Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருப்பு நிலா Episode-24

அத்தியாயம் 24

ஆதி ரசிகாவை பிடிக்க, துகிலன் ஆதியை அடித்தான். அவனை தள்ளி விட்ட அகரன், “நிறுத்து..”அவள பத்தி என்ன தெரியும்ன்னு பேசுற? அவளோட கஷ்டம் உண்மையிலே புரிந்தவன் தவறாக பேச மாட்டான்.



Advertisement

அவள் வீட்டில் உன்னிடம் பணம் வாங்கியது அவளுக்கு தெரியாது. நீ பணக்காரன் என்று அவளுக்கு தெரியாது. நீ இந்த குடும்பத்து மகன் என்றும் அவளுக்கு தெரியாது. சொல்லப் போனால் உங்க யாரையுமே அவளுக்கு தெரியாது.

நடக்கும் எல்லாம் அந்த விதியின் விளையாட்டு. இல்லைன்னா சரியா அவள் இந்த வீட்டுக்கு வந்திருக்க மாட்டா. பாஸை லவ் பண்ணி இருக்கமாட்டா. இப்படி எல்லார் முன்னாடியும் அவமானமும் நடந்திருக்காது. நீ அவளை ஏமாத்தி இருந்தாலும் அவள் மனதை புரிந்து நடந்து கொண்டிருந்தால் அவள் கஷ்டப்பட தேவை இருந்திருக்காது. அவள் உன்னை ஏற்றிருப்பாள். நீயே அவளோட கணவனா இருந்திருப்ப.

Advertisement

Advertisement

ஆனால் இப்ப நீ என்ன செய்தாலும் அவ மாற மாட்டா. அவளோட மனசையும் மாத்த முடியாது. அவள் ஆதி மச்சானை தவிர யாரையும் மனசால கூட நினைக்க மாட்டா. அதனால அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துரு. இலக்கியாவால உங்க மூவர் வாழ்க்கையும் அழிந்தது போல் நீயும் உங்க மூவர் வாழ்க்கையை அழிச்சிறாத என்றான் அகரன்.

நீயெல்லாம் எனக்கு அட்வெஸ் கொடுக்குற? துகிலன் கையை ஓங்க, ஏய் கையை இறக்கு. அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளையாகப் போறவன் என்று ஆதி துகிலனிடம் சத்தமிட்டான்.

Advertisement

என்ன? என்று துகிலன் மெல்லினாவை பார்த்தான்.

ஏய், கத்திரிக்கா…இந்த வயசுல இதெல்லாம் லவ் இல்லை என்று மெல்லினாவிடம் சொல்லி விட்டு, இவளை உன்னாலெல்லாம் பார்த்துக்க முடியாது என்றான் துகிலன்.

அதை நீ சொல்லாத. காதலித்தவளையும் விட்டு கட்டிக் கொண்டவளையும் விட்டு இப்ப எதுக்கு வந்த? அமைதியா பேசுனது என் மெல்லியோட அண்ணன் என்று தான். உன் இடத்தில் வேறெவனாக இருந்தாலும் சாவடிச்சிருப்பேன். செய்வதை செஞ்சுட்டு அவகிட்ட நியாயம் பேசிட்டு இருக்க? அகரனும் கோபமானான்.

ரசிகா விழித்து ஆதியை கண்ணீருடன் பார்த்தாள். பின் அகரன் பேசுவதை கேட்டு, நீ எதுவும் பேச வேண்டாம் அகரா என்று எழுந்து விபுவை அழைத்து படியில் ஏறினாள்.

எங்க போற? துகிலன் கோபமாக அவள் கையை பிடித்து இழுத்தான். ரசிகா கீழே விழ, அம்மா..என்று லிதுவும் நிதுவும் அழுது கொண்டே அவளிடம் வந்தனர்.

எல்லாரும் பதறி ரசிகாவிடம் வந்தனர். அவள் தலையில் கை வைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

அம்மாவா? என்று துகிலன் பசங்களை பார்த்தான். விபுதன், அகரன், ஆதி, தமிழரசன் கோபமாக துகிலனிடம் வந்தனர்.

“எனக்கு ஒன்றுமில்லை” என்று ரசிகா எழுந்து, வேண்டாம் என்று லிது, நிதுவை கண்கலங்க பார்த்து விட்டு “விபு வா” என்று அவனை அவனறைக்கு சென்று இருவரும் கையில் பையுடன் வந்தனர்.

ருச்சி, எதுக்கு இது? அகரன் கேட்க, யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் “நான் போறேன்” என்றாள் ரசிகா

போறியா? எங்கம்மா? சவிதா கேட்க, அமைதியாக நின்றாள். இப்பொழுது தான் ரசிகாவும் ஆதியும் வாழவே ஆரம்பித்தார்கள். ஆதிக்கு கண்ணீர் வந்தது.

ரசி, நீ போகக்கூடாது மெல்லினா சொல்ல, போகப்போறீயா? இங்க எங்க போவ? ஏளனமாக பார்த்தான் துகிலன்.

அவ வேணும்ன்னு சொல்லீட்டு இப்படி ஏளனமா பார்க்கிறியே? உனக்கெல்லாம் பாசம்ன்னா கூட என்னன்னு தெரியலடா மெல்லினா சத்தம் போட்டாள்.

ஆஹம்..என்று துகிலன் ரசிகா அருகே சென்று, எங்க போவ? நீ போனா ஆதியோட எதுவும் உனக்கு கிடைக்காது. அவனும் உன்னை மறந்துடுவான். அப்புறம் எப்படி உள்ளே வருவ? என்னோட பொண்டாட்டியா வேணும்ன்னா நீ இரேன் துகிலன் சொல்ல, ரசிகா அவனை அறைந்தாள்.

