Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaaUncategorized

அன்பேநீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் 3.2

அத்தியாயம் 3.2: 

 

 

 



Advertisement

 

 

அருண் மற்றும் விஷ்ணு காங்கேயம் வந்த சுந்தரம் மல்லியிடம் போன்  செய்து, மல்லி நான் காங்கேயம் வந்துவிட்டேன் நீங்க எல்லாம் எங்க இருக்கீங்க…  விவரம் சொல்லுமா அப்பா வந்துவிடறேன்…  அப்பா நாங்கள் ***கடைகிட்டதான் இருக்கோம். நீங்க அங்க வாங்க எனக்கூறி வைத்துவிட்டால்.  

Advertisement

 

Advertisement

 

 

 

Advertisement

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் மூன்று பேரும் அவர்கள் முன் இருந்தனர். சுந்தரம் மல்லியிடம், எப்படிடா காணாமபோனான்? எங்கெங்கு போனீங்க? புதுசா யார்கிட்டையாவது பேசினிங்களா? என விவரம் கேட்டார்…. துணிக்கடைக்கு மட்டும் தான் போனோம் வேற எங்கையும் போகலபா. புதுசா யார்கிட்டையும் பேசலப்பா எனக்கூறினான் கண்ணன்…. 

 

 

 

 

 

அதுவரை அமைதியாக இருந்த விஷ்ணு , இங்க பாருங்க நீங்க போன கடைக்கு எல்லாம் போய் பார்த்துவிட்டீங்கலா? எனக்கேட்டார் அவர்களிடம் அம்மு, அழுது கொண்டே நாங்க போன கடைக்கு எல்லாம் போய் பார்த்துவிட்டோம்…. அங்க எங்கேயும்  குட்டி இல்லை என்றால்.  

 

 

 

 

 

 

 

அருண், போன் அவன்கிட்ட இருக்கா மல்லி?, கால் பண்ணி பாத்தீங்களா? எனக்கேட்டான் கூற்றுக்குப் பின் உமா சுயத்திற்கு வந்து, ஆமாம் அவன்கிட்ட தான் என் போன் இருக்கு… மல்லி.. உன் போன் கொடு எனக்கூறி கால் செய்தால். ஒரு ரிங் போனவுடன் switch off  ஆகிவிட்டது.  

 

 

 

 

 

 அதை பார்த்த அருண், நீங்க பயப்படாம தைரியமா இருங்க…. இனி கண்டுபிடித்து விடலாம் பயம் வேண்டாம் எனக்கூறிவிட்டுக் கந்தனிடம், அண்ணா நான் வெற்றி அண்ணாக்கு சொல்லி என்னாபண்ணலாம்னு கேக்கறேன் நீங்க அவங்கள பார்த்துக்கோங்க எனக்கூறி தனியே சென்றுவிட்டான். 

 

 

 

 

 

 

 

பின் வெற்றிக்கு போன் பண்ணி விஷயத்தைக்கூறி அவனிடம் ஆலோசனை செய்துவிட்டு அவர்களைச் சமாதானம் படுத்திச் சுத்தி உள்ள இடங்களில் தேடிக்கொண்டு இருந்தனர். 

 

 

 

 

 

 

 

அங்கு வெற்றி அவனுடன் படித்த  நண்பன் காவல்துறையில் உயர்அதிகாரியாக  இருப்பதால் அவனின் உதவியை நாடினான்… 

 

 

 

 

 

அந்த நண்பனும் சின்னப் பையன் விஷயம் என்பதால் உடனே உதவுவதாகக் கூறினான்…. அதற்கு வெற்றி அவனுடன் நன்றியை தெரிவித்து விட்டு  கால் டிரேஸ் பண்ணுவதற்கு நண்பர் அனுப்புவதாகக் கூறி வைத்துவிட்டான்…. 

