Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கற்ப(னை)து சுகமானதே...

கற்பனை 26

 

கற்பனை 26

 

கணவனின் காதல் பார்வையில் கட்டுண்டு  இனிமையாய் அனுபவித்துக்கொண்டிருந்தாள்  திருமகள்.  திருமணம் முடிந்து இத்தனை வருஷங்கள் முடிந்த நிலைமையில் இவ்வாறான அனுசரிப்புகள் அவள் அனுபவித்தறியாதது. அவள் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த பொய்த்துப் போயிருந்த விஷயம் இப்போது நடந்து விட்டிருக்கிறது.



Advertisement

கணவனது வெறித்தனமான உடலுலுறவில் அவள் தோய்ந்து ,தளர்ந்து எழவும் முடியாமல் அவஸ்தை பட்ட நொடிகளுக்கு கணக்கே கிடையாதே!      இன்று அவளுக்கு பிறந்த வீட்டு உறவு என்பதே அடியோடு இல்லை என ஆனதற்கு நிச்சயம் நிவாஸ் மட்டுமே காரணம். ஆனால் ,இதோ இந்த திருமண உறவுக்கு இன்று சாட்சியாக வயிற்றில் அறுபது நாள் கரு. 

Advertisement

அதைத் தாங்கிக் கொண்டிருப்பது அவளானாலும் ,அவளையும் சேர்த்து தாங்குகிறான் நிவாஸ். உலகில் அதிசயங்கள் எவ்வளவோ தெரியாது. அவளை பொறுத்தமட்டில் இதுதான் மற்ற எல்லாவற்றையும் விட பெரிய அதிசயம். அவள் சூல் தரித்த நாளில் இருந்து அவளை உள்ளங்கையில் வைத்து பார்த்துக்கொள்கிறான்,கடிந்து ஒரு வார்த்தை பேசுவது கிடையாது. அவளை தனியே விட்டு எங்கும் செல்வதும் இல்லை .வேலை விஷயமாக கூட வெளியே தங்குவதும் இல்லை.

Advertisement

மோகத்தில் மட்டும் அவளைக் கூடியவன் இப்போது, கூடலில் அவள் முகம்பார்த்து காதல் செய்கிறான். தன் கணவன் இவ்வளவு ரசனை கொண்டவன்  என்பதை முழுவதுமாக அவள் புரிந்துகொள்ளும் தருணங்கள் இவை. எப்படி இருந்தாலும் கணவனை முழுமையாக நம்ப அவள் தயாராக இல்லை.அதற்க்காகவெல்லாம் அவளது முட்டாள்தனம் குறைந்துவிட்டதா..என்று யோசிக்கவேண்டாம். 

Advertisement

கணவன் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.அதற்கு நூறு சதவிகிதம் வாய்ப்பு உண்டு என்று அவள் மனதார காத்திருக்கிறாள்.(?)  அவளே நினைத்து பார்த்திராத அளவுக்கு நிவாஸ் அந்த குழந்தையை எதிர்பார்த்திருந்தான். ஏற்கனவே சென்னை சென்ற பொழுது திருமண வீட்டில் நடந்த நிகழ்வுகள் அவனுக்கு தகப்பனாகும் வெறியை உண்டுபண்ணியிருக்க, நிரூபனும் தன் பங்குக்கு,திருமணம்-குழந்தை-நிவாஸின் வருமானம் பற்றியெல்லாம் எடுத்திருந்த வகுப்புகளும் நிவாஸ் மனதில் நிறையவே மாற்றங்களை கொடுத்திருந்தது. 

நிரூபனும் ,”எப்படியும்,நம்ம காதல்னால நமக்கு குழந்தை ஒன்னு கூட பிறக்காது. நா சம்பாதிக்கறதும்,உன்னோடதும் உனக்கு பிறக்கும் குழந்தைக்கு தான் . அதனால தாராளமா மூணு கூட பெத்துக்கோ என்று விளையாட்டாய் வினையை விதைத்திருந்தான். இருவருமாக சேர்ந்து எடுத்த முடிவு.கொஞ்ச காலத்திற்கு சந்திக்காமல் தொடர்பு எல்லைக்கு வெளியே நின்றுகொள்ள வேண்டுமென்பது.

