Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 20.3

“புடிக்கலயா அஸ்வின்?” மூண்ட சின்னத்திற்கு அவள் பின்னந்தலையை பற்றி தன்னுடைய கண் பார்க்க வைத்தான்,

“உயிரா புடிக்கும்படி.  ஆனா என்ன நினைப்புல இருக்க நீ?” ருத்ர மூர்த்தியாய் அவதாரம் எடுத்தவனை பார்க்கவே அச்சம் முகத்தில் சூழ்ந்தது.

“உன்கூட ஒரு நாள் வாழ்ந்துட்டு அனுப்பவா உள்ளுக்குள்ள செத்துடு இருக்கேன்? உனக்கே உன்ன பத்தி தெரியாத அளவு நான் தெரிஞ்சு வைக்க, என்னோட ஆசைய உன்கிட்ட காட்ட இந்த ஒரு நாள் எனக்கு பத்தாதுடி”

“அதுக்கு நான் இருக்கனும்ல?” என்றாள் உடைந்து போய்.



Advertisement

“என்ன சொன்ன? திருப்பி சொல்லு” இன்னும் சினமேறி கேட்டான்.

“அன்னைக்கு தோட்டத்துல சித்து பேசுனது எனக்கும் கேட்டுச்சு நாராயணா. நான் பிழைக்க சான்ஸ் கம்மினு தானே சொன்னாங்க? எனக்கு தெரியும்” இதழ்களில் விரக்தி புன்னகை ஒன்று மலர்த்திருக்க அவள் பேசியது அஸ்வினது மூளை செயலற்று போக செய்தது.

என்ன சொல்லுவான் அவனும், போராடி உண்மையை நிரூபிக்க இயலும், பொய்யை பொய்யாக்க இயலாதே. அதை அவளிடம் ஒப்புக்கொள்வது தன்னுடைய காதல் தோற்றதற்கு சமானம்.

Advertisement

நெஞ்சமெல்லாம் விம்மியது அவள் இல்லாமல் போவாளோ என்கிற பயத்தில். நெஞ்சினை நீவி வலியை துடைத்தெறிய முயன்றவன் முதுகினில் பனிக்கட்டியாக வந்தணைத்து கொண்டாள் ஆரோஹி.

Advertisement

கடல் அலைகளை போல் தானே காதலும், நனைந்துவிட கூடாதென்று உடையை மேலே தூக்கிக்கொண்டாலும் என்னுள் இழுத்து நினைத்தே தீருவேனென கங்கணம் கட்டி ஒட்டிக்கொள்கிறதே, இதோ அவன் மனைவியை போல.

“ஏன் அஸ்வின் என்னோட வாழ்க்கைல விதி இப்டி விளையாடுது? முதல அப்பா அம்மா, இப்போ நான். ஒரு நிரந்தர சந்தோசம் எனக்கு இந்த ஜென்மத்துல கிடைக்கவே கிடைக்காதா?” நிலவினை வெறித்து பார்த்திருந்தவன் கண்கள் கலங்கி நாடி துடித்தது.

“அடுத்த ஜென்மத்துலயாவது…”

Advertisement

“போதும்டி…” என்றான் தாங்க மாட்டாமல்.

“நிதர்சனத்தை ஏத்துக்குட்டு வாழலாமே ப்பா… வாழுற நாள் எல்லாம் சொர்கம் வேணும்னு நினைக்கிற நாம மரணத்தை மட்டும் ஏன் விரும்ப மாட்டிக்கிறோம்?”

தன் முன்னே அவளை பிடித்து நிறுத்தியவன், “எது இருபத்தி நாலு வயசு சாகுற வயசா?”

“மோட்சம் சீக்கிரம் வந்துச்சுனு நினைச்சுக்கலாம்”

எங்கிருந்து தான் அந்த போலி சிரிப்பை எளிதாக ஒட்டிக்கொள்கிறாளோ இதழில், இதில் மோட்சம் பற்றி எரிச்சலூட்டும் பேச்சு வேறு. பறித்த மலர்களின் ரத்த வாடை மனிதர்களுக்கு நறுமணம் போல், உயிர் பறித்த மனித உடல்களை இறைவன் மோட்சம் என்கிறான்.

