Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 7 1

வரம் வாங்கி வந்தவள் நான்

 

                                   அத்தியாயம்   7

 



Advertisement

அப்பத்தா அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து தடால் என மயங்கி விழ சுந்தர் பாத்ரூமில் இருந்து வேகமாக வந்தவன் அவர் அருகில் செல்லவும் தர்ஷினி கட்டிலில் இருந்து இறங்கவும் சரியாக இருக்க தர்ஷினியை இப்போதுதான் நன்றாக பார்த்த சுந்தருக்கு இவ்வளவு நேரம் இருந்த அதிர்ச்சியே பரவாயில்லை என தோன்றியது..

 

கட்டியிருந்த சேலையை காணவில்லை வெறும் பாவாடை சட்டையோடு.. அதிலும் சட்டையின் கையெல்லாம் கிழிந்து உள்ளாடை அப்படியே அப்பட்டமாக வெளியில் தெரிய உள்பாவாடையும் தொடை வரை கிழிந்து  தொங்கியது..

Advertisement

 

Advertisement

இதுவரை எந்த அழகு சுந்தரை கவர்ந்ததோ அதே அழகு இன்று அவனை அச்சப்படுத்த அவனுக்கே நெஞ்சுவலி வரும்போல இருந்தது.. இந்த பொண்ணுக்கு இவ்வளவு கொடுமை நாமதான் பண்ணினோமா..!! சத்தியமாக அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை….

 

நேற்று இரவு நடந்ததை நினைத்து நினைத்துப் பார்க்க லேசான தள்ளாட்டத்தோடு ரூமைத் திறந்து கட்டிலில் படுத்தது மட்டும் குத்துமதிப்பாக நினைவுக்கு வர மற்ற எதுவும் நியாபகத்தில் இல்லை.. அப்படியே மண்டைக்குள் ஆயிரம் தேள்கள் ஒன்றாக கொட்டுவது போல் இருக்க தர்ஷினியை இந்த நிலைமையில் பார்க்க நெஞ்சை பிசைந்தது..

Advertisement

 

ஒரு ஒழுக்கமான தாய் தந்தைக்கு பிறந்து நல்லொழுக்கத்துடன் வளர்க்கப் பட்டவன் அதோடு நான்கு சகோதரிகள் இருப்பதால் எப்போதும் எதிலும் இருமடங்கு கவனமாக இருப்பவன்.. அப்பத்தா, தாய், தங்கைகள் என அவனை சுற்றி பெண்கள் கூட்டம் அதிகம்தான்.. பெண்களை மதிப்பவன்..இத்தனை வருடங்களில் எத்தனையோ பெண்களை பார்த்தாலும் மனதில் எந்த சலனத்திற்கும் ஆளாகாமல் இருந்தவன்..

 

நம்மளால ஒரு பெண்ணை இந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமா.. இதெல்லாம் உண்மையில்ல பொய், கனவுன்னு யாராச்சும் சொல்ல மாட்டாங்களா.. இந்த பொண்ணு தேவதைதான்.. ஆனா நான் எப்போ அரக்கனா மாறினேன்..

 

அங்கு தர்ஷினி. அப்பத்தாவை மடியில் போட்டுக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள்.. கிரான்மா என்னாச்சு ப்ளிஸ் எழுந்திருங்க.. நீங்களும் என்னை விட்டுட்டு போயிறாதிங்க..??” இவளின் அழுகுரலில் கதவை படபடவென தட்டவும் அதில்தான் இவன் சுயநினைவுக்கே வந்தான்..

 

கண்ணீர் வழியும் முகத்தோடு, ப்ளிஸ் கிரான்மாக்கு என்னாச்சுன்னு பாருங்க… ஸார்..?”