நிரூபனை பற்றியெல்லாம் திருவுக்கு இன்றுவரை தெரியாது. கணவனின் மாற்றங்கள் நிலைக்குமா என்ற கேள்விமட்டும்தான். திருமகள்   தன் கையில் இருக்கும் பழச்சாற்றை பருகி கொண்டிருக்க,அருகே அமர்ந்திருந்த நிவாஸோ ,”திரு, இந்த குழந்தை பிறந்த பிறகு நாம இன்னும் மினிமம் ரெண்டாவது பெத்துக்கலாம்.உன்னையும் பசங்களையும் நா நல்லா பார்த்துப்பேன்என்று விட்டு அவளது  உச்சி முகர்ந்தான்.

கணவனது செய்கையில் அவளுக்கு மூச்சு அடைத்தது. இதுபோன்ற வார்த்தைகளை அவள் எதிர்பார்க்கவில்லை.இந்த வார்த்தைகளை சொல்லும் அவனது குரலில் ஒருவித தீவிரம் இருப்பதை உணர்ந்து கொண்டவளுக்கோ,லேசாக உடல் காரணம் இன்றி பதறியது.  அதை உணர்ந்தவன் கண்கள் மின்னியது. இன்னமும் மனைவிக்கு தன் மீது இருக்கும் பயத்தை விடவில்லை என்பது அவனுக்கு ஒருவித போதையை கொடுத்தது. 

மனைவியை இன்னமும் இறுக்கி அணைத்துக்கொண்டவன் அவளை சிறிது நேரம் கழித்தே விடுவித்தான். மிகவும் சோர்வாக உணர்ந்தவள்எனக்கு கொஞ்சநேரம்  படுக்கணும் போல இருக்குஎன்றுவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாள். அவள் மனம் மிகவும் குழப்பம் அடைந்திருந்தது.இன்னமும் இருவருக்கும் தனித்தனியான அறைகள் தான்.இரவில் மட்டும் மனைவியை தனது அறைக்குள் அனுமதிப்பவன் 

இந்த நிலைமையில் கூட பகல் நேரங்களில் தனது அறைக்குள் மனைவியை அனுமதிப்பது இல்லை. அவனை நெருங்குவது கூட அவளை பொறுத்தவரை அவனுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இதோ,இப்போதுகூட அவன் இவளை அணைத்துக்கொண்டான்.பதிலுக்கு அவனை உரிமையுடன் இவளால் தொடக்கூட முடியாது. அப்படி இருக்கும் பொழுது இன்னும் அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அவன் சொல்வது சாத்தியமா என்ன?

அவளது கருவுற்றிருக்கும் நாட்கள் கணவனது கவனிப்பிலும் ,மனதின் குழப்பங்களிலுமே கழிந்தது. அவளால் தன்னில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. மாதங்கள் இரண்டிலிருந்து இப்போது ஏழாவது மாதத்தில் வந்து நிற்கிறது . வீட்டிலேயே இருப்பதால் எப்போதும் இலகுவாக தளர நைட்டியை அணிந்து கொண்டிருந்தாள். மருத்துவமனை செல்லும் சமயங்களில் மட்டும்  அவன் வாங்கி கொடுத்திருந்த சில இலகு ஆடைகள். வயிறு ரொம்பவும் பெரியதாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.மனமோ தனது குடும்பத்தை தேடியது.

இடுப்புவலி, நெஞ்சு எரிச்சல் என்று பலவிதமான உடம்பு உபாதைகள். அவளால் மனம் விட்டு தனது கணவனிடம் இதையெல்லாம் சொல்ல முடிவது இல்லை.மருத்துவ மனையில் இவற்றுக்கான மருந்துகள் கொடுத்திருக்கிறார்கள் தான். நிவாஸுக்கும் தெரியும் இவளது நிலை. ஆனால்,அவனால் இதற்கெல்லாம் என்ன செய்துவ்விட முடியும்?

வேற்று வழியில்லாமல் தன்னுடைய பெற்றவர்களை இங்கே அழைத்துக்கொண்டான். இத்தனை வருஷங்களாக அமெரிக்க மண்ணை பார்த்திராத  அவர்களுக்கு மருமகளையும்,பிறக்கப் போகும் பேரக்குழந்தையையும் விட சுற்றிப்பார்க்க அதிகம் ஆசை இருந்தது. திருவின் மாமியார் தனது மகன் அங்கே இல்லாத சமயம் அவளிடம்,”நீ கல்யாணம் ஆகி இங்கே வந்திட்டே.நிவாஸ் உனக்கு இங்கே எல்லா இடத்தையும் சுத்தி காமிச்சு இருப்பான். ஏற்கனவே பார்த்த இடம் தானே.இந்த நேரத்துல அலைய வேணாம். வீட்டுல இருஎன்றுவிட்டு  நிவாஸிடம் வெளியே அழைத்துச் செல்லக் கோரி  வந்து நின்றார்கள். 

