Skip to content
Post Views: 3,344
மைவிழி -1(a)
அழுகையை நிறுத்துவதாக தெரியவில்லை சரஸ்வதி. காலையில் ஆரம்பித்தவர் பின் மாலைப் பொழுதாகியும் தன் புலம்பலையும், அழுகையையும் நிறுத்தமால் இருக்க, ஒரு கட்டத்துக்கு மேல் சொல்லிக் களைத்துப் போன சத்தியநாதனும் ‘நீ என்னவாவது செய்து கொள்’ என விட்டு விட்டார்.
Advertisement
“என் பேச்சை யார் இங்க கேக்கறா!இப்டியே இருந்தா அவளுக்கு வயசு போயிடும்னு இந்த மனுசனுக்காவது யோசனை இருக்கா?!”
“நான் மட்டும் தான் எல்லாத்தையும் யோசிச்சு மண்டை பூரா ப்ரெஸரை ஏத்திக்கிறேன்!”
Advertisement
“அந்த பக்கத்து வீட்டுப் பங்கஜம் கூட, என்னைப் பார்த்து நக்கல் பேசிட்டுப் போறா”
Advertisement
“இங்க ஒரு மனுஷி கத்திகிட்டு இருக்காளே, ‘ஏம்மா கவலையா இருக்கன்னு’ நான் பெத்தது ஒண்ணாவது வந்து கேக்குதா? அப்படியே இவங்க அப்பாவோட கொள்கை தான் எல்லாத்துக்கும்!” என்றவர் புலம்பிக் களைத்ததும் மூக்கை உறிஞ்சிக் கொண்டார்.
Advertisement
“போதும் டி சரஸு! கொஞ்சம் கேப் விட்டுத்தான் புலம்பேன்! என்னால கேஸ்க்கான குறிப்பு எடுக்க முடியல” என்றார் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை உணவு மேசையில் ‘டங்’கென (போட்டு) வைத்து விட்டு சத்யநாதன்.
கணவனின் சத்தமான சலிப்பில் தன் சத்தத்தை குறைத்து கொண்ட சரஸ்வதி, “அந்த கேஸை கட்டிட்டு அழுவுறதால தான் பொண்ணுக்கு வரன் வர்றது தள்ளிப் போகுதுன்னு எண்ணமாவது இருக்கா! நாம இதைக் கேட்டா மட்டும் கோர்ட்ல பேச வேண்டியது எல்லாம் பக்கம் பக்கமா என்கிட்ட பேச வேண்டியது” என்று துடைத்த சமையற்கட்டையே மீண்டும் துடைத்த படி முனக, பாம்புக் காதனான சத்யநாதனுக்கு அதுவும் கேட்டது.
“சரஸூ!இப்ப நீ புலம்பறத நிறுத்தறியா.. இல்ல நான் வீட்டை விட்டு வெளிய போகவா!”என அதட்டலாய் கேட்டவர் கடுப்போடு கூடம் சென்று விட, அவ்வதட்டலில் தான் கப் சிப் ஆனார் சரஸ்வதி.
அந்நேரம் சரியாக,“ம்மி சரஸு!”என இழுத்த படி உள்ளே நுழைந்த சின்ன மகளைப் பார்த்த சரஸ்வதி முறைக்க, அதை டீலில் விட்ட படி,
“அப்பாவும் நீயும் எப்படி மா இப்படி செம்ம லவ்சா இருக்கீங்க?!எனக்கே பொறாமையா இருக்கு போ”என்றவள் அவர் கன்னம் கொஞ்சினாள்.
முறைப்பின் அளவைக் கூட்டி மகளின் கையைத் தட்டி விட்டவர், “இவ்ளோ நேரமா உங்கப்பா, என்னை திட்டினது உனக்கு கம்பர் காவியம் படைச்சது போல தெரிஞ்சதோ! சின்ன கழுதை!என் புலம்பலை என்னன்னு கேக்கலைன்னாலும் பரவால்ல டி. உங்கப்பா திட்டலை என்னைக் கொஞ்சின போல சொல்லாத! லவ்சாம் லவ்ஸு” என கடுகடுத்தார்.
