Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-12

உமையாள் பார்ப்பது கூட அந்த பெண்ணின் கருத்தில் பதியாமல் போக, அப்பெண் பார்த்தது பார்த்தபடியே இருந்தாள்.

வசீகரன் மற்றும் பாலா இருவரும் அருகருகே நிற்க, அவள் யாரை பார்க்கிறாள் என புரியாமல் முழித்து கொண்டு நின்றாள் உமையாள்.

துணிகளை பார்ப்பது போல, உமையாள் அப்பெண்ணையும் கவனிக்க, அவ்ளோ இன்னமும் சுற்றம் உரைக்காமல், கண்களை இவர்கள் பின்னே உலவ விட்ட படியே இருந்தாள்.

ஒரு கட்டத்தில் காதல் எனும் சுழலில் இருந்து வெளிவந்த அப்பெண், அப்போது தான் உமையாளை பார்த்தாள். அவளின் புருவங்கள் யோசனையில் சுருங்க, அவள் அங்கிருந்து செல்ல ஆயுத்தம் ஆவது புரிந்தது உமையாளுக்கு.



Advertisement

உமையாள் அப்பெண்ணிடம் செல்வதற்காக ஒரு எட்டு எடுத்து வைக்க, அதே நேரம் வசீகரன் உமையாளின் கை பிடித்து, தன் பக்கம் திருப்பி ஏதோ கேட்க, அவசரமாக அவனுக்கு பதில் அளித்துவிட்டு உமையாள் திரும்பி பார்க்க, அப்பெண் நின்ற இடம் வெறுமையாக இருந்தது.

உமையாள் அப்படியே அவர்கள் இருந்த பிரிவை மொத்தமாக விழிகளில் அலச அப்பெண்ணின் சுவடே இல்லை அங்கு.

இப்படி தவற விட்டுவிட்டோமே என்று கொஞ்சம் கடுப்புடனே திரும்ப, பாலா அங்கு, அவனுக்கு எதிரில் இருந்த ஒரு பெண்ணை கவர பகிரத பிரயர்த்தனம் செய்தபடி இருந்த காட்சி கண்களில் விழுந்தது.

Advertisement

அப்பெண் யாரை பார்த்தாள் என்று புரியாத குழப்பம், இப்போது அந்த பெண்ணை தவறவிட்ட கடுப்பு என எல்லாம் பாலாவின் செயலில் இரண்டு மடங்கானது.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

Advertisement

அங்கு ஒரு பெண் அப்படி ஒரு காதல் பார்வை பார்த்து வைக்கிறாள், இருவரில் ஒருவருமே அதை உணராமல், ஒரு ஜடம் மாதிரி நின்றுவிட்டு, இங்கு செய்யும் சேட்டையை பாரேன் என கொதித்து போனவள், அமைதியா பாலாவை நெருங்கினாள்.

மிகவும் இனிமையான குரலில், “பாலா அண்ணா” என, பாலாவை சற்று உரக்கவே அழைத்தாள் உமையாள்.

பாலாவின் கவனத்தோடு, அவனுக்கு எதிரில் இருந்த அப்பெண்ணின் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியதை உறுதி செய்து கொண்டவள்,

“அண்ணி இப்போ தான் போன் பண்ணாங்க, உங்க சின்ன பையன் நீங்க வந்து சொல்லி கொடுத்தா தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறானாம், அதும் இந்த வருஷம் டெண்ட்த் வேற இல்ல, அதான் அண்ணி, காலேஜ் போற உங்க பொண்ணுக்கு ட்ரெஸ் எல்லாம் ஷாப்பிங் பண்ணி முடிச்சிட்டா, சீக்கிரமா வர சொல்றாங்க” என ஏற்ற இறக்கத்தோடு சொன்னாள்.

உமையாள் அழைத்ததும் அவள் புறம் திரும்பிய பாலா, அவள் பேச ஆரம்பித்ததும் “பே, பே” என முழித்துகொண்டு நின்றான்.

உமையாள் பேசி முடித்ததும், அவன் கேள்விகேட்க வாயை திறக்க, அப்போது தான் உமையாளின் குறும்பு சிரிப்பை பார்த்தவன், அவசரமாக பின்னாடி திரும்பி பார்க்க, அப்பெண்ணோ “தாத்தாவா நீ” என்று பார்த்த பார்வையில் நொந்தே விட்டான்.