 

அவள் முகத்தை பார்க்க சகிக்காமல் அப்பத்தாவை தூக்கி கட்டிலில் படுக்க வைக்க, கதவை தட்டும் சத்தம் இன்னும் வேகமாக கேட்கவும் தர்ஷினியின் கையை பிடித்து பாத்ரூமிற்குள் தள்ளிவிட்டவன் தன் பேக்கிலிருந்து ஒரு சட்டையை எடுத்து கொடுத்து

 

இதைப் போட்டுக்கோங்க.. நீங்க உள்ளேயே இருங்க…?? அப்பத்தாவை நான் பார்த்துக்குறேன்.. வேற டிரஸ் கொண்டு வந்துட்டு கதவை தட்டுறேன் அப்போ வந்தா போதும் புரியுதா..??” அவளுக்கு எங்கே புரிந்தது அவள் பார்வை முழுவதும் தன் கிரான்மா மேல் தான் வெறித்திருந்தது..

 

ஒருநிமிடம் அப்படியே நின்றவன் தன் வாழ்க்கை எங்கேயோ நழுவி விதியின் கைகளுக்கு போனது போலிருக்க மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவன் வேகமாக சென்று கதவை திறக்கவும் எல்லாரும் வேகமாக உள்ளே வந்தனர்.. அதிலும் பார்வதிதான் கோபமாக வந்தவர் கட்டிலில் மாமியாரை பார்க்கவும் மனதிற்குள் அப்படி ஒரு துள்ளல்..

 

[the_ad id=”6605″]

 

 

ஹா…பெரிசு போய் சேர்ந்திருச்சா… அடடா காலையில இருந்து நல்லதா நடக்குதே.. முதல்ல இந்த கிழவிக்கு பால் ஊத்துற வேலையை பார்ப்போம்.. ஐய்யய்யோ அயித்த என்னாச்சு..?” மாமியாரிடம் வேகமாக ஓட அனைவரும் அப்பத்தாவை சூழ்ந்து கொண்டனர்..

 

மகனின் கையை பிடித்த ராமையா கண்ணாலேயே தர்ஷினியை கேட்க அவன் பார்வை பாத்ரூம் பக்கம் செல்லவும் சட்டென யாருக்கும் தெரியாமல் நழுவி வெளியேறியவர் அடுத்த இரண்டு நிமிடத்தில் வர அவர் கையில் ஒரு பிளாஸ்டிக் கவர்.. தன் மகனிடம் அடுத்தவர் கவனம் கவராமல் கொடுத்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்து,

 

இப்படி காத்துவராம கூட்டமா அடைச்சிங்கன்னா ஆத்தா எப்படி மூச்சுவிடுவாங்க தூக்குங்க.. வெளியில கொண்டு போயிரலாம்..?” அவர் ஓங்கி சத்தம் போடவும் பெண்களில சிலர் அப்பத்தாவை தூக்கிக் கொண்டு வெளியில் செல்ல தன் மகனிடம் கண்ணை காட்டி ஆளுக்கு முதலாக இவரும் வெளியில் வந்திருந்தார்..

 

அடுத்த நிமிடத்தில் பாத்ரூம் கதவை வேகமாக தட்டியவன் அவளிடம் அந்த கவரை கொடுத்து ,”சீக்கிரமா டிரஸ் மாத்திட்டு வாங்க..?”

 

ஸார்…ஸார் கிரான்மா..?”

 

அடிப்பட்ட பறவையாய் இருந்தவள் அப்பத்தாவிற்காக பதறுவதை கண்டவன் நீங்க சீக்கிரமா வந்தாதான் ஹாஸ்பிட்டல் போக முடியும் அதோட முகத்தை நல்லா கழுவி தலையும் கொஞ்சம் ஒதுக்கி விட்டுக்கோங்க..?”

 

அங்கு அப்பத்தாவிற்கு சில பெண்கள் விசிறி விட்டுக் கொண்டிருக்க, சிலர் தண்ணீரை முகத்தில் தெளித்து மயக்கத்தை தெளியவைக்க முயன்று கொண்டிருந்தனர்..

