Skip to content
Post Views: 3,024
அத்தியாயம் 23
ஏய், என்னடி பண்ற? நேரமாகுது சவிதா சத்தமிட, ரசிகாவும் ஆதியும் மேலே வந்தனர். அகரனுடைய அனைத்துப் பொருட்களையும் பேக் செய்து கொண்டிருந்தனர் அகரனும் மெல்லினாவும்.
.
Advertisement
மெல்லி, என்ன பண்றீங்க? ரசிகா கேட்க, ரசி அகரனது நினைவுகளை கலெக்ட் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு உதவினாள். நால்வரும் மூன்று பைகளையும் எடுத்து கீழே வந்தனர்.
சந்துரூ பைல்லை எடுத்து தமிழரசன், பிரபாகரன், சவிதாவுடன் பேசிக் கொண்டு வெளியே வந்தனர்.
Advertisement
Advertisement
பிரணிதா லிது, நிதுவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்களை பார்த்து அகரனின் மாமா “ரொம்ப தேங்க்ஸ்”. அவ அகரனை பற்றி புலம்பிக்கிட்டே இருப்பா. இப்ப நிம்மதியா இருப்பா என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அவன் ஹாலுக்கு வரவும் “நான் போறேன்” என்று அகரன் சொல்ல, அவன் அண்ணன் கண்ணீருடன் அவனை பார்த்தார். அவன் அண்ணி முறைத்துக் கொண்டிருந்தார்.
சித்தப்பா, என்னை மன்னிச்சிருங்க. நானும் இவர்களுடன் சேர்ந்து உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன் என்று அகரனின் அண்ணன் மகன் நிவேதன் அகரனை அணைத்தான். அவனை மெல்லினா முறைத்துக் கொண்டே விலக்கி விட்டாள்.
Advertisement
முறைக்காதீங்க. அதான் இனி பார்க்க முடியாதே! அதான் என்று மீண்டும் அகரனை அணைத்தான்.
டேய் நகருடா, உன்னோட அம்மா குணம் உன்னிடமும் இருக்கும். என்னோட அகரனிடம் ஒட்டிக்காம என்று மெல்லினா சொல்ல, ம்ம்..சித்தப்பா நல்லா தான் தேர்ந்தெடுத்திருக்கீங்க என்று அவன் அம்மாவை பார்த்தான்.
டேய், இங்க வாடா என்று அகரன் அண்ணி அவர் மகனை அழைக்க, அதான் அப்பாவையும் சித்தப்பாவையும் மொத்தமா பிரிச்சிட்டீங்கல்ல. எஞ்சாய்ம்மா..தேனு நீ வா. நம்ம அறைக்கு போவோம். சித்தி சொன்ன மாதிரி அம்மா பழக்கம் உனக்கும் ஒட்டிக்காம என்று அழைத்தான்.
என்னடா சொன்ன? அவன் அம்மா சத்தம் போட, அம்மா இந்த மிரட்டலையெல்லாம் மத்தவங்ககிட்டயும் உன் புருசங்கிட்டயும் வச்சுக்கோ. எங்ககிட்ட வேண்டாம்.
தேனு, இனி நீ அண்ணா அறையை எடுத்துக்கோ. நான் சித்தப்பா அறைக்கு போறேன். அம்மாகிட்ட கவனமா இரு. இல்ல நாம நடுத்தெருவுல தான் நிக்கணும் என்று அவன் சொல்ல, அகரா போகலாமா? மெல்லினா கேட்டாள்.
“பை சித்தி” என்றாள் தேன் மொழி.
சித்தியா? என்று மெல்லினா கேட்க, அகரா கிளம்பலாமா? என்று ஆதி உள்ளே வந்தான்.
மெல்லினா கையை பிடித்துக் கொண்டு அகரன் தன் குடும்பத்தை பார்த்துக் கொண்டே வெளியேறினான்.
அகரா, என்னை யாருமே சித்தின்னு கூப்பிட்டதே இல்லை என்று வீட்டுக்குள் சென்று தேன்மொழியிடம் சாக்லெட்டை கொடுத்து, திரும்ப சொல்லு? மெல்லினா புன்னகையுடன் கேட்டாள்.
அகரன் உள்ளே வந்து, மெல்லி என்ன செய்ற? வா போகலாம் என்று அவளை இழுக்க, சித்தி சித்தப்பாவ நல்லா பார்த்துக்கோங்க என்று நிவேதன் கையசைத்தான். வெளியே வந்த பின் எல்லாரும் மெல்லினாவை முறைக்க, அகரன் திட்டினான்.
குதித்துக் கொண்டே அந்த பையன் என்னை சித்தின்னு கூப்பிட்டான் என்று அகரனை அணைத்தாள். அகரன் புன்னகையுடன் மெல்லினாவை அணைக்க, மாமா இங்க எல்லாரும் இருக்கோம் என்று பிரணிதா சத்தமிட்டாள்.
நாம வந்த வேலையையே பார்க்கலையே? மணி ஏழாகுது. அகரா இங்க கோவில் இருக்கா? என்று சவிதா கேட்க, இருக்கு ஆன்ட்டி என்று ரசிகா குரல் கொடுத்தாள்.
அங்க வச்சி மோதிரம் மாத்திக்கலாமா? பிரபாகரன் கேட்க, அகரன் மெல்லினாவை பார்த்தான்.
பொண்ணுக்கு நாங்க வாங்கிட்டோம் என்று மீனாட்சி சொல்ல, அகரன் அவரை பார்த்து கண்ணீருடன் அக்காவை அணைத்தான்.
அகரா, ஒன் கெல்ப் டா. நீ வந்துருக்கன்னு சொன்னாங்க. அதான் வந்துட்டேன் என்று அகரனது பக்கத்து வீட்டு தோழன் கணேஷ் வந்தான்.
உனக்கு பிரச்சனை முடிந்ததுல்ல? ஃபிரீ பேடு மச்சி என்றான் அவன்.
என்ன? மெல்லினா கேட்க, வாவ்..இந்த பொண்ணை தான் கட்டிக்க போறீயா? ரொம்ப அழகா இருக்காங்கடா..
