Skip to content
Post Views: 1,055
காதல் தேவன் சன்னதி
அத்தியாயம்-2
“ஹேய் டார்லிங்! நான் தேடிப் பாக்குறேன்டி, டைம் ஆச்சு, வண்டி வந்திருச்சு, நீ முதல்ல கிளம்பு” என்று அவளைக் கிளப்பி கொண்டிருந்தாள் கமலி.
“ப்ளீஸ் கமல்! எப்படியாவது கண்டுப் பிடிச்சு கொடுத்திடு. இன்னும் ஒரு வாரத்துல நான் ரிட்டன் ஆகனும்” என்று பதைப்பதைவளை ஒருவாராகச் சமாதனப்படுத்தி அனுப்பினாள்.
Advertisement
அதிதி கீழே இறங்கியபோது அவளை ஏற்றிச் செல்ல அந்தக் கருப்பு நிற ஆடி க்யூ 8 கார் தயாராக இருந்தது.
அந்தக் காரைப் பார்க்கையிலேயே அவளுக்குச் சலிப்பாக இருந்தது. தானே வந்து விடுவதாகக் கூறியும் “கேட்காமல் தனக்காக வாகனைத்தை அனுப்பியது மட்டுமல்லாமல், அவள் வேண்டாம் என்று குறிப்பிட்டு சொன்ன அந்த வண்டியையே அனுப்பியது அவளுக்கு எரிச்சலைத் தூண்டியது.
இருந்தும் சுப்பையா வராமல் வேறு ஏதோ புதிய ஓட்டுனர் வருவதாகக் கூறியதால் அவள் எதுவும் கேட்கவில்லை.
Advertisement
வேண்டா வெறுப்பாக அதில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
Advertisement
வழக்கம்போல் அவனின் நறுமணம் நாசியைத் துளைத்தது.
நேற்றைக்கு இருந்ததை விட இன்னும் மணம் அதிகமாக இருந்ததால் அவளால் சுவாசிக்கக் கூட முடியவில்லை. அழையாமல் அவன் நினைவுகள் வரத் தவித்துப் போனாள்.
“ ஓ காட்! ஏம்ப்பா டிரைவர், அந்த வீட்ல தான் அத்தன கார் இருக்கே, வேற கார் எடுத்திட்டு வர வேண்டியது தானே? இந்தக் கார் வேண்டவே வேண்டாம்ன்னு சொன்னேன்ல” என்று ஓட்டுனரிடம் கேட்டவள், அவன் பதிலுரைக்கும் முன்னரே ஆதிக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
Advertisement
“ டேய் எரும மாடே, ஏன்டா இப்படி ப்ளான் பண்ணி பண்ணுற?. ஏன்டா இப்படி என்ன சாவடிக்கிற?” என்று அவன் அழைப்பை ஏற்ற உடனே அவனைப் பேசவிடாமல் சலசலத்தாள் பெண்ணவள்.
“ ஏன்டி எத்தன நாள் கழிச்சு பேசுற ஒரு வார்த்த நல்லாயிருக்கியான்னு கேட்டுட்டு அப்பறம் உன் புகார வாசிச்சா என்னடி” என்றான் ஆதி.
“உனக்கு என்ன கேடு நீ நல்லாதான் இருப்ப, நான் தான் இப்போ நல்ல இல்ல” என்றாள் கோபமாக.
“ ஏது… என்னோட செல்லகுட்டிக்கு மூட் அவுட்டா? என்னாச்சு சொல்லு, மாமன் நான் சரி பண்ணுறேன்” என்றான் கிண்டலாக.
“டேய்… டேய்… ரொம்ப ஆக்டிங்க போடாத, உன் சமாதானம் எனக்கு வேண்டாம். சரி சொல்லு எதுக்கு இந்தக் கார அனுப்புன? நான் தான் இந்தக் கார தவிர்த்து வேற எதுனாலும் ஓகேன்னு சொன்னேன்ல, இல்லாட்டி கேப் புக் பண்ணி வரேன்னு சொன்னேன்ல, யூ ஆர் இரிட்டேட்டிங் ஆதி” என்றாள் எரிச்சலாக.
