Skip to content
Post Views: 6,588
கதவை நெருங்கியவன் திரும்பி, “மேடம்க்கு என்னை கவனிக்கனுங்குற நியாபகம் கூட வருமா என்ன?” என்றுவிட்டு போய்விட, வானிலாவுக்கு தான் தவிப்பாய் போனது. அவள் இங்கே வந்து ஒரு நான்கு மணி நேரங்கள் போயிருக்குமா? அதற்குள்ளாகவே இவனுக்கு இத்தனை சலிப்பா? என்று. அவனது ப்ரையாரிட்டி பிரச்சனை பற்றி தெரிந்தும் அவனை கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கக்கூடாது என்று இப்போது தலையில் அடித்துக்கொண்டாள்.
அவளை விட்டுவிட்டு மூன்றாம்கட்டுக்கு வந்தவனை, “எங்க டா நிலா? நீ என்ன உள்ளிருந்து வர?” என்றான் ஹர்ஷவர்த்தன்.
Advertisement
“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு ரூம்ல விட்டுட்டேன் அண்ணா…” அவன் சொல்லிவிட்டு உணவை தொடர அமர, எல்லோரும் உண்டு முடித்தே இருந்தார்கள். விஷ்ணுவர்த்தன் எழும் முன், “அப்பு… உங்கக்கிட்ட பேசணும்” என்றான்.
Advertisement
“பேக்டரிக்கு போகணும்… மதியம் வந்துடுறேன்” என்றார் அவர்.
Advertisement
“இல்லப்பா… இப்போவே பேசணும்” அவன் சொன்னதும், அவர் யோசனையாக, “வெளித்திண்ணைல இருக்கேன், வா” என்றார்.
Advertisement
“இல்லப்பா… உப்பரிகைல பேசலாம்” கோவர்த்தன் சொன்னதும், விஷ்ணுவர்த்தன் முகம் கலவரமானது. இவர்கள் இருவர் பேச மற்றவர்கள் எல்லாம் எழுந்து சென்றிருந்தனர். அம்ஸா வானிலாவை பார்க்க சென்றிருந்தார்.
ஸ்ரிவர்த்தன் அந்த பக்கமாய் போக, “பிரிண்டர் உன் ரூம்ல தானே இருக்கு?” என்று உண்டபடியே அவனை நிறுத்தினான் கோவர்த்தன். அவன் ‘ஆமாம்’ என்றதும், “ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கணும். சாப்பிட்டு வரேன்” என்றான்.
“என்கிட்டே குடுங்க ப்ரோ… நான் எடுத்து தரேன்” அவன் கைநீட்ட, “நானே எடுத்துக்குறேன்” என்றுவிட்டான் கோவர்த்தன்.
“ரொம்ப சீக்ரெட் போல” ஸ்ரிவர்த்தன் நக்கலாய் கேட்க, நிமிர்ந்து முறைத்தவன், “போடா” என்றான் முறைப்பாய்.
தட்டில் இருந்ததை அள்ளி வாயில் அடைத்த கோவர்த்தன் எழுந்துக்கொண்டான். அவன் கையுடன் சேர்த்து தட்டையும் கழுவி வைத்துவிட்டு மாடிக்கு சென்றபோது அவனுக்கு முன்னரே அங்கே வந்து காத்திருந்தார் விஷ்ணுவர்த்தன். அவர் மனமெங்கும் கோவர்த்தனும், இந்த உப்பரிகை பேச்சுக்களும் தான்.
ஊருக்குள் இருந்த பள்ளியில் படித்த உடன்பிறந்தவர்களை விட்டு வெளியூர் பள்ளியில் சேர வேண்டும் என்றது…
நல்ல மதிப்பெண்கள் எடுத்து, இதய நிபுணனாக தேர்ச்சி பெற அத்தனை சாத்தியக்கூறுகள் இருந்தும் தனக்கு மனோதத்துவம் தான் வேண்டும் என்றது…
சென்னை கல்லூரியில் சேர்த்துவிட முயன்றபோது, வெளிநாடு போய்தான் படிப்பேன் என்றது…
அங்கிருந்து வந்த நேரம், ஒரு பெண்ணை காதலித்து ஏமான்றுப்போனேன் என்றது…
இங்கேயே அவனுக்கு நல்ல மருத்துவமனையில் வேலைக்கு கேட்டு வைத்திருக்க, மீண்டும் வெளிநாட்டிற்கு தான் போவேன் என்றது…
போனவன், பர்வதவர்த்தினியின் திருமணத்தின் போது வந்து, வெளிநாட்டில் என்னோடு இருக்க ஒத்துக்கொள்ளும் பெண் தான் வேண்டும் என்றது…
இன்னும் பல பல பல… அவனின் வாழ்வில் நடந்த அத்தனை முக்கியமான காரியங்களும் இந்த உப்பரிகையில் நின்று தான் அவரிடம் பகிரப்பட்டது. கோவர்த்தன் அன்னையிடம் தான் நெருக்கம் என்றாலும், மிக மிக்கிய முடிவுகளை எல்லாம் தந்தையிடம் தான் முதலில் பேசுவான்.