ஆதிக்கிட்ட எனக்கு வேண்டியது எப்போதும் மாறாது. பணத்துக்காக உன்னோட படுக்கிறவன்னு என்னை நினைச்சீயா? ஆதி மனசுல நான் இருக்கேன். எனக்கு அதுவும் எங்க எல்லாரோட நினைவுகளும் இருக்கு. அதுவே போதும்.

என்னம்மா பேசுற? நீ எதுக்கு போகணும்? “இந்த நாயை நானே வீட்டை விட்டு அனுப்புகிறேன்” பிரபாகரன் சொல்ல, இல்ல அங்கிள். நான் இங்கிருந்தால் அனைவரது மொத்த வாழ்க்கையும் நிம்மதியும் குலைந்து விடும்.

“நான் தான் இவனுக்கு பணம் கொடுத்தேன்ம்மா. ஆனால் இப்படி சீப்பான வேலையெல்லாம் பார்ப்பான்னு தெரியாது” என்று பிரபாகரன் அழுதாள்.

அங்கிள், உங்க வளர்ப்பு சரியா தான் இருந்திருக்கு. ஆனால் நம் வாழ்க்கை நம் கையில் தான். அவனாக ஆதியுடன் போட்டியிட்டு அவன் தகுதியை குறைச்சிட்டான். என் ஏமாற்றம் என் இழப்பு. அதற்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?

ரசி எங்களுக்கு அம்மாவா இருக்க மாட்டாயா? அப்பா கோபப்படாமல் நாங்க பார்த்துக்கிறோம் லிது சொல்ல, நான் போக அப்பா காரணம் இல்லைடா. இது என் தலையெழுத்து.

தலையெழுத்தா? அப்படின்னா நிது கேட்க, வாழ்க்கையின் நிதர்சனம். என் வாழ்க்கை உங்களை பிரிந்து இருக்க வைக்கும் என்றால் நம்மால் எதையும் மாற்ற முடியாதும்மா..

ஏன் மாற்ற முடியாது? லிது கேட்க, ஏன்னா..நாம மனிதர்கள். கிடைக்கும் வாழ்க்கையை அற்புதமாக்குவதும் நம் கையில் தான். அது நல்லவழி. தன்னையும் அழித்து பிறர் வாழ்க்கையையும் அழிப்பதும் நம் கையில் தான். அது தீய வழி.

எனக்கு எப்போதும் நல்வழி தான் பிடிக்கும். எத்தனை இடராயினும் அவ்வழியை கை விட மாட்டேன் என்றாள்.

எங்களுக்கு அம்மாவா நீ இருக்க மாட்டாயா? நிது கேட்க, ஆதியும் அழுது கொண்டே ரசிகாவை அணைத்தான். அவள் கண்ணீர் வலியுடன் வந்தது.

“எங்கள விட்டு போகாத ரசி” என்று ஆதி ரசிகாவை அணைத்து அழுதான்.

ஆதி, நான் போகணும். இங்கிருந்தால் நம்ம மொத்த குடும்பத்தோட சந்தோசமும் காணாமல் போய் விடும். அதற்கு நான் போவதே மேல்.

இல்ல ரசி, உன்னை நான் விட மாட்டேன் கதறி அழுது கொண்டே ஆதி ரசிகாவை மேலும் இறுக்கினான். ரசிகாவும் அவனை அணைத்து அழுதாள்.

ஆதி அழுகிறானா? என்று வியந்து துகிலன் பார்த்துக் கொண்டிருந்தான். துகிலனுக்கு ஆதியின் கோபம், அமைதி, நண்பர்களுடான சந்தோசம், வருத்தம் பார்த்திருக்கிறான். ஆனால் ஆதி அழுது அவன் பார்த்ததேயில்லை.

ஆதி, போதும். அழாதீங்க என்று அவனை விலக்க, அவன் அவளை இறுக்கமாக பற்றிக் கொண்டு, உன்னை போக விடமாட்டேன் என்றான்.

ஆதி..அழுத்தி ரசிகா அழைக்க, ப்ளீஸ் ரசி, அம்மாவை போல் நீயும் என்னை விட்டு போயிடாதே! என்று சொல்ல, பிரபாகரனும் சவிதாவும் திகைத்து ஆதியை பார்த்தனர்.

ஆதி, என்ன சொன்ன? சவிதா கேட்க, ஆதி ரசிகாவை விட்டு விலகினான்.

சொல்லுடா? என்று தொண்டை அடைக்க சவிதா கேட்டார்.

நீங்க என்னோட அம்மா இல்லையே? அதான உங்க பையன் காதலிக்கும் பொண்ணுன்னு தெரிந்து தானே எனக்கு இலக்கியா கட்டி வச்சீங்க? ஆதி கேட்க, ஆதி என்ன பேசுற? தமிழரசன் சத்தமிட்டார்.

மாமா, இவங்களுக்கு துகிலனும் இலக்கியாவும் காதலித்தது தெரிந்து தான் எனக்கு அவளை திருமணம் செய்து வச்சாங்க.

ஆமா, தெரிந்து தான் செய்து வைத்தேன். நல்ல எண்ணத்தில் தான் செய்து வைத்தேன். இந்த வீட்டுப் பொறுப்பையும் உனக்கு துணையாகவும் இருக்க புத்திசாலிப் பொண்ணு வேணும்ன்னு நினைத்தேன். உன்னோட அப்பா பார்த்த பொண்ணுங்க குடும்பமெல்லாம் பிசினஸ் டீலுக்காக வந்தாங்க. இலக்கியாவை உனக்கும் நன்றாக தெரியும். அதனால் தான் முடித்து வைத்தேன். அவளும் இனி துகி பக்கம் போக மாட்டேன்னு சொன்னா. அதான் ஒத்துக் கொண்டேன் என்றார்.