வசீகரன், அவனும், உமையாளும் தேர்ந்தெடுத்த துணிகளுக்கு பணம் செலுத்த சென்றிருக்க, உமையாள் அவனிடம் செல்வதற்காக நடக்க, உடன் பாலாவும் இணைந்து கொண்டான்.

ஏனோ ஏதோ தீவிர சிந்தனையிலே பாலா வர, பாலாவின் அமைதி உமையாளுக்கு என்னவோ போல இருக்க,

“கொஞ்சம் ஓவர் அஹ டீஸ் பண்ணிட்டமோ???, ஒருவேளை அதான் கோவமோ இருக்காங்களோ, ஆனால் நம்ப பாலா அண்ணா கோவம் எல்லாம் பட மாட்டாங்களே” என யோசித்தவள், அவனிடமே கேட்டுவிடும் எண்ணத்துடன்,

“என்ன அண்ணா, அமைதியா வரீங்க, கோவமா இருக்கீங்களா” என கேட்க, அவளின் கேள்வியில் தன் சிந்தனை கலைந்து, அவளை பார்த்த பாலா, சாதாரணமாக,

“கோவமா, எதுக்கு உமா” என நிஜமாகவே புரியாமல் கேட்க, சற்றே ஆசுவாசமான உமையாள்,

“அப்போ ஏன் சைலண்ட் அஹ வரிங்க” என கேட்க, பாலாவோ வெகு தீவிரமாக,

“இல்ல நீ எனக்கு காலேஜ் படிக்கிற பொண்ணு, டெண்ட்த் படிக்கிற பையன் இருக்கானு சொன்னதும், அந்த பொண்ணு அப்படியே நம்பிடுச்சே, என்னை பார்த்தா அந்த அளவுக்கு வயசான மாதிரியா இருக்கு உமா” என நிஜமாகவே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்டான்.

அவனின் கேள்வியில், அவனின் பாவனையில் உமையாள் வாய் விட்டு சிரிக்க, கடையில் இருந்தவர்கள் எல்லாம் இவர்களையே பார்க்க, உமையாள் தன் கை கொண்டு வாயை மூடி சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு நிற்க, பாலாவோ பாவமாக நின்று கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக சிரித்து முடித்த உமையாள், பாலாவை பார்த்து,

“அந்த பொண்ணு கிடக்கு அண்ணா லூசு, நீங்க பார்க்க ராஜா மாதிரி இருக்கீங்க, உங்களுக்கு நாம ராணி மாதிரி பொண்ணு பார்ப்போம்” என அவனை சமாதானப்படுத்தி அழைத்துவர, வசீகரனும் துணி பைகளோடு வர, கிருஷ்ணாவும் சில பைகளோடு வந்து சேர்ந்தான்.

உமையாள் நடந்ததை சொல்லி, பாலாவை கலாட்டா பண்ணியவாறே வர, வசீகரனும் சேர்ந்து பாலாவை கிண்டல் பண்ண, கிருஷ்ணாவோ, வாய் ஓயாமல் பேசும் உமையாளை அவள் அறியாமல் ரசித்துக்கொண்டே, அதை தானும் உணராமல் வந்தான்.

நண்பர்கள் நால்வரும் அந்த பெரிய மாலில் இருந்த ஒரு உணவகத்துக்குள் நுழைந்தனர். பாலாவும், உமையாளும் பக்கத்து, பக்கத்து இருக்கையில் அமர, பாலாவிற்கு எதிர் இருக்கையில் கிருஷ்ணாவும், உமையாளுக்கு எதிர் இருக்கையில் வசீகரனும் அமர்ந்தனர்.

 

[the_ad id=”6605″]

 

ஒவ்வொருவரும் தங்களுக்கான உணவை தாங்களே தெரிவு செய்துவிட்டு, பேசி சிரித்து கொண்டு இருந்தனர். உணவு வரவும் அமைதியாக நால்வரும் உண்ண ஆரம்பித்தனர்.

சாதாரணமாக நிமிர்ந்த உமையாள், எதேர்ச்சையாக தன் வசீயின், கீழ் நோக்கி உணவில் கவனமாக இருந்த, குடை போல கவிழ்ந்து இருந்த அந்த விழிகளும், உருளும் கருவிழிகளையும் காண நேரிட்டது.