“எது!!அப்பா இத்தனை நேரமா உன்னைத் திட்டினாரா? எப்பவும் சத்தமா தானே பேசுவார் அது மாதிரி இன்னைக்கும் உன் கூட சத்தமா பேசுறாரு நினைச்சுக்கிட்டேன். என் ம்மீயையே இவர் எப்படி சத்தம் போடுவாரு. இரு நான் போய் என்னன்னு கேக்குறேன்!”என வீரமாய் பேசி விட்டு ஹாலிற்கு போவது போல் பாவலா செய்தவள், மறுபக்கமாக நகர்ந்து பக்கோடாவிற்காக பிசைந்து வைத்திருந்த மாவில் கை விட,
அவள் மண்டையில் குட்டு வைத்த சரஸ்வதி, “ஈவ்னிங் டீக்கு பாக்கோடா வேணும்ன்றத்துக்காக என்னென்ன குரங்கு சேட்டை பண்ற! போடி அங்குட்டு”எனும் விரட்டலுடன் மாவை வெளியில் எடுத்து சின்னச் சின்னதாக பிய்த்து தட்டில் போட்டார்.
“ம்மீ என் அன்பையே சந்தேகப்பட்டல்ல!உனக்காக அப்பாகிட்ட கேக்க மாட்டேன்னு நினைக்கிறியா..?இந்தா போய் இப்பவே கேக்கறேன் பாரு”என வெளிக்கிட்டு வெளியில் கிளம்பியவள், பவ்யமாய் தந்தை முன் நின்றாள்.
“ப்பா!”மெதுவாய் அழைக்க,
“என்ன சங்கவி!”சற்றே அதட்டலான குரலில் கேட்டார், சத்யநாதன். குறிப்பு எடுக்க முடியாத எரிச்சல் குரலில் தெரிந்தது.
“அதுப்பா.. அம்..அம்மா கேட்டாங்க டீக்கு சக்கரை போடவான்னு”குரல் தந்தியடித்தது.
“அடிப்பாவி மகளே!இவர் சும்மாவே ஜிங்கு ஜிங்குன்னு ஆடுவாரு. இவ வேற சலங்கை கட்டி விடாறாளே!” மகளின் கோர்த்து விடல் காதில் விழ முனகினார் சரஸ்வதி.
“உங்கம்மாக்கு தெரியாதா நான் சக்கரை இல்லாம தான் டீ குடிப்பேன்னு!புதுசா எதுக்கு இதெல்லாம் கேட்டு மனுஷனை டென்ஷன் பண்றா..!காலைலருந்து புலம்பினது பாத்தாதுன்னு இது வேற. நான் இப்போ அவகிட்ட டீ கேட்டேனா?சரஸு உன்ட்ட டீ கேட்டேனா?”எனும் அதட்டலுடன் மகளிடமிருந்து மனைவியிடம் தாவினார்.
“இந்தா சந்திரமுகியா மாறிட்டாருல்ல?”என வாய்க்குள் முணுமுணுத்த சரஸ்வதி,
“சங்கவி இங்க வா!”என மகளை அழைக்க.. ஓட்டமெடுத்தவள், அந்நேரம் தந்தையின் அதட்டலை கேட்டபடி வீட்டினுள் நுழைந்த தமக்கையை கண்டு விட்டு,
“ம்மா!வேதவி வன்ட்டாமா”என குரல் கொடுத்தலுடன் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
மூடி வைத்திருந்த வழக்குப் புத்தகங்களுடன் கூடத்தில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த தந்தை முகம் பார்த்த வேதவி,அவர் மனநிலையைப் புரிந்து கொண்டு அவரிடம் பேச்சுக் கொடுப்பதை தவிர்த்து விட்டு ஒரு தோள் குலுக்களுடன் தனக்கான அறையினுள் நுழைந்தாள்.
உடை மாற்றியவளின் செவியில் அன்னையும், தங்கையும் எதுவோ குசுகுசுப்பது விழுந்தது. இவளுடைய அறையை ஒட்டியே இருந்தது அந்த வீட்டின் சமையலறை.
“அடியே கவி!உனக்கு தெரிஞ்சிருக்கும் காலைலருந்து நானும் உங்கப்பாவும் எதைப் பத்தி பேசிட்டு இருக்கோம்னு. தப்பித் தவறி கூட நீ அதை வேதவி கிட்ட சொல்லி வெச்சிடாதே. அவ என்னன்னு கேட்டாலும் எதையாவது சொல்லி சமாளிச்சிடு,இல்ல கமுக்கமா இருந்துடு!”என சரஸ்வதி கூற,
“வேதவிக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்கன்னு சத்தியமா அவகிட்ட சொல்ல மாட்டேன் மா”என மெதுவாய் பேசுவதாக நினைத்து சத்தம் வைத்தாள் இவள். தலையில் அடித்துக் கொண்டார் சரஸ்வதி.