“ஈஸியா பேசுரல நீ?” அவள் முகம் அவன் கைகளில் இருக்க, அவன் விறல் அவள் கன்னம் வருடியது,

“உன்ன கல்யாணம் பண்ணதுக்கு முன்னாடி அழுததே இல்ல ஆரூ. அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு வந்த ஒரே வாரத்துல ஒடம்பு சரியில்லாம படுத்து அழுகை வச்ச, இப்போ ரொம்ப ஈஸியா என்ன விட்டு மொத்தமா போய் ஒரேடியா அழுகை வக்கிர? உனக்கே இது நியாயமா? உன்ன மீறி எப்படிடி நான் வருவேன்?”

அவனது கைகளில் சுகமாய் இளைப்பாறியவள் கண் திறந்து அவனை கசியும் கண்களோடு, “உங்களுக்குன்னு ஒரு லைப் அமைச்சுக்கோங்க அஸ்வின். என்ன மறந்துட்டு உங்களுக்கே உங்களுக்கான ஒரு அழகான வாழ்க்கை”

உயிரோடு சிக்கிக்கொண்டு மறந்துவிடு என கூறினால் எப்படி மறக்கும், அவளோடு உயிரும் அல்லவா உடன் பறக்கும்…!

“உன்ன பாத்ததும் மனசு ஓரத்துல பூக்குற அந்த அழகான பீல், உன் பக்கத்துல, உன்ன கைல வச்சிருக்குற நேரம் ஒடம்பு மொத்தமும் படையெடுக்குற பட்டாம்பூச்சி இதெல்லாம் உன்ன தவற வேற ஒருதரால எனக்கு குடுக்க முடியும்னு நினைக்கிற?”

அவளிடம் பதில் இல்லை. வசனங்கள் பேசுபவன் அவன் இல்லை, அதை எதிர்பார்த்து ஏங்குபவளும் அவள் இல்லை. அதை தாண்டி நின்று இதை எல்லாம் கேட்க அழகாக இருக்கின்றது.

தனக்கே தனக்காக ஒரு ஜீவன் ஏங்கி தவிப்பது காதல் என்னும் கவிதையின் உச்சம். குறைந்த கால கட்டமே ஆனாலும் ஒரு முறை அன்பானது மனதினில் தோன்றிவிட்டால் அது ஊற்றாக மாறி காதல் நீரினை கசிந்துகொண்டே இருக்கும்.

அதே கதி தான் இவர்களுடையதும். குறைந்த காலத்திலே ஒருவருக்கு ஒருவர் தூணாய், துணையாய் மாறி போயினர். எளிதாக மனம் விரும்பி ஒருவரை தாரை வார்த்து கொடுத்திட முடியாது, அது செயலோ சொல்லோ…

அந்த மரண வேதனையை தான் அனுபவிக்கும் வேளையில் கூற உணராக ஆரோஹிக்கு அவனை வேறு துணை தேட கூறிய பொழுது வந்தது. “முடியாதுடா” என்றான் அவளது கண்களில் வந்து போன பல விதமான உணர்வுகளை படித்தவனாய் அஸ்வின்.

“அப்போ என்ன உங்கள விட்டு எங்கையும் அனுப்பாதீங்க அஸ்வின்” அவன் கைகள் இரண்டையும் கெட்டியாக பிடித்திருந்தாள்.

பலமாக தலையை அசைத்து, “மாட்டேன்டா” என்றான் உறுதியாக.

“டாக்டர்ஸ் முடியாதுனு சொன்னா?”

“சொல்ல விட மாட்டேன் ஆரூ. என்ன உன்கிட்ட இருந்து பறிக்கிற உரிமை உனக்கே இல்ல, இந்த விதிக்கு தான் அதை அவ்ளோ சீக்கிரம் விட்டுடுவேனா?”

இல்லை என்றவள், “ஆசையா இருக்கு நாராயணா, நூறு வருஷம் நீங்க சமிக்கிறதை ரசிச்சிட்டே, நீங்க என்ன கொழந்தை மாதிரி பாக்குறதை அனுபவிச்சிட்டே. அவ்ளோ தான் வாழ்க்கைனு உங்க அன்புல திக்கு முக்காடி நிம்மதி பெரு மூச்சு விடுற அளவு வாழ பேராசையா இருக்கு”

“வாழலாம் ம்மா… நமக்கான வாழ்க்கை ரொம்ப நீண்டு இருக்கு, உன் கை புடிச்சிட்டே நான் வருவேன்”

வார்த்தை கொண்டு நம்பிக்கையூட்டினாலும் மனதின் ஓரம் அரித்துக்கொண்டே இருக்கும் ஒட்டுண்ணியின் குடைச்சல் அதிகமிருந்தது, ஒரு நம்பைகையற்ற வார்த்தை விடாமல் ஓதிக்கொண்டே இருப்பது போல்.