அவளின் கோபத்திற்கும் எரிச்சலிற்கும் காரணம் என்ன என்பதை நன்கு அறிந்த ஆதியோ மீண்டும் அவளைச் சீண்டிப் பார்த்தான்.
“வீட்ல இருக்கிற கார் எல்லாம் எங்க ஃபேமலி யூஸ்காக வச்சிருக்கோம். உன்ன மாதிரி கெஸ்ட் யாராவது வந்தா மட்டும் இந்தக் காரை அவங்கள பிக்கப் டிராப் பண்ண பயன்படுத்திக்குவோம்” என்றான் முயன்று வரவழைத்த கடினமான குரலில்.
ஏனோ அவன் கூறியதைக் கேட்டதும் இதயத்தில் யாரோ ஊசி கொண்டு துளைத்ததுப் போல வலித்தது அவளுக்கு.
ஆனால் மறுநிமிடமே அந்த வலியின் சுவடு தெரியாவண்ணம், “டேய் டேய் டப்பா காருக்கு இவ்ளோ சீன் ஆகாதுடா” என்றாள் நக்கலாக.
“ ஓ ஐ சீ! இந்த டப்பா காருல ஒரு சின்னக் கீரல் விழுந்தாலே துடிச்சி போய்டுவா ஒருத்தி. அவ இப்போ எங்க இருக்காளோ எத்தன மையிலுக்கு அப்பால இருக்காளோ?” என்றான் ஆதி கொஞ்சமும் குறையாத நக்கலுடன்.
அவன் கூறியவுடன் பழைய நினைவுகளுக்குச் சென்றுவிட்டாள்.
“ இந்தக் கார் உங்களுக்கு அவ்வளோ இஷ்டமா?” என்று அவள் கேட்க, அவனோ புன்னகை ஒன்றை மட்டுமே பதிலாக அளித்தான்.
“எதைக் கேட்டாலும் சிரிச்சே சமாளிங்க” என்றபடி அவனின் மீசையை அவள் நீவி விட, ஓட்டுநர் இருக்கையில் இருந்தவன் அருகிலிருந்தவளை இழுத்து தன் மீதுப் போட்டுக் கொண்டான்.
“நீங்க ரொம்ப மோசம்… கம்பெனில இருக்கப்போ ரொம்ப விரைப்பா சுத்துறீங்க, இந்தக் காருகுள்ள ஏறிட்டா ஆளே மாறிடறீங்க” என்று செல்லமாகச் சிணுங்கியவளைப் பார்த்து மேலும் புன்னகைத்தவன், “அது என்னமோ தெரியல! நீயும் இந்தக் காரும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், ரெண்டுமே எனக்கு நிம்மதிய தரக்கூடிய ஒன்னு” என்றபடி அவளை இறுக அணைத்தவன் அப்படியே கண்ணயர்ந்தான்.
“ஹே! கேட்குதா? லைன்ல இருக்கியா?” என்று மறுமுனையில் அவன் போட்ட சத்ததில் நிகழ்வுக்குத் திரும்பியவள், “ஹான்… லைன்ல தான் இருக்கேன்” என்றாள் சுரத்தையே இல்லாத குரலில்.
அவளின் குரல் பேதத்தை உணர்ந்தவன், “என்னாச்சு …? அவரோட நியாபகம் வந்திருச்சா?” என்றான் மெதுவாக.
“அ… அது… அதுலாம் ஒன்னு இல்லையே” என்று திக்கித் திணறியவள், பின்பு சமாளித்தபடி “அது… ஜோசியத்துல எனக்குக் கருப்பு கலர் ஆகாதுன்னு சொல்லிருக்காங்க, அதான்” என்று ஏதோ வாய்க்கு வந்ததை உளறினாள்.
அவளின் இந்தத் தவிப்பில் குஷியான ஆதியோ, “அப்படியா? எந்த ஊருல்ல நீ ஜோசியம் பார்த்த? லண்டலயா?” என்றான் குறும்பாக.
“ஆமாடா இது லண்டன் ஜோசியம் தான், வேணும்னா சொல்லு உனக்கும் பார்த்துச் சொல்லுறேன், குறிப்பா உன்னோட திருமண வாழ்க்கைய பத்தி தெளிவா கேட்டுச் சொல்லுறேன்” என்றாள்.
