Skip to content
Post Views: 1,612
அத்தியாயம் 6
காலையிலிருந்து இரவு எட்டு மணி வரை எப்படி சென்றது என்று துகியிடம் கேட்டால் நிச்சியம் மடவோளிடம் தெரியாது என்ற பதில் தான் வரும்…
Advertisement
உண்மையாகவே இன்று அவள் அவளாகவே இல்லை.
மணவாளன் வருவான் என்று எதிர் பார்க்கவில்லை என்றாலும் மனதின் ஓரத்தில் மெல்லியதாக ஒரு ஆர்வம் இருந்தது.அந்த ஆர்வத்தில் ஒரு லாரி மண்ணை அள்ளிப் போட்டான் யாதவ்…
Advertisement
ஆம் ஆடவன் அங்கு செல்லவே இல்லை.. அவன் வருவான் என்ற எதிர்ப் பார்ப்பிலும், ஆர்வத்திலும் இருந்தவளுக்கு மின் விளக்கை பரிசளித்து விட்டான் அவளது கணவன்.
Advertisement
அவன் வருவானோ என்ற எண்ணத்தில் மாலை ஆறு மணிக்கே கிளம்ப வேண்டியவள் முக்கியமான புராஜக்ட் முடிக்க வேண்டும் என்று சாக்கு போக்கு கூறிவிட்டு இரவு எட்டு மணி வரையிலும் அலுவலகத்தில் இருந்தாள். கடைசி வரையிலும் ஆடவன் வரவில்லை என்றதும் துகிக்கு அத்தனை கோபம் வந்தது.
Advertisement
“அவன் வர மாட்டான்னு நான் தான் சொன்னேனே…” வாகனத்தை லாவகமாக இயக்கிக் கொண்டிருந்தவளின் ஒரு பக்க மனம் கேலிக் குரலில் கூறியது. அதனை அதட்டி அடக்கியவளுக்கு கண்களின் ஓரம் நீர் கசிந்தது.
அதே சமயம் கணவன் செய்த துரோகத்தை மறந்துவிட்டு அவனுக்காக காத்திருந்த தனது முட்டாள் தனத்தை எண்ணி அவள் மீதே அவளுக்கு கோபம் வந்தது…
உண்மையை சொல்லப்போனால் இன்றளவும் யாதவ் கூறியதை முற்றும் முழுதாக ஏற்று கொள்ள முடியவில்லை… ஆழ் மனதின் ஓரத்தில் அவன் கூறிய அனைத்தும் பொய்யென்று கூறிக் கொண்டே இருந்தது.ஒரு பக்கம் நம்பாமலும் இருக்க முடியவில்லை.
எப்படி இவனால் எனக்கு துரோகம் செய்ய முடிந்தது என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை… அவன் மட்டுமா துரோகம் செய்தாள் மனம் கேள்வி எழுப்பியது? நிமிடமெனும் அவளின் கைகளில் வாகனம் தடுமாறியது… அக்கணம் அவளது நினைவுகளும் தட்டுத் தடுமாறி வெளியில் வந்தது.
****
அன்று… கல்லூரியில்…
யாதவை மருத்துவமனை அழைத்து சென்று மீண்டும் கல்லூரி வரவேக் கிட்டத்தட்ட பதினொரு மணியை கடந்து இருந்தது. முதல் இரண்டு வகுப்புகள் முடிந்து பிரேக் ஆரம்பித்து இருந்தது.
நேராக தங்களது வகுப்பிற்கு செல்லாமல் கேண்டீனில் சென்று அமர்ந்தாள். அங்கு அனிதாவும் அவளது தங்கையும் அமர்ந்திருக்க இருவரையும் புருவங்கள் சுருங்க பார்த்தாள்.
“இரண்டு பேரும் கிளாஸ் போகலையா?…” அவர்களின் அருகில் சென்று நின்றபடி கேட்டாள் துகிரா.
“நீ இல்லாமல் கிளாஸ் போக மாட்டேன்னு ஒரே அடம் கா. இதுல அழுதுட்டே இருந்தாங்க…அதான் நானும் கூடயே இருந்திட்டென். ஓகே நான் கிளம்பறேன்…” எனக் கூறியபடி துகிராவின் தங்கை கிளம்ப, அனிதாவின் அருகில் சென்று அமர்ந்தாள் துகிரா. அவளோ முகம் சிவந்து குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.
