Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 7 2

 

அப்புறம்.. ராத்திரி நானும் சுந்தரும்தான் ஒன்னா தங்குறதா இருந்திச்சு.. எனக்கே அங்கன இவ்வளவு நேரம் வேலை இழுக்குமுன்னு தெரியாது.. அப்பு எந்த நேரமும் அந்த அறைக்கு வர்றது தெரிஞ்சும் யாராவது தப்பு பண்ணுவாகளா..ய்ய

 

அதோட இந்த பொண்ண பாருங்கப்பு.. இதுமாதிரி ஒரு பொண்ண என்மவன் கல்யாணம் பண்ணிக்க விரும்பினா நாங்க வேண்டாம்னு சொல்ல எங்களுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு.. ஒரே சாதி சனம்.. எங்கள விட நல்ல வசதி இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்..!!”



Advertisement

 

அனைவரும் தர்ஷினியை பார்க்க அவள் எங்கே அவர்கள் பேசியதை காதில் கேட்டாள்.. அவள் கவனம் எல்லாம் அப்பத்தாவின் மேல்தான் தன் நடுங்கிய கைகளால் அவரை வருட கண்ணில் இருந்து கண்ணீர் நிற்கவேயில்லை..

 

Advertisement

அங்கு நின்று கொண்டிருந்த அப்பத்தா வயதுள்ள ஒரு பெண்மணியோ,” ஆமாப்பு நம்ம ராமையா சொல்றது உண்மைதானே..நம்ம சுந்தரு இப்படி தப்பு பண்றவனா.. நான்கூட நேத்து ராத்திரி நம்ம வள்ளி நாத்தனாவ பார்த்தேன்.. அவ்வளவு ஒன்னும் அழகில்ல.. நம்ம சுந்தருக்கு ஏத்த பொண்ணா அது.. சுந்தரு படிப்பென்ன அது சம்பாத்தியம் என்ன.. பத்தாததுக்கு நம்மூருலயே இப்படி பொறுப்பான ஒருத்தர காட்டுங்க பார்ப்போம்.. அவுகளும் சுந்தர் நல்லனா இருக்கவும்தானே பொண்ணுதாறேன்னு வலியக்க சொன்னாக.. இப்ப என்னமோ தாம்தூம்னு குதிக்கிறாரு..நீ விடுப்பு..

Advertisement

 

[the_ad id=”6605″]

 

Advertisement

எவன் இந்த காலத்துல தங்கச்சிகளுக்காக இப்படி பாடுபடுவான்.. அவனவன் சுயநலமா திரியிறானுக.. இந்தா நிக்குறானுகளே இந்த பாலாவும் அந்த வேலுவும் இவனுகளயே எடுத்துக்கோங்க சரியான குடிகார மட்டைக…கண்ட பொண்ணுகளோட இவனுக போடுற ஆட்டமெல்லாம் தெரியாமலா இருக்கு.. ராமையா சொல்ற மாதிரி இப்படி கதவை திறந்து போட்டு எவனாச்சும் தப்பு பண்ணுவானா.. ஏத்தா ஒரு வேளை அழகம்மை பேத்திக்கு ரவையில தூக்கத்துல நடக்கிற வியாதி என்னமும் இருக்குமோ..அதான் புள்ள அறை மாத்தி படுத்திருச்சு போல..??”

 

ஒருவேளை இதுதான் நடந்திருக்குமோ.. இவுக ரெண்டபேரு மேல எந்த குத்தமும் இல்லையோ என அங்கு சில பெண்கள் பேசிக் கொண்டிருக்க பாலாவும் வேலுவும் பல்லை கடித்தார்கள்.. இந்த கிழவிய யாருமே அடக்க முடியாது போல… போற போக்குல நம்மள கொளுத்தி போட்டுட்டு போகுது.. இவ்வளவு பேச்சிற்கும் சுந்தரும் எதுவும் பேசாமல் தலைகுனிந்திருக்க பார்வதிக்குத்தான் பக்கென இருந்தது..

 

ஐய்யய்யோ என்ன இந்த கிழவி இப்படி பேச்ச டிராக் மாத்தி விடுது… மறுபடியும் இவள அங்கன வீட்ல கொண்டு வந்து விட்டுருவாகளோ..!!’

 

பாலாவோ இந்த அப்பத்தா சொல்றதுதான் சரி.. சுந்தரு அப்படியெல்லாம் தப்பு பண்ணியிருக்க மாட்டான்.. முதல்ல அப்பத்தாவ ஹாஸ்பிட்டல்ல சேர்க்கிற வழிய பார்ப்போம்..

 

பார்வதியோ தன் மகனை முறைத்தவர் டேய் மவனே உன்னைப்பத்தி எனக்கு நல்லா தெரியும்டா… எதுக்கு அடிபோடுறன்னு.. என்கிட்டயே உன்வேலையை காட்டுறியா..