சரி, என்ன கெல்ப்? அகரன் கேட்க, மச்சி, என்னோட லவ்வர் கோவிச்சிட்டு போயிட்டாடா? கெல்ப் பண்ணுடா? என்று அவன் கேட்க, அகரா..என்று குடும்பமே சத்தமிட்டனர்.
சாரிடா மச்சி, இனி நானும் ரொம்ப பிஸியா இருப்பேன். என்னை விட்டுருடா என்று அவன் கை கூப்ப, அவ்வளவு தானா மச்சி நம் நட்பு? அவன் கேட்க, அகரன் அவனை அணைத்து புன்னகைத்த படி அவன் காதில் ஏதோ ஓதினான்.
“தேங்க்ஸ் மச்சி” என்று அவன் பைக்கில் விரைந்தான்.
அகரா, லவ்வுக்கு உதவுறேன் இனி யார் பின்னாடியாவது போன அவ்வளவு தான் என்றாள் ரசிகா.
ருச்சி, சும்மா பேசினேன். அவ்வளவு தான் என்று சமாளித்துக் கொண்டு காரில் ஏறினான். அனைவரும் அவனுடன் காரில் ஏறி, முருகன் சன்னதி முன் வைத்து அகரன்- மெல்லினா நிச்சயம் செய்து மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
ஆதியும் ரசிகாவை விரலில் விலைமதிப்பற்ற மோதிரத்தை அணிவித்தான்.
அகரா, இங்க ஃபீச் நல்லா இருக்குமாமே? போகலாமா? மெல்லினா கேட்க, இந்த நேரத்திலா? ஆதி கேட்க, ஒன்பது தான் ஆகுது. போயிட்டு வரலாம்.
நாங்க போயிட்டு வரவா அங்கிள்? அகரன் பிரபாகரனிடம் கேட்க, ம்ம்..சுயர் மாப்பிள்ளை. நாங்களும் வருவோம் என்று ஆதி ரசிகா கையை பிடித்தான்.
நால்வரும் போயிட்டு வாங்க. நாங்க பசங்களை பார்த்துக்கிறோம் என்று தமிழரசன் சொல்ல, அப்பா, நாங்க என்று லிது நிது கேட்க, இப்ப ரொம்ப குளுரும். நாம காலையில போகலாம். நீங்க பாட்டியோட தூங்குறீங்களா? சவிதா கேட்க, குழந்தைகள் ரசிகாவை பார்த்தனர்.
ஆன்ட்டி, நானும் கூட இருக்கவா? ரசிகா கேட்க, ஆதி அவள் கையை இழுத்து கிளம்பலாம் என்று லிது, நிது குட்டி இன்று மட்டும் பாட்டியோட தூங்குவீங்களாம். ரசியும் ஆதியும் உங்களுக்கு பலூன்ஸ் வாங்கிட்டு வாரோம் என்றான் ஆதிரேயன்.
சரிப்பா என்று லிது சொல்ல, எல்லாரும் நிதுவை பார்த்தனர். அவளும் சவிதா அருகே சென்றாள். ஹோட்டலில் அவர்களை விட்டு நால்வரும் கடற்கரைக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.
ஒரு வாரம் முடிந்தது. அவ்வப்போது மெல்லினா, ஆதி, ரசிகா அகரன் வீட்டிற்கு சென்று வந்தனர். அப்படி ஒரு நாள் ஆதியும் மெல்லினாவும் விடுமுறை நாளில் மாலை நேரம் அகரன் வீட்டிற்கு வந்தனர்.
அகரன் அவர்களுக்கு தேனீர் எடுத்து அவர்களுடன் வந்து தேனீர் பருகினர். தமிழரசன் ஹாஸ்பிட்டலில் இருந்தார். சற்று நேரம் அரட்டையில் நேரம் கழித்தது.
இரவு உணவை தயார் செய்ய அகரன் எழுந்தான். மெல்லி வா ஓய்வெடுக்கலாம் ஆதி அழைக்க, அவள் அண்ணாவிடம் அகரனை கண்ணை காட்டினாள்.
ஓ.கே, நான் மாமா அறையில் இருக்கேன் என்று ரசிகாவை அழைத்து பேசினான்.
சப்பாத்தி செய்ய அகரன் மாவை எடுத்துக் கொண்டிருந்தான்.
என்ன அகரா செய்யப் போற?
சப்பாத்தி. சாப்பிடுவேல்ல?
ம்ம்..கண்டிப்பாக என சமையற்கட்டு மேலே அமர்ந்தாள். அகரன் அவளை பார்க்க, கொடு அகரா. நான் மாவு பிசைகிறேன். ரசி எனக்கு சொல்லி கொடுத்தா? நான் செய்யவா? மெல்லினா கேட்க, அகரன் பதில் சொல்லாமல் அவளை பார்த்தான்.
என்னாச்சுடா? என்று மெல்லினா இறங்கினாள். வெளியே எட்டி பார்த்த அகரன் மெல்லினாவை நெருங்கினான்.
அண்ணா, மாமா அறைக்கு போயிருக்கான்.
நல்லதா போச்சு என்ற அகரன் மெல்லினாவை முத்தமிட்டான்.
டேய் மாமா வரப் போறாரு என்று மெல்லினா சொல்ல, அவன் விரல்களை மெல்லினா நெற்றி, கண், மூக்கு என அவளை அளக்க, அவள் திரும்பிக் கொண்டாள். அவளது முதுகில் முத்தமிட்ட அகரன், கிச்சன் ரொமான்ஸ் உனக்கு தெரியுமா மெல்லி? அகரன் கேட்க, ம்ம்..என்று அவள் சிணுங்கினாள்.
நாம வேலையை ஆரம்பிக்கலாமா? அகரன் கேட்க, மெல்லினா விலகினாள்.
மெல்லி, நீ பக்கத்துல இருந்தா வேறெங்கும் கவனிக்க முடியலை என்றான்.
அப்ப, நான் அண்ணாவிடம் செல்லவா? மெல்லினா மெதுவாக கேட்டாள்.