“ஆத்தாடி! ஒன்னும் வேணா தாயே! நீ ஆள விடு” என்றான் ஆதி பதறியபடி.
“பாருடா… திருமண வாழ்க்கைய பத்தி பேசினவுடனே ஐயாக்கு ஜெர்க் ஆகுது, அப்போ நீ இன்னும் அப்படியே தான் இருக்க போல… சரிதான், நான் வந்து கச்சேரிய வச்சிக்கிறேன்” என்றாள் சத்தமாகச் சிரித்தபடி.
“ அம்மா தெய்வமே, இந்தப் போனையே உன் காலா நெனச்சி கேட்கிறேன் தாயே, நீ வேற யாரு மேலயும் இருக்குற காண்டுல என்னோட மண வாழ்க்கைல விளையாடிறாத தாயே” என்று மன்றாடியவனை நினைக்கையில் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இவ்வாறு மாறி மாறி ஒருவர் மற்றொருவரைக் கிண்டல் செய்தபடி இருக்க, அந்நேரம் காரானது போக்குவரத்து நெரிசலைத் தாண்டிப் பிரதானன சாலைக்கு விரைந்திருந்தது.
“உனக்கு அவரு நினைப்பு வந்திருக்குப் போல” என்று கேட்டவனிடம் கூறுவதற்கு அவளிடம் எந்தப் பதிலும் இல்லை.
அழைப்பைத் துண்டித்தவுடன் இருக்கையில் சாயந்தமர்நதவளோ, கொஞ்சம் கொஞ்சமாக அங்கு வீசிய நறுமணத்தை தன் மூச்சில் நிரப்பினாள்.
ஆள் அரவம் இல்லாத தென்னந்தோப்பு, நிசப்தமான இரவு, உயிரான அவன், அவனிலிருந்து வரும் ப்ரத்யோக நறுமணம், முடிக்கொண்ட அவனின் மார்பில் ஆழ்ந்த உறக்கம், அவன் இரு வலியக் கரங்களின் அணைப்பு, செவிகளில் உரசும் அவனின் காதல் மொழி, அவ்வபோது அவன் தரும் ஆசை முத்தம் இவையனைத்தும் மனதில் படமாக ஓடியது.
நினைக்க நினைக்கக் கண்ணீர் தாரைத் தாரையாகக் கொட்டியது. மனம் முழுவதும் ஒருவித வலி சூழ்ந்தது. மீண்டும் மனம் இறுகியது.
தலையை உலுக்கியபடி நினைவுகளை விடுத்து வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.
இருந்தும் தன் எண்ணப்போக்கை எவ்வளவு முயன்றும் மாற்ற முடியவில்லை.
எதைப் பார்த்தாலும் அவனின் நியாபகமே வந்து தொலைத்தது. நெஞ்சம் ஏனோ வலித்தது. இதோ இத்தகைய வலியை அனுபவிக்க கூடாது என்று எண்ணித் தானே தாயகம் வரமறுத்து முற்றும் முழுதுமாக வெளிநாட்டிலேயே வசித்தாள்.
ஆனால் விதியின் கணக்கு வேறாக உள்ளது என்பதை அப்போது அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எதையும் மறக்கவும் மன்னிக்கவும் அவள் மனது தயாராகவும் இல்லை.
‘ரிலாக்ஸ் டி அதிதி, நீ இங்க வந்த வேலை என்னவோ அதை முடிச்சிட்டு ஒரு வாரத்துல கிளம்ப போற, அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன், காம் டவுன், நீ ஏன் கண்டவன பத்தி யோசிக்கிற, முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்’ என்று தனக்குத்தானே சமாதானம் கூறி மனதை ஒரு நிலைப்படுத்த முயன்றாள்.
ஆனால் அது அவளாள் முடியாத ஒன்று என்பதை கூடிய விரைவிலேயே தெரிந்தும் கொண்டாள்.
“டிரைவர் ஏதாவது பாட்டுப் போடுங்க” என்றாள்.
ஓட்டுநரும் பாடல் போட,
‘அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு
பொய்க்காதே’
என்றுப் பாட,
“வேற மாத்துங்க” என்றாள் உடனடியாக.
