Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருப்பு நிலா Episode-10

அத்தியாயம் 10

மெல்லினா, அகரன், திரிவேஷ் கிளப்பிற்கு வந்து பைக்கில் இறங்கினார்கள். அகரன் மெல்லினாவிடம், “மித்திரனின் கிளப் நண்பன் பெயர் என்ன? அவனை சரியாக பார்த்து காட்டு” என்றான்.

அவனோட பெயர் “ஜெ” என்றாள்.

“ஜெ” வா? இது என்ன பெயர்? திரிவேஷ் கேட்டான்.



Advertisement

“ஜெய், எல்லாரும் அவனை “ஜெ”ன்னு தான் சொல்லுவாங்க” என்றாள் மெல்லினா.

“வா, உள்ளே போகலாம்” என்று அகரன், மெல்லினா, திரிவேஷ் உள்ளே நுழைந்தனர்.

பாட்டு சத்தம் காதை கிழிக்க, பொண்ணுங்க பசங்க எல்லாரும் குதியாட்டம் போட்டு மகிழ்ச்சியுடன் இருந்தனர். மது வாடை நாசியை துளைத்தது. பெரியவர்களும் இருந்தனர்.

Advertisement

பார்த்துக் கொண்டே திரிவேஷ் முன் சென்றான். மெல்லினாவிற்கு ஆகாஷ், லீனா இறந்தது நினைவிற்கு வர, அவள் பயத்துடன் அகரன் கையை பிடித்தாள். அவள் கையின் நடுக்கத்தை உணர்ந்த அகரன் அவளை பார்த்தான். மெல்லினா அவனை பார்த்து ப்ளீஸ் என்று உதட்டை அசைத்தாள்.

Advertisement

அவள் கையை எடுத்து விட்டு அகரன் மெல்லினா கையை பிடித்து, தேவையில்லாமல் எதையும் யோசிக்காத. இப்ப அந்த ஜெய் யாருன்னு காட்டு” என்றாள். அவள் கண்கள் எல்லா பக்கமும் சுழல, மெல்லினா கண்கள் ஓரிடத்தில் பதிந்தது.

“அகரா” என்று அவன் கையை சுரண்டி, அவள் ஒருவனை கை காட்டினாள்.

அவன் தானா? என்று அகரன் மீண்டும் கேட்க, “ஆம்” என்று தலையசைத்தாள். த்ரீ என்று சத்தமிட்ட அகரன், கையை ஜெய்யிடம் காட்டினான்.

Advertisement

ஜெ..என்று திரிவேஷ் அழைக்க, அவன் திரும்பினான். அவன் நீங்க யாரு? என்று திரிவேஷை பார்த்து கேட்டுக் கொண்டே அகரனும் வரும் மெல்லினாவை பார்த்து, அவன் திகைத்து அகரனையும் திரிவேஷையும் பார்த்து வேகமாக ஓட, இருவரும் அவனை பிடித்தனர்.

மெல்லினாவும் அவனிடம் வந்து, என்னடா பண்றீங்க? மித்திரன் எங்கடா? என்று கேட்டாள்.

“எனக்கு தெரியாது. ஆனால் நீ இங்க வருவது உனக்கு பாதுகாப்பு இல்லை. சார் உடனே இவளை இங்கிருந்து கூட்டிட்டு போங்க” என்றான் ஜெய்.

என்ன விசயம்ன்னு சொல்லுடா? மித்திரன் எங்க இருக்கான்? மெல்லினா அழுதாள்.

“அவன் பெரிய இடத்துல கை வச்சுட்டான். அவனை உன்னால மட்டுமல்ல யாராலும் காப்பாற்ற முடியாது. நீ இங்கிருந்து கிளம்பு” என்றான் அவன்.

“அவன் எங்கன்னு மட்டும் சொல்லு. நாங்க இவளை பார்த்துப்போம்” என்றான் அகரன்.

நீங்க இவ அண்ணனோட செக்கரட்டரி தான? இவளோட அண்ணாவாலே அந்த மித்திரனை காப்பாற்ற முடியாது. இதில் இவளையும் சேர்த்து பழி கொடுத்துறாதீங்க. ஏற்கனவே இவள் தனியா சிக்க மாட்டாளான்னு காத்துக்கிட்டு இருக்காங்க. முதல்ல முடிஞ்சா இவள காப்பாத்துங்க. அப்புறம் அவனை பாருங்க என்று சொல்லி விட்டு அவன் அங்கிருந்து ஓடினான்.

அகரன் சிந்தனையுடன் மெல்லினாவை பார்த்தான். அகரா, அவனை காப்பாற்ற முடியாதா? மெல்லினா கேட்க, திரிவேஷ் அவர்களிடம், நாம இங்க இருப்பது சரியா படலைடா. வாங்க கிளம்புவோம் என்றான்.

இல்ல, மித்திரன் இல்லாம இங்கிருந்து வர மாட்டேன் மெல்லினா சொல்ல, அவனை லவ் பண்றீயா? திரிவேஷ் கேட்க, “அகரன் இந்த நிலையில் இருந்தா நீ விட்டு போயிருவியாடா?”என்ற மெல்லினா. அவன் என்னோட ப்ரெண்டுடா.

அப்ப அந்த விசாகா பொண்ணு ப்ரெண்டு இல்லையா? திரிவேஷ் கேட்க, ஏய் சும்மா இருடா என்று அகரன் கோபப்பட்டான்.

விசா..என்ற மெல்லினா கால் பக்கம் ஏதோ வந்து விழுந்தது. மெல்லினா அதை எடுத்து பார்த்து, அகரா..நாம மித்திரனை தேடி தான வந்தோம். இது விசாகாவோட பேவரேட் டாலர். எப்போதும் கழுத்தில் தான் போட்டிருப்பாள். இதை யாருக்கும் கொடுக்க மாட்டாளே?

இதே போல் எத்தனை பேர் வச்சிருப்பாங்க? திரிவேஷ் கேட்க, இல்ல மொத்தமே நான்கு தான் தயாரிச்சாங்க. அதில் ஆகாஷூம் விசாகாவும் தான் வச்சிருந்தாங்க.

அகரா, இதை நல்லா பாருடா? பருவதி கழுத்திலும் இருந்தது என்றான் திரிவேஷ்.

