Skip to content
Post Views: 8,620
அத்தியாயம் 10:
வீட்டிற்கு வந்து ரெஃபிரெஷ் ஆன மது மீனாட்சிக்கு வீடியோ கால் செய்தாள்.
வீடியோவில் வந்த மீனாட்சி “என்னடா மது. இன்னைக்கு சீக்கிரமே கால் பண்ணிட்ட” என்றார் .
“சும்மாதாம்மா. வெளிலயே சாப்டுட்டேன். அதான் வேல ஒண்ணுல்லனு கால் பண்ணிட்டேன். அப்பா எங்கம்மா”
Advertisement
“வாசல்ல இருக்காங்கடா. இரு கொண்டு போய் கொடுக்கிறேன்”
வீடியோவில் செல்லதுரை வந்தார்.
“மதும்மா எப்படிடா இருக்க”
Advertisement
“நா நல்லா இருக்கேம்பா. நீங்க நல்லா இருக்கீங்களா. தாய் மீனாட்சி உங்கள கண் கலங்காம பாத்துக்கறாங்களா”
Advertisement
“ஹா ஹா .எங்கடா பாத்துக்கிறா. நீயில்லாம ஒரு பயம் இல்லாம போச்சுடா அம்மாக்கு”
“கவலையே படாதிங்கப்பா. இங்க எங்க ஆபீஸ்ல விக்டோரியானு ஒரு லேடி வேல பாக்குறாங்க. 45 வயசாகுது. இன்னும் மேரேஜ் பண்ணிக்கல. போன வாரம்தான் நாலாவது பாய் பிரண்ட்ட பிரேக்கப் பண்ணாங்க. உங்க ஊர்ல அமைதியான நல்ல பையன்னா இருந்தா சொல்லு. இந்த ஊர் பசங்கள்லாம் பிடிக்கல எனக்குன்னு கேட்டாங்க. எனக்கு உங்க நியாபகம் தாம்ப்பா வந்துச்சு. உங்க எப்.பி ஐடி கொடுத்துடவா “
“அடி செருப்பால. கழுத . ஊருக்கு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்களுக்கு ஒரு பேரன், பேத்தி பெத்து குடுத்து அது எங்களை தாத்தா பாட்டின்னு கூப்பிடும்னு பாத்தா, இப்பதான் உங்க அப்பாவை புது மாப்பிள்ளை ஆக்கிறதுக்கு ஐடியா குடுத்துட்ருக்கியா. நீ ஊருக்கு வா கழுத. உன்ன வச்சுகிறேன்” என்று மீனாட்சி போனை வாங்கி விளாசி கொண்டிருந்தார்.
Advertisement
பின்னாடி செல்லதுரை பலமாக சிரிக்கும் சத்தம் கேட்டது.
மது “நா எங்கப்பாகிட்ட தான பேசிக்கிட்ருந்தேன். உன்ன யாரு ஒட்டு கேக்க சொன்னது”
“ஓட்டு கேட்டதுனாலதான் அப்பன் பொண்ணு பவுசு என்னனு தெரியுது. விளையாட்டு பேச்ச விடு மது. போன வாரம் கூட நல்ல ஜாதகம் இருக்குன்னு நம்ம வேலு அண்ணா சொன்னாங்க. இப்பவே பாக்க ஆரம்பிச்சா நீ வரும்போது ரெடியா கல்யாணம் வச்சிடலாம்ல”
“ம்மா. ஏம்மா உனக்கு அவசரம் . என்ன தொரத்தி விட்ரதிலேயே குறியா இருக்க. ஒன்னும் அவசரம் இல்ல. நா ஊருக்கு வந்தப்புறம் ஜாதகம் குடுக்கலாம். அவ்ளோ அவசரம்னா சொல்லு. இங்க ராபர்ட்னு ஒருத்தர் இருக்கார். 50 வயசு. உன்னோட எப்.டி ஐடிய அவர்கிட்ட” என்று மது சொல்லி கொண்டிருக்கும் போதே,
“அடி விளக்கு மாத்தால …” என்று மீனாட்சி ஆரம்பித்து விட்டார். அவரிடம் இருந்து போனை வாங்கிய செல்ல துரை “ஏன் பாப்பா அம்மாவை இப்படி டென்ஷன் பண்ற” என்றார்.
