Skip to content
Post Views: 6,849
“ஏன் டா உனக்கு புத்தி அடிக்கடி புல்லு மேயப் போயிடுமா என்ன?” என்று வித்யா கத்த
அதைக் கண்டு கொள்ளாமல் உணவருந்திக் கொண்டிருந்தான் அவினாஷ்.
“ம்மா, கொஞ்சம் அவியல் வைங்களேன்” என்று கேட்டபடி ஆப்பத்தை எடுத்து வைத்துக் கொண்டான்.
“ம்ம்ம் இங்க அம்மாகாரி கத்துறது எல்லாம் கேட்காது அவியல் கேட்குதோ…?”என்றவர் அவன் கேட்டதை தட்டில் வைக்கவும் மறக்கவில்லை.
Advertisement
“ப்ம்ச் என்னம்மா உங்களுக்கு பிரச்னை ?”என சலித்தவன்,” சித்து இன்னொரு ஆப்பம் சூடா “என்று சத்தமிட உள்ளிருந்தவளுக்கோ அத்தனை கடுப்பு.
‘ரூமுக்குள்ள வச்சு காட்டு கத்திட்டு இப்ப ஆப்பம் தோப்பம்னுட்டு’ என்று முணுமுணுத்தபடி நின்றாள் ஆப்பம் வெந்துவிட்டதா என சோதித்தபடி
“நீ ஊத்தாதம்மா” என குரல் கொடுத்த வித்யாவோ முறைப்புடன் ,”அவளை விட்டுட்டு நைட் ஷிப்ட் போறதானே, அப்போ ஆறிப் போன இட்லியே உனக்கு அதிகம்” என்று பாத்திரத்தில் இருந்த இட்லியை வைக்க, அவினாஷ் அவரை மேலும் கீழும் பார்த்தவன்,” இன்னும் கொஞ்சம் நல்ல மருமக கிடைச்சா என்னையெல்லாம் யாரு மேன் நீன்னு கேட்பீங்க. ?”
Advertisement
“ஏன் என் மருமகளுக்கு என்ன கொறையாம்.?” நொடித்தவரிடம்
Advertisement
“கொறையா ம்ஹூம் எல்லாம் நெறையாவே இருக்கு.” என்று விடைத்துக் கொண்டான் அவரிடத்தில்.
வித்யா சட்டென சுதாரித்தவர்,” ரெண்டு பேருக்கும் ஏதாச்சும் பிரச்சினையா அவி. ?”என படபடக்க
அவரது முகவாட்டத்தை உணர்ந்தவன் பதில் கூற எத்தனிக்கும் முன்பே சித்ரா ஆப்பத்துடன் வந்திருந்தாள்.
Advertisement
“நான் தான் ஆப்பம் ஊத்திட்டேனே, ஏன் இட்லி வச்சீங்க?”என அவன் உண்டுக் கொண்டிருந்த தட்டை நகர்த்தி விட்டு வேறு எடுக்கப் போக
“பரவாயில்லை எனக்கு இட்லியே போதும், நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க”என்று மீதமிருந்ததை உண்டவன் கைகழுவி விட்டு எழுந்து கொண்டான்.
“ம்மா எந்த பிரச்சினையும் இல்லை. நைட் ஷிப்ட் தவிர்க்க முடியலை நான் என்ன செய்ய…? இந்த மந்த் நைட் ஷிப்ட் பார்த்தா நெக்ஸ்ட் மந்த் லீவ் தர்றதா சொல்லி இருக்கார் மேனேஜர். அதை யூஸ் பண்ணிக்கலாமேனு போறேன். நீங்களா ஏதாவது யோசிக்காதீங்க”என்று அவரை சமாதானம் செய்ய
“அவ்வளவு தானா…?நான் பயந்தே போயிட்டேன். ஆமா ஆமா லீவ் இருந்தா தான் ஹனிமூன் போக சரியா இருக்கும்” என்று சமாதானம் ஆகிக் கொண்டார் வித்யா.
‘மருமகள் தன் அக்கா காணாமல் போன கவலையில் மூழ்கிடக் கூடாதே !’என்று யோசித்து தான் அவினாஷை இரவுப் பணிக்கு செல்வதை தடுக்க நினைத்தார். இப்போது விடுமுறையை மனைவியோடு கழிக்க எண்ணுகிறான் என்ற எண்ணமே அவரை சமாதானம் செய்ய போதுமானதாக இருந்தது.
சித்துவுக்கோ, தான் செய்தது தவறெனத் தோன்றினாலும் அதை தன்னிடம் கேட்காமல் அவினாஷே கத்தி விட்டுச் செல்வது எரிச்சலாக இருந்தது.
அவினாஷின் மனதில்,’ தன்னைப் பற்றி எப்படி நினைத்திருக்கிறாள்?’ என்ற எண்ணம் குடிகொண்டு கோபப்பட செய்தது.
இவர்கள் பிரச்சினை இப்படியிருக்க ஓவியாவின் வீட்டில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று முடிவெடுத்து வளவன் அதை செய்ய செல்ல,மிகச் சரியாக சுந்தரேசன் குடும்பத்தின் வந்துவிட்டனர்.