எப்போதுமே அவளை அவளின் வசீயை நோக்கி ஈர்க்கும், அவ்விழியீர்ப்பு விசையில் கட்டுடுண்டு அப்படியே அவ்விழிகளை தன் விழிகளில் நிரப்பிய படியே அமர்ந்திருந்தாள்.

தண்ணீரை எடுக்க நிமிர்ந்த வசீகரன், உமையாளின் பார்வையை கண்டு, புருவம் உயர்த்த, அப்போதும் அவள் அவளின் கனவுலகிலே சஞ்சரிக்க, தொண்டையை செருமி அவளை தரையிறக்க அவன் செய்த முயற்சி வெற்றியடைந்து.

கனவில் இருந்து விழிப்பவள் போல, திடுக்கிட்டு விழிக்க, அதேநேரம் “என்ன” எனும் விதமாக தன் புருவங்களை உயர்த்த, மாட்டிக்கொண்டதில் சங்கடமாக உணர்ந்த உமையாள், “ஒன்றும் இல்லை” எனும் விதமாக தலையாட்டிவிட்டு, குனிந்து தன் உணவில் கவனமாக இருப்பதை போல பாவ்லா செய்ய ஆரம்பித்தாள்.

வசீகரனின் செருமளில் நிமிர்ந்து பார்த்த பாலா, வசீகரன் கண்களாலே கேள்வி கேட்பதையும் அதற்கு உமையாள் பதில் சொல்வதையும் பார்த்தவன், உமையாளின் பக்கம் குனிந்து,

“என்னமா நடக்குது இங்க” என அவளை பரிகாசம் செய்யும் குரலில் கேட்க, உமையாளுக்கோ பக்கென இருந்தது.

“இவங்க எதை கேட்குறாங்க, ஒரு வேளை நான் வசீயை பார்த்ததை பார்த்து இருப்பாங்களோ” என யோசித்தவள், பார்த்திருந்தாலும் அதைப்பற்றி மேற்கொண்டு பேசவிடமால், ஏன் யோசிக்க கூட விடாமல், அவன் வாயை மூடும் விதமாக,

“ஆமா நீங்க கிருஷ்ணா கிட்ட ஏதோ கேட்கணும்னு சொன்னிங்க இல்ல, நான் வேனா மானே,தேனே எல்லாம் எஸ்ட்ரா போட்டு கேட்கட்டுமா” என வில்லி குரலில் கேட்டு வைத்தாள்.

ஏற்கனவே இப்படி ஒரு தடவை உமையாள் வசமாக கிருஷ்ணாவிடம் மாட்டிவிட்ட நினைவு அப்படியே கண் முன்னே விரிந்தது.

“போற போக்குல கேட்ட கேள்வியே அப்படி, இன்று எஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் போட்டு கேட்டா, அம்மாடியோவ் நான் அவ்ளோ தான், அன்னைக்கே அவன் கிட்ட அடி வாங்காமல் தப்பிச்சது பிள்ளையாரப்பா புண்ணியம்” என மனதிற்குள் யோசித்து, சுதாரித்து கொண்ட பாலா, உமையாளை பார்த்து,

“நான் எதுவும் பார்க்கவும் இல்ல, உன் கிட்ட எதுவும் கேட்கவும் இல்ல, நீயும் கிருஷ்ணா கிட்ட என்சார்பில் எந்த கேள்வியும் கேட்க வேண்டவே வேண்டாம், அதும் மானே, தேனே எல்லாம் என்னோட உடம்பு தாங்காது தங்கச்சி” என அவசர அவசரமாக சொன்னான்.

அவனின் வேகத்திலும், அவன் சொல்லிய பதிலிலும் அவனை பார்த்த உமையாள்,

“அது அந்த பயம் இருக்கட்டும்” என்பதாக ஒரு பார்வை பார்த்துவிட்டு உண்மையாகவே உணவில் கவனமானாள்.

வசீகரனோ தீவிர சிந்தனையின் வசம். அவனின் பாப்புவின் பார்வைக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று தான் அவனின் யோசினை விரிந்து கொண்டு இருந்தது.

அவனை பொறுத்தவரை அவனின் பாப்பு இன்னுமே சிறு பெண் தான், அதனால் தான் அவளின் பார்வையை அவனால் காதல் என்று வகைப்படுத்த முடியவில்லை.