“தெருவுல ஒரு நாய் உரசிட்டு போனா இப்படி தான் உட்கார்ந்து கண்ணீர் வடிச்சிட்டு இருப்பீயா?…” அனிதாவைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் துகி.
“இல்லை…” என்பதைக் கூட கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தப்படி கூறினாள் பெண்.
அவளது அழுகையை பொறுக்க முடியாமல் “அந்தாள நல்லா பார்த்தியா?…” எனக் கேட்க மெல்லிய நடுக்கம் அனிதாவின் உடலில்.
அவளது நடுக்கத்தை பார்த்தவள் “ஒன்னுமில்லை டா அனி…” முதுகை வருடி விட்டாள்.
நொடி நேர மெளனத்திற்கு பிறகு “இதோ பாரு டா, இப்படி எல்லாத்துக்கும் பயந்துட்டே இருந்தா நம்மளை ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருப்பானுங்க.அந்த வாய்ப்பை அவனுங்களுக்கு நம்ம தரவே கூடாது…எப்பவும் நிமிர்ந்து தான் நிக்கணும்…” என ஆரம்பித்து பல கருத்துகளை அள்ளித் தெளித்து தான் அனிதாவை சாமதானம் செய்தாள் துகிரா…
இங்கு தங்களது கல்லூரிக்கு வகுப்பு ஆரம்பிக்கும் முன்பே வந்திருந்தனர் யாதவும், ராமும். ஹாஸ்பிடல் செல்லாமல் மட்டம் அடித்ததற்கு வாங்கி கட்ட வேண்டுமே என்ற பயம் துளியும் இல்லாமல் கேண்டீனில் அமர்ந்திருந்தனர் இருவரும்.
கையில் வைத்திருந்த சிக்கன் கட்லட்டை கடித்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தான் யாதவ்.
“என்னடா? ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிற மாதிரி இருக்கு…” ராம் கேட்டதும்
“அந்த ராங்கியோட முழு பேர் ஆராவா இல்லை வேற என்னன்னு யோசிக்கிறேன்…” கட்லட்டை ருசித்து கொண்டே கூறியவனை கண்கள் விரிய பார்த்தான் ராம்.
ஆடவனது பார்வையில் “என்னடா…” எனக் கேட்டான் எதுவும் அறியாதவன் போல.
“நீயா ஒரு பொண்ணை விசாரிச்சுட்டு இருக்கேன்னு டவுட் வருது…” அதிர்ச்சியாக கேட்டான் ராம்.
“ரொம்ப தைரியமான பொண்ணு டா.. பார்த்ததும் பிடிச்சு போச்சு… இந்த காலத்துல இப்படிபட்ட பொண்ணு எல்லாம் பார்க்கிறது அதிசயம் தான்…” இன்றைய பேருந்து பயணத்தை நினைவில் வைத்தபடி கூறினான்.
அவனையே அதிசயமாக பார்த்தான் ராம். கல்லூரியின் தொடக்கத்தில் இருந்து ஆடவனை பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லவா முதல் முறையாக ஒரு பெண்ணை பிடித்து இருக்கிறது என்றதில் ராமிற்கு ஆச்சர்யமாக இருந்தது..
“அந்த பொண்ணை உண்மையாவே உனக்கு பிடிச்சு இருக்கா டா யாதவா? ஃபர்ஸ்ட் சைட் அண்ட் ஃபர்ஸ்ட் லவ்வா?…”என்ற ராமின் குரலில் தன்னிலைக்கு வந்தவன்
“அப்படி தான் டா நினைக்கிறேன்…” என்றான் கட்லட்டை கடித்தபடி.
“ஒரு பொண்ணை பிடிக்கிறதுக்கு ஒரே நாள், ஒரே பார்வை…போதுமா” என ராம் யோசனையாக கேட்க பதில் சொல்லாம சிரித்தான் யாதவ்.
அவனுக்கே அவனை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. இதுநாள் வரையில் காதல் எல்லாம் நினைத்தே பார்த்தது இல்லை… அதற்கு காரணம் அவனது தந்தை பார்த்திபன் ஆவார்.