முதலில் மறுத்த நிவாஸ் பிறகு என்ன நினைத்தானோ, மனைவியையும் சேர்த்து அழைத்துக்  கொண்டு டிஸ்னி லாண்டுக்கு சென்றான்.போகும்பொழுது வழியெங்கும் அவளுக்கு உடம்பு படுத்தி எடுத்தது.பிறகு டிஸ்னி லாண்டில் அவளுக்கு சந்தோசம் வந்துவிட்டது. ஆர்பரித்தாள் .குதூகலித்தாள் . நிவாஸின் மாமியார் மாமனாருக்கு நிவாஸிடம் கோவம் வந்தது.மனைவியை அவன் தாங்குவதையும் ,முன்பு தங்களிடம் அவனுக்கு இருந்த அலட்சியத்தையும்  நினைத்து பார்த்தவர்களுக்கு காரணமே இல்லாமல் திரு எதிரியாகிப்போனாள் .

திரும்ப வரும்பொழுது திருவுக்கு உடம்பு படுத்தல் அதிகமாக இல்லை. நிவாஸின் அம்மாவுக்கு,கணவனை தன்னுடனேயே வைத்திருக்க  திரு கொஞ்சம் அதிகமாக நடிப்பதை   போல தோன்றியது. மனதுக்குள் கோவம் கொண்டாள் . திரும்ப வந்த பிறகு திரு முன்னைக்கு சற்று நன்றாக இருந்தாள் . மனதில் குறித்துவைத்துக்கொண்ட நிவாஸ் இரண்டு வாரங்கள் கழித்து தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு நயாகரா நோக்கி பயணம் செய்தான். 

ஒன்பது மாதங்கள் முடியும் சமயத்தில் திருவுக்கு பிரசவ வலி எடுத்துவிட்டது.  திரு அழகான இரட்டை  பெண் குழந்தைகளை பெற்று எடுத்தாள்.  நிவாஸின் முன் நன்றாக நடந்துகொள்ளும் அவனது அம்மா, அம்மா அவன் கண் மறைவில் தனது மருமகளிடம் மாமியாராக நடந்து கொள்ளவும் திரு உள்ளூர ஒடுங்கிப்போனாள் .பேறு காலத்திற்கு பிறகு வரும் மன அழுத்தம் அவளை இழுத்துக்கொண்டது. போதிய கவனிப்பும் இல்லை. உடம்பு தளர்ச்சி கொண்டது. நிவாஸுக்கு வேலைச்சுமை அதிகமானதில் அவனால் மனைவியை பற்றி அதிகம் யோசிக்க முடியவில்லை. குழந்தைகளுடன் மனைவியையும் காலை மாலை இரு நேரமும் பார்ப்பதுதான். 

மற்ற நேரங்களில் ஒன்று தனது அறைக்குள் லேப்டாப் சகிதம் அமர்ந்திருப்பான் அல்லது அலுவலகம் சென்றிருப்பான். திருமகள் ஒரே ஒரு முறை அவனிடம் கேட்டாள் ,”என்னங்க ..நமக்கு ரெட்டைகுழந்தை பிறந்திருக்குன்னு எங்க பேரெண்ட்ஸ்சுக்கு சொல்லீட்டங்களா ?எனக்கு ஹெல்ப்புக்கு அவங்கள வரச்சொல்லி கேக்கலாமா?”

அவளது கேள்வியில் ஒருநொடிக்கும் கீழாக அவளை அனல் பறக்கும் பார்வையில் எரித்தவன்,தன்னை சாதாரணமாக்கிக் கொண்டான்.இல்லே திருமகள்.அவங்ககிட்ட சொல்லல.சொல்லணும்னு தேவையும் இல்ல. உனக்கு என்னோட அம்மாவோட சரிபடல்லேண்ணா நீயே சமாளிச்சிக்கோ.அவங்கள பேக் பண்ணி அனுப்பிடறேன்.பட் உங்க வீட்டுலேந்து யாரும் வேணாம்என்று முடித்துவிட்டான்.