எப்பவுமே அவளின் பார்வை கொண்டு, அவளின் மனம் அறிபவன் தான், ஆனால் இன்று அவள் சிறு பெண் என்ற கண்ணோட்டதிலே கடிவாளம் கட்டிக்கொண்டு யோசிப்பதால், அவனால் அவளின் பார்வையில் இருந்த காதலையோ, அதன் தீவிரத்தையோ புரிந்துகொள்ளவே முடியவில்லை.

கிருஷ்ணா சிறு வயதில் இருந்தே சுற்றுப்புறத்தில் அதிக கவனம் செலுத்தி, விழிப்போடு இருக்க பழக்கப்படுத்த பட்டவன்.

அதும் இப்போது அவனின் புலன்கள், உமையாள் அருகில் இருக்கும் போது வழக்கத்தை விட அதிகமாக வேலை செய்து, அவளை பற்றிய அனைத்து செய்திகளையும் நொடிக்கு நொடி மூளைக்கு அனுப்பியவண்ணமே இருந்தது.

இங்கு நடந்த எல்லாவற்றையும் அவனும் கவனித்து கொண்டு தான் இருந்தான். கொஞ்சம் குழப்பமாகவே தான் இருந்தது அவனுக்கு. நடந்தவற்றை சரியாக தான் உள்வாங்கினேனா என்ற சந்தேகமும் உதித்தது அவனுக்கு.

மூளை நடந்ததை நடந்த விதத்தில் எடுத்துரைக்க, மனமோ அது தான் உண்மை என அங்கீகரிக்க தயாராகவே இல்லை.

 

[the_ad id=”6605″]

 

இவ்வாறு ஏதோ ஏதோ எண்ண ஓட்டதோடு உணவை முடித்துவிட்டு, நால்வரும் கிளம்ப தயாராகும் நேரம், உமையாள் அவசரமாக,

“ஒரு டூ மினிட்ஸ் இங்கேயே இருங்க, இதோ வந்துடுறேன்” என்றவள், வசீகரன் தடுக்கும் முன் சிட்டென பறந்திருந்தாள்.

உணவகத்திற்கு வெளியே, துணி கடையில் தவறவிட்ட பெண் செல்வதை பார்த்தவள், அவளை மீண்டும் தவறவிட மனம் இல்லாமல், அவளை நோக்கி புயல் வேகத்தில் சென்றவள், அதே வேகத்தில் அந்த பெண்ணின் முன் சென்று நின்று இருந்தாள்.

உமையாள் சென்று நின்ற வேகத்தில் அப்பெண் கொஞ்சம் அதிர்ச்சியுடனே “யாரது, இப்படி, இவ்ளோ வேகமா” என்று நிமிர்ந்து பார்த்தாள் அப்பெண்

உமையாளை கண்டதும், அப்பெண்ணின் முகம் சட்டென பதட்டத்தை தத்தெடுக்க, அதை வெகுவாக மறைக்க முயன்றவாறு நின்றிருந்தாள் அப்பெண்.

அவளின் பதட்டத்திலேயே, அப்பெண்ணுக்கு தன்னை அடையாளம் தெரிந்துவிட்டது என்று உணர்ந்த உமையாள், தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் நோக்குடன்,

“ஹாய் ஐ அம் உமையாள்”என, அப்பெண்ணும்,

“பிரியா” என பதட்டத்தை மறைந்து கொண்டு சொல்ல, உமையாள் நேரடியாகவே,

“அந்த ***** ஷாப்ல நீங்க எங்களையே பார்த்துகிட்டு இருந்திங்க இல்ல” என கேட்க, இவளின் நேரடியான கேள்வியில் தடுமாறிய அப்பெண்,

“அது வந்து, அது வந்து, ஆன் எனக்கு தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது அதான்” என சமாளிக்க பார்க்க,

உமையாளோ “நான் நீ சொன்னதை நம்பவில்லை” எனும் விதமாக, தீர்க்கமாக பார்க்க, உமையாளின் பார்வையில் அப்பெண்ணின் தடுமாற்றம் அதிகரிக்க,

“இல்லைங்க, என்னோட காலேஜ் சீனியர் மாதிரி இருந்தாங்க அதான்” என, இன்னமும் உமையாள் அவளின் பார்வையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அவளை பார்க்க, அப்பெண்,

“உங்க கூட இருந்தாங்களே, அவங்க ****** காலேஜ் தானே, நானும் அதே காலேஜ் தான்” என உமையாளின் பார்வையில், அவளை நம்பவைக்கிறேன் பேர்வழியென எல்லாவற்றையும் உளறி கொட்டினாள் பிரியா.