“அம்மாட்ட திட்டு வாங்கலைன்னா சரியா தூக்கம் வர மாட்டேங்குதுப்பா”
“அதுசரி ஒழுங்கா போய் தூங்கு பாப்பா”
“சரிப்பா பை . எங்க தாய் மீனாட்சிய காட்டுங்க. அம்மா பை”
மீனாட்சி முகத்தை காட்டாமல் திரும்பி கொண்டு அமர்ந்திருந்தார்.
“அப்புறம் உண்மையாவே ஐடி ய கொடுத்துருவேன் மீனாட்சி. பாத்துக்கோ”
தன மகள் செய்பவள்தான் என்று தெரியுமே “சரி சரி பை” என்றார்.
“அந்த பயம் இருக்கட்டும்” என்று காலை கட் செய்தாள்.
டைம் பார்த்தாள் 9.30. ஓகே படுப்போம் என்று படுத்தவுடன் ஹேரியின் நினைவுதான் வந்தது.
நினைவுகளை கலைக்கும் வண்ணம் மொபைல் அடித்தது. எடுத்து பார்த்தால் பார்த்தி அண்ணா தான்.
ஆஹா விசாரணை கமிஷன் வைக்க போறாங்கன்னு நினைக்கிறேன் என்று பயந்து கொண்டே எடுத்து பேசினாள் மது.
“ஹலோ அண்ணா”
“உன் அபார்ட்மெண்ட் ரிசப்ஷன்ல தான் வெயிட் பண்றேன். கீழ இறங்கி வா மது”
அணிந்திருந்த நைட் பான்ட் ஷர்ட் மேலேயே ஒரு ஜாக்கெட்டை மட்டும் அணிந்து கொண்டு லிஃப்ட் ஏறி கீழே சென்றாள் மது.
ரிசப்ஷனில் சோஃபாவில் அமர்ந்திருந்த பார்த்தியின் எதிரில் சென்று அமர்ந்தாள் மது.
“வீட்டுக்கே வந்திருக்கலாம்ல அண்ணா. எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்குறீங்க”
பகலில் என்றால் மதுவின் வீட்டுக்கே சென்று விடுவான் பார்த்தி. இரவு நேரம் என்பதால் வீட்டுக்கு செல்ல வில்லை.
“எந்த ஊருக்கு வந்தாலும் நம்ம கொள்கைய மாத்திக்க கூடாது மது” என்று அவளை குற்றம் சாட்டும் குரலில் கூறினான் பார்த்தி.
“நா அப்படி நடந்துக்கலன்னு சொல்றிங்களாண்ணா”
“அத நீதான் யோசிச்சு பாக்கணும் மது”
“நா இன்னைக்கு பேசமாட்டேன் . போய்டுனுதான் ஹேரிகிட்ட சொன்னேண்ணா . அவன்தான் ஒரு பிரண்டா, உன் கூட சாப்பிட வந்திருக்கேன். சாப்பிடக்கூட விடாம விரட்டுறன்னு கேக்றான் . மூஞ்சில அடிச்ச மாதிரி எப்படி போக சொல்றது”
“சொல்லணும் மது. வயசு பொண்ணுங்க தயவு தாட்சண்யம்லாம் பாக்க கூடாது. இப்ப இரக்க பட்டு பேசிட்டுருந்தின்னா பின்னாடி உனக்குதான் சங்கடமாயிடும்”
“பிரண்டுன்னு நம்ம தெளிவா கடைசி வரை முடிவா இருந்தா என்ன சங்கடம்ண்ணா வர போகுது”
“நீ பிரண்டுன்னு நினைக்கிற மாதிரியே அவன் உன்ன பிரண்டாதான் நினைக்குறான்னு என்ன நிச்சயம். ஆள் பாக்கவே பணக்காரனா தெரியிறான். இந்த ஊர் கல்ச்சருக்கு அவனுக்கு எல்லாமே ஈஸியா இருக்கும். அவன் பாக்கிற பல பொண்ணுல்ல நீ ஒருத்தியா இருப்ப. உனக்கு அப்படியா சொல்லு”
“அவன் பணக்காரன்லாம் இல்லண்ணா. IT ஜாப்லதான் இருக்கானாம்”
“முதல்ல அவன் சொல்றதெல்லாம் உண்மைன்னு எப்படி நம்புற மது. நீ சின்ன பொண்ணு. என்னதான் படிச்சி முடிச்சிட்டு ஆஸ்திரேலியா வரை வந்தாலும் அனுபவம் கம்மி. இதுல உனக்கு எல்லாமே விளையாட்டுதான். யாராவது பாவமா நாலு வார்த்தை பேசுனா அப்படியே இறங்கி வந்துருவ”
“இவ்ளோ பேசற நீங்க அவன் என்னட்ட பேசிட்டுருக்கும்போதே , இனிமே மதுவோட பேச வராதன்னு சொல்லிருக்கலாம்ல” என்று முறுக்கி கொண்டு கேட்டாள்.