“முடிந்த விசயத்தை விடுங்க ஆதி” என்ற ரசிகா, எல்லாரையும் பார்த்துக்கோங்க. பசங்களை பார்த்துக்கோங்க என்று சவிதாவை பார்த்து, “ஆதிக்கு தேனீர் கொடுப்பது, அவனுக்கும் பசங்களுக்கும் ரசிகா செய்யும் அனைத்தையும் சொல்லி செஞ்சிருங்க” என்று மெல்லினாவிடம் “சீதாம்மாவை உதவிக்கு மட்டும் வச்சுக்கோ மெல்லி. நீ தான் சமையல் வேலையையும் பூஜையையும் பார்த்துக்கணும்” என்று பிரபாகரன் அகரனை பார்த்து, இருவரும் ஆதிக்கு எப்போதும் எந்நிலையிலும் உதவியா இருங்க என்று பசங்களிடம் வந்தாள்.

என்னோட இளவரசிகள் சமத்தா தனியா இருந்துக்க பழகணும். இரவு அப்பாவிடம் கதை கேட்டு தொந்தரவு செய்யாமல் தூங்கணும். அப்புறம் அப்பாவை நல்லா பார்த்துக்கணும். நல்லா படிக்கணும், சாப்பிடணும், தூங்கணும் என்றாள்.

ரசி, போகாத என்று லிதுவும் நிதுவும் அழுதனர். இதுவரை குழந்தைகள் பேசி பார்த்திராத துகிலன் இவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டு, உங்க அப்பா ஆதி இல்லை. நான் தான் என்றான்.

இல்ல..நீ கோஸ்ட், பேடு பாய், என்னோட அப்பாவையும் அம்மாவையும் அடிச்சிட்ட. “அம்மா நம்மை விட்டு இவனால தான் போறா லிது” என்று நிது அழைக்க, இருவரும் துகிலனிடம் ஓடிச் சென்று அவனது காலில் குத்தினர். அவன் கண்கலங்க குழந்தைகளை பார்த்தான்.

ரசி, அவன் என்று ஆதி சொல்ல முடியாமல் கண்கலங்கினான்.

கஷ்டப்படாதீங்க ஆதி. எனக்கு முன்னாடியே தெரியும். நீங்க இலக்கியாவோட வாழவேயில்லைன்னு தெரியும். சொல்லப் போனால் நம் இருவர் நிலையும் வளர்ந்த போதும், திருமணத்தின் பின்னும் ஒன்று தான் என்றாள் ரசிகா. அகரனுக்கும் விபுதனுக்கும் தான் அதிர்ச்சியாக இருந்தது. மெல்லினா ரசிகா அறைக்கு சென்று கதவை தாழிட்டு சொன்ன விசயம் “துகிலன் குழந்தைகளின் அப்பா என்று தான்”.

அப்புறம் இந்த விசயம் வெளிய வரக் கூடாது என்று ரசிகா துகிலனை பார்த்தாள்.

சரி, அப்ப நீ இங்க இருக்கணும்.

எதுக்கு? நீ இப்ப வரை பேசிய பேச்சு போதாதா? ஆன்ட்டி இப்ப தான் சரியாகி இருக்காங்க. சும்மா எல்லாரையும் தொந்தரவு செய்யாம இரு. அப்பா..இவனுக்கு?

ஆமாம்மா. நான் பத்திரத்தை ஏற்கனவே அனுப்பிட்டேன். அவனிடம் வந்து சேர்ந்திருக்கும். உங்க விசயம் தான் எல்லாருக்கும் தெரியுமே? அவன் சைன் செய்தாலே கோர்ட்டிலிருந்து விவாகரத்து கிடைத்து விடும்.

“சைன் பண்ணி அப்பாவிற்கே அனுப்பிடு” என்று ஆதியை பார்த்து, என்னை மன்னிச்சிருங்க ஆதி.

ரசி, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன? ஆதி கேட்க, சொன்னேன் ஆதி. எனக்கும் ஆசை தான். ஆசைப்படும் அனைத்தும் நமக்கு கிடைத்து விடுமா ஆதி?

சரி ஆதி, “நமக்கான கடைசி வாய்ப்பு. இதோ இவன் தான்” என்று துகிலனை காட்டினாள் ரசிகா.

வாய்ப்பு அவனா? ஆதி கேட்க, ஆமா ஆதி. அவன் எந்த தவறான பழக்கத்திலும் ஈடுபடாமல் ஒரு பொண்ணை கல்யாணம் செய்து நல்லபடியாக அந்த பொண்ணை பார்த்துணும். நம் கல்யாணத்தையும் அவனே நடத்த ஒத்துக்கணும். நீங்களும் அவனும் ஒத்துமையா எந்த சண்டையும் இல்லாமல் பாசமிகு அண்ணன், தம்பியா நடந்துக்கிட்டா நான் கண்டிப்பாக நம் வீட்டிற்கு வருவேன் என்றாள்.

ரசி, இதெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை. இது பெரிய டாஸ்க்கா இருக்கு. சின்னதா சொல்லு மெல்லினா கேட்க, மெல்லி இது விளையாட்டல்ல. வாழ்க்கை. வாழ்க்கை எப்போதும் எளிமையாக இருக்காது. எல்லா பாதைகளையும் கடந்து தான் வரணும். பார்க்கலாம் என்று ரசிகா துகிலனை பார்த்து, சீக்கிரம் சைன் பண்ணி அனுப்பு. “நான் போறேன்” என்று ரசிகா நகர, மீண்டும் ஆதிரேயன் ரசிகாவை அணைத்து “போகாத ரசி. என்னால முடியாது” என்றான்.