இதற்காக தானே காத்திருந்திருந்தாள் உமையாள், அவளின் வாய் மொழியாகவே, உண்மையை அறிவதற்கு.

காலேஜ் சீனியர் என்றதும், “ஆக இப்படி தான் அறிமுகமா” என குறித்து கொண்ட உமையாள், இன்னமும் அவள் யாரை பார்த்தால் என்பது தெளிவாக தெரியவில்லையே என்று மனதிற்குள் யோசித்த வண்ணம், வெளியே வெகு நிதானமாக பிரியாவை பார்த்து,

“ஆமா அவங்க அந்த காலேஜ் தான், அதான் உங்களுக்கு தெரிஞ்சிடுச்சே அவங்க உங்க சீனியர்ஸ் தாணு, வந்து பேசி இருக்கலாமே” என அடுத்த கேள்வியை கேட்டாள்.

உமையாளின் கேள்வியில் தான், “தவளை தன் வாயால் கெடுவதை போல” தானும் வசமாக உலறிகொட்டி மாட்டிக்கொண்டதை உணர்ந்த பிரியா உதட்டை கடித்து, தலையை குனிந்தாள்.

உமையாளும் காதல் வயப்பட்டவள் தானே, அதனால் எளிதில் பிரியாவின் நிலையை உணர்ந்தது போல, அவளை மேலும் கேள்விகேட்டு திணறடிக்க விரும்பாமல், அதேநேரம் “அது யார்” என்று தெரியாமல் அனுப்பி வைக்கவும் தோன்றாமல்,

“சரி உன்னோட போன் நம்பர் கொடு” என கேட்க, முதலில் திருத்திருவென முழித்த அப்பெண், பிறகு என்ன யோசித்தாளோ, கொஞ்சம் தயங்கினாலும், அவளின் கைப்பேசி எண்ணை பகிர்ந்து கொண்டாள்.

ஒரு முறை அந்த எண்ணுக்கு அழைத்து, அப்பெண்ணின் கையில் இருக்கும் கைப்பேசி எண் தான் என்று உறுதி செய்து கொண்டவள், தன்னுடைய எண்ணையும் அவளை சேமித்து கொள்ள சொன்னாள்.

தான் அழைத்தால் கண்டிப்பாக அழைப்பு ஏற்க வேண்டும் என அப்பெண்ணிடம் பலமுறை அறிவுறுத்தவும் மறக்கவில்லை உமையாள்.

அப்பெண்ணிடம், “அவளிடம் படிப்பு முடிந்து விட்டதா, இப்போது என்ன செய்கிறாள்” என சில பொதுவான வேறு விஷயங்களையும் பேசி, ஓர் அளவுக்கு அவளை சகஜமாக்கி அனுப்பி வைத்தவள், உணவகத்திற்கு உள்ளே சென்றாள்.

இதற்குள் உமையாள் சென்ற சிறுது நேரத்திற்கு எல்லாம், கிருஷ்ணாவின் கண்கள் அவனின் அனுமதியின்றியே உமையாளை தேடி சுழல ஆரம்பிக்க அவனின் விழி வட்டத்தில் விழுந்தார் மைக்.

அவரின் பார்வையை தொடர்ந்து இவனின் பார்வையும் செல்ல, முடிவடைந்த இடம் சந்தேகமே இல்லாமல் சாட்சாத் உமையாளிடம் தான்.

உணவகத்தின் கண்ணாடி தடுப்பின் வழியே அவள் ஒரு பெண்ணோட பேசிக்கொண்டு இருப்பது மட்டும் தெரிந்தது அவனுக்கு.

அப்பெண்ணின் முகம் தெரியவில்லை, தெரிந்திருந்தாலும் அப்பெண்ணை இவன் அடையாளம் காண வாய்ப்பு பத்தில் ஒரு சதவிகிதம் தான்.