“நா சொல்லலன்னு உனக்கு தெரியுமா” என்றான்.
“என்ன சொன்னிங்களா? “
அவளை அமைதியாக பார்த்த பார்த்தி அன்று மாலை ஹேரிக்கும் , அவனுக்கும் நடந்த பேச்சுவார்த்தையை அவளிடம் கூறினான்.
ஹேரி வந்து ரெஸ்டாரண்டில் அமர்ந்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவனை பார்த்த பார்த்தி இவன் எதற்காக வந்திருக்கிறான் என்று யோசித்து கொண்டே அவனிடம் சென்று பேசினான்.
“ஹலோ மிஸ்டர் ஹேரி “
“ஹாய் பார்ட்டிபன்”
“இங்க எங்க. எதுவும் ஆர்டர் பண்ணலையா”
“இல்ல. மடு வந்தா அவளோட சேந்து சாப்பிடலாம்னு பாக்கறேன்”
சிறிது நேரம் அமைதியாக இருந்த பார்த்தி “நீங்க எந்த நோக்கத்துல மதுகிட்ட பேசுறீங்கண்ணு தெரிஞ்சுக்கலாமா” என்றான்.
அவனை ஆச்சரியமாக பார்த்த ஹேரி “கண்டிப்பா தப்பான நோக்கத்தில் இல்ல. அவள பாத்த அன்னைக்கே எனக்கு ரொம்ப பிடிச்சது, ஸ்வீட் கேர்ள். அதான் அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்தேன்” என்றான்.
“நா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க டைம் ஸ்பென்ட் பண்ண இந்த ஊர்ல நிறைய பொண்ணுங்க இருக்காங்க. அதனால மதுவோட பழகறத நிறுத்திடுங்க, அதான் எல்லாருக்கும் நல்லது”
வாய்விட்டு சிரித்த ஹேரி “நா யார்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நீங்க எப்படி முடிவு எடுக்கலாம்”
“நீங்க யார்கூட வேணா பழகறதை நா முடிவு பண்ண முடியாது . பட் நீங்க மதுவ சூஸ் பண்ணா, அந்த முடிவுல என் தலையீடு கண்டிப்பா இருக்கும்”
“ஓ அப்படியா. அதுக்கு நீங்க மது சைட்ல தான் தலையிடலாம் . என் சைட்ல முடியாது”
அவனை முறைத்து பார்த்த பார்த்தி, அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.
அவனை நிறுத்திய ஹேரி “பார்ட்டிபன். உங்கமேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. இன்னும் சொல்ல போனா உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா மடு மேல இவ்ளோ அக்கறை வச்சிருக்கீங்களே. இப்படியே இருங்க. வேற யாராவது மதுவ அவளுக்கு பிடிக்காம டிஸ்டர்ப் பண்ணா இப்படி டீல் பண்ணுங்க. பட் என்னட்ட வேண்டாம்”
“ஏன் நீங்க மட்டும் என்ன ஸ்பெஷல் “
“நா ஸ்பெஷல் தான். அத போக போக தெரிஞ்சுக்குவீங்க” என்ற ஹேரியை முறைத்து கொண்டே சென்றான் பார்த்தி.
இவை அனைத்தையும் மதுவிடம் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தான் பார்த்தி.
அடப்பாவி சண்டாளா . நீ வெள்ளையா இருக்க மாதிரியே உன் மனசும் வெள்ளையா இருக்கும்னு நினைச்சனே . என் பார்த்தி அண்ணாட்டயே இந்த பேச்சு பேசியிருக்கியே. உன்ன என்ன பண்றேன் பாரு என்று கருவி கொண்ட மது, பார்த்தியிடம் “நீங்க கவலை படாதிங்கண்ணா . இனிமே அவன நா பாத்துக்கிறேன்” என்றாள் .
“நீ ஒன்னும் பண்ண வேண்டாம் மது. அவன்ட்ட ஒரு நாலு டைம் ஒன்னும் பேசாம அவாய்ட் பண்ணாலே போதும். அவனாவே வேற வேலைய பாக்க போயிடுவான். தயவு செய்து எனக்காக இதை மட்டும் பண்ணு”
மதுவும் அமைதியாக சரி என்று தலையாட்டினாள்.