அப்ப அவளாக இருக்குமோ? மெல்லினா கேட்க, இல்லை மெல்லினா. இது விசாகாவுடையது தான். அவள் குடும்பத்தையே கடத்திட்டாங்க என்றான் அகரன்.

அகரா, சும்மா சொல்லாத என்றாள் மெல்லினா. நியூஸ்ஸை அகரன் காட்ட, மெல்லினா அழுதாள்.

ஷ்..அழாத என்ற திரிவேஷ், இந்த பக்கத்திலிருந்து தான வந்து உன் காலில் பட்டது? எனக் கேட்டான்.

ஆமா என்று மெல்லினா பார்க்க, அவளுக்கு உயிரே நின்றது போல் இருந்தது. ஆகாஷூம் லீனாவும் இறந்த அதே அறை.

அகரா,..என்று கண்ணீருடன் பயமா இருக்கு. இந்த அறையில தான் ஆகாஷூம் லீனாவும் என்று அவன் தோளில் சாய்ந்து மெல்லினா அழுதாள். திரிவேஷ் அகரனை பார்த்து கண்ணடித்தான்.

“சும்மா இருடா. எனக்கே செம்ம டென்சனா இருக்கு” என்றான் அகரன். ஆதிக்கு மேசேஜ் செய்ய, அவனும் அங்கே தான் வருவதாக சொன்னான். மித்திரனும் விசாகா குடும்பமும் அங்க தான் இருக்காங்க. மூவரும் ஜாக்கிரதையா இருங்க என்று ஆதி அனுப்பி விட்டு  போனை வைத்தான்.

பாட்டு சத்தம் திடீரென நிறுத்த ஓர் அலாரம் சத்தம் மட்டுமே ஒலித்தது. அனைவரும் கலைந்து வேகமாக வெளியே ஓடினர்.

“அகரா, அவங்க நம்மை கண்டுபிடிச்சுட்டாங்க. அதான் இந்த சத்தம்ன்னு தோணுது” என்றாள் மெல்லினா.

“ம்ம்..பார்த்திடலாம்” என்றான் திரிவேஷ்.

“அகரா, பயமா இருக்கு. என்னால நீங்களும் மாட்டிக்கிட்டீங்க” என்றாள் மெல்லினா.

அமைதியா இருக்கிறியா? அகரன் சத்தமிட்டான். அவர்களை சுற்றி ஆட்கள் கையில் ஆயுதத்துடன் வந்து நின்றனர்.

அகரனும் திரிவேஷூம் மெல்லினாவை மறைத்து அவர்கள் பின் நிற்க வைத்தனர். ஆனாலும் ஒருவன் மெல்லினாவை நோக்கி வந்தான். முதலில் அவனை அடித்தது திரிவேஷ்.

அனைவரும் மொத்தமாக வந்தனர். மெல்லினா பயத்துடன் அகரனை பிடிக்க, அவளை விலக்கி விட்டு அவர்களுடன் சண்டை போய்க் கொண்டிருந்தது. மெல்லினா அருகே யாரும் செல்லாமல் தடுத்துக் கொண்டிருந்தனர் அகரனும் திரிவேஷூம். மெல்லினா பயத்தில் உறைந்து நின்றிருந்தாள்.

மெல்லினாவை இவர்கள் காப்பாற்றுவதை வேடிக்கை பார்க்க முடியாதவர்கள் அவளை பிடித்து அவள் கழுத்தில் கத்தியை வைத்தனர். அகரனும் திரிவேஷூம் செய்வதறியாது திகைத்தனர்.

மெல்லினா கண்ணீருடன் இருவரையும் பார்க்க, “அவனுகள அடிச்சி போடுங்கடா” என்று ஒருவன் கத்தினான். திரிவேஷையும் அகரனையும் அவர்கள் அடிக்க, மெல்லினா பொறுமை பறந்தது.

கண்ணை மூடிக் கொண்டு அவள் கழுத்தில் கத்தியை பிடித்திருந்தவன் காலை ஓங்கி மிதித்தாள் மெல்லினா. அவன் வலியில் கத்த, கிளப் ஆட்கள் அகரன் திரிவேஷை அடிப்பதை நிறுத்து விட்டு அவளை பார்த்தனர். அவள் அத்தோடு விடாமல் அகரனிடம் ஓடி வந்தாள்.

அகரன், மெல்லினா, திரிவேஷ் அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்தனர். அந்நேரம் ஒருவன் மெல்லினாவை கத்தியால் குத்த வருவதை பார்த்த அகரன் இடைபுகுந்தான்.மெல்லினாவை குத்த இருந்த கத்தி அகரன் வயிற்றில் புகுந்தது. அவன் இரத்தமுடன் சரிய, திரிவேஷ் கோபமாக கத்தினான்.

அத்தோடு நிறுத்தாமல் கோபத்தில் திரிவேஷ் வெறியுடன் அனைவரையும் தனியாளாய் அடித்துக் கொண்டிருந்தான். இரத்தமுடன் சரிந்த அகரனை மெல்லினா தாங்கிக் கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

“ஏன்டா இப்படி பண்ண? எல்லாமே என்னால் தான்” என்று அகரனை பார்த்துக் கொண்டு அழுதாள். அகரன் அவள் கையை பிடித்துக் கொண்டு, என்னால பிழைக்க முடியுமான்னு தெரியல. ரசிக்கும் பாஸை பிடிக்கும்ன்னு தான் எனக்கு தோணுது. உன்னால முடிஞ்சா எப்படியாவது அவரோட அவளை சேர்த்து வச்சிரு என்றான்.

“அகரா, உனக்கு ஏதும் ஆகாது” என்று அவன் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு கதறி அழுதாள் மெல்லினா.

நீ எதுக்கு எனக்காக அழுற? உன்னோட ப்ரெண்டு விசாகாவுக்கு ஆபத்து. நீ முதல்ல இங்கிருந்து தப்பித்து போ. பாஸ் இங்க தான் வந்துட்டு இருக்கார். போ..என்று அவள் கையை எடுத்து அவளை தள்ளினான்.

அங்கே வந்த ஒருவன் அகரனை பார்த்து புன்னகைத்து விட்டு, மெல்லினா முடியை பிடித்து இழுத்தான். அவள் அழுது கொண்டே கத்தினாள்.

