட்டு வாடா என்றாள். கூடையை வாங்கிக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றுவிட்டால். 

 

 

 

 

 

  

 

காயத்திரி இன்னும் தெளியாது இருப்பதைப் பார்த்த ஜெயா,  உனக்கு என்ன பிரச்சனை காயு….  அக்கா இன்னும் என்னமா குறையுதுகா என்றாள்…  “வில்வ இலை, பால் இல்ல பாருமா. சாந்தி அங்க பசுமாட்டுபால் இருக்கும் பாரு அதை எடுத்துகிட்டுவா”….  இதோ ஜெயாம்மா எடுத்துகிட்டுவறேன் எனக்கூறிச் சென்றுவிட்டார். மீனு கொண்டு வந்த பூக்களைப் பூஜை அறையில் வைத்து விட்டு வெளியே சென்று சந்திரன், வெற்றியின் வரவுக்காகக் காத்திருந்தனர். அவர்களோடு விஷ்ணு, அருண் காத்திருந்தார்கள்.  

 

 

 

 

 

 

 

அவர்களை அதிகம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தனர். வந்தவன் தன் அம்மா, பாட்டி, சித்திக் காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டு, சித்தியிடம் செல்லமாக வீட்டிற்கு இத்தனைநாள் வராததால் திட்டுக்கள் வாங்கியவன் அவரிடம், சாரி சித்தி.. இனி  இந்தமாதிரி நடக்காது அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன் சித்தி எனப் பல சமாதானம் செய்து அவரைச் சமாதாப் படுத்தினான். பாட்டியிடம் செல்லமாகச் சில அடிகளையும் புன்சிரிப்புடன் வாங்கிக்கொண்டான். தம்பிகள் அணைத்துப் பாசத்தைப் பகிர்ந்துவிட்டு, அன்பு தங்கையின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு, தான் வாங்கிவந்த பொருள்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு தன் தம்பிகளிடம் தனதுதுசிரிப்பை உதிர்த்துவிட்டுக் குளிக்கச் சென்றவிட்டான்.  அதைபார்த்துத் தமையன்கள் இருவரும் பேய்முழிமுழித்தனர். அவன் சென்றதும் மீனா மற்ற இருவரையும் பார்த்து தனக்கு எதுவும் வாங்கிவராததைச் சொல்லி திட்டி தீர்த்துவிட்டாள்.  

 

 

 

 

 

குளித்து முடித்து வந்தவன் “பூஜை அறையில் வைத்து உள்ள பலநூறு ஆண்டுகள் பழமையான மாணிக்ககற்கள் பதித்த மரகதலிங்கத்திற்குப் பூஜைகள் செய்து முடித்துவிட்டு, பின்புதான் அனைவரும் சாப்பிட சென்றனர்”.  

 

 

 

 

 

 

 

அனைவரும் சாப்பிட்டு விட்டு வெளியே காரை சுத்தம் செய்து கொண்டு இருந்த சுந்தரத்தை அழைத்த நாச்சியார், “சுந்தரம் வந்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போய் இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துவிட்டு நாளைக்குவாந்தா போதும்… வா வந்து சாப்பிடு” எனக்கூறி அவரைக் கையேடு அழைத்துசென்றுவிட்டார்…. 

 

 

 

 

 

 

 

அவர்சாப்பிட அமந்தவுடன் மல்லியிடம் இருந்து Phone வந்தது அதை எடுத்தவர் அந்தபக்கம் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்து எழுந்துவிட்டார். சரி மல்லி.. “நீ பதட்டப்படாம உமாவையும், பசங்களையும் பார்த்துகோ”… நான் உடனேவறேன். பக்கத்தில எங்கேயாவது இருக்கானானு தேடுங்கள் நான் வந்துவிட்டுகிறேன்  எனக்கூறி வைத்துவிட்டார்.  

 

 

 

 

 

 

 

அவரின் பதட்டத்தைப் பார்த் நாச்சியார், என்ன ஆட்சி சுந்தரம்? ஏன் இவ்வளவு பதட்டம்? என்னானு சொன்னாதான புரியும் என்றார் சுந்தரம். 