“அப்படியே உங்கப்பாது போலயே வெண்கலத் தொண்டை!மெதுவா பேசுடி. வேதாக்கு கேட்டுடப் போகுது” என்றவர் வாயிலைப் பார்த்துக் கொண்டார் மூத்த மகள் வருகிறாளோ என.
“ம்மீ! என் குரலே அப்படி தான்னு தெரியும்ல. கடுப்பாக்காத ம்மீ!” சங்கவி சிணுங்க,
“உங்கக்கா வர்றா!வேற ஏதாவது பேசு”என முனகியவர்,
“உனக்கு டீ போடவா வேதா?மதியம் சாப்பிட்டியா”என வேதவியிடம் கேட்டு விட்டு பொரிந்து விட்ட பக்கோடாவை தட்டில் இறக்கி வைத்தார்.
“ஹ்ம்ம்..டீ வேணாம்மா!மதியம் சாப்ட்டேன்”என்ற வேதவி,
“அப்பாவை எதுவும் டென்ஷன் பண்ணியாமா? நான் வரும் போது கூட திட்டிட்டு இருந்தாரு. அவருக்குத் தான் கேஸுக்கு நோட்ஸ் எடுக்கும் போது யாரும் சத்தம் போட்டா புடிக்காதுல்ல” என்றாள் தங்கை தட்டிலிருந்த பக்கோடாவை தன் வாயிற்குள் இடமாற்றியபடி.
“ம்மீ!! என்னத எடுக்கறா இவ!”என கத்திய சங்கவி, “உனக்கு வேணும்னா அதை எடுத்து சாப்பிடேண்டி எருமை!”என்று விட்டு தன் தட்டை தூக்கிக் கொள்ள, அவள் முதுகில் பட்டென ஒரு அடியை போட்ட சரஸ்வதி,
“உனக்கு எத்தனை தடவடி சொல்றது வேதாவ அக்கான்னு கூப்பிடுன்னு! உன்னை விட மூத்தவ அவ, ஒழுங்கா பேசிப் பழகு சங்கவி!”என்றார் கறார் தாயாய்.
“வர வர எனக்கு இந்த வீட்லயே இருக்க புடிக்கல”என முனகியவள்,
“வேதவி அக்கா….!”இழுத்து இளித்தபடி வேதவியைப் பார்த்து முறைத்து வைக்க,
சிரித்த வேதவி,
“ப்ச்,விடுமா!நம்ம வீட்ல யாருக்கும் அப்படி கூப்பிட்டு பழக்கமில்லைன்னு தான் உனக்கு தெரியும்ல! கனியனை நான் என்ன அண்ணான்னா கூப்பிடுறேன். பின்ன என்ன?அவ அவளுக்கு புடிச்ச மாதிரியே கூப்பிடட்டும். மரியாதை மனசுல இருந்தா போதும். இல்லடி சங்கு?” என்றவளின் நமுட்டுச் சிரிப்பு சங்கவியை சீண்டியது என்னவோ உண்மை.
“ம்மீ!இவகிட்ட சொல்லி வை என்னை சங்குன்னு கூப்பிட வேணாம்னு!”
“மறுபடியும் ஆரம்பிச்சிடீங்களா டி!”என்றவர்,
“வேதா, உனக்கும் தான் சொல்லிக்கிறேன்!கனியன் உன்னை விட ஒரு வயசு மூத்தவன்னாலும் நீயும் அவனை அண்ணான்னு தான் கூப்பிடற” என்றார்.
“வர வர எனக்கு இந்த வீட்லயே இருக்க புடிக்கல”என முனகுவது வேதவியின் முறையானது.
“ம்ம்..ம்ம்ம்”விருப்பமின்றி தலையசைத்தவளின் செய்கையே அவள் எண்ணத்தை வெளிப்படுத்திட,
“என்னவோ செய்ங்க” ஆயாசமாய் சொல்லிக் கொண்டவர் அடுப்பை அணைத்து விட்டு தனக்கான தேநீருடன் அடுக்களை தரையிலே அமர்ந்து கொள்ள, பக்கோடா தட்டோடு அன்னை அருகிலே அமர்ந்து கொண்டாள் சங்கவி.