நோ..நோ..நான் அப்படி சொல்லவில்லை. நாம சேர்ந்து வேலை பார்ப்போம் என்று மாவை அவளது கையில் கொடுத்தான். அவள் தண்ணீர் சேர்த்து பிசைய அவன் கைகளும் மாவிலிருந்த மெல்லினா கைகளுடனும் அவனது மீசை மெல்லினா முதுகிலும் உரசியது. இருவரும் பிணைந்து கொண்டிருக்க, அகரா..என்று மகிழ்வுடன் தமிழரசன் சத்தமிட்டுக் கொண்டே வந்தார். இருவரும் விலக, புரிந்து கொண்ட தமிழரசன் கிச்சன் வேலைய முடிச்சிட்டு வாங்க என்றார். இருவரும் கையை கழுவி விட்டு வெளியே வந்தனர்.
அப்பா, மச்சானும் வந்துருக்காங்க என்று அகரன் சொல்ல, மாமா அண்ணா தூங்கி இருப்பான்.
அகரன் ஆதியை வீட்டில் மச்சான் என்றும் வேலையில் பாஸாகவும் அழைத்தான்.
அகரா, என்னோட வொர்க்கரோட பொண்ணுக்கு மேரேஜ் வச்சிருக்காங்க. நாம போகணும். ரசியிடமும் சொல்லணும். எப்ப அப்பா? அகரன் கேட்க, நாளை மறுநாள் என்றார் அவர்.
சரி, போகலாம்ப்பா என்றான் அகரன். மெல்லினா முகம் சுருக்கினாள்.
அகரன் அவளை பார்க்க, அம்மாடி உன்னை கூட்டிட்டு போனேன்னா பிரபா என்னை காலி பண்ணிடுவான். அவனுக்கும் பிரபாவுக்கும் காலேஜ்ல்ல இருந்தே ஆகாது. அவனோட சண்டை போட்டுட்டு என்னோட காலேஜூக்கு வந்திருவான் உன்னோட அப்பா. இருவரையும் சமாதானப்படுத்தவே முடியாது. அதனால என்னோட பசங்களையே கூட்டிட்டு போறேன்.
மூணு வருசம். அப்புறம் நாம சேர்ந்து போகலாம் என்றார் தமிழரசன்.
சரி, நான் அண்ணாவை பார்த்துட்டு வாரேன் என்று ஆதியை பார்க்க அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.
சமையலறைக்கு வந்த மெல்லினா சமைக்க அவனிடம் கேட்டும் சமைக்க பழக ஆரம்பித்தாள். ரசி ரெசிப்பி தான் என்னுடையதும் என்றான் அகரன்.
நான் கேட்டேனா? மெல்லினா முறைக்க, அவளை சமாதானப்படுத்தி வேலையை முடித்து ஆதிரேயனுடன் சாப்பிட்டு விட்டு மெல்லினா அவர்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
அதே இரவு நேரம் ரசிகா அகரன்- மெல்லினா நிச்சயத்திற்கு மறுநாள் ரசிகா வீட்டிற்கு அவர்கள் சென்றதை எண்ணினாள்.
ரசிகாவை பார்த்ததும் அவள் அண்ணிகள் பார்வை பற்றி எறிந்தது. அண்ணன்கள் அமைதியாக இருந்தனர்.
அகரன் அவர்களிடம், உங்களிடம் ஒரே ஒரு விசயம் தெரிஞ்சுக்க தான் வந்தோம் என்று உங்க பிள்ளைகளை கஷ்டப்படுத்தாமல் நீங்க பார்த்துக்கிறீங்களா? என்று அவன் கேட்க, “அதான் பிள்ளைகளே வேண்டாம்ன்னு தான் அதுகள வீட்டை விட்டு அனுப்பிட்டாளே பாவி!” பேச்சி பாட்டி சத்தமிட்டார்.
பாட்டி, சரியா கோர்ட்டு மூலமா போனா தான பசங்க ரசிக்கு உரியவங்கன்னும் அவங்க அவளுடன் இருக்கலாம்ன்னு ஸ்டே வாங்க முடியும்? ஆதிரேயன் சொன்னான்.
எங்க பிள்ளைகளை நாங்க வெளிய போன்னு சொன்னால் அவங்க உங்களுடனெல்லாம் வளர முடியாது. எங்களுக்கும் சட்டம் தெரியும் என்றாள் மூத்த அண்ணி.
சந்துரூ முன் வந்து, பசங்க முடிவை தான் கேட்பாங்க. நீங்க பசங்களை இரத்தம் வரும் வரை அடிச்சிருக்கீங்க? அதை வைத்து உங்க பசங்கள உங்க பக்கமே வர விடாமல் செய்யலாம். இப்ப இல்லை எப்பொழுதுமே என்றான் சந்துரு.
அண்ணி, எனக்கு தெரியும். பசங்க படிப்புக்கு பணம் கட்டணும்ன்னு தான அவங்கள போக சொன்னீங்க? ரசிகா கேட்க, யாருடி சொன்னா? அதெல்லாம் இல்லை. அதுக தொந்தரவு தாங்க முடியல. சும்மா சும்மா உன்னையே கேட்டுட்டு இருக்குதுக. இதுல விபு அவன் அப்பாவையே அடிச்சிட்டான். எங்களையும் பிள்ளைகளையும் பிரிச்சிட்டு இப்ப நல்லவ மாதிரி பேசுறியாடி? ரசிகாவின் சின்ன அண்ணி பேச, அண்ணன்கள் ரசிகாவை முறைத்தனர்.
ரசிகா உடைந்து போனாள். அண்ணா நீங்களுமா? நான் உங்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க நினைக்கிறேன்னு சொல்றீங்களா? என்று அண்ணன்களிடம் கண்ணீருடன் கேட்டாள்.
ஆமா, உன்னால தான் என் பையன் என்னை அடிச்சிட்டான் என்றான் அவளது மூத்த அண்ணன்.
எலேய், பிள்ளைய எதுக்குடா பழி சொல்றீங்க? விபுவோட தங்கச்சிய அடிச்சிருக்கா உன்னோட பொண்டாட்டி. அந்த குட்டிப் பொண்ணு அழுததை கூட கண்டுகொள்ளாமல் தான இருந்தீங்க? ரசியையும் எவனோ படுபாவியிடம் வித்துருக்கீங்க? அந்த பையன் என்ன நினைப்பான்? சொல்லுடி? என்று ஆவேசமானார் பாட்டி.
யார் என்ன வேணும்னாலும் செய்யுங்க. நாங்க இவ மேல கம்பிளைண்ட் பண்ணப் போறோம் என்று மூத்த அண்ணி சொல்ல, ரசிகா மனம் கனத்து போனது.
