Neeyindri Vaazhvaeno 22 1
பகுதி – 22
“ரிஷி போதும் தூங்கினது, எழுந்துக்கோங்க ப்ளீஸ்….” சாதனா எழுப்ப… சோம்பலாகச் சிறிது மட்டுமே கண்திறந்து பார்த்தவனின் விழிகள் தன்னவளை பார்த்ததும் வியப்பில் முழுவதும் திறந்து கொண்டது.
கருப்பு நிற முழு நீல பாவடையும், அடர் ரோஜா நிற டாப்பும் அணிந்து இருந்தாள். காதில் வைர தோடும் கழுத்தில் தாலியோடு இன்னும் ஒரு சிறிய செயின் மட்டும். கைகளில் உடைகேற்ற நிறத்தில் நிறைய வளையல்கள் போட்டு வெளியே செல்ல தயாராக இருந்தாள்.
“மேடம் எங்க கிளம்பிடீங்க?” ரிஷி கேட்டுக்கொண்டே எழுந்து உட்கார….
Advertisement
“நீங்க தான போன்ல என்கிட்ட நீ வந்ததும் ஊர் சுத்தலாம்னு சொன்னீங்க.” சாதனா சொல்ல…
அவளைப் பார்த்து கைநீட்டிய ரிஷி, அவள் அருகில் வந்ததும், அவளை இழுத்துக் கட்டிலில் தன் அருகில் அமர வைத்தவன், “கண்டிப்பா போகனுமா…” எனக் கேட்க…. “ஏன் போக வேண்டாமா?” எனச் சாதனா பதிலுக்குக் கேட்க….
“இந்த டிரஸ்ல ரொம்பக் கிக்கா இருக்க… கண்டிப்பா வெளிய போகனுமா…” எனக் கண்சிமிட்டிய ரிஷி சாதனாவின் மீது சாய…. அவள் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.
Advertisement
“போதும், நான் ஏற்கனவே இன்னைக்கு ரெண்டு தடவை குளிச்சிட்டேன். திரும்பக் குளிக்க என்னால முடியாது.”
Advertisement
“இன்னைக்குத் தான இங்க வந்த… உனக்கு டயர்டா இல்லை… நாளைக்குப் போகலாமே…”
ரிஷியின் விரல்கள் சாதனாவின் கழுத்தில் கோலமிட…. சாதனா பதில் சொல்லாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள். அவளைப் அப்படிப் பார்த்ததும் ரிஷிக்குச் சிரிப்பு வர “சரி வெளிய கூடிட்டு போறேன். போயிட்டு வந்ததும், தூக்கம் வருது… டயர்டா இருக்குன்னு எதாவது காரணம் சொன்ன கொன்னுடுவேன்.” ரிஷி மிரட்ட..
Advertisement
[the_ad id=”6605″]
சாதனா புன்னகைத்துக்கொண்டே அவன் மூக்கை பிடித்துத் திருகியவள் “சரி… சொல்லமாட்டேன்.” என்றாள்.
ரிஷி சென்று குளித்துவிட்டு வந்தவன், சாதனா அவனுக்காக வாங்கி இருந்த சட்டையை அணிந்து கொண்டு திரும்பி அவளைப் பார்க்க…. அப்போது அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“நல்லா இருக்கா இந்தச் சட்டை… அம்மா வாங்கி இருப்பாங்க போல…” ரிஷி வேண்டுமென்றே சொல்ல… சாதனாவின் முகம் சுருங்கி விட்டது.
“அவங்க இல்லை… இது நான் உங்களுக்கு வாங்கினது.”
“அப்புறம் ஏன் என்கிட்டே கொடுக்காம பெட்டியில வச்ச?”