ஆதியை விலக்கி விட்டு, அவன் கண்ணீரை துடைத்து விட்டு பிரிந்ததாக நினைக்காதீங்க ஆதி. நான் எங்கும் போகலை. இதே ஊரில் தான் இருக்கப் போறேன். தள்ளி இருக்கப் போகிறோம். ஆனால் நாம பார்த்தாலும் பேசிக்காம இருக்கணும் என்று ரசிகா சொல்ல, உன்னை பார்த்து பேசாமல் எப்படி போவேன் ரசி?

ஆதியை இழுத்து அவன் இதழ்களில் அவளது அச்சாரத்தையும் ஆதிக்கு நம்பிக்கையையும் கொடுத்து, நான் போறேன். எல்லாரும் கவனமா இருங்க என்று சீதாவை பார்த்து தலையசைத்து பின் அப்பா, அகரா போகலாமா? எனக் கேட்டாள்.

“வந்துட்டேன் ருச்சி” என்று அகரனும் தமிழரசனும் ரசிகா, விபுதனுடன் வெளியேற, “மெல்லினா அவள் கையை பிடித்து போகாத” என்று கண்ணீருடன் சொன்னாள்.

“நான் போகணும் மெல்லி” என்று ரசிகா மெல்லினா கையை எடுத்து விட்டு சென்றாள். பிரபாகரனும் சவிதாவும் என்ன செய்வதென்று புரியாமல் கண்ணீருடன் தன் மகன் ஆதியையும், பிள்ளைகளையும் பார்த்தனர். எல்லாரையும் பார்த்துக் கொண்டு துகிலன் நின்றான்.

லிது வேகமாக வெளியே ஓடினாள். மெல்லினாவும் சீதாவும் அவளை பிடித்து அழைத்து வந்தனர்.

அப்பா, “ரசியை வரச் சொல்லுங்க” என்று நிது ஆதியை பிடித்து அழுது கொண்டே நின்றாள். லிதுவும் ஆதியிடம் வந்து, “அப்பா..வா ரசியை கூட்டிட்டு வருவோம்” என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.

இல்லம்மா, அவ வர மாட்டா. அவ சொன்னது நடந்தால் வருவா? இனி அவள் வர வாய்ப்பில்லை என்று அம்மா..பார்த்துக்கோங்க என்று ஆதி கண்ணீருடன் படியில் ஏறினான். ரசிகா அறையை தாண்டி செல்லும் ஆதி, அவளறைக்குள் நுழைந்து அறையை தாழிட்டுக் கொண்டான்.

மெல்லினா கோபமாக, எல்லாமே உன்னால தான். ரசி போயிட்டா. எப்படி வர வைக்கிறது? ச்சே..நீயெல்லாம் மனுசனா?

அண்ணா..நம்முடன் இருந்த என்றுமே சந்தோசமா இருந்ததேயில்லை. இப்ப ரசியால தான் கொஞ்சமாவது சந்தோசமா இருந்தா. அதையும் பறிச்சுட்டேல்ல. நீ நல்லாவே இருக்க மாட்ட என்று துகிலனை அடித்து விட்டு அழுது கொண்டே அறைக்கு சென்றாள்.

பிரபாகரனும் சவிதாவும் பிள்ளைகளை சமாதானப்படுத்துவதில் இருக்க, ஐந்து வருடத்திற்கு பின் அவன் அறைக்கு சென்றான் துகிலன். அறையில் மாற்றமில்லாமல் இருந்தது.

மெல்லினா அறைக்கதவை தட்டினான் துகிலன். அவள் அவனை பார்த்து கதவை அடைக்க, கையை வைத்து தடுத்து அவளறைக்குள் சென்று பார்த்தான். மொத்தமாக மாறி இருந்தது. அவள் திட்டிக் கொண்டிருந்தாள். அவர்கள் குடும்பமாக எடுத்த புகைப்படம் வைத்திருந்தாள். அகரனுடன் நிச்சய விழாவின் போது அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் அது. அதில் துகிலன் மட்டும் இல்லாமல் இருக்க அவனுக்கு மனம் வலித்தது.

பின் ஆதி அறைக்கு சென்று பார்த்தான். ஆதி நிறைய புகைப்படங்களும் சேகரித்து வைத்திருந்தான். ரசிகாவை ஆதி வரைந்து இருந்ததையும் பார்த்தான். அவன் அம்மா, அப்பா, விபுதன், அகரன், தமிழரசன் இருந்த அனைத்தையும் பார்த்தான். எல்லாரும் சந்தோசமா இருந்தாங்கன்னு நன்றாக தெரிந்தது. அவன் ரசிகா அறையை மட்டும் பார்க்கவில்லை. மாலை வரை ஆதி கதவை திறக்கவேயில்லை. யாரும் சாப்பிட்டவும் இல்லை. துகிலன் ஆச்சர்யமாக ஹாலில் அமர்ந்து எல்லாரையும் கவனித்தான்.

மறந்தும் கூட யாரும் அவன் பக்கம் செல்லவும் இல்லை. அவன் பேசினால் பேசவும் இல்லை.

காலையில் அனைவரும் ஆதி வீட்டில் உணவருந்த அமர்ந்தனர். அங்கே துகிலன் மட்டும் இல்லை. ஆதி லிது, நிதுவுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தான். பசங்களிடம் தன் வலியை காட்டினால் மேலும் கஷ்டப்படுவாங்க என்று சாதாரணமாக பிள்ளைகளிடம் பேசினான். எல்லாருக்கும் கஷ்டமாக இருந்தது. எப்படியோ நேரம் கழிந்து மாலை நேரமானது.

