Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 8 1

மழைத்துளி 8

 

காதல் மீது தனக்கிருந்த நம்பிக்கை தன்னவனுக்கு இல்லாமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தை அவனிடமே  வெளிப்படுத்திய அனு அழுக ஆரம்பித்து விட்டாள். குற்றவுணர்ச்சியில் இருந்த தக்ஷனும் அவளை அழவிட்டு விட்டான். அவனுக்கும் தெரியுமே காதலின் வலி…அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன், அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுக்க ,மறுக்காது வாங்கிக் குடித்துக் கொண்டே அவனைப் பார்க்க ,

 



Advertisement

“நீ அழுதுட்ட … ஏன் இதுக்கு முன்னக்கூட அழுதிருப்ப … ஆனா நான் அழல, அவ்வளவுதான் உனக்கும் எனக்குமான வித்தியாசம் , உன் பக்கத்திலருந்து பார்க்கும் போது நான் செய்தது தப்புதான் ….. ஆனா எனக்குத் தப்பாத் தெரியல… காரணம் உனக்கேத் தெரியும் …. ” என்றவன் கட்டிலில் சாய்ந்தமர்ந்து கைகளை பின்புறமாக தலைக்கு கொடுத்தவன்,

 

” மண்டபத்துல என்ன நடந்ததுனுக் கூட ஆதிக்குத் தெரியாது , ஆனா ஒரு அண்ணனா அத்தை கேட்டதுமே உடனே சரினு சொல்லிட்டான். “கண்களை மூடிக் கொண்டவன் ,

Advertisement

 

Advertisement

“காதலனா நான் செய்தது மிகப் பெரிய தப்பு தான் … ஆனா உடன் பிறந்தவனா நான் எடுத்த முடிவும் சரிதான்ங்கிறது என் எண்ணம் …. நீயும் யோசி குட் நைட் .. சீக்கிரம் தூங்கு நாம நாளைக்கு நமக்காக இல்லனாலும் அப்பாவுக்காக கோவிலுக்குப் போய்ட்டு வந்து ஊட்டிக்கு கிளம்புவோம். ” என்றவன் படுத்து சிறிது நேரத்திலயே உறங்கி விட்டான்.

 

அனுவுக்கும் அவன் கூற்று புரியத்தான் செய்கிறது ….. ஆனாலும் ஒரு காதலியாக அவள் மனம் பட்ட பாடு அவளுக்குத் தானே தெரியும். வெகு நேரம் மனதை உழப்பிக் கொண்டவளுக்கு இறுதியில் அவன் பக்கம் நியாயமும் புரிபட இதழோரம் மென்னகைப் பூக்க அவனருகில் படுத்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள்,

Advertisement

 

“இது தானே என்னைய இப்படிக் கட்டுப் போட்டு வச்சுருக்கு ….ம்…..” என்று நினைத்தவளுக்கு ஏதோ பாரம் குறைந்த உணர்வில் நிம்மதியாக உறக்கம் வந்தது.

 

[the_ad id=”6605″]

 

ஆதியுடன் வெளியே சென்று வந்தது மனதையும் உடலையும் ஒரு வித பரவசத்தில்  ஆழ்த்த வீட்டிற்கு வந்ததும் உடை மாற்றி விட்டுப் படுத்துக் கொண்டாள் அமிர்தா . அப்பொழுது தான் அவளது லேப்டாப் பை கண்ணில் பட்டது.

 

அண்ணன் திருமணத்திற்காக விடுமுறை எடுத்தவளுக்கு ஏதேதோ நடந்ததில் கடந்த ஒரு வாரமாக அவளது லேப்டாப் பையினுள்ளயே இருக்கவும் எடுத்து சார்ஜ் போட்டு வைத்தாள். இன்டர்ன்ஷிப்பில் இருந்ததால் வேலைகள் இருந்தது. நாளையிலிருந்து அதைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தவள் கைப்பேசியிலும் அவளுடன் படிப்பவர்களுக்கு செய்தி அனுப்பி விட்டு உறங்கி விட்டாள்.