ஓ.கே, இது தான் சரியான முடிவு. கொஞ்சம் நேரம் இருங்க என்ற அகரன் போலீசை வர வைத்து, இவங்க மேல கம்பிளைண்ட் இருக்குல்ல சார் என்று கேட்டான்.
ஆமா சார், அவங்க பசங்களே கம்பிளைண்ட் கொடுத்துட்டு அவன் அத்தையிடம் போறதாக சொன்னாங்க என்று சொல்லவும் ரசிகா குடும்பம் மொத்தமும் ஆடிப் போனது.
பக்கத்து வீட்டினர் அனைவரையும் கூட்டிய அகரன், ரசிகாவை பற்றி கேட்க, அவளுக்கு ஆதரவாக அவள் பட்ட கஷ்டத்தை கூறினார்.
அட ஆமா, ஆதி சார் தான நீங்க? நியூஸ்ல்ல வந்த பொண்ணு இவங்க தான என ரசிகாவை பார்த்து, மேம் நீங்க ஒரு கம்பிளைண்ட் கொடுங்க. மொத்த குடும்பத்தையும் உள்ள தூக்கிப் போட்டுருவோம் என்றார் போலீஸ் ஒருவர்.
என்னது? சின்ன அண்ணி அதிர, ஆமா எல்லாரும் சேர்ந்து பெற்றோர் இல்லாத பொண்ணை துன்புறுத்தி இருக்கீங்க? அவர் கேட்க, நாங்க இல்லை. அவளே எங்க பிள்ளைகளை வச்சுக்கட்டும் என்றாள் மூத்த அண்ணி.
ருச்சி, நான் சொன்னேன்ல்ல. பெத்த பிள்ளைகளாகவே விபு, ஆரவ், யோகியை இவங்க யாருமே நினைக்கலை. இப்ப பாரு உன்னை விற்றது போல்.. அவங்க பசங்களை அநாதை ஆக்க முடிவு செஞ்சிட்டாங்க. இவங்களெல்லாம் மனுசங்களே இல்லை என்று அகரன் சத்தமிட, ரசிகா அழுதாள். ஆதி அவள் கையை அழுத்தி பிடித்தான். அவன் தோளில் சாய்ந்து அழுதாள் ரசிகா.
இல்லை, எனக்கு என்னோட பிள்ளைகள் வேண்டும் என்று ரசிகாவின் சின்ன அண்ணி அழுதார்.
நடிக்காதீங்க..அகரன் சத்தமிட, நான் என் பிள்ளைகளை எந்த நிலையிலும் ரசி பார்த்துப்பா என்று தான் விட்டேன். எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க..என்று ரசிகா அருகே வந்து அவளை அணைத்து அழுதாள்.
அண்ணி, நீங்க நிஜமாகவே ஆரவ், யோகியை நல்லா பார்த்துப்பீங்கல்ல? அவங்க விளையாட்டு பொம்மை இல்லை. பணம் இல்லைன்னு கஷ்டப்படுத்த மாட்டீங்கல்ல? ரசிகா அழுது கொண்டே கேட்க, இல்லை..என்று அவள் கணவனிடம் சென்று, நம்ம பிள்ளைகளை நாமே பார்த்துக்கலாம். ப்ளீஸ்ங்க. எனக்கு என்னோட பசங்க வேணும் என்று அழுதார்.
ரசிகாவின் சின்ன அண்ணனும் கண்ணீருடன், சாரி ரசிம்மா என்று சொல்ல, மூத்த அண்ணி அவளிடம் வந்து, என்னடி பேசுற?
ஆமா, நான் இங்கே இருக்க மாட்டேன்.
ரசிகாவிடம் உனக்கு நம்பிக்கை இல்லைன்னா. நாங்க அங்கேயே வாரோம். சின்னதா வீடும் இவருக்கு வேலையும் கிடைத்தால் போதும். என் பொண்ணுக்கு வந்த இரத்தத்தை பார்த்த அன்றே என் மனம் கனத்து இருந்தது.
யோகி, நல்லா இருக்கால்ல? அவள் ரொம்ப அழுதாளா? என்று அவர் அழுது கொண்டே கேட்டார்.
ரசிகா, பிரபாகரனையும், தமிழரசனையும் பார்த்தார்.
சரி, வாங்க. ஆனால் யாரிடமும் பணம் கேட்கக்கூடாது. பசங்களை நல்லா பார்த்துக்கணும். அங்க நாங்க கண்ணசைத்தாலே தண்டனை பெரியதாக இருக்கும் என்றார் பிரபாகரன்.
அப்பா, ரிஸ்க் எடுக்காதீங்க? ஆதிரேயன் சொல்ல, இல்லப்பா..என்ன இருந்தாலும் ஆரவ்வும் யோகியும் அவங்க பசங்க. அவங்க வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் அவங்க பிள்ளை அவங்களுக்கு பசங்க மேல சின்னதாக கீறல் பட்டாலும் மறுநிமிடமே போலீஸை அழைத்து விடுவோம் என்றார் பிரபாகரன்.
என்னடா சொல்ற தமிழ்?
சரி தான்டா. நீங்கப்பா? என்று மூத்த அண்ணி, அண்ணனை தமிழரசன் பார்க்க, அவள் திரும்பிக் கொண்டாள்.
ஓ.கே விபு அப்ப எங்க குடும்பத்து பையன். கோர்ட்டுல இருந்து அனுப்புவாங்க சைன் பண்ணி அனுப்பிடுங்க. உங்களுக்கும் உங்க பையன் விபுவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று முடித்து விட்டு கிளம்ப, ரசிகா அவளது பெரிய அண்ணனை பார்த்துக் கொண்டே சென்றாள். சின்ன அண்ணனும் அண்ணியும் பாட்டியிடம் சொல்லி விட்டு ரசிகாவுடன் கிளம்பி இருப்பர்.
ஊட்டிக்கு வரவும் அவர்களுக்கு உதகையிலே வேலையும் வீடும் பிரபாகரன் சொல்லி ஆதி அமைத்து கொடுத்தான். ஆரவ்வும் யோகியும் முதலில் அவங்க பெற்றோருடன் செல்ல பயந்தாலும் பின் ஒன்றி விட்டார்கள். அவர்கள் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொண்டனர்.