திரிவேஷை அழைக்க கூட சத்தம் வரவில்லை அகரனுக்கு. ஆனால் திரிவேஷ் மெல்லினாவை பார்த்தான். அவனால் அவர்களை விட்டு நகர முடியவில்லை. அகரன் வயிற்றை பிடித்துக் கொண்டு மெதுவாக எழுந்து மெல்லினா கூந்தலை பற்றியவனிடம் வந்து அவனை தள்ளி விட மெல்லினாவும் விழுந்தாள். அவளிடம் வந்து அவளை தூக்கி விட்டு அகரன் மெல்லினாவை தன் பின் மறைத்து நின்றான்.

கோபமாக எழுந்த கீழே விழுந்தவன் அகரனை நோக்கி வந்தான். “அகரா வேண்டாம்” என்று மெல்லினா அவனை இழுத்தாள்.

நீ போ..என்று அகரன் சொல்ல, நான் போக மாட்டேன் என்று அவனை மேலும் இழுத்தாள் மெல்லினா. இருவருமே கீழே விழுந்தனர். அகரன் வலி தாங்க முடியாமல் கத்தினான். திரிவேஷூம் அவனை பார்த்து விட்டு அவர்களிடம் வர முயற்சித்தான். ஆனால் அவனிடம் தொடர்ந்து ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர்.

அகரனால் எழ முடியவில்லை. மெல்லினாவை அவன் பின்னே வைத்திருந்தான். இருவரையும் நோக்கி கத்தியுடன் அவன் வந்தான்.

மெல்லினா பயத்தில் அகரனை கட்டிக் கொண்டே அழுதாள். அவன் கண்கள் இருளத் தொடங்கியது. கத்தியை குத்த வரும் போது, ஏய் என்று சத்தம் கேட்டு அனைவரும் திகைத்தனர். கண்ணாடியையும் தன் கோர்ட்டையும் கழற்றி தூக்கி எறிந்து கொண்டே ஓடி வந்த ஆதிரேயன் அகரன் முன் வந்து கத்தி எடுத்து வந்தவனை அடித்ததில் அவன் கழுத்து திரும்பிக் கொண்டது.

டேய் என்று மற்றவர்கள் சத்தமிட, ஆதிரேயனை நோக்கி பலர் வந்தனர். ரசிகா அகரனை பார்த்து அவனிடம் ஓடி வந்தாள்.

அகரா, பாருடா..என்று ரசிகாவும் அழ, அகரன் மெல்லினா, ரசிகா கையை பிடித்துக் கொண்டே மெல்லினா மடியிலே சாய்ந்து கண்ணை மூடினான். இருவரும் கதறி அழுதனர்.

அங்கே வந்த போலீஸாருடன் மித்திரனும் வந்தான். மெல்லினாவிற்கு யாரும் கண்ணிற்கு தெரியவில்லை. மித்திரன் அவளை பார்த்துக் கொண்டே விசாகாவை தேடினான்.

பிரபாகரனும் தமிழரசனும் அகரனிடம் வந்தனர். அவனது வெள்ளை வேஷ்டி சட்டையும் இரத்தத்தால் நனைந்திருந்தது. தமிழரசன் அவன் கையை பார்த்து, சீக்கிரம் ஹாஸ்பிட்டல்ல சேர்க்கணும். இல்லை இவனை காப்பாற்ற முடியாது என்றார்.

போலீஸார் அனைவரையும் பிடிக்க, விசாகாவையும் அவளது குட்டி தங்கையையும் கட்டி வைத்திருந்தனர். அவளது குடும்பத்தையும் கொன்றிருந்தனர். மித்திரன் அவர்களை அழைத்து வர, உள்ளிருந்து மறைந்த வந்த ஒருவன் விசாகாவை குத்த, அவளை பிடித்து இழுத்தான் மித்திரன். ஆனால் அவன் கத்தி விசாகா இடையில் ஓரமாக கிழித்து இரத்தம் வந்தது. குத்த வந்தவனை தள்ளி விட்டு  மித்திரன் அவளை தூக்கிக் கொண்டு வந்தான்.

வெளியே திரிவேஷ் அகரனை தூக்கிக் கொண்டு வெளியே ஓட, எல்லாரும் அவன் பின் ஓடினர். ஆதி காரை எடுக்க, விசாகாவையும் அக்ரனுடன் ஏற்றினர். அவளையும் பார்த்து மெல்லினா அழுதாள்.

ஆதி காரில் ஆதி, ரசிகா, அகரன், விசாகா, அவள் தங்கை, மெல்லினாவும் பைக்கில் திரிவேஷூம் மித்திரனும், தமிழரசன் முன்னதாக ஹாஸ்பிட்டலுக்கு விசயத்தை சொல்ல, அங்கே தயாராக இருந்தனர். அவரும் பிரபாகரனும் அவர்கள் காரில் ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தனர்.

அகரனுக்கும் விசாகாவிற்கும் சிகிச்சை நடக்க, அனைவரும் வெளியே காத்திருந்தனர். திரிவேஷ் காயத்திற்கு மருந்திட்டு வெளியே வந்தான். சுரேகாவும் அவள் பெற்றோரும் லிது, நிதுவுடன் வந்தனர்.

ஆதியை பார்த்ததும் அவர்களிடமிருந்து இறங்கி அவனிடம் லிதுவும் நிதுவும் ஆதியிடம் வந்தனர். ஆதியும் கலங்கி அமர்ந்திருந்தான். மெல்லினாவும் ரசிகாவும் அழுது கொண்டு அமர்ந்திருந்தனர். அகரன் நிலை தான் கவலைக்கிடமாக இருந்தது. விசாகாவிற்கு சிகிச்சை முடிந்ததும் அவளை சென்று எல்லாரும் பார்த்தனர். விசாகாவின் தங்கை மித்திரனிடம் இருந்தாள். மித்திரனை பார்த்த மெல்லினா அவனை முறைத்துக் கொண்டே விசாகாவை பார்த்து வந்து அகரன் விழிக்க காத்திருந்தாள் மெல்லினா.

ஆதி ரசிகா, மெல்லினாவிடம் பேச வந்தான்.