சும்மாவே ஸ்டேட்ஸ் ஸ்டேட்ஸ் என்று ஆடுவார் இதில் காதலை செய்துவிட்டு அவரிடம் மல்லுக்கு நிற்க முடியாது என்று நினைத்தவன் இன்று காதலில் குப்புற விழுந்து கிடைக்கிறான் அதுவும் முதல் நாள் முதல் பார்வையில்…
“தெரியல பிடிச்சுப் போச்சு… அந்த பொண்ணு யாரு என்னனு மட்டும் கொஞ்சம் விசாரிச்சு வை…” என்றான் யாதவ்.
“அடேய். இதுக்காக மட்டும் தான் என்னை நீ யூஸ் பண்ணலைன்னு நினைச்சேன். அதையும் பண்ணிட்டியா?…” சலிப்பாக கூறியவனைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான் யாதவ்.
சிறிது நேர மெளனத்திற்கு பிறகு
“அந்த பொண்ணு பேர் துகிரா, என்ஜினீயரிங் மூணாவது வருசம் படிச்சுட்டு இருக்கா…அவளுக்கு ஒரு தங்கச்சி இருக்கா.. வாண்டு இப்ப தான் ஃபர்ஸ்ட் இயர் மெடிக்கல் ஜாயின் பண்ணி இருக்கா. அப்பறம்…” அடுத்து ராம் ஆரம்பிக்கும் முன்பே இடையிட்டான் யாதவ்.
“இதெல்லாம் எப்பிடி டா உனக்கு தெரியும்…” மெல்லிய அதிர்ச்சியோடு கேட்டான்.
“அவளோட அண்ணன் எனக்கு தெரியாதா?.. அவன் என் சித்தப்பா பொண்ணு தான்…” என்றதும் யாதவின் இதழ்கள் புன்னகையை சிந்தியது.
“என்னடா சிரிக்கிற…” அவனது சிரிப்பை சந்தேகமாக பார்த்தபடி கேட்டான்.
“அதான் பஸ்ல நீ பேசினதும் அடங்கி போனாளா?…” எனக் கேட்டவன் பின் ஏதோ புரிந்தவனாய் “தேங்க்ஸ் டா மச்சி…” என ராமை அணைத்து கொண்டான்.
“என்னடா? எதுக்கு தேங்க்ஸ்.” ராம் விழித்தப்படி கேட்டான்.
“உனக்கு முன்னமே உன் தங்கச்சியை எனக்கு பிடிச்சு போனது தெரியும் தானே…” எனக் கேட்டான் யாதவ்.
நண்பனின் புரிதலில் சிரித்தவன் “எனக்கு உன்னை தெரியும் டா… இதுநாள் வரைக்கும் எந்த பொண்ணு பேரும் சரியா ஞாபகம் கூட வைச்சுக்க மாட்ட, ஆனா இன்னைக்கு துகிரா பேரை ஆரான்னு கூப்பிடற அளவுக்கு இருக்குன்னா அவளை உனக்கு பிடிச்சி இருக்குன்னு தானே அர்த்தம்… எதுக்கும் தப்பா நினைக்க கூடாதுன்னு தான் ஆரபித்துல தெரியாத மாதிரி கொஸ்டின் கேட்டேன்…” என்றதும் புரிந்தது என்பதை போல் சிரித்தான்.
மேலும் யாதவின் தோளில் கைப்போட்டு “இவ்வளவு நல்ல பையனை எப்படி வேண்டாம் சொல்லுவேன்?…” ராம் கூற யாதவின் முகம் முழுக்க புன்னகை தான்.
அக்கணம் “ஹலோ ஹலோ வெயிட் வெயிட்… யாரை கேட்டு இதெல்லாம் முடிவு பண்ற நீ…” என்ற குரலில் இருவரும் குரல் வந்த திசையை தான் பார்த்தனர்…
அங்கு.. அழகுக்கே இலக்கணமாய் ஓரு குட்டி தேவதை நின்றுக் கொண்டு இருந்தாள். பார்த்தால் அனைவருக்கும் பிடித்து போகும் அழகு. பேசினால் மீண்டும் பேச தோன்றும் அவளின் பேச்சு. துறுதுறு பட்டாம்பூச்சி அவள்.