விபு மட்டும் ரசிகா பொறுப்பில் இருக்கிறான். ஆனால் அவன் ஆரவ், யோகி ஆதி வீட்டிற்கு வரும் போதும் பள்ளியில் வைத்து மட்டும் பார்த்து பேசிக் கொள்வான். அவனது சித்தி, சித்தப்பா வீட்டிற்கு செல்வதில்லை. அவன் வருத்தமாக இருந்தான். ஆதியும் விபுவை கவனித்து வந்தான்.
அவன் கலந்து கொள்ளப் போகும் மாரத்தானில் வெற்றியடைய பிராக்டிஸில் இருந்து வருகிறான். பிரபாகரன் விபுவை கோச் ஒருவரிடம் சேர்த்து விட்டார். அவனுக்கு அம்மா, அப்பா நினைவுகளும் வந்து சென்றது. எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டே ரசிகா தூங்கிப் போனாள்.
தமிழரசன் கூறிய திருமண விழாவிற்கு ரசிகா, அகரனை அழைத்து சென்றார். சிலர் நன்றாக பேசினாலும் ரசிகா ஆதியுடன் தவறான உறவில் இருப்பது போல் பேசினர்.
விடும்மா, இவனுகளுக்கு குறை சொல்றதே வேலையா போச்சு என்று தமிழரசன் சொல்ல, ருச்சி இதெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தா வாழவே விட மாட்டானுக. வா..நாம போகலாம் என்று ஓரிடத்தில் அமர்ந்தான் அகரன்.
ராஜபாண்டியும் அவன் குடும்பமும் வந்திருந்தனர். சக்தி ரசிகாவை பார்த்தவுடன் அவள் அருகே வந்து அமர்ந்து கடலை போட ஆரம்பித்தான். அவள் அவனை முறைத்து பார்த்தாள். ஆதி, தமிழரசனுக்காகவும் குடும்பத்தில் உள்ளவர்களுக்காகவும் சிறியதாக மேக் அப் போட்டு பழகினாள். நன்றாகவே அவளுக்கு பொருத்தமாக இருந்தது.
ரசிகா செல்லும் இடமெல்லாம் சக்தியும் பின்னே வர அகரனும் தமிழரசனும் கடுப்பாக அவனை மறித்து மறித்து ரசிகாவிற்கு உதவினர். ஆனாலும் அவன் அடங்கவில்லை. அகரன் ஆதியிடம் விசயத்தை சொல்ல ஆதி அங்கே வந்து வெளியே காரில் அமர்ந்திருந்தான்.
சாப்பிட்டு வந்த ரசிகாவிடம் அகரன், ஆதி வெளியே காத்திருப்பதாக சொல்ல, அவளும் வெளியே புன்னகையுடன் ஓடி வந்தாள்.
“பார்த்து போம்மா” என்று தமிழரசன் சொல்ல, சக்தியும் பின்னே ஓடி வந்தான்.
ஆதியை பார்த்து சக்தி முறைத்துக் கொண்டு நின்றான். ரசிகா அவனிடம் ஓடி வருகிறேன் என்று கேட் கம்பியை பார்க்காமல் ஓடினாள். கம்பி அவள் காலை தட்டி விட்டது..இல்லை..இல்லை..இவள் தான் தட்டி கீழே விழ, ஆதி ரசிகாவை பிடிக்க, அதை சக்தி பார்த்து மனக்குமுறலும் அவர்களை பார்த்தான்.
“மெதுவா வா ரசி” என்று ஆதி அவள் கையை பிடிக்க, ரசிகா ஆதியை கண் கொட்டாமல் பார்த்தாள்.
ரசி, நம்ம ரெமான்ஸை வீட்ல வச்சுக்கலாம். இங்க ஒருவன் வயித்தெறிச்சலோடு நிக்குறான் ஆதி சொல்ல, ரசிகா சக்தியை பார்த்தான். விட்டால் கண்ணாலே எறித்து விடுவது போல அவர்களை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான் சக்தி.
டியர் வா, இன்னும் விழா முழுதாக முடியவில்லை சக்தி அழைக்க, எனக்கு பதிலா நீயே பாரு. நான் ஆதியோட கிளம்புகிறேன் என்று ரசிகா ஆதி கையை கோர்த்துக் கொண்டாள்.
பை டியர், நாங்க கிளம்புகிறோம் என்று ஆதி சக்திக்கு பழிப்பு காட்ட, போடா உன்னை நான் பார்த்துக்கிறேன் என்று சக்தி சத்தமிட்டான்.
அப்பா, “இவன் மச்சானை பார்க்கப் போறானாம்” அகரன் கேலியுடன் சக்தியை நோக்க, காலை தரையில் அடித்து விட்டு சக்தி உள்ளே சென்றான்.
அப்பா, பாருங்களேன். அப்படியே சின்னப்பையன் போல நடந்துக்கிறான் என்று அகரன் சக்தியை கிண்டல் செய்து கொண்டே அவன் பின் சென்றான்.
சற்று தொலைவில் வந்த ஆதி காரை ஓரமாக நிறுத்தி விட்டு, ரொம்ப நாள் கழித்து பார்ப்பது போல் ஓடி வர்ற? என்று ரசிகாவிடம் கேட்டான்.
ஆதி, நேத்து நைட்ல இருந்து நாம பார்க்கலை. பாப்பாக்கள் சமத்தா தூக்கிட்டாங்களா? ரசிகா கேட்க, ம்ம்..என்னோட தான் தூங்கினாங்க. நீங்க தான் இல்லை என்று வருத்தமாக கூறுவது போல் சிரித்தான். ரசிகா முகத்தை உம்மென தூக்கி வைத்துக் கொண்டாள்.
ரசிக்கு கோபமா? ஆதி மீதா?
ஆமா, நான் இல்லைன்னு சிரிச்சுக்கிட்டே சொல்றீங்க?
அப்புறம் உன்னை போல் அழணுமா?
ஒன்றும் வேண்டாம் என்று நகர்ந்து அமர்ந்தாள்.