சார், ப்ளீஸ் எதுவும் பேசாதீங்க என்று ரசிகா சொல்ல, அகரனுக்கு ஒன்றுமாகாது என்று திரிவேஷ் கண்ணீருடன் ரசிகா அருகே வந்து அமர்ந்தான்.

அகரனுக்கு சிகிச்சை முடித்து மருத்துவர்கள் வெளியே வந்தனர். தமிழரசனும் வந்தார். அகரன் பிழைச்சிட்டான். ஆனால் கண்டிப்பாக அவன் நன்றாக ஓய்வெடுக்கணும். அவனுக்கு கத்தி ஆழமாக பட்டிருந்தது. அவன் ரொம்ப கவனமா இருக்கணும். அவனுக்கு துணைக்கு யாராவது இருக்கணும் என்றார்.

ஆதி ரசிகா திரிவேஷை பார்த்தான். திரிவேஷ் கண்ணீருடன், அகரன் அண்ணனுக்கு போன் செய்தேன். அவர் எடுக்கலை. அதனால் அண்ணிக்கு கால் பண்ணேன். அவன் செத்தா சாகட்டும்ன்னு சொன்னாங்க என்று அவன் அழுதான்.

இப்ப யார் பார்த்துப்பது? தமிழரசன் கேட்க, நானே அவனை பார்த்துக்கிறேன் என்றான் திரிவேஷ்.

“பருத்தி பயிரை சாகுபடி செய்யணும். இல்ல எல்லாமே வீணாகிடும்” என்றான் ஆதிரேயன்.

“நான் அவனை பார்த்துக்கிறேன்” என்று ரசிகா கூற, ஆதி அவளை முறைத்தான்.

சார், அவன் என்னோட ப்ரெண்ட்டு. அப்படியே விட சொல்றீங்களா? ரசிகா கோபமாக கேட்டாள்.

யாரும் அவனை பார்த்துக்க வேண்டாம். அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும் வரை மாறி மாறி பார்த்துப்போம். பின் அவனை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறோம். சீதா பார்த்துப்பாங்க என்று பிரபாகரன் சொல்லிக் கொண்டே தன் மகள் மெல்லினாவையும் ஆதியையும் பார்த்தார்.

ஆதி, இதுல உனக்கு ஏதும் பிரச்சனை இருக்கா? பிரபாகரன் கேட்க, இல்லப்பா, பார்த்துக்கலாம். திவாகர் அங்கிளும் அவனை சேர்ந்து பார்த்துக்கட்டும் என்றான் ஆதி.

ஆனால் சார் அவன்? என்று திரிவேஷ் ஆதியை பார்த்தான்.

இந்த நாலு வருசமா எனக்கு வேண்டிய எல்லாத்தையும் செய்தான். செக்கரட்டரியாக மட்டுமல்ல நண்பனாகவும் உதவி இருக்கான். இது எனக்கான நேரம் என்று ஆதி ரசிகாவை பார்த்துக் கொண்டு சொன்னான்.

அகரன் அறையினுள் எல்லாரும் சென்று சிறிது சிறிது நேரமாக பார்த்துக் கொண்டனர். பிரபாகரன் மெல்லினாவை வீட்டிற்கு அழைக்க, அவள் அகரனை விட்டு நகர மாட்டேன் என்றாள்.

“மெல்லி, யாரும் தப்பா எடுத்துக்க போறாங்க” என்று ரசிகா சொல்ல, யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லை ரசி. என்னால் தான இப்படி ஆனது. நானும் அவனருகே தான் இருப்பேன் என்றாள் மெல்லினா பிடிவாதமாக.

சரி, இரு என்று அவர்கள் நகர, ரசி பாப்பாக்கள் தூங்கணும். நீயாவது வீட்டுக்கு வாம்மா பிரபாகரன் அழைத்தார். அகரனை விட்டு செல்ல முடியாமல் அவனறையை பார்த்துக் கொண்டே நின்றாள்.

மௌனி, பாப்ஸ்ஸை நீ பார்த்துக்கோ. நான் அவனுடனே இருக்கேன் திரிவேஷ் சொல்ல, அப்பா நானும் அவனுடன் இருக்கேன் என்ற ஆதி, சுரேகா குடும்பத்தை காட்டி, இவங்கள மட்டும் பத்திரமா பார்த்துக்கோங்க என்று பிரபாகரனுடம் ரசிகா, குழந்தைகள், சுரேகா, அவள் பெற்றோரை அனுப்ப, சுரேகா திரிவேஷை பார்த்துக் கொண்டே சென்றான். அவன் போனில் பேசலாம் என போனை காட்டினான். அவர்கள் கிளம்பினர்.

மறுநாள் காலையில் அகரனுடன் மெல்லினாவும் திரிவேஷூம் அவனறையில் இருந்தனர். ஆதி வெளியே இருந்தான். போலீஸ் அவர்களை பிடித்து சென்றதால் அந்த கிளப்பை மூடி விட்டனர் என்ற செய்தி பரவியது.

டேய் கருணா, என்ன செய்துட்டு இருக்கீங்க? கிளப்பில் போதை மருந்து விற்பனை பற்றி வெளிய வந்திருக்கு. நாம பாஸ் எவ்வளவு பெரிய போதையின் அரசன். நீங்க மாட்டுனீங்க. மவனே செத்தீங்கடா. அவர் தொழிலில் இதுவரை எந்நிலையிலும் சரிவு வந்ததில்லை. இதுவே முதல் முறை. அவருக்கு தெரியும் முன் பிரச்சனையை முடிக்க பாருங்க ஆல்பர்ட் கத்தினான்.

சரிண்ணா, அந்த போலீஸ்காரனுக்கு கரென்சிய கொடுத்து கரெக்ட் பண்ணிடுறோம் என்றான் கருணாகரன். மித்திரன் வைத்திருந்த பென்டிரைவ் கவரில் இந்த கருணாகரனும் அவனது ஆட்களும் போதை மருந்து தயாரிக்கும் வீடியோ தான் இருந்தது. இதை தான் ஆதி, அகரன், திரிவேஷ் பார்த்தனர்.

திரிவேஷ் ஆதியிடம் வந்து அமர்ந்தான். சார் உங்க தங்கச்சி உள்ளவே இருக்கா. யாரும் பார்த்தால் தவறாக எடுத்துக் கொள்ளாமல் என்றான் திரிவேஷ்.