அதேபோல இப்போது பேச அவன் அழைத்திருக்க, கண்டிப்பாக அவன் திருமண விஷயமாக தான் இருக்கும் என்று கணித்திருந்தார் விஷ்ணுவர்த்தன். அவனும் அவரை ஏமாற்றாமல், “எனக்கு கல்யாணம் செஞ்சு வைங்க அப்பச்சி” என்றான் நேரிடையாக.
“அந்த பொண்ணு வீட்டுல…?” அவர் கேட்க, “வானிலாக்கு அதில விருப்பம் இருக்காது. ஆனா சொல்லாம கல்யாணம் பண்றது முறை இல்லை. நீங்க ஒருமுறை நேர்ல பேசி விஷயத்தை சொல்லிடுங்க. வரதும் வராததும் அவங்க விருப்பம்” என்றவன்,
“அவங்க விருப்பம் இதுல தேவையில்லன்னும் சொல்லிடுங்க” என்றுவிட்டான்.
“ம்ம்… பேசிடலாம்” என்றார்.
“சீக்கிரமே! முடிஞ்சா இந்த வாரமே” அவன் சொல்ல, புருவம் சுருங்கப்பார்த்தவர், “இப்ப என்ன அவசரம்? கல்யாணம் வேலை தொடங்க முன்ன போய் பேசுவோம்” என்றார்.
“இந்த வாரமே கல்யாண வேலையும் ஆரம்பிங்க ப்பு!” அவன் சொன்னதில் திகைத்து அவனை பார்த்தவர், “என்ன விளையாடுறியா?” என்றார்.
“நிஜமா தான் சொல்றேன் ப்பு… இந்த வாரம் வேலையை தொடங்குனா தான் இந்த மாசம் கல்யாணம் வைக்க முடியும். கல்யாணம் முடிஞ்சா உடனே ஸ்பெயின் கிளம்பிடுவோம். ஒரு மாசம் தான் லீவ் எனக்கு” என்று சொல்ல, அவனை கோவமாய் பார்த்த விஷ்ணுவர்த்தன், “கொஞ்சமாது அண்ணனா பொறுப்பா நடந்துக்கோ கோவர்த்தா” என்றார்.
“என்னோட கல்யாணத்துக்கும் அண்ணனா நான் இருக்குறதுக்கும் என்னப்பு சம்பந்தம்?” அவன் பொறுமையாய் கேட்க, பெரிய வர்த்தனுக்கு கோவம் அதிகமானது.
“நாளை மறுநாள் உன் தங்கச்சியோட வளைகாப்பு இருக்கு. நியாபகம் இருக்கா?” அவர் கேட்டதும், “அவசரம் இல்லப்பு… வளைகாப்பு முடிஞ்சதும் வாணிலா வீட்டுல பேசுனா போதும்” மீண்டும் மீண்டும் அவன் சொன்னதில் அவர் முகமே மாறிப்போனது.
“எப்பவும் உன் முடிவு தான்ல? மத்தவங்க சௌகர்யம் எல்லாம் யோசிக்க மாட்ட நீ?” அவர் குற்றம் சுமத்த, “எனக்கு நான் தானே ப்பு யோசிக்கணும் எப்பவும். பத்தோட பதினொன்னா இருக்க எனக்கு பிடிக்காது. அதனால என் முடிவுகளை நானே எடுக்குறேன். என்ன குறைஞ்சுது அதனால உங்களுக்கு?” என்றான் சலனமில்லாமல்.
“நீ பேசும்போது நாங்க உன்னை நல்லா பாத்துக்கலையோன்னு தோணுதுடா” வருத்தமாய் விஷ்ணுவர்த்தன் சொல்ல, “நிச்சயமா இல்லப்பு… உங்களை மாதிரி பெத்தவங்க, இது மாதிரி ஒரு குடும்பம் எல்லாருக்கும் கிடைக்கிறது இல்ல. ஆனா, என்னோட எதிர்ப்பார்ப்பு அதிகம். என்னால என்னை மாத்திக்க முடில. எனக்கேத்த மாதிரி, எனக்கு பிடிச்ச மாறி, நான் வாழ்ந்துட்டு போறேன்” என்றுவிட்டான்.