 

 

 

 

 

பின் வெற்றி அருணுக்கு  போன் செய்து, அருண் குட்டிபையன் வச்சி இருக்க நம்பர் கேட்டு  சொல்லு டிரேஸ் பண்ணி  லெக்கேசன் சொல்லறேன்  தொடர்புலையே இருடா எனக்கூறி  Messageக்காக wait செய்து கொண்டு இருந்தான். அருண் உமாவிடம் நம்பர் வாங்கி வெற்றிக்கு அனுப்பிவிட்டு அவனின் தொடர்பில் இருந்து தான்.  மற்ற அனைவரும் அவனின் தகவலுக்காகக் காத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் யாராலும் உமாவை அமைதிபடுத்த முடியவில்லை. 

 

 

 

 

 

 

 

 விஷ்ணுவுக்கு உமாவின் மேல் தனி மதிப்பு மற்றும் மரியாதையும் வந்தது. கண்ணன் அவளைத் தாங்கிக்கொண்டு இருந்தான். அம்முவின் மனதில் அத்தனை பயம் இருந்தது. மல்லி தன் அப்பாவுடன் சேர்ந்து மறுபடியும் அந்தக் கடைகளுக்குச் சென்று பார்த்தாள். 

 

 

 

 

 

இவர்களை அதிகமாகச் சோதிக்காமல் குட்டி இருக்கும் இடம்பற்றிய விவரம் வந்தவுடன் அனைவரும் சேர்ந்து சென்றனர்.  

 

 

 

 

 

 

 

 

 

அங்குக் குட்டி தனியாக அமைந்திருப்பதைப் பார்த்த கோயில் குருக்கள், ஏன்டா கண்ணா இப்படித் தனியா இருக்க….  யாராவது வருவார்களா…. கூடவந்தவர்களை வெளிய போய் இருக்காங்களா எனக் கேள்விகளை அடுக்கியவரைகண்டு இல்ல சாமி நான் தான் தொழஞ்சி போய்டேன். அக்கா என்ன தேடுவாங்க… நான் வீட்டுக்கு போகனும் எனக்கூறி அழுதவனைச் சமாதானம் செய்து, அவன் பசியை உணர்ந்து கையில் இருந்த பிரசாதத்தைக் கொடுத்து உண்ணவைத்தார். அதன்பிறகு காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என முடிவு செய்து அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் எடுக்க வேண்டி உள்ளே சென்றார்.  

 

 

 

 

 

 

 

 

 

 அப்போழுது அவனைத் தேடிவந்தார்கள்… அவன் ஆதரவுஅற்றவனைப் போல் அழுது கொண்டே சாப்பிடுவது தாங்க முடியாமல் உமா, குட்டி என அழைத்த உடன் திரும்பி பார்த்தவன் தன் அக்காக்கள், அண்ணன் இருப்பதைப் பார்த்தவுடன் ஓடிவந்து உமாவையும் கட்டிக்கொண்டான். அந்த அணைப்பு கூறியது அவன் தவிப்புகளை. அந்த அணைப்பு உணர்த்தியது அவன் பயத்தை. 

 

 

 

 

 

பின் அவனைத் தன்னிடம் இரந்து பிரித்த உமா, ஏன்டா இப்படிப் பண்ணிட்ட?  நாங்க எவ்வளவு பயந்து போய்ட்டோம் தெரியுமா. இனி இந்தமாதிரி பண்ணாதடா  எனக்கூறி மீண்டும்அவனை இறுக்கி அணைத்துக்கொண்டால். அந்த அணைப்பு கூறியது அவனுக்கு அவளின் பரிதவிப்பு மற்றும் துயரத்தை.  