 

காலையில் கைப்பேசி ஒலிக்கவும் தான் விழிப்பு வந்தது , அருகில் இருத்த டேபிளில் கண்களை மூடிக்கொண்டே துலாவ , அவள் கையில் வைக்கப்பட்ட ஃபோனை வாங்கவும் தான் கண்களைத் திறந்துப் பார்க்க கட்டிலருகே ஆதி நின்றுக் கொண்டிருந்தான். பட்டென்று எழுந்தவளை ,

 

“ஹேய் கூல் கூல் … ஏன் இப்படி …, எனக்கு கொச்சின் போற வேலையிருக்கு , அதுதான் உன் கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்னு வந்தேன்” என்றான்.

 

மணி பார்க்க அது அதிகாலை நான்கு எனக் காண்பிக்க , கண்களாலயே வினவியவளிடம்,

 

“நாம வீட்டுக்கு வந்தப் பிறகு தான் வேந்தன் சொன்னான். அவனே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான் ….. அதுதான் எழுப்பினேன் …இப்பவே கிளம்பி திருவனந்தபுரம் போய் அங்கேயிருந்து எட்டரை மணி ஃபிளைட் , நைட் நான் வர ரொம்ப நேரமாகிடும் … தனியா இருப்பியா… ஒன்னும் பயமில்லை .. கதவு பூட்டிக்கோ.” என்றதும் தலையை ஆட்டியவளின் கலைந்த கூந்தலை கைக்கொண்டு ஒதுக்கி விட்டவனின் விரல் தீண்டலில் சிவந்தவள் , மெல்ல விலகி தானே ஒதுக்கி கொண்டையிட்டுக் கொண்டே அறையை விட்டு வெளியேற ,

 

பின்னாடியே வந்தவன் , “அம்மா நைட் பேசினாங்க , அனுவ தலைப்பொங்கலுக்கு சென்னைக்கு அழைச்சிருக்காங்களாம் , அப்படியே அங்க தங்கி கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணின  பிறகு தான் கோவை போவானு நினைக்கிறேன் …..”

 

நின்று திரும்பியவள் இது தெரிந்த விஷயம் தானே என்பது போல் பார்த்து ,

 

“எனக்கும் தெரியும் … அண்ணாக் கூட அவ முடிச்சப் பிறகு கல்யாணம் வச்சுக்கலாம்னு தான் சொன்னாங்க , ஆனா அப்பா தான் ….”

 

“புரியுது… அம்மாவும் சொல்லிருக்காங்க … எனக்கு இப்ப என்ன கவலைனா… அம்மா வேற ஒன்னும் சொன்னாங்க அதுதான். … ” என்று இழுத்தான்.

 

” என்ன ” என்பதாக கண்கள் சுருக்கியவளிடம்,

 

” அனு அங்க பொங்கலுக்குப் போறது போல நாமளும் கோயம்புத்தூர் போகணுமாம் … அப்படியே உன்னைய அங்க விட்டுட்டு நானும் வேலையப் பார்க்க இங்க வந்துரணுமாம் … ” எனப் பெருமூச்செறிந்தான்.

 

“ஓ … அப்படியா” எனத் தலையாட்டியவளிடம்,

 

” என்ன அப்படியா … அடுத்த மாசத் தொடக்கத்துல தான் பூஜை வச்சுருக்காங்க , அப்புறம் ஒரு ரெண்டு மூணு நாள் தான் இங்க இருப்ப … இதுக்கு மெதுவாவே கல்யாணம் வச்சுருக்கலாம் …. எங்க அம்மாவச் சொல்லணும் … நான் வாறேன்” என்றவன் கிளம்பிச் சென்று விட்டான்.