பருவதி, தன் பெற்றொர்களுடன் ஆதிரேயன் வீட்டிற்கு வந்தாள். அவள் அம்மா கையில் தாம்பாலத்தட்டுடன் வந்திருந்தார். அவர்களை வரவேற்றனர் பிரபாகரனும் சவிதாவும். ஆதி அவளை பார்த்ததும், “எனக்கு வேலை இருக்கு” என்று எழுந்தான்.

தம்பி நில்லுங்க, “உங்கள என்னோட பொண்ணுக்கு திருமணம் முடிக்க கேட்டு வந்திருக்கோம்” என்றார் அவள் அப்பா.

அப்படியா? என்று ஆதி கோபமாக அவரிடம் வந்து, அவர் மனைவி வைத்திருந்த தாம்பூலத்தட்டை தட்டி விட்டன். அனைத்தும் சிதறியது. பிரபாகரன் அமைதியாக நின்றார்.

என்னப்பா பண்ற? அவர் கேட்க, ம்ம்..உங்க பொண்ணை எனக்கு சும்மாவே பிடிக்காது. என்னோட ரசி போயிட்டான்னு என்னம்மா பிளான் போட்டு இங்க வந்திருக்கீங்க? ஆதி சத்தமிட்டான்.

“அவ தான் போயிட்டால்லப்பா?” அவர் கேட்க, ஆதி அவரை முறைத்தான்.

ஆதி ரொம்ப பேசாதீங்க. அவளுக்கும் உங்களுக்கும் எந்த விதத்திலும் பொருத்தமேயில்லை பருவதி சொல்ல, அட அதை நீ சொல்றீயா? துரோகி என்று மெல்லினா சத்தமிட்டாள்.

என்னடி சொன்ன? நான் துரோகியா? உன்னோட அண்ணாவுக்காக எத்தனை வருடமா காத்திருக்கேன் என்று பருவதி சொல்ல, சத்தம் கேட்டு கீழே வந்த துகிலன் பருவதியுடன் இவர்கள் பேசுவதை கேட்டு “நிம்மி” என்று அழைத்தான்

நிம்மியா? இவளையும் உனக்கு தெரியுமா? மெல்லினா கோபமாக கேட்டாள்.

இரு..என்று பருவதியிடம் வந்த துகிலன், நிமலா எப்போது பருவதி ஆனாள்? என்று கேட்டான்.

வாட்? நிமலாவா? ஆதி கேட்க, ஆமா இவ ரசிகா தோழி நிமலா தான. ரசியை பற்றி தெரிந்து கொள்ள பள்ளி, கல்லூரியில் இவளுடன் தோழனானேன் என்றான் துகிலன்.

ஓ…மேடம், உன்னிடம் ஃபிராடு தனம் பண்ணி இருக்காலா? ஆதி கேட்டான்.

ஃபிராடா? துகிலன் கேட்க, ரசியோட பேச எதுக்குடா இவளிடம் பழகுன? நேராவே பேசி இருக்கலாமே? என்று கேட்ட மெல்லினா, துகி என்ன சொன்ன? ரசியோட பழக தான் இவளிடம் பேசினாயா? அப்ப பள்ளியிலே ரசியை பார்த்துருக்கியா? உனக்கு அவளை பிடிக்குமா? என்று கேட்க, ஆதிக்கு மேலும் அங்கிருக்க முடியவில்லை.

ஆமா, அவளை பிடிக்கும். நீ நிமலா இல்லையா? பருவதியா? உன்னை எவ்வளவு நம்பினேன்? பெயரை எதுக்கு மாத்தி சொல்லி ஏமாத்துன? துகிலன் கேட்க, யார் ஏமாற்றியது? என்னோட அம்மா, அப்பா என்னை நிமலான்னு தான் அழைப்பாங்க என்று பச்சையாக புழுகினாள்.

அது எப்படி பருவதிக்கு நிமலா நிக் நேமா இருக்கும்? மெல்லினா சிந்தனையுடன் கேட்டாள்.

அவ எவளா இருந்தா நமக்கென்ன? “வெளிய போங்க” ஆதி கத்தினான்.

என்னப்பா, நீங்க மரியாதை தெரிஞ்சவங்க இப்படி நடந்து கொள்ளலாமா? என்று பருவதி அப்பா கேட்டார்.

எங்களுக்கு மரியாதை தெரிந்ததால் தான் உள்ளே அழைத்தோம். அப்பா, “இவங்களை போகச் சொல்லுங்க”  என்று ஆதி சத்தமிட்டான்.

பருவதி முன் வந்த பிரபாகரன், ஏம்மா உனக்கு ரசியை பிடிக்காதுல்ல?

ஆமா அங்கிள். அவ டிராமா செஞ்சு ஏமாத்துவா.

யாரு அவ? ஆதிரேயன் கேட்க, “மகனே அமைதியா இருங்க” என்று ஆதிரேயன் தோளை தட்டிய பிரபாகரன், சரிம்மா. என் மருமகள் இலக்கியாவை உனக்கு தெரியும்ல்ல?

ஆமா அங்கிள். ஜஸ்ட் பேசுவா.

ஜஸ்ட் பேசுவா? ம்ம்..என்ற பிரபாகரன், ரசியையும் இலக்கியாவையும் பேச விடாமல் செய்வதால் உனக்கென்னம்மா இலாபம்?

அங்கிள், என்ன சொல்றீங்க? பருவதி கேட்க, நடிக்காதம்மா..அன்று யாரோ ஒருவனுடன் தனியறையில் இருந்தது என்னோட மருமகள் இலக்கியா இல்லை. நீ தான். ஆனால் ரசிகாவை அவ்விடத்திற்கு வர வைத்து, “இலக்கியா தவறானவள்” என்று ரசியை நம்ப வைத்து இருவரையும் பேச விடாமல் செய்திருக்க. கரெக்ட்டா? அவர் கேட்க, நானில்லை. எனக்கு இதெல்லாம் தெரியாது என்றாள் பருவதி.