காரை விட்டு வெளியே வந்து ஆதி கதவை திறந்தான். அழகான காட்சி. பனியை விலக்கிய கதிரவனின் வெளிச்சமான தோற்றம். வெளிச்சமும் பனியும் கலந்து ஓர் அழகாய் இருந்தது.
வாவ்..என்று ரசிகா அவ்விடம் செல்ல, ரசி..ரொம்ப முன்னாடி போகாத. பள்ளம் இருக்கு ஆதி சொல்ல, அவளுக்கு அவன் மீதான கோபம் நினைவுக்கு வந்து அவன் பார்க்காதவாறு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
என்னோட ப்ளாக் மூனுக்கு இவ்வளவு கோபமா? என்று அவள் கழுத்தை வருடினான்.
போங்க ஆதி. நான் இல்லாமல் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க என ஆதியிடம் அதீத உரிமையுடன் பேசினாள். இருவரும் நன்றாக நெருக்கமாகி விட்டார்.
ஆதி கண்ணாடியை கழற்றி, ரசி இதை பிடித்து கொள். என்னோட கண்களை பார் என்றான். அவள் முறைத்து பார்த்தாள்.
நான் நீ இல்லாமல் தூங்க வில்லை. இங்க பாரு டாட் சர்க்கில்ஸ் வந்துருச்சி ஆதி சொல்ல, அவனருகே வந்து அவன் கண்களை உற்று பார்த்தாள். அவளை இறுக்கி பிடித்த ஆதி, ஓய்..நான் மட்டும் நீ இல்லாமல் இருந்துடுவேனா? நம்ம பசங்களும் இருக்க மாட்டாங்க. நீ தான் அகரன் வீட்டுக்கு போறேன்னு சொன்ன?
இனி நீ எங்கேயும் தங்கக்கூடாது என்று ஆதி ரசிகாவை அணைத்தான். இருவரும் அணைத்துக் கொண்டு சற்று நேரத்தில் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
ஆதியும் ரசிகாவும் மனதளவில் தங்களை கணவன் மனைவியாக எண்ணி வாழ ஆரம்பித்தனர். ஒரு வாரம் கழிந்தது.
ரசி, இன்னும் எவ்வளவு நேரமாகும். சீக்கிரம் வா. சாப்பிட்டு கோவிலுக்கு கிளம்பணும். எல்லாரும் தயாரா இருக்காங்க. ஆதிரேயன் கீழிருந்து சத்தம் கொடுத்தான்.
“இதோ வந்துட்டேன் ஆதி” என்று புன்னகையுடன் ரசிகா படியில் இறங்க, எல்லாரும் இருவரையும் புன்னகையுடன் பார்த்தனர்.
திடீரென மாடிப்படியிலே வியர்த்து விறுவிறுக்க ரசிகா பயந்தவாறு நின்றாள்.
ரசிம்மா, என்னாச்சு? சவிதா எழுந்தார். அவள் பார்வை சென்ற திசையில் அனைவரும் பார்த்தனர்.
பிரபாகரன் ஆவேசமாக, எதுக்குடா வந்த? துகிலனிடம் சத்தமிட்டார்.
ரசிகா அதிர்ந்து, ஆதியையும் மற்றவர்களையும் பார்த்தாள். துகிலனை பார்த்த விபுதன் கோபமாக எழுந்தான். பிரபாகரன் அவனிடம் பேசுவதை பார்த்து நின்று விட்டான்.
மெல்லினாவும் கோபமாக, எதுக்குடா இப்ப மட்டும் வந்துருக்க? என்று அவள் கேட்க, எதுக்கு வந்தேனா? நீ என்னோட தங்கச்சி. அவனை அண்ணன்னு கூப்பிட்டுட்டு இருக்க? துகிலன் சத்தமிட்டான்.
என்ன கேவலமான வேலைய பார்த்துட்ட? உன்னை எப்படி என்னோட அண்ணன்னு சொல்வேன்? மெல்லினா கேட்க, அண்ணனா? என்று ரசிகாவும் விபுதனும் அதிர்ந்தனர்.
இங்க பாருங்க. உங்க யாரையும் நான் பார்க்க வரலை. எனக்கு என்னோட பொண்டாட்டி வேணும்?
பைத்தியமாடா நீ? அவ ஆதியோட பொண்டாட்டி. இல்லாத அவளை எப்படி கொண்டு வர்றது? சவிதா கேட்க, அம்மா உனக்கு எல்லாமே சரியாகிடுச்சோ?
அவர் அவனை சினமுடன் பார்த்தார்.
இவனிடம் என்ன பேச்சு? வெளிய போடா என்று பிரபாகரன் துகிலனை வெளியே தள்ள, அவன் கோபமாக அவரை தள்ளி விட்டான். அவர் கீழே விழுந்தார்.
எல்லாரும் அவரை தூக்கி விட்டனர். விபுதன் கோபமாக, இவன் தான் நீங்க சொன்ன இரண்டாவது பையனா? என சீற்றமுடன் கேட்டான்.
அனைவர் கவனமும் விபுதன் பக்கம் திரும்பியது. ஆமா, நான் தான் மச்சான் என்ற துகிலன் ரசிகாவை பார்த்தான்.
ஆதி தம்பி இவனா? என்று கண்கள் இருண்டது ரசிகாவிற்கு.
“நான் சொன்ன என்னோட பொண்டாட்டி இவள் தான்” என்று ரசிகாவை பார்த்தான் துகிலன். இடி விழுந்தாற் போல் ஆதிரேயன் உணர்ந்தான்.
என்னடா சொன்ன? மெல்லினா துகிலன் சட்டையை பிடித்தாள்.
விபுதன் கோபமாக அவனிடம், இனி என்னோட அத்தை பக்கம் வராதன்னு சொன்னேன்ல்ல என்று துகிலனை அடிக்க கையை ஓங்கினான். ஆனால் விபுதனால் அடிக்க முடியவில்லை. ஆதியை அனைவரும் பார்க்க, அவன் இடிந்து போய் அமர்ந்தான்.
ரசிகா மயங்கி படியிலிருந்து விழ, துகிலன் அவளிடம் சென்று ரசிகாவை பிடித்தான். துகிலனை தள்ளி விட்டு விபுதன் ரசிகாவை ஆதி அருகே போட்டு, மாமா அத்தைய பாருங்க என்றான்.