“நீங்க பிடிக்கலைன்னு சொல்லிட்டா…”
“எனக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு தான் சொல்வேன். நீ வாங்கினேன்னு பிடிக்காததைப் போட மாட்டேன். அதே மாதிரி தான் நீயும் இருக்கணும். எனக்காக உன்னை மாத்திக்கக் கூடாது. ஆனா இந்த ஷர்ட் எனக்குப் பிடிச்சிருக்கு. பரவாயில்லை நீ கூட நல்லா செலக்ட் பண்ற…”
“அது என்ன நான் கூட…. நான் மட்டும் என்ன காட்ல இருந்தா வந்தேன்.” சாதனா சண்டைக்குத் தயாராக…
“பொண்டாட்டி வேண்டாம்டி விட்ரு. தெரியாம சொல்லிட்டேன்.” ரிஷி அவளிடம் சரண்டர் ஆக… சாதனாவும் போனால் போகிறது என்று அவனை மன்னித்தாள்.
சாதனா ரிஷிக்கு உணவு எடுத்து வைக்க…. ரிஷி சாப்பிட அமர்ந்தவன் “நீ சாப்டியா…” என அவளை விசாரிக்க….
“நான் தாமஸ் சமைக்கும் போதே…. உட்கார்ந்து சாப்பிட்டேன். பரவாயில்லை நல்லா சமைக்கிறார்.” என்றாள்.
மதியம் அவள் மீண்டும் குளித்து விட்டு வந்த போது… கீழே சமையல் அறையில் இருந்து சமையல் மனம் வர… சாதனாவிற்கு ம் பசி தெரிய ஆரம்பிக்க…. கீழே இறங்கி சென்றாள்.
சமையல் அறையில் நடுத்தர வயதில் ஒருவர் நின்று சமைத்துக்கொண்டு இருந்தார். அவளைபார்ததும் புன்னகைத்தவர், அவரே அறிமுகமும் செய்து கொண்டார்.
“என்ன பண்ணீங்க? இவ்வளவு நல்ல வாசனை வருது.” சாதனா கேட்கவும் அவளைப் பார்த்துப் புன்னகைத்த தாமஸ், அவர் சமைத்ததை எடுத்து வைத்தார். எல்லாமே வித்தியாசமான சுவையாக இருந்தது.
அவள் சைவம என்று… சாதனா ரிஷி சொல்லி இருப்பான் போல….. அதனால் நிறையக் காய்கறிகள் போட்டுச் சாலட் செய்திருந்தார். சாதனா நன்றாகத் திருப்தியாகச் சாப்பிட்டாள். அவள் மனம் விட்டு பாராட்ட…. தாமஸுக்கு மிகவும் மகிழ்ச்சி.
மாலை மூன்று மணி போல் கிளம்பிய இருவரும் முதலில் அந்தகாலத்தில கட்டபட்ட கோட்டையைச் சென்று சுற்றி பார்த்தனர். இன்னும் பழமை மாறாமல் இருந்த அந்தக் கோட்டையைச் சாதனா ஆர்வமாகப் பார்த்தாள். அங்கே சிறிது நேரம் இருந்தவர்கள் பின்பு லிட்டில் இந்தியா சென்றனர்.
பேரில் இருந்தே தெரிந்திருக்கும். ஆமாம் குட்டி இந்தியாவில் நம் ஊர் கடைகள் போலவே இருக்கும். சாதனாவிற்கு ரிஷியின் கையேடு கைகோர்த்து நெருக்கமாக அவனை உரசிக்கொண்டு அந்த வீதிகளில் நடந்து செல்வதே மனதிற்கு இனிமையாக இருந்தது.
[the_ad id=”6605″]
அங்கே இருந்த கடைகளில் தன் மாமியார், நாத்தனார் மற்றும் அமிர்தா பாட்டிக்கு எனச் சிலவற்றை வாங்கிக் கொண்டாள். பிறகு வேறு ஒரு கடைக்குச் சென்று அவள் அப்பா, மாமனார் மற்றும் வெற்றிக்கு வாங்க.
“உன்னோட பெரியம்மாவுக்கும் எதாவது வாங்கிடு.” என ரிஷி தான் நியபகப்படுத்தினான். அதன் பிறகே அவருக்கும் வாங்கினாள். இரவு உணவை இந்திய உணவகத்திலேயே சாப்பிட்டனர்.