சரி, “எல்லாரும் உட்காருங்க” என்று அகரனை வர வைத்தார். எல்லாரும் பிரபாகரனை பார்த்தனர்.

அகரன் பருவதியை பார்த்தவுடன் அவளை அடிக்க எகிறிக் கொண்டு வந்தான்.

அகரா..என்ன நடக்குது? ஆதி சத்தமிட்டான். ஆதியை பார்த்தவுடன் அகரன் அவனை அணைத்துக் கொண்டான்.

மெல்லி, அன்று காட்டுக்குள் ஆட்கள் கொல்ல வந்தது உன்னோட அண்ணாவை இல்லை ரசியை தான் கொல்ல வந்திருக்கான். ஆனால் ஆதி மச்சானை பார்த்தவுடன் பயந்து ஓடி விட்டான். அவனே தான் உன்னை கடத்தி ரசியை பிடிக்க நினைத்திருக்கான். நீ ரசியை உதவிக்கு அழைத்து வருவன்னு அவன் நினைத்தான். ஆனால் நீ தனியா போன? ரசியை கொல்ல நினைத்தவனும் போதை மருந்து, பொண்ணுங்களை விற்பனை தொழில் நடத்துபவனிடம் உதவி கேட்டனர். அவனுக்கு நீ தேவைப்பட்டதால் உன்னை வைத்து எல்லாம் செய்தான்.

நேற்று ரசி வீட்டை விட்டு வந்த பின்னும் என்று ஆதியை அகரன் பார்த்தான். அவளை கொல்ல எங்க வீட்டுக்குள்ளவே ஆள் வந்துட்டாங்க அகரன் அழுதான்.

அவளை எதுக்கு யார் கொல்லப் போறாங்க? துகிலன் கேட்க, இதோ இருக்காலே கேடி இந்த பருவதி தான். எல்லாம் ஆதி மச்சானுக்காக. அப்ப இலக்கியா அண்ணி? மெல்லினா கேட்க, அவளையும் இவள் தான் கொன்றாள். போதிய ஆதாரமும் கிடைச்சிருச்சு. அப்பா காட்டிய அந்த முடியும் அவள் என்னை பார்க்க வந்தாள். அவள் குடித்த தண்னீரிலும் டி என் ஏ டெஸ்ட் எடுத்ததில் இவள் தான் என நிரூபணமானது.

“இலாவ? நீ தான் கொன்னீயா? அவளோட சாவுக்கு நீ தான் காரணமா? கூடவே இருந்து கழுத்தருத்துட்டேல்லடி” துகிலன் பருவதி கழுத்தை பிடித்தான்.

அது எப்படி நான்னு சொல்றீங்க? எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது பருவதி சொல்ல, “உனக்கு பேச கூட அதிகாரமில்லை” என்று அகரன் கத்தினான்.

“நானில்லை” என்று அழுது அவள் நாடகமாட, பருவதி ரசிகாவை கொல்லச் சொல்லி அனுப்பிய ஆளும், இலக்கியாவை கொல்ல பருவதிக்கு உதவிய அந்த சீனியர் டாக்டரும் கையில் விலங்கிட்டு வந்து நின்றனர்.

இப்ப ரசி எங்க இருக்கா? நல்லா இருக்காலா? ஆதி பதறினான்.

அவளுக்கு இப்ப பரவாயில்லை. கத்தி மேற்கையின் அடியில் தான் பட்டது. விபு கூட இருக்கான் என்ற அகரன், அதுக்காக யாரும் அவளை பார்க்க வர வேண்டாம். நீங்க வந்தா இந்த ஊரை விட்டு கிளம்பிடுவேன்னு சொன்னா? அவளை நாங்க பார்த்துக்கிறோம். “செய்ய வேண்டியவங்க செய்ய வேண்டியதை செய்தால் எல்லாமே சரியாகும்” என்றான் அகரன்.

இன்ஸ்பெக்டர், இந்த பொண்ணையும் அவள் குடும்பத்தையும் இழுத்துட்டு போங்க என்று பிரபாகரன் சொல்ல, குடும்பமா? துகிலன் கேட்டான். “அவங்க உதவியால தான் இந்த அளவு செஞ்சிருக்கா இந்த பொண்ணு” என்றார் பிரபாகரன்.

அப்பா, அந்த போதை மருந்து விற்பனை செய்பவனை கண்டறிந்து பிடிச்சுட்டாங்களா? மெல்லினா கேட்டாள்.

இல்லம்மா. சீக்கிரம் பிடிச்சிருவாங்க என்றார்.

எல்லாரும் ரசிகாவை நினைத்து வருந்தினர். அதான் சொன்னேன்ல்ல. திரிவேஷ் அம்மா, அப்பா, தமிழப்பா, நான் எல்லாரும் இருக்கோம் என்று அகரன் அவர்களை தேற்றி போலீஸூடன் சென்றான். ஆதி நீ இரு. நான் மாப்பிள்ளையோட போயிட்டு வாரேன் என்று பிரபாகரனும் சென்றார்.

சற்று நேரத்தில் ஆதி திரிவேஷை அழைத்து, ரசிகா தூங்கிய பின் அவளுக்கு அடிப்பட்டதையும் அவளையும் வீடியோவில் காட்ட சொன்னான். மதியத்தின் பின் ரசிகா தூங்கிய பின் சுரேகா அவளை ஆதிக்கும் அவன் குடும்பத்தினருக்கும் காட்டினாள். துகிலன் எட்டி நின்று அவளை பார்த்தான்.