திரு அதற்குப்பிறகு வாயை திறக்கவில்லை. மனைவிக்கு தனது அம்மாவிடம் சரிப்படவில்லை என்று உணர்ந்தவன் அவர்களை திரும்பவும் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டான். குழந்தைகள் பிறந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் திரு தானே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை. முடிந்த நேரத்தில் நிவாஸ் குழந்தைகளை பார்த்துக்கொண்டான்.ஆனாலும்,பழக்கமில்லாத நிலையில் அவளால் சமாளிக்க முடியவில்லை. தூங்கும் நேரம் மாறியது. கோவமும் எரிச்சலும் அதிகமாகியது. அவளது நிலையை  புரிந்து கொள்ள முடியாமல்  ,நிவாஸ் தனது ப்ரோமோஷன் வேளையில் வேறு எதையும் பார்க்க விரும்பவில்லை.அவன் எதிர்பார்த்த வி.பி பதவியும் கிடைக்க அவனது கர்வமும் கூடிப்போனது.

குழந்தைகளும் பிறந்து ஒருவழியாக முதல் வருஷ பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்தான் நிவாஸ். நிரூபனை அழைக்காமல் விடுவதற்கு நிவாஸின் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.விபரீதம் விமானம் ஏறி வந்து கொண்டிருப்பதை அறியாத திரு ஓரளவு சந்தோஷமாகவே இருந்தாள் .

நிவாஸ் அவளுக்கும் குழந்தைகள் லயா -ரியா இருவருக்கும் என மூவருக்குமாக ஒரே மாதிரியான பிளாட்டினம் அணிகலன்களை வாங்கி கொடுத்திருந்தான். கொஞ்சம் பூசிய வாகில் இருந்த மனைவியின் உணர்வுகளை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் நிவாஸ். அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று கணிக்க எண்ணினான். அவள் முகமோ கொஞ்சமாய் புன்னகை சிந்தியது.விழாவுக்கு இன்னும் ஒரே நாள் எனும் பொழுது அங்கே வந்து சேர்ந்தான் நிரூபன். லேசாக ஒட்டிக்கொண்டிருந்த சந்தோஷ உணர்வை தொலைத்து ,பூமிக்குள் சென்று விட மாட்டோமா..என்று நொந்து போனாள் திரு. 

அவளை ஏற்கனவே நிவாஸின் திருமண புகைப்படத்தில் பார்த்திருந்த நிரூபனுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. விழாவில் திருவின் அலங்காரமும், குழந்தை பிறந்த பிறகான அவளது தோற்றமும் நிரூபனுக்கு புகைச்சலை ஏற்படுத்தியது. திரு அவனை தெரிந்தவனாக காட்டிக்கொள்ளாமல் இருந்தது வேறு அவனை உசுப்பேற்ற  பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடியும் வரை அமைதியாக இருந்தவன்,நிவாஸுடன் திரு பேசிக்கொண்டு இருக்கும்பொழுது வேண்டுமென்றே அவர்களின் பேச்சை தடை செய்வது போல், “நாம கல்யாணம் செஞ்சுக்கிட்டிருந்தா  இந்த குழந்தைகள் நம்மோடதா இருந்திருக்கும். ம்ஹும்..இன்னும் கொஞ்சம் பெரிய குழந்தைகளா இருந்திருக்கும் .இல்லே திரு?”என்றான்.

அவன் கேள்வியில் திரு சோர்ந்துபோனாள் . அவள் பதில் எதுவும் சொல்லும் முன்பே,நிரூபன் அவர்களது காதல் கதையை நிவாஸிடம் சுவாரஸ்யமாய் பகிர்ந்து கொண்டவன்  ,”பரவாயில்ல நிவாஸ்,என்னோட காதலியும் உன்னோட மனைவியும் ஒருத்தர் தான் என்று ஏதோ பெரிய ஹாஸ்யம் சொன்னது போல் சிரித்து வைத்தான்நிவாஸ் கேட்டான்,”அப்போ என்னோட கல்யாண போட்டோ பார்த்தப்போ ஏன் என்கிட்ட சொல்லல?”

நிரூபனிடம் பதில் இல்லை . திருவிடமும் எந்த விளக்கமும் இல்லை.விதியின் ஆட்டம் இன்னும் என்னவோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!