வெளியில் செல்லத் திரும்பிய மூத்த மகளிடம்,
“வேதா, ரூமுக்கு போக முன்னாடி இந்த பாத்திரத்தயெல்லாம் தேச்சு வெச்சுடுடி!காலைல வேலை பார்த்து ரொம்ப அசதியா இருக்கு!”என்றார் சரஸ்வதி.
கண்களை உருட்டி அவர்கள் இருவரையும் பார்த்த வேதா, சிங்கைப் பார்க்க காலை, மதியம் என இருவேளைகளும் சமைத்த பாத்திரங்கள் நிறைந்து கிடந்தன.
“ம்ம்மா!என்னம்மா இவ்ளோ பாத்திரம்..!எனக்கு வேற செம்ம டயர்ட். நீயே தேய்ச்சிடும்மா” என்றாள் வேலைக்கள்ளியாக.
“ஒரு வீட்டு வேலையாவது செஞ்சி தர்றீங்களாடி நீங்க!நான் பெத்த மூனு பொட்ட புள்ளைங்களும் எதுல ஒத்துமையா இருக்கீங்களோ இல்லையோ.. இதுல மட்டும் கரக்ட்டா இருக்கீங்க” என்றவரின் கோபத்தில் வேதாவுக்கும் எரிச்சல் கிளம்பி விட,
“ம்மா!”என்றாள் அதே குரலில்.
“நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன். ஆஹ்!எல்லாம் உங்கப்பாவை சொல்லணும். படிக்கிற புள்ளைங்க கிட்ட வேலை சொல்லாத சொல்லாதன்னு சொல்லியே நான் சொல்ற எதையும் நீங்க செய்றது இல்ல”என்றவர் எழுந்து சென்று பாத்திரத்தை கழுவத் தொடங்க,
“ம்மா!நானும் இப்ப தானே வேலை விட்டு வந்தேன். எனக்கும் டயர்ட் இருக்காதா? காலைல வாசப் பெருக்கிட்டு தானே போனேன். ஒன்னுமே செய்யாத மாதிரி சொல்ற!”
“ஆமா நீ பெருக்கின லட்சணத்துக்கு, நான் திரும்ப பெருக்க வேண்டியதா இருக்கு!”
“ம்ம்மாஆஆ!”
வேதாவிக்கு யாரும் அவள் செய்யும் வேலையில் குறை சொன்னாள் கோபம் வந்துவிடும்.கோபத்துடனே தாயின் அருகில் சென்றவள்,
“இப்ப என்ன, பாத்திரத்தை தேய்க்கணும் அவ்வளவு தானே. கொண்டா இங்க!”என அவர் தேய்த்து கொண்டிருந்த பாத்திரத்தை பரித்துக் கொள்ள,
“ஒன்னும் வேணாம். போ, போய் ரெஸ்ட் எடு!” என்றார் மகளின் கைகளைத் தட்டி விட்டு.
‘இந்தா சண்டையை ஆரம்பிச்சுட்டாங்கல்ல’- பக்கோடாவை மென்றபடி அவர்கள் இருவரின் சண்டையை வாய் பார்க்க ஆரம்பித்திருந்தாள் சங்கவி.
“செஞ்சாலும் குத்தம் சொல்ற, செய்யலைனாலும் குத்தம் சொல்ற!”என கடுப்பானவள் வெளியில் சென்று விட,
“ஒரு வார்த்தைக்கு தான் அவளைப் போக சொன்னேன். அதுக்கே போய்ட்டால்ல!கோபம் மட்டும் வந்துடும் உன் அக்காளுக்கு. இவ இப்படி இருந்தா எப்படி நான் இவளை கட்டிக் கொடுக்கறது” என்றார் சின்ன மகளிடம் திரும்பி ஆற்றாமையுடன்.
இவளுக்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது.
“ம்மா!நீ தான் வந்ததும் வராததுமா அவளை கடுப்பேத்தி விட்ட”
“ஆமாமா!நான் தான் இங்க தப்பு பண்றேன்…நீங்கெல்லாரும் அப்படியே ஒழுங்கா இருக்கீங்க” எனும் புலம்பலுடன் பாவம் செய்யாத பாத்திரங்கள் சரஸ்வதி கைகளில் அடிவாங்கத் தொடங்கின.
“ஐயோ!இந்தம்மாங்களை புரிஞ்சிக்கவே முடியல டா சாமி!”என முனகியவள், எழுந்து கூடம் சென்று விட பெண் பிள்ளைகளை நினைத்து கவலை கொண்டது தாய் மனது.
error: Content is protected !!