“காப்பாத்திடுவீங்க தானே நாராயணா?” அவள் கண் துடைத்து நெற்றியில் முத்தமிட்டவன் அதை தவிர எதுவும் பேச விரும்பவில்லை.

“நெஞ்சு படபடன்னு அடிக்கிது, கை கால் நடுங்குது, கண்ண மூடினாலே யாரோ வந்து வா வானு சொல்ற மாதிரி… அஸ்வின்…”

அவன் அணைப்பிலிருந்து தலை உயர்த்தி பார்த்தவள், “பயமா இருக்கு நாராயணா” என்றாள் அழுதுவிடுவது போல்.

“நான் தான் உன் பக்கத்துல எந்நேரமும் இருப்பேன்ல ஆரூ, என்ன பயமாம் என் பட்டாம்பூச்சிக்கு”

“இல்ல இல்ல நீங்க மேட்ச் போயிடுவீங்க”

“பைத்தியமே இவ்ளோ பயப்புடுற உன்ன விட்டு போக முடியுமா என்னால?”

“இல்ல நான் பயப்பிட மாட்டேன், தைரியமா இருப்பேன். அப்படியும் பயம் வந்தா உங்கள நினைச்சிட்டே இருந்துடுவேன்”

“ஆனா எனக்கு உன்ன விட்டு போக மனசு வரல ஆரூ. என் கைக்குள்ளையே உன்ன வச்சுக்கணும் போல தவிக்கித்து மனசு”

அவன் கூறவும் ஏதோ நினைவு வந்தவளாக அவனிடமிருந்து விலக பார்க்க, விடவில்லை அஸ்வின், “எங்க போற. போகாத” என்றான் வேகமாக.

“யோவ் ஒரு நிமிஷம் வந்துடுறேன்யா” என்றவள் திரும்பி வந்த பொழுது கைகளை பின்னால் கட்டி ஒரு வெட்க புன்னகையோடு வந்து நிற்க, எப்பொழுதும் போல சொக்கி தான் நின்றான் அஸ்வின்.

பல நாட்களுக்கு பிறகு ஆத்மார்த்தமான சிரிப்பு. அவனையும் அந்த புன்னகை கவ்விக்கொள்ள ஒரு எதிர்பார்ப்பு ஆணின் பார்வையில்.

“என்ன வச்சிருக்கு என் பட்டாம்பூச்சி?”

“கெஸ் பண்ணுங்க” என்றாள் வேகமாக.

யோசித்து பார்த்தவன் பீதியுற்று, “ஏய் சரக்கு எடுத்துட்டு வந்துட்டியா?” கண்கள் விரிய கேட்க அவளிடம் உதட்டு சுளிப்பு மட்டுமே பதிலாய் வந்தது.

“இது என்ன உங்களுக்கு நியாபகப்படுத்திட்டே இருக்கும்” சரசமாய் சிரித்தான், “முத்தம் குடுக்க போறியா?”

“வேணாம்னு நீங்க தானே போனீங்க, இனி நீங்களா குடுத்தா தான் வாங்குவேன். தன்மானம் எனக்கும் இருக்கு”

“சரி சாரி… சொல்லு என்னனு எனக்கு கெஸ் பண்ண முடியல” சரி என்றவள் அவன் முன்பு மண்டியிட்டு அமர அதிர்ந்தவன், “ஆரூ” என்க,

“என்ன ஷாக், மென்ஸ் டூ டிசர்வ் ப்ரப்போசல் லைக் திஸ்(men too deserve proposal like this)” தான் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து அவன் முன்பு நீட்ட, அவளை எழுப்பி விடுவதில் தான் குறியாக இருந்தான் அவன்.