மாலையில் இருந்து அலைந்ததில் சாதனா களைத்திருந்தாள். அதனால் அவள் காரிலேயே உறங்கி விட…. வீடு வந்ததும் ரிஷி அவளை எழுப்பி விட்டான்.
அவர்கள் அறைக்கு வந்தவள், உடை கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் விழ…. கீழே கதவெல்லாம் மூடிவிட்டு வந்த ரிஷி உடை மாற்றி விட்டு சாதனாவை பார்க்க… அவள் அப்படியே உறங்கி இருக்க… அவன் சென்று அவளை எழுப்பினான்.
“சாதனா எழுந்துக்கோ டிரஸ் மாத்திட்டு படு…” ரிஷி அவளை எழுப்ப…
சாதனா திரும்பி படுத்தவள், கண்களைத் திறக்காமலே “இருக்கட்டும் ரிஷி…” என்றாள்.
“என்ன பழக்கம் இது சாதனா வெளிய போயிட்டு வந்து அப்படியே படுக்கிறது.” ரிஷி அதட்ட….
“நான் நைட்டிரஸ் எடுத்து வைக்கவே மறந்திட்டேன். இன்னைக்குக் கடையில வாங்கி இருக்கலாம் நியாபகம் இல்லை… நான் நாளைக்கு வாங்கிக்கிறேன்.” சாதனா சொல்ல…
“நான் உனக்கு நைட் டிரஸ் வாங்கி இருக்கேன்.” என்ற ரிஷி கையில்லாத இரவு உடையை எடுத்து வந்து கொடுக்க….
“இதெல்லாம் உங்களை யாரு வாங்க சொன்னா…” எனக் கடுப்புடன் சொன்னவள், எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வந்தாள்.
நைட்டியை எடுத்துக்கொண்டு சாதனா பக்கத்து அறைக்குச் செல்ல… “இங்கேயே மாத்து…” என்றான் ரிஷி.
சாதனா அவனைப் பார்த்து முறைக்க…. ரிஷி அவளைப் பார்த்து உல்லாசமாகச் சிரித்து வைத்தான். “வா நான் உனக்கு டிரஸ் மாத்தி விடுறேன்.” என அவன் அழைக்க….
அடப்பாவி ! இதுக்குத்தான் டிரஸ் மாத்துன்னு அத்தனை தடவை எழுப்பினானா என அவள் நினைக்கும் போதே… ரிஷி அவளைத் தன் பக்கம் இழுத்திருந்தான்.
“நான் வெளிய போகும் போதே சொன்னேன். வந்து எந்தச் சாக்கும் சொல்லக் கூடாதுன்னு. நீ பாட்டுக்கு நல்லா படுத்து தூங்கிற… இதுக்குத்தான் லண்டன் வந்தியா.”
அவனின் கிறக்கமான குரலில் சாதனாவிற்கு த் தூக்கம் போய் மயக்கம் வந்தது. வெறும் மயக்கம் அல்ல காதல் மயக்கம். விடியும் வரை அவளை மயக்கம் தெளியாமலே ரிஷி வைத்திருந்தான்.
சாதனா வந்து ஒருவாரம் ஆகிவிட்டது. நாட்கள் போனதே தெரியவில்லை…. காலை தாமதமாக எழுவது, மதியத்திற்கு மேல் வெளியே சுற்றுவது வீட்டில் இருக்கும் நேரங்களில் ரிஷியின் கைகளுக்குள்ளேயே இருப்பது என நேரம் இனிமையாகச் சென்றது.
அன்று மதியத்திற்கு மேல் இருவரும் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தனர்.
“ரிஷி இன்னைக்கு எங்கையும் வெளிய போகலையா…”
“இன்னும் ஊருக்கு கிளம்ப நாலு நாள் தான் இருக்கு. அதனால வீட்லயே இருக்கலாம். இன்னைக்கு ஸ்விமிங் பண்ணுவோம். நானும் நீ வந்த அன்னையில இருந்து கேட்கிறேன். ஆனா நீ மழுப்பிட்டே இருக்க….”