ஏய், “உனக்கு நான் தான் மாமா” துகிலன் சத்தமிட, மாமாவா? எந்த மாமா? விபுதன் கோபமாக துகிலன் கழுத்தை பிடித்தான்.
விபு, விலகு என்று சத்தம் கேட்டது. தமிழரசனும் அகரனும் வந்தனர்.
ருச்சி என்று அகரன் ரசிகாவிடம் வந்தான். ஆதி அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
மச்சான், என்ன பண்றீங்க? அகரன் சத்தமிட்டான்.
ஆதி அகரனை அணைத்து அழுதான்.
ரசி, உன்னோட பொண்டாட்டியா? என்னடா செஞ்சு வச்சிருக்க? கல்யாணம்ன்னா அவ்வளவு சாதாரணமா போச்சா உனக்கு? அவள என்னடா செஞ்ச? சவிதா துகிலன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்.
அண்ணா, அப்ப ரசி சொன்ன பொண்ணுங்களுடன் உறவில் இருந்தவன் நீயா? அவ்வளவு கேவலமானவனடா நீ? மெல்லினா கேட்க, ஆதி எழுந்தான். அகரன் தண்ணீரை தெளித்து ரசிகாவை விழிக்க வைத்தான்.
அகரா, “அவன் ஆதியோட தம்பியாம்” என்று அவனை அணைத்து ரசிகா அழுதாள்.
சவிதா துகிலனை அடிப்பதை விட்டு விழித்த ரசிகாவிடம் வந்தார்.
இப்ப என்னவாம்? என்ற துகிலன், ஆதி செம்மையா பழி வாங்குற? துகிலன் கேட்க, ஆதி அமைதியாக ரசிகாவை பார்த்துக் கொண்டே நின்றான்.
சொல்லுடா? என்று சீற்றமுடன் துகிலன் ஆதியிடம் வந்தான்.
தம்பி, நில்லுங்க. இப்ப ரசி என்னோட பொண்ணு. உங்கள மாதிரி பையன் அவ பக்கத்துல செல்ல கூடாது. அவர் என்னோட மாப்பிள்ளை. இது உங்க வீடு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் யார் மீதும் கை வைக்கக் கூடாது.
நான் கூட என் பொண்ணு இலக்கியா மேலுள்ள காதலால் தான் அவளுடன் தவறான பழக்கத்தில் இருந்தீர்கள் என்று நினைத்தேன். ரசி சொன்னதை வைத்து பார்த்தால் ரொம்ப தப்பா இருக்கு என்றார் தமிழரசன்.
யோவ், நான் மாறியதன் காரணமே உன்னோட மாப்பிள்ள ஆதி தானே? எதற்க்கெடுத்தாலும் ஆதி, படிப்பிலும் சரி, அவன் நடத்தையிலும் சரி. அவன் தான எல்லாருக்கும் உசத்தி.
எனக்கு அவர் அப்பான்னு தான் பெயர். ஒருநாளாவது அப்பா, மகன் போல் இருந்திருப்போமா? இலக்கியாவை சிறுவயதிலிருந்து எனக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும். அவளும் அவனை தானே தேர்ந்தெடுத்தாள். நான் என்ன ஆதிக்கு சப்ஸ்டியூட்டா? அவன் வேண்டாம்ன்னு சொன்னதால் என்னிடம் அவள் வந்தால் நான் அவள் மீதுள்ள காதலால் அவளை எடுத்துக் கொண்டேன். இதில் எந்த தவறும் இல்லை என்றான் துகிலன் தெனாவட்டாக.
தவறு இல்லையா? ரசிகா அவனிடம் வந்தாள்.
நீயும் அவளும் காதலிச்சீங்கல்ல. அவள் ஆதியை கல்யாணம் செய்யப் போறான்னு தெரிந்த பின் எதுக்கு உன்னோட காதலை விட்டுக் கொடுத்த?
ஆதி அண்ணா பாவம். இவளை விட்டால் அவரை கல்யாணம் பண்ண யாரும் இல்லை என்றா? இல்லை நீ காதலித்த இலக்கியா ஆதி மேல் விருப்பப்பட்டதாலா? நல்லவன் போல் பேசாத ரசிகா சத்தமிட்டாள்.
வாவ்,..சூப்பர் என துகிலன் கையை தட்டிக் கொண்டே ரசிகாவை சுற்றி வந்தான்.
அம்மா, பார்த்தீங்களா? என்னோட பொண்டாட்டி நான் அருகே இருக்கும் போதெல்லாம் அழுகை மட்டும் தான் வரும். ஆனால் இந்த வீட்ல வச்சி சந்தோசப்படுறாங்க. கோபப்படுறாங்க. ஆதி மேல உரிமையா அவனுக்காக பேசுறாங்க.
பேச்ச மாத்தாத. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு? ரசிகா சத்தமிட்டாள்.
பரவாயில்லை நல்லா பேசுறா? அப்ப உனக்கு இலக்கியாவை நினைவு வந்துருச்சோ? என்னை மட்டும் மறந்துட்ட போல?
ஆமா, நீ பெரிய இவன். உன்னை நினைவில் வைத்துக் கொள்ள. பொறுக்கி என்றாள் ரசிகா.
பொறுக்கியா? நானா?
ஆமா, நீ தான். உன்னால உன்னோட காதலையும் பாதுகாத்துக்க முடியல. கல்யாணம் பண்ண பொண்ணையும் பார்த்துக்க முடியலை. இதுல ஆதிய சொல்ற? நீ நினைச்சிருந்தா இலக்கியாவை உன் பக்கம் வைத்து கொள்ள செய்ய வேண்டியதை செய்திருப்ப? நீ நல்ல காதலனே இல்லை ரசிகா சொல்ல, துகிலன் ரசிகாவை அறைந்தான். கோபமான ஆதி துகிலனை அறைந்தான்.
ஆதி..என்று கோபமாக அவனருகே செல்ல இருந்த துகிலனை தடுத்தாள் ரசிகா.
முதல்ல சொல்லு? இலக்கியாவே உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னாலும் அவளை காதலிக்கும் நீ அவளை விட்டிருக்க கூடாது. உங்க இருவர் மேலும் தப்ப வச்சிக்கிட்டு எதுக்கு ஆதிய சொல்லிக்கிட்டு இருக்க?