 

 

 

 

 

 

 

பின் கண்ணனிடம் வந்த குட்டி அவனைத் தூக்கச்சொல்லி கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். சாரி அண்ணா இனி இப்படிப் பண்ணமாட்டேன் என்கூறியவனைப் பார்த்ததும் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவன் கட்டுப்பாட்டை மீறி கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அதற்கு மாறாக அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. காரணம் தன் தம்பி கிடைத்து விட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி….  அவனிடம் இருந்தவனின் முதுகில் அடிகள் மூலமாகத் தன் பாசத்தை வெளிப்படுத்தினார் அம்மு. அவளின் பயம் அப்படிச் செய்யவைத்தது.  பின்சுதாரித்த அம்மு ஏன்டா யார்கிட்டையும் சொல்லாம போன.. அது அந்தப் பெரிய கடையில அக்காக்கு பிடிச்ச வாடாமல்லிகலர்ல பட்டு சீலை அழகா இருந்ததா அத பார்த்து அப்படியே நின்னுட்டேன் எனக்கூறியவனை இருக்கி அனைத்துக்கொண்டான் கண்ணன். உமா உணர்வை வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு இருந்தது.  

 

 

 

 

 

இவர்களின் பாசப்பிணைப்பை மற்ற அனைவரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தனர்.  

 

 

 

 

 

இடையே அருண் வெற்றியிடம் குட்டி கிடைத்து விட்ட விஷயத்தைக் கூறிவிட்டான்.  

 

 

 

 

 

 

 

விஷ்ணுவின் பார்வை அவர்களைப் பாசமாக விடுவதை உணர்ந்த அருண், டேய் என்ன அப்படிப் பார்க்கர. அது ஒன்றும் இல்லடா அருண் இந்த வயசுல இப்படி ஒருத்தருக்குஒருத்தர் ஆறுதலா இருக்காங்க; பார்க்கும் போது அவ்வளவு ஆசையா இருக்குடா. 

 

 

 

 

 

அவ்வளவு ஆசையா இருந்தா அவங்கள ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கோ ரொம்ப ஈஸி என்றான்  கண்டிப்பாடா எனக்கூறி திரும்பியவுடன் பார்வையில் மல்லி விழுந்தால். அப்பத்தான் அவன் நிதானமாக அவளைப் பார்த்தான்…  பார்த்ததும் ஒரு இனம் புரியாத உணர்வு மனதில் எழுந்தது.. அவன் பார்வை சென்ற திசையை உணர்ந்த அருண். அடேய் அதுக்குள்ளவாடா… அந்தப் பெண்ணின் அப்பா இங்க தான் இருக்காரு கொஞ்சம் அடக்கிவாசிடா…  உன்னோடு சேர்ந்து என்னையும் அடிவாங்க வச்சிடாதடா எனக்கூறி விஷ்ணுவை நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தான். 

 

 

 

 

 

 

 

அப்பெழுது வந்த குருக்கள், சின்னகுழந்தைகளைக் கூட்டிகொண்டு வரும்போது ஜாக்கிரதையா இருக்கனும்மா, இப்பலாம் நாடு கெட்டுகிடக்கு, புள்ளைய கூட்டிகிட்டு போய் நல்லா சாப்பிடவச்சி தூங்க வைங்க எல்லாம் சரியா போய்டும் என்றார்கள் நன்றியை தெரிவித்துக் கந்தன் அனைவரையும் அழைத்து வந்தார். மற்றவர்களும் தன் பங்குக்கு நன்றியை தெரிவித்தனர்.  

 

 

 

 

 

 

 

அருண் மற்றும் விஷ்ணுவிற்கு நன்றிகளைத் தெரிவித்து விட்டு உமா மற்றவர்களை அழைத்துக்கொண்டு செல்ல தயாராகும் போது அதைத் தடுத்த விஷ்ணு,  இங்க பாருங்க உமா சின்பையன் ரொம்ப டையர்டா இருக்கான் முதலில் அவனைச் சாப்பிட வச்சி கூட்டிக்கிட்டுப் போலாம். நாங்க வந்ததே உங்கள கூட்டிக்கிட்டு போகத்தான்… என்னை உங்க அண்ணா நினைச்சுக்கிட்டு வாங்க..  எந்த பயமும் வேண்டாம் உங்களுக்கு… அப்புறம் கந்தன் அண்ணா உங்கக்கூடத்தான இருக்காரு வாங்க,  டைம்பாருங்க நான்கு ஆகுது உங்க தம்பி,  தங்கைகள், தோழி, அவங்க அப்பா எல்லாரும் பசியா இருக்காங்க வாங்க எனக்கூறி அம்மு, கண்ணனை கையோடு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். 