அவளுக்கு ஏற்கனவே தன் நண்பர்கள் இருவரையும் பறி கொடுத்ததே தாங்க முடியாத துயரத்தில் தான் இருந்தாள். இப்ப அகரனுக்கு தன்னால் தான் இப்படி நடந்து விட்டது என்ற குற்றவுணர்வில் தான் அவனை விட்டு வர மறுக்கிறாள் என்றான் ஆதி.

ஆனாலும் சார், மத்தவங்க..

யார் என்ன பேசினால் என்ன? அவளுக்கு ஒன்று என்றால் மத்தவங்க வர மாட்டாங்கடா. அவ அவள் வழியிலே செல்லட்டும் என்றான் ஆதி.

அப்பொழுது அகரனை தேடிக் கொண்டு அவன் அண்ணனும், அக்காவும், அவர் பொண்ணு பிரணிதாவும் வந்தனர்.

அண்ணா, என்று திரிவேஷ் அவரிடம் ஓடிச் சென்று அவரை அணைத்தான். ஆனால் அவர் கோபமாக தள்ளி விட்டு, நீயும் இங்க தான் இருக்கியா? அவன் என்னடா பண்ணிட்டு இருக்கான்? என சத்தமிட்டார்.

மாமா என்ற பிரணிதா, முதல்ல மாமாவை பார்க்கணும் என்று அழுது கொண்டே சொன்னாள்.

ஆமாடா, தம்பிய பார்க்காம இவன்கிட்ட என்ன பேசுற? வா..என்று அகரனின் அக்காவும் தன் அண்ணனை இழுத்து ஆதி பக்கம் வந்தனர்.

“அண்ணா, இவர் தான் அகரனோட பாஸ்” என்றான் திரிவேஷ். அகரன் அண்ணன் ஆதியை கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் அவன் அக்கா ஆதியை பார்த்து, எல்லாரும் இருக்கும் போது இப்படி ஆகி இருக்கே? பார்த்திருக்கக் கூடாதா தம்பி? என்று அழுது கொண்டே அகரனை பார்த்து கதறி அழுதார். பிரணிதாவும் அழுது கொண்டே நின்றாள்.

டேய், எழுந்திருடா என்று அகரனின் அண்ணன் அவனை எழுப்ப, அகரன் கையை பிடித்துக் கொண்டே சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த மெல்லினா திடுக்கிட்டு விழித்தாள். இவர்கள் சத்தத்தில் அகரனும் விழித்தான்.

அண்ணா, அக்கா என்று அகரன் அவர்களை பார்க்க, அவன் அக்காவும் பிரணிதாவும் மெல்லினாவை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தான் அகரன் மெல்லினாவை பார்த்தான்.

ஆதியும் திரிவேஷூம் உள்ளே வந்தனர். ஆதி மெல்லினாவை கண்ணாலே அழைத்தான். அவள் ஆதியை பார்த்து விட்டு அகரனை பார்த்தாள்.

“அகரனோட குடும்பம் வந்துட்டாங்க. வா நாம வெளிய இருக்கலாம்” என்று ஆதி மெல்லினா கையை பிடித்துக் கொண்டே அகரனை பார்த்தான்.

மெல்லினாவும் அகரன் கையை விட்டு ஆதியுடன் பிரணிதாவை பார்த்துக் கொண்டே சென்றாள். திரிவேஷ் அகரனுடன் அமர்ந்தான். அகரன் மெல்லினா பிடித்திருந்த கையை பார்த்து விட்டு, அவள் இரவு இங்கே தான் இருந்தாலா? வீட்டுக்கு போகலையா? எனக் கேட்டான்.

அவளும் ஆதி சாரும் போகலை. மத்தவங்க தான் போனாங்க. பாப்பாவை தூங்க வைக்க என்று ரசிகாவை சொன்னான்.

உன்னை பார்க்க நாங்க வந்தா நீ யார பத்தி பேசிட்டு இருக்க? அகரன் அண்ணன் கத்தினான்.

அண்ணா, நிறுத்துங்க. அவனுக்கு உடம்பு சரியில்லை. நான் போன் செய்ததற்கு, “அவன் செத்தா சாகட்டும்ன்னு” அண்ணி சொன்னாங்க. இப்ப நீங்க வந்து அவனை கத்தியே சாவடிக்கிறீங்க? திரிவேஷ் ஆக்ரோசமானான்.

யார் நானா இவனை சாவடிக்கிறேன்? இவனா தான சாவ தேடிப் போனான்? என்று அகரன் அண்ணன் சத்தமிட்ட, அகரன் கண்ணீருடன் மௌனமானான்.

அண்ணா சும்மா இருக்கியா? அவன் ஏற்கனவே வேதனையில் இருக்கான். நீயும் இப்படி கத்திட்டு இருக்க? அகரன் அக்கா சத்தமிட்டார்.

“இதுக்கு தான் மாமா நீங்க இருங்க. நாங்க பார்த்துட்டு வாரோம்ன்னு சொன்னோம்” என்றான் பிரணிதா.

“பிரணி, அதிகமா பேசாத. நீ இன்னும் ஸ்கூல் கூட முடிக்கலை. பெரியவங்களிடம் பார்த்து பேசு” என்றார் அகரனின் அண்ணா.

“மாமா, நான் சின்ன பிள்ளை தான். எனக்கு மாமா மீது உள்ள அக்கறை கூட உங்களிடம் இல்லை. சும்மா மாமாவிடம் கத்திக்கிட்டே இருக்கீங்க?” பிரணிதா கேட்க, அவர் அவளை அடிக்க கையை ஓங்கினார்.

வெளியே நின்று ஆதியும் மெல்லினாவும் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தனர். திரிவேஷ் அவர் கையை பிடித்து தள்ளி விட்டான். அகரன் பதட்டமானான்.

இவளை அடித்தால் உனக்கு எங்கே வலிக்குது? இதுக்கு தான் ப்ரெண்ட்ட அந்த இடத்திலிருந்து நகர்த்தாதேன்னு சொன்னேன் என்ற அவர், உனக்கு என்னடி இப்பவே இவனோட ஓட தயாரா இருக்கியா? என்று அகரன் அண்ணன் கேட்க, பிரணிதா அழுதாள்.