அடுத்த இரு நாட்கள் மது ரெஸ்டாரண்ட் சென்றபோது ஹேரி வரவில்லை. அப்பாடா என்று நிம்மதியாக மூச்சு விட்டாள் மது.
ஆனால் மூன்றாம் நாள் மது ரெஸ்டாரண்ட் உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்துவிட்டு நிமிரும்போது சரியாக எதிரில் சிரிப்புடன் நின்றான் ஹேரி.
அவன் பேச ஆரம்பிப்பதற்குள் சாரி சொல்லிவிட்டு மது கிளம்ப போனாள் .
அதற்குள் ஹேரி “ஹே மடு ஸ்டாப். நான்தான இருக்கக்கூடாது. நான் கிளம்புறேன். நீ இருந்து சாப்டுட்டு போ” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியில் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் ஒரு பெருமூச்சை வெளியிட்ட மது அமைதியாக அமர்ந்திருந்தாள். டீனா வந்து ஆர்டர் கேட்டாள். அவளிடம் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டு மதுவும் கிளம்பி விட்டாள். வெளியில் வந்து சிறிது தூரம் நடந்திருப்பாள். வழியில் ஹேரி ஒரு காரில் கைகட்டி சாய்ந்து நின்றிருந்தான். மது அவனை பார்க்காதது போல் வேகமாக நடந்துவிட்டாள்.
அன்று இரவு படு வேகமாக பாஸ்கெட் பால் விளையாடி கொண்டிருந்தான் ஹேரி . தனியாகவே வேக வேகமாக பாலை தட்டிக்கொண்டு போய் கூடையில் போடுவதும், பாலை எடுத்துக்கொண்டு வந்து மணிக்கணக்காக தட்டிக்கொண்டே இருப்பதும் என்று திரும்ப திரும்ப சலிக்காமல் விளையாண்டு கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் பாலை ஃபோர்ஸாக தூக்கி அடித்து விட்டு கார்டனில் இருந்த இருக்கையில் வியர்வையை கூட துடைக்காமல் வானத்தை பார்த்து அமர்ந்து விட்டான்.
இவ்வளவுக்கும் ஜான் அவனை டிஸ்டர்ப் செய்யாமல் பக்கத்தில் கையை கட்டி கொண்டு அமைதியாக பார்த்திருந்தான்.
இருவரும் பாக்டரிக்கு சென்று ஒன்றாகத்தான் திரும்பி வந்தனர். ஜானை விட்டு விட்டு மதுவை பார்த்து வருவதாக சென்ற ஹேரி வந்ததிலிருந்து, இவ்வாறுதான் இருக்கிறான்.
சிறிது நேரம் சென்றபிறகும் அதே போசில் அமர்ந்திருந்தவனை பார்த்து “என்ன ஆச்சு ஹேரி” என்றான்.
அதில் கலைந்தவன் துண்டை எடுத்து வியர்வையை துடைத்து கொண்டே “மடு பேபி இன்னைக்கு என்னட்ட ஒரு வார்த்தை கூட பேசாம போய்ட்டா”
“இது எதிர் பாத்தது தான ஹேரி. அவ அண்ணன் உன்னட்ட பேசுனதுல இருந்தே அவ இப்படித்தான் நடந்துப்பானு நீ சொல்லிட்டு தான இருந்த”
“எதிர்பாத்திருந்தாலும் நடக்கும் போது பெயினா இருக்கு ஜே. இதுல அவளும் என்னால சாப்பிடாம போய்ட்டா”
சிறிது நேரம் யோசித்த ஜான் “நீ அவளை லவ் பண்றியா ஹேரி”
“தெரியல ஜே. அவளை பாத்ததிலேருந்து ஒரு நொடி கூட அவளை மறக்கல ஜே. எந்த கன்ட்ரி போனாலும் , எந்த வேலையில இருந்தாலும் ஆழ் மனசுல அவ நினைப்பு ஓடிட்டே இருக்கு. என்னதான் ஆபீஸ் காமெரால அவளை பாத்தாலும், நேர்ல அவள பாக்கணும், அவ அருகாமைய உணரணும், அவ பேச்சை கேட்டுட்டே இருக்கணும் இப்படி தோணுது. இதுக்கெல்லாம் பேரு லவ்வா?”