 

முதலில் ‘ஏன் இந்தக் கோபம் ‘ என விழித்தவள் , காரணம் புரிபட , முகம் சிவந்தவளுக்கு , மகிழ்ச்சியில் கண்ணிலும் நீர்த்தேங்கி விட்டது. கண்களைத் துடைத்துக் கொண்டே அறைக்கு வந்தவள், மொபைலில் அவனது ஃபோட்டோவைப் பார்த்து ,

 

“என்னைப் பிரிஞ்சு இருக்கணும்னு கோபப்படுறீங்களா … அந்தளவுக்கு என்னை உங்களுக்குப் பிடிச்சுருச்சா என்ன …. என்னைய பிரிஞ்சு இருக்க ஃபீல் பண்றீங்களா … இல்ல மனைவியான அமிர்தாவ பிரிஞ்சு இருக்க ஃபீல் பண்றீங்களா …. பின்னது தான் சரி… அப்படித்தானே ….. ” நினைத்ததும் அழுகை அதிகமாகவே வர ,

 

” எப்படியோ என்னைத் தேடுறீங்க ….அது போதும் ….அது போதும்…..” எனத் தன்னையே சமாதானம் செய்து அழுகையை நிறுத்த முயன்றுக் கொண்டிருக்க , அவன் அழைத்து விட்டான். சாதாரண அழைப்பு , வீடியோ கால் அல்ல. உடனேயேக் காதில் வைக்க ,

 

[the_ad id=”6605″]

 

“சாரி … கோபமா பேசிட்டேன் …ஏன் வீடியோல வரலனா … உன் முகம் தூக்க கலக்கத்துலக் கூட பார்த்துட்டே இருக்கலாம் போல ரொம்ப ரொம்ப அழகா இருக்கு …. ரொம்ப டிஸ்டர்ப் ஆகிறேன். நேத்து சாயந்திரம் முழுசும் உன் கூடவே இருந்ததாலயா என்னனுத் தெரியல… எனக்கு உன் கூட … உன் பக்கத்துலயே இருக்கணும் போல இருக்கு …” சிறிது நேர அமைதிக்கு பின் ,

 

“அனு நான் என்ன மேஜிக் பண்ணேன் , நீ பேச முயற்சி பண்றனு சொன்னா … ஆனா நீ தான் ஏதோ மேஜிக் பண்ணிருக்க , இப்படி பிஸ்னஸ் விஷயமா கிளம்புறப்போ எல்லாம் அதை பத்தின சிந்தனை தான் ஓடும் … இப்ப உன்னைப் பத்தின சிந்தனை …. கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படிலாம் ஆகிருவேன்னு நினைக்கவே இல்லை …திடீர்னு அம்மா இது போலச் சொன்னதும் .. அதுதான் அப்படிப் பேசிட்டேன். நீ தூங்கு , நான் கொச்சின் போனதும் பேசுறேன் பை ….”

 

முகத்தில் புன்னகை தோன்ற மனதிலும் நிம்மதி தோன்ற தலையணையில் முகத்தையும் நெஞ்சில் அவனிருந்த கைப்பேசியையும் புதைத்துக் கொண்டு, அவனது பேச்சில் ஆறுதல் அடைந்தவள் மன நிம்மதியோடு துயில் கொண்டாள்.

 

கோவையிலும் அதிகாலையிலயே எழுந்த அனு குளித்து முடித்து தக்ஷன் எழக் காத்திருந்தாள். சமையலறைக்குச் சென்றவளுக்கு செல்லம்மா சுடச்சுட காஃபி போட்டுத் தரவும் அவரிடம் பேசிக் கொண்டே , ஹாலுக்கு வர நாதன் கிளம்பத் தயாராக நின்றிருந்தார். அனுவைப் பார்த்ததும் ,

 