“ஷ்” உதட்டில் கை வைத்து முறைத்து அஸ்வின் அமைதியானதும், “இதே மாதிரி என்னோட டார்ச்சரை எப்பவும் சகிச்சிட்டே என் கூடவே இருப்பிங்களா கிரிக்கெட்டரே?”

அடக்க மாட்டாமல் அட்டகாசமாக சிரித்தான், “இப்டி ஒரு ப்ரப்போசலா?” என்று.

“ம்ம் சிரிக்கலாம், பதில் சொல்லுங்க” அவசரப்படுத்த அவளை போலவே மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் நீட்டிய மோதிரத்திற்கு நேராக கை நீட்டி ஏற்றுக்கொண்டு, “உயிர் உள்ளவரை உன்ன தாங்கி நிப்பேன்”

உறுதி கொடுக்க, ஆரோஹி அந்த மோதிரத்தினை அவனுக்கு அணிவித்து அழகு பார்த்தாள்.

தன்னுடைய விரலை பார்த்தவன் அதில் கச்சிதமாக பொருந்திய மோதிரத்தின் வடிவமைப்பை கவனித்து பிரமித்து போனான். தங்கம் மற்றும் பிளாட்டினம் இரண்டு உலோகத்தையும் ஆங்காங்கு ஒன்றாய் பயன்படுத்தி செய்திருந்தனர்.

அதன் மேற்புறம் கண்ணாடி அடைப்பினுள் புள்ளி போல் சிறிதாய் சிவப்பு மலர் ஒன்று, அதன் மறு பக்கம் நுண்ணிய வைர வேலைப்பாடுகள் நிறைந்த மிக சிறிய பட்டாம்பூச்சி இருக்க அதனை பார்த்ததுமே அத்தனை பரவசம் அஸ்வினுக்கு.

“இது…”

“நம்ம கல்யாண மாலைல இருந்த ரோஸ்” என்றான் அவனே.

அவனது வேகத்தில் அவளுக்கு வருத்தம் போல, “ஹ்ம்ம் நீங்க கெஸ் பண்ண மாட்டீங்க நானே சொல்லலாம் நினைச்சேன்” சிணுங்கினாள்.

அதற்கும் அவனிடமிருந்து சிரிப்பு வர ஒரு பக்கம் பெருமையாக இருந்தது, அவனது நுன்னியை கவனிப்பில், தங்களுடைய திருமணம் இதிலே நிர்பந்திக்கப்பட்டதல்ல என அஸ்வின் புரிய வைத்திருந்தான்.

அடுத்து ஒரு பெட்டியை அவள் நீட்ட, “இது என்ன?”

“இது எனக்கு நீங்க போட்டு விட” அதிலும் அஸ்வின் மோதிரத்தை ஒத்த அதே மோதிரத்தில் ஒரு மாற்றமாய் மிக சிறிய மட்டைப்பந்து.

“நான் உனக்கு வாங்கி தரணும்டா இதெல்லாம்” என்றான் சோகமாய்.

“யார் வாங்கி தந்தா என்ன, யார் போட்டு விடுறாங்கனு தான் முக்கியம்”

கை நீட்டி அவள் காத்திருக்க அவளுக்கு வலிக்குமோ என பயந்தே மென்மையாய் போட்டுவிட்டான். வாங்கியவளுக்கோ அவனே அதிர்ச்சியாய் கொடுத்தது போல பரவசம்.

“இனி எவ்ளோ தூரம் தள்ளி இருந்தாலும் உங்க பட்டாம்பூச்சி உங்க கைக்குள்ள, என் கிரிக்கெட்டர் என் கைக்குள்ள”

அந்த இரவு இருவருக்கும் பகலாக, நிலவு மகள் ஆதவனாய் உருவெடுத்திருந்தாள் அந்த இளம் தம்பதிக்கு. சோகத்தில் மூழ்கியிருந்த ஒரு வாரத்தினை தவிர்த்து இருவரது வாழ்க்கையும் அந்த ஒற்றை இரவில் உலா வந்தது வார்த்தைகள் மூலம்.

விடியும் முன்பு தான் மருத்துவமனை சென்ற அஸ்வின் ஆரோஹி வீட்டினர் வியக்கும் வண்ணம் அசந்த உறக்கத்தில் மதியம் வரை கட்டுண்டு கிடந்தனர்.

*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!