உமையாளை சுற்றியே வட்டம் போட்ட கண்களை, கைப்பேசி என்னும் கட்டுக்குள் கொண்டு வந்தவன், எண்ணங்களோ மைக் வலம் வந்தஸ் வண்ணம் இருந்தது.

அவர் இவ்வளவு நேரம் தங்களை தொடர்ந்து கொண்டிருந்தாரா?????

அதை கூட கவனிக்காமல் இருந்து இருக்கிறேனா நான்????

 

[the_ad id=”6605″]

 

யோசிக்க யோசிக்க, உமையாள் அருகில் இருக்கும் போது எல்லாம் மனம், பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம் என அவளை நோக்கியே, அவளை சுற்றிய இருப்பது புரிந்தது அவனுக்கு.

ஆனால் அதேநேரம் அவன் அதை தடுக்க எடுக்க முயற்சிகள் எல்லாம், அர்த்தமற்று போவது கண்டு என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தான் கிருஷ்ணா.

இதேநேரம் வசீகரனின் கண்களும் தனியே சென்ற உமையாளை தேட, மைக்கை பார்த்ததும், சற்றே நிம்மதி வர, பாலா ஏதோ கேட்க அவனுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தான் வசீகரன்.

ஒருவழியாக உமையாள் வரவும் நால்வரும் உணவகத்தில் இருந்து கிளம்பினர். அன்றைய நாளின் நினைவாக புகைப்படம் எடுக்க உமையாள் விருப்பப்பட, உமையாள் முன்னே நிற்க,பின்னே நண்பர்கள் மூவரும் ஒன்றாக நிற்க
என சில பல செல்பிகளை எடுத்தாள்.

பின்னர் பாலா அவனின் கை பேசியில், முன்னே சென்று செல்பி எடுக்க போக, வேகமாக வந்த உமையாள் வசீகரனுக்கும் கிருஷ்ணாக்கும் நடுவில் நிற்க சில பல புகைப்படங்களை எடுத்தனர்.

அதன்பிறகும் அன்று முழுவதும் அங்கு சுற்றி திரிந்து, நேரத்தை மகிழ்ச்சியாக செலவழித்துவிட்டே வீட்டை நோக்கி கிளம்பினர் நால்வரும்.

காரில் காலை வந்த போது எப்படி அமர்ந்து இருந்தனரோ அப்படியே இப்போதும் அமர்ந்தனர். கொஞ்ச நேரத்திலே உமையாளுக்கு தூங்கம் கண்களை சுழற்ற, அப்படியே அருகில் இருந்த வசீகரனின் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.

வசீகரனும் இயல்பாக அவளின் தலையை தாங்கி கொண்டவன், தாழ்ந்த குரலில், அவளின் தூக்கம் கலையாதவாறு பாலாவுடன் பேசி கொண்டு வர, முன் இருக்கையில் அமர்ந்து இருந்த கிருஷ்ணா தான், கண்ணாடி வழியே இந்த காட்சியை பார்த்தவாறே வந்தான்.

வீட்டிற்கு வந்ததும், உமையாளை எழுப்பிய வசீகரன் உள்ளே போக சொல்ல, செல்லும் அவளையே கிருஷ்ணாவின் விழிகள் தொடர்ந்திருந்தன.

பாலா அப்படியே விடைபெற்று தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்ப, கிருஷ்ணாவிடம் கொஞ்சம் பேச வேண்டும் என அவனை காத்திருக்க சொல்லிய வசீகரன், அவனை வீட்டிற்குள் அழைக்க, வர மறுத்த கிருஷ்ணா தோட்டத்திற்கு சென்றான்.

உள்ளே சென்ற வசீகரன், தூக்க கலக்கத்தில் இருந்த உமையாளுக்கு பாலை மட்டும் வற்புறுத்தி கொடுத்து குடிக்க வைத்துவிட்டு, அவளின் அறை வரை சென்று அவளை படுக்க வைத்துவிட்டு, தன் நண்பனிடம் வந்தான்.

தோட்டத்தில் உலாத்தி கொண்டு இருந்த கிருஷ்ணாவின் விழிகள், இயல்பாக நீச்சல் குளத்தை பார்க்க, அன்றொரு நாள் கண்மூடி பொற்சிலையென இதே இடத்தில் அமர்ந்து இருந்தவளின் நினைவு சொல்லாமல் கொள்ளாமல் வந்து உள்ளத்தோடு ஒட்டிக்கொண்டது.