வந்தவர்கள் தாம் தூமென குதிக்கத் துவங்க
“இப்ப உங்களுக்கு என்ன தான் பிரச்னை. என் தங்கை ஏன் கோவிச்சுட்டு வந்தா, என்ன சண்டை எதுவும் தெரியாது. நீங்க வந்து போக இருக்கவும் ,ஏதோ புருஷன் பொண்டாட்டி பிரச்னை அது தானே சரியாகிடும்னு அமைதியா இருந்தா உங்க பையன் எதையுமே கண்டுக்கலை. இன்னவரை மலர் எப்படி இருக்கான்னு கூட கேட்கவில்லையே ?”என்று வளவன் குற்றம் சாட்டி
“எம்மகன் சண்டை போட்டு கோமிச்சுக்கிட்டு போயிட்டான். அதுக்கு காரணமே ஒந்தங்கச்சிதேன். பெறவு எப்படி வந்து பார்ப்பான் பேசுவான். ஏதோ வெகுநாஞ்செண்டு மசக்கையா இருக்கறாளே மருமவன்னு நாங்க வெட்கத்த வுட்டு பாக்க வர்றோம். இப்ப இல்ல தெரியுது. அவ எப்படா எம்மவன் கிட்ட இருந்து ஓடலாம்னு நா பார்த்துருக்கான்னு. ஓடுகாலிசிறுக்கி எம்பேரனை வயித்துல வச்சுக்கிட்டுல்ல ஓடியிருக்கா” என்று மூக்கை சிந்தினார்.
ஷன்மதி துணுக்குற்றாள் அவர் பேச்சில்.
“பேரனா… ?”என்று இழுக்க சட்டென சுதாரித்து,” ஆமா எம்பேரன் தான் இல்லன்னு ஆவுமா?” என சமாளித்தவர் ,”போலீஸ் எல்லாம் போனா என் வீட்டு மானமருவாதி தான் போவும். எங்கூட்டாளுங்களை விட்டு தேட சொல்லி இருக்கேம். இந்த தமிழ் நாட்டை விட்டு போயிர முடியுமா?” என்றவர் ,”ஏங்க இவங்க போனா என்ன பண்றது. நீங்க இங்க ஆளு போடுங்க” என்று சொல்ல சுந்தரேசனும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார்.
இத்தனை பிரச்சினை இங்கு நடக்க, ஓவியாவோ தன் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் தன் உலகத்தில் லயித்திருந்தாள்.
அவள் பெங்களூர் வந்து ஒரு வாரம் ஆகி விட்டிருந்தது.
வீடு பார்த்து வைத்த தோழியே, வேலை ஒன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தாள். சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அக்கவுண்டன்டிற்கு அசிஸ்டன்டாக சேர்ந்திருந்தாள். பெரிதாக வெளியே செல்லும் வேலை இல்லை என்பதால் அங்கேயே பிடித்துப் போனது அவளுக்கு. அவளோடு சேர்த்து இன்னும் இரண்டு பெண்கள் வேலை பார்த்தனர். அவர்களும் தமிழ் பெண்கள் ஆதலால் அவளுக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது.
“ஏன் மலர் அதான் வீட்டுக்காரர் வெளிநாட்டில் இருக்காரே உனக்கு என்ன கவலைனு வேலைக்கு வர்ற. அதுவும் மாசமா இருக்கும் போது…” என்று பணிபுரியும் பெண்கள் கேட்டு வைக்க
“வீட்டிலேயே இருந்தா டிப்ரெஷன் ஆகுதுன்னு அவர் தான் போக சொன்னாருக்கா. குழந்தைக்காக தான் வர்றேன்” என்று ஏதேதோ சொல்லி சமாளித்து வைத்தாள்.
“நல்லா தான் போ. மாசமா இருக்கிறப்ப அழகா ரெஸ்ட் எடுக்கிறதை விட்டுட்டு…” என சலிப்பவர்கள் மேலும் அவளைத் துருவி தோண்டி விஷயத்தை பெற தான் முயற்சி செய்தனர்.
கழுவும் மீனில் நழுவும் மீனாக தப்பித்துக் கொண்டிருந்தாள் மலர்.
‘ஹப்பா இவங்க எல்லாம் அடுத்தவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு ஆராயவே வேலைக்கு வருவாங்க போல ‘என்று அலுத்துக் கொண்டாலும் அமைதியாக அவற்றைக் கடந்து செல்ல பழகியிருந்தாள்.
‘பாப்பா நீ ரொம்ப சமத்துத் தெரியுமா…? அம்மாவை ஒரு வாந்தி எடுக்க விடலை. மயக்கம் போட வைக்கலை. அம்மாவோட சிச்சுவேஷன் புரிஞ்சு அமைதியா இருக்க நல்ல பிள்ளை’ என்று வயிற்றில் இருக்கும் குழந்தையையும் அவ்வபோது கொஞ்சிக் கொள்வாள்.
எல்லாம் சீராகி விட்டது இனி நான் என் குழந்தை மட்டுமே என்று இருந்தவளின் எண்ணத்தில் இடி விழுந்தது போல அழகினியனிடம் மாட்டிக் கொண்டாள் அந்த வார இறுதியில்.
…… தொடரும்.
error: Content is protected !!