இரு நாட்களில் ரசிகாவிற்கு சரியானது. இலக்கியாவை கொலை செய்த குற்றத்திற்காக பருவதிக்கு ஆயுள் தண்டனையும், தமிழரசனின் நண்பருக்கு

பத்தாண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

ரசிகாவும் ஆதியும் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிட்டாலும் விலகியே இருந்தனர். ரசிகா தற்போது அவளோட சின்ன அண்ணன் வீட்டில் இருந்தாள். தனியாக வசிக்கும் பேச்சுலர் பசங்களுக்கு உணவு தயாரித்து விபுவிடம் கொடுத்து விட்டு சம்பாதித்து வந்தாள். அவள் அண்ணாவும் அண்ணியும் அவள் பணத்தை ஏற்க மறுத்தனர். ஆரவ், யோகி படிப்பு மற்றும் இதர செலவுகளை அவர்களே பார்த்துக் கொண்டனர். அவ்வப்போது லிது நிதுவை உணவு இடைவேளை நேரம் சென்று வந்தாள் ரசிகா. ஆனால் ஆதியுடன் பேசாமல் மனம் தவித்து இருந்தாள்.

ஆதிரேயனும் வீட்டிற்கு வந்தாலே ரசிகா நினைவிலே இருப்பான். அவனை பார்த்து பிரபாகரனும் சவிதாவும் மிகவும் கவலையுற்றனர். சவிதா முடிவெடுத்தவராக துகிலனை சந்திக்க அவன் அறைக்கு வெளியே நின்றார். அவனுடன் பேசவே அவருக்கு தயக்கமாக இருந்தது.

“யாரோ நிற்பது போல் இருக்கே?” என்று துகிலன் கதவை திறந்து அவன் அம்மா நிற்பதை பார்த்து, உள்ள வாங்க என்றான்.

உள்ளே வந்த சவிதா சற்றும் யோசிக்காமல் துகிலனது காலில் விழுந்தார். அவன் விலகி கண்ணீருடன் அம்மா,..என்று அழைத்து அவரை எழுப்பினான்.

எதுக்கு இதெல்லாம்? அவன் கேட்க, என்னை மன்னிச்சிருப்பா. எல்லா பிரச்சனையும் என்னால் தான். நான் தான் உனக்குள் தவறான எண்ணத்தை புகுத்தி விட்டேன். ஆதியும் உன் அப்பாவும் சரியாக தான் இருந்திருக்காங்க. எங்கே நம்மை உன் அப்பா ஒதுக்கி விடுவாரோன்னு பயந்தும் பணத்திற்காகவும் தான் தவறாக நடந்து நானும் முட்டாளாகி, உன்னையும் முட்டாளாக்கி நம் அனைவரின் சந்தோசத்தையும் தொலைத்து விட்டேன். இனி எல்லாருமே சேர்ந்து சந்தோசமாக இருக்கணும்ன்னு நினைக்கிறேன். ரசி சொன்னதை கொஞ்சம் யோசித்து பாருப்பா. உனக்கு ரசியை பிடித்திருக்கலாம். ஆனால் அவளுக்கு ஆதியை தான் பிடிக்கும். உன் தாலியை அவள் கழுத்தில் சுமந்தாலும் ஆதியை மனதில் சுமந்து கொண்டிருக்கிறாள்.

நீ வரும் சில நாட்களுக்கு முன் தான் ஆதியை ரசிகா ஏற்றுக் கொண்டாள். இருவரும் மனதளவில் கணவன்- மனைவியாகவே வாழ ஆரம்பிச்சாங்க. இப்ப ஆதி வேலையில் கவனமில்லாமல் இருக்கான். நாம் செய்த தவறுக்கு இருவரையும் சேர்த்து வைக்கலாமே?  கொஞ்சம் யோசித்து பாருப்பா. உனக்கு வேற நல்ல பொண்ணா பார்த்து நான் கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று அழுது கொண்டு மீண்டும் அவன் காலில் விழுந்தார் சவிதா.

துகிலன், “அம்மா செல்லமாச்சே!” அவன் மனம் கனத்து புரியாமல் அவரிடம், “யோசிக்கிறேன்” என்றார். அவனை அணைத்து “எல்லாரும் கண்டிப்பாக உன்னை ஏற்றுக் கொள்வது என் பொறுப்பு” என்று வெளியேறினார்.

மறுநாளே துகிலன் ஆதியிடம் பேசலாம் என்று கீழே வந்தான். ஆதி, “சாப்பிட்டு போ” என்று சவிதா சத்தமிட்டார். “வேண்டாம்” என்று அவன் சென்றான். அவன் பின் துகிலன் செல்ல, அவனையும் சவிதா சாப்பிட அழைத்தார்.

நான் வெளிய போகணும். போயிட்டு வந்து சாப்பிடுறேன் என்று ஆதியின் காரை துகிலன் காரில் பின் தொடர்ந்தான்.

ஆதி முதலில் சென்றது ரசிகாவின் அண்ணன் வீட்டிற்கு. தூரத்திலே காரை நிறுத்தி விட்டு, ரசிகா அண்ணன் கிரி தேவ்வின் வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டிற்குள் சென்றான். அங்கே ஓர் தாத்தாவும் பேரனும் இருந்தனர். அவர்களிடம் கேட்டு விட்டு ஓர் அறைக்கு சென்றான். அந்த அறைக்கு எதிரே தான் கிரி வீட்டின் சமையலறை. ஆதி சென்ற நேரம் ரசிகா சமையல் வேலையில் பிஸியாக இருந்தாள். கவலையுடனும் ஏக்கமுடனும் ஆதி ரசிகாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

துகிலனுக்கு ரசிகா அங்கே இருக்கிறாள் என்று தெரியாது. ஆதியை பின் தொடர்ந்து வந்து அவனை கவனித்த துகிலன் ஆதி சென்ற வீட்டிற்கு வெளியே யோசனையுடன், இந்த சின்ன வீட்டில் இவன் என்ன செய்கிறான்? என்று அவ்வீட்டை பார்த்துக் கொண்டே நின்றான்.