ரிஷி சாதனாவை பார்த்து சிரித்தாளே தவிர அவனுக்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை…. இருவரும் பார்த்துக்கொண்டிருந்த ஆங்கிலப் படத்தில் முழ்கி விட்டனர்.
மாலை ரிஷி சென்று நீச்சல் உடை அணிந்து வந்தவன் “சாதனா நீயும் போய் டிரஸ் மாத்திட்டு வா…” என அழைக்க…. சாதனா அவன் சொன்னது காதில் விழாதது போல் சோபாவில் படுத்தே இருந்தாள்.
ரிஷி வந்து அவளை அப்படியே கைகளில் அள்ளியவன் “நீ சொன்னா கேட்க மாட்ட….” என்றவன், அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டே பக்கவாட்டு கதவின் வழியாக நீச்சல் குளத்திற்கு வந்தான்.
[the_ad id=”6605″]
சாதனா அதுவரையில் கூட அவன் என்ன செய்யப்போகிறான் என உணரவில்லை…. அவள் புன்னகையோடு அவனைப் பார்த்தபடி இருந்தாள்.
“என்ன ரிஷி செய்யப்போறீங்க?”
“உன்னை அப்படியே தண்ணியில பொத்துன்னு போடப்போறேன்.”
ரிஷி சொன்னதைக் கேட்டதும் சாதனாவின் முகம் மாறிவிட்டது. அப்போது ரிஷி நீச்சல் குளத்தை நெருங்கி இருந்தான். சாதனா ரிஷியை இறுக்கி பிடித்துக்கொண்டவள் “போட்டுடாதீங்க ரிஷி என் வயித்துல நம்ம பாப்பா இருக்கு.” என்றாள். அவள் குரலில் அவ்வளவு நடுக்கம் இருந்தது.
முதலில் அவள் சொன்னதை ரிஷி சரியாகக் கவனிக்கவில்லை. ஆனால் அவள் முக மாறுதலை பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அதோடு அவள் நம்ம பாப்பா என்று எதோ சொன்னது போல் இருக்கவும், அப்படியே நின்றவன் “என்ன சொன்ன?” எனக் கேட்க….
“நான் பிரக்னென்டா இருக்கேன்.” சாதனா சற்று சத்தமாகவே சொல்ல…. ரிஷி அப்படியே திகைத்து போய் நின்றுவிட்டான்.
முதலில் அவள் விளையாட்டுக்கு சொல்கிறாளோ என நினைத்தவன், இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
அன்று சாதனாவிற்கு ச் சாதமும், பருப்பும் செய்துவிட்டு, தனக்கு மீன் குழம்பு ரிஷி தான் செய்து இருந்தான். தாமஸ் அன்று வரவில்லை…. சாதனாவால் இரண்டு வாய்க்கு மேல் அதைச் சாப்பிடவே முடியவில்லை… அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. எழுந்து சென்று வாந்தி எடுத்து விட்டு வந்தாள்.
“என்ன ஆச்சு சாதனா?” ரிஷி கேட்க….
“ஒன்னும் இல்லை….” என்றவள், அவனுக்கு வைத்திருந்த மீன் குழம்பை ஊற்றிக்கொண்டு சாப்பிட்டாள். இவ என்ன மீன் குழம்பு சாப்பிடுறா என்பது போல் ரிஷி பார்க்க…. சாதனா அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை….
ரிஷியின் பிள்ளை ரிஷியை போலவே சாப்பிடுவதிலும் இருந்தது. இனிப்பு வகைகள், காய்கறி, பருப்பு இதெல்லாம் சாப்பிட்டால் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வர… அதே காரசாரமாகச் சாப்பிட்டால் அவளுக்கு வாந்தி வருவது இல்லை….
ஊருக்குச் சென்றதும் சொல்லிவிடுவோம் என்று இருந்தால்… இந்தப் பிள்ளை அதுவரை விடாது போலவே எனச் சாதனாவிற்கு ஏற்கனவே பயம் இருந்தது. ஆனால் இப்போது ரிஷியிடம் தானாகவே மாட்டிக்கொண்டாள்.