 

டேய் எருமை வாய மூடுடா..? எல்லாம் தெரிஞ்சமாதிரி பேச வந்துட்டான்.. வாய திறந்த கொன்னுருவேன் பார்த்துக்க..ஏனுக அயித்த இதென்ன பேச்சுன்னு பேசுறிக..?? ஒரு வயசு பொண்ண ரவைக்கெல்லாம் ஒரு கல்யாணம் பண்ணாத ஆம்பளையோட படுத்திருந்திருக்கு.. இது தெரிஞ்சா நாளைக்கு எவன் அவள கல்யாணம் பண்ணிக்குவான்..பெண் பாவம் பொல்லாதுத்தா சொல்லிட்டேன் வீணா ஒரு பொண்ணோட எதிர்காலத்தை கெடுத்துருறாதிக..

 

இந்தா பாருங்க எங்க அயித்த இத பார்த்ததுக்கே இப்படி கண்ண தொறக்காம விழுந்து கிடக்கு.. நாளைக்கு இதுனால பேத்திக்கு ஒரு பிரச்சனைன்னா இது உசிர விட்டுறாதா.. தப்பு நடந்திச்சோ இல்லையோ ரெண்டுபேரும் ஒன்னா இருந்தது இருந்ததுதானே.. அதுக்கு ஒரு வழிய சொல்லுங்க..

 

ராமையாவோ தன் மகனிடம் திரும்பியவர்,” நீ என்னய்யா சொல்ற..?”

 

அவன் என்ன சொல்லுவான் சூழ்நிலை கைதியாக நின்றிருந்தான்..

 

மகனின் அமைதியே அவன் மனதை சொல்ல சரி எல்லாரும் முதல்ல ஆத்தாவ ஹாஸ்பிட்டல் சேர்த்து உடம்ப சரிபண்ணுவோம் … அப்புறமா எங்க சுந்தருக்கே இந்த பொண்ண கல்யாணம் பண்ணி வைச்சிரலாம்..

 

இதென்னங்க பதிலு.. இவுகளே வயசானவங்க.. ஹாஸ்பிட்டல்ல ஒன்னுகிடக்க ஒன்னானா அப்புறம் நீங்க கல்யாணம் பண்ணிக்காம போயிட்டா என்னாகுறது.. கல்யாணம்னு முடிவு பண்ணினா இப்பவே முடிக்க வேண்டியதுதானே.. அயித்த கண்ணு முழிக்கும் போது மாலையும் கழுத்துமா நின்னுட்டு போறாக..

 

ராமையாவிற்கே பார்வதி மேல் கோபமாகத்தான் வந்தது.. மாமியார் இப்படி இருக்கும்போதுக்கூட இவங்க ஏன் இப்படி பேசுறாங்க.. அவருக்கு எதுவுமே பதில் சொல்லாமல்,

 

 கோதண்டண்ணன் எங்க.. ??அவங்கள வரச் சொல்லுங்க…?” இங்கு இவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்க கோதண்டராமனோ அங்கு டைனிங்ஹாலில் அமர்ந்து டிபனை ஒருவெட்டு வெட்டிக் கொண்டிருந்தார்.

 

 எதுவுமே பேசாமல் தன் இரண்டாவது மூன்றாவது மருமகன்களை அழைத்து தாலி மாலை வாங்கி வரும் வேலையை கொடுத்தவர் பக்கத்தில் இருந்த முருகன் கோவிலிலேயே திருமணத்தை முடிக்கலாம் என முடிவுக்கு வந்தார்..

 

ஏங்க வள்ளி..??”

 

[the_ad id=”6605″]

 

வள்ளிக்கு என்ன அவ புருசனோடத்தான போயிருக்கா..? அவருக்கு நம்ம மேல இவ்வளவு கோபம் இருந்து பொண்டாட்டி பிள்ளை வேணும்னு இழுத்துட்டுத்தான போயிருக்காரு..? இனி அவ எல்லாத்தையும் பார்த்துக்குவா அந்த பக்குவம் அவகிட்ட இருக்கு.. அவளுக்கு நாம எல்லா கடமையும் சரியாத்தான் முடிச்சிருக்கோம்.. முதல்ல நம்ம மவனோட கல்யாணத்தை முடிப்போம்.. மத்ததெல்லாம் தானா நடக்கும்.. மற்ற மகள்களும் தெய்வானைக்கு ஆறுதல் சொல்லி  மற்ற வேலையை பார்க்கச் சென்றனர்..

 

அப்பத்தாவின் மகன் வரவும் விபரத்தை சொல்லி அவரை ஹாஸ்பிட்டலுக்கு தூக்க தர்ஷினியும் பின்னாலே சென்றாள்.. பார்வதி அவள் கையை பிடித்து,

 

 நீ எங்க போற..??”

 

ஆன்ட்டி கிரான்மா..!!”

 

அவங்க ஹாஸ்பிட்டலுக்குதான் போறாங்க நீ போய் கல்யாணத்துக்கு கிளம்புற வழிய பாரு..??”

 

மேரேஜா…யாருக்கு..!!”