“ஓய்ய்ய் பூச்சி, கிளாஸ்க்கு போகாம இங்கே என்னடி பண்ற? ” மெல்லிய புன்னகையோடு அந்த தேவதைப் பெண்ணை பார்த்து கைநீட்டி அழைத்தான் ராம். ஆடவனை முறைத்துக் கொண்டே அவனது அருகில் சென்றாள் அந்த தேவதை.
“ஃபர்ஸ்ட் இயர்லயே கிளாஸ கட் அடிச்சுட்டு கேன்டீன் கேன்டீனா சுத்திட்டு இருக்கியா?..” பெண்ணின் கேசத்தை ஒதுக்கி கொண்டே கூறிட அவனைப் பார்த்து முறைத்தாள் வந்தவள்.
“ஹாஹா… என்னடி…” என்றான் பெண்ணின் முறைப்பில்
“ஹேர் ஸ்டைலை களைச்சு விட்டுட்டு என்ன என்னடி…” மீண்டும் கேசத்தை வெளியில் எடுத்து விட்டபடி கூற தலையில் அடித்து கொண்டான் ராம்.
அப்பொழுது தான் அவளது நீண்ட கூந்தலை பாதியாக வெட்டியிருந்ததை கவனித்தான்.
மடவோள் எத்தனை அழகோ அதைவிட அவளது நீண்ட கூந்தலும் அழகு… வளைந்து நெளிந்து அலையலையாய் பரவி கிடக்கும் கூந்தலை பாயாச சேமியாவை போல் குச்சி குச்சியாய் மாற்றி அதை பாதியாக வெட்டிவிட்டு வந்திருந்த தங்கையை நேரடியாக முறைத்தான் ராம்.
“உன்னோட முடி எங்க டி?…” எனக் கேட்டான். பாதியாக வெட்டிய கூந்தலை ஸ்டைலாக நீவி விட்டப்படி”காலேஜ் வரோம்ல ஒரு செஞ்க்கு கட் பண்ணிட்டேன் டா..” என்றவள் தன் கைகளால் முகத்தை அளந்து “எப்படி இருக்கேன்…” எனக் கேட்டாள்.
“உனக்கு இதுவும் நல்லதா இருக்கு… நீயும் அழகா இருக்க…” என்றான் தங்கையின் தலையில் அழுத்தத்தை கூட்டி…
“ஹிஹி… தேங்க்ஸ் சொல்ல மாட்டேன்…” என்றவள் ராமின் அருகில் தங்களை புருவம் சுருங்க பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள். அவளின் பார்வையை தொடர்ந்தது ராமின் பார்வையும்.
“அச்சோ மறந்துட்டேன் பாரேன்… டேய் மச்சான் இவ என் தங்கச்சி நவிரா டா.நம்ம காலேஜ் தான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா அண்ட் த்துகிரா தங்கச்சி…” என்றதும் ஆர்வமாக அந்த பெண்ணை பார்த்தான் யாதவ்..
அதேகணம் “ஏய் வாண்டு… இவன் என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் நந்தன் யாதவ் பிரசாத்…” என்றான் ராம்.
“ஹாய், மாம்ஸ்…” என்றாள் தடாலடியாக. அவளது அழைப்பில் ஆண்கள் இருவரும் விழிகள் விரித்து பார்த்தனர்.
“என்ன பார்க்குறீங்க? நீங்க பேசினது எல்லாம் கேட்டுட்டு தான் வந்தேன். எனக்கு டபுள் ஓகே…” என்றாள் அந்த வாண்டு…பெண்ணின் துறுத்துறு பேச்சில் முகம் முழுக்க புன்னகை யாதவிற்கு
“நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க மாம்ஸ்…” அடுத்து அவள் சொல்ல யாதவிற்கு மெல்லிய வெட்கம் கூட வந்தது….
“போதும் போதும் அவனுக்கு ஐஸ் வைச்சது… நெக்ஸ்ட் டைம் பார்க்கும் போது அவன் உனக்கு கண்டிப்பா சிக்கன் கட்லட், பர்கர் ஏதாவது வாங்கி தருவான்…” என்ற ராமை திரும்பி முறைத்தாள் நவிரா.
“பொறாமை டா உனக்கு…” என்றவள் மீண்டும் யாதவிடம் திரும்ப
“ஆமா நீ கிளாஸ் போகலையா? பேட்ச் எல்லாம் பிரிச்சுட்டாங்களா?…” தீடிர் சீனியாராக மாறி படிப்பைப் பற்றி கேட்டான் ராம்.