 

சுந்தர் வேகமாக வெளியில் வர அதுவரை அப்படியே கோபத்தை அடக்கி நின்றிருந்த வள்ளியின் கணவன் சுந்தரை பார்க்கவும் தன் மனைவியை ஓங்கி ஒரு அறை வைத்திருந்தான்.. சலசலவென இருந்த அந்த இடத்தில் அப்படி ஒரு நிசப்தம்..

 

பார்த்திருந்தவர்களுக்கு தெரிந்தது அது சுந்தருக்கு விழவேண்டிய அறை என்று… வள்ளி அப்படியே கன்னத்தை பிடித்தபடி தன் கணவரை அதிர்ச்சியுடன் பார்த்திருக்க திருமணம் முடிந்த இந்த ஐந்து வருடங்களில் வாங்கும் முதல் அடி.. அவ்வப்போது கோபமாக பேசுவானே தவிர கையெல்லாம் நீட்டியதில்லை..

 

பார்த்திருந்த சுந்தருக்கு கோபம் கண்ணை மறைக்க சட்டையை மடித்துவிட்டவன் தங்கச்சி கணவரை அடிக்க கை ஓங்கப் போக தன் மகனின் கையை பிடித்த ராமையா செத்த அமைதியா இருய்யா.. நான் பார்த்துக்குறேன்.. இது நீ கோபப் படுற நேரமில்ல.. நாம இப்ப கொஞ்சம் பணிஞ்சுதான் போகனும்..

 

அப்பு தங்கச்சிய அடிக்கிறாரு..?”

 

சரிய்யா நான் பார்த்துக்குறேன்.. செத்த பொறு..

 

வள்ளியின் கணவனோ இன்னும் கோபம் குறையாமல்,” என்ன நினைச்சிருக்கிங்க உங்க குடும்பத்தில..?? வலிய போய் பொண்ணு தாரேன்னு சொன்னா நாங்க என்ன ஒன்னத்துக்கும் லாயக்கில்லாதவங்கன்னு நினைச்சிட்டிங்களா..??”

 

தெய்வானை கையை பிசைந்தபடி,” மாப்பிள்ளை…??”

 

என்னமோ சிங்காரிச்சு மூக்கருத்தமாதிரி என் தங்கச்சிய பார்க்க வந்துட்டு வேற எவளோடவோ உங்க நொண்ணன் இருக்கான்.. என்ன எங்கள பார்த்தா சொம்பையா தெரியுதா..? அப்பவே உங்க ஊர்ல சொன்னாங்க..? அவனுக்கா பொண்ணு கொடுக்க போறிங்க.. அவன் வெளிநாட்டுல ஒரு பொண்ண வைச்சிருக்கானேன்னு… நான்தான் அதெல்லாம் நம்பாம நம்ம மச்சினன்.. நல்லவன்னு நினைச்சா ரொம்ப பண்றிங்க..ச்சீ ச்சீ இதெல்லாம் ஒரு குடும்பமா..??”

 

அழுது கொண்டிருந்த வள்ளியின் கையை பிடித்தவன்.. எங்க குடும்பத்தை இவ்வளவு அசிங்கப்படுத்திட்டாங்கள்ள… இதோ பாரு இனி பிறந்த வீட்டுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அதுக்கு முழுக்கு போட்டுட்டு என்கூட வர்றதா இருந்தா வா.. சும்மா அண்ணன் நொண்ணன் உறவாடிட்டு இருந்த.. நீ இங்கயே இருந்துக்கலாம்.. உனக்கும் எனக்கும் ஒட்டுமில்ல உறவுமில்லைன்னு அத்துவிட்டுக்கலாம்..

 

ஐயோ மாப்பிள்ள என்ன பெரிய வார்த்தையெல்லாம் பேசுறிங்க..??”