அண்ணா..என்று சத்தமிட்ட அவர் தங்கை, நாங்க உன்னை பார்க்க வர சொல்லவும் இல்லை. உனக்காகவும் வரலை. நாங்க அகரனை பார்க்க வந்தோம். தேவையில்லாம என் பிள்ளைய இழுத்த நான் பேச மாட்டேன். என்னோட புருசன் தான் பேசுவார்.

உள்ளே வந்த ஆதி, உங்க பிரச்சனைய வெளிய வந்து வச்சுக்கோங்க. அவன் செத்து பிழச்சி வந்திருக்கான். அவனுக்கு ஆறுதலாக பேசாமல் அவன் முன்னாடி அவனை கஷ்டப்படுத்துற மாதிரி சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க?

எல்லாரும் பார்க்கணும்ன்னா பார்த்துட்டு கிளம்புங்க. அவனை நாங்க பார்த்துப்போம் என்று ஆதி சத்தமிட்டான்.

நீ அவனோட பாஸ் தானா? இல்லை மாமாவா? என்று மெல்லினாவை பார்த்துக் கொண்டே அகரன் அண்ணன் கேட்க, ஆதிரேயனுக்கு சினம் அதிகமானது.

யார்கிட்ட என்ன பேசுறீங்க? என்று திரிவேஷ் அகரன் அண்ணனை அடிக்க வந்தான். அவனை தடுத்த மெல்லினா, த்ரீ சும்மா இரு. மத்தவங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்க வேண்டாமா? அவங்கள மாதிரியே நடந்துக்கணுமா? என்று சத்தமிட்டாள்.

ஏம்மா, சின்னப் பொண்ணு. மட்டம் தட்டி பேசுறம்மா? அகரன் அண்ணன் கேட்க, அங்கிள் நான் மட்டம் தட்டலை. சரியா தான் பேசுறேன். நீங்க உங்க தம்பிய பார்க்க வந்தீங்களா? இல்லை எல்லாருடனும் சண்டை போட வந்தீங்களா?வந்து ஒரு வார்த்த உங்க தம்பிகிட்ட ஆறுதலா பேசுனீங்களா? அவனுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்? என்று மெல்லினா கேட்டுக் கொண்டே அகரனை பார்த்தாள். அவன் கண்ணீருடன் எல்லாரையும் பார்த்தான்.

அகரனை கஷ்டப்படுத்தாம பார்த்துப்பீங்கன்னா நீங்களே பார்த்துக்கோங்க. உங்களால முடியாதுன்னா சொல்லுங்க என்னோட அண்ணன் பார்த்துப்பான் என்றாள் மெல்லினா.

உன்னோட அண்ணன் என்ன பெரிய இவனா? அகரன் அண்ணன் கேட்க, மெல்லினா புன்னகையுடன் நீங்களே பாருங்க.

அண்ணா, நீ இன்னும் ஹாஸ்பிட்டல்ல பாதி பணம் தானே கட்டியிருக்க? மீதிய அவங்க பார்த்துப்பாங்க. உன்னோட மரியாதைய நீ இவங்ககிட்ட குறைச்சிக்க வேண்டாம். வா..நாம கிளம்பலாம் என்று மெல்லினா சொல்ல, தமிழரசன் உள்ளே வந்தார்.

அங்கிள், நாங்க கிளம்புறோம். அகரனது குடும்பம் இனி அவனை பார்த்துப்பாங்க என்றாள் மெல்லினா.

ஏம்மா, இனியாவது மாமான்னு சொல்ல மாட்டியா? என்று தமிழரசன் மெல்லினாவிடம் கேட்க, இது உங்களுக்கு தண்டனை. என்னை பேச வைக்காதீங்க அங்கிள் என்றாள்.

சரிம்மா. நான் எதுவும் கேட்கலை. மாப்பிள்ள, இவனை ப்ரெண்டா பாக்குறேன்னு சொல்லீட்டு இப்ப விட்டு போறீங்க? தமிழரசன் கேட்க, ஆதி அகரனை பார்த்தான்.

மாமா, நாம் நினைப்பது போல் மத்தவங்க நினைக்கணும்ல்ல என்று ஆதி அகரன் அண்ணாவை பார்த்து, அவனை பக்கத்தில் இருந்து பார்த்துக்கோங்க. எதுவாக வேண்டுமானாலும் இவரை கூப்பிட்டுக்கோங்க. இவர் எங்களோட சொந்த மாமா தான். இது இவர் ஹாஸ்பிட்டல் தான்.

மாமா, நீங்களும் அவனை பார்த்துக்கோங்க. பாப்பாவும் தேடுவாங்க. நாங்க கிளம்புகிறோம் என்று ஆதி சொல்ல, “பாஸ்” என்று மெதுவாக அகரன் அழைத்தான்.

அகரன் அருகே வந்த ஆதி, திரிவேஷ் உன்னுடன் தான் இருப்பான். த்ரீ, நீ அகரனுடனே இரு. தொழிற்சாலைக்கு வேண்டியதை நம்ம ஆட்கள் யாரையாவது மாற்றி விட்டு, நீ வரும் போது வாங்கலாம். எதுவும் வேணும்ன்னா தயங்காமல் கேளு என்று அகரனை பார்த்து, கண்டதையும் யோசிக்காமல் அமைதியாக ஓய்வெடு. நீ இல்லாமல் வேலையே எனக்கு ஓடாது. சீக்கிரம் நீ வரப் பாரு என்றான் ஆதி.

ஓ.கே பாஸ். மெல்லினாவுக்கு கை பரவாயில்லையா பாஸ்? என்று அகரன் அவளை பார்த்தான்.

அவள் கைக்கு என்ன? ஆதி கேட்க, பாஸ் அவள் விழுந்ததில் கை பிசங்கி விட்டது. அப்பவே வலிக்குதுன்னு அழுதா என்று அகரன் சொல்ல, மெல்லி நீ சொல்லவேயில்லை ஆதி மெல்லினாவிடம் கேட்க, அவள் வேகமாக வெளியேறினாள்.