“இன்னைக்கு கிளாஸ் போகல…” என்றதும் தான் தாமதம் “இதோ பாரு நவி… மெடிக்கல் ஃபீல்டு ஈசின்னு மட்டும் நினைச்சுடாத…இந்த ஃபர்ஸ்ட் இயர்ல நீ க்ளியர் பண்ணலண்ணா செகன்ட் இயர் போக முடியாது. இது ரொம்ப முக்கியம்…கொஞ்சம் கவனமா படி… கிளாஸ் கட் அடிக்காத.. மேடம் யாராவது கண்ணுல மாட்டுனா பேட் நேம் க்ரீயேட் ஆயிடும். அதுவே அடுத்த நாலு வருடமும் தொடரும். அப்பறம் மார்க்குல கை வைச்சுடுவாங்க …” என வரிசையாக அடுக்கிக் கொண்டே போனவனை பார்த்து தலைக்கு மேல் கையெடுத்து கும்பிடு போட்டவள்
“வேணாம் அழுதுடுவேன்…” கிண்டலாக கூறியவளை பார்த்து ராம் முறைத்தான் என்றால் யாதவ் நவியை புன்னகையோடு பார்த்தான்.
“சரி சரி முறைக்காத, கிளம்பறேன்…” ராமிடம் கூறிவிட்டு யாதவிடம் திரும்பி “மாமா உங்க போன் நம்பர் சொல்லுங்க…” எனக் கேட்க அவனோ ராமை பார்த்தான். குடு என்பதை போல் இமை மூடித் திறக்க தன் அலைபேசி எண்ணை நவியிடம் பகிர்ந்தான் யாதவ்
பின் இருவரிடமும் விடைப் பெற்று சில்வண்டு கிளம்பி விட யாதவோ ராமின் தோளில் கைப் போட்டு “ஸ்வீட் கேர்ள் டா…” செல்லும் பெண்ணைப் பார்த்து கூறினான்.
“துகிராவை கூட ஒருவகையில் நம்பிடலாம் டா… ஆனா இந்த நவிராவை நம்பவே முடியாது. வேணும்னா பாரேன் இன்னைக்கு சாயங்காலமே உனக்கு கால் பண்ணி வம்பு பண்ணுவா…” என்று சிரித்தான் ராம்.
“பார்த்துக்கலாம்…” என்று யாதவும் சிரித்தான்.
ராம் கூறியது போல அன்று மாலையே யாதவிடம் அலைபேசியில் பேசி துகிராவிடம் வசமாக மாட்டிக் கொண்டது அந்த பட்டாம்பூச்சி…
**
மற்ற வாகனத்தின் ஹார்ன் சத்தத்தில் தன் நினைவிலிருந்து வெளி வந்தவள் அடுத்து வாகனத்தை நிறுத்தியது என்னவோ அவளது இல்லத்தில் தான்… வாகனத்தை அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு போர்டிக்கோவில் காலடி எடுத்து வைத்தவளுக்கு வெளியில் வரைக் கேட்டது குழந்தைகளின் சிரிப்பொலி.
“பார்ரா… வாண்டுங்க இன்னும் தூங்காம இருக்குங்க…” என எண்ணிக் கொண்டே நடந்தவளுக்கு காத்திருந்தது அதிர்ச்சியல்ல பேரதிர்ச்சி தான்.
பிள்ளைகளின் சிரிப்போடு ஆணின் சிரிப்பொலியும் கேட்டது… அந்த ஆண் யாரென்று அறிய நொடிகள் தேவைப்படவில்லை துகிக்கு…
‘ தன்னை தேடி வீட்டிற்கே வந்துட்டானா?…’ என நினைத்த கணம் மனதில் மென் சரலாக ஓர் உணர்வு தோன்றியது. அது கூட நொடி நேரம் மட்டுமே. கண்ணிமைக்கும் நேரத்தில் தன் உணர்வுகளுக்கு வேலியிட்டு கொண்டாள்.
அதே கணம் குழந்தைகள் இருவரும் சிரித்து பேசும் அளவிற்கு அவனோட ஒட்டிக் கொண்டார்களா? இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு பதில் அவளின் தாய், தந்தையின் முகம் மனக்கண்ணில் மின்னி மறைந்தன.