இப்போதும் அவள் அங்கே அமர்ந்து இருப்பது போல, தோற்றமயக்கம் ஏற்பட கால்கள் அவனையும் அறியாமல், அவளை நோக்கி, அந்த நீச்சல் குலத்தை நோக்கி ஒரு எட்டு எடுத்துவைக்க, இவனை அழைத்தபடியே வந்து சேர்ந்தான் வசீகரன்.

வசீகரனின் குரலில் கலைந்த கிருஷ்ணா, வேகமாக அங்கு நீச்சல் குளத்தை பார்க்க, வெறுமையாய் காட்சி அளித்தது.

“வெறும் காட்சி பிழை, அதுவே தன்னை இப்படி சுற்றம் மறந்து ஈர்க்கிறதா” என மனதிற்குள் ஒரு திடுக்கிடலுடன் உணர, அதற்குள் அவனை நெருங்கி இருந்தான் வசீகரன்.

தன் எண்ணங்களை தற்காலிகமாக ஆணையிட்டு ஒதுக்கி வைத்த கிருஷ்ணா, தன் கவனத்தை தன் நண்பனிடம் செலுத்த, வசீகரன் பேச ஆரம்பித்தான்,

“கிருஷ்ணா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்டா”

“சொல்லுடா”

“நம்ப உமையாள் ஆபிஸ் வரணும்னு கேட்குறா” என இதை எதற்கு என்னிடம் சொல்கிறாய் எனும் விதமாக அவனை பார்க்க, வசீகரனே தொடர்ந்து,

 

[the_ad id=”6605″]

 

“பச் இல்லடா அவளுக்கு ஒர்க் பண்ணனுமாம், அதும் கியு.ஏ (Q.A) டிபார்ட்மெண்ட்ல, அதான்” என இழுக்க, கிருஷ்ணாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

உமையாளை இவன் கண் முன்னே உலவவிட்ட விதி, இப்போது அவளை விட்டு விலக நினைக்க, நினைக்க, இவனின் வெகு அருகே கொண்டுவந்து வைத்து அழகு பார்க்கிறதா????

வசீகரனும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான், அவனுக்கு ஒருவரை நியமிக்க யாருடைய ஒப்புதலும் அவசியம் இல்லை. இருந்தாலும் இவனிடம் சம்மதம் கேட்டு நிற்கிறான், பலாவிடமும் நிச்சயம் கேட்டு இருப்பான்.

நண்பன் கேட்க, எப்படி முடியாது என்று சொல்ல முடியும். ஒரு பெருமூச்சுடன், கிருஷ்ணா சம்மதமாக தலை அசைக்க, வசீகரனோ,

“தேங்க்ஸ்டா, நீ எப்படியும் சரி சொல்லிடுவனு எனக்கு தெரியும், ஒர்க் பத்தி எல்லாம் நீ கவலைப்படாத, அது எல்லாம் கரெக்ட் அஹ இருக்கும், நாளைக்கே ஜாயின் பண்ணனுமாம் அவளுக்கு” என பேசிக்கொண்டே போக கிருஷ்ணா அமைதியாய் கேட்டு கொண்டு இருந்தான்.

எல்லாமே தன் கையை மீறி நடப்பது தெளிவாக புரிய, அதை எதிர்கொள்ள மட்டுமே தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என தனக்கு தானே சொல்லி கொண்டான் கிருஷ்ணா.

ஆனால் கிருஷ்ணா அறியவில்லை. ஒரு கட்டத்தில், அவனே “தன்னால் உமையாளை யாருக்கும் விட்டுதர முடியாது” என்ற உண்மையை உணர்ந்து, தவிக்க போகிறான் என.

அதேநேரம் வசீகரன், அவனின் நிலா பெண்ணின் மீதான காதலை உணர காலமும் கனிந்து வந்துவிட்டது. காதலை உணர்ந்த கணமே, அவளை தன் வாழ்க்கையோடு இணைக்க எல்லா முயற்சியும் எடுக்க போகிறான் என அவனும் இப்போது அறிந்திருக்கவில்லை.

ஆக மொத்தம் உமையாளின் அலுவலக வருகை, பல நிகழ்வுகளுக்கு ஆரம்பமாக இருக்க போகிறது.

காதல் கொள்வோம்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!