திரிவேஷ் வெளியே வந்து, எதுக்கு சொல்லாம விட்ட? என்று கேட்க, அவள் கண்ணீருடன் கையை காட்டினாள். அவள் கை வீங்கி இருந்தது. தமிழரசன் அவளுக்கு சிகிச்சை செய்தார். ஆதியும் வெளியே வந்தான்.

அகரன் குடும்பம் உள்ளே இருக்க, அகரன் கவனம் வெளியே இருந்தது.

அகரா, அவன் அண்ணன் அழைக்க, எங்கள பத்தி பேசுன? சரி. எதுக்கு என்னோட பாஸ்ஸை இழுத்த? உன்னால என்னோட மானம் போகுது. அவர் நினைச்சா எனக்கு டிரீட்மென்ட் பாக்க விடாம செய்ய முடியும். மற்ற யாராவது அவர் இடத்தில் இருந்தால் இப்பவே உங்களையும் என்னையும் சேர்த்தே வெளிய அனுப்பி இருப்பாங்க.

என்னோட பாஸ்ஸை தெரியாத ஆட்களே இங்க இல்லை தெரியுமா? அவருக்கு நிறைய சொத்தும் இருக்கு. குணமும் இருக்கு.

“அந்த சின்னப் பொண்ணுக்கு இருக்கும் அக்கறை கூட உன்னிடம் இல்லை. எல்லாரையும் தப்பா பேசுறதே உனக்கு வேலையா போச்சு” என்று பேசி விட்டு அகரன் கண்ணை மூடிக் கொண்டு, அக்கா பாப்பாவை கூட்டிட்டு கிளம்பு. மாமா இருந்தா அவர் இருக்கும் நம்பிக்கையில் தங்கலாம். இவரை வச்சுக்கிட்ட எந்த பயனும் இல்லை. கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் அவர் மருமகளையே தப்பா பேசுறாரு.

பிரணிம்மா, நீ கிளம்பு. திரிவேஷ் என்னை பார்த்துப்பான். என்னை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அகரன் சொல்ல, என்ன மாமா இப்படி சொல்ற? நானும் அம்மாவும் எப்படி பதறி வந்திருக்கோம்” என்று அகரனிடம் வந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் பிரணிதா.

கதவு தட்டும் ஓசை கேட்க, அகரனின் அக்கா கதவை திறந்தார். உள்ளே வந்த மெல்லினா அகரனையும் பிரணிதாவையும் பார்த்துக் கொண்டே தன் அண்ணனுடைய கார்ச்சாவியை எடுத்து விட்டு நகர, அகரன் அவளை நிறுத்தி, உனக்கு கை ரொம்ப பெயினா இருக்கா? என்று கேட்டான்.

“இல்ல. நான் நல்லா தான் இருக்கேன். நீ உன்னை பார்த்துக்கோ” என்று அவள் பிரணிதாவை பார்த்துக் கொண்டே வெளியேறினாள்.

தம்பி, இந்த பொண்ணை எத்தனை நாளாக உனக்கு தெரியும்? அகரனின் அக்கா கேட்டார்.

மெல்லினாவை நாலு வருசமா தெரியும். ஆனால் இப்ப தான் நல்லா பேசுறோம் என்றான்.

உனக்கு அந்த பொண்ணை பிடிக்கும்மாய்யா? அவர் கேட்க, அக்கா என்ன பேசுற? நம்ம பிரணிதா வயசு தான் அவளுக்கும். என்னை போய்..அவங்க வசதியானவங்க. நீ கண்டதையும் யோசிக்காத என்று அகரன் சொன்னான்.

மாமா, இந்த காரணமெல்லாம் இல்லாமல் அவளை பார்த்து சொல்லுங்க. உங்களுக்கு அந்த பொண்ணை பிடிக்காதா? பிரணிதா கேட்க, இல்லைன்னு சொல்றேன்ல்ல என்று அகரன் அமைதியாக கண்ணை மூடினான். இவர்களின் பேச்சு அவன் மனதில் ஒட்டிக் கொண்டது.

“நான் கிளம்புறேன்” என்று அகரனின் அண்ணன் சொல்லி விட்டு, வெளியே வந்து ஆதியை பார்த்து, மன்னிச்சிருப்பா. நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். நீங்களே அவனை பார்த்துக்கோங்க. அவனோட அண்ணிக்கு தெரியாமல் தான் வந்திருக்கேன். தெரிஞ்சா பிரச்சனை பண்ணுவா. பார்த்துக்கோங்க என்று மெல்லினாவை பார்த்து, நல்லா தான் பேசுற என்று அவர் சென்றார்.

திரிவேஷ் அவர் பின் வந்து, “இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போனீங்கன்னா அவனுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றான். அவர் மீண்டும் உள்ளே வந்து அமைதியாக அமர்ந்தார்.

வெளியே சென்ற ஆதி, அகரனின் குடும்பத்திற்கு சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு, அகரா குழந்தைகளை பார்த்துட்டு வாரேன் என்றான். மெல்லினாவும் தமிழரசனும் அவர்களுடன் இருந்தனர்

அண்ணா என்று மித்திரன் ஆதியை அழைத்தான். ஆதி மெல்லினாவை பார்க்க, அவள் அவனை எறித்துக் கொண்டிருந்தாள்.

என்ன மித்திரன், விசாகா இரு நாட்கள் இருக்கணும்ன்னு சொன்னாங்களோ? ஆதி கேட்க, ஆமாண்ணா, பாப்பாவையும் அவளையும் பார்த்துக்குறீங்களா? அவன் கேட்க, நீ எங்கடா போகப் போற? மெல்லினா கேட்டாள்.

அண்ணா, அந்த பென்டிரைவ்ல்ல இருக்குற கருணாவிற்கு விசயம் தெரிந்து எல்லாத்தையும் வேறொருவர் பக்கம் திருப்ப பார்ப்பான். அதற்குள் அவனை பிடிக்கணும். அவனுக்கு மேலும் ஆட்கள் இருக்காங்க. அவங்களையும்..என்று மித்திரன் மெல்லினாவை பார்த்தான்.