கடந்த சில நாட்களாக அப்பா எங்கே? என்ற கேள்வி இவளிடம் மட்டுமல்ல பெரியவர்கள் இருவரிடமும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.
இவள் அந்த கேள்விக்கு பதில் கூறவில்லை என்றாலும் பெரியவர்கள் இருவரும் அவர்களின் கேள்விக்கு பதில் கூறியிருப்பார்கள் என்று நினைத்தாள். மேலும் உள்ளே செல்ல கால்கள் இரண்டும் பின்னியது துகிக்கு கண்களை இறுக மூடிக் கொண்டவள் “நீ எந்த தப்பும் பண்ணல…” தனக்கு தானே ஒருமுறை அழுத்தி கூறியப்படி வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டினுள் நுழைந்த கணம் யாதவின் இறுகியணைப்பில் இருந்தாள் பெண்… கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. அது கூட நொடி மட்டுமே அடுத்த நொடி “என்னை விடு…” என்று கத்தினாள்.
ஆனால் அவனோ இன்னும் இன்னும் அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டு “சாரி டி…” என்றான்.
“யாருக்கு வேணும் உன் சாரி… நீ பண்ண துரோகத்துக்கு உன்னை வெட்டி போடறளவுக்கு கோபம் வருது. என்னை விடு.. என்னை விடு…” அவனது அணைப்பில் இருந்தப்படியே கத்தினாள்.
“அம்மு, ம்மு…என்னாச்சு ம்மு…” என்ற சரண்யாவின் குரலில் கண்களை திறந்தாள். இன்னும் போர்ட்டிகோவிலேயே நின்று இருப்பது புரிந்தது அவளுக்கு. மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள் பிள்ளையை பார்த்தாள்.
“நான், சரண், அப்பா எல்லாம் ஐஸ் கிரீம் சாப்பிட வெளிய போறோம்..நீங்களும் வாங்க” மழலை மொழியில் அத்தனை மகிழ்ச்சியாக கூறிய மகளை இமைக்காது பார்த்தாள். தாயின் பார்வையில் அவள் தங்களை விட மாட்டாளோ என்ற எண்ணம் எழுந்தது பிள்ளைக்கு.
அவளது உயரத்திற்கு முட்டியிட்டு அமர்ந்தவள்”அம்மா ரெஃப்ரெஷ் ஆகணும். நீங்க மட்டும் போயிட்டு வாங்க..” என்றதும் கண்களை விரித்து ஆச்சரியமாக பார்த்தவள் தாயின் கன்னத்தை ஈரம் செய்துவிட்டு சரணிடம் கூற உள்ளே சென்றாள். அதேகணம் யாதவ் உள்ளிருந்து வெளியில் வந்தான்.
“இங்க என்ன..” அடுத்து அவள் பேசும் முன் கை நீட்டி தடுத்தவன்
“இன்னும் ஒரு வார்த்தை என்கிட்ட பேசிடாத..எங்க அடிச்சுடுவனோன்னு பயமா இருக்கு…” என்றான் கோபமாக. அவனது பேச்சில் இவளுக்கு கோபம் வர மூக்கு விடைக்க ஆடவனைப் பார்த்தாள்.
“தெரியாம தான் கேட்கிறேன். கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா உனக்கு. குழந்தைகளுக்கு அப்பா யாருன்னு கூட தெரியாம வளக்கிற அளவுக்கு அப்படி என்ன பண்னேன் நான்…” எனக் கேட்க முறைத்தாள் இவள்.
அவளது முறைப்பில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டப்படி “சரி ஒத்துக்கிறேன்.தப்பு பண்ணிட்டேன் தான்.அதுக்கு எனக்கு தண்டனை தர வேண்டியது தானே என் பிள்ளைகள் என்ன பண்ணாங்க? அவங்களே ஏன் அப்பா இல்லாம வளர விட்டு இருக்க, ‘நீங்க தான் எங்க அப்பாவான்னு கேட்கும் போது செத்துட்டேன் டி..” என்றவன் சுவரில் ஓங்கி குத்தினான்.
அவனையே இமைக்காது பார்த்தவள் “எஸ் என் தப்பு தான்.. நீங்க சொன்ன மாதிரி இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு இவன் தான் உன் அப்பான்னு காட்டாம விட்டது என் தப்பு தான்..” என்றவள் அவனின் பதிலைக் கூட கேட்காமல் முன்னே நடந்தாள்.