“தெரியலையே. நா என்னத்த லவ்வ கண்டேன். நமக்கெல்லாம் கண்ணால பாத்து பிடிச்சா அடுத்த லெவல். போர் அடிச்சா பிரேக்கப். ஆனா நீ சொல்ற எல்லா சிம்ப்டம்ஸும் லவ் மாதிரிதான் தெரியுது. ஆனா இதுக்கு என்ன எதிர்காலம் ஹேரி. உன்னட்ட பேசவே மத்தவங்க பெர்மிசன் வேணுன்னு நினைக்கிறா. முதல்ல நீ என்ன ஐடியால இருக்க அதை சொல்லு”
சிறிது நேரம் யோசித்த ஹேரி அமைதியாக “மடு பேபிய மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்”
“என்ன!”
“எதுக்கு இவ்வளவு ஆச்சரியம் ஜே. மேரேஜ்தான பண்ணிக்க போறேன்னு சொன்னேன்”
“அது எவ்வளவு சிக்கலான விஷயம்னு தெரியுமா உனக்கு. முதல்ல இவ்வளவு சீக்கிரம் எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்த”
“மடுக்கு டேட்டிங் பிடிக்காது . வாய்ப்பே இல்ல. எனக்கு என் மடு கூட இருக்கணும்”
“சரி மேரேஜ் பண்ற ரைட் . இடையில பிடிக்கல . வேற ரிலேஷன் ஷிப் போகணும்னு நினைச்சின்னா”
“அதுக்கு வாய்ப்பே இல்ல ஜே. 30 வயசு வரை எனக்கு எந்த பொண்ணையும் என் மனசால பிடிக்கல. என் கண்ணால பாத்து அழகா தோணுன பொண்ணுங்களோட டேட்டிங் ட்ரை பண்ணிருக்கேன். அதுக்கு மேல ஏன் போகலன்னு, என் மடுவ பாத்தபிறகுதான் எனக்கு புரிஞ்சது. என் மனசும், உணர்வும் தேடுனது என் மடு பேபியதாங்கிறதும் புரிஞ்சது”
“என்னென்னமோ சொல்ற எனக்கு புரியல. எனக்கு புரிஞ்ச மாதிரி ஒரு கேள்வி கேக்கறேன். எந்த பொண்ணோடையும் நீ இதுவரை பெட் ஷேர் பண்ணது இல்ல. மதுவோடயும் முடியலைன்னா”
“கண்டிப்பா முடியும்”
“ஒரு வேளை முடியலைன்னா. உங்க ரெண்டு பேர் லைஃபும் வீணாயிடாதா. அதனாலதான் சொல்றேன். மேரேஜ்ன்னு நீ முடிவெடுத்துருக்கது ரொம்ப ஃபாஸ்டான முடிவு. உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் டேட்டிங்தான் சரிப்பட்டு வரும்”
“உனக்கு எப்படி சொல்றது ஜே. என்னோட உணர்வுகள் எனக்கு தெரியாதா. மடு பேபி மேல என்ன ஃபீலிங் வருதுன்னு எனக்கு தெரியாதா. என்னோட ஒவ்வொரு செல்லும் மடு பேபி வேணுன்னு கேக்கறது எனக்கு புரியாதா. ஓகே அதை விடு. என்கூட லவ், மேரேஜ் இதெல்லாமே மடு சைட்ல ரொம்ப ரொம்ப கஷ்டம். அவங்க கல்ச்சர்ல ஜாதி, மதம், மொழி, இன்னும் கேஸ்ட் , இன்டெர் கேஸ்ட் இதெல்லாம் பாக்குறாங்க . இதுல நீ டேட்டிங் கேக்க சொல்ற மடுட்ட”
“ஹே அவங்க கல்ச்சர் பத்தின ஆராய்ச்சிலாம் எப்ப பண்ண”
“அவள பாத்த அன்னைக்கே தெரிஞ்சிக்கிட்டேன். இன்னொன்னும் கூட தெரிஞ்சிகிட்டேன். அவங்க கல்ச்சர் ஒருவனுக்கு ஒருத்தி. டைவர்சே பண்ணா கூட இன்னொரு ரிலேஷன் ஷிப்லாம் மடு மாதிரி பொண்ணுக்கெல்லாம் முடியவே முடியாது. அதனால அவளை மேரேஜ் பண்ணனும்னு முடிவெடுத்தப்பவே, நா சாகிற வரை அவகூடத்தான் என் லைஃப்னும் முடிவெடுத்துட்டேன்”
ஹேரி சொல்லியதை பிரமிப்புடன் கேட்டிருந்தான் ஜான்.
(வருவாள்)
error: Content is protected !!