உன்னால தான் டா எல்லாமே? இப்பவாது விடுறியான்னு பாரு? நம்ம ஆகாஷ், லீனா செத்தே போயிட்டாங்க. இப்ப விசாவும் குடும்பத்தை இழந்து இந்த நிலையில் இருக்கா. உன்னையும் வீட்ல இருந்து வெளிய தள்ளீட்டாங்க. உன்னால தான் அகரனும் இந்த நிலையில் இருக்கான். இதுக்கு மேல எல்லாரையும் சாவடிக்க நினைக்கிறியா? என்று மெல்லினா அவன் சட்டையை பிடித்து கத்தினான்.

மெல்லி..என்று தமிழரசன் அவளை பிடித்து இழுத்தார்.

“சொன்னா புரிஞ்சுக்கோ மெல்லி. தலையை உள்ளே கொடுத்த பின் உடனே வெளிய வர முடியாது” என்றான் மித்திரன்.

அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் மெல்லினா.

எவன் என்ன செய்தால் என்னடா? இதுக்கு மேல இதில யாரும் தலையிடக் கூடாது என்றாள் மெல்லினா.

“என்னால முடியாது மெல்லி” என்றான் மித்திரன்.

விசாகாவுக்கும் உனக்கும் இப்ப யாருமில்லை. பாப்பா வேற இருக்கா. அவங்களையும் அவனுக கொல்லணும்ன்னு நினைக்கிறியா? இதுக்கு மேல யாரோட சாவையும் என்னால பார்த்துட்டு இருக்க முடியாது என்று மெல்லினா தரையில் அமர்ந்து அழுதாள்.

அழு..நல்லா அழு. உனக்கு மட்டும் தான் அவங்க ப்ரெண்ட்ஸ்ஸா? எனக்கில்லையா? அவனுக போதை மருந்தை தயாரித்து விற்க மட்டும் செய்யல. பொண்ணுங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விக்கிறாங்க. இதுல நம்மை சம்பந்தப்பட்டவங்க மாட்டுனா தான் உனக்கு புரியும் என்றான்.

யாரோ மாட்டுறதை எதுக்கு இப்ப நம்முள் ஒருவர்ன்னு சொல்ற? மெல்லினா கோபமாக கேட்டாள்.

நாம் தலையிட்ட அன்றே நம்ம ப்ரெண்ட்ஸ் செத்துட்டாங்க. விசாவையும் உன்னையும் அவங்க நிமிசத்துக்கு நிமிசம் பாலோ பண்ணாங்க. நீ தனியா இல்லையே? அதான் தப்பிச்ச. ஆனால் விசா..வீட்டுக்குள்ளே ஒருவன் அவளை தூக்க வந்துட்டான். தெரியுமா உனக்கு?

இது எல்லாத்தையும் முடித்தால் தான் பிரச்சனை முடியும். உங்க வீட்ல வைச்சு உன்னை கூட கடத்த வாய்ப்பிருக்கு. அண்ணா இவள நல்லா பார்த்துக்கோங்க. இப்ப படிப்பை விட உயிரும் மானமும் தான் முக்கியம். நான் மறைந்திருந்தது என் உயிருக்காக இல்லை. என்னோட விசாகாவையும் உன்னையும் பாதுகாக்க தான்.

மறைந்திருந்தால் தான் அவங்க செய்ய நினைப்பது தெளிவா தெரிஞ்சது. அண்ணா கருணாவுக்கு மேல இருப்பது அமைச்சரின் மகன் சம்பத். அவனுக்கு மேல் எல்லாத்தையும் நடத்தும் ஒருவனும் இருக்கான். அவன் யாருன்னு தான் தெரியலை” என்று மித்திரன் சொன்னான்.

எல்லாத்தையும் எப்படிடா கண்டிபிடிச்ச? தமிழரசன் கேட்க, கண்டுபிடிச்சேன். அண்ணா உங்களிடம் நான் பேசணும் என்றான் அவன்.

ஆதி, அகரன் குடும்பத்தை பார்த்து, இவன் சொல்வதை பார்த்தால் இங்கிருப்பது உங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. நீங்க கிளம்புங்க. அகரனை நாங்களே பார்த்துக்கிறோம்.

த்ரீ..இவங்களை ஊருக்கு அனுப்பி விட்டு வா. முதல்ல அவனுக எல்லாரையும் பிடிக்கணும். அதற்கான வேலையை பார்ப்போம் ஆதி சொல்லிக் கொண்டிருக்க, மெல்லினா அவன் மீதே சாய்ந்து மயங்கினாள்.

நேற்று மதியத்திலிருந்தே சாப்பிடாமல் இருந்திருக்கா. அதான் மயங்கிட்டா. நீ கிளம்பு என்று திரிவேஷிடம் கூறி விட்டு ஆதி மெல்லினாவை வெளியே அழைத்து வந்தான்.

ரசிகா திடீரென அவன் முன் வந்து, இங்க வாங்க சார் என்று மெல்லினாவை ஓரிடத்தில் அமர வைத்து தண்ணீர் தெளித்து எழுப்பினாள்.

உள்ள வர வேண்டியது தான? ஆதி கேட்க, சார் அகரனோட குடும்பத்துல எல்லாருக்கும் என்னை தெரியும். அவன் அண்ணன் என்னை பார்த்தால் உடனே என் அண்ணனிடம் கூறி விடுவார் என்று சொல்லி விட்டு வேகமாக ஓடி மரத்தின் பின் நின்று கொண்டாள்.

அவர்கள் ஆதி, மெல்லினாவிடம் பேசி விட்டு சென்றனர். பிரணிதா மட்டும் புன்னகையுடன் மெல்லினாவிடம் வந்து, ருச்சியை நல்லா பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு சென்றாள்.

அவர்கள் சென்ற பின் வந்த ரசிகாவை பார்த்து சிரித்த மெல்லினா, ரசி உனக்கு மறைஞ்சுக்க கூட தெரியல. அந்த பொண்ணு நீ இங்கிருப்பதை பார்த்துட்டா. நாங்க உன்னை பார்த்துக்கணுமாம் என்று மெல்லினா சொல்ல, வேகமாக ஓடி வந்த பிரணிதா ரசிகா கன்னத்தில் முத்தமிட்டு, நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று ஓடினாள்.

மெல்லினா வாயில் கை வைத்து ரசிகாவை பார்க்க, ஆதி கோபமுடன் முறைத்தான். அவள் அசட்டு புன்னகையுடன் நின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!