 

 

 

 

 

 

 

உமா இன்னும் தயங்கி நிற்பதை பார்த்த அருண், உமா  வாங்க … என்னை உங்க  நண்பனா  ஆக நினைத்துக்கொள்ளுங்க…  ஒரு தயக்கமும் வேண்டாம் வாங்க..  சரி நீங்க இப்படி அமைதியா இருந்தா உங்க சின்னதம்பி பசியால் மயக்கம் போட்டு விழுந்துவிடுவான் உங்களுக்குப் பரவாலைனா வாங்க வீட்டுக்குப் போய்டலாம் என்ற உடன் வேலை செய்தது அந்த வார்த்தை. 

 

 

 

 

 

இல்ல இல்ல வாங்க போய் சாப்பிடலாம். அப்புறம் குட்டி பசிதாங்க மாட்டான்  எனக்கூறி அவர்களுடன் சென்றால் உமா. அருண், மல்லி இருவரும் சிரித்துக்கொண்டே அவள் பின் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து சுந்தரத்திடம் சென்றார். 

 

 

 

 

 

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்த உடன் பஸ்சில் செல்வதாகக் கூறியவர்களைக் கட்டாயப்படுத்திக் காரில் அழைத்துச்சென்றனர்.  

 

 

 

 

 

சுந்தரம், மல்லி இருவரும் தனிப்பட்ட முறையில் அருண் மற்றும் விஷ்ணுவிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.  

 

 

 

 

 

காரில் அமர்ந்த சிறிது நேரத்தில் குட்டி உமாவின் மடியில் அமர்ந்து, அவள் கழுத்தை கட்டிக்கொண்டு தூங்கிவிட்டான். அம்மு மற்றும் கண்ணன் அவளின் இருபக்க தோழில் சாய்ந்து உறங்கிவிட்டனர். மல்லி, சுந்தரம் இருவரும் பின் சீட்டில் சாய்ந்து கொண்டனர்.  

 

 

 

 

 

இவர்களைக் கண்ணாடிவழியே பார்த்த விஷ்ணு முகத்தில் அத்தனை ஆனந்தம்… காரணம் தூக்கத்திலும் உமா தன் உடன் பிறப்புகள் இருக்கமாக பற்றி இருப்பதைப் பார்த்துதான்.  

 

 

 

 

 

அருண் அதே கண்ணாடி வழியே வாயை திறந்துகொண்டு தூங்கும் அம்முவை விழிஅகற்றாது ரசித்துக்கொண்டு இருந்தான். 

 

 

 

 

 

கார் சிறிது குலுங்கியதில் சினுங்கிய குட்டியை தட்டிக்கொடுத்து தூங்க வைத்தால் உமா. அவள் கண்கள் மூடி இருந்தாலும் மனதில் இருந்த வருத்தம் மட்டும் குறையவில்லை. காரணம் தன்னை நம்பி விட்டுச் சென்றவர்களை ஒழுங்காகப் பாதுகாக்க மீறியதாக நினைத்து கவலை கொண்டால் அந்தப் பெண்.  

 

 

 

 

 

 

 

 

 

அந்த Hotelலில் இவர்களைப் பார்த்த ஒரு உருவம் தனது  போனில் யாருக்கும் தெரியாமல் போனில் எடுத்துக்கொண்டு. அதை வேறு ஒரு நம்பருக்கு அனுப்பி விட்டு, கால் செய்து இவர்களைப் பார்த்தவிவரம் கூறியது…  அந்த பக்கம் என்ன பதில் வந்ததோ போன்  வைத்துவிட்டு அவர்களை follow செய்தது. 