ஓட்டுநரும் வேறு பாடலை மாற்ற,
“அர்ஜுனா அர்ஜுனா
அம்பு விடு அர்ஜுனா”
என்றுப் பாட பொறுமை இழந்தவள்,
“பாட்டை நிப்பாட்டிடுங்க ப்ளீஸ்” என்று கும்பிடே போட்டுவிட்டாள்.
ஏனோ இந்தச் சிறுதூர பயணம் அவளை மிகவும் இம்சித்தது.
‘ஓ காட்! ஏன் இப்படி சோதிக்குற, வேற நினைப்ப என் மூளைக்குள்ள கொண்டுவந்திரு’ எனக் கடவுளிடமும் கூடக் கோரிக்கைகை வைத்தாயிற்று.
ஆனால் பயன் என்னவோ சுழியம் தான்.
‘இம்சை இம்சை, எங்கிருந்தாலும் உன்னோட இம்சை தாங்கலடா அர்ஜுனா’ என்று வாய்விட்டே புலம்பத் தொடங்கினாள்.
இவளை இவ்வாறு புலம்ப வைத்தவனோ, காரின் ஸ்டைரீங்கில் ஒரு கையையும் மற்றொரு கையைக் கியரிலும் வைத்து மாற்றி மாற்றி அவற்றை இயக்கியபடி அவளின் தவிப்பை அணு அணுவாக ரசித்தபடி வந்துக் கொண்டிருந்தான்.
‘ஏன்டி இந்த அர்ஜுன மறக்குறது அவ்வளவு சாதாரண விஷயமா, அது உன்னால முடியுமா?, நீ என்ன பண்ணினாலும அது உன்னால முடியவே முடியாதுடி, பிகாஸ் ஹீ லவ்ஸ் யூ மோர் தன் யூவர்செல்ப், இங்க வந்துட்டல்ல இனிமே நீ எப்படி என்ன விட்டுப் போறேன்னு பாக்கிறேன்’ என்றபடி கண்ணாடி வழியாக அவளை ரசித்தபடி வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தான் அர்ஜுன்.
பின்னாடி பெரும் குழப்பத்தில் உட்காந்திருந்தவளால், அவனைக் கண்டுக் கொள்ள சமயம் வாய்க்கவில்லை.
அவளின் தவிப்பை அதிகரிக்க நினைத்தவன் ஒரு திருப்பத்தில் வண்டியை வேகமாக வளைத்து இன்னுனாரு வண்டியின் மீது மோதப்போவதுப் போலப் போய், பின் வளைத்துத் திருப்ப, பெண்ணவளோ அதிர்ந்து,
“ அய்யோ! பார்த்துப் பார்த்து, இந்த வண்டியில தான் என் மாமாவோட உசிரே இருக்கு, ப்ளீஸ் பொறுமையா போங்க” என்றுக் கத்தியேவிட்டாள்.
சட்டென வாகனம் ஒதுங்கி ஓரிடத்தில் நிற்க, ஓட்டுநர் இருக்கையில் இருந்தவாரே தன் அருகலிருந்த தண்ணீரை பாட்டிலை எடுத்து நீட்டியிருந்தான் அவன்.
அதர்ச்சியில் இருந்தவளோ, ஏதோ யோசனையோடு அதை வாங்கி பருகித் தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்தி படுத்திக் கொண்டாள்.
“ இவ்ளோ ரேஷா ட்ரைவ் பண்ணுற உங்கள யாரு வேலையில சேர்த்தா? அதுவும் என்ன பிக்கப் பண்ண உங்கள மாதிரி ஒரு ஆள கட்டாயம் என் மாமா அனுப்பியிருக்க மாட்டாரே, உங்க பேர் என்ன?” என்று சந்தேகமாகக் கேட்டபடி அவனையே பார்த்திருந்தாள்.
“…”
அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே, “ஹலோ மிஸ்டர்! உங்கள தான், கொஞ்சம் திரும்புங்க” என்றாள் அதட்டலாக.
“ ஓ தாராளமா திரும்பலாமே” என்றபடி பின்னிருக்கையை நோக்கித் திரும்பியவன்,
“ பேர் கேட்டிங்க போல, ஐ யம் அர்ஜுன் மார்த்தாண்டம்” என்றான் புன்னகைத்தவாரே.
error: Content is protected !!