“நீ எழுந்துட்டியா மா , எனக்கு ஒரு அவசர கேஸ் இருக்கு வர நேரமாகலாம் , நீயும் தக்ஷ்யும் கோவிலுக்குப் போய்ட்டு வாங்க , கிளம்பும்போது ஃபோன் பண்ணுங்க…” என்றவர் கிளம்பி விட்டார். அவருக்கு விடைக் கொடுத்து அறைக்கு வர தக்ஷன் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டிருந்தான். அவனருகில் சென்றவள் , நாதன் சொன்னதைச் சொல்லிவிட்டு கோவிலுக்கு கட்டுவதற்காக புடவையை எடுத்து கட்டிலில் வைத்தவள் அவன் செல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்க , அவனோ கண்ணாடி முன்பு நின்று நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.

 

கண்ணாடியில் அவள் தெரிய ,”ரெடியாகு நேரமாகுதே… ” , என உடலில் வாசனை திரவியம் ஒன்றை அடித்துக் கொண்டேச்சொல்ல ,

 

“ம்…. ” எனவும் , அவளைத் திரும்பிப் பார்த்தவன் , உதட்டில் முறுவலுடன் அவளருகில் வந்தமர்ந்துக் கொண்டு ,

 

“ஓகே…. டிரஸ் சேன்ஜ் பண்ணு… “எனக் காதருகில் சொல்ல ,

 

‘ம் ‘ என்றவள் , பின் விழித்து முகம் சிவந்து திரும்பியவள், “வெளிய வெய்ட் பண்ணுங்க … நான் வாறேன்..” என்றுச் சிணுங்கலாகச் சொல்ல ,

 

“முடியாது… நீ என்ன சொன்ன மறந்து போய்ட்டியா … அப்ப நான் இங்க தான் இருப்பேன்…..” என்றுக் கைகளை கட்டில் பின்புறம் ஊன்றி அமர்ந்துக் கொள்ள ,

 

“அத்….. தான் …. நீங்க வம்பிழுக்கிறீங்க, போங்க நான் டிரஸ் மாத்தணும் .” என்றவள் எழுந்து அவன் கைப்பிடித்து இழுக்க… வெகு நாட்களுக்குப் பின்னான அவளது அழைப்பிலும் சிணுங்கலிலும் மனம் சிறகடிக்க , “அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்தவனிடம் ,

 

[the_ad id=”6605”]

 

“கோயிலுக்கு கிளம்பணும் விடுங்க… ” எனத் திமிறியவளிடம்,

 

“அப்படியா கோயிலுக்கு கிளம்பணுமா” என அவளை மெத்தையில் சரித்து அவள் முகம் அருகில் முகம் வைத்துக் கேட்க , இப்படிக் கேட்கும் போது பேச்சு வருமா என்ன…. அனுவும் பேச மறந்து அவன் அணைப்பில் நெகிழ்ந்துக் கொண்டே ,

 

“ம்” என , அணைப்பு மேலும் இறுக , அப்பொழுதுதான் அவனின் குறும்பை உணர்ந்தவள் , அவனைத் தள்ளி விட்டு , எழுந்துக் கொண்டவள் உடைகளை எடுத்துக் கொண்டு ,

 

“நான் வேற ரூம்ல மாத்திக்குவேன் …” என்று அறையை விட்டுச் செல்ல முயல ,

 

” ஹேய் கேண்டி வெய்ட்..வெய்ட்…” என அருகில் வந்து ,

 

“மறந்துட்டியா …நீ தான் நான் கேட்டதுக்கெல்லாம் ஓகே சொன்ன அதுதானே இங்கேயே இருந்தேன்….” இப்பொழுது அனுவின் விழிகளில் நீர் தேங்கி ,

 

“நீங்க மறந்துட்டீங்க அத்தான் …… நீங்க இப்படிப் பேசியே …… இல்ல நீங்க என்கிட்ட பேசியே எத்தனை நாள் இல்ல எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா…..” அவள் முகம் தாங்கியவன் ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!