வெளியே வந்த கிரிதேவ் துகிலனை பார்த்து கோபமாக, இங்க எதுக்கு வந்த? பணக்கார வீட்டு பையன். ரசியை நல்லா பார்த்துப்பன்னு தானடா. பணம் வாங்கினாலும் முடித்து கொடுத்தோம். ஆனால் நீ என்னடா செஞ்சுட்ட? என்று கையை ஓங்கினான்.

“அமைதியா இருங்க” என்று துகிலன் அவனை தனியே இழுத்து தூரமாக அழைத்து சென்று, ரசிகாவை பற்றி கேட்டான்.

ஆனால் கிரி கோபத்தில் அவனை அடித்து விட, எனக்கு திருமணத்தில் பெரியதாக நம்பிக்கை இல்லை. ரசிகா என்னுடன் ஆறுதலாக இருக்கணும் என்று தான் ஒருவரிடம் அவளை விசாரித்தேன். கல்யாணமில்லாமல் எப்படி? என்று அவன் கேட்ட பின் தான், அவளை கல்யாணம் செய்து கொள்ளணும்ன்னு உங்களிடமும் உங்க அண்ணனிடமும் பேசினேன். அவளை எனக்கு பள்ளி கல்லூரியிலே தெரியும். அவளை பிடிக்கவும் செய்யும்.

சரிப்பா, ஆனால் இப்ப அவ மனசுல நீ இல்லை. அவ உன்னோட அண்ணனை தான் காதலிக்கிறாள். இதுவரை அவளை பற்றி நாங்கள் பெரியதாக எண்ணியது கூட இல்லை. ஆனால் இப்பொழுது அவளுக்காக ஏதாவது செய்யணும்ன்னு நினைக்கிறோம். அவள் சரியா சாப்பிட கூட மாட்டேங்கிறா. கையில் போனையே எடுக்காத பொண்ணு கையில் போனுடனும் கண்ணீருடனும் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. அவளுக்கு கஷ்டத்தை வெளியே காட்டி பழக்கமில்லை. சொல்லலைன்னாலும் ரொம்ப அமைதியா இருக்கா. பசங்களுடன் கூட நேரம் செலவழிக்க மாட்டேங்கிறா. பசங்களும் வருத்தப்படுறாங்க. அவளுக்கு “டிவோர்ஸ் கொடுத்திருப்பா ப்ளீஸ்” என்று கிரி துகிலன் கையை பிடித்து கெஞ்சினான். துகிலன் அவன் கையை நகர்த்தி விட்டு காரை எடுத்தான். கிரி சோகமான வீட்டிற்குள் வந்தான்.

ஏய், ரசி என்னடி பண்ற? என்று சின்ன அண்ணி சத்தம் கேட்டு பதறி கிரி உள்ளே வந்தான். அடுப்பை தாண்டி நெருப்பு எறிந்தது. ரசிகா ஆதியை நினைத்துக் கொண்டு கண்ணீருடன் அடுப்பை கவனிக்க தவறினாள்.

தன் அண்ணியின் சத்தத்தில் ஆதி நினைவிலிருந்து மீண்டு அடுப்பை அணைத்தாள் ரசிகா. நெருப்பு அணையவில்லை. இவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதி பதட்டமானான். ஆனால் வெளியே வந்து ரசிகாவிற்கு உதவ முடியாமல் தவித்தான். பசங்களும் அங்கு வந்தனர்.

குடத்து நீரை எடுத்து மொத்தமாக நீரை ஊற்றி நெருப்பை அணைத்து விட்டு கிரி ரசிகாவை திட்டினான்.

அண்ணா, சாரி என்று அழுது கொண்டே அறைக்கு சென்றாள் ரசிகா. அத்த நில்லு, “நான் வாரேன்” என்று அவள் பின்னே சென்றான் விபுதன்.

“நீ ஸ்கூலுக்கு கிளம்பு” என்று அழுது கொண்டே உள்ளிருந்து பதிலளித்தாள். விபுதன் வெளியே வந்து, அவளறை சன்னலை தட்டினான். அவள் சத்தம் கேட்காமல் இருக்க, வெளியே நின்று அழைத்துக் கொண்டிருந்தான்.

கிரி வெளியே வந்து, டேய் எதுக்கு கத்திக்கிட்டு இருக்க? அவ தனியா இருக்கட்டும். அவளை விடு. நாங்க பார்த்துக்கிறோம். நீ போ. ஸ்கூலுக்கு கிளம்பு என்று அவனை விரட்டினார்.

சித்தப்பா, அத்தை..?

அவ என்னோட தங்கச்சி பார்த்துக்க எனக்கு தெரியும். நேரமாகுது. நீ கிளம்பு என்று அனுப்பி வைத்தார். அவனும் கிளம்பி உணவை அந்த பசங்களிடம் சேர்த்து விட்டு பள்ளிக்கு கிளம்பினான்.

பசங்களில் ஒருவன் கேரியரை கொடுக்க வந்தான். ரசிகா வருத்தமாக வெளியே வந்து அமர்ந்திருந்தாள். அவளுக்கு ஏதுமில்லை என்று அவளை பார்க்கவும் தான் ஆதிக்கு நிம்மதியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!