இதெல்லாம் கேட்டு கேட்டு பழகியது தான் அவருக்கு. அதனால், பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ஒரு பெருமூச்சோடு, “இப்ப எதுக்கு அவசரமா கல்யாணம் பண்ணனுங்குற?” என்று கேட்டவர், “லீவ் தான் பிரச்சனைன்னா நீ திரும்ப கிளம்பு, ஒரு ஆறுமாசத்துல மறுபடியும் வா! கல்யாணம் முடிச்சு நிலாவை கூட்டிட்டு போ, அதுவரைக்கும் புள்ள இங்க இருக்கட்டும்” என்றார்.
“இல்லப்பு, அது சரி வராது” அவன் உறுதியாய் சொல்ல, “டேய், ராகா பிரசவம் இருக்குடா… அவளை பார்க்குறதா இல்ல உன் கல்யாணத்தை பார்க்குறதா? அரக்க பறக்க செய்யுற விஷயமா இது?” என்றார், அவன் புரிந்துக்கொள்ள மாட்டேன் என்கிறானே என்ற கடுப்பில்.
பாக்கெட்டில் இருந்த காகிதத்தை எடுத்து அவரிடம் நீட்டினான். பிரித்து பார்த்தவர் மெல்ல எழுத்துக்கூட்டி வாசித்தார். அந்த கல்யாண சான்றிதழின் நகலை படித்தவர் முகம் திகைப்பில் ஆழ்ந்தது. அவர் படிக்கும் வரை பொறுத்தவன், “எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுது… முறைப்படி தாலி கட்டுறது மட்டும் தான் பாக்கி” என்றிட, அவனை என்ன சொல்வதென்றே தெரியாமல் பார்த்தார் விஷ்ணுவர்த்தன்.
“அம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க…” இதை சொல்லும்போது மட்டும் அவன் பார்வை தரையை தொட்டது.
முடிந்த மட்டும் முறைத்தவர், பேப்பரை மடித்து அவனிடமே நீட்டி, “அதான் நீயே பண்ணிட்டியே! அப்புறம் என்ன?” என்றவர், “இந்த மாசம் வாய்ப்பே இல்ல… ராகாக்கு பிரசவம் பக்கத்துல இருக்கு. கண்டிப்பா உன் அம்மா ஒத்துக்க மாட்டா… ராகா பிரசவம் முடிஞ்சதும் சீக்கிரமே நாள் குறிக்குறேன்” என்றார்.
“ராகா பிரசவம் முடிஞ்சு நீங்க நாள் குறிக்குறப்போ எங்களுக்கு கல்யாணம் வைக்க முடியாது, வளைகாப்பு தான் வைக்க முடியும்!” அவன் சொன்னதை விஷ்ணுவர்த்தன் கிரகிக்கவே நொடிகள் பிடித்தது.
இவன் உப்பரிகை அழைத்து திருமண சேதி தானே பேசுவான் என்ற அவர் நினைப்பை அவன் பொய்யாக்கவில்லை என்று நினைத்திருக்க, அவன் வளைகாப்புக்கே ஏற்ப்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறான் என்றதும் அதிர்ந்தே போனார்.
“என்னடா பேசுற நீ!?” அவர் அதிர்ந்து கேட்க, “அதனால தான் இந்த மாசமே வைங்கன்னு சொல்றேன். புரிஞ்சுக்கோங்க” தைரியமாகவே பேசினான் தந்தையிடம்.
மறுக்கவா முடியும் இதற்குமேல்?! அம்சவர்த்தினியிடம் எதையும் சொல்லாமல் எப்படி சம்மதிக்க வைப்பது என்று இப்போதே அவருக்கு கிலி பிடித்துக்கொண்டது.
“என்னடா அவசரம் உனக்கு?” எப்படி சமாளிப்பது என்று தெரியாத அவஸ்தையில் அவர் கேட்க, “என் வயசுல உங்களுக்கு நாலு புள்ள இருந்துச்சுப்பு… நான் இன்னும் ஒன்னு கூட பெத்துக்கல” என்று அவர் வாயை மூடிவிட்டான்.
என்ன செய்வது என தெரியாது மலங்க மலங்க விழித்துக்கொண்டு கீழே சென்றார் அவர். மிக தைரியமாய், நிதானமாய், உறுதியாய் தந்தையிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, திருப்தியாய் வளைகாப்பு ஏற்ப்பாடுகளை அவன் கவனிக்க சென்றிருக்க, விஷயம் அம்சவர்த்தினியை எட்டும்போது அவன் நிலைமை என்ன ஆகும் என்று யோசிக்கக்கூட இல்லை அவன்.
தந்தை சொல்லமாட்டார், அவர் பார்த்துக்கொள்வார் என்று அதீத நம்பிக்கை. அவனை பெற்றவர் சொல்ல மாட்டார் தான், அதேபோல அவன் பெறப்போவதும் இருக்குமா என்ன!?
காட்டிக்கொடுக்க காலம் பார்த்து காத்திருந்தது கைக்கால் முளைக்காத குட்டி வாணிலா.
error: Content is protected !!