*****
“இப்ப எதுக்கு ஓல்ட்டேஜ் ஹோம் போக சொல்றாரு..” என நினைத்து கொண்டே சென்றவளை மீண்டும் அழைத்தான் ராம்.
இப்பொழுது ஏன் அழைக்கிறான் என்ற கேள்வி தலைத் தூக்கியது. மெல்லிய பயம் சூழ அவனது அறைக்குள் நுழைந்தாள் .
“மிஸ் அனிதா ஓல்ட்டேஜ் ஹோம் ஈவினிங் டைமிங்ல போறதா பிளன் பண்ணி இருக்கீங்களா? இல்லை ஆப்டர்நூன் போறது போல பிளன் பண்ணி இருக்கீங்களா?..” கையிலிருந்த கோப்பை தீவிரமாக பார்த்தபடி கேட்டான்.
‘போறதா வேண்டாமான்னு கூட அவ யோசிச்சு இருக்க மாட்ட டா..”என்ற மனதிற்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்ற பெண்ணை நிமிர்ந்து கேள்வியாக பார்த்தான்.
நிமிடம் அமைதியாக இருந்தவள் “இன்னும் அதை பத்தி யோசிக்கல சார்..” என்றாள்
“ம்.. ஓகே..” என்றவன் சிறிது நேர இடைவெளிவிட்டு ” உங்க வீட்டுக்கு ரைட் ஸைட் எண்டுல ஒரு போலீஸ் குவாட்டர்ஸ் இருக்கு தெரியுமா?..” எனக் கேட்டான். கொஞ்சம் யோசித்தாலும் தெரியுமென்பதை போல் தலையாட்டினாள்.
“அதுக்கு பக்கத்துல ஒரு பார்க் இருக்கு தெரியுமா?..” எனக் கேட்க “ம்..” என்றாள்.
“ஓகே, ஏர்லி மார்னிங் அங்க போங்க..” என்றதும் அவசரமாக மாட்டேன் என்று தலையாட்டியவள் அவனது அழுத்தமான பார்வையில் மெல்ல சரியென்றாள்.
அலாரம் சத்தத்தில் தன் நினைவிலிருந்து வெளியில் வந்தவள் மணியை பார்த்தாள் ஆறு மணி ஐந்து நிமிடங்களாகிருந்தது. மருத்துவர் கூறி விட்டாரே என்று அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி விட்டாள். ஆனால் வெளியில் செல்லதான் முடியவில்லை.மனம் முழுக்க பயம் பயம் பயம் மட்டுமே..
உண்மையை சொல்லபோனால் இத்தனை நாட்களாக தேவைக்கு மட்டுமே வெளியில் சென்று இருக்கிறாள். மத்தபடி அதிகம் வெளியில் சென்றதில்லை. இப்பொழுது வெளியில் செல்ல வேண்டும் ஆனால் அவளால் முடியவில்லை. கண்ணீர் வரும் போல இருந்தது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். கண்களுக்குள் மருத்துவரின் அழுத்தமான பார்வை வந்து விழுந்தன.. நீண்ட நெடிய பெருமூச்சுடன் எழுந்து நின்றவள் வீட்டை பூட்டிவிட்டு ராம் கூறிய இடத்தை நோக்கி நடந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் ராம் கூறிய பூங்காவில் நின்றாள். பெரிய அளவில் இல்லையென்றாலும் கனக்கச்சிதமாக இருந்தது அந்த பூங்கா.. மெல்லிய பயத்துடனே உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த கல் பெஞ்சில் சென்றமர்ந்து கொண்டாள். ஒரு சிலர் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர்.. ஒரு சிலர் யோக செய்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் கல் பெஞ்சில் அமர்ந்து பேசி சிரித்து கொண்டிருந்தனர்… அனைவரும் மனதில் எழுந்த சிறு பயத்துடனே
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நேரம் செல்ல செல்ல பயம் சற்றே விலகியது. பெண்ணின்களில் கண்களில் ரசனைக் குடியேறியது.
அக்கணம் “ஹாய்ய் மிஸ் அனிதா..” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் பெண்.
error: Content is protected !!