 

என்னத்தா விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொல்ற மாதிரி யாருக்குன்னு கேட்கிற.. உனக்கும் சுந்தருக்கும்தான்..??”

 

வாட்ட்ட்…!!” அவள் அதிர்ச்சியுடன் சுந்தரை பார்க்க அவனால் அவளை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை..

 

நோ நோ என்னால மேரேஜெல்லாம் பண்ணிக்க முடியாது..?”

 

பார்வதி அவளை முறைத்துக் கொண்டிருந்தார்.. சனியன தொலைச்சு தலை முழுகலாம்னு பார்த்தா காலை சுத்தின பாம்பு மாதிரி விடாது போல.. எல்லோரும் அவளையே பார்ப்பதை கண்டவர்.. ஒன்னுமில்ல.. ந்தா நான் போய் பட்டுசேலைய கட்டி கூட்டிட்டு வாரேன்..?” அவள் கையை பிடித்து அவர்கள் அறைக்கு அழைத்துச் செல்ல,

 

 

அடுத்த அரைமணி நேரத்தில் அந்த முருகன் சன்னிதியில் சுந்தர் தர்ஷினியின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான்.. அவள் பார்வையில் அவனை சுட்டெரிக்கும் உணர்வு.. ஏதோ ஒன்று அவனை கேள்வி கேட்டது..

 

இந்த பொண்ணுக்கிட்ட நாம கொஞ்சம் தனியா பேசியிருக்கனுமோ..!! அவன் மூன்றாவது முடிச்சு போடும்போதே அவள் மயங்கி அவன் மேல் சாய்ந்திருக்க மறுபடி ஒரே கூச்சல் குழப்பம்..  அவளை விழாமல் தாங்கியவன் அப்பத்தாவை சேர்த்திருந்த ஹாஸ்பிட்டலுக்கே கூட்டிச் செல்ல  அங்கு அப்பத்தா கண்விழித்திருந்தார்..

 

தர்ஷினியை உள்ளே அட்மிட் செய்து அப்பத்தாவை தேடிப் போக அவனை பார்க்கவும் எதுவும் பேச முடியாமல் அப்படியே கண்ணீர் உகுத்தபடி இருந்தார்.. இவனும் எதுவும் பேசவில்லை.. அவர் அருகில் சென்று அமர அப்படியே நேரம்தான் போய் கொண்டிருந்தது..

 

கல்யாணம் பண்ணிக்கிட்டியாப்பு..??”

 

என்னை மன்னிச்சிருங்க அப்பத்தா.. உங்க பேத்திய நல்ல வசதியானவங்களுக்கு கட்டிக் கொடுக்கலாம்னு..!!” அவன் பேசி முடிக்கவில்லை அவன் வாயை மூடியவர் அங்கிருந்தவர்களை கண்ணாலேயே வெளியில் போகச் சொல்லி ,

 

பேராண்டி உங்க அப்புவ கொஞ்சம் வரச் சொல்லுப்பு..?”

 

அவுக தங்கச்சிக எல்லாரும் பசிக்கிதுன்னு சொன்னாக.. அதான் காப்பி வாங்கி கொடுக்க போயிருக்காக அப்பத்தா.. போன் பண்ணிட்டேன் இதோ வர்றாகளாம்..?”

 

[the_ad id=”6605″]

 

தங்கம் இங்கன உக்காருய்யா..?? அவன் கையை பிடித்தவர் உன்னைப்பத்தி எனக்கு சின்னப்பிள்ளையில இருந்து தெரியும்ப்பு.. என் பேத்திக்கு உன்னவிட வேற மாப்பிள்ள அமையாது.. நீங்க ரெண்டு பேரும் சோடியா ஏரோபிளேனுல இருந்து ஒன்னா இறங்கி வர்றப்போ பார்த்தேன்ப்பு.. அவ்வளவு பொருத்தம்.. என்மனசு கிடந்து அடிச்சிக்கிச்சு போய் சுந்தரையே நம்ம பேத்திய கட்டிக்க சொல்லி கேட்டா என்னன்னு.. ஆனா… ஆனா..??”

 

சுந்தருக்கே இது புதிதாக இருக்க.. ஆனா என்னப்பத்தா வசதியில்லைன்னு நினைச்சிங்களா..?”

 

அப்பத்தாவ அப்புடி மட்டமாவா எடை போட்டிருக்க.. இது உங்களப்பத்தி இல்லப்பு என் பேத்திய பத்தி.. அவளுக்குத்தான்…?”

 

அவங்களுக்கு என்னப்பத்தா…?”

 

அவன் கையை நறுக்கென பிடித்தவர் அவளைதான்ப்பு இந்த மனநோய் ஆஸ்பத்திரியில ஒரு நாலு மாசம் வைச்சிருந்தோம்..

 

சுந்தர் அப்படியே அதிர்ச்சியில் எழுந்து நின்றிருக்க என்ன…… ????

 

                                                  இனி………..???

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!