 

[the_ad id=”6605″]

 

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவன் சுந்தரை பார்க்கவும்,” நான் இங்க யார்கிட்டயும் பேச விரும்பல.. அந்த தகுதியும் யாருக்கும் இல்லை.. என் தங்கச்சிக்கு இதவிட நல்ல இடமா பார்த்து எனக்கு முடிக்க தெரியும்.. யாரும் எந்த உறவுமுறையும் சொல்லிட்டு எங்கவீட்டு வாசல் கதவை தட்டிறாதிங்க.. அப்புறம் மரியாதை கெட்டுரும்.” அனைவரையும் முறைத்தபடி சுந்தரியிடம் இருந்து தனது மகனை பறித்தவன் வள்ளியை இழுத்துக் கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு செல்ல,

 

தெய்வானை நெஞ்சில் நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டார்.. அங்கிருந்தவர்களுக்கோ நல்ல பொழுது போக்காக இருந்தது அடுத்தவரின் பிரச்சனைகளும், வேதனைகளும்..

 

அந்த நேரம் தர்ஷினி உடைமாற்றி வர சுந்தரிதான் அப்படியே ஷாக் அடித்து நின்றாள்.. இந்த சுடிதார நேத்துதான அப்புக்கிட்ட கெஞ்சி கெதறி வாங்கினோம்.. அத தூக்கி இவுககிட்ட யாரு கொடுத்தா.. அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது.. அவளுக்கு அவள் கவலை..!!

 

தெய்வானை தர்ஷினியை பார்க்கவும் வேகமாக எழுந்தவர்,” ஏத்தா ஒத்துமையா இருந்த குடும்பத்தை இப்படி பிரிச்சிட்டியே..? பாரு உன்னால என் மவ இப்ப அடிவாங்கிக்கிட்டு அழுதுகிட்டு போறாளே.. ஐயோ மவராசன் என் பேரனக்கூட இனி கண்ணுல காட்ட மாட்டாக போலயே.. ஏன் தாயி உனக்கு என் மவன்தானா கிடைச்சான் வளைச்சு போட..!! ஐயோ என் குடிய கொடுத்திட்டியே..??” சொல்லி முடிக்கவில்லை ராமையா மனைவியை பளார் என ஓங்கி ஒரு அறைவைத்திருந்தார்..

 

தெய்வானை அப்படியே அதிர்ச்சியில் நிற்க கணவரோ ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தார்..

 

சுந்தர் சட்டென தந்தையின் கையை பிடித்தவன் ,”அப்பு என்ன காரியம் பண்ணுறிங்க..?”

 

[the_ad id=”6605″]

 

விடுப்பு இன்னைக்கு இவங்கள ஒருவழியாக்குறேன்..?”

 

தெய்வானையை முறைத்தவர்,” ஏய் உனக்கு என்னடி ஆச்சு..?? நம்ம மவன பத்தி அடுத்தவங்க சொன்னா அதே அப்படியே நம்பிருவியா.. உனக்கு நம்ம மவன பத்தி தெரியாதா.. அவன் தப்பு செய்றவனா…??”

 

கையை பிசைந்தவர் அதுவந்து ரெண்டு பேரும் ஒரு ரூம்ல…!!” அவர் இழுக்க..

 

அவரோ கோபமாய் மகளை பார்த்தவர் சுந்தரி இங்க வாட்டி..??”

 

பயந்துபோய் அவள் முன்னால் வர… நீ போகும்போது அண்ணே ரூம் பூட்டியிருந்திச்சா..?”

 

இல்லப்பு.. சும்மாதான் சாத்தியிருந்திச்சு..??”

 

எல்லாரும் கேட்டுக்கோங்க தப்பு செய்றவங்க இப்படித்தான் கதவைக்கூட பூட்டாம தப்பு செய்வாங்களா..? அதோட என்மவன் இந்த பொண்ணத்தான் விரும்புறேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா நாங்க யாரும் ஒன்னும் சொல்லியிருக்க மாட்டோமே.. நீ என்னமும் சொல்லியிருப்பியா..?”

 

இல்லங்க இல்லங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!