 

 

 

 

 

அந்தபக்கத்தில் இருந்த 45வயதை தொட்ட உருவம், அடியே உமா என்கிட்ட இருந்து உன்னால் அவ்வளவு சீக்கிரம் அவங்களைக் காப்பாத்தமுடியுமா?…  உன்னை கொன்னாவது அவங்களைக் கூட்டிக்கிட்டு வந்து கொள்ளாம விடமாட்டேன்… உங்க சாவு என் கையில்தான்.. அவ்வளவு சீக்கிரம் அதை மாத்தமுடியாது…. வறேன்டி உமா..  உங்க எல்லாருக்கும் நரகத்தைக் காட்டாமவிடமாட்டேன்…  என்னையே இரண்டு வருஷம் கம்பி எண்ண வச்ச உன் நிம்மதி பரிக்காமவிடமாட்டேன். எனச் சூளுரைத்து கொண்டு இருந்தது.  

 

 

 

 

 

இதை அறியா உமா தன் தம்பி,  தங்கையை இருக்கமாகப் பற்றிக்கொண்டால்.  

 

 

 

 

 

அங்கு வெற்றி வீட்டில் உள்ள அனைவரும் குட்டி கிடைத்துவிட்டான் என்ற விஷயத்தைக் கூறிக்கொண்டு இருந்தான். இதைக் கேட்ட நாச்சியார், எல்லாம் அந்தக் கடவுளின் திருவிளையாடல்… எது எப்படியோ பையன் நல்லா இருந்தா அது போதும் என்று அவருக்குப் புன்னகையைப் பரிசாகக் கொடித்தான்.  

 

 

 

 

 

சகுந்தலாவோ பூஜை அறைக்குச் சென்று மனம் உருக கடவுளுக்கு நன்றி தெரிவித்தார்.  

 

 

 

 

 

மீனுவோ, அண்ணா நான் அந்தக் குட்டி பையன பார்க்கனும் போல் இருக்கு அவங்க வீட்டுவந்த உடன் போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்றார் தன் சம்மதத்தைத் தெரிவித்தான் வெற்றி.  

 

 

 

 

 

ஜெயாவோ காயத்திரியிடம், காயும் அந்தக் குட்டிபையன் பேரில் ஒரு அர்ச்சனை பண்ணீடுடா என்றார் அவரின் கூற்றை ஆமோதித்து, சரிக்கா நான் போய்  அர்ச்சனை பண்ணிவிட்டு வந்துவிடறேன் எனக்கூறி தர்மரை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றுவிட்டார்.  

 

 

 

 

 

சந்தரனே, அப்பா, அம்மா இல்லாத பசங்க எப்படி எல்லாம் கஷ்டத்தை அனுபவித்து இருக்காங்க அம்மா… கேட்ட நமக்கே கஷ்டமா இருக்கும்போது அந்தச் சின்னஞ்சிறுசுங்களுக்கு எப்படி இருக்கும்.. நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.. நம்ம நாடு இருக்க நிலையில சின்னபசங்களை எல்லாம் மிகமிகக் கவனமா பார்த்துக்கனும்… எது எப்படியோ பையன் நல்லா இருக்கான் அது பேதும் நமக்கு எனக்கூறிய தன் மகனை சமாதானம் செய்தார் நாச்சியார். 

 

 

 

 

 

தங்கள் காரை ஒருவன் பின் தொடர்வதை அறியாத அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். அருண் தன் சைட் அடிக்கும் வேலையில் கவனமானான். விஷ்ணு சாலையில் தன் கவனத்தைப் பதித்து இருந்தான். 

 

 

 

 

 

 

 

அன்பு தொடரும்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!