 

 

 

 

 

“அம்மா அது வந்து… நம்ம பார்வதி அக்கா இருந்தாங்க இல்ல அவங்க பேரன் காணம்மா, காங்கேயம் போனாங்கலாமா அங்க தான் தொலைந்து  போய்ட்டாம்மா நான் போய் பார்கறேன்மா பிள்ளைங்க தனியா கஷ்டப்படுவாங்கமா” என்றார்.  

 

 

 

 

 

நீ தனியா போய் என்ன பண்ணபோற… இரு அருண், விஷ்ணுவ கூட்டிகிட்டுபோ உனக்கு உதவியா இருக்கும் எனக்கூறியவர். தன் பிள்ளைகளை அழைத்து விவரத்தைகூறி கையோடு அனுப்பி வைத்தார்.. 

 

 

 

 

 

நாச்சியாரின் மூலம் விசயத்தைக் கேள்விபட்ட மற்றவர் ஆளுக்கொரு மனநிலையில் இருந்தனர். அனைவரின் மனதிலும் குட்டியின் பாதுகாப்பு மற்றும் அவனின் நலன்தான் முன்நின்றது.  “சகுந்தலா சிவபெருமானிடம் குட்டி எந்தப் பாதிப்பும் இல்லாமல் கிடைக்கவேண்டும் என வேண்டிக்கொண்டார்”. ஜெயா அவர் அறைக்குச் சென்றுவிட்டதால் அவருக்கு விசயம் தெரியவில்லை. காயத்திரியும் தன் சகோதரியை ஆறுதல்படுத்தினார். ஆக மொத்தத்தில் முன்பின் தெரியாத ஒரு சிறியவனுக்காக வேண்டிக்கொண்டனர்….  

 

 

 

********************×********××************************************************************** 

 

 

 

 

 

அங்கு உமா, மற்றவர்கள் குட்டியை தேடிக்கொண்டு இருந்தனர். “அம்முவோ அழுது அழுது வீங்கிய முகத்துடன் இருந்தால்”. உமாவும், கண்ணன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு குட்டியை தேடி அழைத்தனர். மல்லிகாவோ தன் தந்தையின் போனுக்கு நிமிடத்திற்கு ஒரு முறை  கால் செய்துகொண்டு இருந்தால்.  

 

 

 

 

 

 

 

குட்டியோ வரும்வழியில் ஒருகடையில் இருந்த புடவையைப் பார்த்துவிட்டு தன் அக்காக்கு இந்தமாதிரி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூடவந்தவர்களைக் கவனிக்காமல் சென்றுவிட்டான். கிட்டதட்ட பத்துநிமிடம் அதையே பார்த்தவன் பக்கத்தில் கேட்ட சத்தத்தில் தான் சுயநினைவுக்கு வந்தான். அதன் பின்பு தான் சுற்றி  அனைவரையும் தேடினான் அவர்கள் அனைவரும் அவன் கண்ணில் சிக்காததால் பயத்தில் பக்கத்தில் இருந்த அம்மன் கோயிலில் அமர்ந்துவிட்டான். “ அந்தச் சிரியவனுக்கு அதற்கு மேல் சிந்திக்க இயலவில்லை. எப்படி ஊருக்கு செல்ல வேண்டும் என்று தெரியவில்லை. போன் அவனிடம் இருந்தும் பயத்தில் மல்லிக்கு போன்  செய்யத் தோன்றவில்லை. கண்களில் வழிந்த கண்ணீருடனும் அமர்ந்து இருந்தான். அதிர்ச்சியில் பசி எடுக்க மூலை உபயோகபடுத்திச் சிந்திக்க முடியவில்லை… முற்றிலும் சோர்ந்து அமர்ந்து விட்டான். கிட்டதட்ட அறைமயக்க நிலையில் இருந்தான் அந்தப் பாலகன்”. 

 

 

 

 

 

அன்பு தொடரும்… 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!