ஆதி..ஆதின்னு சொல்லாத துகிலன் சொல்ல, நான் அப்படி தான் சொல்வேன். ஆதி..ஆதி.. ஆதி..ஆதி, எனக்கு அவரை தான் பிடிக்கும் என்று ரசிகா கத்தினாள்.
பிடிக்குமா? என்ன பிடிக்கும்? உன் கழுத்தில் நான் கட்டிய தாலி இருக்கும் போது இன்னொருவனை காதலித்தால் அந்த உறவுக்கு என்ன பெயர்? அவன் பொண்டாட்டியை நான் காதலித்தது போல தான் அவன் என் பொண்டாட்டியான உன்னை காதலிக்கிறான் என்று துகிலனும் கத்தினான்.
துகிலன் தவறாக நடந்து கொண்டாலும் கேட்ட கேள்வி சரிதானே? ரசிகாவால் பேச முடியவில்லை. ஆதியும் கண்கலங்க அவளை பார்த்தான்.
எது கல்யாணம்? அத்தை மறந்துட்டியா? இவன் பணம் கொடுத்து உன்னை வாங்கி இருக்கான்? பின் உன்னை கஷ்டப்படுத்தி இருக்கான். உன் காலில் சூடு போட்டான். கையை சிகரெட்டை வைத்து அழுத்தி காயமாக்கினான். அதை விட உன் முன்னாடியே மற்ற பொண்ணுங்களுடன் உறவாடி இருக்கான்.. ச்சே..என்றான் விபுதன்.
ஆமா, எல்லாமே நான் தான் செய்தேன். ஆனால் எந்த பொண்ணையும் நான் அழைக்கவில்லை. பணத்துக்காக அவங்களா வந்தாங்க. இதில் இவள் தான் விதிவிலக்கு. அவங்க வந்தாங்க நான் ஏத்துக்கிட்டேன் அவ்வளவு தான்.
திருமணம் முடிந்த அன்று அவள் செய்த வேலையில் கோபம் இருந்தாலும் அவளிடம் நன்றாக தான் நடந்து கொண்டேன். இவள் தான் அழுது அழுது என்னை எரிச்சலாக்கினாள். அதான் அவள் முன்னே மற்ற பொண்ணுங்களுடன் இருந்தேன். அவளுக்கு பிடிக்கவில்லை என்பதால் என் விரல் கூட அவள் மீது பட்டதில்லை.
ஆமா, நீ என் விருப்பத்திற்காக காத்திருந்தாய் தான். ஆனால் நீ என்னை அன்றிரவு பார்த்த விதமும் அணுகு முறையும் சுத்தமாக பிடிக்கவில்லை. எந்த பொண்ணும் இப்படி ஒருவனை ஏற்றுக் கொள்ள மாட்டாங்க. மூன்று நாள் நாம ஒரே வீட்ல இருந்தோம். என்னோட பெயர் சொல்லி கூட நீ என்னை அழைத்ததில்லை. உன்னோட வாடிக்கையாளர் பொண்ணுங்களை அழைப்பது போல டார்லிங்ன்னு சொல்ற? அவளுகள மாதிரி பல்லை காட்டிக் கொண்டு வருவேன்னு நினைச்சியா?
எனக்கு என்ன பிடிக்கும்? என் குடும்பத்தில் என்ன நடக்குது? நான் என்ன படிச்சிருக்கேன்னு தெரியுமா? அழகாக ஒரு நிக் நேமாவது எனக்கு வச்சிருக்கியா? என்று ரசிகா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனவள் நிறுத்தி, பொண்ணுங்களோட நேரம் செலவழிக்கவே நேரம் சரியா போச்சு உனக்கு? என்று கோபமாக கேட்டாள்.
எனக்கு உன்னை பற்றி எதுவும் தெரியாது தான். மத்த பொண்ணுங்க மாதிரி இருப்பன்னு நினைச்சு தான் சும்மா கல்யாணம் பண்ணேன். ஆனால் உன் குடும்பத்தில் நீ பட்ட கஷ்டமும், அவங்க கஷ்டப்படுத்தியும் அவர்களை பிரிந்து வரும் போது அழுதாயே? அந்த பாசமும், உன்னோட சமையல் எனக்கு ரொம்ப பிடிச்சது. உன்னை காரில் வரும் போது பார்த்து அமைதியாக நான் வந்ததன் காரணம் உன்னோட பாசம் தான். நீ என் அம்மாவை நினைவுபடுத்தினாய்.
சரி, உனக்கு என்னை பிடித்து விட்டது. ஆனாலும் எதுக்கு மத்த பொண்ணுங்களுடன் இருந்த? அப்பவே என்னை தேடி இருக்கணுமே? நான் இந்த வீட்டுக்கு மானத்துடனும் உயிரோடும் வந்து சேர்ந்தது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? கட்டின பொண்டாட்டி தொலைந்தால் பிடிக்காதவனாக இருந்தாலும் தேடி இருப்பான். ஆனால் நீ கொஞ்சமும் கவலையே இல்லாமல் மத்த பொண்ணுங்களோட இருந்திருக்க? கல்யாணம் என்ன விளையாட்டா?
தொலைந்தால் தானே தேட முடியும்? ஓடிப் போனால் நான் எங்க போய் தேடுறது?
ஓடிப் போனேனா? டேய் நீ என்னை கொல்லறதுக்குள்ள தப்பிக்கணும்ன்னு வந்தேன்.
கொலையா? நானா? துகிலன் சிரித்தான்.
சிரிக்காத உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கலை.
பிடிக்கலை..ம்ம்..அதான் ஆதி இருக்கானே! அவனை தான பிடிச்சிருக்கு. தாலி என் கையில் படுக்கை அவனுடனா? துகிலன் கேட்க, துகி..என்று சவிதா சத்தமிட்டார்.
உனக்கு இது தான பிரச்சனை? என்று தாலியை கழற்றி அழுது கொண்டே அவன் மீது ரசிகா தூக்கிப் போட்டாள். எல்லாரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.
போதும். இதுக்கு மேல பேசாத. இனி நமக்கு ஏதுமில்லை. விவாகரத்து பத்திரத்தில் சைன் பண்ணிடு என்று அழுது கொண்டே மீண்டும் மயங்கினாள்.
error: Content is protected !!